• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மாலைசூடி மஞ்சம் தேடி 35

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
சடங்குகள், சம்பிரதாயங்கள் என அனைத்தும் இனிமையாக முடிந்திட, மாலை இல்லம் திரும்பிட, விசாலியும், மலரின் தாய்மாமன் மனைவியும் ஆரத்தித் தட்டோடு வாசலில் நின்றிருந்தனர்.

"ம்மா... ஆச்சி எங்கே?" என்றான் விக்ரம்.

"அவங்க உள்ளே இருக்காங்க பார்த்தி..."

சகுணம் பார்க்கிறார் என்று புரிந்ததும் வெளியே வைத்து மேலும் பேச்சை வளர்க்க விரும்பாமல் தன் மணவாட்டியோடு இல்லம் நுழைந்தான் விக்ரம்.

பூஜையறையில் மணமக்களை விளக்கு ஏற்றச் சொல்ல அபிராமி அறைக்குள் நுழையாமல் வெளியே ஓரமாக நின்றுகொண்டிருந்தார். விக்ரம் அவரை உள்ளே அழைக்க,

"அடுப்புல பால் வெச்சிட்டு வந்திருக்கேன். நான் அமத்திட்டு வரேன். குட்டிம்மா நீ விளக்கேத்து மா." என்று கூறிச்செல்ல, விக்ரமின் முகம் யோசனையில் மூழ்கியது.

"மாமா... ஆச்சி எப்பவும் அப்படித்தான்... எதுவும் நெனைக்காதிங்க... எந்த நல்ல விஷேஷத்துலேயும் முன்னாடி வந்து நிக்கமாட்டாங்க..." என்று கூறினாள்.

"அதுக்காக நாமலே அவங்களை தெரிஞ்சே ஒதுக்கி வைக்க முடியுமா? வெய்ட் பண்ணு வர்றேன்..." என்று முடிந்த மட்டும் மற்றவர்கள் முன் தன் கோபத்தை தன்னவள் மீது காட்டாமல் அபிராமியைத் தேடி அடுக்களை சென்றான்.

அபிராமியை கையோடு அழைத்து வந்து, தன் அருகே நிறுத்திக் கொண்டான். அப்போதும் பேரனாக கேட்டுக்கொள்ளாமல் வீட்டு மாப்பிள்ளையாக கட்டளை பிறபிக்கவே, மனமே இல்லாமல் வந்து நின்றார் அபிராமி.

மலர் விளக்கு ஏற்றி ரத்தினம், விசாலி என்று ஆரம்பித்து தாமேதரன், அபிராமி, தாய்மாமன் ராஜன் மற்றும் மனைவி என அனைவரின் காலிலும் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர்.

விக்ரமிற்கு முதல் நாள் இரவு பயணம் தொடங்கியதில் இருந்தே ஓய்வு இல்லாமல் போக, உடல் சோர்வில் சற்று நேரம் தூங்கச் சென்றான்.

வழக்கம் போல் செம்பியனும், வருணும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சுற்றித் திரிந்திட, மற்றவர்கள் வெளியே பந்தலடியில் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். தாமோதரனும் ரத்தினமும் கணக்கு வழக்கு முடிக்க, உதியும், வினோவும் அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தனர்.

அபிராமி ஆச்சி மட்டும் மாலையிலிருந்தே கொஞ்சம் பதற்றமாகத் தான் வலம் வந்து கொண்டிருந்தார். இடையிடையே செம்பியனை முறைத்தபடியும் தான் இருந்தார். அனைவருக்கும் அது புரியத் தான் செய்தது. ஆனால் எதற்கு என்று தான் தெரியவில்லை.

கணக்கு வழக்கை முடித்தவிட்டு வந்த தாமோதரன், "க்கா... இப்போ அவன் என்ன பண்ணிட்டானு சாயந்தரத்துல இருத்து மொறச்சுட்டே இருக்கே?" என்றார் தாமோதரன்.

"ஆமா... உங்ககிட்டேலாம் விளாவரியா சொல்ற மாதிரி காரியமா செய்திருக்கான் அவே! விவஸ்தை கெட்டவன்... என்னத்தைச் சொல்ல!!!" என்று தம்பியிடமும் பொறிந்து தள்ளிட, தாமோதரனோ தலையும் புரியாமல், காலும் புரியாமல் தலையை சொரிந்துகொண்டே வெளியேறிச் சென்றுவிட்டார்...

உடன்பிறப்பே விலகிச் செல்வதைக் கண்டபின்னாவது உதி அமைதியடைந்திருக்கலாம்... அவன் அமைதியாக இருக்க நினைத்தாலும் அவன் வாய் சும்மா இருப்பேனா என்றது...

"க்ரானி.... வொய் டென்ஷன்?" என்று நன்றாகத் தான் ஆரம்பித்தான்... அதன் பிறகு தான் நாக்கு நர்த்தனம் ஆடியது,

"If you want take it or else
வேணாம் tension
Leave it baby
Life is very short naany
Always be happy
Design design'ah
Problems will come and go
கொஞ்சம் chill பண்ணு பாட்டி"

என்று ஆச்சியின் கைபிடித்து பாட்டுப் பாடி நடனமாடி சிரிக்க வைக்க முயற்சித்தான்.

"விடுடா கைய... பட்டுகுஞ்சம் பிஞ்சிடும் படவா? இன்னொரு முறை பாட்டி தாட்டினு பாட்டு பாடிட்டு இந்த பக்கம் வந்தே அறுகாமனை எடுத்து நருக்கிடுவேன்........ நாக்கை".

பேச்சு பேச்சாக இருந்திருந்திருந்தால் நிச்சயம் இவ்வளவு திட்டு விழுந்திருக்காது. அவரது கைபிடித்து நடனமாடியதில் தான் இத்தனைக் கோபம். அதுவும் தன் பேரனும், பேத்தியும் உதியிடம் உரிமையாகப் பழகுவதைக் கண்டதால் வந்து இளகுப் பேச்சு தான்.

சட்டென இரண்டு கையாலும் வாயை மூடிக்கொண்டான் உதி... "ஆச்சிஈஈஈ!!!! நீங்களா இப்படி! அதுவும் உங்க பேரனைப் பார்த்து!!!"

"இந்த அறுவாமனை எங்கே வெச்சேன்?" என்று அவர் தேடத் தொடங்கிட, உதி தப்பித்தோம் பிழைத்தோம் என்று அடுமனைவிட்டு வெளியேறினான்.

அப்போது தான் தூங்கி எழுந்த வந்த விக்ரம் நண்பனின் அதிர்ச்சி முகம் கண்டு என்னவென்று வினவினான். உதியும் நடந்ததைக் கூற நட்பை கேலி செய்து சிரித்தாலும், ஆச்சியின் செயலுக்கான அர்த்தத்தை யோசிக்கவும் செய்தான்.

தன் அன்னையை அழைத்து ஆச்சியிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்து என்னவென்று விசாரிக்கச் சொல்ல, அவரும் விவரம் கேட்டுவிட்டு நமட்டு சிரிப்போடு மகனிடம் கூறினார்.

"ஒன்னு இல்லேடா பார்த்தி.... இன்னைக்கு உனக்கும் மலருக்கும் நைட் முகூர்த்தம் பாத்து வெச்சிருக்காங்களாம்... ஒரு வயசு பொண்ணையும், மூனு தடிப் பசங்களையும் வெச்சிகிட்டு எப்படி எல்லா வேலையும் செய்யிறதுனு சங்கடப்படுறாங்க...."

"அவ்ளோ தானே! நாங்க ஹெல்ப் பண்றோம்... என்னென்ன வேலைனு லிஸ்ட் மட்டும் போட்டு கொடுக்க சொல்லுங்க.... எல்லா வேலையையும் முடிச்சிடலாம்... என்னடா வினோ?" என்றான் உதி.

வினோவும், விக்ரமும் அவனை முறைக்க, 'இப்போ என்ன தப்பா சொல்லிட்டோம்னு இப்படி மொறைக்கிறானுங்க!!' என்று யோசித்தாலும் வாய் திறவாது ஊமையானான்.

"நீங்க எடுத்து சொல்லுங்களேன் ம்மா... இதுங்க எல்லாம் பிஞ்சுலேயே பழத்ததுங்க... இதுங்களேலாம் மதிக்க வேண்டாம்னு"

"அவங்க கொஞ்சம் பழைய காலத்து ஆள் பார்த்தி... அவங்களை மாத்துறது கஷ்டம்... அதே மாதிரி எல்லாத்துக்கும் எல்லாமே தெரியுன்றதுனாலா எல்லாத்தையும் பப்ளிக்கா செய்திட முடியாது இல்லேயா... இந்த பட்டாளத்தை எங்கேயாச்சும் வெளியே அனுப்பினா அவங்க கொஞ்சம் ரிலாக்ஸா இருப்பாங்க..."

"சரி அப்போ வினோ நீ எல்லாரையும் பண்ண வீட்டுக்கு கூட்டிட்டு போயிடு..."

"அப்போ நானு?" என்றான் உதி...

"நீ எனக்கு துணைக்கு என் கூடவே இருந்து எல்லா ஏற்பாடையும் கண் குளிர பாத்து வயிறு எரிஞ்சு நொந்து சாவு..." என்றிட, மீண்டும் நண்பர்களின் கிண்டல் ஆரம்பித்தது.

விசாலி அனைவரையும் பண்ணை வீட்டிற்கு விரட்டிவிட, வருணோ புஸுபுஸு வென்று மூக்கைத் துருத்திக் கொண்டு விக்ரமின் முன்னால் வந்து நின்றாள். இருக்காதா பின்னே!!! நாளை காலையே அவள் தான் சென்னை செல்கிறாளே! அவள் அங்கே வந்ததே விக்ரமைப் பார்த்து பேசத் தானே! அது நடக்காமல் எப்படித் திரும்பிச் செல்வாள்.

"நீங்க என்னை எதுக்கு இங்கே வர சொன்னிங்கனு நியாபகம் இருக்கா?" என்றாள் மூக்கு விடைக்க...

"ஏய்... எங்கே எப்படி நடந்துக்கனும்னு தெரியாதா!!! ஒரு வீட்டுக்கு கெஸ்ட்டா வந்துட்டு வீடே அதிருற அளவுக்கு சத்தமா பேசுறே?" என்று ஆளுக்கு முன்னதாக அதட்டினான் வினோ.

"நான் ஒன்னு உங்ககிட்ட பேசலே... விபா ண்ணா கிட்ட தான் பேசுறேன்... நீங்க என்னை எங்கே எப்போ எப்படி நடந்துக்கானும்னு ரூல் பண்ணத் தேவையில்லே... இங்கே நீங்க ப்ரொஃபஸரும் கிடையாது, நான் உங்க ஸ்டூடன்ட்டும் கிடையாது..."

விக்ரம் அப்போதும் எதுவும் கூறாமல் இருவரும் பேசுவதை வேடிக்கை பார்க்க, செம்பியன் வருணைத் தடுத்தான்.

"வருண் கொஞ்சம் அமைதியா இரேன்... ஏன் இப்படி சொல்ல சொல்ல கேக்காம வீம்பு பிடிக்கிறே!" என்றபடி அவள் அருகே வந்து அவள் கைகளைப் பிடித்து இழுத்தான்.

"செம்பியா... இங்கே வாயேன்" என்றான் விக்ரம்.

"மச்சான்..." என்று பவ்வியமாக விக்ரமின் அருகே செல்ல, விக்ரம் அவனை இழுத்து தன் அருகே அமர்த்திக் கொண்டான்.

"வா கொஞ்ச நேரம் வேடிக்கை பாக்காலாம்... உன் அக்கா எங்கே? அவ தான் இதை கண்டிப்பா பாக்கனும்!" என்று மைத்துனனிடம் அதி தீவிரமாக வினவிக் கொண்டிருந்தான்.

"ஹலோ என் லவ்வும், லைஃப்-ம் உங்களுக்கு சினிமா மாதிரி தெரியுதா? குடும்பத்தோட உக்காந்து பாக்குறதுக்கு!!!" என்று வருண் சத்தமிட கூடத்தில் மொத்த குடும்பமும் குழுமியிருந்தது.

வருணின் ஒவ்வொரு பேச்சுக்கும் குடும்பத்தாரின் முறைப்பு செம்பியன் புறம் தான் திரும்பியது. 'இவ அசிங்கபடுறது மட்டும் இல்லாம என்னையும் சேத்துல அசிங்கப்படுத்துறா!!!' என்று நினைத்து செம்பியன் அவளை முறைதான்.

"சினிமா எடுக்குற அளவுக்கு இவ லவ் அப்படியே ரோபியோ ஜூலியட் லவ் பாரு... தெய்வீகக் காதல்னு நெனப்பு... ச்சீ பே... பப்பி லவ்" என்றான் வினோ.

"இன்னொரு டைம் பப்பி லவ் சொன்னிங்க உங்களைத் தான் கடிச்சு கொதறிடுவேன்... டேய் ச்சாம் காலேஜ்ல எனக்கு ஃபுல் அன்ட் ஃபுல் சப்போர்ட் பண்ணிட்டு இங்கே அமைதியா உக்காந்திருக்கே!! என்னனு கேக்க மாட்டியா?" என்று வினோவை கொத்துக் கறிக்கு தயார் செய்துவிட்டு செம்பியனிடம் பாய்ந்தாள்.

'அடிப்பாவி பேசுற இடத்துலேயா டி என்னை உக்கார வெச்சிருக்கே! படிச்சு படிச்சு சொன்னேனே!!!... நீ வராதே வராதேனு அப்பேலாம் கேக்காம இப்போ தான் சப்போர்ட் பண்ணலேனு மூஞ்சியத் தூக்கினா நான் என்ன பண்றதாம்!!!' என்று செம்பியனின் மனசாட்சி புலம்பிட, நட்பிற்காக வாய் திறந்தான் ஆனால் சத்தம் தான் வரவில்லை.

"வினோ ண்ணா..." காற்றில் கரைந்திருந்தது அவனது குரல். அதற்குள் விக்ரம் அவனது கையைப் பிடித்து அடக்கிட, வேறு வழியில்லாமல் அமைதியடைந்தான் செம்பியன்.

"எனக்கு இப்போவே ஒரு முடிவு தெரிஞ்சாகனும்... ஒழுங்கு மரியாதையா எனக்கு இப்போவே தாலி கட்ட சொல்லுங்க... இல்லே எல்லார் முன்னாடியும் 'கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது என் கூட தான்'னு சத்தியம் பண்ண சொல்லுங்க..." என்றவள் பேச்சு சகலமும் அறிந்த சிறுமி என்றே நினைக்க தூண்டியது.

"ரெண்டுமே பண்ண முடியாது போடி..." என்று வினோவிடம் இருந்து பதில் வர, ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சி.
 
Top