விக்ரம் சலிப்புற்றவனைப் போல பேச, பத்மா தன்னையே நொந்து கொண்டாள்
“பேசக் கூடாதது எதயும் பேசிட்டனா? ரொம்ப ரூல்ஸ் போடுறனோ; எரிச்சலா இருக்கா?”
“அதுக்கில்ல... என் அம்மாவ நீ அத்தைன்னு சொன்னதும் எதோ டிஃபரன்ட்டா ஃபீல் ஆனுச்சு”
“மாமியார அத்தைன்னு தான கூப்டணும். உங்க ஊர்ல அப்படி இல்லயோ. வேற எப்படிக் கூப்ட்றது?”
“அத்தைன்னே கூப்டு. இல்ல, அம்மான்னு கூட கூப்டு. உன் விருப்பம்”
“விக்ரம், ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?”
“மாட்டேன்”
“டிரிங்க்ஸ் பண்ணுவேன்னு சொன்னீங்கள்ல...”
“ஆமா...”
“குடிச்சப்றம் நீங்களா வீட்டுக்கு வந்துருவீங்களா? எங்கப் போனீங்கனு தேடிட்டு நான் அலையணுமா?”
“இப்டி ஒரு டவுட்டா உனக்கு? குடிச்சா, வீட்டுலத் தான் குடிப்பேன். வேற எங்கயும் போக மாட்டேன். என்னைத் தேடி கஷ்டப்படலாம் வேணாம்”
“அதுவரைக்கும் சந்தோஷந்தான்... நீங்க தூங்கத்த கன்டினியூ பண்ணுங்க. நான் வச்சுட்ரேன்”
“பத்மா, ஒன் மினிட்”
“…”
“நீ சொன்னதும் ஒரு விதத்துல உண்மை தான்”
“எதப் பத்திப் பேசுறீங்க?”
“மோகனப் பத்தி வார்ன் பண்ணல்ல. அவன் இவ்ளோ கேடுகெட்டவனா இருப்பான்னு நான் நினைக்கல. நானும் எத்தனையோ பேரப் பாத்துருக்கேன். அவன் அளவுக்குப் பாக்கல. ரொம்பவே டாக்ஸிக்கான பர்சனா இருக்கான். உன் அக்காவ நினைச்சா எனக்குப் பாவமா இருக்கு. எப்படி அவனோட வாழ்க்கய ஓட்டுறாங்க? உன் மேல அவன் எந்தளவு வன்மம் வச்சுருக்கான் தெரியுமா? நீ அப்படி அவனுக்கு என்ன பண்ணியோ தெர்ல”
“நான் எதுவுமே பண்ணல. இதுவரைக்கும் அவரோட மோட்டிவ் என்னனு சத்தியமா தெரில. எனக்கு ஆப்போசிட்டா எதாச்சும் பண்ணிட்டே இருக்கணும்; என் நிம்மதியக் கெடுக்கணும் அவருக்கு. மொத்தத்துல, நான் நல்லாருக்கக் கூடாது; சந்தோஷமா மட்டும் இருந்துரவே கூடாது. டாட்”
“கல்யாணத்துக்கு அப்றமும் இதே மாரி வந்து பேசிட்டுருக்கட்டும். சப்பு சப்புனு அறையப் போறேன்”
“வீணா கோவப்படாதீங்க. அவருக்கு அப்பப்போ அப்டித்தான் கிறுக்கு முத்திரும். அவர்ட்ட விலகி நடந்துக்குறதே நல்லது”
“அவன் என்னைப் பாத்துக் கேக்குறான்; பொண்ணப் பத்தி நல்லா விசாரிச்சுட்டு வந்தீங்களான்னு... மொதல்ல, அவன் எப்படின்னு நீங்க நாலு பேர்ட்டக் கேட்டுத் தெரிஞ்சுருக்கணும். என்னைப் பத்தி மட்டும் உங்க அப்பா ஊர் முழுக்க விசாரிச்சு வச்சுருக்காரு? அவனோட பர்சனாலிட்டி என்ன ஏதுன்னு கேக்க நேரமில்லாமப் போச்சா?”
“உங்களப் பத்தியா? எப்போ? என்னனு?”
“நைன்ட்டி பர்சென்ட் நாங்க என்ன ஆளுங்க, எங்க பேக்ரவுன்ட் என்னன்னு விசாரிச்சுட்டு, டென் பர்சென்ட் நான் நல்லவனா கெட்டவனான்னு கேட்டுப் பாத்துருக்காரு. எங்கேஜ்மென்ட் நடக்குறதுக்கு முன்னாடியே இதச் செஞ்சுருக்காரு. என்னோட ஸ்கூல்ல ஒன்னா படிச்சவன்லாம் கால் பண்ணிக் கேக்குறான்; என்னடா, உனக்குப் பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டாங்களான்னு”
“ஆனா, அப்பா நிச்சயம் முடியுற வரை வீட்டுல என் கண்ணு முன்னாடியே தான இருந்தாரு. கேரளா வரைக்கும் போயிருக்க வாய்ப்பே இல்ல”
“ஐ திங்க், இவரு நேர்ல வரல போல. யாரோ தெரிஞ்சவங்க மூலமா எங்க ஊர்ல மினி இன்வெஸ்டிகேஷன் நடத்திருக்காரு”
“ஓ காட். எம்பாரஸ்ஸிங்கா இருக்கு. என் அப்பா இப்படிப் பண்ணலைனா தான் ஆச்சர்யம். என்னடா, நீங்க வந்து கேட்டதும் ஒத்துக்கிட்டாரேன்னு நானும் சந்தேகப்பட்டேன். ரெண்டே நாள்ல வேலையப் பாத்துட்டாரு. அந்தக் கடைசி பத்து பர்சென்ட் மட்டும் எனக்காக விசாரிச்சுருப்பாரு போல”
“யுவர் ஃபேமிலி இஸ் டோட்டலி டிஃபரென்ட். உங்க வீட்டுக்கு ஏத்த மாதிரி நான் நெறயவே மாறணும் போலருக்கு”
“நீங்க எப்பவும் போல இருங்க. அவங்களா வந்து உங்களோட குடும்பம் நடத்தப் போறாங்க. உங்க அப்பாம்மா எப்படி? ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா?”
“ஒன்னு ரெண்டு விஷயத்துல சீரியஸா இருப்பாங்க. மத்தபடி சில் தான். கொஞ்ச நாள் கூட இருந்தா ஈசியா பழகிப்ப”
“ம்ம்ம்ம், பழகிப் பாத்துட வேண்டியது தான்”
“பேசிட்டே இருந்தா நைட்டுக் கண்ணு முழிக்க முடியாது. நான் தூங்கட்டா? வேற எதும் பேசணுமா?”
“நாம எப்போ வேணாலும் பேசிக்கலாம். போய்த் தூங்குங்க. பை”
அவள் அழைப்பைத் துண்டித்த பிறகு வீட்டிற்குள் செல்லத் திரும்பினாள். வாசலில் நின்றிருந்த மங்கை சந்தேகப்பட்டு அவளிடம் விசாரணையைத் தொடங்கினார்.
“மாப்பிள்ள வீட்டுல உன் ஃபோன் நம்பரக் கேட்டுருக்காங்க; அப்பாவும் அனுப்பி வச்சிட்டாராம். அந்தப் பையனேதும் ஃபோன் பண்ணாப்புடியா?”
“இல்லயே”
“இம்புட்டு நேரம் யார்கிட்டப் பேசிட்டு இருந்த, கண்ணு?”
“ஆஃபிஸ்ல கூட வேலை பாக்குறவங்கமா. ஒரு வாரம் முன்னாடியே லீவ் போட வச்சல்ல. என் வேலையலாம் இவங்க தான் சேத்துப் பாத்தாகணும். அதான் சந்தேகத்தலாம் தீத்து வச்சுட்டு இருந்தேன்”
“கொஞ்ச நாளைக்கு இதெல்லாம் தள்ளி வையு. கல்யாணம் முடிஞ்சப்பறம் பாத்துக்கலாம். முகூர்த்தப் புடவை எடுக்கப் போணும் நியாபகம் இருக்குங்களா? உன் மாமியாவும் வருவாங்க. நல்ல டிரெஸ்ஸா போட்டுட்டுக் கிளம்பு”
“சரி”
பொய் கூறிப் பிழைத்துக் கொண்ட நிம்மதியோடு அவள் அங்கிருந்து அகல முயன்றாள்
“அம்முணி...”
“இன்னும் என்னங்மா?”
“மாப்பிள்ள பையன் ஃபோன் போட்டாலும் நாலு வார்த்த பேசிட்டு வச்சுருங். கல்யாணத்துக்கு அப்றம் மிச்சத்தப் பேசிக்கலாம். காலம் கெட்டுக் கிடக்கு. பாத்து இருங்க”
“புரிஞ்சுது” என்ற ப்ரியா விரைந்து தனது அறைக்கு ஓடிவிட்டாள்
‘என்ன மரியாதலாம் பலமா இருக்கு. என்ற அம்மாவுக்கு இப்படிலாம் கூட பேச வருமா!’ என அவளின் நெஞ்சம் வியப்புற்றது
சற்று முன் விக்ரமிடம் பேசியவற்றை மீளோட்டம் செய்து பார்த்தவளுக்கு சில எண்ணங்கள் உதித்தன. மோகன் அவனிடம் இந்த விஷயத்தைப் பற்றியும் சொல்லியிருக்கக் கூடும் என நினைத்தாள். அதன்படி, இவள் முதுமறிவியல் படித்துக் கொண்டிருந்த போது அதே துறையில் மற்றொரு குறிப்பிடத்தக்க மாணவனும் பயின்றான்.
“ஆது... டே, ஆது...”
“என்னடி?”
“யார்ட்டக் கடலை வறுத்துட்டுருக்க?”
“என் ஆளு தான். ஏற்கனவே ஃபைட்டு. இதுல நான் ஒரு செகன்ட் லேட்டா ரிப்ளை பண்ணாலும் உயிர எடுத்துடுவா. டோன்ட் டிஸ்டர்ப்”
“ஆது, கண்ணா... என்ன ஃபைட்டு உங்களுக்குள்ள?”
“உனக்கு ஒன்னுமே தெரியாது, இல்ல...”
“எனக்கு எப்டிடா தெரியும்?”
“நாம ரெண்டு பேரும் சேந்து எடுத்த பிக்க நீ வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்ல வைக்கல?”
“ஆமா, வச்சேன். அதுக்... அதுக்குப் போய் உன் ஆளு கோச்சுட்டாளா?”
“ஏதோ ஒரு நாள் சார்ஜ் இல்லைனு உன் மொபைல்லருந்து அவளுக்கு கால் பண்ணேன். அதுக்குன்னு நீ அவ நம்பர சேவ் பண்ணி வச்சுப்பியா? சரி, சேவ் தான் பண்ண. உங்க அப்பா நம்பர ஹைட் பண்ண மாரி, இவளயும் எக்ஸப்ஷன்ல போட்டு வைக்க வேண்டியது தான. அவளே ஒரு சந்தேகப் பேர்வழி”
“அந்த அளவுக்குலாம் நான் யோசிக்கல. அவ தப்பா நினைச்சா நான் என்ன பண்றது? ஒரு ஸ்டேட்டஸ் போட அவளைப் பத்திலாம் கணக்குல எடுக்கணுமாக்கும். எனக்கென்ன பயமா?”
“அதான் பயம் இல்லல்ல. உன்ற அப்பார்ட்டச் சொல்றது; அப்பா, அப்பா, என் கோர்ஸ்லயே ஒரு பையன் படிக்குறான்பா; என் உயிர் நண்பன்; அவன் பேரு ஆதர்ஷ்னு இன்ட்ரொடியூஸ் பண்றது தான”
“என்னை காலேஜ விட்டே நிறுத்திருவாங்க, பரவால்லயா. உன் சந்தேகம் பிடிச்ச ஜி. எஃப்பும் என் அப்பாவும் ஒன்னா? போடா, டேய்”
“அவ டார்ச்சர்லருந்து தப்பிக்க இன்ஸ்டான்டா ஒரு ஐடியா சொல்லு, பாக்கலாம்”
“சிங்கிள் ஃபோட்டோவுக்குப் போய் இவ்ளோ சந்தேகமா? அவக் கூடலாம் காலம் புல்லா எப்புடி வாழப் போற. பேசாம பிரேக்அப் பண்ணிடு. எல்லா ப்ராப்ளமும் க்ளோஸ்”
“அவள ப்ரேக்அப் பண்ணிட்டு, இன்னொரு ஆளுக்கு நான் எங்கப் போறது? லவ்வ காப்பாத்த வழி சொல்லுடின்னா, முடிச்சு விடவா வழி சொல்லுற. விசம், விசம்...”
“நீ அவளயே கட்டிட்டு அழுதுக்க. இப்போ நான் சொல்றதக் கேளு. எதோ ஃபங்க்ஷன் வருதாம். நம்மள டான்ஸ் ஆடச் சொல்லி ஜூனியர்ஸ் கெஞ்சுறாங்க”
“ஹோல் எம். எஸ்சி. ல வேற ஆளே கிடைக்கலயாமா?”
“அதான் உண்மை. மத்த பி. ஜி. ஸ்டூடன்ட்ஸ் டான்ஸ்னா என்னனே தெரியாதுங்குறாங்க”
“அதுக்கு நாம தான் கிடைச்சோமா? இது தெரிஞ்சா எனக்கு முன்னாடி அவளே பிரேக்அப் பண்ணிட்டுப் போய்டுவா”
“அப்போ, நாம கண்டிப்பா டான்ஸ் ஆடுறோம்”
“என் லவ் புட்டுக்கிட்டா உனக்கு இனிக்குமா?”
“பி. ஜி. யோட மானம் போகப் போதுன்னா மட்டும் உனக்கு இனிக்குதா? சீனியர்ஸ்ன்னு தான் பேரு; பர்ஃபாமன்ஸ் பண்ண துப்பில்லனு ஜூனியர் பசங்க கேவலமா பேச மாட்டாங்க”
“பேசிட்டுப் போறாங்க. எனக்கென்ன வந்தது?”
“அப்டியா? ரொம்ப மகிழ்ச்சி... பாத்துட்டே இரு; உன் லவ்வு தானா புட்டுக்கப் போவுது”
“அட குரங்கே”
இவ்வாறு அறவே நாட்டம் இல்லாமல் இருந்த ஆதர்ஷ், கலை நிகழ்ச்சி நடைபெற்ற அன்று திடீரென ஆட ஒப்புக்கொண்டான்
“ப்ரியா, நாம ஒரு டான்ஸ போடுவோமா?”
“எப்புட்ரா, ப்ராக்டிஸ் எதும் இல்லாம?”
“அதெல்லாம் ஃபுளோலத் தானா வரும். நீ வா...”
“சாங்க்ஸ்?”
“குத்து சாங்கா போடச் சொல்லிக்கலாம். அப்டியே மொத்த எனர்ஜியயும் காட்டித் தெறிக்க விட்றோம்”
“எனக்குச் சந்தேகமா இருக்கே. இப்டி நீ திடுதிப்புன்னு மனசு மாறுறதுக்கு என்ன காரணம்?”
“அதுவா... அவ என்னைக் கழட்டி விட்டுட்டா, மாடு. ரெண்டு நாள் ஆச்சு. மனசே சரியில்ல”
“அச்சோ...”
“அவ போயிட்டுப் போறா. நாம டான்ஸ் ஆடுறோம்; வீடியோ எடுத்து ஸ்டேட்டஸ்ல வைக்கிறோம். அதப் பாத்து அவளுக்கு வயிறெரியணும். அப்றந்தான் எனக்கு நிம்மதியே”
“அப்போ, ஒரு அடியப் போட்ருவோங்குற”
அன்று இவளும் ஆதர்ஷும் குதூகலமாக ஆடிய ஆட்டத்தைக் கண்டு அரங்கமே குத்தாட்டம் போட்டது. அந்தக் காணொளியை அங்கை பார்க்க வேண்டுமென்று கேட்க, அவளுக்கும் பகிர்ந்திருந்தாள். அவளின் அலைபேசியில் நீண்ட நாட்களாகக் கிடப்பில் இருந்த அந்நடனத்தை மோகன் ஒருநாள் ஆராய்ந்து பார்த்துவிட்டான். உடனே, அது தான் தனக்கு வாய்த்தப் பொன்னான வாய்ப்பு எனக் கருதி பத்மாவுக்கு அழைத்தான்.
“சொல்லு, அங்கை”
“ப்ரியாமா...”
“என்ன, அக்கா ஃபோன்லருந்து பண்ணிருக்கீங்க?”
“என் நம்பர்லருந்து கால் பண்ணா தான் நீ எடுக்க மாட்டியே”
“அன்நோவ்ன் நம்பர்லருந்து கால் வந்தா நான் எடுக்குறது இல்ல, மாமா”
“அதுக்கு என் நம்பர சேவ் பண்ணணும், ப்ரியாமா”
“இப்போ என்ன விஷயம்?”
“உன் வீடியோ ஒன்னு பாத்தேன். ஆட்டம்லாம் பயங்கரமா இருக்கே... கூட ஆட்றானே அது யாரு, ப்ரியாமா. லவ்வரா?”
“அது எதுக்கு உங்களுக்கு?”
“தெரிஞ்சா, உங்க வீட்டுலச் சொல்லி மேரேஜுக்கு ரெடி பண்ணலான்னு தான்”
“அதுக்குத் தேவையே இல்ல”
“ஓ, உன்னோட எக்ஸா? காலேஜ் முடிச்சதும் கழட்டி விட்டாச்சா?”
அவன் அவ்வாறு வினவவும் அவளுக்குக் கோபம் சுர்ரென்று தலைக்கேறியது
ஓம் சாந்தி!