• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மின்னல் - 24

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
மின்னலே என் வானம் தீண்ட வா...

அத்தியாயம் – 24

அதிர்ந்து நின்ற சித்தார்த்தின் முன் தன் விரல்களால் சொடுக்கிட்டாள் மதுரவர்ஷினி.

எப்பொழுதும் காட்டன் சுடிதாரில் வருபவள், இன்று தழையத் தழைய புடவை உடுத்தி, இயற்கை எழில் கொஞ்ச தன் முன்னே நிற்க, மேலிருந்து கீழாக கண்களால் அவளை அளவெடுத்தான் சித்தார்த்.

சொக்கி மயங்கத் துடித்த தன் விழிகளை இமைகள் தட்டி, விழித்து நின்றான்.
யோசனையில் அவனது ஒற்றை புருவம் ஏறி இறங்கியது.

“ இந்த புடவையில் நான் அழகாக இருக்கிறேனா சித்தூ....? “ கண்கள் அபிநயம் பிடிக்க செம்பவள இதழ்களைச் சுளித்துக் கேட்டாள்.

மருத்துவர் குழு இவர்கள் இருவரையும் மாறி மாறி பார்க்க, அதில் ஒரு டாக்டர், “மிஸ்டர் சித்தார்த். நாங்கள் முன்னே சென்று ஆபரேஷனுக்கு எல்லா ஏற்பாடுகளையும் தயார் செய்கிறோம். நீங்கள் விரைந்து வாருங்கள்” என்றார் மதுரவர்ஷினியை ஒரு பார்வை பார்த்தவாறு.

“ மது இது என்ன விளையாட்டு? “ என்றான் சற்று கடினமான குரலில்.

“ சீ போங்க டாக்டர்.... அங்கெல்லாம் தொடாதீர்கள்...” என்றாள் கைகளைக் கட்டிக்கொண்டு குழைவான குரலில்.

முன்னே சென்ற மருத்துவர் குழு திரும்பிப்பார்க்க, விரல்களை உதட்டில் கடித்துக்கொண்டு வெட்கப்பட்டாள்.

அதிர்ந்து போனது அந்த மருத்துவக்குழு. மருத்துவக் குழுவில் இருந்த ஒரு இளம் டாக்டர், சித்தார்த்திற்கு வெற்றிக் குறியை காட்டி விட்டு நக்கலாக சிரித்துக்கொண்டே சென்றார்.

ஆத்திரம் எழ, “ திஸ் இஸ் டூ மச் மது. பிஹேவ் யுவர் செல்ப் “ என்றான் மிரட்டலான குரலில்.

“ இப்படி பொது இடத்தில் கேட்டால் நான் என்ன செய்வது? “ என்றாள் மிகவும் சத்தமாக.

“ ஆர் யூ மேட் மது? “ இன்று பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்து துப்பினான்.

“ இது ஹாஸ்பிடல் டாக்டர்..“ என்று துள்ளிக்குதித்து பின்னே சென்றாள்.

அதிர்ச்சி அடைந்தவன், “எக்ஸ்கியூஸ் மீ... “ என்று சப்தமாக மொழிந்து விட்டு மருத்துவ குழுவை நோக்கி வேக எட்டுக்களில் முன்னேறினான்.


தன் நாவால் கன்னக் கதுப்பை நிரடியபடி சிரித்தாள் மதுரவர்ஷினி.

“ காதல் விளையாட்டு ஆரம்பித்துவிட்டது. சித்தூ டார்லிங்.... “ என்றவளின் கண்கள் காதலில் பளபளத்தது.

மருத்துவனாய் ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தவன், மூன்று மணி நேரமாகப் போராடி, வெற்றிகரமாக ஆபரேஷனை முடித்துவிட்டு சோர்வுடன் வெளியே வந்தான்.

தன் இருக்கையில் அமர்ந்தவன், மதுரவர்ஷினி தந்த அதிர்ச்சியால் நிலைகுலைந்து, கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தான்.

நறுமணமிக்க காபியின் வாசத்தில் கண்களை மெல்லத் திறந்தான். தன் முன்னே வைக்கப்பட்டிருந்த காபி கோப்பையைக் கண்டு தன் புருவங்களின் மத்தியில் சுருக்கிப் பார்த்தான்.

நர்ஸ் யாராவது கொண்டு வந்து வைத்துவிட்டு போயிருக்கலாம் என்று நினைத்தவன் காபி கோப்பையை கையில் எடுத்தான்.

அதன் நறுமணத்தை ஆழ்ந்து சுவாசித்து, தன்னில் நிரப்பிக் கொண்டவன் ஒரு மிடறு காபியை குடிக்க ஆரம்பித்தான்.

“ காபி நன்றாக இருக்கிறதா டார்லிங்? “ என்று பின்னால் இருந்து கேட்ட மதுரவர்ஷினியின் குரலில் திடுக்கிட்டு, காபி புரை ஏற கண்கள் கலங்கினான்.

“ நான் நன்றாக காபி போட்டு இருக்கேனா? என் கைப்பக்குவம் எப்படி?” என்று அவனைப் பார்த்து இடக்காக கேள்வி கேட்டாள்.

புரை ஏறியதால் கண்ணில் இருந்து வழிந்த நீரைக் கூட துடைக்காமல் மதுரவர்ஷினியையே வியந்து பார்த்தான் சித்தார்த் வர்மன்.

“ அடடே... காபியின் சூட்டில் உங்கள் உதடுகள் புண்ணாகி விட்டதா சித்தூ....
கண்களிலிருந்து கண்ணீர் வருகின்றதே. நான் காபியை வைக்கும்போது அவ்வளவு சூடு இல்லையே.

எதற்கும் நான் ஒருமுறை செக் செய்து பார்த்து விடுகிறேன் “ என்று கூறியவள் சித்தார்த் குடித்த காபி கோப்பையை எடுத்து ஒரு மிடறு காபியைக் குடித்தாள்.

“இல்லையே காபியின் சூடு சரியாகத்தானே இருக்கிறது. தாராளமாக நீங்கள் குடிக்கலாம் சித்துக் கண்ணா....” என்றாள் சிரித்துக்கொண்டே.

மதுரவர்ஷினி குடித்த காபியை குடிக்க கசக்குமா சித்தார்த்துக்கு.

ஆனால் அவன் சுதாரிக்கும் முன், காபி கோப்பையை கையில் எடுத்தவனின் விரல்களோடு, தன் விரல்களை கோர்த்துக் கொண்டு காபியை ரசித்து குடித்து முடித்தாள்.

அவளின் வினைகளுக்கு எதிர்வினையாற்ற முடியாமல், அதற்கு அர்த்தமும் புரியாமல் குழம்பி நின்றான் சித்தார்த் வர்மன்.

“ என்ன சித்தூ என்னை ஒரு மாதிரி பார்க்கிறாய். என் காபியை குடிக்க உங்களுக்கு கொடுப்பினை இல்லை. அதனால் என்ன? நானே என் காபியை குடித்து விட்டேன்.

எங்கே சொல்லுங்கள் உங்களுக்கு கொடுப்பினை இல்லை தானே.... “ என்றாள் விரல்களை ஆட்டி புன்னகை சிந்தியவாறு.

“ மது உனக்கு என்ன ஆயிற்று? என்னிடம் திடீரென்று ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்? மற்ற டாக்டர்கள் உன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? “ என்றான் கோபத்தில் குரலை உயர்த்தி.

“மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?” தன் கன்னத்தை சுட்டுவிரலால் தட்டியபடி, யோசனை செய்வது போல் அங்குமிங்கும் நடந்தாள்.

அவளின் செய்கைகள் வித்தியாசமாய் இருந்ததை கண்டு திகைத்து நின்றான் சித்தார்த்.

“ஹான்... கண்டுபிடித்துவிட்டேன் சித்தார்த். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கண்டுபிடித்து விட்டேன்.

திருமணத்திற்கு முன்பே ஒருவனுடன் சென்ற இவள் எல்லாம் ஒரு ஒழுக்கமான பெண்ணா?

அவனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது என்று தெரிந்தும் அவன் தீண்டினால் உடனே உருகும் இவள் எல்லாம் ஒரு மனுசியா?

அவன் குடும்பமாக சந்தோஷமாக இருக்க, இறந்த காதலை தன் இதயத்திலேயே சுமந்து கொண்டிருக்கும் இவள் ஒரு பைத்தியம் என்று நினைப்பார்கள் சரிதானே சித்தார்த் “ என்றாள் கண்களால் கொக்கி போட்ட கேள்வியுடன்.

அவள் ஆழ்மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் உண்மையைக் கூற இது தக்க சமயம் அல்ல என்று நினைத்தான்.

தான் உண்மையை உரைக்கும் நேரம் பூவாய் மலரும் மதுரவர்ஷினியை பார்க்க வேண்டும் என்று நினைத்தான்.

இப்போது கூறினால் புயலாய் மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை உணர்ந்தே இருந்தான்.

அவளின் காயமும் பெரிது. அதன் காரணத்தை தான் அறியவும் வேண்டும். அதன்பின் அந்த வலிகளின் மருந்தாய் தான் மாற வேண்டும்.

“ ஹே.....மது..... சூழ்நிலையின் பிழையில் நம் இருவருக்குமே பொறுப்பு இருக்கிறது. நீ மட்டுமே அதற்குப் பொறுப்பாக முடியாது.

என் திருமணம், ஆதித்ய வர்மன்..... “ என்று இழுத்தான்.

“வாவ்..... சூப்பர் சித்தார்த். என் மீது பிழை கிடையாதா?. ஓகே ஓகே. இந்த மதுரவர்ஷினி ஏமாந்த சோனகிரியான கதை வேண்டாம். உங்கள் கல்யாண கதையைக் கூறுங்கள்.

அதைக் கேட்பதற்கு எனக்கு மிகவும் ஆவலாக இருக்கிறது” என்றவளின் குரலில் போலியாய் ஆர்வம் பொங்கி வழிந்தது.

“ மது நீ உண்மை தெரியாமல் ஏதேதோ பேசுகிறாய். கொஞ்சம் பொறுமையாக இரு மது. நான் உனக்கு எல்லாம்... “ என்று பேசியவனை முடிக்க விடாமல், குறுக்கிட்டாள் மது.

“ஐயா சாமி.... உங்கள் உண்மைகள் எதுவும் எனக்கு வேண்டாம். உங்கள் உண்மைகள் உங்களுடன் சுகமாக உறங்கட்டும்.

நடுவில் கடந்த இந்த காலங்களை நான் ஏன் மறக்கக்கூடாது?

அனைவரிடமும் ஒழுக்கம் கெட்டவள் என்ற பெயர் வாங்கியாயிற்று. இனி கெட்டுப்போவதற்கு என்னிடம் என்ன இருக்கிறது?

இனி இந்த உலகைப் பற்றி எனக்கு கவலை இல்லை.

சொல்லுங்கள் சித்தார்த். நான் உங்களுக்கு வள்ளியா? இல்லை தெய்வானையா?“
என்றவளின் கேள்வியில், அவளது புதிய அவதாரத்தில் அதிர்ந்து நின்றான்.

நர்ஸ் ஒருவர் கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வர, சித்தார்த் வர்மன் அமர்ந்திருந்த இருக்கையின் கைப்பிடியில் அமர்ந்துகொண்டு, சித்தார்த் எதிர்பாராத தருணத்தில்,அவன் தோளோடு தன் கையினை சேர்த்து அணைத்துக் கொண்டு செல்பி எடுத்தாள் மதுரவர்ஷினி.

திருதிருவென முழித்த நர்சிடம், தங்களை ஒரு புகைப்படம் எடுத்து தர முடியுமா? என்று கேட்டாள்.

“ம்.... சரி.... இல்லை...” என்று பேய் முழி முழித்தார் அந்த நர்ஸ்.

சித்தார்த் வர்மன் தன் இருக்கையிலிருந்து எழுந்தே நின்றுவிட்டான். “உன்னை எந்த பேய் பிடித்து ஆட்டுகிறது என்று தெரியவில்லை மது “ என்று கூறிவிட்டு, நர்ஸை தலை நிமிர்ந்து பார்க்க முடியாமல் விருட்டென்று அந்த அறையை விட்டு வெளியேறினான்.

அவன் வெளியேறியதும் சித்தார்த்தின் சுழல் இருக்கையில் அமர்ந்துகொண்டு, தன் கால் மீது கால் வைத்தபடி இடவலமாக சுழன்றவளின் இதழ்கள் புன்னகையை சுமந்து நின்றது.

“ போடா போ.... இனி உன் பின்னால் நான் இருப்பேன். இனி என்னிடம் இருந்து உன்னை பிரிப்பது யார் என்று பார்க்கிறேன். ஆரம்பத்திற்கே இப்படித் தவியாய் தவிக்கிறாயே....

உன் காதலை விட்டு, நம் பிள்ளையை யாசகமாய் வாங்கினாயே நன்றாக அனுபவி ராஜா. அனுபவி “ என்று அவனுடன் மனதோடு பேசினாள்.

தன் எதிரே இருந்த நர்ஸை சட்டை செய்யாமல் அறையை விட்டு வெளியேறினாள் தன் காதலை மீட்டெடுக்கும் காதல் தீவிரவாதியாக.

தன் காரை எடுத்துக்கொண்டு நேராக கௌசிக்கின் வீட்டிற்கு சென்றாள்.

மதுரவர்ஷினியைப் பார்த்ததும் ஆதித்ய வர்மன் ஓடிவந்து தாவிக் கட்டிக்கொண்டான்.

“ம்.. மா...” என்றவனை, ஆரத்தழுவி அகமகிழ முத்தமிட்டாள்.

“அம்மா தான்டா செல்லம். உன் அம்மாதான்.“ என்றவளுக்கு அதற்கு மேல் பேச்சு வராமல் மூச்சடைத்தது.

தாயின் பரவசநிலையைக் கண்டவன், நானும் அவளை முத்தமிட்டு மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினான்.


யாருடனும் ஒட்டாத ஆதித்ய வர்மன், மதுரவர்ஷினியைக் கண்டதும் இயல்பாய் அணைத்துக் கொண்டதைக் கண்ட கௌசிக்கின் தாய் “யாரம்மா நீ? “ என்றார் கண்களில் ஆராய்ச்சிப் பார்வையுடன்.

“ வணக்கம் அம்மா. நான் ஆதித்ய வர்மனின் அம்மா” என்று தயக்கத்துடன் கூறியவள் பின் நிதானமாக சித்தார்த் வர்மன் சில பிரச்சனைகளின் காரணமாக ஆதித்ய வர்மனை தனக்குத் தெரியாமல் தூக்கிக்கொண்டு வந்து விட்டதாக கூறினாள்.

அவளது முகம் உண்மையை உரைப்பது போல் இருந்தாலும், தன்னை நம்பி ஒப்படைத்த குழந்தை ஆகையால்,கௌசிக்கின் அம்மாவிற்கு சிறிது சந்தேகமாக இருக்கவே, “நான் என் மகனிடம் கேட்டுவிட்டு வருகிறேன் “ என்று கூறி அலைபேசியில் தன் மகனை தொடர்பு கொண்டார்.

அந்தப்பக்கம் என்ன கூறியதோ, அவரது முகம் யோசனையைத் தத்து எடுத்தது. அதனைக் கண்டு பதறிய மதுரவர்ஷினி, ஓடிவந்து அவரது கையிலிருந்த அலைபேசியை பறித்துக்கொண்டு, “சார்.... நான் டாக்டர் மதுரவர்ஷினி. ஆதித்ய வர்மன் என்னுடைய குழந்தைதான் என்று தெரியாமல் பைத்தியமாக சுத்திய மதுரவர்ஷினி.

இது அனைத்திற்கும் உங்கள் நண்பரும் ஒரு காரணம்தான். ப்ளீஸ் சார் என் மகனை வந்து பார்ப்பதற்கு எனக்கு அனுமதி தாருங்கள்.

சித்தார்த்திடம் எனக்கு தீர்க்கப்படாத சில கணக்குகள் இருக்கின்றன அவற்றைத் தீர்த்துவிட்டு கண்டிப்பாக எங்கள் அனைவரின் வாழ்க்கையையும் விரைவில் சரி செய்து விடுவேன்.

அதுவரை சித்தார்த்திடம் இந்த உண்மையைக் கூற வேண்டாம்.

என் குழந்தையை, எனக்குத் தெரியாமல், என்னிடம் இருந்து பிரித்து சென்றது தவறு தானே.

உங்கள் தங்கையாய் நினைத்து எனக்கு இந்த உதவியை புரியுங்கள் அண்ணா” என்று மன்றாடினாள் மதுரவர்ஷினி.

அவளின் அண்ணா என்ற ஒற்றை வார்த்தையில், தன் நட்பை மறந்து தங்கைக்கு உதவி புரிய முன்வந்தான் கௌசிக்.

“ சரிதான் மதுரவர்ஷினி. ஆனால் சித்தார்த்தை சேர்வதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்ளாதே.

உனக்கு எந்த உதவி வேண்டுமானாலும் என்னிடம் தயங்காமல் கேட்டுக் கொள்ளலாம்.

இன்று புதிதாகப் பிறந்த என் தங்கைக்கு இது கூட செய்ய மாட்டேனா? “ என்று சிரித்தபடியே உறுதி அளித்து அவள் மனதை குளிரச் செய்தான்.

தன் பொழுதை மகனோடு இன்பமாக செலவு செய்ய ஆரம்பித்தாள் மதுரவர்ஷினி.


சித்தார்த்துடன் தான் நடத்தப்போகும் காதல் யுத்தத்திற்கு தன் மகனையும் தன் படையில் தளபதியாக சேர்த்துக் கொண்டாள் மகாராணி மதுரவர்ஷினி.


காதல் எதிரி சித்தார்த் வர்மன் இது எதையும் அறியாமல் நள்ளிரவில் ஆழ்ந்த துயிலில் இருந்தான்.

விளக்குகள் அணைந்து இருளை பூசிக் கொண்டிருந்தது அவனுடைய படுக்கைஅறை.

மலர்க்கரம் ஒன்று படுக்கை அறையின் கதவைத் திறக்க, அந்தப் பொல்லாத கதவும் சத்தமில்லாமல் திறந்து கொண்டது.

நிலவொளி, கண்ணாடி ஜன்னலின் வழியாக சித்தார்த் வர்மனின் முகத்தில் பட்டு ஒளிர்ந்தது.

படுக்கையை நோக்கி வந்த அந்த உருவம், தன் தளிர்க் கரத்தால் சித்தார்த்தின் சிகையை இதமாய் கோதிக் கொடுத்தது.

விரல் ஒன்று நெற்றியில் தொடங்கி அவன் நாசியின் வழியாக இழுத்து உதட்டில் வந்து கழுத்தில் முடிந்தது.

அவனுடைய மீசையை இருபுறமும் முறுக்கி விட்டு அழகு பார்த்தது.

அவனுடைய புருவங்களின் வளைவில் பயணம் செய்தது.

முகத்தில் ஏற்பட்ட குறுகுறுப்பில் திரும்பிப் படுத்தான் சித்தார்த்.

பரிவான தன் பாசக் கரத்தால் முதுகை இதமாய் தடவிக் கொடுத்தது அந்த மென்மையான கரம்.

சுகமான தடவலில் சித்தார்த்தின் உடல் சிலிர்த்து எழுந்தது.

அதிர்ந்து கண்திறந்து பார்த்தவனின் முகத்துக்கு நேராக, மதுரவர்ஷினியின் முகம் தென்பட,
“மது... “ என்றவனின் குரல் காற்றாய் ஒலித்தது.

“சித்தூ... உங்கள் வாழ்வில் முதலில் வந்தவள் நான்தான். உங்களிடம் எனக்குத்தான் முதல் உரிமை உள்ளது.

என்னுடைய உரிமையை யாராலும் பறிக்க முடியாது. என்னுடைய இடத்தை யாராலும் அடைய முடியாது.

என்னுடைய சித்தார்த் எனக்குத்தான். மகள் வேண்டும் என்று கேட்டாய் தானே.... “ என்று ராகமாக இழுத்தவள், சித்தார்த் எதிர்பாராத தருணத்தில் அவன் இதழோடு தன் இதழைச் சேர்த்தாள்.

சித்தார்த் வர்மனின் கண்கள் ஆனந்தமாய் மூடிக்கொண்டன. முத்தத்தில் சித்தம் கலங்கி, தன்னோடு யுத்தம் செய்யத் தொடங்கினான்.

அவனது கைகள் மதுரவர்ஷினியை அணைக்கத் துடித்தன. தன் கைகளை அங்கும் இங்கும் அசைத்தவன் காற்றையே கட்டிக்கொண்டான்.

“மதுரவர்ஷினி.. “ என்று கூறிக்கொண்டே அறையின் விளக்கை எரியச் செய்தவன் கண்டது மதுரவர்ஷினி இல்லாத வெற்று அறையைத் தான்.

கனவிலும் வந்து தன்னை தொல்லை செய்யும் அந்தப் பொல்லாத பெண்ணை எண்ணி செல்லக் கோபம் கொண்டான்.

மின்னல் வெட்டும்...
 

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
அன்பார்ந்த வாசகர்களே,
வைகை தளத்தின் மல்லிகைத் தோட்டத்தில் பூத்த, இந்த மின்னலுக்கு உங்கள் கருத்துக்களால்,தொடர் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏

-அதியா ❤️
 

Kavi priya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2022
25
24
3
Madurai
வெகு அருமை தோழி. மது எதிர்பார்ப்பது சித்தார்த்திடம் நடக்குமா? என்பதை அறிய ஆவல். எழுத்து நடை அபாரம் தோழி.
 
  • Love
Reactions: அதியா

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
வெகு அருமை தோழி. மது எதிர்பார்ப்பது சித்தார்த்திடம் நடக்குமா? என்பதை அறிய ஆவல். எழுத்து நடை அபாரம் தோழி.
தங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய கடும் முயற்சி செய்வேன் 👍 வாழ்த்திற்கும் தொடர்ந்த கருத்துப் பதிவிற்கும் நன்றிகள் நட்பே🙏🙏🙏
 

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️என்ன மதுவை கொஞ்சம் பித்து பிடிக்க வச்சுடீங்க 😁😁😁😁😁😁😁😁
காதலில் கலங்கிய மதுவின் பித்து....
அதில் விழும் பாருங்க சித்தார்த்திற்கு குத்து மேல் குத்து.
 

Priyakutty

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 28, 2022
112
55
28
Salem
கனவா... ஒளிஞ்சி கிட்டங்களா... 🤭

அவங்க காதல் யுத்தம்... 😍🤭

பாவம் அவரு ஒன்னும் புரியாம முளிக்குறாரு... 🤭💞
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
காதல் ராட்ஷசியாக மாறி விட்டாள் 😜😜😜

அண்ணனின் துணை வேறா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ நல்லது நடக்கட்டும் நாடகம் 🤣🤣🤣

கனவு நனவாவது எப்போதோ வர்மா 🤭🤭🤭