• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மின்னல் - 20

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
மின்னலே என் வானம் தீண்ட வா...

அத்தியாயம் – 20


இதமான காலை வெயிலில் போர்வைக்குள் சுருண்டிருந்த ஆதித்திய வர்மன் மெல்ல தன் கை கால்களை அசைத்து, உடலை முறுக்கியவாறே விழித்தெழுந்தான். கண் விழித்ததும், தன் முன்னே இருந்த அன்னையின் முகம் கண்டு, “ஆங்.. “ என்று அதிசயித்து தாவி வந்து மதுரவர்ஷினியின் கழுத்தை கட்டிப் பிடித்துக் கொண்டான்.

அவன் தாவலை எதிர்பாராத மதுரவர்ஷினி நிலைகுலைந்து அப்படியே ஆதித்ய வர்மனோடு படுக்கையில் பின்னே சரிந்தாள்.

மதுரவர்ஷினியின் மார்பில் படுத்துக் கொண்டு முகம் முழுவதும் தன் முத்தங்களால் அர்ச்சித்தான். அந்த முத்த மழையில் மோகனமாய் நனைந்தாள் அவள்.

தன் உலகத்தில் தான் மட்டுமே தனித்துப் பறந்த ஒரு பறவை ஒன்று, தன்னோடு ஒரு பட்டாம்பூச்சியும் பறப்பதைக் கண்டு, தன் மனச்சிறகை விரித்தது ஆனந்தமாய்.

அவனின் முத்தங்களை ஏற்றுக் கொள்ளும் விதமாக ஆதித்ய வர்மனின் நாசியோடு தன் நாசியை இனிதே தேய்த்தாள்.

அவளின் மீது வசதியாக ஏறி அமர்ந்து கொண்டு கண்களை அந்த அறை முழுவதும் சுழல விட்டான். அவன் எதையோ தேடுவதைக் கண்ட மதுரவர்ஷினி, “ மை ஸ்வீட் ஆதி எதைத் தேடுகிறாய்? “ என்று அவன் தலையைக் கோதியவாறு இதமாய் கேட்டாள்.

“அப்பா.. “ என்றான் அவள் முகத்தைப் பார்த்தவாறு.
அப்பா என்ற அவனின் மந்திரச் சொல்லில், முகம் சுருங்க ஆரம்பித்தது மதுரவர்ஷினிக்கு.

குழந்தை தன் உறவைத் தேட தான் உரிமையாய் தூக்கி வந்து விட்டதை எண்ணி மருகினாள்.

“ மதுரவர்ஷினி... அடியே மதுரவர்ஷினி. நீ இப்பொழுது சித்தார்த் வர்மனை பழிவாங்கிக் கொண்டிருக்கிறாய். அவன் கலங்க வேண்டும். பிள்ளையைக் காணாது துடிக்க வேண்டும். நீ குழந்தையை இழந்து தவித்த இத்தனை வருட ஏக்கத்தை எல்லாம் அவன் இந்த ஒரு நாளில் அனுபவிக்க வேண்டும். நீ இழந்த மழலையின் அன்பை ஒரே நாளில் ஆதித்திய வர்மன் மூலம் பெற வேண்டும். கூட்டிக் கழித்துப் பார் கணக்கு எல்லாம் சரியாக வரும் “ என்று அவளது மனசாட்சி, குற்றம் செய்துவிட்டு குறுகுறுக்கும் அவளை உற்சாகப்படுத்தியது.

“ ஆதித் குட்டி அப்பாவை காக்கா தூக்கிக்கொண்டு போய்விட்டது” என்றாள் சிரித்தவாறு.

“நோ.... ம் மா.... சும்மா.... அப்பா.... பிக்..... காக்கா.... குட்டி... “ என்று கண்களை உருட்டிக் கொண்டு மதுரவர்ஷினியின் பொய்யை கண்டுபிடித்து கூறினான்.

ஆதித்திய வர்மனின் அறிவில், அழகில் சொக்கிதான் போனாள் மதுரவர்ஷினி.

“ ஆதித், அப்பா ஹாஸ்பிடல் போய் இருக்கார். ஆதித் குட்டி அப்பா ரொம்ப பிசி என்பதால், இன்று எனக்கு லீவு என்பதால், உன்னை என்னிடம் தந்துவிட்டார் ” என்று கதை புனைய ஆரம்பித்தாள்.

குழந்தையோ அவளை நம்பாமல் குறுகுறுவென பார்க்க, “ ஆதித் குட்டி தூங்கிக் கொண்டிருந்தான். அவன் அப்பா அவசரமா கிளம்பி , ஆதி குட்டியை பத்திரமாக பார்த்துக்கொள்ள என்னிடம் தந்து விட்டுச் சென்றார். “ என்று கைகளை விரித்து அபிநயம் பிடித்து செல்லக் குரலில் கூறினாள்.

தன் ஒற்றை நாடியில் சுட்டுவிரலால் தட்டித்தட்டி யோசித்த ஆதித்ய வர்மன், தன் தந்தையைப் போல தாயின் வசியக் குரலில் மயங்கி ஒப்புக்கொடுத்தான் தன்னை.

தன் கைகளுக்குள் வாகாய் அமர்ந்து கொண்டவனை அணைத்துக் கொண்டு, குளியலறைக்குள் அள்ளிச் சென்றாள் மதுரவர்ஷினி.

பல் துலக்கி உடல் சுத்தம் செய்து, பால்கனியில் உள்ள ஊஞ்சலில் தன்மேல் அமர்த்திக்கொண்டு பாலைப் புகட்டினாள்.
மரக்கிளையில் தாவிய அணிலையும், சிறகடித்த சிட்டுக்குருவியும், தோட்டத்தில் பூத்திருந்த மலர்களையும் ரசித்தபடியே இருவரின் காலைப் பொழுதும் கடந்து சென்றது.

தோட்டத்தில் மலர்ந்திருந்த சூரியகாந்தியை கண்டதும், மதுரவர்ஷினியிடம் அந்தப் பூ வேண்டுமென்று கையைக் காட்டி அடம் பிடிக்க ஆரம்பித்தான் ஆதித்ய வர்மன்.

குழந்தையின் குறும்பில் உள்ளம் மகிழ்ந்தவாரே ஆதித்ய வர்மனை அணைத்துக்கொண்டு கீழே இறங்கினாள் மதுரவர்ஷினி.

குழந்தையுடன் கீழே இறங்கிய மதுரவர்ஷினியைக் கண்டு எதிரே வந்த சிவானந்தன் திடுக்கிட்டார். எதுவும் சொல்லாமல், முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல், அங்கு ஒரு மனிதர் இருப்பதையே சட்டை செய்யாமல் அவரைக் கடந்து தோட்டத்திற்குள் நுழைந்தாள்.

மதுரவர்ஷினியின் கைகளில் இருந்து நழுவி தோட்டத்திற்குள் புகுந்து ஓடினான் ஆதித்ய வர்மன்.

சூரியகாந்திச் செடி உயரமாக இருக்க அதனைத் தொட முயன்றான். முயல் குட்டி ஒன்று தத்தித் தாவுது போல் அவன் குதிக்கும் அழகை இமை தட்டாமல் பார்த்தாள்.

அவனின் தொடர் முயற்சிகள் தோல்வியில் முடியவே, மதுரவர்ஷினியைப் பார்த்து தன் இரு கைகள் விரித்து தூக்கச் சொன்னான்.

மது ஓடிச்சென்று அவனைத் தன் கைகளில் அள்ளி எடுத்தாள். சூரிய காந்தியின் இதழ்களை தொட்டு ரசித்தான் ஆதித்ய வர்மன். ஆதித்திய வர்மனின் பட்டு மேனியை தொட்டு ரசித்தாள் மதுரவர்ஷினி.

“ம்.. மா... ஓடி.. லையாடலாமா? “ என்று மதுரவர்ஷினியை ஓடி விளையாட அழைத்தான் ஆதித்.

தோட்டத்தின் நடுவில் இருந்த செயற்கை நீரூற்றைச் சுற்றி ஓடி விளையாடினர் இருவரும். பூக்களுக்கிடையே ஒளிந்து மறைந்து தன் அன்னைக்கு ஆட்டம் காட்டினான் ஆதித்ய வர்மன்.

தோட்டத்தில் ஓடும்போது செடிகளுக்கு நீர் ஊற்றும் பைப்பை தெரியாமல் மிதித்து விட்டான் ஆதித். அதிலிருந்து வெளியேறிய நீர் மதுரவர்ஷினியின் முகத்தில் பட்டுத் தெறித்தது.

முகத்தில் நீர் சொட்டச் சொட்ட, வழிந்தபடி நின்ற மதுரவர்ஷினியை ஆனந்தமாய் கைதட்டி ரசித்தான்.

“ ஆதிக்கு ... தண்ணி... ரொம்ப பிக்கும்... “ என்று தண்ணீரில் விளையாட மிகவும் பிடித்தம் என்ற தன் ஆசையை தன் அன்னையிடம் பகிர்ந்தான் ஆதித்ய வர்மன்.

பைப்பில் வரும் நீருக்கு ஆனந்தப்படும் ஆதித்ய வர்மனை மகிழ்ச்சியில் நிறைக்க தீம் பார்க் சென்றால் என்ன? மதுரவர்ஷினியின் மூளை விரைவாக திட்டமிட்டது.

ஆதித்தின் ஆனந்தம் ஒன்றே பிரதானமாகப் பட, முடிவெடுத்ததை செயல்படுத்த ஆரம்பித்தாள்.

காலை 6 மணிக்கு ஆதித்ய வர்மனை தூக்கி வந்தவள் மாலை 6 மணிக்குள் கொண்டுசென்று விட வேண்டும் என்று நினைத்திருந்தாள்.

ஆதித்ய வர்மனை சித்தார்த்திடம் ஒப்படைக்கும் போது, “பிள்ளையை இப்படியா தனியே விடுவார்கள்? உறவுகளை பத்திரமாக பாதுகாக்க தெரியாதா உங்களுக்கு? உங்கள் பாசம் எல்லாம் வேஷம் தானா? “ இது போல பல கேள்விகளை அவனிடம் கேட்க வேண்டும் என்று அவளது மனம் பட்டியலிட்டது.

இனி தன் கைவசம் இருக்கும் 9 மணி நேரத்தை ஆதித்ய வர்மனுடன் இனிமையாக தீம் பார்க்கில் கழித்துவிட நினைத்தாள்.

ஆதித்ய வர்மனுடன் தன் காரில் புறப்பட்டாள். சித்தார்த்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர் தகவல்களை உடனுக்குடன் போனில் பகிர, கௌசிக்கிடம் சொல்லிவிட்டு தன் காரில் புறப்பட்டான் சித்தார்த் வர்மன் .


தீம் பார்க்கின் நுழைவாயிலில் காரை நிறுத்திய உடன், மேலிருந்து கீழாக நீர்வீழ்ச்சியைப் போல் சீறிப்பாய்ந்த தண்ணீரைக் கண்டு குதூகலம் அடைந்தான் ஆதித்.

மகனின் குதூகலம் அன்னையையும் தொற்றிக்கொள்ள, வருடங்கள் பல கடந்து கொண்ட மகிழ்ச்சியுடன் உள்ளே நுழைந்தாள் மதுரவர்ஷினி.

எதிர்ப்பட்ட விற்பனை கூடத்தில், தனக்கும் ஆதித்ய வர்மனுக்கும் ஒரே மாதிரியான உடை வாங்கினாள். இருவரும் ஒரே மாதிரியான உடையை மாற்றிக் கொண்டார்கள்.

ஏக்கம் சுமந்த ஜோடிக் கண்கள் தங்களைத் தொடர்வதை அறியாமல் தங்கள் பாதையில் முன்னேறிச் சென்றனர்.


நீரில் விளையாடுவதற்கு முன், குழந்தைகள் விளையாடுவதற்கான கேளிக்கைகளில் ஆதித்தை கலந்துகொள்ளச் செய்தாள்.

முப்பரிமாண திரைப்பட அரங்கிற்குள் சென்று, ஆதித்திய வர்மனோடு சேர்ந்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள் மதுரவர்ஷினி.

தத்தித் தாவும் தவளை ரயில் பெட்டியில், குதித்து குதித்து குதூகலமாய் பயணம் செய்தனர்.


பேட்டரி காரில் ஆதித்தை தன் மடியில் வைத்துக் கொண்டு மற்ற கார்களை முட்டிமோதி ஆரவாரம் செய்தனர் இருவரும்.

அமைதியான மதுரவர்ஷினியை, “ம்.. மா... முட்டு டிஷ்யூம் முட்டு... “ என்று ஆதித்திய வர்மன் முடுக்கிவிட, வேகம் மிக, அனைத்து கார்களையும் இடித்து ஆதித்ய வர்மனை சந்தோஷப்படுத்தினாள் மதுரவர்ஷினி.


நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது அந்த ரோலர் கோஸ்டரை ஆதித்ய வர்மன் பார்க்கும்வரை.

உயரம் என்றாலே அதிக பயம் மதுரவர்ஷினிக்கு. அந்த ரோலர்கோஸ்டரைப் பார்த்ததும் தலை சுற்றிப் போனது அவளுக்கு.

ஆதித்தை எவ்வளவு சமாதானம் செய்தும், தன் முடிவில் உறுதியாக இருந்தான்.

மதுரவர்ஷினியிடம் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு வேறு திசை பார்த்து நிற்க ஆரம்பித்தான்.

அவனின் மனம் நோக விரும்பாத அவள் தன் மனதினை தைரியப் படுத்திக்கொண்டு ரோலர் கோஸ்டரில் ஏறி அமர்ந்தாள்.

ஆதித்தை தன்மடியில் வைத்திருக்க, ஒரு கையால் அவனை இறுக்கிப் பிடித்து இருக்க, மறு கையால் முன்னே இருந்த கம்பியை இறுகப் பற்றியபடி, கண்களை அழுத்தமாக மூடியிருந்தாள்.

“ மேடம் சீட் பெல்ட் போடுங்கள்... “ என்று பணியாளர் அறிவுறுத்த கண்களை மூடியபடியே நடுங்கும் கரங்களால் சீட் பெல்ட் போட முயன்றாள்.

அந்தோ பரிதாபம் கைகளில் வியர்த்த வியர்வையில் சீட்பெல்ட் வழுக்கிக்கொண்டு நழுவிச் சென்றது.
“எழுந்து சென்று விடுவோமா?” என்று ஒரு நொடி நினைத்தவள், “ஐ... ஜாலி.... ஜாலி... “ என்ற மழலையின் சந்தோஷக் குரலில் தன் பயத்தினை பின்னே தள்ளிவிட்டு சீட் பெல்ட்டை மாட்ட முயன்றாள்.

வலிய கரம் ஒன்று அவள் முன் நீண்டு சீட் பெல்ட்டை மாட்டியது.

பணியாளர் வந்து மாட்டி இருக்கிறார் என்று நினைத்தவள், அந்த நொடியிலும் தன் கண்களைத் திறக்கவில்லை.

ரோலர் கோஸ்டர் புறப்படுவதற்கான எச்சரிக்கை மணி ஒலித்ததும், நெஞ்சம் படபடவென அடித்தது அவளுக்கு.

ஆதித்ய வர்மனை இரு கரங்களாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் மார்போடு.

நெற்றியில் வியர்வைத் துளிகள் பூத்து வடிய, பதறியது அவள் உடல்.

ரோலர் கோஸ்டர் பயணம் அதிரடியாய் ஆரம்பிக்க, வயிற்றில் எழுந்த ஜிவ் என்ற உணர்வில், “ஹோ...“ என்று அலற ஆரம்பித்தவளை, இரும்புக் கரம் ஒன்று இறுக்கிப் பிடித்துக்கொண்டது.

அதிர்ச்சியில் கண்விழித்துப் பார்த்தவளை, கண்ணடித்துக் கொண்டே தன் கைகளில் வைத்துக் கொண்டான் சித்தார்த் வர்மன்.

தன் தாயின் மார்பில் பதுங்கி மறுபுறம் வேடிக்கை பார்த்த ஆதித், சித்தார்த் பக்கம் திரும்ப, “ஐ.... அப்பா... “ என்று ஆரவாரம் செய்து மகிழ்ந்தான்.

ராஜாளி பறவையின் சிறகுகளுக்குள் ஒடுங்கிய குஞ்சு பறவைகளாய் மதுரவர்ஷினியையும், ஆதித்ய வர்மனையும் அணைத்துக்கொண்டான் சித்தார்த்.

ரோலர் கோஸ்டர் பயம் ஒரு புறம், சித்தார்த் அறியாமல் மகனைக் கொண்டு வந்த பயம் ஒருபுறம் மதுரவர்ஷினியைத் தாக்க, அரை மயக்கத்தில் கண்களை மூடிக் கொண்டாள் இறுக்கமாக.

தான் எதிர்பார்த்த தருணம் இதுவன்றோ என்று எண்ணிய சித்தார்த், மதுரவர்ஷினியை தன்னுள் புதைத்துக்கொண்டான்.

மயக்க நிலையில் இருந்தாலும், நிறைந்த பாதுகாப்பு உணர்வை சித்தார்த் வர்மனிடம் உணர்ந்த மதுரவர்ஷினி அவளை அறியாமலேயே அவன் தோளில் சாய்ந்தாள்.

பூவாய் தன் மேல் சாய்ந்தவளை பூமாலையாய் தன்மீது சூட்டிக்கொண்டான்.

இருவரின் மன நிலையை அறியாத அந்த சின்ன சிட்டு, ரோலர் கோஸ்டரின் பயணத்தை ரசித்தது.

மதுரவர்ஷினிக்கு நடப்பதெல்லாம் கனவாய் தெரிந்தது. ரோலர் கோஸ்டர் வேகம் குறைந்ததும் மதுரவர்ஷினியைப் பார்த்து புன்னகை செய்தான் சித்தார்த்.

கனவில் தானே என்று எண்ணிய மதுரவர்ஷினியும் பதில் புன்னகை புரிந்தாள்.
இருவரின் புன்னகையில் சத்தமிட்டு நகைத்தான் ஆதித்திய வர்மன்.

சித்தார்த் தன் குடும்பத்தை தன் அலைபேசியில் அழகான செல்பியாக மாற்றிக்கொண்டான்.

ரோலர் கோஸ்டர் உயரம் கடந்து, தரையை அடைந்ததும் தன் உலகிற்கு வந்தாள்
மதுரவர்ஷினி.
தங்களைப் போலவே உடை அணிந்து இருந்த சித்தார்த் வர்மனைக் கண்டு திகைத்தாள்.

தான் முட்டாளாகப்பட்டதை அப்பொழுதுதான் உணர்ந்தாள்.

சித்தார்த்திடம் தோற்பது கூட ஒரு சுகம் தான் என்று கூறியதன் மனதினை பழித்தபடி, தலையை சிலுப்பிக் கொண்டு வேறு புறம் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

மார்பின் குறுக்கே தன் கைகளை கட்டிக் கொண்டு அவளையே உற்று நோக்கினான் சித்தார்த் வர்மன். “ மது நீ ஆயிரம் காரணங்கள் கூறினாலும், சிறு குழந்தையைக் கடத்தியது தவறுதான் “ என்று அதிகாரமாக கூறினான்.

ஆதித்திய வர்மனோ ஓடிவந்து அவள் கால்களை கட்டிக் கொள்ள, செய்வதறியாது திகைத்தாள்.

“ மூழ்குபவனுக்கு ஜான் போனால் என்ன? முழம் போனால் என்ன? துணிந்து செய்தபின் இனி எண்ணக் கூடாது என்ற முடிவிற்கு வந்தவள், ஆதித்திய வர்மனை தன் கைகளில் அள்ளிக் கொண்டாள்.

“ மிஸ்டர் சித்தார்த், ஆதித்.... என்னுடன்.... “ என்று தயக்கத்துடன் ஆரம்பித்தவள், தன் குரலை சரி செய்துக்கொண்டு, “மிஸ்டர் சித்தார்த். நானா உங்கள் மகனை கடத்தினேன்?. நல்ல கட்டுக்கதை. தொலைந்து போன உங்கள் மகனுக்கு ஆதரவு கொடுத்தால், கடத்தினேன் என்றா கூறுகிறீர்கள்?. உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் “ என்றாள் முகத்தினை விறைப்பாக வைத்துக்கொண்டு. ஆனால் அவளது உள்ளமோ சித்தார்த்தின் பதிலை எதிர்பார்த்து நடுநடுங்கிக் காத்திருந்தது.


“ என்னால் முடிந்ததை பார்த்துக் கொள்ள வேண்டுமா? என் எல்லைகளின் வரையறை நீ அறிவாயா? “ என்றான் அழுத்தமாக.

மதுரவர்ஷினிக்கு அவனுடைய அழுத்தமான குரலில் பயப் பந்துகள் குரல்வளையில் ஏறி இறங்கியது. தன் எச்சிலை மிடறு மிடறாக விழுங்கியவள், தன் குரலில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “ஆதித் உன்னை யார் என்னிடம் கொண்டுவந்து கொடுத்தது?” என்று ஆதித்ய வர்மனிடம் கேள்வியை வினவினாள்.


ஆதித்ய வர்மன், “அப்பா....“ என்று கூறி சித்தார்த்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்.

ஆதித்திய வர்மன் கொடுத்த தைரியத்தில், தன் தலையை நிமிர்த்திக் கொண்டு “இப்பொழுது நீ என்ன செய்வாய்?” என்று கண்களால் வினவினாள் மதுரவர்ஷினி.

தாயும் மகனும் சேர்ந்து கொண்டு, தன்னை தனித்து விட்டு விட்டதை எண்ணி உதடு மடித்து புன்னகை புரிந்தான் சித்தார்த் வர்மன்.

மின்னல் வெட்டும்...
 
Last edited:

Kavi priya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2022
25
24
3
Madurai
பிரமாதம். அம்மாவும் பையனும் சேர்ந்து அப்பாவை டீல்ல விட்டுருச்சுங்க. waiting for next episode
 
  • Love
Reactions: அதியா

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சூப்பர் சூப்பர் epi சகி ♥️♥️♥️♥️♥️♥️மது, ஆதித்யா, சித்தார்த் கூட சேர்ந்து நானும் தீம் park ல என்ஜோய் பண்ணிட்டேன் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
அடுத்த எபிசோடிலும் உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த முயற்சி செய்கிறேன் 😍😍😍😍😍😍
 

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
பிரமாதம். அம்மாவும் பையனும் சேர்ந்து அப்பாவை டீல்ல விட்டுருச்சுங்க. waiting for next episode
தன்னை டீலில் விட்டு போனவனை தில்லாக டீல் செய்கிறாள் 🤣🤣🤣🤣
 

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
ada.. sariyaana aalunkathan
appan kedinna, amma pala kedi paola
பாசம் இருந்தும், வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில், அவரவர் உள்ளங்கள் 😍
மின்னல் ஒளியை காணவந்த தோழமைக்கு நன்றிகள் 🙏
 

Priyakutty

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 28, 2022
112
55
28
Salem
இப்படி குடும்பமா அவங்க இருக்கறது... பாக்க ஹாப்பியா இருக்கு... 🥰🥰😍

ஆதித் குட்டி... சித்தார்த் கால வாரிட்டான்... 🤭
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
நகைச்சுவைக்கு பஞ்ச மில்லை 🤣🤣🤣

கடத்தியதையும் இத்தனை தைரியமாய் சொல்லும் பெண்ணே, வர்மனிற்கு குறையாத மிடுக்குடன் உன் பேச்சும் சுவாரசியம் தான் 😜😜😜