• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மாலைசூடி மஞ்சம் தேடி 32

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
பதினைந்து நிமிட இடைவெளியில் மலரின் வீட்டு வாசலில் மூன்று கார்கள் வந்து நின்றது. முதலாமதில் ரத்தினமும் விசாலியும் வந்திறங்கினர்.

ரத்தினத்தையும், விசாலியையும் கண்ட உடனேயே மலர் என்ன எது என்று கேட்கத் தொடங்கியிருந்தாள்.

"மாமா!!! அத்தே!!! நீங்களும் வர்றதா இவர் சொல்லவே இல்லேயே! அப்படினா எல்லாரும் ஒன்னாவே வந்திருக்கலாமே!" என்றவளுக்கு யாரும் எந்த பதிலும் சொல்லவில்லை...

எல்லோரும் அமைதியாக நிற்பதைக் கண்டு, "ஏன் யாரும் பேச மாட்டிறிங்க?" என்று கேள்வி கேட்டாலும் மனதிலோ! 'செம்பியனால் ஏதேனும் ப்ரச்சனையோ! அதுவும் அந்த பெண்! அதான் யாரும் பேசாமல் இருக்கிறார்களோ!' என்று தான் யோசித்தாள்.

"பனி... கொஞ்சம் அமைதியா இரேன்... வந்தவங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்..." என்று தன் மனைவியின் மனநிலை அறியாமல் விக்ரம் தான் முதலில் வாய் திறந்தான்.

"அப்பா நீங்க அம்மாவை கூட்டிட்டு பண்ணை வீட்டுக்கு போங்க... மார்னிங் மத்தது பேசிக்கலாம்..." என்று ரத்தினத்திடம் கூறினான்.

"இல்லே இங்கேயே தங்கிக்கிறோம்" என்று விசாலி தாமோதரனைப் பார்த்து கூறிட, இரண்டு ஆண்டுகள் கழித்து தன் அன்னையிடம் முதன்முறையாகப் பேசினான் விக்ரம் அதுவும் சகஜமாக.

"ம்மா... நான் தான் சொல்றேன்ல... நீங்க அங்கே தங்கிக்கோங்க... நானும் கொஞ்ச நேரத்துல வந்திடுவேன்..." என்று அன்னையிடம் கூறிவிட்டு, தன் மாமனாரின் புறம் திரும்பி,

"மாமா, பண்ணை வீடு திறந்திருக்கா! இல்லேனா அம்மா, அப்பா கூட ஆள் அனுப்பி வைங்க மாமா" என்று கூறினான்.

ஆனால் அவரது கவனம் அவனிடம் இல்லை. விக்ரமும் அதனை உணர்ந்திட, சரியாக மலரும் விக்ரமின் கையை சுரண்டினாள்.

"என்ன டி?" என்று எப்போதும் போல் கடுப்புடன் தன் மனையாளின் புறம் திரும்பியவன், அவள் கண் காண்பித்த திசையை நோக்க,

விசாலி சுற்றம் மறந்து நின்ற நிலையிலேயே, அருகில் நின்றிருந்த ரத்தினத்தின் தோளில் முகம் புதைத்து கேவளோடு ரத்தினத்தின் கையை அழுத்தமாக அணைத்திருந்தார்.

விசாலி அழுவது தெரிந்தவுடன், விக்ரம் மீண்டும் தன் மனையாளின் முகத்தை தான் பார்த்தான். மலரும் மென்னகையுடன் அவன் கையைப் பிடித்து தள்ளி, "போங்க..." என்றாள்.

அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் "எதுக்கு டி? இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு அழுகுறாங்க?" என்று உண்மையாகவே காரணம் தெரியாமல் அதற்கும் அவளிடம் கோபம் கொள்ள,

"மாமா....... இப்போ நீங்க அவங்களை என்ன சொல்லி அழச்சிங்க? அந்த வார்த்தைய கேக்குறதுக்கு தான் ரெண்டு வர்ஷமா காத்துட்டு இருந்தாங்க... இது சந்தோஷத்துல வந்த அழுகை... போயி பேசுங்க..." என்று பக்குவமாக எடுத்துக் கூறினாள்.

விக்ரமிற்கு அது அப்படி ஒன்றும் பெரிய விஷயமாகத் தெரிந்திடவில்லை... இருந்தும் மலர் சொல்லிவிட்டாளே என்பதற்காக விசாலியின் அருகே சென்றான்.

"ம்மா... இப்போ எதுக்கு அழுதுட்டு இருக்கிங்க?" என்றிட,

ரத்தினத்தின் தோளிலிருந்து நிமிர்ந்து நின்று விக்ரமிற்கு முதுகு காண்பித்தபடி, கண்களைத் துடைத்துக் கொண்டே, "நான்..... அழலே," என்று கேவள்களோடு கூறினார்.

"ம்மா... என்னை திரும்பிப் பாருங்க" என்று விசாலியின் கைபிடித்து திருப்பிட, அடுத்த நிமிடமே மீண்டும் உடைந்து அவனது நெஞ்சில் சாய்ந்து அழத் தொடங்கினார்.

தான் அணிந்திருக்கும் ஆடையினும் ஊடுருவிச் சென்ற அன்னையின் கண்ணீர் அவன் நெஞ்சைச் சுட, செய்வதறியாது சிலையென நின்றிருந்தான்.

அவனும் தான் என்ன செய்வான், அம்மா என்ற அழைப்பை மாம் என்று மாற்ற சொல்லிய நாளிலிருந்தே அவனது விளகல் ஆரம்பத்திருந்ததே! அப்போதிருந்தே தேவைக்கு மட்டுமே தான் அன்னையுடன் பேசியிருக்கிறான். அதன்பின்னும் பருவ வளர்ச்சி, ஒற்றை ஆண்மகன் போன்ற காரணங்கள் வேறு அவனை அவனது அறைக்குள்ளேயே அடைத்திருந்தது.

என்ன செய்வது என்று தெரியாது நின்றிருந்த போதும் அவனது கைகள் தானாக அன்னையை தழுவிக்கொள்ள, உதவிக்கு தன்னவளை கண்ஜாடையில் அருகில் அழைத்தான்.

மலரும் விசாலிக்கு என்ன சமாதானம் கூற என்று தெரியாமல், அவரது முதுகைத் தடவி ஆறுதல் கூற முற்பட்டாள்.

மருமகளின் வருடலை உணர்ந்து மீண்டும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கண்களாலேயே அவளிடம் மன்னிப்பு யாசித்து, நன்றி நழுவினார் விசாலி. பதிலுக்கு மலரும் விசாலியை அனைத்துக் கொண்டாள்.

ஏனோ தன் அன்னையின் மாற்றமோ அல்லது பல வருடம் கழித்து கிடைத்த அன்னை பாசமோ ஏதோ ஒன்று விக்ரமையும் கண்கலங்கச் செய்திருந்தது. எவருக்கும் தெரியாமல் முகத்தைத் திருப்பி கண்ணில் அரும்பிய ஒருதுளிக் கண்ணீரை சுண்டிவிட்டு வழக்கம் போல் தன் மனையாளில் கைபிடித்து,

"சரி சரி கிளம்புங்க... ப்பா அம்மாவை கூட்டிட்டு போங்க... நானும் கொஞ்ச நேரத்துல வர்றேன்..." என்று தந்தைக்கே கட்டளை பிறப்பிக்கும், வீம்புக்கார விக்ரமாக மாறியிருந்தான்.

ரத்தினமும், விசாலியும் வெளியேறிச் செல்ல, செம்பியன் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தான். அப்போது தான் பொழுது புலர்ந்து கொண்டிருக்க, செம்பியன் வீட்டை நெருங்கிய போது தான் அவனை கவனித்தாள் மலர். தம்பியிடம் எதுவும் பேசாமல் உள்ளே சென்றிவிட, தன் மச்சானை நிமிர்ந்து பார்க்க முடியாமல், தலைகுனிந்தபடி,

"மச்சான்.... அது... வருண்-ஐ கூட்டிட்டு வர விருப்பம் இல்லே... அதான் நான் மட்டும்..." என்று அவன் தயங்கித் தயங்கி கூறினான்.

விக்ரமும் அவனைப் பேசவிடும் நோக்கில், அப்போதைக்கு ஒன்று கூறாமல், "சரி... பரவாயில்லே... உள்ளே போ" என்று வீட்டிற்குள் அனுப்பி வைத்தான்.

உள்ளே தாமோதரனோ தன் மகளிடம், "உன்னை நெனச்சா ரெம்ப பெறுமையா இருக்கு டா குட்டிம்மா" என்று சிலாகிக்க,

"எதுக்கு ப்பா?"

"மாப்ளைக்கும் அவங்க அம்மாவுக்கும் என்ன சண்டைனு தெரியாது. ஆனா உனக்கு ஆக்ஸிடன்ட் ஆனதுல இருந்து ரெண்டு பேரும் பேசிக்கிறது. அனேகமா அவங்க உன்னை பத்தி தான் தப்பா சொல்லியிருக்கனும்... ஏன்னா இங்கேயே அவங்க அவ்ளோ பேசினாங்க... எல்லாத்தையும் ரத்தினத்துக்காக தான் பொருத்துக்கிட்டேன்... ஆனாலும் நீ அவங்க பேசினதையும் பொருட்படுத்தாம ரெண்டு பேரையும் பேச வெச்சது நீயாத் தான் இருப்பே... அதை நினைக்கும் போது ரெம்பவே சந்தோஷமா இருக்கு... என் வளர்ப்பு என்னைக்கும் தப்பா போகலேனு பெறுமையா இருக்கு டா" என்று மகளை நெஞ்சோடு அணைத்து உச்சி முகர்ந்தார்.

சரியாக செம்பியனும் உள்ளே நுழைய, "நாளைக்கே காலம் நம்ம வளர்ப்பு தப்போனு நினைக்க வெச்சாலும், மன தைரியத்தை மட்டும் விட்டுடாதிங்க ப்பா..." என்று தம்பியைப் பார்த்தபடியே கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

வாசலில் நின்றிருந்த விக்ரம், இரண்டாவதாக வந்த காரிலிருந்து இறங்கிய உதி மற்றும் வினோவை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைய, சற்று நேரம் மறந்திருந்த சந்தேகம் மீண்டும் மலருக்குத் தோன்றியது.

'ஏன் எல்லோரும் வந்திருக்கின்றனர்!!! என்ன நடக்கிறது இங்கே!!!' என்று யோசித்தபடியே இருவரையும் வரவேற்றாள்.

"வாங்க உதி ண்ணா, வாங்க வினோ ண்ணா..."

தாமோதரனும் "வாங்க தம்பி" என்றபடி இருவரையும் பார்த்து தலையசைத்தார்.

விக்ரம் மலரிடம், "பனி..." என்று அழைத்தபடி அவளருகே வந்தவன், "நீ கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு... நான் இன்னும் கொஞ்ச நேரத்துல பண்ணை வீட்டுக்கு போயிடுவேன்... ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டு கடைவீதி போயிட்டு வரலாம்... சரியா?" என்று நகர்ந்தவன் மீண்டும் நினைவு வந்தவனாய், "ஏய்... இன்னு கொஞ்ச நேரத்துல அந்த பொண்ணு வந்திடுவாங்க.... என்ன ஏதுனு கேட்டுட்டு அப்பறமா உன் தம்பிக்கு அர்ச்சனை நடத்து... அதுவரை அமைதியா இரு புரியுதா?" என்று எப்போதும் போல் அவனுக்கே உரிய முறைப்போடு கூறினான்...

அவளின் முகம் நவரசங்களில் கோபம், வேதனை, வெறுப்பு, அழுகை என பலரசத்தையும் வெளிப்படுத்தினாலும் அவனுக்காக தலையசைத்து "சரி" என்றாள்.

அதற்குள் அங்கே வந்த அபிராமி ஆச்சி, "தம்பி டீ போட்டுட்டேன்... நீங்களும் உங்க ஸ்நேகிதர்களும் இங்கேயே டீ குடிச்சிடுங்க... அம்மா, அப்பாவுக்கு சூடா ஃப்ளாஸ்க்ல கொடுத்துவிடுறேன்" என்று கூறிட,

"சரிங்க ஆச்சி" என்று கூறி கூடத்து இருக்கையில் வந்து அமர்ந்தான் தன் நண்பர்களோடு.

மலர் தான் அனைவருக்கும் தேநீர் எடுத்து வந்து கொடுத்தாள். தன் தந்தையுடன் உதியும், வினோவும் மும்பரபாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டுவிட்டு விக்ரமின் பார்வை தன் மேல் விழுவதற்காகவே தொலைக்காட்சி பெட்டி அருகே காத்திருந்தாள்.

நினைத்தது போலவே அவனும் அவளைத் திரும்பிப் பார்த்திட, அனைவர் முன்னிலையிலும் அவனிடம் வாய் திறந்து எதுவும் கேட்க முடியாமல், கண்களை உயர்த்தி நெற்றியை சுருக்கி, இரு கருவிழிகளிலும் ஆர்வத்தைத் தேக்கி, நெற்றிப் பொட்டில் குழப்ப ரேகைகளைத் தாங்கி, 'என்ன விஷயம்?' என்றாள்.

அவளின் செய்கைகள் விக்ரமிற்கு சுவாரசியத்தை அள்ளிக் கொடுக்க, சொக்கும் அழகில் மயங்கி கிறங்கி, கண்கள் மூடித் திறந்து இடவலமாக தலையசைத்து 'ஒன்னும் இல்லை' என்றான் "க்ளிச்" என்ற மெல்லிய சத்ததோடு...

பொய் கூறுகிறான் என்று அறிந்த பெண்ணவள், அவனை செல்லமாக முறைத்திட, ஒற்றை கண் சிமிட்டி, இதழ் குவித்து பறக்கும் முத்தம் ஒன்றை காற்றில் தூதுவிட்டான்.

பதிலுக்கு வெட்கம் கொண்டு ஒருநொடி எவரேனும் தங்களை கவனிக்கிறார்களா என்று கண்களை சுழற்றிப் பார்த்தவள், எவரும் கவனிக்கவில்லை என்றவுடன் மீண்டும் விக்ரமைப் பார்த்தாள்.

விரல் கொண்டு இதழ் மூடி அவளின் முகபாவனைகளை கண்ணிமைக்காமல் பார்த்தபடி இருக்கையில் நன்றாக சாய்ந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தான். மலரோ கண்களை சுருக்கி கீழுதட்டை மடித்து கண்டிப்பது போல் ஆள்காட்டி விரல் உயர்த்திக் காண்பித்தாள்.

சின்ன சிரிப்போடு பதிலுக்கு அதே போல் ஒரு பறக்கும் முத்தம் கொடு என்று கேட்டான் விக்ரம். கண்கள் இரண்டையும் விரித்து மீண்டும் ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்து இடவலமாகத் தலையசைத்தாள்.

விக்ரமோ கண்களை மட்டும் சுருக்கி கெஞ்சுவது போல் மீண்டும் வினவிட, மலர் மீண்டும் முடியாது என்று தலையசைத்துவிட்டு, அடுக்களைக்குள் சென்றுவிட்டாள். செல்லும் அவளை அழைக்கவும் முடியாமல், எழுந்து சென்று நிறுத்திடவும் முடியாமல் அவளது பின்னழகை கோபத்தோடு முறைத்துக் கொண்டிருந்தான்.

"எல்லாருக்கும் டீ கொடுத்துட்டேயா டா?" என்று அபிராமி மலரிடம் வினவிட, தன்னவனின் நினைவில் இருந்தவள் பதிலேதும் சொல்லாமல் நின்றிருந்தாள். மீண்டும் ஒருமுறை அவளை உலுக்கிக் கேட்டப்பின் தான் "கொடுத்துட்டேன் ஆச்சி" என்று கூறி பாத்திரம் தேய்க்கச் சென்றாள்.

"குட்டிம்மா அதை விடு... நான் பாத்துக்கிறேன்... நீ போ..." என்றிட,

"இருக்கட்டும் ஆச்சி.... இதுக்கு முன்னாடி நான் செய்யாததா என்ன!"

"அதெல்லாம் அப்போ.... இப்போ இன்னு கொஞ்ச நேரத்துல பாத்திரம் தேய்க்க ஆள் வருவாங்க... நீ போயி உக்காரு" என்று அடுக்களையில் இருந்து துரத்தாத குறையாக அனுப்பி வைத்தார்.

மீண்டும் கூடம் வந்தவள் அப்போதும் நால்வரது பேச்சும் தொடர்ந்து கொண்டிருக்க, விக்ரம் தன்னைப் பார்க்கிறானா என்று கவனிக்கத் தொடங்கினாள். கோபத்தில் இருக்கும் அவன் இனி அவளைத் தானாகத் திரும்பிப் பார்த்துவிடுவானா என்ன!!!

மலரும் நான்கு முறை இங்கும் அங்கும் நடைபயின்றால், தந்தையிடமும், உதி, வினோவிடமும் தானாக வந்து ஏதேதோப் பேசினாள்... ஆனாலும் அவன் திரும்பிப் பார்க்கவில்லை.

மீண்டும் சென்று டீ.வி அருகே நின்று கொண்டு தன் திறன்பேசியை எடுத்து, அவனுக்கு குறுந்தகவல் அனுப்பிட, அதனை எடுத்து பார்த்துவிட்டு மீண்டும் ஓரமாக வைத்துவிட்டான். அதன்பின் வந்த குறுந்தகவலையும் பார்க்கவில்லை அவன்.

சற்று நேரத்தில் அவளது திறன்பேசி

உன்னாலே மெய் மறந்து நின்றேனே
மை விழியில் மையலுடன் வந்தேனே
இடை விடாத நெருக்கங்கள்
தொடருமா உயிரே
மொழி இல்லாமல் தவிக்கிறேன்
மௌனமாய் இங்கே


என்ற பாடலை இரண்டாம் முறையாக இசைத்திட, தாமோதரனோ,

"குட்டிம்மா உன் ஃபோனாடா? ரெம்ப நேரமா யாரோ கால் பண்றாங்க பார்..." என்றார்.

"ஹாங்... ப்பா பாக்குறேன்" என்று விக்ரமைப் பார்த்தபடியே பதிலுரைத்தாள்.

மூன்றாம் முறையும் அதே பாடல் இசைக்க, விக்ரம் தன் கோபம் குறைந்து அவளை நிமிர்ந்து பார்த்தான். சற்று நேரம் அவன் பார்வையைத் தாங்கியபடி நின்றிருந்தவள், அவன் எதிர்பார்த்திடாத நொடி, ஒற்றைக் கண் சிமிட்டி இதழ் குவித்து பறக்கும் முத்தம் கொடுத்திட, விக்ரம் கண்களில் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் ஒன்றாக இழைந்தாடியது.

அவனது கடையிதழ் புன்னகையைக் கண்டு, 'ஹாப்பியா?' என்றாள்.

'ம்ம்ம்' என்று கண்கள் மூடித்திறந்தவன், 'கல்யாணம் பண்ணிக்கலாமா?' என்று மீண்டும் சமிக்ஞை செய்து வினவிட, மீண்டும் விழிகள் விரிய அவனைப் பார்த்து, தன் கழுத்தில் இருக்கும் இரண்டு சங்கிலியையும் கை காண்பித்துக் கூறினாள். அதற்கும் சலைக்காதவனாய் மூன்றாம் முறை என்று கை காண்பித்தான்...

வெண்பற்கள் மின்ன இதழ் விரித்து புன்னகைத்து, நயனங்கள் நாணம் கொள்ள, நிலம் நோக்கியபடி நின்றிருந்தவள், காதில் தொங்கட்டான் ஆடியபடி தலையசைத்து சம்மதம் தெரிவித்தாள்.

அதன் பின்னும் இருவரது கண்களும் ஆயிரமாயிரம் கதை பேசிக் கொள்ள, இருவரும் தங்களுக்கான தனியுலகில் சஞ்சரித்தனர்...

உதியும், வினோவும் எழுந்து கொண்டபின் தான் விக்ரமிற்கு சுற்றம் நினைவில் வர, மலரிடம் கண்களால் விடைபெற்று நண்பர்களோடு வெளியே வந்தான்.

அப்போது அங்கே வந்து நின்ற மகிழுந்தில் வருணிகா இறங்கிட, வினோ தான் ஆடிப்போனான்.

அங்கே வினோவை எதிர்பார்த்திடாத வருணிகாவும், அரண்டு தான் நின்றிருந்தாள்.

"நீ எதுக்கு இங்கே வந்தே?" என்ற வினோத்தின் உருமளில், விக்ரமின் பின்னால் பதுங்கிக் கொண்டு, "ச்சாம்" என்று கத்தி செம்பியனை அழைத்தாள்.

"வினோ நான் தான் வர சொன்னேன்.... உனக்கு என்ன ப்ரச்சனை!"

"எனக்கு என்ன ப்ரச்சனையா!!! எனக்கு தான் ப்ரச்சனை... அங்கே காலேஜ்ல தான் இதுங்க பண்ற அலும்பை தாங்க முடியலேனு பாத்தா இங்கேயும் உயிரை வாங்க வந்திருச்சுங்க..."

"அப்படி என்ன உங்க உயிரை வாங்கிட்டோமாம்!!!... லவ் தானே பன்னினேன்..." என்று விக்ரம் எனும் அரணுக்குப் பின்னால் நின்று கொண்டு தைரியமாகப் பேசினாள் வருணிகா.

"ஹாங்... பப்பி லவ்.... படிப்பை முடிச்சிட்டு பத்து நாள் பாக்காம இருந்தா தானா மறந்திடும்... இதை சொன்னா உன் மச்சினன் என்னை மொறைக்கிறான்... என்னை ஒரு ப்ரொஃபஸரா ரெண்டு பேரும் மதிக்கிறதில்லே..." என்று விக்ரமிடம் கூறிவிட்டு,

"ஏய்... அப்படியே வந்த கார்லேயே ஏறி ஊருக்கு ஓடிரு சொல்லிட்டேன்..." என்று மிரட்டினான்.

"டேய் ச்சாம்.... வந்து தொலையேன் டா" என்று மீண்டும் கத்தினாள்.

வருணிகாவின் குரல் கேட்டு செம்பியனும் அரக்கபறக்க வெளியே வந்தான். செம்பியனைக் கண்டவுடன், விக்ரமின் பின்னால் நின்றிருந்தவள் செம்பியனின் அருகே வந்து நின்று கொண்டாள்.

தன் அருகே வந்து நின்றவளிடம், "நீ எப்டிடீ இங்கே வந்தே!!!.... உன்னை தான் வரவேண்டாம்னு அத்தன தடவை சொன்னேன்ல.... நான் உன்னை கூப்பிட வரலேனாலே தெரிஞ்சுக்க வேண்டாமா? இனி நான் யாரை சமாளிப்பேன்!!...." என்று பற்களைக் கடித்தபடி தன் கோபத்தை வருணிகாவிடம் காண்பித்தான்.

"டேய் நீ எனக்கு சப்போர்ட் பண்ணுவேனு உன்னை கூப்பிட்டா, நீயும் சேர்ந்து திட்டுறியே டா!" என்று பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு கூறினாள்.

அவளது வாடிய முகத்தைக் கண்டதும், செம்பியனின் மனம் மருகிட, "உடனே மூஞ்சியை இப்படி வெச்சுக்காதே... பாக்க சகிக்கலே... கேவளமா இருக்கு..." என்று கேலி போல் கூறி அவள் கரம் பற்றி நின்றான்.

விக்ரமோ அவர்களை பேசவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்... எவர் பேச்சில் உண்மை வெளிவருகிறது என்று பார்ப்பதற்காக...

"டேய்... அவளை ஏன் இங்கே வர சொன்னே!" என்று வினோ தன் நண்பனைப் பார்த்து கோபமாக வினவினான்.

"செம்பியன் வீட்டுக்கு, செம்பியன் ஃப்ரெண்டு வந்திருக்கா... அதுக்கு நீ ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறே?" என்றான். வினோவால் இதற்கு பதிலும் கூற முடியவில்லை, மறுப்பும் சொல்ல முடியவில்லை.

வினோவின் தவிப்பை ஆரம்பத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த உதி அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தபடி, 'பையனோட பிஹேவியரே சரி இல்லேயே! எங்கேயும் சிக்கிட்டானோ!!' என்று பலத்த யோசனையில் அமைதியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

அதற்குள் தாமோதரன், "வீட்டுக்குள்ள போயி பேசுவோம் மாப்ளே! வாங்க தம்பி... செம்பியா அந்த பாப்பாவை அழச்சிட்டு வா" என்று அங்கே என்ன நடக்கிறது என்று புரியில்லை என்றாலும், மரியாதை நிமித்தமாக தாமோதரன் அமைதியாகவே பேசினார்.

"இல்லே மாமா... நாங்க பண்ணை வீட்டுக்கு கிளம்புறோம்... இப்போ தலைக்கு மேல வேலை இருக்கு... அப்பறம் நிதானமா பேசலாம்." என்று கூறி விக்ரம், உதி, வினோ மூவரும் புறப்பட்டனர்.

செம்பியன் வருணிகாவின் கையைப் பிடித்தபடியே தான் அழைத்துச் சென்றான். அதனைக் கண்ட மலர் தம்பியை முறைக்க பதிலுக்கு அவளது பார்வையை தாங்கியபடி அவளைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தானே ஒழிய பிடித்திருந்த கையை விளக்கிடவில்லை. ஆனால் வருணிகா மலரைக் கண்டவுடன், செம்பியனிடம் இருந்து பிரிந்து மலரின் அருகே வந்து,

"அண்ணி.... ஐ ம் வருணிகா... ச்சாம் உங்களை பத்தி தான் நிறையா பேசுவான்.... அதனாலேயா என்னனு தெரியலே!!!... உங்களை பாக்கும் போது ரெம்ப நாள் பழகின ஒரு ஃபீல் வருது..." என்று மலரின் அருகே நின்று அவள் கையைப் பிடித்தபடி பேசினாள்.

வந்தவளிடம் தன் கோபத்தை காண்பிக்க விரும்பாத மலர், வருணிகாவின் கூற்றிற்கு புன்னகைத்துவிட்டு, "உட்கார்... நீ டீ குடிப்பேயா?" என்று உபசரிக்கத் தொடங்கினாள். அதில் செம்பியனுக்கும் கூட அழகாய் ஒரு புன்னகை தோன்றியது.

-தொடரும்.
 
Top