“ஜெனி...”
ஊட்டி குளிருக்குக் கதகதப்பாய் நெஞ்சில் ஒன்றியிருந்தவளின் காதில் அழைத்தான் விக்ரம்
“ம்ம்ம்”
“உனக்கு கில்ட்டியா இல்லயே?”
“ரெண்டு பேரும் பேசி டிசைட் பண்ணித் தான வந்தோம். இதுல என்ன கில்ட்டி? நான் செம்மயா என்ஜாய் பண்ணேன். இட் வாஸ் ஃபென்டாஸ்டிக்”
மூன்று வருடங்களாகக் கற்றுக் கொண்ட தமிழ் மொழியைக் கலந்து அவள் தெளிவான மனதோடு பேசினாள்
“எனக்கு ஏனோ ஒரு மாதிரி இருக்கு”
“என்ன மாரி? நான் கரெக்ட்டா கோஆப்ரேட் பண்ணலயா?”
“அதில்லமா. கல்யாணம் வரைக்கும் பொறுமையா...”
“எப்போ பாரு மேரேஜ், மேரேஜ். வேற டாப்பிக்கே இல்லயா? என் மூட ஸ்பாயில் பண்றதயே வேலையா வச்சிருக்க, விக்ரம்” என எரிச்சலுற்றவளோ போர்வையை விலக்கிவிட்டு எழுந்தாள்
“உனக்குத் தெரியாததா, ஜெனி? அப்பாவும் அம்மாவும் லவ் பண்ணாங்க. ரெண்டு பேரும் ஒன்னு சேருறதுக்கு அம்மா வீட்ட விட்டு வந்து அவ்ளோ கஷ்டப்பட்டாங்க. என் அண்ணாவும் அண்ணியும் காதலிச்சாங்க. அதுலயும் அண்ணிக்குத் தான் கெட்டப் பேரு. இப்போ வரைக்கும் அண்ணி வீட்டுலப் பேசறது இல்ல. உனக்கு அது மாரி எதுவும் ஆயிடக் கூடாதுனு நினைக்கிறேன். நம்மள நம்பி வர பொண்ண ஒரு நிமிஷங்கூட தவிக்க விட்டுரக் கூடாதுன்னு அம்மா சொல்லுவாங்க. உன்ன யாரும் அவமானப்படுத்துனா என்னால தாங்க முடியாது”
“விக்ரம், ஆர் யூ ஸ்டுப்பிட்?”
“நான் உனக்காகப் பேசிட்டிருக்கேன், ஜெனி”
“நீ ஒன்னும் எனக்காக திங்க் பண்ணல; ஓவர்திங்கிங் பண்ணுற. இந்த ஃபோர் வால்ஸ்குள்ள நடக்குறது யாருக்குத் தெரியப் போகுது? ஃபர்ஸ்ட் டைம் உன்னோட இவ்ளோ டிஸ்டன்ஸ் வந்துருக்கேன். டாப் ஆஃப் த மௌன்ட்டய்ன்; செப்பரேட் ரூம்; ஒன்லி யூ அன்ட் மீ. ஒன்னோட கேர்ள்ஃபிரெண்டு, இவ்ளோ செக்ஸியா, டிரெஸ் இல்லாம நிக்குறனே. இவ்ளோ நேரத்துக்கு என்னென்னலாம் தோணிருக்கணும்? என்னலாம் பண்ணிருக்கணும்? ஹௌ மெனி ரௌண்ட்ஸ் போயிருக்கணும்? சிங்கிள் டிரையலுக்கே அம்மா சொன்னுச்சு, ஆட்டுக்குட்டி சொன்னுச்சுன்னு. இங்க என்ன சென்டிமென்ட் சீனா ஓட்டுறாங்க? இந்த மொமண்ட்ட என்ஜாய் பண்ணுவானா... அத விட்டு ஓல்டு மேன் மாதிரி ரம்பம் போட்டு அறுக்குற”
அவள் பேசியதில் மனம் மாறியவன் போர்வையோடு சென்று அவளை ஆடை போல் உடுத்திக் கொண்டான்
“உனக்கு, வாய் ரொம்ப அதிகமாய்டுச்சுடி. பொம்பள புள்ளயாச்சே, வாழ்க்கை போய்டுமேன்னு கவலப்பட்டா... உனக்கு பயமே இல்லயா? நான் உன்னை ஏமாத்திட்டன்னா என்ன பண்ணுவ?”
“நீ... என்னை ஏமாத்திருவ?”
“ஒருவேள... ஏமாத்திட்டுப் போய்ட்டேன்னா?”
“இப்போ நாம சேந்து இருக்கோம்ல; இதே ஸ்பாட்டுக்கு வந்து, டாப்லருந்து கீழ ஜம்ப் பண்ணி...”
“ஜெனி, விளையாட்டுக்குக் கூட அப்டிச் சொல்லாத” என்று கூறி அவளை உயிரோடு உயிராகத் தனக்குள் ஒடுக்கிக் கொண்டான் விக்ரம்
கால ஓட்டத்தில் அவள் சொன்ன வார்த்தைகளும் இந்த உறவும் கானல் நீராய்ப் போயின. இப்போது புது பந்தத்தைத் தேடி முன்பின் அறியாதார் வீட்டு மாடியில் வந்து நிற்கிறான் நமது நாயகன்.
பெண்கள் ஒன்றாகப் பேசத் தொடங்கிய போதே, மோகன் விக்ரமைத் தள்ளிக் கொண்டு ஓரமாய்ச் சென்றிருந்தான்
“ஊரு பாலக்காடு கிட்டத்துலயா? என்ஜினியர்னு சொன்னாங்க”
“ஆமா, சி. எஸ். இ.”
“நான் மெக்கானிக்கல். அண்ணா யுனிவர்சிட்டி, மெயின் கேம்பஸ்”
“ஓ...”
“நீங்க?”
“கோவைல தான் படிச்சேன்”
“ப்ரியாவ எப்படித் தெரியும்?”
“மேட்ரிமோனில... நான் பாக்கல. என் பிரதர் பாத்துச் சொன்னாரு”
“எல்லாம் விசாரிச்சுட்டு வந்தீங்களா?”
“இல்ல. ஆன்லைன்ல டீடெய்ல்ஸ் பாத்தோம். பிடிச்சிருந்தது. வந்துட்டோம்”
“ரொம்ப நாளா பொண்ணு தேடி அமையலயா?”
“நோ, நோ. பொண்ணு பாக்க வர்றது இதான் ஃபர்ஸ்ட் டைமு”
“வாட்? திஸ் இஸ் கிரேசி. இது எங்க மாமனார் பாக்குற பதினாறாவது இடம். பிரியாவ அவ்ளோ ஈசியா சேட்டிஸ்ஃபை பண்ண முடியாது. உங்களயும் ரிஜெக்ட் பண்ண வாய்ப்புருக்கு. எதிர்பார்ப்பக் குறைச்சுக்கறது நல்லது”
“செட் ஆயிடும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”
“வீட்டு மருமகன் நானே சொல்றேன்னா, கொஞ்சம்... கவனமா இருங்க. இத்தன பசங்கள வேணாங்குறான்னா, சம்திங் இஸ் ராங். ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது எத்தனை பசங்க கூட சுத்திருக்கான்னு ஊருக்குள்ள கேட்டுப் பாருங்க. அப்றம் உங்களுக்கே புரியும்”
“உங்க பேரு என்னங்க?”
“அது எதுக்... மைசெல்ஃப் மோகன்”
“மிஸ்டர் மோகன், எனக்கு எதா இருந்தாலும் டைரெக்டா பேசித் தான் பழக்கம். நீங்க எதோ சொல்ல வரீங்க. அதச் சுத்தி வளைக்காம நேராவே சொல்லிடுங்க. ஐ கேன் நாட் அன்டர்ஸ்டான்ட், யூ நோ...”
“அது வந்துங்...”
சரியாக அந்நேரம் பார்த்து “விக்ரம், போலாமாப்பா?” என அழைத்தார் கிரிஜா
“நீங்க போங்கம்மா. இதோ வந்துட்றேன்” என்றான் அவன் பதிலுக்கு
கிரிஜா கீழிறங்கத் தொடங்க அவரைத் தாங்கிப் பிடித்தவாறு சுப்ரதா நடந்தாள். சூழ்நிலை வசத்தால் பத்மாவும் உடன் போக வேண்டியிருந்தது. பிரக்ஷித்தை அழைத்துக் கொண்டு போகும் முன் அவள் திரும்பி விக்ரமைக் காண, அவன் மோகனைப் பார்த்திருந்தான். தன் மாமனால் என்ன வில்லங்கம் நேரப் போகிறதோ என்றெண்ணிக் கவலை கொண்ட உள்ளத்தோடு சென்றாள். அவள் நினைத்ததற்கு ஏற்றார் போல் மோகன் கலகமூட்டும் வேலையைத் தீவிரமாகச் செய்யலானான்.
“அது வந்து விக்ரம்... பொண்ணு கேரக்டர் சரியில்ல”
“ம்ஹும். அப்படியா விஷயம்?”
அத்தருணத்தில் தான் பத்மா ஏன் முன்கூட்டியே எச்சரித்தாள் என்பதை விக்ரம் புரிந்துகொள்ளத் துவங்கினான்
“பெரியவங்க சொல்றத மதிக்க மாட்டா. திமிரு ஜாஸ்தி. எதித்து எதித்துப் பேசுவான்னா பாத்துக்கங்களேன். அடக்கமா வீட்டுல உக்காருன்னா கேக்க மாட்டா”
“ஸோ சேட்”
“நாலு வார்த்த ஜாலியா பேசுனா சிரிக்கக் கூட மாட்டா. அவளுக்குத் தான் எல்லாம் தெரியுங்குற மாரி... தலக்கணம். மரியாதை தெரியாதவ. அவங்க அப்பா அம்மாட்ட சண்டைக்குப் போவா. எனக்கே மாமாங்குற மரியாதயக் கொடுத்ததில்லன்னா பாத்துக்கிடுங்களேன். கல்யாணம் ஆன பின்னாடி புருஷன்னு கூட பாக்க மாட்டா. கோவம் வந்தா கண்ணு மண்ணு தெரியாம வரும். வேற...”
“ஒன்னும் அவசரமில்ல. யோசிச்சுச் சொல்லுங்க”
“இன்னும் சொல்லப் போனா, கட்டுனவனயே தொடக் கூடாதுன்னு ஆர்டர் போட்டாலும் போடுவா. சினிமால வரப் பொம்பளைங்க மாரி அக்ரிமென்ட் போட்ற கேசு. பெரிய ஃபெமினிஸ்ட்டுன்னு மனசுல நெனப்பு. அதனாலத் தான் சொல்றேன். லைஃப் மேட்டரு; பொறுமையா முடிவெடுங்க. இன்னைக்கே நிச்சயம் பண்றதா கீழப் பேசிக்குறாங்க. அவசரப்பட்டு லைஃப தொலச்சிடாதீங்க”
“ரொம்ப கஷ்டந்தான் போல. நல்ல வேல முன்னவே என்கிட்ட இதெல்லாம் சொன்னீங்க”
“பரவால்ல, தேங்க்ஸ்லாம் வேணாம். நாளப் பின்ன, அன்னைக்கே ஒரு வார்த்த சொல்லிருக்கக் கூடாதான்னு என்னைப் பாத்து நீங்க கேட்டுரக் கூடாதுல்ல; அதான் இப்பவே சொல்லிட்டேன். இப்பத்தான் என் மனசுல இருந்த பாரமே கொறஞ்ச மாதிரி இருக்கு”
“நைஸ், நைஸ். போலாமா?”
“ஓ ஷ்யூர்”
நடக்க இருந்த நல்ல காரியத்தைக் கெடுத்துவிட்ட நிறைவோடு மோகன் படியிறங்கினான். அவன் முதுகினைத் துளையிடுவதைப் போல பார்த்த விக்ரம் ஒரு பெருமூச்சோடு கீழே சென்றான். வரவேற்பறையில் அமர்ந்திருந்த உறவினர்கள் திண்பண்டங்களைக் கொறித்துவிட்டுக் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தனர். விக்ரம் அங்கு வரவும் அடுத்தக் கட்டப் பேச்சு வார்த்தைக்குத் தயாராயினர்.
“எங்க வீட்டுப் பொண்ணு நீங்க கேட்டதுக்குத் தலையாட்டிட்டா. இப்போ, நாங்க கேக்குறோம். மாப்பிள்ளைக்குப் பொண்ணப் பிடிச்சுருக்கா? பிடிச்சுருக்குன்னு சொன்னா இப்பவே நிச்சயம் பண்ணி, ரெண்டு வாரத்துலக் கல்யாணத்த நடத்திரலாம். நேரத்தக் கடத்த வேணாம்” என்று பெண் வீட்டார் வினவிட, விக்ரம் தலைகுனிந்து ஏதோ யோசனையில் மூழ்கி இருந்தான்
“என்ன தங்கம்? பேச்சயே காணோம்” என்ற மங்கையின் குரலுக்கு நிமிர்ந்து அமர்ந்தவன் நேராக பத்மாவின் கண்களைப் பார்த்தான்
பின்பு, ஒற்றை வார்த்தையில் “பிடிச்சுருக்கு” என்றான்
அந்த பளிச் பதில் மற்றவர்களின் முகங்களில் பிரகாசத்தை ஏற்படுத்த, மோகனின் கன்னத்தில் மட்டும் அறையாய்ப் போய் விழுந்தது
இரு நாட்கள் கழித்து...
“ஹாய். ஹௌ ஆர் யூ?”
“ஃபைன். கல்யாண வேலைலாம் அங்க எப்படிப் போய்ட்டு இருக்கு, ப்ரியா?”
“நல்லா போது. விக்ரம் நம்பர் சென்ட் பண்றீங்களா?”
“அன்னைக்கே உங்க நம்பர அவன்ட்டக் கொடுத்தனே. அவன் இதுவரைக்கும் மெசெஜ், கால் எதுவும் பண்ணலயா?”
“இல்லயே. எங்கேஜ்மென்ட் அப்போ கடைசியா பேசுனது”
“அவனை என்ன பண்ணலாம் சொல்லுங்க?”
“நோ ப்ராப்ளம். நான் தான் ஒன்னு கேக்கணும்”
“அவனயே கால் பண்ணச் சொல்றேன். நீங்க எதும் தப்பா எடுத்துக்காதீங்க” என்று செய்தி அனுப்பிய பிரபாகரன் ஆஃப்லைன் சென்றுவிட்டான்
சற்று நேரத்தில் அழைப்பு விடுத்த விக்ரம் ஆழ்ந்த குரலில் பேசினான்
“ஹலோ, ப்ரியா... பேசணும்னு சொன்னியா?”
“ஏன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு? தொண்டை சரியில்லயா?”
“நைட் ஷிஃப்ட் போய்ட்டு வந்து தூங்கிட்டு இருந்தேன்”
“அச்சோ, ஸாரி. என்னால உங்க தூக்கம் கெட்டுப் போச்சு”
“இருக்கட்டும்”
“கொஞ்சம் பேசணும். டைம் இருக்கப்ப நேர்ல வர முடியுமா?”
“நேர்லயா? ம்ம்ம்... இப்போ எங்க இருக்க?”
“வீட்டுல இருக்கேன்”
“அவ்ளோ தூரம் வர்றது கஷ்டம். இன்னும் ஃபோர் டேஸ் கழிச்சு லீவ்க்கு அப்ளை பண்ணிருக்கேன். அதுவர ஒழுங்கா வொர்க் பண்ணா தான், கேட்ட லீவ தருவானுங்க. எதா இருந்தாலும் ஃபோன்லயே சொல்லு”
“அப்ப, தூங்கி எழுஞ்சதும் கால் பண்றீங்களா?”
“தூக்கம்லாம் போச்சு. டெல் மீ”
“அன்னைக்கு மாமா உங்கள்ட்ட என்ன பேசுனாரு? உங்க முகமே மாறிப் போச்சு”
“…”
“ஹலோ”
“ஆன்”
“சொல்ல முடியலயா? இல்ல, சொல்லக் கூடாதது எதயும் சொல்லி வச்சாரா?”
“எதுக்கு? அவரு பேசுனதக் கேட்டா உன் மனசு கஷ்டப்படும்”
“எனக்குத் தெரிஞ்சே ஆகணுமே”
“வேணாமே”
“அவரு என்னைப் பத்தி என்னலாம் தப்பா பேசுனாருன்னு தெரிஞ்சா தான, அதுக்கு ஏத்த கிளாரிஃபிகேஷன் நான் குடுக்க முடியும்”
“எனக்கு நியாபகம் இல்லயே”
“என்னது?”
“உன்கிட்ட எக்ஸ்ப்ளனேஷன் வேணும்னு நான் கேட்டதா எதுவும் நினவில்ல”
“நீங்க கேக்கலன்னாலும் சொல்றது என் கடமை இல்லயா? நம்ம ரிலேஷின்ஷிப் எந்தவித டவுட்டும் இல்லாம ஹெல்த்தியா இருக்கணும்னு ஆசப்படுறேன்”
“எனக்குச் சந்தேகம் இருந்தா நானே கேப்பேன். டோன்ட் ஃபோர்ஸ் மீ”
“ஓகே, ஓகே, ஃபைன்...”
“அவ்ளோ தான. கட் பண்ணிக்கவா?”
“வெய்ட். உங்க வீட்டுல வரதட்சணையப் பத்திப் பேசுனாங்களா?”
“என் காதுபட எதுவும் பேசல. ஏன்?”
“எனக்குன்னு நகை சேத்தி வச்சுருக்காங்க. கட்டில், மெத்த, பீரோலாம் எடுத்துத் தந்துருவாங்க. அதப் பத்திப் பிரச்சனை இல்ல. நான் தான் யூஸ் பண்ணப் போறேன். இந்த பைக், காருன்னு இப்போத்திக்கு எதுவும் கேக்காதீங்க. கல்யாணம், அது போக ரிசப்ஷன் செலவுன்னு எல்லாத்தயும் ஒரே நேரத்துலப் பாக்கணும்ல. இதுல வண்டியும் எடுக்கணும்னா... எங்க அக்கா கல்யாணத்தப்போ, மாமா அப்டித் தான் கடைசி நேரத்துல கார் கேட்டு, எக்கச்சக்கக் கடனாகிப் போச்சு. ஸோ...”
“சரி, பிரபா கிட்டச் சொல்லிட்றேன்”
“அத்தைட்ட நீங்களே நேரா பேசிடுங்களேன். அதான் சரியா இருக்கும்”
“இது வேறயா?”
அவன் சலித்துக் கொள்ள பத்மப்பிரியா வருத்தமடையத் தொடங்கினாள்
என்ன இது, என்ன இது!