அந்த வயதான மூதாட்டியின் பக்கத்தில், தோரணையாக நின்றிருந்த மைக்கேலையே விழி வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பாரதி.
தன்னுடைய மகள் வயிற்றுப் பேரனால் பாதிக்கப்பட்ட ஜீவன் தான் அந்த மூதாட்டி, முறுக்குக் கடை வைத்து தன்னுடைய வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தவருக்கு, வெறும் பதினாறே வயது நிரம்பிய பேரன் கொடுத்த தொல்லைகள் ஏராளம்.
அவர் சேர்த்து வைத்த பணத்தை, அவருக்குத் தெரியாமல் திருடத் தொடங்கி, அந்தப் பணத்தைக் கொண்டு சில கூடாத கூட்டாளிகளுடன் கூடி, பாக்கு வகைகளை வாங்கி உண்ணத் தொடங்கியிருந்தான், போதாக்குறைக்கு சிகரெட் வேறு புகைக்கத் தொடங்கியிருந்தான்.
சின்னப்பையன் இப்படிக் கெட்டவழி போகிறானே என நொந்து போன மூதாட்டி, அவனிடம் இது போல எல்லாம் செய்யக் கூடாது என எத்தனையோ அறிவுரைகளைச் சொல்ல, அவனோ அவரை உதாசீனம் செய்து விட்டு, வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் தூக்கியடிக்கவும் தொடங்கி விட்டிருந்தான்.
தாய் தந்தை இல்லாத பையன் என அவரும், அவன் என்ன செய்தாலும் பொறுமையாகவே அதைக் கடக்க முயன்று தவித்துக் கொண்டிருந்த வேளை தான், மூதாட்டி பற்றிய விஷயங்கள் மைக்கேலின் காதுக்கு வந்து சேர்ந்தது.
பிறகென்ன அவ்வளவு தான் கதை, இதோ
"இனிமேல் அம்மம்மாக்கு தொந்திரவு குடுக்க மாட்டன்.. அவா என்ன சொன்னாலும் கேட்பேன்.. அவாவை எதிர்த்து ஒரு வார்த்தை கதைக்க மாட்டன்.. பாக்கு பீடா எண்டு ஒண்டுமே வாயில போட மாட்டன்.. சிகரெட் கடைப் பக்கம் தலை வைச்சே படுக்க மாட்டன்.."
எனக் கைகள் நடுங்க எழுநூற்றியோராவது தடவை எழுதிக் கொண்டிருந்தான், மூதாட்டியின் பேரன்.
அவனுக்கான பிராயச்சித்தம் ஆயிரம் தடவை அவ்விதம் எழுதி விட்டு, அம்மம்மாவின் முன்னால் ஐநூறு தடவை தோப்புக்கரணம் போட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது தான்.
ஐந்நூறாவது தடவை எழுதும் போதே, அவனது மனசு முடிவு செய்து விட்டது, தான் இனிமேல் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை, மூதாட்டியோ மைக்கேலைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டிருந்தார்.
அவரிடம் தன்னுடைய தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்து, பேரன் ஏதாவது தவறாகச் செய்ய யோசித்தாலே ஒரு அழைப்பு மட்டும் கொடுங்கள் என அவரை அனுப்பி வைக்க, ஆயிரம் தடவை எழுதி, அவர் முன்னால் ஐநூறு தடவை தோப்புக்கரணம் போட்டவனோ, இனிமேல் அதுக்கு அவசியம் இருக்காது என்பது போல, குனிந்த தலை நிமிராமல் தன் அம்மம்மாவின் பின்னால் பௌவியமாகப் போக, அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பாரதியோ மெல்லிய சிரிப்போடு மைக்கேலை மெச்சுதல் பார்வை பார்த்தாள்.
அவளும் அங்கே தான் நிற்கிறாள் என்பதைக் கண்டு கொண்ட கலைமோகன் அவளிடம் விரைந்தான்.
"பாரு.. இங்க என்னடி செய்யிறாய்.."
"குட்டீ.."
"சொல்லு நான் தான்.."
"ஐ திங்.."
"யூ திங்.."
"நான் அவரைக் காதலிக்கிறன் எண்டு நினைக்கிறன்.."
"எவரை.."
"அது தான்டா கறுப்புச்சட்டைக்காரனை.."
"என்னடி சொல்லுறாய்.."
"ம்ம்.."
எனப் பாரதி, தலையைக் குனிய
"என்னடி பாரு.. வெட்கமெல்லாம் படுறாய்.. நமக்கு இது தேவையா சொல்லு.."
எனக் கலைமோகன் பதட்டத்தில் தலையைச் சொறிய
"நீ மட்டும் எஸ்தரைக் காதலிக்கலாம்.. நான் அந்தக் கறுப்புச்சட்டையைக் காதலிக்கக் கூடாதோ.."
என்று கொண்டு முறைத்தாள் பாரதி.
"ஐயையோ.. இதென்ன புதுப் பிரச்சினையா இருக்குதே.. இப்போ என்ன செய்யிறது.. இதை ஜோசப்பிட்டை சொல்லுறதோ விடுறதோ தெரியலியே.."
என மானசீகமாக மண்டையை உடைத்துக் கொண்ட கலை,
"பாரு.. நீ முதல்ல வீட்டை போ.. எதுவா இருந்தாலும் பிறகு பேசிக் கொள்ளலாம்.."
என்று கொண்டே, அவளை அந்த இடத்தில் இருந்து கிளப்ப முயல, அவளோ அசைவேனா என்பது போல நின்றிருந்தாள்.
"சும்மா சும்மா போ போனு கலைக்காதே கலை.. நான் ஒரு முடிவுக்கு வந்திட்டன்.."
"என்ன முடிவுடி அது.."
"எனக்குக் கறுப்புச் சட்டையை ரொம்ப ரொம்பப் பிடிக்குது.. எனக்கு முதல் எவளாவது முந்தீடுவாளோனு பயமாக் கிடக்குது அதனால என்ன ஆனாலும் பரவால்லை.. இண்டைக்கே இப்பவே கறுப்புச்சட்டையிட்டை என்ரை காதலைச் சொல்லலாம் எண்டு முடிவு பண்ணீட்டேன்.."
"என்னடி லூசு மாதிரி அலட்டுறாய்.."
"யாருடா லூசு.. நீ லூசு உன்ரை பாஸ் லூசு.."
"அந்த லூசைத் தான் லூசே.. நீ காதலிக்கிறன் எண்டு கொண்டு நிக்கிறாய் லூசே.."
"லூசு பிளஸ் லூசு.."
"போதும் நிப்பாட்டு.. என்னைய லூசாக்காமல் விட மாட்டாய் அப்புடித் தானே.."
"ஏன்டா எருமை.. நியாயமாப் பாத்தால் உன்ரை பாஸை எனக்குப் பிடிச்சதுக்கு நீ சந்தோஷம் தானே பட வேணும்.. நீ என்ன இப்புடி முழிச்சுக் கொண்டு நிற்கிறாய்.."
"அது அது.."
என்று கொண்டே, மைக்கேல் எங்கே நிற்கிறான் என்பது போலத் திரும்பிப் பார்த்த கலை
"ஏன் முழிக்கிறன் எண்டு சொன்னால் மட்டும் உனக்கு விளங்கி நினைவு வரவா போகுது.. நான் சொல்லுறதைக் கேட்டுக் கொண்டு.. அப்புடியே சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்த மாதிரி நிற்பாய் அவ்வளவு தானே.."
எனத் தன்னுள் முணுமுணுக்க
"என்னாச்சு.."
என்று கொண்டு, இருவருக்கும் முன்னால் வந்து நின்றான் பாரதியின் கறுப்புச்சட்டைக்காரன்.
அப்படி அவன் திடுதிப்பென்று முன்னால் வந்து நிற்பானென்று கலை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை, ஆனால் பாரதியோ எப்படி முதலில் மைக்கேலின் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாளோ, அப்படியே தான் இப்போதும் அவன் முகத்தை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கலையைப் பார்த்து விட்டு, இவள் பக்கம் திரும்பிய மைக்கேல், அவள் பார்வையில் கொஞ்சம் தடுமாறித் தான் போனான்.
அப்படியே கலையின் பக்கம் திரும்பி, என்னடா என்பது போல அவன் புருவங்களை உயர்த்த, கண்களால் ஜாடை காட்டி அவனை வேறு பக்கம் அழைத்துச் சென்றான் கலைமோகன்.
"என்ன கலை.. என்ன விஷயம்.."
"அது எப்புடி சொல்றது.."
"சும்மா சொல்லு என்னாச்சு.."
"பாரு.. உன்னைக் காதலிக்க வெளுக்கிட்டாள்.."
"லூசு மாதிரி உளராத.."
"சந்நிதியான் மேல சத்தியமா.. இப்ப அவ தான் சொன்னா.."
"என்னடா சொல்லுறாய்.."
"இப்ப என்ன செய்யப் போறாய்.."
"அது.."
"எவ்வளவு காலம் ஓடி ஒளியப் போறாய் ஜோசப்.."
"பாத்துக்கலாம் கலை.."
"இதையே சொல்லு நீ.."
என சலித்துக் கொண்ட கலைமோகன், அங்கிருந்து செல்லத் திரும்ப, வேகமாக அவனது கரத்தைப் பிடித்துக் கொண்டான் மைக்கேல்.
"இப்ப என்னடா.. என்ன சொல்லப் போறாய்.."
"பாவம்டா அவ.."
"அப்போ நீ.. நீ பாவம் இல்லையா மைக்கேல்.. சத்தியமா ரொம்பக் கஷ்டமா இருக்குடா.. எவ்வளவு காலத்துக்கு இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் சொல்லு.."
"விடு கலை.."
"விடு விடுனா.. எப்புடிடா விடுறது.. எனக்கு ரெண்டு பேருமே முக்கியம் தான்.. அவளை விடுடா அவளுக்கு நினைவு வந்த பிறகு தான் பிரச்சினையே.. ஆனா நீ நித்தமும் நரகத்தை அனுபவிக்கிறியேடா.. யாருக்காக இந்த மௌனப் போராட்டம் சொல்லு.."
"கலை.. அவ உனக்காக வெயிட் பண்ணுறாள்.. நீ போ.."
"போடா.. உன்னோட மனுஷன் பேசுவானா.."
எனக் கோபமாகிய கலை, வேகமாக அங்கிருந்து போய் விட்டான்.
கலை போன திக்கையே பார்த்தபடி, அசையாமல் நின்றிருந்த மைக்கேல், கண்களை மூடித் தன்னை நிதானப் படுத்திக் கொள்ளப் பெரும்பாடு பட்டுப் போனான்.
மைக்கேலிடம் இருந்து வந்த கலை, பாரதியின் கையைப் பிடித்துக் கொண்டு
"பாரு.. முதல்ல வீட்டை வா.."
என அவளை இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டு வீடு நோக்கி விரைந்தான்.
வீடு வந்து சேரும் வரை இருவருமே எதுவுமே பேசிக் கொள்ளவில்லை, ஆனால் இருவருக்குமே பேசிக் கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன.
"ஏன் குட்டி.. நான் அவரை விரும்புறது உனக்குப் பிடிக்கேலையோ.."
"உனக்குத் தான் அந்த மனுஷனைக் கண்ணுல காட்டவே பிடிக்காம இருந்ததே ஒரு காலத்துல.. பிறகென்ன இப்போ இப்புடி.."
"அது தான் நீயே சொல்லீட்டியே ஒரு காலத்துல எண்டு.. சில விஷயங்கள் மனம் சம்மந்தப் பட்டது குட்டி.. அவரைப் பத்தி நான் தப்பா புரிஞ்சு கொண்டது உண்மை தான்.. ஆனா இப்போ தான் அவரோட அருமை புரியுது.. மத்தவங்களுக்காகவே இப்புடி மினக்கெடுறாரே.. அப்போ அவரோட சொந்தமா நான் ஆகீட்டா எனக்காக எவ்வளவு தூரம் மினக்கெடுவார் சொல்லு.. அவர் கூட வாழ்ந்தால் நான் நிம்மதியா இருப்பன் எண்டு நம்புறன்.."
"பாரு.. ஒரு வேளை அவர் மனசுல வேறை யாராவது பொண்ணு இருந்தால்.."
"சரியான பதில் உனக்கே தெரியல்லை தானே குட்டி.. அதனால.."
"அதனால என்னடி செய்யப் போறாய்.."
"பதில் தெரிய வேணும் எண்டால் கேள்வி கேக்க வேணும் குட்டி.. அதைத் தான் நான் செய்யப் போறன்.."
"யாரிட்டைக் கேக்கப் போறாய்.."
"கறுப்புச்சட்டையிட்டை தான்.."
"லூசாடி நீ.."
"நீ லூசுனா நானும் லூசு தான்.. போடா வெண்ணெய்.."
என்றபடி உள்ளே ஓடிப் போன தன் தோழியையே அழாக் குறையாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் கலைமோகன்.
தன் அறையினுள் புகுந்து கொண்ட பாரதி, தன்னுடைய அலுமாரிக்குள் பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்தக் கறுப்பு நிற ஷேர்ட்டை எடுத்துக் கொண்டு வந்து, கண்ணாடி முன்பாக நின்று கொண்டாள்.
எப்பொழுதும் போல அந்தக் கறுப்பு நிறச் சட்டையின் வாசத்தை இழுத்து சுவாசித்தவளுக்கு, அந்த வாசம் மட்டும் முதல் நாள் இருந்தது போல அப்படியே தான் இருந்தது.
"எப்புடி இப்புடிப் பைத்தியம் ஆகின்னான் எண்டே தெரியலியே.. அந்தாளைப் பாக்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியலியே.. வெக்கங் கெட்டுப் போய் தேடித் தேடி அலையிறன்.. இந்தக் கருமத்தைத் தான் காதல் கத்தரிக்காய் எண்டு சொல்லுறானுவளோ.. இருந்தாலும் இது கூட ஒரு மாதிரி நல்லாத் தான் இருக்கு.. அதெல்லாம் சரி தான் எப்புடி அந்தாள் கிட்டே லவ்வை சொல்லப் போறன்.. அதுக்கு முதல் ஆளுக்கு ஆள் இருக்கானு கேக்கணுமே.. குட்டியிட்டை பெரிய தெனாவெட்டாக் கதைச்சிட்டு வந்திட்டன்.. எப்புடி அந்தச் சிடுமூஞ்சியைப் பாத்துக் கதைக்கப் போறனோ.. கதிர்காமக் கந்தா கொஞ்சம் கருணை காட்டக் கூடாதா.."
எனப் பாரதி தனியாகப் புலம்பித் தள்ள, தன்னை இப்போது எதற்காக இவள் அழைக்கிறாள் என்பது போலப் பார்த்த கந்தனுக்கு, தானும் காதலுக்காக பட்ட கஷ்டம் மறக்குமா என்ன?
வெளியே அமர்ந்திருந்த கலையோ தலையைப் பிய்க்காத குறையாக யோசித்து, அப்போது ஒரு முடிவுக்கு வந்தவனாகி, ஜோசப்புக்கு ஒரு குறுஞ்செய்தியைத் தட்டி விட்டான்.
அதாவது பாரதியின் கண்ணில் இப்போதைக்குப் பட்டுத் தொலைய வேண்டாம், பிறகு அவள் ரொம்பப் பெரிய தைரியசாலி ஆகிக் காதலை வந்து சொன்னால், சத்தியமாக உன்னால் மறுக்க முடியாது, பிறகு நீ தான் மண்டையை உடைக்க வேண்டி வரும், அதனால் முடிந்தவரை அவளது கண்ணில் படாதே, அப்படியே பட்டாலும் தனியாக மட்டும் மாட்டிக் கொள்ளாதே என இவன் அனுப்பியிருக்க, அவனோ இவனது செய்திக்கு முதலே நுவரெலியாவுக்கு புறப்பட்டு விட்டான்.
புதுவகை பூச்செடிகளைக் கொள்வனவு செய்வதற்காக, இரண்டு தினங்களில் பாரதி நுவரெலியாவுக்கு புறப்பட இருந்தது பாவம் இரண்டு ஆண்களுக்குமே அப்போது தெரியவில்லை.