• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மின்னல் - 23

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
மின்னலே என் வானம் தீண்ட வா...

அத்தியாயம் – 23

“ ஆதித்யவர்மன் என் மகன்” நினைக்க நினைக்க அவளது உள்ளம் தித்தித்தது.

“ சித்தூ....” என்று அவளது இதழ்கள் செல்லமாய் முணுமுணுத்தது.


மல்லிகை மொட்டு மலர்ந்து மணம் வீசுவது போல் அவளது பெண்மை, தாய்மையும் காதலுமாய் மலர்ந்து மணம் வீசியது.
சென்ற காலம் இனி மீளாது. வரும் காலத்தை வசந்த காலமாய் மாற்ற அவள் உள்ளம் நினைத்தது.

தன் காதல் உயிர்த்தெழுந்ததை எண்ணி, நாணம் கலந்த புன்னகையை அவள் முகம் சிந்தியது.


“ டேய். சித்தூ... என் பையனை என் கண்ணில் இருந்து மறைத்து ஆட்டமா காட்டினாய்?

மதுரவர்ஷினியை சீண்டிப் பார்த்தாய் அல்லவா? இனி என் காதல் சதிராட்டத்தை காணத் தயாராக இரு.
எத்தனை நாட்கள் என் குழந்தையை எண்ணி தவித்து இருப்பேன்.

என்னை தனித்து இருக்கச் செய்துவிட்டு, நீங்கள் இருவரும் கும்மாளம் அடித்தீர்கள் அல்லவா?

நான் போகச் சொன்னால் போய் விடுவாயா? நீ இன்னொருத்தின் கணவன் என்று நினைத்து நான் துடித்த கதை உனக்கு தெரியுமா?
நீ தீண்டிச் சென்றதும், உன்னால் மட்டுமே எழுப்ப முடிந்த உணர்வுகளால் நான் மாண்ட கதை உனக்கு தெரியுமா?
என்னை ஆண்ட நீ, வேறு ஒரு குடும்பமாய் என்னெதிரில் நிற்பதைக் கண்டு, என் இதயம் சில்லுசில்லாய் நொறுங்கியதை நீ அறிவாயா?

என்னைச் சுற்றி முழுவதும் கடல் நீரால் நிறைந்திருக்க, தாகம் தீர ஒரு சொட்டு நீர் நான் தேடித் தேடி களைத்து இருக்க, மழைநீரை ஒளித்துக் கொண்ட மேகமாய் ஓடினாய் அல்லவா....


மின்னலாய் உன்னைத் தீண்டி, என் உயிரின் தாகம் தீர, என் காதல் மழையைப் பெறுவேன்” என்றவளின் காதல் வேர் வருடங்கள் பல கடந்து பூக்கள் பூத்தது.

இதழ்களில் பூத்த சிரிப்புடன் தன் வீட்டிற்குள் நுழைந்தாள். சித்தார்த் வர்மனை எண்ணிக்கொண்டே உள்ளே நுழைந்தவளின் எதிரே வந்த சிவானந்தத்தை கண்டதும் அவளது சிரிப்பு உதட்டிலே மறைந்து போனது.

எப்பொழுதும் அவரை அசட்டையாக கடந்துசெல்லும் மதுரவர்ஷினி, இம்முறை அவரின் எதிரே நின்று அவரை முறைத்தாள்.


நான்கு வருடங்களாக உணர்ச்சிகள் அற்ற மகளின் முகத்தில் தற்பொழுது கோபத்தைக் கண்டதும், “என்னம்மா... “ என்றார்.

“என் குழந்தை..... “ என்று நிறுத்தி அவர் முகத்தையே கூர்ந்து பார்த்தாள்.

அவரது நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பி நிற்க, “ எந்தக் குழந்தை? “ என்றார் மெதுவாக.

“ஓ....என் குழந்தையைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? என் காதலின் சின்னமாக என் உயிரில் உடலில் சுமந்த குழந்தை.

உங்கள் வார்த்தையை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைத்தேன். ஏமாற்றம் என்றால் கூட என்னால் ஒத்துக் கொள்ள முடியும். துரோகத்தை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்?

அதுவும் ஒரு அப்பாவான நீங்கள், உங்கள் மகளுக்கு செய்த துரோகம். என் காதலைத்தான் பிரித்தீர்கள் என்று நினைத்தேன்.
ஒரு குழந்தையை அதனுடைய தாயிடமிருந்து பிரித்து விட்டீர்களே!


கன்று இறந்தால் கூட, பசு வருத்தப்படும், பால் சுரக்காது என்று கருதி வைக்கோல் அடைத்த அந்தக் கன்றுக் குட்டியின் தோலைக்காட்டி பால் கறப்பார்கள். அதன் தாய் பாசத்தை மதிப்பார்கள்.

ஆனால் நீங்கள், உயிருடன் பிறந்த குழந்தையை இறந்து விட்டதாகக் கூறி, என்னை உயிரோடு சாகடித்து விட்டீர்களே.

இறந்த தன் குட்டியை சுமந்து கொண்டு அலையுமாம் தாய்க் குரங்கு. என் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி என் கண்ணில் கூட காட்டவில்லையே.

ஒரு குரங்கின் பாசத்தை கூட நான் காட்டவில்லை என்று நான் எத்தனை நாட்கள் ஏங்கியிருப்பேன்.

கனவில் என் குழந்தையைத் தேடி, கனவுக்குள் நான் விழித்திருந்த நாட்கள்தான் எத்தனை என்று உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் மகள் மானம் கெட்டு பிள்ளை பெற்றுக் கொள்ளவில்லை. எங்கள் உறவுக்கு சாட்சி இதோ.. “ என்றுதான் கழுத்தில் அணிந்திருந்த மோதிரத்தை தூக்கிக் காட்டினாள்.

இத்தனை வருடங்கள் அடக்கி வைத்திருந்த துக்கம் எல்லாம் ஒரே நாளில் வெளிப்பட ஹோவென்று நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது மதுரவர்ஷினிக்கு.
மகள் மனம் கலங்கி உடைவதைக் கண்ட சிவானந்தன் மனம் தாங்காது, பேசுவதற்கு வாயைத் திறந்தார்.

அடுத்த நொடி அவரைப் பார்த்து சீன மிகுதியில் சீறினாள்.

“ போதும். நீங்கள் எதுவும் பேசத் தேவையில்லை. என்னுடைய காயங்களுக்கு நீங்கள் நியாயம் சொல்லப்போவதில்லை. நீங்கள் எதைச் சொன்னாலும் நான் அதை ஒத்துக் கொள்ளப் போவதில்லை.

என் காதலில் நீங்கள் பிழை கண்டிருந்தால் என்னைக் கொன்று இருக்கலாமே. அந்த வலி என்னோடு மறைந்து போயிருக்குமே.

என் குழந்தையைப் பிரித்து, என் குடும்பத்தையே சிதைத்து, அனைவரையும் உயிரோடு வதைத்து விட்டீர்களே.

இப்பொழுது கூட நீங்கள் உண்மை கூற மாட்டீர்களா?” அதற்கு மேல் மனம் பாரம் தாங்க முடியாதவள், “ஏன் அப்பா...... “ என்று கதறிக் கொண்டு தரையில் மடங்கி அமர்ந்தாள்.

“ கண்ணம்மா.... “ என்று ஓடி வந்தவரைப் பார்த்து,

“ அனைவரின் மீதும் நான் அன்பாய் இருந்ததைத் தவிர வேறு எந்தப் பிழையும் செய்யவில்லையே.

சித்தார்த் வர்மனின் உயிரை காக்கும் பொருட்டே அவன் உயிரைச் சுமந்தேன்.

என் காதலைப் பிழை என்று கூறுவீர்களோ என்று நினைத்து உங்களிடம் கூற நாட்களைக் கடத்தினேன்.

என் காதலை நான் உரைத்த நொடி நீங்களே பிழையாகிப் போனீர்களே அப்பா.


எனக்கு அம்மா இல்லை என்று ஒரு நாளும் வருத்தப்பட்டதில்லையே. நீங்கள் வருத்தப்பட வைக்க வில்லையே.

ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து இப்படி என்னை மொத்தமாக உயிரோடு புதைத்து விட்டீர்களே.


உயிரோடு இருக்கும் குழந்தை இறந்து விட்டதாக எண்ணி, எனக்கு ராசி இல்லை என்று நினைத்து, ஒவ்வொரு முறையும் பிரசவம் முடிந்து டாக்டராக பிறந்த குழந்தையைத் தூக்கும் நொடி, எனக்குள்ளேயே கூனிக்குறுகி போயிருந்தேனே.

நான் என் குழந்தையை, எனக்கே எனக்கான சித்தார்த்தை பிரிந்த இத்தனை வருடங்களுக்கு, மாதங்களுக்கு, நாட்களுக்கு, நிமிடங்களுக்கு, நொடிகளுக்கு என்ன பதில் கூறப் போகிறீர்கள்?” என்று கோபமாக
பேசியவள், என் முகத்தை கூட அவருக்கு காட்ட பிரியம் இல்லாமல், முதுகு காட்டி திரும்பிக் கொண்டாள்.


தன் மகளை நோக்கி அடிமேல் அடியெடுத்து வைத்தார் சிவானந்தன். மகளின் அருகே தானும் அமர்ந்தார். நடுங்கும் கரங்களால் மதுரவர்ஷினியின் தோளைத் தொட்டார்.

விழிகளில் நீர் பெருகிய படி, “ ப்ளீஸ்....திருப்பித் தாருங்கள். நான் இழந்த சந்தோஷங்களை திருப்பித் தாருங்கள். என் வாழ்க்கையை எனக்குத் தாருங்கள். எனக்கு என் குடும்பத்தோடு வாழ வேண்டும் என்று ஆசையாக உள்ளது.

கொலையை தொழிலாகச் செய்பவன் கூட குடும்பமாக சந்தோஷமாக இருக்க, பிறருக்குத் தீங்கு செய்ய நினைக்காத எனக்கு மட்டும் ஏன் குடும்பமாக வாழத் தகுதி இல்லை.


அப்பா.... என்னால் தாங்க முடியவில்லை. ஏக்கங்களை சுமக்க முடியவில்லை. ஏமாற்றங்களை தாங்க முடியவில்லை அப்பா.... “ என்று கதறியபடி அவர் கைகளில் தன் தலையை வைத்து மன்றாடினாள்.

“ மதுரவர்ஷினி.... என் கண்ணே.... ஐயோ உன் அப்பா பாவியடா. உன் பாசம் எனக்கே எனக்காக வேண்டும் என்று நினைத்த பாவியடா.

உன்னை கோபுரத்தில் அமர வைக்க வேண்டும் என்று நினைத்து நான் குப்பைத் தொட்டியில் விழுந்து விட்டேனே.

கழுகுகளும் வல்லூறுகளும் உன்னை கவர்ந்து செல்லுமோ என்று நினைத்து, என் சிறகுகளுக்குள் உன்னை பொத்திப் பாதுகாக்கிறேன் என்று நினைத்து மூச்சடைக்க வைத்துவிட்டேனே.

உன் அன்பு முழுவதும் எனக்கே எனக்காக வேண்டும் என்று நினைத்து முரட்டுத் தந்தை, முட்டாள் தந்தையாகி விட்டேனே.

சித்தார்த் வர்மனுக்கு உறவுகள் என்று யாரும் இல்லாததால், காதல் என்ற பெயரில் உன்னைக் கவர்ந்து கொண்டு, என்னிடம் இருந்து பிரித்து விடுவானோ என்று பயந்தேன். பிள்ளைப் பாசத்தை காட்டி உன்னை அவனிடமே வைத்துக் கொள்வானோ என்று பதறினேன்.


உன் அன்பை மட்டுமே எதிர்பார்த்த எனக்கு உன்னுடைய வெறுப்பு மற்றும் பாராமுகமே கிடைத்ததும் செய்வதறியாது திகைத்து நின்றேன்.

மன்னிப்பு கேட்கும் தகுதியையும் நான் இழந்து விட்டேனே.
உன்னுடைய குழந்தையை சித்தார்த் வர்மன் கேட்டதும் நான் கொடுத்ததும் சரி என்று இருந்தது அப்போது.

உன் உறவை இழந்து நான் தவித்த நாட்கள் எல்லாம் எனக்கு பாடம் புகட்டியது.

இந்த உலகத்தில் எந்த உறவும் உனக்கு அடுத்து தான். அதே போல் நீயும் என்னை நினைக்க வேண்டும் என்று நினைத்தேன்.

உன் குழந்தையும் சித்தார்த்தும் அந்த இடத்தை பிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மதி இழந்து நடந்து கொண்டேன்.

அதற்கு எனக்கு இத்தனை பெரிய தண்டனை கிடைக்கும் என்று எனக்குத் தெரியாதே. நீ பேசாத இந்த நான்கு வருடமும் எனக்கு நரகம் தானம்மா.

உன் பாசத்தை மட்டுமே எதிர்பார்க்கும் இந்த பாசத்தால் பைத்தியமான தந்தையை மன்னிக்க மாட்டாயா?

என்னை ஒதுக்கி வைத்து விடுவாயா தங்கம்? பகிரப் பகிரதான் அன்பு பெருகும் என்று இப்பொழுது புரிந்து கொண்டேனே.

புத்திகெட்ட எனக்கு நீ கொடுத்த தண்டனை போதும் அம்மா. என் தாயே என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளம்மா” என்று அவள் தலைமீது கன்னம் வைத்து கதறி அழுதார்.

பதில் ஏதும் சொல்லத் தோணாமல் நிமிர்ந்து தன் தந்தையைப் பார்த்தவள், அமைதியாக எழுந்து சென்றாள்.

தான் செய்த தவறுக்கு தன் மகள் தன்னை மன்னிக்காது போனதைப் பார்த்து, மனம் வெதும்பியர் பூஜை அறைக்குள் இருந்த தன் மனைவியின் படத்தின் முன் வந்து நின்றார்.

“நம் மகளின் அன்பு ஒன்றே பலம் என்று நினைத்த என் வாழ்வில் அந்த அன்பே என்னை பலவீனம் ஆக்கியது.


நம் மகளின் பாசம் முழுவதும் எனக்கே எனக்காக வேண்டும் என்று சுயநலமாக நடந்து கொண்ட ஒரு மோசமான தந்தை நான்.

என் மகள் இனி என்னை மன்னிக்க போவது இல்லை. பிறகு இந்த வாழ்வில் எனக்கு என்ன இருக்கிறது?

என் செயல்களுக்கு உலகம் என்ன பழி கூறினாலும், என் மகள் எனக்கே எனக்காக வேண்டும் என்று நினைத்த என்னை குற்றம் கூறினாலும் இனி எனக்கு கவலை இல்லை.

என் செயல்களுக்கு பின் என் மகளின் மீது நான் கொண்ட பாசமே இருப்பது உண்மை என்றால், என் உயிர் இப்பொழுதே பிரிந்து செல்லட்டும்.

என் பாசத்தை என் மகளை புரிந்து கொள்ளாத போது, வேறு யாரைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை” என்று கூறியவர் பூஜை அறையில் பூக்கள் வெட்டுவதற்காக வைத்திருந்த சிறிய கூர்மையான கத்தியை எடுத்து தன் மணிக்கட்டை அறுத்துக் கொண்டார்.

மாடிப்படி ஏறியவள், டொம்மென்று கீழே ஏதோ விழும் சத்தத்தைக் கேட்டு, ஏதோ யோசனையுடன் கீழே இறங்கி வந்தாள்.

தரையில் ரத்தம் சிந்த விழுந்து கிடந்த தன் தந்தையைப் பார்த்து பதறி அருகில் வந்தாள்.


“ மதுக்குட்டி சாரிடா.... அப்பாவை வெறுத்து விடாதே. என் உலகமே நீ தானடா. நீயே என்னை முழுவதும் வெறுத்த பின் இந்த உலகம் எனக்கு தேவை இல்லையடா” என்று புன்னகைத்தவாறு கண்களை மூடினார்.

“அப்பா... “ என்று பதறி ஓடி வந்தவள் துரிதகதியில் முதல் உதவிகளைச் செய்தாள்.

பூ வெட்டும் கத்தி ஆகையால், வெட்டுக்காயம் ஆழமாகப் பதியவில்லை. நிம்மதிப் பெருமூச்சு விட்ட மதுரவர்ஷினி, தந்தையின் தலையை மடியினில் தங்கினாள்.

தன் மகள் தன் மடி தாங்கியதும், புதிதாய் பிறந்தது போல் இருந்தது சிவானந்தத்திற்கு.

“அப்பா... “ என்றாள் குரல் கரகரத்து.

வெகுநாட்கள் கழித்து கேட்ட மகளின் பாசமான குரலில் விழிகள் கலங்க மகளைப் பார்த்தார் சிவானந்தன்.

அந்தக் கண்கள் இப்பொழுதாவது என்னிடம் உண்மையைச் சொல்லேன் என்று கூறுவது போல் இருந்தது சிவானந்தத்திற்கு.

மகளின் கைகளைத் தன் நெஞ்சோடு வைத்துக்கொண்டு, தைரியத்தை சேர்த்துக்கொண்டு, ஆலப்புழா பயணம் தொடங்கி, ஆதித்ய வர்மன் பிறந்தது வரை அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறி முடித்தார்.

தன் எல்லைகளை மீறி சித்தார்த் பிரசவ அறைக்குள் சென்றதும்,பின் முகம் கலங்கி பிள்ளையை தன்னிடம் யாசகம் கேட்டது பற்றியும் கூறி, இதில் தன் பங்கு எதுவும் இல்லை என்று எடுத்துரைத்தார்.

மதுரவர்ஷினிக்குத்தான் விளக்கம் நன்றாக தெரியுமே.

சித்தார்த்தின் ஐ லவ் யூ கதை பற்றி நினைத்தவள் மென் புன்னகையுடன் தன் தந்தையின் கரங்களை தட்டிக் கொடுத்தாள்.

இந்த மட்டும் தன் மகள் தன்னை ஏற்றுக் கொண்டதே போதும் என்று நினைத்தவரின் இதழ்களும் புன்னகை சிந்தின.

தன் தந்தையும் தான் செய்த தவறை நினைத்து இத்தனை நாள் மருகிக் கொண்டிருந்ததை நினைத்து அவருக்குக் கொடுக்க நினைத்த தண்டனைகளை கைவிட்டு விட்டாள்.

தன் தந்தையை மெதுவாக அழைத்துச் சென்று படுக்கையில் அமர வைத்தாள்.

வெகு நாட்கள் கழித்து தன் கையால் தன் தந்தைக்கு உணவு ஊட்டி விட்டாள்.

மதுரவர்ஷினியின் கைகளைப் பற்றிக் கொண்ட சிவானந்தன் “அம்மா.... “ என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.


ஆதுரமாய் அவர் கண்ணீரைத் துடைத்துவிட்டு, அவருக்கு மருந்து மாத்திரைகளைக் கொடுத்து விட்டு, போர்வை போர்த்தி உறங்க வைத்தாள்.

அறையின் விளக்குகளை அணைத்து வைத்து வெளியே வந்தவள், தன் மனதை அழுத்திய பாரங்களில் சிறிது கரைவது போல் உணர்ந்தாள்.

பகலின் ஒளியை வெறுத்து இரவின் இருளில் ஒளிந்து கொண்டிருந்தவள், சூரியனை எதிர்நோக்க தயாரானாள்.

தன்னுடைய இரவு நேரத்து டியூட்டியை பகல் நேரமாக மாற்றிக்கொண்டாள்.

சித்தார்த்தின் டியூட்டி நேரத்தை கணக்கிட்டு மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றாள்.

ஆதித்ய வர்மனை கௌசிக்கின் வீட்டில் விட்டுவிட்டு வந்தவன், தன்னுடைய தளம் செல்ல லிப்டுக்குள் நுழைந்தான்.

தன்னுடைய தளத்தை அடைந்ததும் லிப்டை விட்டு வெளியே வந்தவனை, முக்கியமான ஆபரேஷனுக்காக எதிர்நோக்கியிருந்த மருத்துவக்குழு அழைத்துக் கொண்டது.


மருத்துவக் குழுவோடு வராண்டாவில் நடந்து வந்தவனை, “ குட் மார்னிங் டார்லிங்... “ என்ற மதுரவர்ஷினியின் குரல், அதிர்ச்சியில் அசையாமல் அவனை நிற்கச் செய்தது.

மின்னல் வெட்டும்....
 

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
அன்பார்ந்த வாசகர்களே,
வைகை தளத்தின் மல்லிகைத் தோட்டத்தில் பூத்த, இந்த மின்னலுக்கு உங்கள் கருத்துக்களால்,தொடர் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏

-அதியா ❤️
 

Kavi priya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2022
25
24
3
Madurai
மிக கனமான பதிவு தோழி. ஆதித்ய வர்மன் இல்லாத ஒரு குறை தான். மதுவின் சேட்டைகள் ஆரம்பம். waiting for next episode
 
  • Love
Reactions: அதியா

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
மிக கனமான பதிவு தோழி. ஆதித்ய வர்மன் இல்லாத ஒரு குறை தான். மதுவின் சேட்டைகள் ஆரம்பம். waiting for next episode
வரும் அத்தியாயங்களில் காதல் சேட்டைகள் அதிகமாக இருக்கலாம் 🤣🤣🤣🤣🤣
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,612
667
113
44
Ariyalur
சூப்பர் சூப்பர் சகி, ♥️♥️♥️♥️♥️♥️♥️மதுவின் டார்லிங் செம, அய்யோ சித்தார்த் இனிமேல் நீ, ஆதி ரெண்டுபேரும் மதுவெனும் பாசமழையில் நனைய போறீங்கோவ் 😍😍😍😍😍😍
 
  • Love
Reactions: அதியா

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சூப்பர் சூப்பர் சகி, ♥️♥️♥️♥️♥️♥️♥️மதுவின் டார்லிங் செம, அய்யோ சித்தார்த் இனிமேல் நீ, ஆதி ரெண்டுபேரும் மதுவெனும் பாசமழையில் நனைய போறீங்கோவ் 😍😍😍😍😍😍
வருடக்கணக்காக பிரிவை, நொடிகளில் சரிசெய்ய,
மடி சாயாமல்....
சதிராடும் இந்த மின்னல் 😍
 

Priyakutty

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 28, 2022
112
55
28
Salem
அவங்க அப்பா பாசம் புரிது... ஆனா அவர் பண்ணது பெரிய தப்பு... 😤😤

சரி... அவங்க மன்னிச்சிட்டாங்க...

டார்லிங் அஹ்... 🤭

மது என்னலாம் பண்றாங்க னு பாப்போம்... 😍

சித்தார்த்... என்ன ரியாக்ஷன் கொடுப்பாரு... 💞

நைஸ் எபி dr... ❤
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
மன்னிப்பை தன் உயிர் கொடுத்து பெற்று விட்டாரே :oops::oops::oops:

ஆஹா, இனி பெண்ணவள் சதிராட்டமோ 🤣🤣🤣 வர்மா நீ தொலைந்தாயடா 🤭🤭🤭