அந்தப் பிரமாண்டமான அறைக்குள், குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த மைக்கேலின் கையில் இருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.
ஆனால் அதைக் கண்டு கொள்ளும் மனநிலையில் தான் அவன் இல்லை, சட்டென நடை நின்று விட்டதும், அவனது விழிகள் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த அந்த ஆளுயரமான படத்தில் நிலைகுத்தி நின்றன.
பச்சை நிறப் புடைவையில், அள்ளி முடிந்த கொண்டையோடு, அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள் புகைப்படத்தில் இருந்த பாரதி.
அவனிடம் எதையோ கேட்க வந்த எஸ்தர், அவனது கோலம் கண்டு திடுக்கிட்டுப் போனாள்.
"ஜோசப்.. என்ன இது போயும் போயும் அவளுக்காக உன்னைய நீ வருத்திக்கிறாய்.."
"ஷட்டப் எஸ்தர்.. எந்த நிலையிலயும் அவ தான் உன்னோட அண்ணிங்கிறதை நீ மறக்கக் கூடாது.."
"குட் ஜோக்.. அண்ணியா அவளா எனக்கா நெவர்.. அது கூடப் பரவாயில்லை ஏதவோ தாலி கட்டிக் கூடவே வைச்சிக்கிற மாதிரிப் பேசுறே.."
"தாலி கட்டினாலும் கட்டாட்டிக்கும் அவ தான் அவ மட்டும் தான் என் பொண்டாட்டி.."
"சே.. எப்புடி இருந்தே ஜோசப்.. உன்னையே இந்த அளவுக்குக் கொண்டு வந்து விட்டிட்டாளே அவள்.."
"நீ ஒண்ணும் சொல்லத் தேவையில்லை எஸ்தர்.. வெளியால போ என்னையத் தனியா இருக்க விடு.."
"இயேசப்பா.. அந்தப் பொண்ணுல அப்புடி என்ன இருக்கோ ஜோசப் கலை எண்டு ரெண்டு பேருமே அவளுக்காக உருகிறாங்களே.. கடுப்புக் கடுப்பா வருகுது.. கண்டிப்பா இதை உடைக்காம விட மாட்டேன்.."
எனக் கோபத்தில் குதித்தபடி அங்கிருந்து போய் விட்டாள் எஸ்தர்.
எஸ்தர் கோபத்தில் போவதைப் பார்த்தபடி உள்ளே வந்த கலைமோகன், மைக்கேலின் கையில் இருந்து வடிந்து கொண்டிருந்த இரத்தத்தைப் பார்த்ததும், பதறிக் கொண்டு ஓடிப் போய் அவனது காயத்துக்கு, தன் கைக்குட்டையைக் கட்டி விட்டான்.
"என்ன ஜோசப் இது.. உன்னை நீயே காயப்படுத்திக் கொள்ளுறதை எப்ப தான் விடப் போறியோ.."
"என்னால முடியலை கலை.. அவ கூட சாதாரணமாக் கூட என்னால இருக்க முடியலை.. உள்ளுக்குள்ள ஒரு மாதிரி இருக்கு.."
"குற்றவுணர்வா இருக்குதெண்டு சொல்லவாறியா.."
"இல்லையா பின்னே.."
"இல்லை.."
"நீ என்னைச் சமாதானம் செய்யிறதுக்காகச் சொல்லாத.."
"இங்க பாரு ஜோசப்.. உனக்கு அவ கூட வாழ இஷ்டமோ இல்லையோ.."
"இதென்னடா கேள்வி.."
"பதில் சொல்லு.."
"அவ என்னோட உசுருடா.."
"நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை ஜோசப்.. பாரு உன்னோட உசுரு உலகம் எண்டது எல்லாம் எனக்கும் தெரியும்.. ஆனா அது இல்லை இப்போ விஷயம்.. அவளோட வாழ உனக்கு இஷ்டமா இல்லையா மனசைத் தொட்டு உண்மையைச் சொல்லு.."
"இஷ்டம் தான்.."
"பிறகு எதுக்கடா தேவையில்லாமல் போட்டுக் குழப்புறாய்.. பேசாமல் அவளைக் கல்யாணம் செஞ்சு குழந்தை குட்டியைப் பெத்துச் சந்தோஷமா வாழுற வழியைப் பாப்பியா.. அதை விட்டிட்டு என்னடா இது.. நீ செய்ற வேலையை நினைக்க எனக்கு சரியான கடுப்பாவும் கஷ்டமாவும் கிடக்குது.."
"கலை.. நானும் இதைப் பத்தி உனக்கு எத்தினையே தடவை சொல்லீட்டன்.. ஆனா நீயும் கூட இதைப் புரிஞ்சு கொள்ள மாட்டேனு நிக்கிறியேடா.. அது தான் எனக்கு வேதனையாக் கிடக்குது.."
"ஜோசப்.. நான் உன்னைப் புரிஞ்சுக்காமல் எல்லாம் இல்லையடா.. நல்லாப் புரிஞ்சு கொண்டதால மட்டும் தான்டா இவ்வளவு தூரம் பேசிக் கொண்டு நிக்கிறன்.. நீ எதை நினைச்சு இவ்வளவு தூரம் யோசிக்கிறாய் எண்டது எனக்கு விளங்குது.. ஆனா.."
"ஆனா என்னடா சொல்லு.."
"நான் சொன்னதைக் கேட்டுக் கோபப் பட்டுக் கத்தக் கூடாது நீ.."
"உன்கிட்டே போய் நான் கத்துவேனா.. சும்மா சொல்லுடா.."
"அதில்லை.. பாருவுக்கு பழைய நினைவுகள் எல்லாம் வந்த பிறகு என்ற விஷயம் தானே உனக்குப் பிரச்சினையா இருக்குது.."
"ம்ம்.."
"ஒரு வேளை அவளுக்குப் பழைய நினைவே வராமல் போனால்.."
"புரியலை.."
"புரியுற மாதிரியே சொல்லுறன்.. இப்போ அவளுக்குப் பழைய நினைவு வந்தால் தானே பிரச்சினை.. அவளுக்குப் பழைய நினைவே திரும்பி வராமல் போனால்.. உன்னைப் பத்தின விஷயங்கள் எல்லாமே முன் ஜென்மம் மாதிரி இல்லாமலே போயிடுமே.. பிறகு நீ அவளைக் கல்யாணம் பண்றதுல என்ன பிரச்சினை சொல்லு.."
"அவளுக்குப் பழைய நினைவு வந்தாலும் வராட்டிக்கும் எனக்கு நினைவுகள் இருக்குது தானேடா.. இங்க பிரச்சினையே என்னோட நினைவுகள் தானே.."
"ஜோசப்.. இருந்தாலும்.."
"வேண்டாம் கலை.. இந்த டாபிக்கை இதோட விட்டிரு.. நீ என்ன சொன்னாலும் என்னோட மனசுல எந்த மாற்றமும் வரப் போறதில்லை.. காலம் முழுக்க அவளை நினைச்சிட்டே வாழுறது தான் எனக்கு விதிக்கப் பட்டதுன்னா.. அப்புடியே வாழ நான் ரெடி தான்.. இப்போ அவளுக்கு உடம்பு எப்புடி இருக்குது.."
"நீ சொல்லுறதைக் கேட்க எனக்குப் புடிக்கலை தான்.. இருந்தாலும் உன்னோட உணர்வுகளுக்கு மதிப்புக் குடுத்து இப்ப போறன்.. அப்புறம் பாருவுக்கு காய்ச்சல் காயுது.. சிராய்ப்புக் காயங்களோட நோவால காய்ச்சல் காயுது எண்டு நினைக்கிறன்.. ஏதாவது குளிசை போடுடி எண்டால் மூக்கால அழுகிறாள் என்னத்தைச் சொல்ல.."
"நான் வரவா.."
"அவளைப் பாக்கவா.."
"ம்ம்.."
"சரி வா.. அதுக்கு முதல் இந்தக் காயத்துக்கு மருந்து போடு.. உங்கள் ரெண்டு பேரையும் பொத்திப் பாதுகாக்குறதுக்குள்ள எனக்கு மண்டை கழன்டிடும் போலயே.."
என்றபடி, மைக்கேலின் கைக்காயத்துக்கு தானே மருந்து போட்டுக் கட்டி விட்டு, அவனை அழைத்துக் கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டான் கலைமோகன்.
அங்கே போர்வைக்குள் தன்னை முழுவதுமாகப் புகுத்திக் கொண்டு படுத்திருந்தாள் பாரதி, அவளுக்கு உடம்பெல்லாம் அடித்துப் போட்டது போல நொந்து கொண்டிருந்தது.
கதவைத் திறந்து கொண்டு கலையும், மைக்கேலும் உள்ளே வர, கலை வந்து விட்டான் என்பதை உணர்ந்தவள், போர்வைக்குள் இருந்து வெளியே வராமலேயே அவனிடம் புலம்பத் தொடங்கினாள்.
"குட்டீ.. என்னடா இது கொடுமை.. அன்டைக்கு கீழ விழுந்த நேரம் ரெண்டே ரெண்டு இடத்துல மட்டும் தான்டா சிராய்ச்ச மாதிரிக் காயம் வந்தது.. ஆனா இப்ப பாரன் உடம்பு முழுக்க நோகுது.. எல்லாம் அந்தக் கறுப்புச்சட்டைக்காரனால வந்தது.. சும்மா விழுந்து கிடந்த என்னைய அப்புடியே வீட்டுக்குப் போடியம்மா எண்டு விட்டு இருக்கலாமடா அவன்.."
"எங்க பாஸையாடி சொல்லுறாய்.."
"ஓம் அந்த லூசைத் தான் சொல்லுறன்.."
"என்னடி அவரை லூசு என்டிட்டாய்.."
"அது பாஸு லூசு எண்டு சரியா வருதா அது தான் சொன்னான்.. அதோட அந்தாளு பாத்த வேலையால தானே அந்த நர்ஸம்மா போட்டுத் தேய் தேயிண்டு தேய்ச்சு.. நான் நொந்து நூடில்சாப் போயிட்டன்.."
"அவரு நல்லதுக்குத் தானேடி செஞ்சாரு.."
"நான் கேட்டேனா நல்லது செய்யுங்கோண்டு.. இப்ப பாரு சும்மா விட்டிருந்தாலாவது நல்லா நடமாடி இருப்பனோ என்னவோ.. காலை அசைக்கக் கூட முடியேல்லை.. எடுபட்ட பயல்.."
என்று கொண்டே, அவள் போர்வையை விலக்கி எழுந்து கொள்ள முயலவும், மைக்கேல் சட்டென்று வெளியே போய் விட்டான்.
கட்டிலில் வாகாக அமர்ந்து கொண்டு,
"எனக்கு ஏதாவது கொறிக்க வாங்கி வந்தியாடா.. நீயெல்லாம் ஒரு பிரெண்டாடா.. ஒரு பிள்ளை அடிபட்டுப் போய் எழும்ப மாட்டாமல் கிடக்குதே.. போதாக் குறைக்குக் காய்ச்சல் வேறை காய்ஞ்சு வாய் வேறை கைச்சுக் கொண்டு கிடக்குதே.. அதுக்கு இனிப்பா உறைப்பா எதையாவது வாங்கிக் கொண்டு போக வேணும் எண்டு உனக்குத் தோணிச்சுதா.. உனக்குத் தோணாது ஏன் தெரியுமோ.. ஏனெண்டால் உனக்குத் தானே அந்தக் கறுப்புச் சட்டைக்கு வால் பிடிக்கவும் குடை பிடிக்கவுமே நேரம் போதாதே.. பிறகு எப்புடி எனக்கு.."
என அவள் சொல்லிக் கொண்டு போகும் போதே, வெளியே நின்றிருந்த மைக்கேல் ஒரு பையை எட்டிக் கலைமோகனின் கையில் கொடுக்க, உடனே அதைப் பாரதியின் முன்னால் நீட்டினான் கலைமோகன்.
கலை கொடுத்த பையை வாங்கிப் பார்த்தவள், அதற்குள் இருந்த தின்பண்டங்களைப் பார்த்ததும், சந்தோஷ மிகுதியில்
"அது தானே பார்த்தன்.. என்ரை குட்டிக்கு என்னில அக்கறை இல்லாமல் இருக்குமோ எண்டு.. நல்ல பிள்ளை அவன்.. அவனுக்கு எப்புடி எனக்கு இதெல்லாம் வாங்க வேணும் எண்டது மறந்து போகும்.."
என்று கொண்டே, ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸை எடுத்து அப்படியே வாயினுள் அடைத்துக் கொண்டாள்.
வடிவேலு பாணியில் பாரதியை மேலும் கீழுமாகப் பார்த்தான்.
"அப்போ கொஞ்சம் முதல் நீயெல்லாம் ஒரு பிரெண்டாடா எண்டது.."
"நீ எனக்கு ஒரு பிரெண்டு இல்லை.. ஓராயிரம் பிரெண்டுக்குச் சமம் எண்டு சொல்ல வந்தனாக்கும்.."
"பிறகு கறுப்புச்சட்டைக்கு வாலு குடை.."
"அது சும்மா.."
என்று கொண்டே தலையைச் சொறிந்தாள் பாரதி.
அவளது செயலில் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, தலையில் அடித்தான் கலை.
"ஏன்டி.. தின்ட கையால தலையைச் சொறியிறியே.. பிறகு அதே கையாலயே தின்பியோ.. நொறுக்குத்தீனைக் கண்டாக் காணும் எருமைக்கு ஒண்டுமே நினைவுக்கு வராது என்ன செய்ய.."
"நீ வளத்தது அப்புடி.."
"ஓமடி.. ஏதாவது பிழை செய்தால் அதுக்கு மட்டும் தான் உடன நான் வளத்தனான் எண்டு வாயில வரும் உனக்கு.."
"இல்லையா பின்னே.."
என்று கொண்டு, தன் கையை அவனது சட்டையில் துடைத்து விட்டு, பற்களைக் காட்டினாள் பாரதி.
அவளை முறைத்துக் கொண்டு வெளியே வந்தவன்,
"ஜோசப்.. இப்போ போய் பாரு அந்த எருமைய.. உன்னைக் கண்டதுமே அது பரபரத்து அலறியடிச்சுக் கொண்டு அந்தப் பையை ஒளிக்குற அந்தக் காட்சியை நான் பாக்க வேணும்.."
என்று மைக்கேலைப் பார்த்துச் சொல்ல,
"யாரு அவ என்னைக் கண்டதும் பரபரத்து அலறியடிச்சு சாப்பிட்ட பையை ஒளிப்பானு நீ சொல்லுறாய்.. குட் ஜோக்.. அவளைப் பத்தி உனக்கு இன்னும் தான் தெரியலைடா.."
என்று கொண்டே மைக்கேல் உள்ளே போக, தானும் அவனைத் தொடர்ந்தான் கலை.
எதேச்சையாக வாசலைப் பார்த்த பாரதி, மைக்கேலை அங்கே பார்த்ததும், அவனை யோசனையாகப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு சிப்ஸாக எடுத்து வாயினுள் அடைக்கத் தொடங்கினாள்.
யோசனையுடனே,
"ஏன்டா குட்டி.."
எனப் பின்னால் வந்தவனை பாரதி அழைக்க,
"இப்ப என்னடி.."
என்று கொண்டே அவளை எட்டிப் பார்த்தான் கலை.
"இல்லை.. எனக்குக் கொஞ்ச நாளாவே அந்தக் கறுப்புச் சட்டைக்காரன் நடமாடித் திரியிற மாதிரியே கிடக்கடா.. உன்ரை கண்ணுக்கு அந்தாளு தெரியுதோணு பாரு.."
"லூசு.. அவரு தான் உன்னைப் பாக்க வந்திருக்கிறார்.."
"என்னது.."
என்று கொண்டே உறைப்பை எடுத்து சாப்பிட்ட கையால், தன்னை மறந்து கண்களைக் கசக்கி விட்டு, மைக்கேலைப் பார்த்தவள்,
"ஐயோ.. அம்மா.."
என்று கொண்டு குளியலறையை நோக்கி ஓடினாள்.
அவள் ஓடுவதை வேடிக்கை பார்த்தபடி மைக்கேல் நிற்க,
"நீ சொன்னது போல.. இவ கிறுக்கி தான் ஜோசப்.."
என்று கொண்டு, அவளுக்கு முகம் துடைக்கக் கொடுக்க ஒரு துவாலையை எடுத்துக் கொண்டு, அவள் பின்னாலேயே போனான் கலைமோகன்.

Attachments
Last edited: