உணர்வுகளை மூடி மறைக்காமல் பத்மப்பிரியா உடனுக்குடன் கேட்டாள்
“இப்டியெல்லாம் பேச உங்களுக்கு யாரு ரைட்ஸ் குடுத்தா? கேள்வி கேக்குறதலாம் அக்காவோட நிறுத்திக்கங்க. என்ட்ட வேணாம்”
“நீ அப்டி வரியா? எனக்கு ரைட்ஸ் இல்ல; கரெக்ட் தான்... உங்க அப்பாக்கு உன்னைக் கேள்வி கேக்க எல்லா உரிமையும் இருக்குல்ல. அவருக்கு இந்த வீடியோவ அனுப்பி வைக்கிறேன். இதப் பாத்துட்டு என்ன பண்றதுன்னு அவரே முடிவெடுக்கட்டும். என்ன, அனுப்பவா?”
“ஒருத்தங்களப் பத்தி ஒரு விஷயம் தெரிஞ்சா, அதச் சொல்லி சொல்லியே தேவையானதலாம் சாதிச்சுக்கலாம்னு உங்க மைன்ட்ல செட் ஆய்ருக்கும் போல. இந்த சீப்பான பிகேவியர என் கிட்ட ட்ரை பண்ணாதீங்க. எனக்குன்னு எந்த சீக்ரெட்டும் இல்ல. எத வச்சும் நீங்க என்னைக் கட்டாயப்படுத்த முடியாது. நீங்க சொல்ற எந்த விஷயத்தயும் நான் செய்யவும் மாட்டேன். அந்த வீடியோவ யாருக்கு அனுப்புறீங்களோ, அனுப்பிக்கங்க. அன்ட் ப்ளீஸ்... எனக்கு கால் பண்ணித் தொந்தரவு பண்ணாதீங்க”
எரிச்சலுடன் அவள் அழைப்பைத் துண்டித்துவிட, மோகன் அதோடு விடவில்லை. அந்தக் காணொளியை சுந்தரத்திற்கு அனுப்பி வைத்தப் பிறகே அமைதியானான். அதைப் பார்த்து அவருக்குக் கோபம் மூள பத்மாவைக் கண்டவாறு பேசிவிட்டார்.
“இதத் தான் இத்தன நாளா நீ காலேஜ்ல புடுங்கிட்டு இருந்தியா? உன்னைப் படிக்கத் தான அனுப்புனாக. ஆட்டம் போடவா அனுப்பி வச்சது? தெருக் கூத்து ஆட்றவ மாரி... நினச்சுப் பாக்கவே கேவலமா இருக்கு. அதும் ஒரு பையன் கூட சேந்துட்டு... அசிங்கமா இல்லயா உனக்கு?”
பத்மாவோ சண்டையை வளர்க்க விரும்பாமல் சமாதானமாய்ப் போக எண்ணினாள்
“இனிமே, இப்டி எதும் நடக்காது”
“அதான் ஏற்கனவே எல்லாத்தயும் நடத்திட்டியே. இன்னும் நடக்க என்ன இருக்கு? ஒழுக்கம்னா என்னனே கத்துத் தரலயா நாங்க உனக்கு?” என்று மங்கை ஒரு பக்கம் கூப்பாடிட்டார்
“மன்னிச்சுருங்க, தெரியாமப் பண்ணிட்டேன்”
“எதோ நம்ம மாப்ள பாத்ததால பெருசா எடுத்துக்கல. வேற யாராவது பாத்துருந்தா என்னாகுறது? இந்த வீடியோவலாம் டெலிட் பண்ணிக் கிடாசு. வாழ்க்கைல இனிமே ஆட்டம் ஆடணும்னு நினைச்ச, ஆட்றதுக்குக் கால் இருக்காது. போ...” என்று சுந்தரம் கத்த நொந்து நூலாகிவிட்டாள் ப்ரியா
மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு தனது அறைக்குச் சென்றவளுக்கு, பெற்றோர்கள் இருவருமே மோகனுக்குச் சாதகமாகப் பேசியதை நினைத்து, தாரை தாரையாகக் கண்ணீர் வடிந்தது. அன்று அழுத கணம் இன்றும் ஈரமாய் நினைவிருக்க, அதை யோசித்தபடியே உடை மாற்றினாள். நிச்சயமாக மோகன் இச்சம்பவத்தை விக்ரமிடம் கூறியிருப்பான் என இவளாகவே முடிவெடுத்துக் கொண்டாள். அத்துடன் அவள் தயாராகிக் கீழே வர, பெற்றோர்கள் இருவரும் விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
“என்னங்க, அத்தனை பேர் முன்னாடி தட்ட மாத்திட்டு இப்போ வந்து இப்புடிச் சொல்றீங்களே. சுய நினவோடத் தான் இருக்கீகளா?”
“மருமகந்தான் ஓயாம ஃபோன் போட்டு, இந்தச் சம்பந்தம் வேணாம், ஒத்து வராதுன்னே சொல்லிட்டு இருக்காரு. நான் என்ன பண்ணட்டும்?”
“சின்னவளுக்கு எங்கக் கல்யாணம் முடிச்சுக் கொடுத்தாலும் அவருக்கு என்ன வந்தது?”
“பையன் சரியில்ல; திமிரா பேசுறாப்புலன்னு சொல்றாரு. மருமகன மரியாதையா வேற நடத்தலயாம். அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேந்தா, பத்மாவோட வாழ்க்கை நல்லாருக்காதாம். அதயும் மீறி அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சா, மருமகன் கல்யாணத்துக்கே வர மாட்டேன்னு விதண்டாவாதம் பண்றாருங்குறேன்”
“அவரு சொன்னதலாம் ஒரு ஓரமா ஒதுக்கி வைங்க. உங்க மனசுக்கு என்ன தோணுது? அதச் சொல்லுங்க மொத”
“இத்தன வருஷம் இல்லாத அதிசயமா, உன் பொண்ணே இந்தப் பையனப் பிடிச்சுருக்குங்குறா. இருந்துருந்து வந்தவனையும் வேணான்னு சொல்லிட்டு, வேறெந்தச் சீமைல நான் போய் இன்னொருத்தனத் தேடுறது? அதப் பத்தி யோசிச்சாலே களப்பாகுது”
“களைப்பா இருக்குல்ல. பத்மாவுக்கு வயசாகுதோ இல்லயோ; நமக்கு வயசாய்டுச்சுங்க. முன்ன மாரி ஓடியாடிட்டு இருக்க முடியாது. இருக்குறத வச்சு அவளக் கூடிய சீக்கிரம் கரை சேத்துர்றது நல்லது. அவன் சொல்றான், இவன் சொல்றான்னு மண்டையக் கொழப்பாதீங்க”
“மருமகன நினைச்சா தான்...”
“உங்களுக்கு என்ன கவல? நம்ம அச்சு புருஷன், புள்ளயோட இந்தக் கல்யாணத்துக்கு வரணும்; அவ்ளோ தான. நான் வரவைக்கிறேன். நீங்க தேவயில்லாததப் பத்தி யோசிக்கறத விட்டுட்டு, மத்த வேலைகளக் கவனிங்க. இன்னும் எத்தன நாள் கிடக்குன்னு இம்புட்டு மெத்தனமா இருக்கீக? இந்த வரனும் தட்டிப் போச்சு, இவளக் கடைசி வரைக்கும் நம்ம கூடயே தான் வச்சுக்கணும்”
“சரிடி. நீ தான் சொல்லிட்டல்ல. மூத்த மருமகன நீயே சமாளிச்சுக்க. சின்னவளோடக் கல்யாணம் எந்தக் குறையும் இல்லாம நடக்கும். அதுக்கு நான் பொறுப்பு”
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பத்மா பிற்பாடாக அவர்கள் முன் வெளிப்பட்டாள்
“போலாமா, அம்முணி?”
எதுவுமே நடக்காதது போல் வினவிய மங்கை, அவளை அழைத்துக் கொண்டு காந்திபுரம் புறப்பட்டார். பேருந்தில் போகும்போது வாயை அடக்க முடியாமல் பத்மாவே கேட்டாள்.
“ஏன்மா, டென்ஷனா இருக்க?”
“எல்லாம் கல்யாண டென்ஷன் தான்”
“உண்மையச் சொல்லு. அப்பாவும் ஒரு மாதிரியா இருக்காரு. நீங்களும் சோகமா தெரியுறீங்க”
“உங்க வேலையப் பாருங்கம்முணி. இதுலலாம் தலயிட்டுக்காதீங்க”
“எந்தக் காலத்துலயும் எதயுமே என் கிட்டச் சொல்லிடாதீங்க. மனசுலயே வச்சுக்கங்க” என்று பத்மா பொரிய, மங்கை கல்லை விழுங்கியதைப் போல அமர்ந்திருந்தார்
பேருந்தில் இருந்து இறங்கி இருவரும் ஆடையகத்திற்குச் செல்ல, அதன் வாயிலில் கிரிஜா புன்னகை முகத்துடன் நின்றிருந்தார்
“எப்டி இருக்க, கண்ணு?”
“எனக்கென்ன கொற? நான் நல்லா இருக்கேங்மா”
“இல்லயே. எதோ வாட்டமா இருக்குறாப்புலத் தெரியுதே. என்னங்க, சம்மந்தி? இன்னும் ஒரு வாரங்கூட இல்ல; அதுக்குள்ள கல்யாணத்த எப்படி நடத்தப் போறோங்குற கவலையா?”
“அதெல்லாம் இல்லீங். வாங்க உள்றைக்குப் போவோம்”
மங்கையும் கிரிஜாவும் முன்னே செல்ல, பத்மா அவர்களைப் பின்தொடர்ந்தாள். புடவைகள் விற்கும் தளத்தினைச் சென்றடைந்தவர்கள் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்தனர்.
“என்ன கலரு வேணுமோ கடைக்காரர்ட்டச் சொல்லு, தங்கம்” என கிரிஜா பத்மாவின் விருப்பத்தைக் கேட்டிட
கண்களில் ஆர்வம் மின்ன “வாடாமல்லி நிறத்துல நல்லப் புடவையா காட்டுங்க, ண்ணோவ்” என்றாள் அவள்
புடவைகளில் ஒரு கண்ணைப் பதித்தபடி “சம்மந்தி, மாப்பிள்ளைக்கு என்ன வண்டி வேணும்னு கேட்டுருந்தோமோ? எதும் சொன்னாருங்களா? இப்பவே பாக்க ஆரம்பிச்சா தானுங்களே நல்ல வண்டியா கிடைக்கும். நாள் விரசா ஓடுது இல்லயா?” என்று வினவிட்டார் மங்கை
“அவருக்கு ஏற்கனவே பைக்கு ஒன்னு வாங்கித் தந்துருக்கோமுங்க. இன்னும் ஒரு வருஷம் கூட ஆகல. புதுசு...”
“அப்போ காரா வாங்கிர்லாம்னு சொல்லுதீகளா?”
“அதுவும் கேட்டனே. அவருக்கு எதுவும் வேணாம்னு இல்ல சொல்லுதாரு”
“வேணாமா...”
“அப்றம் சம்மந்தி, ரிசப்ஷன் எங்க ஊருலயே தான வைக்குறோம். அதுக்காகுறச் செலவ நாங்க பாத்துக்குறோம். கல்யாணத்த நடத்துறதுல உங்களுக்கு பிரபா உதவியா இருப்பாரு. இது என்ர வீட்டுக்காரரோட முடிவு மட்டும் இல்லீங்; மாப்பிள்ளயும் இதத் தான் ஆசப்பட்றாப்புடி. யார் யாருக்கோ ஃபங்க்ஷன் நடத்தித் தர்றாரு. இது நம்ம வீட்டுக் கல்யாணம். பண்ணித் தராமப் போய்டுவாரா? அதனால ஃபோட்டோ எடுக்க, டெக்கரெஷன் பண்ணனு தனி தனியா ஆள் தேடிட்டு அலையாதீங்க. பிரபா கிட்டச் சொன்னா மொத்தமா அரேஞ்ச் பண்ணித் தந்துடுவாரு. நீங்க செட்டில் பண்ணா மட்டும் போதும்”
“இம்புட்டு வேலய வாயக் கொடுத்து வாங்குறீகளே. இது சரிப்பட்டு வருங்களா? அதுவுமில்லாம, ரிசப்ஷன் செலவ முழுசா நீங்களே ஏத்துட்டா நாங்க என்னத்தச் செய்யுறது?”
“ஏன் சரிப்பட்டு வராமா? ரிசப்ஷன் முக்கியமா எங்க சொந்தத்துக்காக நடத்துறது, சம்மந்தி. அத நாங்க பண்ணிக்கிறது தான மொறயா இருக்கும். உங்க பங்குக்கு நீங்க சீர், செனத்திச் செய்யணும்னு ஆசப்பட்டீங்க; நாங்க தடுக்கலயே. பொண்ணுக்கு நீங்க இவ்ளோ செய்யும் போது, எங்க பங்குக்குப் பையன் வீட்டுச் சார்பா நாங்களும் எதாச்சும் செய்யணும்ல. அது தான எங்களுக்கும் மருவாதி”
“அய்யோ, நான் அப்டிச் சொல்ல வரலீங்க”
“சம்மந்தி... இதுலப் பதட்டப்பட ஒன்னுமே இல்ல. ரெண்டு குடும்பமும் ஒன்னுக்குள்ள ஒன்னுனு ஆகப் போறோம். நீங்க இந்தளவு கௌரத பாக்க வேண்டியதில்ல. ஆளுக்குப் பாதியா பிரிச்சுப் பண்ணிட்டா, சுமையும் கொறஞ்ச மாதிரியால்ல ஆச்சு. உங்களுக்குப் பசங்க வாரிசு இல்ல. எல்லாத்துக்கும் நீங்களே ஓடி ஒடியாந்துட்டு இருக்க முடியுமா? அதுக்குத் தான் சொல்றேன்; என் பசங்கள உங்க வீட்டுப் பசங்க மாரி நினைச்சுக்கங்க. இதுக்கெல்லாம் சங்கட்டப்படாதீங்க”
சொல்ல வார்த்தைகள் ஏதுமின்றி மங்கை ப்ரியாவிடம் திரும்பினார்
“ரிசப்ஷனுக்கும் சேத்தி இப்பவே சேரி எடுத்துக்க. சீக்கிரம் பாரு... அடுத்து மாப்பிள்ளைக்கு வேட்டி, சட்டை எடுக்கப் போவணும்”
“ரிசப்ஷனுக்குச் சீலையா? எந்தக் காலத்துல இருக்கீங்க. இப்போலாம் தாவணி மாதிரியே டிசைனா போட்றாங்களே. அது பேரு என்னமா?” என வினவி பத்மாவைப் பார்த்தார் கிரிஜா
“லெஹங்கா...”
“ஆன், லெஹங்கா லெஹங்கா. அதயே எடுத்துருவோம், சம்மந்தி”
“லே... அது என்னமோ, சம்மந்தி. எனக்கு வாய்லயே நொழய மாட்டேங்குது. உங்க வருங்கால மருமகளாச்சு, நீங்களாச்சு” என்று அரைகுறையாகத் தலையாட்டினார் மங்கை
“மூத்தவனுக்கு ஊரக் கூட்டி கல்யாணம் பண்ணணும்னு ஆசப்பட்டேன். அதான் நடக்கல. உங்க வீட்டு மகராசி வந்துல்ல இந்தக் குடுப்பனையக் கொடுக்கணும்னு எழுதி இருக்கு”
கிரிஜா அவ்வாறு பேசியதில் பத்மாவின் மனம் குளிர்ந்து போயிருந்தது. வீட்டிற்குத் திரும்புகையில் அன்னையிடம் முந்திக் கொண்டு வாதத்திற்குச் சென்றாள்.
“நான் அப்பவே கேட்டேன்ல; ரிசப்ஷனுக்கு லெஹங்கா வாங்கித் தாங்கன்னு. மாப்ள வீட்டுக்காரங்க அதச் சொல்லுவாங்க, இதச் சொல்லுவாங்கன்னு ஒரேயடியா பயமுறுத்துன. இப்போ என்னாச்சுப் பாத்தியா?”
“கல்யாணத்துக்கு முன்னாடி இப்டித் தான் தூக்கி வச்சுப் பேசுவாங்க. அங்க வாழப் போனா தான தெரியும் கத”
“உன் திருவாய வைக்காத, ஆத்தா. நான் சந்தோஷமா இருந்தா உனக்குப் பொறுக்காதே” என்றவளோ உதட்டைச் சுளித்துக் கொண்டு வேறுபுறம் திரும்பி அமர்ந்தாள்
தன் பெற்றோரின் செலவை விக்ரம் பாதியாகக் குறைத்து விட்டதில் ப்ரியாவுக்கு மகிழ்ச்சியே. மங்கையோ இப்போது நல்ல விதமாக நடப்பவர்கள், திருமணம் முடிந்த பின்னர் பொன், பொருள், பணம் கேட்டுத் தொந்தரவு செய்வார்களோ என்ற பீதிக்கு உள்ளானார். இருந்தாலும் அந்தப் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் திருமண வேலைகளை விரைவாகப் பார்த்தார். எப்படியோ பேச்சு வார்த்தை நடத்தி மோகனைச் சமாதானமும் செய்தார்.
சுந்தரத்திற்குத் தான் சுமந்து வந்த பெரியப் பாரத்தை இறக்கி வைக்கப் போகிற நிம்மதி. அதனால் மிகுந்த உற்சாகமாகவே காணப்பட்டார். ஓர் இளைஞனைப் போல துள்ளலுடன் அனைத்தையும் தயார் செய்தார். திருமண நாள் வர சுந்தரம்-மங்கை தம்பதியினரின் உற்றார் உறவினர்கள் அத்தனைப் பேரும், ஒரு ஈ எறும்பு விடாமல், மண்டபத்தில் கூடி நின்றனர். ஒருபுறம் தன் வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு ஒப்பனை அலங்காரத்துடன் மனத்தையும் மணமகள் தயார்படுத்திக் கொண்டிருந்தாள். மறுபுறமோ, இந்தத் திருமணச் சடங்கிற்கு நடுநாயகமான நம் மணமகனை மண்டபத்தின் எந்த மூலையில் தேடியும் காணவில்லை.
எங்கே சென்று தேட!