வாழ்வையே வெறுக்கச் செய்தவளை மறக்க நினைத்து ஆறாண்டுகள் ஆகிவிட்டன. அவளைப் பற்றி பிரபாகரன் மற்றும் ராம்குமாரைத் தவிர நெருங்கிய வட்டத்தில் யாருக்கும் தெரியாது. பத்மப்பிரியாவிடம் மட்டுமே கடந்து போனதை மனம் விட்டுப் பேசியிருக்கிறான் விக்ரம். பாறையில் எழுதிய அவள் நினைவுகளை உளியால் தட்டி தட்டி முடிந்தளவு சிதைத்துவிட்டான். அந்தச் செயலால் அவனுமே சிதைந்தும் போனான். கடந்த காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருவாயில் அவளே அழைப்பாள் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை.
மிக நெருக்கத்தில் கேட்டுப் பழகிய அந்தக் குரலை இன்று உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கேட்டதும் ஒரு விநோத உணர்வு உண்டானது. இருந்த போதிலும் பரசவமோ பரிதவிப்போ எதற்கும் இடங்கொடுக்க முடியவில்லை. ஏனெனில், அவனின் உள்ளம் இப்போது அவளுக்கானதே அன்று. நொடி கூட தாமதியாமல் தேன்சிட்டு இறக்கையை அடிக்கும் அதிவேகத்துடன் அவன் அழைப்பைத் துண்டித்தான். ஆனால், எதற்காகத் தனக்கு அழைத்திருப்பாள் என்ற கேள்வி மட்டும் மூளையில் அணையாமல் எரிந்தது.
கேள்விக்கு விடையறிய விழைந்தவன் வேறு பெயரில் இருந்த தனது இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட்டில் லாக்இன் செய்தான். அவளது பெயரைத் தேடி உள்ளே சென்று பார்க்க, இரண்டு மாதங்களுக்கு முந்தைய பதிவு கண்களில் பட்டது. அதில் ஜெனிஃபரும், வயது முதிர்ந்த கணவன் பென் மேத்யூஸும், உடன் அவளது அழகு மகனும் சிரித்த முகத்துடன் காணப்பட்டனர். புகைப்படத்தின் கீழ் ‘காலம் பறக்கிறது’ என்பதை ஆங்கில வார்த்தைகளில் இடம்பெறச் செய்திருந்தாள்.
அதைப் பார்த்தவன் அவளுக்கு எந்தக் குறையும் இல்லை எனத் தனக்குத் தானே உறுதிப்படுத்திக் கொண்டு லாக்அவுட்டைத் தேர்வு செய்து வெளியே வந்தான். வாட்ஸ்ஆப்பில் அவளது எண்ணைத் தொட்டுத் தடைப் பட்டியலில் சேர்த்தான். அவளிடம் இருந்து வரும் எவ்விதத் தொடர்பையும் அவன் இப்போதைக்கு விரும்பவில்லை. அவளைப் பற்றிய சிந்தனைகளைக் கலைக்கத் தலையை ஒருமுறை வேகமாக ஆட்டினான். மீண்டும் அலைபேசி ஒலியெழுப்பத் திரையை ஊடுருவினான்.
“வேர் ஆர் யூ?” என்று பத்மா தான் கேள்வியாய் அனுப்பியிருந்தாள்
லாக் ஸ்கீரினிலேயே அதைப் படித்தவன் வேறு எதையும் பற்றி யோசியாமல் கீழே நடந்தான். அவன் விரைவாக உள்படிக்கட்டுக்களைக் கடந்து அவளது அறைக்குச் செல்ல கதவு பூட்டப்படாமல் இருந்தது. கதவை மெலிதாக இரண்டு முறை தட்டியவன் உள்ளே செல்ல, பத்மா தன்னிச்சையாய் எழுந்து நின்றாள்.
“டெர்ரஸ்ல அண்ணனோடப் பேசிட்டு இருந்தேன். டைம் ஆனதக் கவனிக்கல”
“அதனால ஒன்னும் இல்ல. வீட்டுல இருக்குறவங்க யாராச்சும் உங்களப் பாத்துட்டா எதாவது பேசுவாங்க. அதான் மெசேஜ் பண்ணேன்”
அலைபேசியைச் சிறு மேசையின் மீது வைத்தவன் கட்டிலின் ஓரமாய் அமர்ந்தான். மறுபுறம் உட்கார்ந்த ப்ரியா அவனிடம் செம்பினை எடுத்து நீட்டினாள்.
“பால்... நான் பாதி குடிச்சுட்டேன். நீங்க குடிச்சுக்கங்க”
“பால் பிடிக்காது”
“ஒரு வாயாச்சும்...”
அவளுக்காக ஓரிரு மடக்கு பாலைப் பருகியவன் செம்பினைக் கீழே வைத்தான்
“மிச்சம் வச்சா அதுக்கும் எதாச்சும் சொல்லுவாங்க” என்றவளோ மீதியை முயன்று குடித்து முடித்தாள்
சூழ்நிலையை இலகுவாக்க இம்முறை அவனே பேச்சைத் தொடங்கினான்
“ரூம் நல்லாருக்கு”
“என் அக்கா யூஸ் பண்ணிட்டு இருந்த ரூமு. அவ மேரேஜ் பண்ணிப் போனதும் அப்பா அம்மாட்டச் சண்ட பண்ணி வாங்குனேன். மேலருக்குற ரூம்லயே இதுல மட்டுந்தான் அட்டாச்ட் பாத்ரூம் இருக்கு. மத்தபடி வீட்டுக்குப் பின்னாடி தான் போகணும். வசதியா இருக்கும்னு நான் எடுத்துக்கிட்டேன்”
“நீ முன்ன யூஸ் பண்ணிட்டுருந்த ரூம் எது?”
“இந்த ரூமுக்கு ரைட் சைட் பக்கத்துல இருக்குதுல்ல; அதே தான்”
“ஐ கெஸ், நாளைக்கு என்னோட ரூம்ல இருப்போம். அங்க என் திங்க்ஸ் அவ்வளவா இல்ல. இனிமே தான் அரேஞ்ஜ் பண்ணனும்”
“காலைல உங்க ஊருக்குப் போகணும். மறுபடி விருந்துக்கு இங்க வரணும். அப்றம் வீக்என்ட் ரிசப்ஷனுக்கு அங்கப் போணும். ஒரே அலைச்சலா இருக்கும்ல. இந்த டயர்ட்ல எப்போ வேலைக்குப் போறது? ஒன்னுமே புரியல”
“நான் டென் டேஸ் பர்மிஷன் போட்ருக்கேன்”
“உங்கள ஈசியா விட்ருவாங்க. நாந்தான் என்ன ஆகப் போறேன்னு தெர்ல”
“நோ ப்ராப்ளம். எப்போ ஜாப்புக்கு ரிட்டன் ஆகணும்னு சொல்லு. நான் வீட்டுலப் பேசிக்குறேன்”
“அப்டியே வேலைக்குப் போக ஆரம்பிச்சாலும் எங்கத் தங்குறது? ஹாஸ்டல்லயா? இல்ல...”
“ஃபைன். அங்கயே ஸ்டே பண்ணு”
“நம்ம வீட்லக் கேட்டா என்ன சொல்றது?”
“ஒரே நாள்ல எல்லாத்தயும் போட்டு கன்ஃப்யூஸ் பண்ணிக்க வேணாம். நிதானமா யோசிப்போம்... இப்போ பாடிக்கும் மைன்டுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் தேவ. தூங்கலாமா?”
“ம்ம்ம்”
“லைட்டு...”
“லைட் ஆஃப் பண்ணா பயமா இருக்கும். தூங்க முடியாது”
“லைட் எரிஞ்சா சுத்தமா எனக்குத் தூக்கம் வராது. அதான்... நான் இருக்கேன்ல; பக்கத்துல... பயம் ஒன்னும் வேணாம். ஓகே?”
“சரி”
விளக்கு அணைக்கப்பட இருவருக்கும் இடையே இருந்த இடைவெளி தொடர்ந்தது; அவ்வறையில் அமைதி நிலவியது.
விடிந்ததும் விடியாததுமாகக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, விக்ரம் சென்று கதவைத் திறந்தான். புத்தம் புதுப் பொலிவுடன் அங்கே ஜெனி நின்றிருக்க, அவனுக்கு என்ன செய்வதென்றே விளங்கவில்லை. அவளது எண்ணை ப்ளாக் லிஸ்ட்டில் இட்டது போல் நேரில் வந்து நிற்பவளை உடனடியாகத் தவிர்க்க முடியவில்லை. அதற்கான வழியையும் அவன் அறிந்திருக்கவில்லை. நேற்று வெளிநாட்டு எண்ணில் இருந்து பேசியவள் அதற்குள்ளாக எப்படி இந்தியா வந்தாள்; அப்படியே வந்திருந்தாலும் தாம் இருக்கும் இடம் அவளுக்கு எவ்வாறு தெரிந்தது என்ற சந்தேகங்கள் வேறு எழுந்தன. இவ்வாறு பலவித எண்ணங்களில் விக்ரம் சம்பித்துப் போய் நின்றிருக்க, தூக்கம் கலைந்து எழுந்து வந்தாள் பத்மா. அவளது முகத்திலும் குழப்ப முடிச்சுக்கள் விழுந்தன.
“யார் நீங்க?”
ஜெனிஃபரைப் பார்த்ததும் பத்மா வினாச் சொல்லை உதிர்த்தாள்
“கேக்குறாங்கல்ல... சொல்லு, விக்ரம்”
“ஜெ... ஜெ...” சொல்ல முடியாமல் திணறினான் அவன்
“திஸ் இஸ் ஜெனிஃபர்” அவளே முன்வந்து அறிமுகம் செய்து கொண்டாள்
“எதுக்கு இந்நேரத்துல இங்க வந்தீங்க?”
“அவங்க கிட்ட என்னைப் பத்திச் சொல்லலையா, விக்ரம்? ஐ அம் ஹிஸ் லவ்வர்”
“அதுக்கு...”
“ஐ வான்ட் ஹிம் பேக்”
“நேத்துக் காலைலத் தாங்க இவரு எங்கழுத்துலத் தாலி கட்டுனாரு. அவர எப்டி நீங்க உரிம கொண்டாடலாம்? தயவு செஞ்சுக் கிளம்புங்க”
“அத அவரே சொல்லட்டும்” என்று கூறி இறுமாப்போடு நின்றாள் அவள்
விக்ரம் செய்வதறியாமல் உறைந்து போயிருக்க, பத்மா பதைப்போடு பேசினாள்
“என்னங்க, என்ன பாத்துட்டே நிக்குறீங்க? வாயத் தொறந்து அவளப் போகச் சொல்லுங்க”
“சீ... விக்ரமால என்னை எப்பயுமே அவாய்ட் பண்ண முடியாது. ஹி கான்ட் சே நோ டு மீ. வாங்கப் போலாம்”
ஜெனி கரம் பற்றி இழுக்க அவனோ போகிறப் போக்கில் தன் ஒரு நாள் மனைவியைத் திரும்பிப் பார்த்தான். பத்மாவின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்துக்கு அளவே இல்லை. அதைக் கண்டு மனந்தாளாமல் அவன் சட்டென்று கையை உதறினான். உதறிய வேகத்தில் விழிப்பு வர, அத்தனையும் கனவு என்பதையும் உடனேயே உணர்ந்தான். கலைந்து விட்ட நித்திரையைத் தழுவ முயன்று சில பல நிமிடங்கள் கட்டிலில் உருண்டு கொண்டிருந்தான் விக்ரம்.
அவன் கையைத் தூக்கி அருகில் போட, பாதி உறக்கத்தில் இருந்த பத்மாவின் மீது போய் விழுந்தது. அவள் விழிகளைத் திறவாமலே அதைத் தள்ளி விட்டாள். நொடிகள் கழித்து மறுபடியும் அவனது கரம்பட அவள் பட்டென விழித்துக் கொண்டாள். அவன் தூக்கத்தில் இருப்பதால் தவறுதலாகக் கைப்பட்டு விட்டதென எண்ணிக் கரத்தை மற்றொரு முறை ஒதுக்கினாள். சிறிது நேரத்திற்கெல்லாம் முதுகுப் பரப்பில் அவனது கூரானப் பார்வை பாய்வது போல இருக்க எதேச்சையாகத் திரும்பினாள். முகத்தைப் பார்க்கக் கூட இடம் கொடாமல் அவனது உடல் முழுவதுமாக மேலே வந்து அழுத்தியது.
அவள் மிகவும் பிரயத்தனப்பட்டு அவனைத் தள்ள எண்ணினாள். அவனது வலுவான உடல் வாகிற்கு அவளால் அசைக்கக் கூட முடியவில்லை. அவனிடத்தில் இருந்து நழுவிக் கொள்ளலாம் என அப்படியும் இப்படியுமாக நெளிந்தும் பார்த்தாள். கை கால்கள் யாவும் கட்டப்பட்டதைப் போல ஒரு இன்ச் கூட நகரவில்லை. தெரியாமல் வந்து அவனோடு சிக்கிக் கொண்டதாக அவள் மனதெங்கும் பாரம் ஏறியது. வேண்டாம் எனக் கத்தத் தோன்றியும் உதடுகள் ஏனோ அசையவே இல்லை. இறுதியாக, பலம் மொத்தத்தையும் திரட்டி மார்பினாலேயே நெட்டியவள் அவனை விட்டு விலகிக் கீழே விழுந்தாள்.
கட்டிலில் இருந்து விழுந்ததில் தொம்மென்று சத்தம் எழ, பத்மா எழுந்தமர்ந்து உடல் வலியில் முணகினாள். இவ்வளவு நேரம் இருட்டிக் கிடந்த அறை இப்போது விழிகளைக் கூசும் பிரகாசத்துடன் ஒளிர்ந்தது. அதன் பிறகே தெரிந்தது அவள் இவ்வளவு நேரம் மல்லுக் கட்டியது விக்ரமோடு அன்று; உடலை மூடியிருந்த போர்வையுடன் தான் என்று. முதலிரவு அதுவும் இருவருக்கும் இரு வேறு கனாக்கள் வந்து பீடித்துக் கொண்டன. இடையைக் கையால் பிடித்தபடி பத்மா கால்களை ஊன்றி எழுந்தாள். கட்டிலின் நடுவே அலங்கரிக்கப் பட்டிருந்த இதய வடிவப் பூவிதழ்கள் கசங்காமல் அப்படியே இருந்தன. அதற்கும் அந்தப் பக்கமாய் விக்ரம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
‘நல்ல வேள; தூங்குறான்... முழுச்சுருந்து பாத்தான்னா நம்ம மானமே போய்ருக்கும்’ என சமாதானம் ஆகியவள் நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தாள்
நேர முள் ஒன்பதைத் தொடக் காத்திருக்க பத்மாவிற்கு இதய முள் வேகமாய் அடித்துக் கொள்ளத் தொடங்கிற்று. கண்ணிமைப்பதில் கூட நேரத்தை வீணாக்க விரும்பாமல் கணவனை எழுப்ப முயன்றாள்.
“ஹலோ”
“ஹலோ...”
“எக்ஸ்க்யூஸ் மீ”
“விக்ரம்”
“விக்ரம்...”
“என்னங்க”
“ஏனுங்க”
நொடிக்கு நொடி அவளின் குரலும் தொடுதலும் அதிகரித்துக் கொண்டே போனது. கடைசியாக அவள் தோளைத் தொட்டு உலுக்கியதில் அவன் எழுந்தே அமர்ந்துவிட்டான். அவளது கூச்சலைக் காதில் வாங்கி விழிப்புற்றதால், இதயத் துடிப்பு எகிறி அவனுடைய சுவாசம் வெளியே கேட்டது.
“ஏன்? என்னாச்சு?”
“டைம் ஆச்சு. சீக்ரம்... போய்க் குளிங்க. வந்துரப் போறாங்க”
“யார் வராங்க?” கனவில் வந்த ஜெனியை எண்ணிக் கலவரத்துடன் கேட்டான் விக்ரம்
“பேசறதுக்குலாம் நேரம் இல்ல” என்ற ப்ரியா அவனைக் குளியலறைக்குப் போகுமாறு உந்தினாள்
கதவை நெருங்கிச் சென்றவன் அப்போது தான் நினைவு வந்தவனாக “நான் ட்ரெஸ் எதும் எடுத்துட்டு வரல” என்றான்
“என்னோடதத் தாரேன். சரியா போய்டும் உங்களுக்கு” அவனை உள்ளே அனுப்பிக் குளியலறையைத் தாளிட முயன்றாள்
கதவை ஒரு கையால் தடுத்து “ஏ, டவலாச்சும் தா” என அவன் கோரினான்
துண்டை எடுத்தவள் அவனிருக்கும் திசையில் “இந்தாங்க... கேட்ச்” எனத் தூக்கி வீசினாள்
அது பறந்து போய் விக்ரமின் முகத்தைத் தழுவிக் கொள்ள பத்மா பரிதவித்தாள் “அச்சோ... ஸாரி...”
“எல்லாம் நேரம்...” என்று முணகியவன் டப்பென்று கதவை மூடிக் கொண்டான்
அவனுக்கு ஏற்றார் போல டீசர்ட்டையும் ட்ராக் பேன்ட்டையும் அவள் தேட ஆரம்பிக்க, மேசையில் இருந்த அலைபேசி விடாமல் ஒலித்தது. அவளின் கவனம் மெல்ல மெல்ல அதன்புறமாகத் திரும்பியது.
யார் அழைப்பது!