• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
மின்னலே என் வானம் தீண்ட வா...

அத்தியாயம் – 11

ஆணவனின் முத்தத்தில் பெண்ணவளும் மயங்கியே நின்றாள்.
கண்மூடி கிறங்கி நின்றவளின் தோற்றம் சித்தார்த் வர்மனின் காதல் நரம்புகளை மீட்டத் தொடங்கியது .

உதடு குவித்து உயிர் காற்றை தேக்கி அவளின் மலர் முகத்தில் ஊதினான்.

புயல் காற்றில் தள்ளாடும் பூங்கொடியாய் துவண்டவள் மெல்ல தன் கண் மலர்த்தினாள்.

“மது.... உன்னோடு பழகிய இந்த கொஞ்ச காலத்திலேயே என்னையும் கெட்ட பையனாக மாற்றி விடுவாய் போலயே” என்று கிண்டல் செய்தான்.

அவனின் சீண்டலில் செல்ல கோபம் கொண்டவள், அவனை முறைத்துக்கொண்டு திரும்பி நின்று கொண்டாள்.

மதுரவர்ஷினியின் பொய் கோபத்தையும் ரசித்தான் சித்தார்த் வர்மன்.

மது என்று கூறிக்கொண்டே அவளின் தோள்களைத் தொட்டவேளை வேலைநிறுத்தம் செய்திருந்த லிப்ட் உயிர்பெற்று உயிர்த்தெழுந்தது.

திடீரென்று ஏற்பட்ட அந்த அதிர்வில் மதுரவர்ஷினி நிலை குலைந்து பின்னால் சாய்ந்தாள்.

மதுரவர்ஷினியை பின்னால் அணைத்தவாறே தன் நெஞ்சினில் சாய்த்திருந்தான் சித்தார்த் வர்மன்.

தன் கைகளில் வாகாய் பொருந்தியவளின் உச்சந்தலையில் வாகாய் தன் தலையினை வைத்து, “இந்த நாள் என் வாழ்வில் என்றும் நான் மறக்க முடியாத நாள்” என்று கூறிக்கொண்டே அவளது உச்சந்தலையில் தன் இதழ் பதித்தான்.

“ ஹலோ மிஸ்டர் சித்தார்த் வர்மன்! இன்னும் சிறிது நேரம் சென்றால் முத்தத்திலேயே என்னை குளிப்பாட்டி விடுவீர்கள் போலவே. உங்கள் வேகம் எனக்கு தாங்காது சாமி. ஆளை விடுங்கள்” என்று நாணத்துடன் கூறியவள், லிப்டின் கதவு திறக்க வெளியேறினாள் மதுரவர்ஷினி.

சித்தார்த் வர்மனும் மலர்ந்த சிரிப்புடனே வெளியே வந்தான்.

வெளியே வந்தவன் அதிசயித்துப் போனான். அந்த ஏழாவது மாடியில் பால்கனி போன்ற அமைப்பில் கம்பிகளை பற்றிக்கொண்டு மேலிருந்து கீழே பார்க்க,

மீன்வளங்களில் ஒன்றான அக்வாடோம் மிகப்பெரிய அளவில் உள்ளமைக்கப்பட்ட உருளை வடிவிலான அக்ரிலிக் கண்ணாடியில், கீழ் தளத்தில் இருந்து மேலே ஏழாவது தளம் வரை நீண்டு நின்றிருந்தது.

கடல் அலைகளுக்கு அடியில் உள்ள வாழ்க்கையை தெளிவாக எடுத்துக் காட்டியது.

அக்வாடோம் என்பது மிகப்பெரிய அக்ரிலிக் உருளை வடிவ மீன்வளமாகும், இது சுமார் l36 அடி விட்டம் மற்றும் சுமார் 52 அடி உயரம் கொண்டது,

கடல் மீன் வகைகளில் 50 இனங்களில் 1,500 க்கும் மேற்பட்ட மீன்களைக் கொண்டு ராட்சச வடிவில் நின்றிருந்தது.

மீன்களுக்கு உணவளிப்பது மற்றும் மீன் தொட்டியை சுத்தம் செய்வது தினமும் 3-4 டைவர்களால் செய்யப்படுகிறது.

அதிசயித்து நின்ற சித்தார்த் வர்மனின் கையோடு தன் கைகளைக் கோர்த்துக் கொண்டாள் மதுரவர்ஷினி.

இயற்கையின் அதிசயத்தை இருவரும் விழி விரிய பார்த்து மகிழ்ந்தனர்.

பின் இருவரும் கீழே இறங்கி வந்து பார்வையாளர்கள் பார்வையிட வைத்திருந்த அரிய மீன் வகைகளை பார்த்துக் கொண்டே வந்தனர்.

வெண்மையும் இளம் மஞ்சளும் கருப்பு கோடுகளுமாய் இருந்த அந்த மீன் கூட்டத்தைக் கண்டு அதனை விட்டு நகர மறுத்தாள் மதுரவர்ஷினி.


அந்த மீன் கூட்டங்கள் வாயைக் குவிக்கும் அழகைக்கண்டு மீன் தொட்டியின் கண்ணாடியின் அருகில் தன் கன்னங்களை வைத்து அந்த மீன்கள் போல் வாயைக் குவித்து பாவனை செய்தாள்.

அவளின் குறும்புகளைக் கண்டு சிரிப்புடனே அவளைக் கடந்து சென்றான் சித்தார்த் வர்மன்.

சிறிது நேரம் சென்ற பிறகு சித்தார்த் வர்மன் அருகில் இல்லாததை உணர்ந்தாள் மதுரவர்ஷினி.

அவனைத்தேடி அனைத்து திசைகளிலும் திரும்பிப்பார்க்க வாசலின் அருகே நின்றிருந்த சித்தார்த் வர்மனைக் கண்டு நிம்மதியுற்று அவனைத் தேடி வந்தாள்.


தன் முதுகின் பின்னால் இருந்த தன் கையை எடுத்து மதுரவர்ஷினியின் கைகளில் ஜில்லென்ற அந்த பரிசு பொதியை வைத்தான்.

அழகிய கண்ணாடிக் குடுவையில் ஜில்லென்ற நீரினுள் இரண்டு தங்க மீன்கள் ஒன்றை ஒன்று துரத்தியபடி காதல் செய்து கொண்டிருந்தன.

சித்தார்த் வர்மனின் பிறந்தநாள் பரிசில் உள்ளம் குளிர்ந்தாள்.

அந்தக் கண்ணாடி குடுவையை தன்னோடு அணைத்துக் கொண்டு பாதுகாத்தாள்.

“ சித்தூ..... இந்த உலகிலேயே எனது தாய் தந்தையைத் தாண்டி உயிராய் இருந்தது உங்களிடம் தான்.

இந்தக் குறுகிய காலத்தில் என் உள்ளம் எப்படி உங்கள் வசம் ஆனது என்பதை நான் அறியேன்.

என் அன்னை முகம் நான் பார்த்ததில்லை. என் தந்தையே, எனக்குத் தாயும் தந்தையுமாக இருந்து வளர்த்து வந்தார்.

என் தந்தைக்கு காதல் பிடிக்காது என்று உணர்ந்த நாள் முதல் இன்றுவரை நம் காதலை அவரிடம் நான் சொல்லவில்லை.

அந்தக் குற்ற உணர்ச்சி என்னை அரித்துக்கொண்டே இருக்கும். ஆனால் உங்களைக் கண்ட அடுத்த நொடி என் எண்ணம், செயல், ஆக்கம் எல்லாம் நீங்களாகவே தெரிகிறீர்கள்.

என் தந்தையிடம் நம் காதலைக் கூற எனக்கு பயமா? அல்லது தயக்கமா? என்று எனக்கு பிரித்தறிய தெரியவில்லை” சிறு குழந்தை போல் தன் எண்ணக் குமுறலை அவனிடம் இறக்கி வைத்தாள்.

மதுரவர்ஷினியையே ஆழ்ந்து நோக்கினான் சித்தார்த் வர்மன்.

“ என்ன சித்து ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்? “ என்றாள்.

“ இல்லை.... ஒருவேளை உன் தந்தை நம் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் நம் நிலை என்ன?” என்றான்.

“ இது என்ன கேள்வி? என் தந்தையின் சம்மதத்துடன் உங்களை நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். என் மீது மிகுந்த அன்பு உடையவர் என் தந்தை.

காதலை மறுப்பவராக இருக்கலாம். என் அன்பையும் ஆசையையும் புறக்கணிப்பவராக இருக்க முடியாதே.

அதிலும் நீங்கள் ஒரு டாக்டர். மதுரவர்ஷினியின் மனதுக்கு இனியவர்.

எனக்குப் பிடித்த எல்லாமே என் தந்தைக்கும் பிடிக்கும் சித்தூ... “ என்றாள் கண்களில் நம்பிக்கை மின்ன.

“ ஒருவேளை உனது தந்தை...” என்று ஆரம்பித்தவனை தன் கைகள் கொண்டு அவன் வாயை மூடினாள்.

“ ப்ளீஸ்.... சித்து அவ நம்பிக்கையாக எதுவும் இன்று பேச வேண்டாம். எனது எதிர்காலம் நீங்கள் தான் என்பதில் எள்ளளவும் மாற்றம் இல்லை.

விரைவில் என் தந்தையின் முன்பு உங்களை கொண்டு சென்று நிறுத்துவேன்.
காலம் கனியும் போது நம் காதலும் கனியும்” என்றாள் அதீத காதலுடன்.

சித்தார்த் வர்மனின் மனதில் ஏதேதோ எண்ண அலைகள் அடித்து ஓய, மதுரவர்ஷினியின் மகிழ்ச்சிக்காக அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு அவளோடு சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

கடற்கரை காற்று பலமாக வீச, மதுரவர்ஷினியின் சேலை ஓரம் சித்தார்த் வர்மனின் முகத்தில் பட்டுப் படர்ந்தது.

தன்னவளின் சுகந்தம் தன் நுரையீரலை நிரப்ப ஆனந்த வெள்ளத்தில் தள்ளாடி நின்றான் சித்தார்த் வர்மன்.

கைகள் கொண்டு அந்த சேலை ஓரத்தை விலக்கவும் எண்ணாமல் செதுக்கி வைத்த கிரேக்க சிலை போல் நிமிர்ந்து நின்றான்.

காற்றில் பறந்த தன் சேலை தலைப்பை மதுரவர்ஷினி இழுக்க, அது தன் கைகளுக்குள் அகப்படாமல் போகவே திகைத்துப் பின்னே திரும்பினாள்.

சித்தார்த் வர்மன் தன் முகத்தின் மீது படிந்த சேலை மீது தன் ஐவிரல்களைக் கொண்டு அழுந்தப் பற்றி இருந்தான்.

வெட்கம் மேலிட மதுரவர்ஷினி தன் சேலை ஓரத்தை இழுத்தாள்.

சேலைத் தலைப்போ சித்தார்த் வர்மனின் விரல்களைத் தாண்டி வருவேனோ என்று அடம் பிடித்தது.

“சித்தூ..... “ மெல்லிய குரலில் அழைத்தாள்.

“ம்....” என்ற முனங்கல் ஒலியே சித்தார்த் வர்மனிடமிருந்து ஒலித்தது.

“ப்ளீஸ்... “ மங்கையவள் மன்றாட தொடங்கினாள்.

நகைத்தவாரே புடவைத் தலைப்பை விலக்கினான் சித்தார்த் வர்மன்.

சித்தார்த் வர்மனுடன் சேர்ந்து உணவகத்திற்குள் நுழைந்தாள் மதுரவர்ஷினி.

உணவு மேசையில் எதிரெதிர் இருக்கையில் இருவரும் அமர்ந்தனர். உணவு மேசையில் பரிமாறப்பட்ட உணவை உண்ணாமல் இருவரும் கண்களால் ஒருவரை ஒருவரை விழுங்க முயற்சி செய்தனர்.

இருவரின் மோன நிலையையும் கண்ணாடி குடுவையில் இருந்த மீன்கள் முத்தமிட்டு சத்தமிட்டுக் கலைத்தன.

வெட்கத்தால் மதுரவர்ஷினியின் கன்னங்கள் சிவக்க, தன்னில் எழும் உணர்வுகளை அடக்க முடியாமல் தன் பின்னந்தலையைக் கோதி தன்னைச் சரிசெய்தான் சித்தார்த் வர்மன்.

“ மது என்னுடன் நீ வாழும் நாட்களில் எளிமையாய் இருந்தாலும் உன்னை ஒரு மகாராணியாகவே உணரச் செய்வேன்.

விரைவில் என் நிலையும் மாறும். அந்த மாறிய உலகில் உனக்கெனவே ஒரு காதல் சாம்ராஜ்ஜியத்தைப் படைப்பேன்” என்றான் காதலுடன்.


“என் தந்தையின் வீட்டில் இளவரசியாக வளரும் நான் உங்கள் இதயத்தில் மகாராணியாக இருக்க விருப்பப்படுகிறேன் “ என்றாள் அவனுக்கு சற்றும் குறையாத காதலுடன்.

“ ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நம் வாழ்வில் என்றும் என் கரம் சேர்வாயா? “ என்றான் தனது வலது கரத்தை நீட்டி.


அவன் கரங்களில் மீது தன் இரு கைகளையும் வைத்து பிடித்துக்கொண்டு, “நீங்கள் எத்தனை முறை இந்தக் கேள்வியை கேட்டாலும், என் பதில் ஒன்றுதான் சித்தார்த்.
என் வாழ்வில் ஒரே காதல் அது நீங்கள் மட்டும்தான்” என்றாள்.

பின் இருவரும் ஒன்றாக இணைந்து மீண்டும் கல்லூரிக்கு வந்தனர்.

கல்லூரியின் மரத்தடியில் உள்ள கல் இருக்கையில் அமர்ந்து கொண்டு இருவரின் விருப்பு வெறுப்புகளை பரிமாறிக்கொண்டனர்.

தான் வீட்டிற்கு செல்லும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்த மதுரவர்ஷினி, சித்தார்த் வர்மனிடம் கூறிக் கொண்டு தன் காரில் ஏறி அமர்ந்தாள்.

அவளை வழியனுப்பி விட்டு திரும்பியவனை அவனது வகுப்புத் தோழர்கள் பிடித்துக்கொண்டனர்.

“ ஒரு மணி நேரம்கூட வகுப்பை வீணாக்காத சித்தார்த் வர்மன், இன்று ஒரு நாள் முழுவதையும் வீணாக்கி இருக்கிறார் என்றால்.....சம்திங்... சம்திங்....” என்று அவனை கூட்டமாகச் சேர்ந்து கேலி செய்தனர்.

“ நத்திங்.... “ என்று கூறியபடியே வெட்கச்சிரிப்புடன் கூட்டத்தை விலக்கி வேக நடையுடன் அந்த இடத்தைவிட்டு வெளியேறினான்.

“ஹோய்..... “ என்ற இரைச்சல் சத்தம் அவனை துரத்தியது.

வீட்டிற்குள் நுழைந்த மதுரவர்ஷினி தன்னை ஆவலுடன் எதிர்நோக்கிய தந்தையைப் பார்த்து ஒரு சிறிய சிரிப்பை உதிர்த்துவிட்டு , மீன் தொட்டியை கவனமாக தன் அறைக்குள் கொண்டு சென்றாள்.


தன் மகள் இயல்பாக இருப்பது போல் இருந்தாலும் தன்னை விட்டு விலகி இருப்பதை போல் உணர்ந்தார் சிவானந்தன். அவரின் மனதில் விழுந்த சந்தேக விதை லேசாக துளிர் விட ஆரம்பித்தது. இருந்தாலும் தன் மகள் மீது இருந்த முழு நம்பிக்கையின் காரணமாக அதை அசட்டையாக தள்ளிவிட்டார்.

தன் அறைக்குள் நுழைந்த மதுரவர்ஷினி தான் மேசையில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை ஒதுக்கிவிட்டு அந்த அழகிய கண்ணாடிக் குவளையை மேஜை மீது கவனமாக வைத்தாள்.

அந்தக் காதல் ஜோடிகளை பார்க்கும் போது ஜில்லென்ற சுகமான உணர்வு தன் மனதிற்குள் பரவுவதை இதமாக உணர்ந்தாள்.


அறையிலுள்ள விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டு மேஜை விளக்கை மட்டும் எரியச் செய்தாள்.

அந்த மின்விளக்கின் ஒளியில் தங்க மீன்கள் தகதகக்க, அவற்றின் காதல் பாஷைகளை மொழிபெயர்க்க ஆரம்பித்தாள் மதுரவர்ஷினி.

மின்னல் வெட்டும்....


















 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
அக்வாடோம் 👇
 

Attachments

  • AquaDom-Sea-Life-Germany-768x513.jpg
    AquaDom-Sea-Life-Germany-768x513.jpg
    101.4 KB · Views: 35

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
அன்பார்ந்த வாசகர்களே,
வைகை தளத்தின் மல்லிகைத் தோட்டத்தில் பூத்த, இந்த மின்னலுக்கு உங்கள் கருத்துக்களால்,தொடர் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏

-அதியா ❤️
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
Nice episode sister. Thank you for the information about Aquadome.
தொடர் ஆதரவளிக்கும் தங்கள் இனிய உள்ளத்திற்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,988
inbound7132909365680888124.jpg
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️சித்தார்த் தான் தன் வாழ்க்கைனு சொல்லிட்டு இப்போ மாறினால் எப்படி 🙄🙄🙄🙄🙄🙄
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
View attachment 483 அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️சித்தார்த் தான் தன் வாழ்க்கைனு சொல்லிட்டு இப்போ மாறினால் எப்படி 🙄🙄🙄🙄🙄🙄
தங்களின் கருத்துரைக்கும் பணி மிக அழகு 😍😍😍😍😍
அவளையே புரட்டிப்போடும் சம்பவம் நடக்கும்போது...
வார்த்தைகளும் வாழ்க்கையும் தடுமாறியது
 

Priyakutty

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 28, 2022
Messages
112
அழகான கிப்ட்... 🥰🥰

அவங்க அப்பாக்காக வேணாம் னு சொல்லிட்டாங்களா...
அப்படி இருந்தா... என்ன சொன்னாலும் அது தப்பு... அவர் பாவம் ல... ☹️

அவருக்கு அப்போவே உள்ள என்னவோ சொல்லிருக்கு...😔

லவ்லி எபி dr... 💞
 

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
தந்தையின் மனம் அறியா பேதைப் பெண்ணே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

உறவுகளற்றவனுக்கு உறவை கொடுக்க சிவானந்தன் சம்மதம் சொல்வாரோ :unsure::unsure::unsure:

பரிசாக தன்னவன் கொடுத்த காதல் மீன்களின் கண்ணாடி குவளையுடன் காதல் மனங்களும் உடையும் காலமும் வருமோ 🥺🥺🥺


(ஜெர்மனியில் இருந்தாலும் இந்த Aquadom எனக்கு மிக தொலைவில் இருப்பதால் நேரில் காண சந்தர்ப்பம் இதுவரை அமையவில்லை, எப்படியும் முயற்சி செய்து பார்த்து விட வேண்டும் ☺️☺️☺️)
 
Last edited:
Top