• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மாலைசூடி மஞ்சம் தேடி 28

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
அவனது கோபத்தில் மலருக்கும் கோபம் துளிர்விட, 'கோபமும் கோபமும் முட்டிக்கொண்டாள் துயர் மட்டுமே மிஞ்சும்' என்று உணர்ந்து எதுவும் பேசாமல் அந்த அறையைவிட்டு வெளியேறிச் சென்றாள்.

அரைமணி நேரம் கழித்து எதுவும் நடக்காதது போல் அவ்வறையில் இருந்து வெளியே வந்ததன், "பனி வா சாப்பிடலாம்?" என்று அழைத்தபடி உணவுமேசை வந்து அமர்ந்தான்.

பெண்ணவள் அவனுக்கு மட்டும் எடுத்து வைக்க வழக்கம் போல் அவளுக்கு ஊட்டிவிட எண்ணி சப்பாத்தியை பிய்த்து அவள் முன் நீட்டிட, முதல்முறையாக பெண்ணவள் மறுத்தாள்.

"நான் சாப்டேன்... " என்று முகத்தை திருப்பிக்கொள்ள,

அவளது கோபம் உணர்ந்தவன், அவளை சீண்டிட வேண்டியே "அப்போ எனக்கு ஊட்டிவிடு..." என்று கூறி தட்டை அவள் புறம் நகர்த்தி வைத்தாள்.

"சாப்பிட்டா சாப்பிடுங்க... இல்லே இப்படியே பட்டினி கெடங்க..." என்று கூறி சும்மாவேனும் தொலைகாட்சி பெட்டியை உயிர்பித்து அதன் முன் அமர்ந்து கொண்டாள்.

அவளது வீம்புக்காரனும், கைகழுவிக் கொண்டு மீண்டும் அலுவலக அறைக்குள் நுழைந்து கொண்டான்.

சிறிது நேரம் கூட மலரால் தன் கோபத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. உணவுத் தட்டோடு தன் முன்னே சென்று நிற்வளைப் பார்த்து குறும்பாகச் சிரித்தான் விக்ரம். அதனையும் கண்டும் காணாதது போல் உணவை அவன் வாயில் கொடுத்தாள் அவன் அகமுடையாள்.

சற்று நேரம் வேறு எந்த குறும்பும் செய்யாமல் உண்டு கொண்டிருந்தவன், அவளின் அமைதியை கலைத்திட வேண்டி ஊட்டிவிட்டவளின் கையை கடித்து வைத்தான். இரண்டு முறை பொருத்துக் கொண்டவள், மூன்றாம் முறை முறைத்தாள். அதன் பின்னும் அவன் கடித்து வைத்திட, சப்பாத்தியை தட்டோடு அவன் தலையில் கவிழ்த்திவிட்டு,

"அப்படியே வாயில் கவ்விகிட்டு சாப்பிடுங்க..." என்று பல்லைக்கடித்தபடி கூறிவிட்டு தனதறைக்குச் சென்றாள்.

அவளை முறைத்தபடியே அறைக்குள் நுழைந்து குளித்து முடித்து வந்தவன், படுக்கையில் வந்து அமர்ந்து கொண்டு

"பனி... அங்கே இருந்ததை விட இங்கே பெரிய ஷோஃபா தான்... சோ நீ ஃப்ரீயா படுத்து தூங்கலாம்..." என்றிட

"இனிமே நான் பெட்ல தான் படுப்பேன்... என்பக்கத்துல படுக்குறது கஷ்டமா இருந்தா நீங்க போயி ஷோஃபாலயோ, இல்லே இன்னும் வசதியா படுக்கனும்னா வெளியே பால்கனிலேயோ போயி படுத்துக்கோங்க..." என்று சிடுசிடுத்துவிட்டு போர்வையை இழுத்து மூடிக்கொண்டாள்.

'அடிப்பாவி' என்று அதிசயித்தாலும் சிரித்துக் கொண்டே வெளிமாடத்திற்குச் சென்றான். நிலவில்லா வானில் மின்மினிப் பூச்சிகள் போல் பறந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்களை ரசித்தபடி அங்கிருந்த இருக்கையில் சரிந்து அமர்ந்தான்... வெகு நாட்களுக்குப்பின் தன் இல்லத்தில் தனதறையில் இன்பமாய் தன் நண்பர்களோடு பலநாள் உறங்கிக் கழித்த வெளிமாடம் இன்றும் அவனைத் தாலாட்டிட எப்போது உறங்கினானோ அவனுக்கே தெரியவில்லை.

சற்று நேரத்தில் மலர் வந்து எழுப்பி உள்ளே அழைத்துச் சென்று மெத்தையில் படுக்க வைத்தாள்.

தூக்க களக்கத்தில் "நீ படு... நான் அங்கே படுக்குறேன்..." என்று கொட்டாவி விட்டபடி நீள் சாய்விருக்கை நோக்கிச் சென்றான்.

அவன் கையைப் பிடித்து தடுத்து, "பரவாயில்லே.... இங்கேயே படுங்க... நான் ஒன்னும் உங்களை ரேப் பண்ணிடமாட்டேன்..." என்று துடுக்காய்க் கூறினாள்..

அவளது பேச்சில் தூக்கம் தெளிந்து சத்தமாக சிரித்தவன், "பனி....." என்று அவள் கன்னங்களை தன் கையில் ஏந்திக் கொண்டு,

"அதுக்கு அவசியமே இல்லே டி... இந்த கண்ணு போதும்... அது 'செய்' சொல்றதை செய்ய நான் எப்பவும் ரெடி தான்..." என்று கூறி அவள் கண்களைப் பார்த்தபடி நின்றிருந்தான். அது என்ன கட்டளை பிறப்பித்ததோ! அல்லது என்ன எதிர்கேள்வி கேட்டதோ! சட்டென அவளைவிட்டு நகர்ந்து நின்று,

"நான் பயப்படுறது என்னை பாத்து தான் டி... உன்னை நெருங்கும் போது வர்ற கோபம் கூட என் மேலயே எனக்கு வர்ற கோபம் தான்..." என்றவன் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, நீள்சாய்விருக்கை சென்று படுத்துக் கொண்டான்...

அவனது வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் தன் மனதிற்குள் கொண்டு வந்து அசைபோட்டுக் கொண்டிருந்த மலருக்கு தான் தூக்கம் பறிபோனது.

மறுநாள் காலை எப்போதும் போல் எழுந்து தங்களது இல்லம் செல்ல நினைத்து மலரை எழுப்பினான்.

"பனி... எழுந்துக்கோ... கிளம்பனும்..."

"எங்கே?"

"நம்ம வீட்டுக்கு தான்..."

"இப்போவே போகனுமா?" என்று படுக்கையில் இருந்து எழாமலேயே வினவினாள்.

"ஆமா... நான் ஸ்டூடியோ கெளம்பனும்... இங்கே இருக்குற ட்ரெஸ் இப்போலாம் எனக்கு பத்தாது. சோ போய் தான் ஆகனும்..." என்று அவனும் முடிவாகக் கூறினான்.

"அப்போ நீங்க போங்க... தான் இங்கே கொஞ்ச நாள் இருந்துட்டு வரேன்..."

மலரின் முடிவில் கோபம் கொண்டவன் அதனை வெளிக்காண்பிக்கும் விதத்தை மட்டும் சற்று மாற்றியிருந்தான். அவள் அருகே வந்து மெத்தையில் அமர்ந்தவன், அவளை கூர்பார்வை பார்த்தபடியே, கிட்டதட்ட முறைத்தபடியே,

"எத்தனை நாளைக்கு என்கிட்ட இருந்து உனக்கு விடுதலை வேணும்? அப்பறம்.... உனக்கு ட்ரெஸ்? நம்ம ட்ரைவர் சக்தி அண்ணாகிட்ட கொடுத்துவிடட்டா?" என்றான்.

அவனது வார்த்தைகள் அவள் மனதை காயப்படுத்த தான் செய்தது. இருந்தும்,

"ஒரு டூ வீக்ஸ்... ட்ரெஸ் அப்பறமா அத்தை கூட போயி எடுத்துக்கிறேன்..." என்று அவளும் பதில் கூறிட, கோபமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டான். அதன்பின் அவன் அவளுக்கு ஃபோனில் கூட அழைத்து பேசிடவில்லை.

அவனைப் பொருத்தவரை, 'தான் நேற்று இரவு அவ்வளவு தூரம் சொல்லியும் தன்னை விட்டு விலகிச் செல்ல நினைக்கிறாளே!' என்ற கோபம். அப்படி என்ன அவளை கொடுமை செய்துவிட்டேன்!!! என்று கோபம் கண்ணை மறைக்க, அவள் என்ன நினைக்கிறாள் என்பதை கடைசிவரை யோசிக்க மறந்தான்.

மலரும் என்ன நினைத்தாளோ அவனுக்கு ஒருமுறை கூட அழைத்து பேசிடவில்லை. அவளது யோசனையின் முடிவுகள் அவளுக்கு என்ன பதில் கொடுத்ததோ, அதன் முடிவு எப்படி அமையுமோ எதுவும் தெரிந்திடாத போதும், தான் எடுத்த முடிவை செய்து பார்க்கத் துணிந்தாள்.

விக்ரமிடம் இரண்டு வாரம் கழித்து வருகிறேன் என்று கூறியிருந்தவள், அன்று மாலையே அவர்களது இல்லம் சென்றாள். உதிக்கு அழைத்து தங்களுக்குள் இருக்கும் தகராறு தெரியாதபடி பேசி, விக்ரமின் இரவு உணவை கவனித்துக் கொண்டாள் அவனது மனவாட்டி...

அதே போல் விக்ரம் ஸ்டூடியோவில் இருந்து புறப்பட்ட நேரத்தையும் அறிந்து கொண்டாள். விக்ரமோ அவனது பனி இல்லாத இல்லத்திற்கு செல்ல விரும்பாமல், தாமதமாகவே தான் வீடு திரும்பினான்.

நேரே அறைக்குச் சென்றவன், விளக்கைக் கூட உயிர்பிக்கத் தோன்றாமல், பூத்துவாலையோடு குளியலறைக்குள் புகுந்தான். குளித்து முடித்து வந்தவன், படுக்கையின் அருகே இருந்த பெட் சைட் லாம்ப்-ஐ மட்டும் சொடுக்கி உடையை மாற்றிவிட்டு, தன் திறன்பேசியோடு பஞ்சனையில் சரிந்தான்.

புலனக் குறுந்தகவல் செயலியை அழுத்தி தன்னவளிடம் இருந்து எந்த செய்தியாவது வந்திருக்கிறதா என்று பார்க்க, அதுவோ முதல் நாள் அனுப்பியிருந்த எமோஜிகளை மட்டுமே மீண்டும் காட்டி நின்றது.

"பனி..... மிஸ் யூ டி....." என்று தட்டச்சு செய்துவிட்டு, 'நாளைய விடியலே அவள் முகத்தில் தான்...' என்று நினைத்தபடி அவளுக்கு குறுந்தகவல் அனுப்பி வைத்தான்.

அருகிலேயே மெசேஜ் டோன் கேட்டிட, சட்டென திரும்பிப் பார்த்தவன் அவளது கைபேசியை கண்டுகொண்டான். கண்களை சுழல விட, அவனது நெஞ்சாத்தி அழகிய மரகத பச்சை வண்ண சேலை உடுத்தி, ஒற்றை முந்தானை காற்றில் பறக்க, வெளிமாடத்தில் நின்றிருப்பது தெரிந்தது.

துள்ளிக்குதித்து ஓடிச் சென்றவன், அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

"ராட்சசி.... ஏன் டி என்கிட்ட பொய் சொன்னே!!! எப்போ வந்தே? சொல்லிருந்தா நானே கூட்டிட்டு வந்திருப்பேன்ல... சண்டக்காரி..." என்று அவளை அணைத்தபடியே திட்டிக் கொண்டிருந்தான்.

அவளிடம் எந்த பதிலும் இல்லை... அவனது அணைப்பில் அழுத்தம் கூடிக்கொண்டே போக, பெண்ணவள் வலியை உணர்ந்த போதும் அமைதியாகவே நின்றிருந்தாள். சற்று நேரத்தில் அவளை தள்ளி நிறுத்தி,

"என்ன கோபமா?" என்று அவளது தாடையில் கை வைத்து கண்களைப் பார்த்து வினவினான்.

அவனது கண்களில் ஏதோ ஒன்றை தேடியபடி, "அதுக்கெல்லாம் எனக்கு உரிமை இருக்கானே தெரியலேயே!!!" என்றாள் மென்மையான குரலில்.

மென்னகையோடு அவளைப் பார்த்தபடி கண்களில் காதல் மின்னிட, "என்கிட்ட என் பொண்டாட்டிக்கு எல்லா உரிமையும் இருக்கு... அடிக்கலாம், சண்டை போடலாம், கொஞ்சலாம்..." என்று கூறி கண்சிமிட்டினான்.

இருவராலும் மறக்க முடியாத முதல் சந்திப்பு, முதல் கார் பயணம், முதல் சண்டை, முதல் முத்தம், முதன்முதலாக பொண்டாட்டி என்றதும், அதன் அடையாளமாய் இன்றளவும் அவள் கழுத்தில் குடியிருக்கும் அவன் அணிவித்த VP சங்கிலியும் என அணைத்தும் மனக்கண்ணில் காட்சியாய் விரிந்தது இருவருக்கும்.

-தொடரும்.​