• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மின்னல் - 26

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
மின்னலே என் வானம் தீண்ட வா...

அத்தியாயம் – 26


கைப்பேசியில் வந்த குறுஞ்செய்தி உண்மைதானா? என்று கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தான் சித்தார்த்.

“மணமகள் தேவை.... தீபம் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல கார்டியாலஜிஸ்ட் டாக்டர். சித்தார்த் வர்மனுக்கு, படித்த பண்பான மணமகள் தேவை.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என்று அவனுடைய புகைப்படத்தோடு வெளிவந்த செய்தியை படித்தவனுக்கு கோபம் உச்சியைத் தொட்டது.

மதுரவர்ஷினியின் சிறுபிள்ளைத்தனமான செயலைக் கண்டு ஆத்திரம் எழுந்தது.
அடுத்தடுத்த போன் காலில், வாழ்த்துக்கள், இந்தப் பெண் ஓகேவா? அந்தப் பெண் ஓகேவா? என்ற உரையாடல்களில் மொத்தமாக தன்னுடைய போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டான்.


இன்று இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்ற முடிவோடு படுக்கையை விட்டு கீழே இறங்கி வந்தான்.

அவனது வீட்டின் அழைப்பு மணி அழைக்க, அதிகாலையில் யார்? என்ற புருவச் சுளிப்போடு சென்று கதவைத் திறந்தான்.

சித்தார்த்தின் கண்களை எதிர்நோக்க முடியாமல் தலை குனிந்து நின்று கொண்டிருந்தார் சிவானந்தன்.

“ உள்ளே வாங்க... “ என்ற ஒற்றை அறை போது அவரை சோபாவில் அமரச் செய்தான்.

“ காபி...” என்று கேட்டவனுக்கு, “ இல்லை.... “ என்ற உடனடி பதிலளித்தார் சிவானந்தன்.

இரண்டு நிமிடங்கள் அமைதியாகக் கடக்க, அவரையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான் சித்தார்த்.

“ உங்களிடம்... நான்.... என்னை நீங்கள்... “ என்று வார்த்தைகளை கோர்க்க முடியாமல் தடுமாறினார் சிவானந்தன்.

கிச்சனுக்குள் சென்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் எடுத்துக் கொண்டு அவரிடம் கொடுத்தான் சித்தார்த்.

நீரை வாங்கி அருந்தியபடி தன் பதட்டத்தை சற்று தனித்தார் சிவானந்தன்.
பின் ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு, “சித்தார்த், நான் மதுரவர்ஷினியின் அப்பா” என்றார் தயங்கியவாறே.


“ தெரியும். நன்றாகவே தெரியும். என் மகனை எனக்கு யாசகமாக வழங்கிய தெய்வம் என்று எனக்கு நன்றாக நினைவிருக்கிறது” என்றான் அழுத்தமான குரலில்.

தன் பேரனை கோடிட்டு காட்டியதும், “ ஆதி குட்டி எங்கே? “ என்றார் ஆர்வமாக.


“ மேலே உறங்குகிறான். எழுதுவதற்கு இன்னும் நேரம் உள்ளது. நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லுங்கள் “ என்று அவரை பேசுவதற்கு ஊக்கினான்.

“ மதுரவர்ஷினி மீது எந்தத் தவறும் கிடையாது. என் மகள் எனக்குத்தான் என்ற முட்டாள்தனமான பாசத்தில், உங்கள் காதலை பிரித்து விட்டேன்.
ஆதி குட்டியையும்... சாரி.... மதுரவர்ஷினியின் பார்வையிலிருந்து மறைத்து விட்டேன்.


எனது மகளின் பாசத்தை வென்று விட்டேன் என்று நினைத்த நான், படுபயங்கரமாக தோற்றுவிட்டேன் உங்கள் இருவரின் காதல் முன்பு.

ஆதி குட்டியை கண்ட பின்பு, இந்த பாசத்தை இத்தனை நாள் இழந்ததை எண்ணி நேற்று இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை.

நீங்கள் என்னை மன்னித்து விடுங்கள். இந்தப் பிறவியில் நான் செய்த பெரும் பாவம் இது.
என் பாவத்தால் உங்கள் இருவரையும், அந்தப் பச்சிளம் குழந்தையையும் நிறையவே கஷ்டப்படுத்தி விட்டேன்.


என் தவறுகளை பொறுத்துக்கொண்டு என் மகளோடு நீங்கள் குடும்பமாக வாழ வேண்டும்.

அதில்... அதில்... என்னையும் சேர்த்துக் கொள்வீர்களா? மாப்பிள்ளை.. “ என்று கதறி அழுதவரின் கைகளைப் பிடித்துக் கொண்டான் சித்தார்த்.

“மாமா. வருத்தப்படாதீர்கள். நீங்கள் எவ்வளவு கூறியிருந்தாலும், நானும் என் மதுரவர்ஷினியை அப்படியே விட்டுவிட்டு வந்திருக்கக் கூடாது.

நின்று என் காதலுக்காக நான் போராடியிருக்க வேண்டும். என் மீதும் பிழை உள்ளது.

ஒரு குழந்தையை அதன் தாயிடமிருந்து பிரித்த பாவம் என்னையும் சேர்ந்துவிட்டது.

நிச்சயமாக நாங்கள் இருவரும் சேரும் நாட்கள் வெகு விரைவில் உள்ளது. கண்டிப்பாக எங்கள் கூட்டில் உங்களுக்கும் இடம் உண்டு மாமா “ என்றான் உணர்ச்சிப்பூர்வமாக.

“ மாமா, மருத்துவமனையில் மது என்னை ஏன் வேண்டாம் என்று கூறினாள் அதற்கு உங்களுக்கு ஏதாவது காரணம் தெரியுமா?” என்றான் அவளின் காயங்களை அறியும் நோக்குடன்.


“ எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. அது சூழ்நிலையின் போக்கில் தானாக, எனக்கு சாதகமாக நடந்ததாக நான் அன்று நினைத்துக்கொண்டேன்” என்றார் சிறுத்துப் போன குற்ற உணர்வில்.

அந்த நேரம் “ அப்பா.. “ என்று கண்ணை கசக்கிக் கொண்டு ஆதித் கீழே இறங்கி வந்தான்.

சித்தார்த் அவனை நெருங்குவதற்குள், தன் வயதை மறந்து அவனுக்கு முன் ஓடிச்சென்று ஆதித்ய வர்மனை தன் கைகளில் அள்ளிக் கொண்டார் சிவானந்தன்.

அவரின் பாசப் போராட்டத்தை கண்முன்னே கண்டுகொண்டான் சித்தார்த் சின்னச் சிரிப்புடன்.

ஆதித்ய வர்மனும், “தாத்தா...“ என்று கூவிக் கொண்டு அவரை கட்டியணைத்தான்.

“ ஆதி குட்டி, உனக்கு தாத்தாவை தெரியுமா? “ என்றான் சித்தார்த்.

“ம்.. மா... வீட்ல தாத்தா.. “ என்று சிரித்தான்.

“மதுரவர்ஷினி வீட்டிற்குக் கூட்டி வந்தாள் மாப்பிள்ளை” என்றார் உள்ளே போன குரலில்.

தன்னைச்சுற்றி என்ன தான் நடக்கிறது என்று ஒரு நிமிடம் யோசித்தான் சித்தார்த்.

“கௌசிக் இதைப் பற்றி தன்னிடம் ஒரு வார்த்தை கூட கூறவில்லையே. மதுரவர்ஷினியின் ஆடுபுலி ஆட்டத்தில் அனைவரும் அவளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனரோ” என்று யோசித்துக் கொண்டே தன் தாடையைத் தடவினான்.

“ மாமா இந்த ஒரு நாள் என் வீட்டில் இருந்து கொண்டு ஆதித்ய வர்மனை பார்த்துக் கொள்ளுங்கள்.

மதுரவர்ஷினியிடம் தெரிவிக்க வேண்டாம்.
இன்றோடு எனக்கும் உங்கள் மகளுக்கும் இருக்கும் பிரச்சனைகளை முடித்து விட்டு இருவரும் ஒன்றாக உங்களை பார்க்க வருவோம்” என்றான் உறுதியான குரலில்.


முகம் மலர சந்தோஷத்துடன், “ ஆதி குட்டியை பார்த்துக் கொள்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் மாப்பிள்ளை. நீங்களும் என் மகளும் இணையும் அந்த திருநாளுக்காக நான் காத்திருக்கிறேன் “ என்றார் சற்றே கண்கலங்க.

“ அடியே பொண்டாட்டி. உன் புருஷனுக்கு பொண்ணா பார்க்கிறாய்? உனக்கு அந்த கௌசிக்கும் உடந்தையா? வருகிறேன் உன் சதுரங்க ஆட்டத்தில் சிப்பாய்களை எல்லாம் வெட்டி விட்டு என் ராணியை கொள்ளை கொள்ள வருகிறேன் “ என்றான் முகத்தில் மலர்ந்த புன்னகையுடன்.

திருமணத்திற்கு தயாராகும் புது மாப்பிள்ளை போல் தன்னைப் பார்த்து அலங்கரித்துக்கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினான் சித்தார்த்.

கார் சாவியை கைகளில் சுழற்றியபடி, மெல்லிய விசில் சத்தத்துடன், மனமெங்கும் உற்சாகம் பொங்க, தன் காதலியான மனைவியைக் காண விரைந்து சென்றான்.

கண்ணாடி முன் நின்ற மதுரவர்ஷினியைப் பார்த்து அவள் மனசாட்சி கேட்டது, “ ஏன்டி மது, அவனுக்குப் பெண் பார்க்க விளம்பரம் அனுப்புகிறாயே, நிஜமாலுமே ஏதோ ஒரு பெண்ணை பார்த்து அவன் திருமணம் முடித்துக் கொண்டால் என்ன செய்வாய்? “

“ கொலை செய்வேன். அவனையும் அந்தப் பெண்ணையும்... “ மிடுக்காக பதிலளித்தாள்.


“ இத்தனை நாள் இந்த காதல் எங்கே சென்றதடி மது?” ஏளனமாய் சிரித்தது மனசாட்சி.

“என் காதலில் வறண்ட காலம் முடிந்து, கார்காலம் இப்பொழுது தான் ஆரம்பித்திருக்கிறது. கார்கால மின்னல்போல், என் காதல் மின்னல் சித்தார்த் காதல் வானில் ஒளி வீச தயாராகிவிட்டது.
என் காதலன். என் கணவன். நான் அவனைப் பாடாய் படுத்தினால் உனக்கு என்ன வந்தது? சீ போ... “ என்று தன் மனசாட்சியை விரட்டிவிட்டு மருத்துவமனைக்கு கிளம்பி வந்தாள் மதுரவர்ஷினி.


மதுரவர்ஷினி கேட்டுக்கொண்டதற்கிணங்க கௌசிக், மாலையில் நடைபெற வேண்டிய மருத்துவக்குழு மீட்டிங்கை காலையில் மாற்றி வைத்திருந்தான்.

அனைத்து மருத்துவர்களும் தங்களது டூட்டி நேரத்திற்கு முன்பாகவே அந்த மீட்டிங் ஹாலில் குழுமியிருந்தனர்.

சித்தார்த் உள்ளே நுழைந்ததும் சலசலவென்று தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.

அதனையெல்லாம் அசட்டையாக கடந்து சென்று அமர்ந்தான் சித்தார்த்.

மதுரவர்ஷினி உள்ளே நுழைந்ததும், சித்தார்த் அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண் மருத்துவரைப் பார்த்து, “ எக்ஸ்கியூஸ் மீ இது எனக்கான இடம் நீங்கள் கொஞ்சம் எழுந்து கொள்கிறீர்களா? “ என்றாள் நேரடியாக.

மதுரவர்ஷினியை முறைத்துக் கொண்டே அந்தப் டாக்டரும் எழுந்து இடம் கொடுத்தார்.

சித்தார்த் அருகில் அமர்ந்த மதுரவர்ஷினி, அவன் காதருகே குனிந்து ஓசை இல்லாமல் தன் இதழை அசைத்தாள்.

பார்க்கும் கண்களுக்கு அவள் ஆசையோடு ஏதோ ரகசியம் பேசுவது போல் இருந்தது.

நிலைமையின் தீவிரத்தை குறைக்க சித்தார்த் எழுந்து போன் பேசுவது போல் வெளியே சென்றான்.

மீட்டிங் ஹாலின் வெளியே ஜன்னலோரத்தில், கண்ணாடி வழியே வெளியுலகை பார்த்தபடி நின்றவனின் காதில் சில பேச்சுக் குரல் கேட்டது.

“திருமணமானவன் என்று தெரிந்தும் சித்தார்த்தை, மதுரவர்ஷினி சுற்றிச் சுற்றி வருவதைப் பார்த்தால், நான் ஏன் முன்னமே மதுரவர்ஷினியை ட்ரை பண்ணி இருக்க கூடாது என்று தோன்றுகிறது டா” என்றான் ஒருவன்.

மற்றொருவனோ “ அட நீ வேற. நான் கூட மதுரவர்ஷினி ரொம்ப ஒழுக்கமான பெண் என்று நினைத்தேன். விசாரித்துப் பார்த்தால் அவளுக்கும் திருமணமாகி கணவனோடு இல்லையாம்.

சரி அந்த சித்தார்த் டாக்டருக்கு அடித்தது யோகம் “ என்று நக்கலாக பேசிவிட்டு மீட்டிங் ஹாலுக்கு உள்ளே நுழைந்தனர் இருவரும்.

கேட்டுக் கொண்டிருந்த சித்தார்த்தின் கை நரம்புகள் முறுக்கி கண்கள் சிவந்தன.
மதுரவர்ஷினியின் பெண்மை பொதுஇடத்தில் விமர்சிக்கபடுவதைக் கண்டு அவன் உள்ளம் துடிதுடித்தது.


தன்னை துடிக்க வைக்க அவள் எடுத்த ஆயுதம் அவளையே கீறி விட்டதை உணர்ந்து, இனியும் பொறுப்பதற்கு இல்லை என்ற முடிவோடு மீட்டிங் ஹாலுக்கு உள்ளே நுழைந்தான் சித்தார்த்.

கௌசிக்கை ஆழமாக முறைத்தான் சித்தார்த். அவனின் பாசமான பார்வை புரியாத கௌசிக் மதுரவர்ஷினியை பார்க்க, அவளோ தனக்கு ஒன்றும் தெரியாது என்று தோளை குலுக்கினாள்.

“ ஹலோ டாக்டர்ஸ்.. குட் மார்னிங். இந்த மீட்டிங் ஆரம்பிப்பதற்கு முன் சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விருப்பபடுகிறேன் “ என்ற சித்தார்த்தின் ஆளுமையான குரலில் அனைவரும் நிமிர்ந்து அமர்ந்தனர்.

“ நம்முடைய வாட்ஸ்அப் குரூப்பில், என்னைப்பற்றிய குறுஞ்செய்தியை இன்று பார்த்திருப்பீர்கள் “ என்றான்.

அனைவரும் ஒரு நமட்டுச் சிரிப்புடன் அவனை பார்த்தனர்.
மதுரவர்ஷினியோ தன் புருவங்களை உயர்த்தி எப்படி என்பது போல் அவனிடம் கண்களால் வினவினாள்.


கௌசிக் வேகமாக தன் அலைபேசியில் அந்த குறுஞ்செய்தியை பார்த்துவிட்டு, மதுரவர்ஷினியை நோக்கி கண்களால் ஏன் என்பது போல் முகத்தை சுருக்கினான்.

அவனுக்கு தன் புன்னகையையே பரிசாகக் கொடுத்தாள் மதுரவர்ஷினி.

“ ஃபிரண்ட்ஸ் அது யாரோ ஒரு விஷமி என்னைப்பற்றி அவதூறாக செய்வதற்காக அந்த செய்தியை பரப்பி விட்டிருக்கிறார்கள்” என்றான்.


“எஸ். எனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. உங்கள் அனைவருக்கும் என் மனைவியை இப்பொழுது அறிமுகப்படுத்துகிறேன்” என்றான்.

அவனின் அறிவிப்பில் நாற்காலியின் முனையில் வந்து அமர்ந்தாள் மதுரவர்ஷினி.

“ என் மனைவி உங்களுக்கு நன்கு பரிச்சயமானவர் தான்.அவர் கைனகாலஜிஸ்ட் டாக்டர் மதுரவர்ஷினி” என்று அரசவையில் தன் தேசத்து மகாராணியை அறிவிப்பது போல் அறிவித்தான்.

அனைவரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்து கைதட்டி ஆரவாரித்தனர்.


டாக்டர் கார்முகில், மதுரவர்ஷினியை மிரட்சியாக பார்த்தாள்.

மதுரவர்ஷினியின் உலகம் நிசப்தமானது. முதன்முதலில் தான் காதலை அறிவித்த தருணம் போல், சித்தார்த் இப்பொழுது அனைவர் முன்னிலையிலும் அறிவிக்க, அவளது மனம் நம்பாமல் தத்தளித்தது.

சித்தார்த் வர்மன் வாயின் வழியாகவே தன்னை தன்னவள் என்று அறிவிக்க வைக்கவேண்டும் என்று நினைத்த அவளது எண்ணம் பூர்த்தியானது.

அதீத அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாதவள் மீட்டிங் ஹாலை விட்டு கண்ணீர் வழிய வெளியே ஓடினாள்.

நிலைமையை சமாளிக்க கௌசிக் எழுந்து, “ டாக்டர் சித்தார்த் வர்மன் மற்றும் டாக்டர் மதுரவர்ஷினி ஆகியோரின் பார்ட்டியில் விரைவில் மீண்டும் சந்திக்கலாம்” என்று கூறிவிட்டு அந்த மீட்டிங்கை ஆரம்பித்தான்.

சித்தார்த் கண்களால் கவுசிக்கிடம் வெளியே செல்ல அனுமதி கேட்க, இமை மூடி தன் சம்மதத்தை தெரிவித்தான் கௌசிக்.

அழுது கொண்டே வெளியே வந்தவள், மருத்துவமனையின் மொட்டைமாடி செல்லும் படியில் விருவிருவென, யாருமில்லாத தனிமையைத் தேடி ஏறினாள்.

அந்தப் பரந்த மொட்டை மாடியில் அழுது கொண்டிருப்பவளின் தோள்களைத் தொட்டு தன் புறம் திருப்பினான் சித்தார்த்.

“ இவ்வளவு நாள் வேண்டுமா? என்னை உன் துணையாய் ஏற்றுக்கொள்ள இவ்வளவு நாள் வேண்டுமா சித்தார்த்?

என்னை உன் மனைவியாய் ஒத்துக் கொள்ளும் வரை, உன்னை சீண்டிக்கொண்டே இருந்திருப்பேன்” என்றாள் ஊடலாக.

“ஏய்... உன்னை பிரிந்து நான் மட்டும் சுகமாகவா இருந்தேன்? “ என்று கூறியவன் அவளைத் தன்னோடு அணைக்க முயல, அவனின் பிடியில் இருந்து திமிறி விலகினாள்.

“ஆதித்திய வர்மனை என் கண்ணில் காட்டாமல் மறைத்து வைத்தாய் அல்லவா?” என்று கூறிக்கொண்டே அவன் தோளில் அடிக்க ஆரம்பித்தாள்.


“ நீதான் வேண்டாம் என்று கூறி விட்டாயே.. பிறகு நான் எப்படி?” என்றான் கலக்கமாக.

“ நீ ஏன் அவளுக்கு ஐ லவ் யூ கூறினாய்? “ என்றாள் முகம் கொள்ளா கோபத்துடன்.

“ ஐ லவ் யூ.. நான்... யாருக்கு?“ என்று யோசித்தவனின் மூளைக்கு மானசா என்ற விடை வந்தது.

அவளை வலிமையாக தன் புறம் இழுத்தான். “ நீ சரியான முட்டாளடி. ஓ மை காட்... கண்ணில் கண்ட காட்சியை உண்மை என நினைத்து என் உயிரை பறித்து விட்டாயே. என் உயிருக்குயிரான காதலை சிதைத்து விட்டாயே.

நம் மகளுக்கு நான் ஐ லவ் யூ கூறினாலும் இப்படித்தான் பொறாமை படுவாயா?


நீ இல்லாமல் நம் மகனை வளர்க்க நான் எவ்வளவு துன்பப்பட்டேன். உன் தவறான முடிவால் நம் வாழ்க்கை எப்படி சிதறியது என்று பார்த்தாயா? “ என்று அடுக்கிக்கொண்டே போனவனைப் பார்த்து,

“நிறுத்துடா... “ என்றாள் சட்டென்று.

“என்னது டாவா? “ என்று அதிர்ந்தான்.

“ஆமாம்டா. நாம் காதல் புரிந்த அத்தனை காலங்களில் ஒரு முறையாவது எனக்கு நீ ஐ லவ் யூ சொல்லி இருப்பாயா?

உன் திருவாயால் வேறு ஒரு பெண்ணிற்கு நீ ஐ லவ் யூ சொல்லும் போது என் மனம் என்ன பாடுபடும் என்று நினைத்துப் பார்த்தாயா?

நீ வருவாய் என ஒவ்வொரு நாளும் நம்பிக்கையோடு நம் காதலுக்காக, உன் உயிரை என்னுள்ளே சுமந்து காத்திருந்த எனக்கு, நீ அந்தப் பெண்ணிற்கு சொன்ன ஐ லவ் யூ எவ்வளவு பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என்று உணர மாட்டாயா சித்தார்த்?

ஒரு பெண்ணாய் உன் காதல் முழுவதும் எனக்கே எனக்காக வேண்டும் என்று நான் நினைப்பது தவறா?

நான் போ என்று சொன்னால் நீ போய் விடுவாயா? “ என்ற தன் நெடுநாள் ஏக்கங்களை எல்லாம் வார்த்தைகளில் கொட்டி அழுது தீர்த்தாள்.

அவளின் மனக் காயத்தை காணச் சகியாதவன், தன் வலிமையான கரத்தால் அவளின் மென்மையான இடையை வளைத்து, தன் இதழை அவள் இதழோடு சேர்த்தான்.

இத்தனை நாள் பிரிவை தன் ஒற்றை முத்தத்தால் ஈடு செய்ய முயன்றான்.

ஆயிரம் சமாதானங்கள் சொன்னாலும் ஏற்காத தன்னவளின் மனதை வென்றிட ஒற்றை முத்தத்தால் காதல் போர்த் தொடுத்தான் சித்தார்த் வர்மன்.


மின்னல் வெட்டும்....
 
Last edited:

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
அன்பார்ந்த வாசகர்களே,
வைகை தளத்தின் மல்லிகைத் தோட்டத்தில் பூத்த, இந்த மின்னலுக்கு உங்கள் கருத்துக்களால்,தொடர் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏

-அதியா ❤️
 

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️அப்பாடி ஒருவழியா ரெண்டுபேரும் அறியாமல் செஞ்ச தவறுக்கு விளக்கம் கொடுத்துட்டாங்க 😍😍😍😍😍😍
தொடர்ந்து ஊக்கம் தரும் அன்பான நட்பிற்கு கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
 

Kavi priya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2022
25
24
3
Madurai
அருமையான பதிவு. கதை முடிவை நோக்கி நகர்கிறது. இருவரின் விளக்கமும் அருமை.
 
  • Love
Reactions: அதியா

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
அருமையான பதிவு. கதை முடிவை நோக்கி நகர்கிறது. இருவரின் விளக்கமும் அருமை.
ஆமாம் தோழமையே
இன்னும் இரண்டு அத்தியாயத்தில் கதை முடிந்துவிடும். என்றும் போல் உண்மை காதல் செய்து நிற்கும்.👍
 

Priyakutty

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 28, 2022
112
55
28
Salem
அடுத்தவங்க லைப் ல என்ன நடக்குது தெரியாம தப்பா பேசுறது... 😡😡

சொல்லிட்டாரு ப்பா... 😍

சேர்ந்துட்டாங்க...🥰🥰

நைஸ் எபி dr... ❤
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
பாவையவள் ஏக்கம் தீர்ந்த நேரம், அவள் அவப்பெயரும் நீங்கி விட்டது தன்னவன் அறிவிப்பால் :love::love::love:


முத்தத்தால் சமாதான தூது அனுப்புகின்றான் :oops::oops::oops: