• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மாலைசூடி மஞ்சம் தேடி 29

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
இரண்டு வருடங்களுக்கு முன்பு அன்றைய மகிழுந்து பயணத்தில் இல்லம் திரும்பும் போது தன்னருகே நெருங்கி அமர்ந்தால் மட்டுமே வீட்டிற்கு அழைத்துச் செல்வேன் என்று மிரட்டிய விக்ரமை துளியும் பிடிக்கவில்லை மலருக்கு...

வேண்டா வெறுப்பாக தன் தம்பி தனக்காக காத்திருப்பான் என்ற எண்ணத்தில் தான் விக்ரம் சொன்னதை செய்தாள்.

ஆனாலும் அவளது முகத்தில் வெறுப்பு தெரிந்திட, அதில் கோபம் கொண்டவன், அதனை மகிழுந்தைச் செலுத்துவதில் காண்பித்தான்.

அதிவேகமாக அதுவும் தனது வீட்டைவிட்டு எதிர்திசையில் செல்லும் வாகனத்தையும், செலுத்திக் கொண்டிருக்கும் விக்ரமையும் எதுவும் செய்ய முடியாமல் உறத்துவிழித்தாள்.

"என்ன?" என்று அவள் புறம் திரும்பாமலேயே வினிவினான்.

"வீட்டுக்கு போகனும்..."

"நீ என்ன குழந்தையா!!! இல்லே நான் தான் உன்னை கடத்திட்டு வந்திருக்கேனா? திரும்பத் திரும்ப அதையே சொல்லிட்டு இருக்கே!!!" என்று அவளைப் பார்த்து சிடுசிடுக்கத் தொடங்கினான்.

மலர் மீண்டும் அமைதியாகிவிட, விக்ரமும் தன் கோபத்தைக் குறைத்து, "வீட்டுக்கு பொறுமையா போலாம்.... ஹனிமூன் எங்கே போலாம்? அதை சொல்லு மொதோ?" என்றிட பெண்ணவளோ அன்றைக்கு இருந்த மனநிலையில் அந்த பேச்சை மொத்தமாக வெறுத்தாள்.

பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தவளை, தோள்பட்டையில் இடித்து "ஏய்... என்ன வெட்கப்படுறேயா? அதுக்கெல்லாம் இப்போ டைம் இல்லே... அல்ரெடி இத்தனை நாள் நாம ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்காம நிறைய நாளை வேஸ்ட் பண்ணியாச்சு... நாளைக்கு ஒரு நாள் தான் இருக்கு... நம்ம லைஃப், நம்மலோட ஹாப்பினஸ்.... நாம ப்ளான் பன்றதுல தப்பு இல்லே... சுட்டெரிக்கிற ஈஜிப்த் டெசர்ட்டா இருந்தாலும் சரி, குளுகுளுனு பனிமழை பொழியிற ஸ்விஸ்ஸா இருந்தாலும் சரி... நோ வொரீஸ்... எனக்கு நீ என் பக்கத்துல இருந்தாலே போதும். இப்போ மாதிரி நெருக்கமா!!!.. சோ உனக்கு எங்கே போக விருப்பம்னு சொல்லு போகலாம்..." என்று அவளது அமைதிக்கு அவனாக வெட்கம் என்ற ஒரு காரணம் ஊகித்துக் கொண்டு, அதனை விலக்குவதற்கு விளக்கமும் கொடுத்து வினவினான்.

கேட்டவளின் உடல் தான் கூசிப்போனது... இவன் தான் தன்னை மணந்து கொள்ளப்போகும் மணவாளன் என்று அறிந்து மூன்று மணி நேரத்திற்குள்ளாகவே, தேன் சிந்தும் இனிய வார்த்தைகள், மறுநிமிடமே தேளாய் கொட்டும் தீச்சொற்கள், காதலாய் கசிந்துருகும் கண்கள், அடுத்த நொடியே கனலாய் சுட்டெரிக்கும் தீ பார்வை, என மாற்றி மாற்றி தன் உணர்வை வெளிக்காட்டிடும் விக்ரமைக் காணும்போது, ஏதோ சூறாவளியில் சிக்கியது போல் இருந்தது.

பற்றாகுறைக்கு இப்போது அவனது கூற்றிற்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு உன் உடல் உரசிக்கொண்டிருந்தாலே போதும் என்று கூறுவதாக நினைத்துக் கொண்டு, அவனைவிட்டு வெகுதூரம் விலகிச் செல்ல துடித்தாள் பெண்ணவள். அவன் கொடுத்த முத்தங்கள் கூட தகிக்கத் தொடங்கியது.

மலரின் வெறுப்பை உணர்ந்திடாத விக்ரம், "மலர்... நான் கேட்ட பதில் சொல்லனும் புரியிதா? இப்படி அமைதியா இருந்தா, என்னோட மூடை பொறுத்து பனிஸ்மெண்ட் கிடைக்கும்... இப்பவே சொல்லிட்டேன்" என்று கரார் குரலில் கூறினான். ஆனாலும் முகத்தில் ஏதோ ஒரு குறுகுறுப்பு புன்னகை.

அவன் கூறிய தோரணையும், அந்த குறும்புப் புன்னகையும் அவளுக்கு புரியவைத்தது என்னவென்றால், முத்தங்கள் கூட தண்டனையாக கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று கூறுகிறான். அதில் விருப்பம் இல்லாதவள், அதனை தவிர்க்க வேண்டியே வாய் திறந்தாள்...

"எனக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்லே... எப்போ வீட்டுக்கு போறோம்?"

"இப்போ என் கூட இருக்கிறதுல உனக்கு என்னடி ப்ரச்சனை? யார் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லிக்கிறேன்..." என்று உருமினான். மீண்டும் தன்னை அமைதிபடுத்திக் கொண்டு, அவனது திறன்பேசியை கையில் கொடுத்தான்.

"இதுல கூகுல் மேப் எடு..." அவளும் அவன் கூறியதை செய்தாள்.

"இதுல ஏதாவது ஒரு ப்ளேஸை டச் பண்ணு... அங்கே உன்னை கூட்டிட்டுப் போறேன்..."

அவனது வார்த்தைகள் எதுவும் அவளுக்கு இப்போது இனித்திடவில்லை.

"இந்த உலகத்துலேயே எனக்கு பிடிச்ச இடம் என் வீடு தான்... இப்போ அங்கே கூட்டிட்டு போக முடியுமா?" என்றிட,

"அப்போ ஹனிமூன்னை அங்கேயே வெச்சுக்கலாம்... சுத்திப் பாக்குறேன்ற பேர்ல ரூமை விட்டு வெளியேறவே தேவையில்லே... நீ என்னையும், நான் உன்னையும், நாம ரெண்டு பேரும் சேர்ந்து பெட்டையும் சுத்தி வந்தாலே போதும்..." என்று சின்ன சிரிப்போடு காம தேவனின் காதல் ரசம் தொய்த்த அம்பை வார்த்தைகளாய் உருமாற்றி வீசினான்.

பெண்ணவளுக்கோ என்ன பேசினாலும் இறுதியில் பேச்சு அங்கேயே வந்து நிற்கிறதே என்றானது. இவருக்கு என் நிலை புரியவில்லையா! அல்லது புரியாதது போல் நடிக்கிறாரா!

அவரது கூற்றுக்கு ஆம் என்று தலையசைப்பதையும், நீங்கள் சொல்வது தான் சரி என்று ஏற்றுக்கொள்ளும் வரை அவர் கூறியதையே தான் விடாமல் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பார் போல... தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் என்று வாதிடும் குணம் படைத்தவர். என்று விக்ரமைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

மானினியின் சிந்தனையைக் கலைக்கவே விக்ரமின் திறன்பேசி அதிர்ந்தது. திரையில் அக்ஸரா என்று ஒளிர, அவனிடம் நீட்டினாள்.

"எடுத்து பேசு..."

"நானா? இது யாருனே தெரியாம நான் ஏன் எடுத்து பேசனும்?"

"என் ஃப்ரெண்டு தான்... மேரேஜ்க்கு விஷ் பண்ண தான் கால் பண்ணிருப்பா... அட்டென் பண்ணு.." என்றான்.

மலர் திரையைத் தடவி உயிர்ப்பித்த அடுத்த நிமிடம், "ஹாய் விக்கி... மிஸ் யூ டார்லிங்.... லவ் யூ சோ மச் மை ச்சாம் பாய்..." என்றிட மலருக்கு மொத்தாமாக வெறுத்துப் போனது. ஒலிபெருக்கியை அழுத்திவிட்டு அமைதியடைந்தாள் அனிச்சம் மலரவள்.

"ஹேய்... உதை வாங்குவே நீ....... எனக்கு மேரேஜ் ஆகப் போகுது... இன்னமும் இப்படியே பேசிட்டு இருந்தே என் வொய்ப் கையாலேயே அடி வாங்குவே... ஏன்னா எனக்கு லவ் யூ சொல்லறதுக்கு ஒருத்தி வந்துட்டா... தெரியுல?" என்று எப்போதும் போல் அழுத்தமில்லா ஒதுக்கத்தை காண்பித்தான்.

ஆனால் இரு பெண்களுக்கும் அது ஒதுக்கம் போலவே தெரியவில்லை போல... அருகில் இருந்தவள் மறுபுறம் திரும்பி முகம் சுழித்தாள் என்றால் மறுமுனையில் பேசிக் கொண்டிருந்தவளோ,

"இன்னும் எத்தனை பொண்ணுங்க வந்தாலும் நான் என்னைக்கும் உனக்கு ஸ்பெஷல் தானே விக்கி!!!" என்று குழைந்தாள்.

அதனை கேட்ட மலருக்கு 'திக்' என்றானது. பெண் தோழிகள் இருப்பது தவறல்ல... ஆனால் அவர்கள் பேசும் முறையில் தானே அந்த ஆணின் கண்ணியம் இருக்கிறது என்ற எண்ணம் மூளையை அறிக்கத் தொடங்கியது.

அதற்குள் விக்ரமின் குரல் அவளை நடப்பிற்கு கொண்டுவந்ததது. "இனி அந்த கதையெல்லாம் இல்லே... எனக்கு என்னைக்கும் என் வொய்ஃப் தான் ஸ்பெஷல்... சரி என்ன விஷயமா கால் பண்ணினே?"

"சும்மா தான்... நாளைக்கு உனக்கு மேரேஜ் ஆகிடும்... இனி இப்படி ஃப்ரீயா பேச ச்சான்ஸ் கெடைக்குமானு தெரியலே... அதான் கொஞ்ச நேரம் உன்கிட்ட பேசிட்டு இருக்கலாம்னு தான்..."

'கடலை வறுக்க அழைத்திருக்கிறேன்' என்று அவள் கூறுவது மலருக்கு நன்றாகவே புரிந்தது. அதில் அவளுக்கு விக்ரமின் மேல் தான் கோபம் மூண்டது. நல்லிரவில் ஒரு பெண் அழைக்கிறாள் என்றால் அவனது இத்தனை நாள் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று யூகித்தவளின் நிம்மதி பறந்தோடியது.

"ம்ம்ம்.... ஆனா நான் ட்ரைவ் பண்ணிட்டு இருக்கேனே!" இப்போதும் விக்ரம் அவளை ஒதுக்கி வைப்பதாகவே நினைத்தான். ஆனால் அக்ஸராவோ அதனை புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை.

"அங்கே இப்போ மிட் நைட் தானே! இன்னேரம் எங்கே போயிட்டு இருக்கே! என்ன உன் ஃப்ரெண்ட்ஸோட பேச்சுலர் பார்ட்டியா?"

"அதெல்லாம் சென்னை-லயே முடிச்சாச்சு... இது சும்மா என் உட்பீ கூட ஒரு லாங் ட்ரைவ்..."

"ஓ... அப்போ உங்க ப்ரைவசி டைம்ல டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போல... சாரி" என்றாள் ஒரு மாதிரியான குரலில் கொஞ்சினாள்.

அக்ஸரா கூறியதன் அர்த்தம் இருவருக்கும் புரியத் தான் செய்தது. விக்ரமிற்கு தான் மணந்து கொள்ளப் போகிறவளுடன் இணைத்து தானே கூறிகிறாள் இதிலென்ன இருக்கிறது என்று நினைத்தான் போல மெல்லிய சிரிப்போடு அமர்ந்திருந்தான்.

ஆனால் மலருக்கோ அந்த ப்ரைவசி என்ற வார்த்தையில் இத்தனை நேரம் இருவரும் பேசிக்கொண்ட காதல் மொழிகளும், அதனை அடுத்து அவன் கொடுத்த முத்தங்களும் நினைவில் வர, அதனை இன்னொருத்தி கற்பனை செய்து பார்க்கிறாள் என்று நினைக்கும் போதே உடல் கூசிப்போனது அவளுக்கு...

அக்ஸராவோ எப்படியும் விக்ரம் 'அதெல்லாம் ஒன்றுமில்லை... இதுக்கு எதுக்கு சாரி' என்று மறுத்துக் கூறுவான் என்ற நம்பிக்கையில் தான் அப்படி கூறினாள்.

ஆனால் விக்ரமோ சின்ன சிரிப்போடு நிறுத்திக்கொள்ள,

"அந்த பொண்ணு உனக்கு ஏத்த கம்பெனியன் தான் போல!!! சிரிச்சே மழுப்புறியே!!" என்று அக்ஸராவின் வார்த்தைகள் எல்லை மிறியது.

வெறி கொண்டு வார்த்தைகளால் வதைக்க வேண்டிய விக்ரமோ 'அக்ஷூ இப்படியெல்லாம் பேசுவாளா!!!' என்று அதிசயித்து அமர்ந்திருந்ததோடு, 'அக்ஷூ ஏன் இப்படி மாறிட்டே?' என்று மனதிற்குள் தன்னிடமே கேட்டுக்கொண்டிருந்தான்.

அக்ஸராவின் பேச்சில் மலரை பற்றி யோசிக்க மறந்து போனான் விக்ரம்.

'தன்னையும், தான் வளர்ந்த விதத்தையும் இன்னொருத்தி இழிவாகப் பேசுகிறாள், அதனை நிறுத்த வேண்டியவரோ வாய்மூடி அமர்ந்திருக்கிறார்.

எப்படி நிறுத்துவார்!!! இவ்வளவு நேரம் அவர் நடந்து கொண்ட முறையும் அது தானே!!! இவரை பற்றி தெரிந்து தான் அவளும் அப்படிப் பேசுகிறாள்...' என்று அப்போதும் விக்ரமைத் தான் தவறாக யோசித்தாள்.

"அக்ஷூ நாம இன்னொரு நாள் பேசலாம்... பைய்" என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.

'அதானே இன்னும் கொஞ்சம் நேரம் பேசவிட்டால், இவரது குட்டு வெளிப்பட்டுவிடுமே!!!' என்று மலர் தனக்கு இருந்த கோபத்திற்கு மேலும் மேலும் தப்பு தப்பாக யோசித்தாள்.

அதேபோல் விக்ரமைவிட்டு எப்போதோ நகர்ந்து அமர்ந்திருந்தாள்... அதனை கவனித்திடாதவன்,

"அவ பேரு அக்ஸரா... கனடா இருக்கா... இங்கே இருந்த வரைக்குமாவது கொஞ்சம் பேச பயப்படுவா.... அங்கே போகவும் தைரியம் ஜாஸ்தியாகிடுச்சு... எப்படி பேசுது பார்..." என்று விக்ரமும் தன் மனகுமுறலுக்கு வடிகால் தேடி மலரிடம் தானாக கூற முன்வந்தான்.

பேச்சுவாக்கில் மலர் நகர்ந்து அமர்ந்திருப்பதை கவனித்துவிட்டு, மிகவும் உரிமையாக அவளது இடையின் அருகே இருந்த இடைவெளியில் தன் கையை சொருகி மலரை தன்னருகே இழுத்தான்.

அது பிடிக்காமல் அவன் கையை எடுத்துவிட்டாள். விக்ரமும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அவள் முகம் உர்ரென இருப்பதைக் கண்டு,

"இப்போ என்னாச்சு?" என்று இவ்வளவு நேரம் சிரித்த முகமாக பேசிக் கொண்டிருந்தவன் திடீரென சிடுசிடுவென எரிந்துவிழ,

"வீட்டுக்கு போலாம்" என்றாள் மலரும் தன் கோபத்தை மறைத்துக்கொண்டு.

மீண்டும் மீண்டும் இதனையே கூறியவளின் மேல் கோபம் அதிகரித்திட, காரின் லாக்-ஐ ரிலீஸ் செய்துவிட்டு

"முடிஞ்சா குதிச்சு இறங்கிப் போடி" என்று கோபத்தில் கத்தினான்.

"கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்கலாம்னு வெளியே கூட்டிட்டு வந்தா, வந்ததுல இருந்து சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி டென்ஷன் ஏத்திட்டு இருக்கா!!!" என்று வாய்விட்டு சத்தமாக புலம்பிட, அதனை கேட்டவளுக்கு குதித்துவிடுவோமா என்று தான் இருந்தது.

அந்த எண்ணம் தோன்றிய நொடி பட்டென கதவைத் திறந்தும் இருந்தாள். விக்ரமோ கோபத்தோடு அவளது கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டவன், ப்ரேக்கை அழுத்துவதற்கு பதிலாக பதற்றத்தில் ஆக்ஸிலேட்டரை அழுத்திவிட, கார் தறிகெட்டு சீறிப் பாய்ந்தது.

ஃப்ராக்ஷன் ஆஃப் செகெண்ட், என்று சொல்லக் கூடிய நொடிக்கும் குறைவான நேரத்தில் தன்னை நிதானித்துக் கொண்டு ஆக்ஸிலேட்டரில் இருந்து காலை எடுத்து ப்ரெக்கை மிதித்தான். அப்போதும் நிற்காமல் சென்று கொண்டிருந்த காரிலிருந்து மலரை அவனே வெளியே தள்ளிவிட, அடுத்த நொடி எதிரில் இருந்த எட்டுவழிச்சாலை மேம்பாலத்திலிருந்து கார் கீழே விழுந்து கிடந்தது...

ப்ரேக் பிடிக்கவில்லை என்று தெரிந்தபின் தான் மலரைத் தள்ளிவிட்டான். ஆனால் அது தான் பின்னாளில் அவளது மனதில் பயத்தையும், 'கோபத்தில் விக்ரம் என்ன வேண்டுமானுலும் செய்வான்' என்ற எண்ணத்தையும் மலரின் மனதில் விதைத்திருந்தது.

சீட் பெல்ட் அணிந்திருந்த காரணத்தினால் விக்ரமிற்கு பெரிதாக அடிபடவில்லை. ஆனால் மலருக்கு என்ன நேர்ந்தது என்று அறிந்து கொள்வதற்கு முன்பே மயங்கியிருந்தான்.

அதே போல் காரிலிருந்து தவறி விழுந்த நொடியே மலரின் மூளை அதிர்ச்சியில் உறைந்துவிட்டது. கார் தலை குப்புற கவிழ்ந்ததை பார்க்கும் நிலையில் கூட அவள் இல்லை. அதற்கும் முன்பாகவே மயக்கமடைந்திருந்தாள்...


"அன்னைக்கு என்னை கார்ல இருந்து தள்ளிவிட்டுட்டு இன்னைக்கு உன் பொண்டாட்டியா உன்னை கொஞ்சலாம்னு சொல்றியா!!!? அன்னைக்கு தள்ளிவிட்டேல... இப்ப மட்டும் என்னவாம், 'நீ இல்லாம என்னால ஒரு நாள் கூட இருக்க முடியாது'னு பெரிய இவனாட்டம் டயலாக்லாம் பேசுறே... எதுக்கு டா என்னை தள்ளிவிட்டே!!!" என்று சரமாரியாக அவனை அடித்தாள்.

அதிக உரிமை எடுத்து அவள் தன்னை திட்டுவதை காதில் வாங்கியபடி, சிரித்துக் கொண்டே அவள் அடிகளையும் ஏற்றுக் கொண்டான்.

"ஹேய்... உண்மையாவே அடிக்கிறே டி... ஸ்ஸ்... ஆவ்... வலிக்கிது டி"

"வலிக்கட்டும்... எனக்கு பதில் சொல்ற வரைக்கும் இப்படித் தான் அடிப்பேன்..." என்று அவளும் மேலும் சலுகையாக அவனை அடித்தபடியே அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

"பனி... இப்பவும் சொல்றேன்... ஒரு காரியம் செய்யிறதும் உனக்காகத் தான்... செய்யாம விடுறதும் உனக்காகத் தான் டி." என்று கூறியபடி தன்மேல் சாய்ந்திருப்பவளை அணைத்தபடி நின்றான்.

மலர் செண்பகத்துடன் கோவிலுக்குச் செல்வதாகக் கூறி, காரின் குறுக்கே விழுந்த அன்றே அவளுக்கு அனைத்தும் நினைவு திரும்பி இருந்தது. மலரின் சில செயல்பாடுகள் மூலமே விக்ரமும் அதனை அறிந்து கொண்டு தான் அவளிடம் பேசாமல் இருந்தான்.

ஆனால் அவனால் அவளை விட்டு மொத்தமாக விலகி அவளைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. யார் முதலில் தன் ரகசியத்தை வெளிப்படுத்துவது என்று இருவரும் கண்ணாமூச்சி ஆட்டமே நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.

அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, தன்னை அவமதித்துச் சென்றது அக்ஸரா தான் என்று தெரிந்தபின் மலர் மீண்டும் விக்ரமை தவறாகத் தான் நினைத்தாள். அக்ஸரா அதற்கான விளக்கம் கொடுக்கவே, விக்ரமின் மேல் இருந்த கோபம் குறைந்திருந்தது.

மருத்துவமனையில் விக்ரம் தனக்காக செய்த காரியத்தை செம்பியன் மூலம் தெரிந்து கொண்டபின், அவன் மேல் காதல் கூட துளிர்க்கத் தொடங்கியது. அவள் எதிர்பார்த்தது போல் அவனது மாற்றங்கள் அவள்பால் கொண்ட அன்பால் உண்டானது என்று புரிந்து கொண்டபின், அவனுக்காக தன்னையும் மாற்றிக் கொண்டிருந்தாள் மலர்.

அவனது அணைப்பில் வெகுநேரம் நின்றிருந்தவள், தன் சந்தேகத்தை கேட்கத் தொடங்கினாள்.

"மாமா... அன்னைக்கு ஆக்ஸிடன்ட்ல எனக்கு ஏதாவது ஆகிடுச்சா?" என்றாள் மெல்லிய குரலில்....

சற்றே குழப்பமுற்றவன், "அதான் எல்லாம் சரியாகிடுச்சே டி... பின்னே என்ன?"

"அதில்லே மாமா... நான்... நான் பாப்பா கேரி பண்ண முடியாதா?" என்று இன்னுமே உள்ளே சென்ற குரலில் வினவினாள்.

அவளது குரலே அவனை மயக்க, அவள் என்ன நினைத்து இப்படிக் கேட்கிறாள் என்றும் புரிந்திட, இன்னும் அவளை இறுக்கி அணைத்து "அப்படிலாம் இல்லேயே... யூ ஆர் பெர்ஃபக்ட்லி ஆல்ரைட்..." என்றான் அவனும் கிரக்கமாக...

அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்திருந்தால் நிச்சயம் அடுத்த கேள்வி கேட்டிருக்கமாட்டாள்... ஆனால் அவள் தான் அவனைவிட்டு இம்மியும் நகரவில்லையே!

"அப்போ... உங்களுக்கு.... ஏதாவது ப்ராப்ளமா?" என்று தயங்கித் தயங்கி இன்னுமே உள்ளே சென்ற வலுவிழந்த குரலில் வினவினாள்.

"வாட்?" என்று கத்தியபடி அவளை நகர்த்தி நிறுத்தினான் விக்ரம்...

சட்டென அவனை நிமிர்ந்து பார்த்து "சாரி... சாரி..... தப்பா கேட்டிருந்தா மன்னிச்சிடுங்க... அப்படியே ஏதாவது ப்ராப்ளம் இருந்தாலும் எனக்கு.... நான் அக்ஸப்ட்...." என்று அவள் போக்கில் கூறிக்கொண்டிருக்க,

விக்ரம் சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தான். அவன் சிரிப்பைக் கண்டவள், தான் அதிகமாகவே உளறிவிட்டோமோ என்று தாமதமாகவே யோசிக்கத் தொடங்கினாள்.

சிரித்தபடியே அங்கே போடப்பட்டிருந்த நீள்சாய்விருக்கையில் அமர்ந்து, அவளையும் அருகில் அழைத்தான்.

சிரித்து கேலி செய்கிறான் என்று நன்றாகவே தெரிந்திட, உதட்டை சுழித்துக் கொண்டு அவன் அருகே சென்றாள். தடாலடியாக அவளை இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டவன்,

"ஃபோன் உன் கையில இருக்குறது ரெம்ப தப்புனு நெனைக்கிறேன்... எப்போ பார் படம் பாக்குறதும்...... அதர் லாங்வேஜ் மூவீஸ் ஸ்டோரியா கேட்குறதும்..... ஒன்னு பண்ணு நாளைல இருந்து என்கூட ஆபிஸ் வந்திடு... தமிழ் லிட்ரசி தானே படிச்சிருக்க... அந்தந்த ப்ரோக்ராம்-க்கு ஏத்த மாதிரி ஸ்க்ரிப்ட் எழுது... ஓகே வா?." என்றான்.

பொறுமை இழந்தவள், கோபமும் கொஞ்சலுமாக கத்தத் தொடங்கினாள்.

"நான் என்ன கேட்டுட்டு இருக்கேன்... நீங்க என்ன பேசிட்டு இருக்கிங்க... போன தடவ ஆச்சி வந்திருந்தப்போவே 'ஹாஸ்பிட்டல் போனியா? டாக்டர்கிட்ட உன் ஹெல்த் கன்டிஷன் கேட்டியா?'னு கேட்டாங்க... அதுக்கு என்ன பதில் சொல்ல சொல்றிங்க...!!!

அது பத்தாதுனு இந்த செண்பக அக்கா, தினமும் தம்பிக்கு பாதாம் பால் கொடு, ரெண்டு பேரும் செவ்வாழை சாப்பிடுங்க... அப்படி இப்படினு ஆயிரம் சொல்றாங்க... எல்லார்கிட்டேயும் நான் என்ன பதில் சொல்றது....?

நானா வெட்கத்தை விட்டு கேட்டாதான் எல்லாம் நடக்கும்ன்னா, நானே கேட்குறேன்.... நமக்கு எப்போ ஃபஸ்.........."

அதற்கு மேல் அவன் பேசவிட்டிருந்தால் தானே.... இவ்வளவு நேரம் மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்தவளுக்கு தன் சுவாசக் காற்றை இதழ்கள் வழியாக அவளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தான். தொண்டை தண்ணீர் வற்றி வரண்டு கிடந்த அவள் இதழ்களில் தேனுறும் மார்க்கத்தினை கண்டறிந்து கொண்டிருந்தான்.

அவனது கைகளோ இருவருக்குள்ளும் இருக்கும் இடைவெளியைக் குறைத்திடும் போராட்டத்தில் தனியாக பங்கெடுக்க முடியாமல் கால்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டிருந்தது. மொத்தத்தில் அவன் மேலே படர்ந்திருந்தது அவளே ஆனாலும், அவளது அணுவும் அவனது கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

நிமிடங்கள் கடந்திட, எங்கோ தூரத்தில் கேட்ட கூர்க்காவின் விசில் சப்தத்தில் தான் அவளை விடுவித்தான்.

"நீ கேட்டா என்னால மறுக்க முடியாது டி.... ப்ளீஸ் புரிஞ்சுக்கோ... என்னை நம்புறே தானே!!!"

அவள் அமைதியாக மேலும் கீழும் தலையசைக்க,

"நான் ஒரு விஷயம் செய்யிறதும் உனக்காகத் தான். செய்யாம விடுறதும் உனக்காகத் தான்.... சரியா?"

"ம்ம்ம்..."

"இனிமே யாரும் உன்னை எதுவும் கேட்கமாட்டாங்க... ம்ம்ம்?"

"என்ன சொல்லப் போறிங்க?... கோபத்துல அவங்களை எல்லாம் எதுவும் திட்டிடாதிங்க..."

"அவங்க மேல கோபப்படுற மாதிரி எதுவும் நடக்கலேயே!!! ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சிக்கோ... இன்னும் குழந்தை இல்லேயா காலாகாலத்துல வைத்தியம் பாருங்கனு சொல்றவங்கள கூட திட்டத் தேவையில்லே.... நம்ம மேல இருக்குற அக்கறைல தான் சொல்றாங்கனு நெனைக்கனும்....

கல்யாணம் ஆகி பத்து வர்ஷம் வரைக்கும் நமக்கும் ஒன்னும் தோனாது.... ஆனா இருபது வர்ஷம் ஆகும் போது ஒரு கல்யாணப் பொண்ணை பாக்கும் போது தோனும், நமக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தா நாமலும் இப்படி அழகு பாத்திருக்கலாமேனு....

ஐம்பது வயசு தாண்டினதும் உடம்பு சரியில்லாத பேரண்ட்டை ஹாஸ்பிட்டல் கூட்டிடு போற பையனை பாக்கும் போது தோனும், நமக்கு ஒரு பையன் இருந்திருந்தா நமக்கு பின்னாடி நம்ம இணைக்கு அவன் துணையா இருப்பானேனு...

ஆனா காலம் கடந்த பின்னாடி குழந்தை பெத்துக்க முடியாதுல்ல.... சோ உண்மையான அன்போடு சொல்றவங்களை தப்பா நெனைக்கக் கூடாது புரியுதா?"

தன் பதிபத்தனை மெச்சுதலாகவும், பூரிப்பாவும் பார்த்தாள் பெண்ணவள்.

"விட்டா இப்படி பார்த்தே என்னை மயக்கி உனக்குள்ள மீழ முடியாதபடி ஆழ புதைச்சுக்குவே... எழுந்து போடி மொதோ..." என்று முந்தைய நாளைப் போல கத்தினான்.

ஆனால் இன்று அவளுக்கு கோபம் வரவில்லை. மாறாக அவன் கூறுயது போல் தனக்குள் புதைத்துக் கொள்ளும் ஆவல் எழ, இருக்கி அணைத்து முகம் முழுதும் முத்தமிடத் தொடங்கினாள்.

"என் தவத்தை கலைக்கிறதுக்குன்னே வந்த மோகினி டி நீ..." என்று அவனும் காதலாய் மொழிந்தான்.

அவன் மடியில் இருந்து எழுந்து கொண்டு, "நான் என் ரூம்ல படுத்துக்கிறேன்..." என்று சிரித்த முகமாகத் தான் கூறினாள். ஆனால் கேட்டவன் தான் தனலை கக்கினான்.

"இப்போ உன்னை உன் ரூம்க்கு போக சொன்னேனா நான்?"

"உங்களுக்கு என்ன ஜாலியா பெட்ல படுத்துபிங்க.... நான் ஷோஃபா-ல எவ்வளவு நேரம் தான் ஒரே பொஸிஷன்ல படுக்குறது!!!?"

எங்கோ பார்த்தபடி, "வேணுனா நீயும் பெட்ல படுத்துக்கோ" என்று அவளை அவள் அறைக்கு அனுப்ப விருப்பமின்றி வாக்குவாதம் செய்தான்.

"ஷூயர் தானே!! அப்பறம் காலைல எழுந்ததும் என்னை மோகினி அது இதுனு சொல்லக் கூடாது!!?" என்று அவள் கேட்ட விதத்தில் விக்ரமின் மனம் ஆட்டம் காணத் தொடங்கியது....

"ஒரு கான்ஃபிடன்ட்டா பேச விடேன் டி... திரும்ப கேட்டா ஜெர்க் ஆகுதுல..." என்று சிடுசிடுத்தான்.

"மாமா.... யானைக்கும் அடி சருக்கும்... எப்படி வசதி?" என்று இதழ்களை பற்களால் கடித்தபடி வினவியவளை,

"ராட்சசி... நீ எங்கேயும் போக வேண்டாம்... நானே உன் ரூம்ல படுத்துக்கிறேன்... போடி" என்று அவன் மேல் அவனுக்கே நம்பிக்கையற்றுப் போக எழுந்து அவளது அறைக்குச் சென்றான்.

-தொடரும்.​
 
Top