• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 19

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
உற்சாகத்துடன் நண்பனிடம் மொபெட் வாங்கிக் கொண்டு வலம் வந்த விக்ரம், ஜெனியின் அருகே சென்று நிறுத்தினான்

“கம். வண்டில ஏறு”

அவளும் தனக்குப் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் இருந்தாள்

“வேர், டா? எங்கக் கூப்புட்ற என்னை?”

“வா, டி” அவளை உரிமையோடு அவன் இழுக்க அவளும் மோதிக் கொண்டு ஏறினாள்

“ஒரு வழியா வேலை கிடைச்சுருச்சா, விக்ரம்?”

“ம்ம்ம் ம்ம்ம்”

“ஏதோ சென்னைல வேலை கிடச்ச மாரி ரொம்ப ஜாலியா இருக்க. லோக்கல்லயே தான குப்ப கொட்டப் போற”

“சென்னையோ, கோவையோ... எல்லா இடமும் நம்ம இடந்தான், பேபி”

அவன் தோளோடு சேர்த்துத் தன் வளைக்கரங்களை வளைத்தவள் முதுகில் முகம் சாய்த்துக் கேட்டாள்

“இல்ல... உனக்கும் சென்னைலயே வேல கிடைச்சுருந்தா, நாம செப்பரேட்டா போக வேண்டியிருக்காது. உன்னைப் பாக்காம நான் இருந்தது கிடையாது. நீயும் என்னை லோன்லியா விட்டதில்ல. தென், இப்போ மட்டும் எப்புடி... ஐ வில் மிஸ் யூ ஃபார் ஷ்யூர்”

“கவலயே படாத, செல்லம். மாமன் அதுக்காகத் தான் ஒரு சர்ப்ரைஸ் வச்சுருக்கேன்”

“என்ன சர்ப்ரைஸ், விக்ரம். டெல் மீ. ஃபாஸ்ட்...”

ஜெனிஃபருக்கு ஆர்வம் தீயைப் போல பற்றிக் கொண்டது. ஒருவேளை வைரத்தில் மோதிரம் அணிவித்துத் திருமணத்திற்கு விண்ணப்பம் ஏதும் போடப் போகிறானா என்ற ஆசையும் உதிக்காமல் இல்லை. ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்திய விக்ரம் அவள் இறங்கிக் கொண்டதும் துப்பட்டாவை உருவினான். அதனால் அவளின் கண்களைக் கட்டியவன் செங்கரம் தனை அழுந்தப் பற்றி நடத்திக் கூட்டிச் சென்றான். நான்கு வளைவுகளுக்குத் தொடர்ந்து மாடிப் படியேறியவள், கிரீச்சென்ற சத்தத்துடன் தகரக் கதவு திறக்க, நிலைப்படியைத் தாண்டித் தன் பட்டுப் போன்ற பாதமெடுத்து வைத்தாள். அவள் உள்ளே வந்ததும் வராததுமாக அவளைச் சுவரோடு தள்ளி நிறுத்தியவன் கண்கட்டை அவிழ்த்தான்.

“யார் வீடுடா இது? காலியா இருக்கு” நாலாபுறமும் விழிகளால் அலசியபடி அவள் கேட்டாள்

அவள் முன் சாவியைத் தொங்க விட்டவன் “நம்ம வீடு தான், பேபி. உன் ட்ரெயினிங் பீரியட் முடியுற வர, மூணு மாசம் இங்க என்ஜாய் பண்ணுறோம்” என்று கூறி அவள் மீது சாய்ந்து நின்றான்

“ஹே... ஹௌ இஸ் திஸ் ஈவன் பாசிபிள்? எப்படி இதுக்கு ஒத்துக்கிட்டாங்க?”

“நமக்காகவே தேடிப் பிடிச்சேன். இந்த ப்ராப்பர்ட்டியோட ஓனர் ஃபேமிலி ஃபாரின்லயே செட்டில்டு. நம்ம ரெண்டு பேரோட ஜாய்னிங் ஆர்டர்ஸ மெயில்ல அனுப்புனேன். தே அக்சப்டட் அஸ்”

“ஃபிராடு, ஃப்ளாஷ் மாரி செம ஸ்பீட்ல வொர்க் பண்ணிருக்க. குட் பாய்”

வெண்டை விரல்களைக் கொண்டு அவனது அடர்ந்த கேசத்தைக் கலைத்து விளையாடினாள்

மேலும் அவள் மீது அழுத்தமாகப் படிந்தவன் இருவரின் இமை முடிகள் உரசும் நெருக்கத்தில் ஏக்கமாய் வினவினான் “இவ்ளோ செஞ்ச குட் பாய்க்கு நீ என்ன தரப் போற?”

“என்ன வேணும்னு டிசைட் பண்ணிட்டுத் தான கேக்குற. டேக் வாட்எவர் யூ வான்ட்...”

“ப்பா... எத்தன நாள் வெய்ட் பண்ண வச்சுட்ட. இன்னைக்குத் தான் எனக்கு மோட்சம் கிடைக்கப் போகுது” என்றவன் ஆசையாக அவளின் நீள்வடிவக் காதுமடலில் மூக்கை வைத்து உராய்ந்தான்

“ஸ்டாப். ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், கோ அன்ட் பை சம் கான்டம்ஸ். எதாவது சொதப்பிட்டீன்னா என் கரியர் ஸ்டார்ட் ஆகுமுன்னவே என்ட் ஆய்டும்”

தனது பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டவன் அவள் கேட்டதை எடுத்துக் காட்டினான் “டொட்டடொய்ன்... ஏற்கனவே வாங்கி வச்சுட்டேன்”

“யூ நாட்டி” என்று சிலிர்த்தவளோ தம் கரங்களால் அவன் கழுத்திற்கு மாலை சூடி இதழ்களோடு இதழ்களை ஒற்றினாள்

கண்ணிமைக்காமல் அவனது சௌந்தர்ய முகத்தைப் பருகியவள் இருநூறு சதவீதம் தன்னை அவனிடம் ஒப்புவிக்க முன்வந்தாள். அந்த நாள் இருவருக்கும் இனியதாகவே கழிந்தது. ஆனால், அடுத்து வந்த மாதங்கள் கொடுமையிலும் கொடுமை. ஏன் தான் ஒன்றாகத் தங்கியிருக்கிறோமோ என இருவருமே நொந்து போகிற அளவு ஏராளமான சண்டைகள் சச்சரவுகள். ஜெனிக்கு விக்ரம் தன்னை விடக் குறைவான சம்பளம் பெறுவது உறுத்தலாகவே இருந்தது. இந்நிலையில் இவனைப் பற்றித் தன் வீட்டில் எப்படிப் பேசிச் சம்மதம் வாங்கப் போகிறோமோ என்கிற மன உளைச்சல் வேறு.

விக்ரம் மூச்சுக்கு முந்நூறு தடவைகள் திருமணம், குழந்தை குட்டிகள் எனப் பேச அவளுக்கு வெறுத்துப் போனது. காதலிக்கிறேன் என்று சொன்னாலே அவளது அப்பா வார்த்தைகளால் குதறி விடுவார். அதுவும் இந்து மதத்தைப் பின்பற்றும் ஒருவனைத் திருமணம் செய்ய விரும்புவது தெரிந்தால்... சந்தேகமே வேண்டாம்; கொலை தான். ஒன்று தாம் சாக வேண்டும் அல்லது விக்ரமின் உயிர் பறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. காதலிக்கும் போது வராத பயம் திருமணத்தைப் பற்றிய பேச்சு வரவும் திடீரென வந்து தொற்றிக் கொண்டது. இதை அவனிடம் சொன்னால் அவன் புரிந்து கொள்ள மாட்டான் என்பது ஜெனியின் எண்ணம்.

உயிரை விடவும் காதல் பெரிது என்று பிடிவாதம் செய்பவன் விக்ரம். அந்த விஷயம் அவளுக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், அவளோ நிஜ உலகத்திற்கு இந்த சினிமா வசனங்கள் ஒத்துவராது எனத் தீவிரமாக நம்புபவள். குடும்பத்தினருடன் பிரச்சினை செய்து கொண்டு தனியாக வேதனைப்படுவதை விட, இருவரும் பிரிந்து நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே அவளுக்குச் சரியாகப்பட்டது. மற்றபடி தன் காதலனின் உணர்வுகள் என்னாகும்; இத்தனை வருடக் காதலை எப்படித் தூக்கி எறிவது என்பதை அவள் கருத்தில் கொள்ளவில்லை. இத்தோடு நாம் விலகிச் சென்றிடலாம் என்றாவது அவனிடம் நேரடியாகச் சொல்லி இருக்கலாம். அதற்கும் அவள் மனம் துணியவில்லை. இதோ அதோ என்று கோவையில் பயிற்சி முடிந்து அவள் சென்னை புறப்படும் நாளும் வந்தது.

“இன்னைக்கே போயாகணுமா?”

“வாட் கைன்ட் ஆஃப் கொஸ்டின் இஸ் தட்? டெஃபனட்டா போயே தீரணும்”

“சரி, போறதுக்கு முன்னாடி உன் ப்ளான் என்னன்னாச்சும் சொல்லிட்டுப் போ. உங்க வீட்டுல நம்மளப் பத்தி எப்ப சொல்லப் போற? இத்தன நாள் நாம டிஸ்கஸ் பண்ணியும் உருப்படியா ஒரு முடிவும் எடுக்கல”

“ஒன்னும் அவசரம் இல்ல, விக்ரம். கிவ் மீ சம் மோர் டைம் டு திங்க்”

“அவசரம் இல்லயா? அவசியம் இல்லயா, ஜெனிஃபர்?”

“கிளம்புற டைம்ல இர்ரிடேட் பண்ணாத, ப்ளீஸ்...”

“அப்றம் என்னடி? எங்க வீட்டுல எந்தப் பிரச்சனயும் இல்ல. என் அண்ணனுக்கும் கல்யாணம் ஆகி பேபி இருக்கு. அடுத்து எனக்கு எப்போ கல்யாணன்னு தான் கேப்பாங்க? வேலை வேணும்னு சொன்ன. எனக்கு ஜாப் கிடைச்சாச்சு. நீயும் வேலை பாக்குற. இதுக்கு மேலயும் என்ன?”

“வாட் டு யூ எக்ஸ்பெக்ட் ஃப்ரம் மீ... உன் கூட இந்த சீப்பான ப்ளேஸ்லயே லைஃப ஓட்டணுமா? எப்பவும் நீ சொல்றத ஒபே பண்ணணுமா? எனி டைம் மேட்டர் பண்ணிட்டே இருக்கணுமா?”

“நான் என்ன சொல்றேன். நீ என்ன பேசிட்டுருக்க?”

“இப்பவே மேரேஜ் பண்ணா நெக்ஸ்ட் இயரே பேபி வந்துரும். அப்றம், அத வளத்து ஆளாக்கணும். என்னால அப்டி வீட்டோடலாம் இருக்க முடியாது. அதுக்கு வேற ஆளப் பாரு”

“உன்ன யாருடி வீட்டுல இருக்கச் சொன்னது? கல்யாணம் மட்டும் பண்ணிக்க. அப்றம் உன் விருப்பப்படி வேலைக்குப் போ. யாரும் உன்னைத் தடுக்கல”

“மேரேஜ் ஆன பொண்ணுங்கள இன்டஸ்ட்ரில யாரும் ப்ரஃபர் பண்ண மாட்டாங்க”

“அது கூட வேணாம். உன் ஃபாதர்ட்டச் சொல்லி ஒரு மீட்டிங்காவது அரேஞ்ஜ் பண்ணு. அட்லீஸ்ட் மேரேஜுக்கு பர்மிஷன் வாங்கிக்குறேன். லைஃப் விஷயம்மா. தள்ளிப் போட்டுட்டே இருந்தா ஒன்னுமில்லாமப் போய்டும்”

“அவரு முன்னாடிப் போய் நிக்குற அளவுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு?”

“உன் பேச்சு எதுவும் சரியில்ல, ஜெனி”

“நல்ல கம்பனில நல்ல சேலரில வேலைக்குப் போ. ஆஃப்டர் தட் உன்னைப் பத்தி வீட்டுல ஓப்பன் பண்ணுறேன்”

“நல்ல கம்பனி, நல்ல சம்பளம்... திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் ஜாப். இந்த இடம் நாம மொத முறையா சேந்து வாழ்ந்த வீடு. இதுவே உனக்குப் பிடிக்கலன்னு இப்போ தான் புரியுது. இது போதலன்னு சொல்ற உனக்கு எதுவுமே போதாது; எப்பவுமே போதாது, ஜெனி”

“மென்டல் டார்ச்சர் கொடுக்குற, விக்ரம்”

“ம்ம்ம்... நானா வந்து உன்னை வான்ட்டடா லவ் பண்ணேன்?”

“டைம் ஆகுது. நான் போகணும்”

“இன்னும் பேசி முடியல”

“மத்தத ஃபோன்லப் பேசிக்கலாம்”

“ஓகே... ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் டிராப் பண்ண வரேன்”

“எதுல டிராப் பண்ணுவ? கார்லயா? ஓவ்னா பைக் எதும் வச்சிருக்கியா?”

“ஒரு ஆட்டோ கூப்புட்டா வரப் போகுது. அதுக்கெதுக்கு...”

“ஆட்டோலத் தான? எனக்கே போய்க்கத் தெரியும். கூட வந்து மட்டும் பாசிட்டிவா எதும் பேசப் போறியா? அகெய்ன் ஆர்க்யூமென்ட் பண்ணுவ. தனியா போனா பீஸ்ஃபுல்லா இருப்பேன்”

மென்மேலும் புண்படச் செய்தவள் அவன் முகத்தைத் திரும்பிக் கூட பாராமல் புறப்பட்டாள். ஆசாபாசம் இருந்தும் விக்ரம் அவள் பின்னே ஓடவில்லை. தெருவின் கடைக்கோடியில் அவள் சென்று மறையும் வரை பார்த்திருந்தவனின் நெஞ்சம் மெழுகு போல உருகியது. அவளோ வார்த்தைத் தீயால் சுட்டு அவனை மொத்தமாய் உருகுலைக்கவே பார்த்தாள்.

உருகுலைந்த இதயத்திற்கு உரியவன் காலப்போக்கில் ஓரளவு குளிர்ந்து, இன்று திருமண வரவேற்பிற்காகப் புன்னகை முகமாக நின்று கொண்டிருக்கிறான். இந்நிகழ்விற்கு வந்திருந்த உறவினர்கள் கூட்டத்தை விட, விக்ரமின் நண்பர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. வாழ்த்து சொல்ல ஒவ்வொரு குழுவாய் மேடையேறி இறங்க பத்மா சோர்ந்து போனாள். நீண்ட நேரமாகக் கால்கள் கடுக்க நின்றவள் ஒரு கட்டத்தில் ஓய்ந்து போய் அமர்ந்து விட்டாள். மணமக்களை நெருங்கியிருக்கச் செய்து பிரத்தியேகமாகப் புகைப்படங்கள் எடுக்கும் பணி மட்டும் மீதம் இருந்தது.

“ஆர் யூ ஆல்ரைட், பத்மா?”

“என்னனு தெரியல. ஓவர் டயர்டா இருக்கு”

“இத்தோட முடிச்சுக்கலாம். ஃபோட்டோகிராஃபர், இதுவே போதும். நிறுத்திடுங்க”

“உங்களுக்கு இவ்ளோ ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்கன்னு சொல்லவே இல்ல”

“காலேஜ்மேட்ஸ் யாரும் வரலயான்னு மேரேஜ் அப்போ கேட்டியே. அதான் எல்லாரயும் இன்வைட் பண்ணேன். யூ ஆஸ்க்டு ஃபார் இட்”

“அதுக்குன்னு இத்தன பேரா? முடியல, சாமி...”

“அம்மா, தண்ணி எடுத்து வா...”

விக்ரம் கேட்கவும் கிரிஜா மேடை வரை வந்து மருமகளுக்குப் பருக நீர் தந்தார்

“கெஸ்ட் எல்லாரும் சாப்டப் போயிட்டாங்க. நீங்க கூச்சப்படாம ஜோடியா ஃபோட்டோ எடுத்துக்கங்கப்பா”

“வேணாம், மம்மி. மூட் இல்ல”

“ஏன்டாப்பா, வேணாம்னு சொல்ற. உனக்கு விருப்பம் இல்லன்னாலும், அந்தப் பொண்ணுக்கு ஆச இருக்கும்ல”

“இல்ல, ஆன்ட்டி. நான் தான்...”

அவளை விக்ரம் பேசவே விடவில்லை “வேணாம்னா விட்ரணும். ஏன் எதுக்குன்னு கேள்விலாம் கேட்டுட்டு இருக்கக் கூடாது”

கிரிஜா அமைதியாகச் சென்று விட, பத்மா அதிருப்தியில் அவனை நோக்கினாள்

ஏன் இந்தக் கோபம் மணவாளா!