இரவு உணவு முடித்து நல்லநேரம் பார்த்து விக்ரமும் முதலில் அறைக்கு அனுப்பி வைக்கப்பட சற்று நேரத்தில் மலரும் வெள்ளி செம்பில் பாலுடன் அழைத்து வரப்பட்டாள்.
விறுவிறுவென்று ஆளுக்கு முன் அறைநோக்கி நடந்தவளை கேலிச் சிரிப்போடு நோக்கினர் விசாலியும், அத்தையும் (அந்த அத்தைக்கு பேர் வைக்காததுனால அத்தைனே சொல்லிக்கிவோம்
.)
"ஏய் மலரு?" என்று அத்தை அழைத்திட
"என்ன அத்தே சீக்கிரம் சொல்லுங்க?"
"எதுக்கு இப்போ இவ்ளோ அவரசரம்... வெக்கம் வரலேனாலும், வெக்கப்படுற மாதிரி தலையை மட்டுமாவது குனிஞ்சிக்கோ" என்றிட
அவரை விசித்திரமாகப் பார்த்தவள், "இதை சொல்லவா கூப்பிட்டிங்க... மனுஷனோட அவசரம் புரியாம!!!" என்று கூறிவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அவள் அறைக்குள் நுழைந்ததும் விசாலி "இதுங்களுக்கு எதுக்கு இப்போ கல்யாணம்!, எதுக்கு இந்த ஏற்பாடு! எதுவும் புரியலே! எல்லாம் பழக்கப்பட்டவ மாதிரிலே உள்ளே போறா!" என்று சிரித்துக் கொண்டே கூறிட,
"இருக்கும் இருக்கும்" என்று அத்தையும் கிண்டலடித்திட மேலும் கூடுதலாக கேலிப் பேசியபடி அங்கிருந்து நகர்ந்தனர்...
ஆனால் உள்ளே சென்றவளுக்குத் தானே தெரியும் அவளது நிலை. அறைக்கு நுழைந்த அடுத்த நிமிடம் ஓடாத குறையாக மெத்தையை நோக்கி விரைந்தாள். அவள் வந்த வேகத்தைக் கண்டு விக்ரம் அரண்டு முழித்திட,
"மாமா... மாமா... மாமா... புடிங்க புடிங்க" என்று அவசர சிகிச்சை வாகனம் போல் சைரன் அடித்தபடி கத்திக் கொண்டே உள்ளே வந்தவளை என்ன ஏது என்று கூட கேட்காமல் அவள் நீட்டியது வாங்கிக் கொள்ள தன் கைகளை ஏந்தி நின்றான் விக்ரம்.
அடுத்த நிமிடம் கீழே உருண்டு நெளிந்து கிடந்தது வெள்ளி செம்பு...
"ஏன் மாமா ஒரு செம்பை கூட ஒழுங்கா புடிக்கமாட்டிங்களா?"
அவளை முறைத்தபடி "அடியேய்... ஒழுங்கா புடிச்சதுனாலே தான் சுட்டுச்சு... இவ்ளோ சூடோடவா டி கையிலே கொடுப்பே!" என்று சூடு தாங்காமல் கையை உதறியபடி சிடுசிடுத்தான்.
"அதே சூடோட தானே நானும் கொண்டு வந்தேன்... உங்களுக்கு மட்டும் என்னவாம்."
"உன்னை யாரு டி அவ்ளோ சூடா கொண்டு வர சொன்னது?"
"எனக்கு என்ன ஆசையா? என் கையையும் சுட்டுக்கிட்டு உங்க கையிலேயும் சூடு வைக்கிறதுக்கு... ரெண்டு அத்தைங்களும் சேர்ந்து செய்த வேலை... அதுவும் தாய்கிழவி உடந்தையோட..." என்று பதிலுக்கு பதில் பேசியபடி அவனது சிவந்திருந்த கைகளுக்கு அங்கே இருந்த தேங்காய் எண்ணெய்யை எடுத்து தேய்த்துவிட்டாள்.
"ஒன்னு வேண்டாம் போடி... சூடு வைக்கிறதும் வெச்சிட்டு மருந்து போடுறாளாம்..." என்று அவளிடம் இருந்து கைகளை உருவிக் கொண்டான்.
முறுக்கிக் கொண்டவனின் கையை மீண்டும் வம்படியாக பிடித்து வைத்து மருந்திட்டாள். தரையில் சிந்திய பாலையும் சுத்தம் செய்துவிட்டு சேலையும் ஆங்காங்கே கரையாகியிருக்க, குளியலறை சென்று ஈரத் துணி கொண்டு துடைத்து எடுத்துவிட்டு, வேறு உடை மாற்றி வெளியே வந்தாள்.
நிலைகண்ணாடி முன் அமர்ந்து அலங்காரத்தைக் கலைத்திட, அவளருகே வந்தவன், "இதுக்கு தான் நான் இருக்கேன்ல... உனக்கு ஏன் சிரமம்?" என்ற கள்ளத் தனமாக சிரித்து பின்னாலிருந்து அவள் கழுத்து வளைவில் இதழ் பதித்தான்.
பதிலுக்கு தனக்குள் தோன்றிய சிரிப்பை அடக்கிக் கொண்டு, "பராவாயில்லே மாமா... இதுல என்ன சிரமம்... ரெம்ப டயர்டா இருக்கு... தள்ளுங்க சீக்கிரம் ரீமூவ் பண்ணிட்டு தூங்குறேன்..."
சட்டென விலகியவனின் முகத்தில் அவ்வளவு அதிர்ச்சி... பெண்ணவள் கண்ணாடியில் அதனைக் கண்டு கொண்டாலும் காணாதது போல்,
"மாமா... இங்கே ஷோஃபாவும் இல்லே.... பால்கனியும் கிடையாது... தரையும் ஈரமா இருக்கு.... சோ நீங்க படுக்குறதுங்கு இடம் இல்லே இல்லையா! செம்பியன் ரூம்ல படுத்துக்கோங்க.... எல்லாரும் தூங்கினது போயிட்டு, மார்னிங் சீக்கிரம் எழுந்து இங்கே வந்து படுத்துக்கோங்க...." என்று சிங்கத்தை சீண்டி வம்பு வளர்த்துவிட்டு அதன் விளைவை யோசிக்காமல் சென்று படுத்துக் கொண்டாள்.
சற்று நேரம் அறையில் அமைதி நிலவ, ஒற்றைக்கண் திறந்து மெதுவாகப் பார்த்தாள். அதற்காகவே காத்திருந்தது போல் வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டி கை சட்டையை மடக்கிவிட்டபடி அவளையே பார்த்திருந்தவன், அவளது ஒற்றைக் கண் திறந்தது தான் தாமதம் அவள் மேல் பாய்ந்திருந்தான்.
"நான் எதுக்கு டி செம்பியன் ரூமுக்கு போகனும்... அவன் கழுத்துலேயா தாலி கட்டினேன்!!!" என்று அவள் கண் பார்த்து வினவினான்.
இவ்வளவு நெருக்கத்தில் அவனது பார்வையைத் தாங்கி நிற்க முடியாமல் சிரம் திருப்பிட, இதழ்களின் தீண்டலினால் தன் நேத்திரம் காணச் செய்தான் அவளின் அகவாளன்.
அவனது அதரங்களின் வேட்டை இதழ் முற்றுகையை அடுத்து மெய்தீண்டும் வேட்டையில் ஆர்வம் கொள்ள, தேகம் எனும் ராஜ்ஜியத்தின் வஸ்திரம் எனும் அரணைத் தகர்த்து வேட்கைத் தீர்க்கும் வித்தை புரிந்து தன் தவ வாழ்விலிருந்து முக்தி பெற்றான்.
செஞ்சூரியன் ஜோதியில்
சந்திரன் ஒளி சேர்ந்ததோ
அசைந்தாடும் ஆழியில்
அழகிய நதி கலந்ததோ
காலம் என்னும் நதியில்
விழுந்து இரவும் நகர்ந்தது
பகலும் நகர்ந்தது....
கீழ்வானம் மஞ்சள் குளித்த பருவப்பெண்ணைப் போல் புலரத் தொடங்கியது. ஆதவனின் வருகையில் புல்வெளிதனில் படர்ந்திருந்த பனித்துளிகள் காதலால் உருகி கசிந்து மீண்டும் தன் காதலனையேச் சென்றடைவதைப் போல், ஆடவனின் தீண்டலில் உருகிக் கிடந்தவள், அவன் முகம் காண வெட்கி சிவந்து அவன் நெஞ்சமதில் தஞ்சம் அடைந்தாள்.
தன்னோடு இணைந்தவளை தனக்குள் புதைத்தபடி அடுத்த வேட்டைக்கு ஆயத்தமாகிட, அதனை உணர்ந்த பெண்ணவள்
"மாமா... என் டவுட்ஸ் எல்லாம் முதல்ல கிளியர் பண்ணுங்க..."
கள்ளப் புன்னகையோடு "அடிப்பாவி நைட் ஃபுல்லா க்ளாஸ் எடுத்திருக்கேன்... இன்னுமா டவுட் இருக்கு? தத்தி" என்றிட, அவனது வெற்று மார்பில் தடம் பதிய கிள்ளி வைத்தாள்.
"ஸ் ஆஆ... மோகினி சும்மா இருடி" மேலும் கொஞ்சம் அடிகள் காதல் பரிசாகக் கிடைத்தன அவளிடமிருந்து...
"இதோ இந்த பக்கம் கொஞ்சம் மாசாஜ் பண்ணிவிடு" என்று தோள்பட்டையைக் காண்பிக்க, அவனுக்கு முதுகு காண்பித்துப் படுத்துக் கொண்டாள்.
செவிகளில் இதழ் உரச அவளருகே வந்து "கேளு? என்ன டவுட்?"
முறுக்கிக் கொள்ளத் தோன்றினாலும், அவ்வாறு செய்தால் அடுத்து எப்போதும் தன் சந்தேகத்திற்கு பதில் கிடைக்காது என்று எண்ணி,
"நமக்கு தான் ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சே... இப்போ எதுக்கு இப்படி ஒரு அவசர கல்யாணம்?"
"நம்ம பேரண்ட்ஸ்-காக.... என் மச்சினனுக்காக.... என் அருமை பட்டிக்காடு உனக்காக..."
அவனது கடைசி வார்த்தையில் கோபம் கொண்டு அவனை அடிக்கக் கை ஓங்கிட, அவளது கையைப் பிடித்து தன் கைச் சிறைக்குள் அவளையும் சேர்த்து அடக்கி, "ம்ம் அடுத்து?"
"கேட்டாலும் எனக்காகனு சொல்லுவிங்க... இதுல 'பட்டிக்காடு'னு அடைமொழி வேற... அதுக்கு நான் கேக்காமலேயே இருந்துப்பேன்..."
மெல்லிய சிரிப்போடு அவள் என்ன கேட்க நினைத்திருந்தாள் என்று ஊகித்தவன் அதற்கான பதிலை அவள் கேட்காமலேயே உரைத்தான்.
"நேத்து நடந்தது உனக்காகவும், எனக்காகவும் சேர்த்து தான்..." பெண்ணவள் அவன் புறம் திரும்பி வியப்பால் அவன் கண் பார்க்க, அதில் இதழ் பதித்துவிட்டு அவனே தொடர்ந்தான்.
"நான் என்ன தான் வெளிய பந்தாவா, ஒரு மாடலிங்கா, ஸ்டைலா என்னை காமிச்சிக்கிட்டாலும் எனக்குனு சில ப்ரின்சிபில்ஸ் வெச்சிருக்கேன்... முக்கியமா பொண்ணுங்க விஷயத்துல...
ஆரம்பத்துல இந்த கெரியருக்கு வரும்போது பொண்ணுங்களோட சேந்து நடிக்கும் போது மனசு கொஞ்சம் தடுமாறத் தான் செஞ்சது. மொறைக்காம கேளுடி..." என்று இடையே அவளது முறைப்பையும் சமாளித்து மீண்டும் கூற ஆரம்பித்தான்.
"அந்தந்த பொண்ணுங்களுக்கு ஏத்த மாதிரி என் மனசு குரங்கு மாதிரி தாவுறது எனக்கு நல்லாவே புரிஞ்சது... அது பிடிக்கலே... நான் நானா இருக்கனும்னு நெனச்சு மனசை கட்டுப்படுத்த யோகா கத்துக்கிட்டேன்... நெனச்ச மாதிரி நான் நானா இருந்தேன்... எனக்கானவள் என்னை நெருங்கும் போது மட்டும் தான் என் உணர்வுகளை வெளிப்படுத்தனும்னு ஒரு இது...... ம்ம்..... ஒரு வீம்புனு கூட சொல்லலாம்... சோ எனக்கானவளுக்காக காத்திருந்தேன்...
அதுவே என்னவள்-ங்குற காதலை எனக்குள்ள கொண்டு வந்துச்சு... உன்னை தான் கல்யாணம் செய்துக்குப் போறேன்னு முடிவெடுத்த அன்னைக்கே, உன்னை பாக்குறதுக்கு முன்னாடியே, என் லவ் ஸ்டார்ட் ஆகிடுச்சு...
நீ என்னை ஃப்ஸ்ட் டைம் மீட் பண்ணினப்போ, கார்ல வெச்சு உன்னை கிஸ் பண்ண கிட்ட வந்தேன்... அதுக்கு நீ கல்யாணம் ஆகட்டும்னு சொன்னே நியாபகம் இருக்கா... அன்னைக்கு உன்னை அவ்ளோ பிடிச்சிருந்தது... நீ சொன்ன பதிலும் அதுக்கு ஒரு காரணம் தான்.
ஆனா அன்னைக்கு இருந்த உன் உணர்வுக்கு மதிப்பு கொடுக்காம, கிஸ் பண்றதுல என்ன இருக்குனு ஒரு வீம்பா உன்னையும் கட்டாயப்படுத்தி அதை செய்தேன்... அந்த தப்புக்கு பறிகாரமா இன்னைக்கு உன் உணர்வுக்கு, மதிப்பு கொடுத்து உனக்காகவும், எனக்காகவும் சேர்த்து தான் இப்போ நடந்த கல்யாணமும், இந்த ஏற்பாடும்...
ஒரு முத்தத்துக்கே கல்யாணம் ஆகட்டும்னு சொன்னவளை மொத்தமா எடுத்துக்கனும்னா அவள் விருப்பப்படி கல்யாணத்துக்கு அப்பறமாத் தான் இருக்கனும்னு தான் வெய்ட் பண்ணினேன்." என்று கூறி முடித்து இது தானே உன் சந்தேகம் என்பது போல் அவளைப் பார்த்தான்.
"ஆனா நான் தான் நீங்க கட்டின தாலியை ஏத்துக்கிட்டேனே! அப்படி ஏத்துக்க முடியாதுனு நெனச்சிருந்தா எதுக்கு எனக்கு நினைவு திரும்பின பின்னாடியும் உங்களை விட்டு பிரிஞ்சு போகாம இருந்தேனாம்!... அதுல இருந்தே உங்களுக்கு என் மனசு புரியலேயா?" என்று பாவம் போல் வினவினாள்.
"என்ன தான் நான் உனக்கு பூஜை அறையில் வெச்சு தாலி கட்டியிருந்தாலும் அது உனக்கும் எனக்கும் மட்டுமே தெரிஞ்ச ரகசியம் ஆகிடுச்சு. எல்லா மேரேஜ்-ஐயும் போல நம்ம மேரேஜ்-உம் ஊரறிய நடக்கனும்... அது என் ஆசையும் கூட." என்று சின்ன சிரிப்போடு காதல் பார்வை வீசினான்.
அவனது மாற்றங்கள் அனைத்தும் தனக்கானது என்று புரிந்திட, பதிலுக்கு அவளும் காதலாய் அவனை நோக்கி, அடுத்த வேட்டைக்கு அழைத்தாள்.