• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மாலைசூடி மஞ்சம் தேடி 36

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
"ரெண்டுமே பண்ண முடியாது போடி..." என்று வினோவிடம் இருந்து பதில் வர, ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சி.

இவள் செம்பியனுடன் சுற்றுவதைக் கண்டு அனைவருமே இருவரும் விரும்புகிறார்களோ என்ற சந்தேகம் இருக்கத் தான் செய்தது. அபிராமி ஆச்சிக்கும், தாமோதரனுக்கும் அவன் அக்கா எடுத்துச் சொன்னால் கேட்டுக்கொள்வான் என்ற எண்ணம். அதனால் மலரின் திருமணம் முடியட்டும் என்று காத்திருந்தனர்.

ரத்தினத்திற்கும் விசாலிக்கு அதே சந்தேகம் என்ற போதும், இப்போதெல்லாம் காதல் சகஜம் தானே... படிப்பு முடியட்டும் என்று விக்ரம் மூலம் சொல்லி வைக்க நினைத்திருந்தனர்.

"ஏன்? ஏன் முடியாது?" அனைவரது கவனத்தையும் மீண்டும் அவள் புறம் திருப்பியது வருணிகாவின் குரல்.

"அப்போ நீ வினோ அண்ணாவைத் தான் லவ் பண்றே!!!" என்று கேட்டாள் மலர்.

"அப்போ மட்டும் இல்லே... இப்பவும் வினோவைத் தான் லவ் பண்றேன்..."

"பின்னே ஏன் செம்பியன் கூடவே சுத்தினே! அண்ணாவை கடுப்பேத்தவா? அதுவும் இல்லாம என்னை வேற அண்ணினு கூப்பிட்டுட்டுத் திறிஞ்சே!" என்று காரணம் அறிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே இருந்தது அவளது கேள்வியில்...

"இதென்னங்கடா வம்பா இருக்கு!!!... அவன் என் ஃப்ரெண்டு... இங்கே அவனைத் தவிற மத்தவங்க யாரையுமே எனக்கும் தெரியாது. தெரிஞ்ச ஆளும் என்கூட சுத்துறதுக்கு ரெடியா இல்லே" என்று வினோவைப் பார்த்து கூறிவிட்டு மீண்டும் மலரின் புறம் திரும்பி,

"அப்பறம் உங்கள அண்ணினு கூப்பிட்டதுக்குக் காரணம் நீங்க விபா அண்ணா வொய்ஃப்-னதுனாலத் தான்..... ஏன்? அதுல என்ன ப்ரச்சனை?" என்று வினவினாள் வருண்.

"அப்போ நீ செம்பியனை லவ் பண்ணலேயா?" என்று விசாலி வினவிட, வருணிகாவிற்கும் சற்று அதிர்ச்சி தான். வினோவிற்கும் கூட, ஆனால் சுற்றி நிற்போரின் அதிர்ந்த முகத்தைக் கண்டு அனைவருமே அப்படித் தான் நினைத்திருக்கிறார்கள் என்று புரிந்தது இருவருக்கும்...

"அவனேயா! நானா! பொதுவா பொண்ணுங்களுக்கு ஒரு பையனைப் பிடிக்கனும்னா அவனுக்குனு சில குவாலிஃபிகேஷன்ஸ் இருக்கனும்... இவனுக்கு அது அளவுக்கு அதிகமாவே இருக்கு... இவன்லாம் ஓவர் குவாலிஃபிகேஷன்.... அதாவது பழம்...." என்றிட சட்டென எழுந்து அவளை விரட்டிப் பிடித்தான் செம்பியன்...

"அடிங்ங்ங்...." என்றபடி விரட்டியவன் அவள் தன் கையில் சிக்கியதும், "தானும் போனாப் போகுதுனு வினோ அண்ணாவுக்காக நீ கொடுக்குற தொல்லையெல்லாம் சகிச்சிக்கிட்டு..... என்ன தான் ஃப்ரெண்டா இருந்தாலும் ஃபியூச்சர்ல அண்ணினு கூப்பிடனுமேனு மரியாதை கொடுத்து அமைதியா இருந்தா... நீ என்னையே பழம்னு சொல்றேயா?" என்று கேட்டுக் கொண்டே முதுகில் நான்கு வைத்தான்.

"செம்பியா..." என மலரை அவனை மென்மையாக அதட்டிட,

"பின்னே எப்படி பேசுறா பாரு க்கா!" என்று தன் தமக்கை தன்னை சந்தேகிக்கவில்லை என்று நிம்மதியில் சலுகையாகக் கொஞ்சினான்.

தமக்கையின் தனயனாய் மாறிக் கொஞ்சிடும் மைத்துனனைக் கண்டு சின்ன சிரிப்போடு கூறினான் விக்ரம்,

"டேய் செம்பியா குட் டச், பேட் டச் எல்லாம் பொண்ணுங்களுக்கு மட்டும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டிய மந்திரம் இல்லே.... பசங்களுக்கும் தான்... முக்கியமா டோன்ட் டச்-னு சொல்லிக் கொடுக்க வேண்டியது பசங்களுக்குத் தான். உன் பக்கத்துல இருக்கிற பொண்ணு உனக்கு எவ்வளவு நெருக்கமான வேண்டப்பட்ட பொண்ணா இருந்தாலும் கொஞ்சம் தள்ளி நின்னு பேசினா, பாக்குறவங்க அந்த பொண்ணுக்கு மரியாதை கொடுப்பாங்க... ஆனா நீ நெருங்கி நின்னா 'கொடுத்து வெச்சவன் டா!'னு கொச்சையா பாராட்டிட்டுப் போவாங்க.....

அதுக்காக மத்தவங்களோட கொச்சை பேச்சுக்கு மரியாதை கொடுனு சொல்லலே... பேசுறவங்களை துச்சமாக் கூட மதிக்காதே..." என்று திமிராக உரைத்துவிட்டு, மீண்டும் அவனே தொடர்ந்தான்.

"மத்தபடி குடும்பத்தை நெனச்சு வருண் கவலைப்படும் போது தைரியம் சொல்ற அப்பாவா.... அவளோட காதலுக்கு மறைமுகமா போராடுற உடன்பிறப்பா..... அவளோட லைஃப்ல, கெரியர்ல சக்ஸஸ் கொண்டு வரத் துடிக்கிற நட்பா..... எப்பவும் உன் சப்போர்ட் அவளுக்கு கிடைக்கட்டும்.... அதை யாருக்காவும் விட்டுக்கொடுக்காதே...." என்று செம்பியனைப் பார்த்துக் கூறிய போதும், மற்றவர்களுக்கும் அவன் வருணிகாவிற்கு யார் என்பதை உணர்த்தினான்.

மலரும் கூட தன் இளவலை நினைத்து அதிசயித்து தான் போனாள். ஊருக்கு வருவதற்கு முன்பு அவன் காதலிப்பதாக நினைத்து, 'எவ்ளோ பெரிய காரியம் செய்திருக்கான்!.... வளந்துட்டான்....' என்று திட்டியது நினைவில் வர இப்போதோ உண்மையாகவே 'வளர்ந்துவிட்டான்.... மனதளவிலும்!!! ஒரு பெண்ணிற்கு ஆணிற்குரிய அனைத்து பந்தமாகவும் மாறி அரவணைக்கும் அளவிற்கு....' என்று பெறுமைப்படும் போதே ஆனால் என்னிடம் மட்டும் இன்னும் குழந்தையாகக் குழைக்கிறான்.... என்ற கர்வமும் தோன்றியது பெண்ணவளுக்கு.

"ஆங்.... சரி சரி... இப்போ என் ப்ரச்சனைக்கு வாங்க.... அவரு ஏன் என்னை லவ் பண்ணமாட்டாராம்.... கேட்டு பஞ்சாயத்தை முடிச்சுவிடுங்க...." என்று கெத்தாகக் கூறினாள் வருண்.

"அவ்ளோ தானே! அவனயே கேப்போம்" என்று வருணுக்கு பதில் கூறிவிட்டு தன் மித்திரன் புறம் திரும்பினான் விக்ரம்.

"டேய் வருணுக்கு என்ன டா குறைச்சல்? ஏன் அந்த புள்ளைய எப்போ பார் திட்டிக்கிட்டே இருக்க?"

"பின்னே தூக்கி வெச்சு கொஞ்ச சொல்றேயா! அவ பன்ற பப்பி லவ்கெல்லாம் நீ சப்போர்ட் பண்ணாதே!"

"ஓஹோ... அவங்க பன்றது பப்பி லவ்னா நீங்க பண்ணினதுக்கு பேர் என்ன சார்?"

"நான் எப்போ லவ் பண்ணினேன்... அப்படியே பண்ணியிருந்தாலும் அதுவும் ஸ்கூல் காலேஜ்ல பண்ணின பப்பி லவ் தான்..."

"அந்த பப்பி லவ்க்கு இன்னைக்கு வரைக்கும் ஏன் எஜிக்கேஷன் லோன் கட்டிட்டு இருக்கேயாம்!"

"அதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று உளறிவிட்டு பின் சுதாரித்து, "ஒரு பொண்ணோடு படிப்புக்கு ஹெல்ப் பண்ணினா அதுக்கு பேர் லவ் தான் அர்த்தம் இல்லே..."

"அப்போ நீ அவளுக்கு பன்றது ஹெல்ப் தான்... லவ் இல்லே அப்படித் தானே!"

அதற்கு வினோ ஏதோ பதில் கூற வருவதற்குள் வருணிகா உள்ளே நுழைந்தாள்.

"ஸ்டாப்... ஸ்டாப்... ஸ்டாப்.... இங்கே என்ன எனக்கே தெரியாம ஒரு டாப்பிக் ஓடிட்டு இருக்கு? என் எஜிக்கேஷன்னுக்கு ஒரு ட்ரெஸ்ட்ல இருந்து பொருப்பேத்துக்கிட்டிங்குனு தான் சொன்னாங்க... நீங்க என்ன ண்ணா புதுசா ஏதோ சொல்றிங்க?"

இப்போது உதி ஆரம்பித்தான். "அது என்னவோ உண்மை தான். நீ மெரிட்ல செலெக்ட் ஆனதுனால உன் படிப்பு செலவை ஒரு ட்ரஸ்ட் ஏத்துக்கிட்டாங்க தான்... ஆனா இந்த பைய்யே என்ன செய்தா தெரியுமோ? அவ எங்க வீட்டு பொண்ணு தான். அதனால நான் படிக்க வைக்கிறேன்... நீங்க வேற ஒரு ஸ்டூடென்டோட படிப்பு செலவை ஏத்துக்கோங்க... உங்க ஹெல்ப் உண்மையாவே கஷ்டபடுற உதவி செய்ய ஆள் இல்லாத ஒரு ஸ்டூடென்ட்க்கு போயி சேரட்டும்னு சொல்லிட்டான்.. இது போதாதுனு இதை அந்த பொண்ணுக்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லிருக்கான்..

அதுவும் அந்த ட்ரஸ்ட் பேச்சுலர் ஸ்டடீஸ்க்கு மட்டும் தான் ஹெல்ப் பண்ணுவாங்க.. உன் மாஸ்டர் ஸ்டடீஸ்க்கு திரும்பவும் அந்த ட்ரஸ்ட்ல இருந்தே பணம் கட்டுறமாதிரி இவன் தான் ஏற்பாடு செய்து கொடுத்தான்... அது தான் என்ன கதைனு கேக்குறேன்?" என்று உதி விளக்கம் கொடுத்தான்.

"ஓ... அப்போ அவர் கொடுக்குற இடத்துல இருக்காரு... நான் வாங்குற இடத்துல இருக்கேன்..... என் தகுதி என்னனு தெரியாம இத்தனை நாள் ஏதேதோ தப்பு தப்பா...... ஆசைய வளத்துக்கிட்டேன்..... அவர் சொல்றது தான் சரி.... பப்பி லவ் தானே.... கொஞ்ச நாள்ல மறந்திடும்....." என்று வருணிகா சொல்லி முடிப்பதற்குள் அத்தனை வேதனை, அத்தனை கேவல்கள், அத்தனை கண்ணீர்... ஆனால் வெடித்து அழுதிடவில்லை... முடிந்தளவு இதழ் மடித்து தன் கேவல்களை அடக்கியிருந்தாள்.

மூன்று நாட்களாக அவளது துறுதுறு பேச்சையும், துடுக்குத் தனத்தையும் மட்டுமே கண்ட குடும்பம் முதல்முறையாக அவளது அழுகையைக் கண்டது. ஏன் வினோத்தே இப்போது தான் அவளது கண்ணீரைக் காண்கிறான்...

"ஏய் மக்கு.... உன்னை 'எங்க வீட்டுப் பொண்ணு'னு சொல்லிருக்காரு... அது என்ன கதைது கேக்குறதை விட்டுட்டு ஏதோ கொடுக்கல் வாங்கல் பத்தி பேசி ஒப்பாரி வெச்சுட்டு இருக்கே!" என்று செம்பியன் அவளைத் திட்டிட,

அப்போது தான் அதை யோசித்தாள். ஆனால் பழைய துறுதுறு வருண் திரும்பி வரவில்லை. கண்களில் மட்டுமே 'நீ யார் எனக்கு?' என்ற கேள்வியைத் தாங்கி நின்றாள்.

"வினோ... நீ காலேஜ் படிக்கும் போது வருவை மன்த்லி மன்த்லி லாஸ்ட் சன்டே ஒழிஞ்சிருந்து பாலோ பண்ணி பாக்குறது எங்களுக்கும் தெரியும்... அது உன்னோடு பர்ஷனல்னு தலையிட்டதில்லே... இப்போ வருவை டூ டேஸ் பிஃபோர் பாத்த போதே தெரிஞ்சுக்கிட்டேன்... இப்போவாச்சும் உன் மனசுல என்ன இருக்குனு சொல்லு... இப்போ நீ சொல்லலேனாலும் வரு உன்கிட்ட கேட்கமாட்டா.... அது உனக்கே நல்லா தெரியும்... இன்னைக்கு இங்கே இதுக்கு ஃபுல் ஸ்டாப் வைக்கிறதும், கமா போடுறதும் உன் வார்த்தையில..." என்று விக்ரம் கூறி முடிப்பதற்கு முன்பே வினோ பதில் கூறியிருந்தான்.

"நிகா என் அத்தை பொண்ணு...."

அடுத்து வினோ சொல்லப் போகும் விளக்கத்தை எதிர்பார்த்து அனைவரும் மௌனமாய் காத்திருந்தனர். அதனை உணர்ந்த வினோவும் தன்னைப் பற்றிக் கூறத் தொடங்கினான்.

"என் அப்பா கூட பொறந்த தங்கச்சி பொண்ணு தான் வருணிகா... என் அத்தை லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டதுனால என் தாத்தா அவங்க முகத்துலேயே முழிக்கக் கூடாது, சொந்தம்னு சொல்லி வீட்டுப்பக்கம் வந்திடாதேனு சொல்லிட்டாரு... என் அப்பா தான் மனசு கேட்காம அவங்களைத் தேட ஆரம்பிச்சாரு... ஆனா அதுக்குள்ள மாமாக்கு ஸ்ட்ரோக் வந்து படுத்தபடுக்கையாகி எல்லாம் தலைகீழா மாறியிருந்தது.

அப்பா எவ்ளோ வர்ப்புருத்தி அழச்சும் அத்தே வர மறுத்துட்டிங்க... அப்பாவோட உதவியையும் ஏற்க மறுத்துட்டாங்க...

'என் ஏழ்மையையும், இயலாமையையும் சாதகமா வெச்சு திரும்பவும் அந்த வீட்டுக்கு வர முடியாது'னு ஒரேதா சொல்லிட்டாங்க... அதான் அத்தைக்கேத் தெரியாம நிகாவோடு படிப்புக்கு அப்பா ஏதேதோ ட்ரெஸ்ட் பேரைச் சொல்லியும் ஸ்காலர்ஷிப்பும் ஏற்பாடு செய்து கொடுத்தாரு...

இது எல்லாமே எங்க வீட்லேயும் எல்லாருக்கும் தெரியும்... தாத்தா கூட இப்போ அவங்களை ஏத்துக்க தயாரா தான் இருக்காரு. ஆனா அத்தையோட வைராக்கிய குணம் தெரிஞ்சு வேற வழி இல்லாம ஒதுங்கி இருக்கோம்...

அவ காலேஜ் போகவும் அப்பாகிட்ட கேட்டு அவ படிப்பு செலவை நான் டேக் ஓவர் பண்ணிக்கிறதா சொன்னேன். அவரும் சரினு சொல்லிட்டாரு.... ஹையர் ஸ்டடீஸ்க்கு இவளுக்கு நான் வேலை பாக்குற காலேஜ்லயே சீட் கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணினேன்.

நானே எதிர்பார்க்காம நடந்தது தான் இவளுக்கும் செம்பியனுக்குமான ப்ரெண்ட்ஷிப். அதை எனக்கு ஃபேவரா யூஸ் பண்ணிக்க நெனச்சு செம்பியன் மூலமா இவளுக்கு என்னென்ன தேவைனு தெரிஞ்சுகிட்டு செய்து கொடுக்க ஆரம்பிச்சேன். ஆனா அவன் எங்களுக்குள்ள லவ் பான்டிங் க்ரியேட் பண்ணுவான்னு நெனைக்கலே...

விபா சொல்ற மாதிரி ஆரம்பத்துல அத்தை பொண்ணுனு தெரிஞ்சப்போ அவ மேல ஒரு க்ரஸ் இருக்க தான் செய்தது. அது காலேஜ் படிக்கும் போதும் கன்டினியூ ஆச்சு... அவ படிப்பு என் பொறுப்புனு வரும்போது தான் லைஃப்னா என்ன? அதுல படிப்பு எவ்ளோ முக்கியம்? பணத்தின் தேவை எவ்ளோ அவசியம்னு தெரிஞ்சது.

ஃபஸ்ட் அவ படிப்பு முடியட்டும்... அவ ஃபேமிலிய பாக்கட்டும்... அதுக்கப்பறம் அவங்க அம்மா சம்மதிச்சா இந்த காதல் கத்தரிக்காய்லாம் பண்ணலாம்..." என்று கூறி முடிக்க அவ்விடமே அப்படி ஒரு அமைதி.

கரை கடந்த வெள்ளமாய் வருணிகாவின் விழிகளில் கண்ணீர் கடல் அலையாய் பொங்க, ஒரு முடிவோடு கண்களைத் துடைத்துக் கொண்டு,

"அப்போ என் அம்மா சம்மதிச்சா என்னை கல்யாணம் செய்துப்பிங்களா?" என்றாள்.

"செவில்லேயே ஒன்னு விட்டேனா தெரியும்.... உன் அம்மா சம்மதத்துக்கு முன்னாடி படிப்பு முடியட்டும்னு சொன்னேன்... அது இந்த காதுல விழலேயா?" என்று கோபம் கொண்டு கத்தினான் வினோ.

"இப்போவே உங்க ஏஜ் டுவென்ட்டி எய்ட் ஆகிடுச்சு.... இன்னு என் ஸ்டடிஸ் முடியுறதுக்குள்ள தர்ட்டி ஆகிடும்... அப்பறம் நான் வேலைக்கு போயி என் தங்கச்சிய படிக்க வெச்சு எப்படியும் கிழவனாகிடுவிங்க... அதுவரைக்கும் உங்க வீட்ல உங்களுக்கு பொண்ணு பாக்கமாட்டாங்களா என்ன! நீங்களும் வர்ற பொண்ணை எல்லாம் தட்டிக் கழிச்சிட்டு எனக்காக வெய்ட் பண்ணப் போறது மாதிரி பேசுறிங்க!!! என்னை இந்த பக்கம் மைண்ட் டைவர்ட் பண்ணிவிட்டுட்டு நீங்க வேற கல்யாணம் பன்னிக்கலாம்னு மட்டும் நெனைக்காதிங்க... சொல்லிட்டேன்..."

"இப்போ மட்டும் பொண்ணு பாக்காமலா இருக்காங்க!... நான் இன்னவரைக்கும் எந்த பொண்ணுக்கும் ஓகே சொன்னது இல்லே... இனியும் சொல்லப் போறது இல்லே..."

"நீங்க என்ன விளக்கம் சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது... எனக்கு இப்போவே பதில் சொல்லுங்க?" என்று கத்தியவளை குடும்பமே விசித்திரமாகப் பார்த்தது.

செம்பியன் வருணின் தலையில் கொட்டி, "மக்கு... மண்ணாங்கட்டி..." என்று அவளைத் திட்டிவிட்டு, "வினோ ண்ணா... இவ உங்களுக்கு செட் ஆக மாட்டா... வீட்ல பாத்த பொண்ணுக்கு ஓகே சொல்லிடுங்க..." என்றிட

"டேய்... நீயெல்லாம் ஃப்ரெண்டா டா? துரோகி... அவருக்கு தப்பு தப்பா சொல்லிக் கொடுக்குறே..." என்று கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே கூறினாள்.

செம்பியன் அழுபவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டபடி, "வருண்... உன் எமோஷனை கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணிட்டு அண்ணா என்ன சொன்னாங்கனு யோசி..." என்றிட,

அவன் மறைமுகமாக 'காத்திருக்கிறேன்' என்று கூறியது புரிய உண்மை தானா என்று வினோவைப் பார்த்து கண்களால் வினவினாள்.

அவனும் "ஏன் நான் கிழவன் ஆகிட்டா நீ என்னை கட்டிக்க மாட்டேயா?" என்று நெற்றியைச் சுருக்கி முறைப்பது போல் வினவினாலும் கண்களிலும், இதழ்களிலும் மெல்லிய புன்னகை மலர்ந்திட, அதன் பிரதிபலிப்பாய் அவள் முகத்திலும் புன்னகை விரிந்தது.

ஒரு நிமிடம் கூட சந்தோஷத்தை அனுபவிக்க விடவில்லை விக்ரம்.... "எல்லார் பஞ்சாயத்தும் முடிஞ்சதுல... ஓடி போங்க அந்த பக்கம்" என்று அவரவர் வேலையைப் பார்க்க விரட்டினான் விக்ரம்.

"இரு டா இனிமே தான் முக்கியமான விஷயமே இருக்கு" என்று வினோ மீண்டும் நிறுத்தினான்.

'இவன் வேற நேரங்காலம் தெரியாம படுத்துறானே! நல்லவேலை நைட் பஞ்சாயத்தை கூட்டாம இருந்தானுங்க!' என்னு மனதிற்குள் நினைத்துக் கொண்டு சலிப்பாக வினவினான் விக்ரம்.

"இன்னு என்னடா இருக்கு!!!"

"இனிமே இவங்க ரெண்டு பேரும் காலேஜ் வர்றதும் தெரியக் கூடாது, போறதும் தெரியக் கூடாது... அதேமாதிரி உனக்கு தான் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ," என்று வருணைப் பார்த்து ஒற்றை விரல் நீட்டி மிரட்டினான்.

"வீக் எண்ட்ல ஊர் சுத்தக் கூப்பிடுறது. காலேஜ்-ஐ கட் அடிச்சிட்டு பீச் கூட்டிட்டுப் போக சொல்றது, மன்த்லி ஷாப்பிங் அது இதுனு கதை கட்டி என்னை எங்கேயாவது வெளியே கூப்பிட்டேனு வை... போற இடத்துல அப்படியே சமாதி கட்டி புதைச்சிடுவேன்... புரியுதா!"

மீண்டும் இருவரையும் பார்த்து "ஒழுங்கா அரியர் இல்லாம பாஸ் ஆகி கேம்பஸ்ல செலெக்ட் ஆகுற வழியைப் பாருங்க... புரியுதா?" என்றிட, இருவரும் கோழி போல் தலையாட்டினார்.

அதன் பிறகு விசாலி அனைவரையும் பண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு, அறையின் மலர் அலங்காரத்துடன், மலரை அலங்கரிக்கும் பணியை மலரின் தாய்மாமன் மனைவியுடன் தொடர்ந்தார்.

இரவு உணவு முடித்து நல்லநேரம் பார்த்து விக்ரமும் முதலில் அறைக்கு அனுப்பி வைக்கப்பட சற்று நேரத்தில் மலரும் வெள்ளி செம்பில் பாலுடன் அழைத்து வரப்பட்டாள்.

-தொடரும்.
 
Top