• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மாலைசூடி மஞ்சம் தேடி

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
மாலைசூடி மஞ்சள் தேடி - டீஸர்

IMG_20210306_030152.jpg


மாலைமங்கும் நேரம்..... இறை தேடிச் சென்ற ஆண்பறவை இல்லம் திரும்பும் வேலை.... பின்கட்டில் இருந்த கொய்யா, கொடிக்காய் மற்றும் சப்போட்டா மரங்களில் குருவிகளின் ஆர்ப்பரிப்பு..... கேட்கவே ரம்யமாக இருந்தது.
'குடும்பம் என்பது மானிடனுக்கு மட்டும் தானா என்ன!!! இதோ இங்கே எத்தனை குடும்பங்கள்!!! ஆண்பறவையை தன் கீச்சுக்குரலால் வரவேற்கும் தாய், சேய் பறவைகள்..... கூட்டிற்கு திரும்பிய தந்தை பறவையின் தன் ஒருநாள் பிரிவை கொஞ்சித் தீர்த்திடும் குட்டிப்பறவைகளின் அழகு மனதை எவ்வளவு இதமாக்குகிறது!!! தந்தைப் பறவையும் குட்டிகளை மட்டுமா கொஞ்சுகிறது!!! அதனை அடைகாத்து காத்திட்ட தன் இணையையும் எவ்வளவு அழகாக தோளணைக்கிறது!!! என்று எண்ணியபடி அதனை ரசித்து நின்றிருந்தாள் மலர்.
சிறிது நேரத்தில் தன் இணையும் இல்லம் திரும்பிவிடுவார் என்று நினைத்த நொடி மன்னவனின் வருகையை எண்ணி துள்ளிக் குதிக்க வேண்டிய புதமணப் பெண்ணோ அஞ்சி நடுங்கினாள்.
இந்த நிமிடம் கடவுள் எதிரே வந்து "என்ன வரம் வேண்டும்... கேள்?" என்றாள், 'இரவில்லா உலகிற்கு அழைத்துச் செல்' என்று தான் கேட்டிருப்பாள். அவளின் சிந்தனையைக் கலைக்கவே வெளியே மகிழுந்தின் அரவம் கேட்டது.
மகிழுந்தின் சத்தத்தில் பெண்ணவளின் இதயத்தில் தடதடவென ரயில் வண்டி ஓடிக் கொண்டிருந்தது. தாமதமாக கதவு திறந்தாள் அதற்கும் சேர்த்து வாங்கிக்கட்டிக் கொள்ள வேண்டி வரும் என்று தோன்றிய நொடி ஓடாத குறையாக விரைந்து வந்து கதவைத் திறந்தாள்.
கதவிற்கு அந்த பக்கம் நிற்கும் நபரைக் கண்டு சற்று பயம் குறைந்திட, முயன்று வரவைத்த புன்னகையுடன் "யார் நீங்க?" என்றாள்.
"விக்கி இல்லே!!!"
"இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவார்... நீங்க அவர் ஃப்ரெண்டா? உள்ளே வாங்க..." என்று அன்பாக அழைத்தாள்.
"ஃப்ரெண்டு தான்... கேர்ள் ப்ரெண்ட்..." அவளின் குரலிலும், கூறும் விதத்திலும் ஏதோ வித்தியாசம் உணர்ந்தாள் மலர். மேற்கொண்டு அந்த புதியவளின் நடவடிக்கைகள் 'இந்த வீட்டில் எனக்கு தான் முதல் உரிமை... நீ என்ன என்னை வரவேற்று கவனிப்பது!!!' என்பது போல் இருந்தது.
வந்திருப்பவளை பார்வையால் அளந்தபடி பின் தொடர்ந்தாள் மலர். 'மாடலிங் பெண்ணாக இருப்பாள் போல' என்று நினைத்தபடி அடுக்களைக்குள் நுழைந்து தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள். மேசையின் மேல் இருந்த மேகஜினைப் புரட்டியபடி எடுத்து ஒருமடக்கு பருகிய புதியவள், மீதியை மலரின் முகத்தில் ஊற்றிவிட்டு,
"வீட்டுக்கு வந்தவங்களுக்கு ஜூஸ் கொடுக்கனும்ற மேனஸ் கூட தெரியாதா!! உன்னை விக்கி கிட்ட சொல்லி கவனிக்கிற விதமா கவனிக்க சொல்றேன்" என்று கூறி படபடவென வீட்டைவிட்டு வெளியேறியிருந்தாள்.
வந்தவள் யார்? ஏன் இப்படி நடந்து கொண்டாள்? தனக்கும் அவளுக்கும் என்ன பகை? என்று எதுவும் தெரியாமல் மலங்க மலங்க முழித்தபடி.... கண்களில் வடிந்தது கண்ணீரா!!" இல்லை அவள் ஊற்றிச் சென்ற எச்சில் தண்ணீரா!!! என்று தெரியாமல் நின்றிருந்தாள்.
இப்படி தண்ணீர் வடியும் முகத்தோடு நின்றிருந்தால் அதற்கும் தன் துணைவன் திட்டுவார் என்று தோன்றிடிட தன்னை சுத்தம் செய்து கொள்ள மாடியில் இருக்கும் தங்கள் அறைக்குச் சென்றவள் அவசர அவசரமாக முகத்தைக் கழுவிவிட்டு, பூத்துவாலையில் துடைத்துக் கொண்டு, சிறிய அளவிலான கருஞ்சிவப்பு நெற்றிப்பொட்டை ஒட்டிக்கொண்டு கீழே வந்தாள்.
கீழே வந்தவளின் கண்ணில் முதலில் பட்டது, அந்த மாடலிங் பெண்ணால் தன் முகத்தில் சிதறடிக்கப்பட்ட தண்ணீரை துடைத்துக் கொண்டிருந்த பணியாள் செண்பகம் அக்கா தான்.
பூனை நடையிட்டு அவரின் அருகே சென்று மென்மையான குரலில் "அக்கா அவர் வந்துட்டாரா?" என்று அவனது அலுவலக அறையைப் பார்த்தபடி வினவினாள்.
"அவர்னா யாரு மலர்ம்மா?"
"அக்கா விளையாடாதிங்க... வந்துட்டாரா இல்லேயா?"
வாய் வரை வந்த வார்த்தைகளை தொண்டைக்குழியில் விழுங்கிக் கொண்டு "இன்னும் வரலே" என்றபின் தான் மலருக்கு மூச்சே வந்தது.
ஆனால் அதற்குள் அடுத்த பதற்றம்... "அக்கா இன்னைக்கு வந்தாங்களே!!! அவரோட ஃப்ரெண்டு அவங்க பேர் என்னனு தெரியுமா? எனக்கு தெரியாது... அவர் வந்ததும் 'உங்க ஃப்ரெண்டு வந்தாங்க'னு மொட்டையா சொன்னா கோபிச்சுப்பார்... அவங்களும் ரெண்டு வார்த்தை பேசுறதுக்குள்ள கோபமா போயிட்டாங்க..." என்று புலம்பிட,
செண்பகம் அவளை பரிதாபமாகப் பார்த்தார். 'என்ன பெண்ணிவள்!!! அவள் இல்லத்தில் அவளை அவமதித்தவளை முகத்திற்கு நேராக திட்டமுடியாவிட்டாலும், தன் கணவரிடம் கூறி கண்டிக்க வேணும் செய்ய வேண்டாமா!!!' என்று நினைத்துக் கொண்டு,
"மலர்... நீ ஏன் விக்ரம் தம்பிய பாத்து பயப்படுறே... உன் கணவர் தானே பயத்தை விடுத்து உரிமையாகப் பழகு... அப்பறம் அந்த பொண்ணு பேர் கேட்டேல! அவ பெயர் அக்ஸரா" என்று பதில் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
வழக்கத்தை விட தாமதமாக வந்திருந்தான் அவளது இல்லாளன். உள்ளே நுழையும் போதே இறுக்கமாக இருந்தது அவன் முகம். அதனைக் கண்டு அச்சம் கொண்டவள் அதன்பின் இரவு உணவு முடித்து அறைக்குள் நுழையும் வரை அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்திடவில்லை. இதோ அவள் அஞ்சிய இரவும், அவனது அறையும்....

புதிய தொடர் ஃப்ரெண்ட்ஸ்... இது தொடக்கம் இல்லைப்பா... கதையில் இந்த பகுதி வருவதற்கு நாட்கள் ஆகும்......