மாமியாரிடம் தன் கணவன் அவ்வாறு சூடாகப் பேசியதை பத்மப்பிரியா விரும்பவில்லை
“ஏன் அம்மாட்ட அப்டிப் பேசுனீங்க? கோவம் ஜாஸ்தி வருமோ?”
“விட்டா மேல மேலக் கேள்வியாக் கேப்பாங்க. இப்டி வாய அடைச்சாத் தான் சீக்ரம் வீட்டுக்குப் போலாம். நீயும் ரெஸ்ட் எடுக்க முடியும்” என விக்ரம் விளக்கம் அளித்தான்
இரவோடு இரவாக பத்மா வீட்டினர் பொள்ளாச்சியை நோக்கிப் புறப்பட்டு விட, அவர்களை வழியனுப்பியவள் விக்ரமின் அறைக்கு வந்து படுத்தாள். மோகன் அக்ஷதாவை வரவேற்பிற்கு அனுப்பி வைக்காமல் போகவே அதை எண்ணி மனம் வருந்தினாள். சிறிது நேரத்திற்கெல்லாம் இருந்த களைப்பில் பல்லி போல சுவரோடு ஒட்டிப் படுத்துத் தூங்கியும் போனாள். குளித்து முடித்து விக்ரம் தூங்க வந்த நேரம் அவளது அலைபேசி ஓசை எழுப்பியது. அந்த இரவு நேரத்தில் அழைப்பொலி கேட்டதும் ஒரு வேகத்தில் அதைக் கையில் எடுத்தான். செவிக்கு மிக அருகில் ஒலித்தும் எழ முடியாத அளவிற்கு பத்மா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
திரையில் அழைப்பவரின் பெயருக்குப் பதிலாக ‘டு நாட் அட்டென்ட்’ எனும் வாக்கியம் ஒளிர்ந்தது. அதைப் பார்த்துவிட்டு அழைப்பது யாராக இருந்தால் நமக்கென்ன என்று எண்ணியவன், சைலன்ட் மோடில் இட்டுக் கைப்பேசியை எடுத்த இடத்திலேயே வைத்தான். இவனல்லவோ சிறந்த கணவன்! மனைவியிடம் இருந்து நான்கு அடி இடைவெளிவிட்டு ஒழுக்கச் சீலனாக அவன் வேண்டுமானால் உறங்கட்டும். நாம் இந்த அழைப்பைத் தயவு செய்து ஏற்க வேண்டாம் என்ற எச்சரிக்கைக்குச் சொந்தமானவன் யார் என்று பார்ப்போம். அப்படியானால் மட்டுமே பத்மாவைப் பற்றி விவரமாகத் தெரிய வரும்.
அவள் உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் இளமறிவியல் வேதியியல் படித்துக் கொண்டிருந்த சமயம். அவளுக்குக் கல்லூரி முழுக்கத் தோழர்களும் தோழிகளும் பலர் இருக்கவே செய்தனர். இனிமையாகச் சென்று கொண்டிருந்த கல்லூரி நாட்களில் காதல் என்ற பெயரில் அவ்வப்போது சில முட்டுக் கட்டைகள் விழுந்தன. அவள் தோழனாக நினைத்துப் பழகுபவர்களில் சிலர் வந்து காதலிப்பதாகச் சொல்வதும், அவளின் தோழிகள் அதை ஆமோதித்து ஏற்றி விடுவதுமாக இருந்தனர்.
அதனால் தன் படிப்பு கெட்டு விடும் என்பது பத்மாவின் முதல் பயமாக இருந்தது. ஏற்கனவே காதலிப்பதாகச் சுற்றிக் கொண்டிருப்பவர்களைப் பார்க்கும் போது, அவர்களுக்கு இடையே வரும் தன்னுடமை மோதல்கள் அவளுக்கு இரண்டாவது பெரிய பயமாக அமைந்து போனது. ஒருவேளை காதலித்தாலும் அவ்விஷயம் வீட்டிற்குத் தெரிய வந்தால் செருப்படி நிச்சயம் என்பது கடைசி பட்சமான அதிமுக்கிய பயம்.
ஆதலால் காதல் செய்யாதே என அவளது மனம் சிவப்புக் கொடியைத் தெளிவாகவும் வேகமாகவும் வீசியது. அவளுக்குத் தோழர்களுடன் ஒளிவு மறைவின்றி பழக வேண்டும். ஆனால், அவர்கள் நட்பெனும் கோட்டைத் தாண்டி முன்னேறக் கூடாது. தோழிகள் அவளிடம் காதல் என்ற பேச்சையே எடுக்கக் கூடாது. இதற்கெல்லாம் சேர்த்து ஒரு விசித்திரமான தீர்வும் அவள் சிந்தனையில் தோன்றியது.
அப்போதைய நிலையைச் சரிகட்ட அவளுக்கு ஒரு கற்பனைக் காதலன் தேவைப்பட்டான். அந்த கனவுக் காதலனுக்கு அவள் உருவம் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் சிறு அரவம் கேட்டது. பின்னால் திரும்பிப் பார்க்க அவள் அமர்ந்திருந்த அதே மரத்தடியில் ஒரு மாணவன் வந்து அமர்ந்தான். அவன் முகம் ஏனோ வாட்டமாய்த் தெரிய ப்ரியா காரணம் தேட விழைந்தாள்.
“அபிலாஷ், ரைட்?”
அப்போது தான் அவள் இருப்பதையே கவனித்தவன் கண் கண்ணாடியைச் சரிசெய்த படி பேசலானான்
“ஆமா. என் பேரு உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“நீ நல்லா டிராவ் பண்ணுவ தான. நான் பாத்துருக்கேன். யுவர் ஆர்ட் இஸ் கிரேட்”
“தேங்க் யூ. நான் கூட உங்களப் பாத்துருக்கேன். இன்டர் காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல டேன்ஸ் ஆடி ப்ரைஸ் வின் பண்ணீங்களே”
“இந்த நீங்க, வாங்கலாம் வேணாம். நானும் ஃபர்ஸ்ட் இயர் தான். நார்மலாவே கூப்புடு”
“நீ, வா, போ... ஓகேயா?”
“ம்ம்ம்... அன்னைக்கு என்னை விட சூப்பரா நெறய பேர் ஆட்னாங்க. எனக்கு தேர்ட் ப்ரைஸ் தான் கிடைச்சது. அந்த கல்சுரல்ஸ்க்கு நீயும் வந்துருந்தியா? உன்னை நான் கவனிக்காம விட்டனே. அந்தக் கூட்டத்துல என்னை எப்டி நியாபகம் வச்சுருக்க?”
“ஒரு தடவ பாத்தா மறந்துருக்கும். எல்லா காம்பட்டேஷன்லயும் உன் பேரு இருக்கு; காலேஜ் ஃபங்க்ஷன்ல குரூப் டேன்ஸ்னா கூட நீ தான் சென்டர் ஆஃப் அட்ராக்ஷன். உன்னைத் தெரியாதவங்க யார் இருக்க முடியும்? ப்ரியா தான உன் பேரு”
“யெஸ். பத்மப்பிரியா”
“பத்மா; லோட்டஸ்... உனக்கேத்தப் பேரு”
“ஹையடா. ஐஸ் வைக்காத”
“எப்பவும் உன்னைச் சுத்தி ஒரு கேங் இருந்துட்டே இருப்பாங்களே. இன்னைக்கு என்ன தனியா உக்காந்துருக்க?”
“கொஞ்சம் தனிமை தேவப்பட்டுச்சு. இவ்ளோ நேரம் ஒரு விஷயத்தப் பத்தி டீப்பா திங்க் பண்ணிட்டு இருந்தேன். அத விடு. நீ ஏன் சோகமா இருக்க?”
“சொல்லுவேன். கிண்டல் பண்ணக் கூடாது. வேற யார்ட்டயும் சொல்லவும் கூடாது”
“ச்ச்ச ச்ச்ச. ஐ அம் தி பெஸ்ட் சீக்ரெட் கீப்பர்”
“இங்க ஜாய்ன் பண்ணி ஒரு வருஷம் முடியப் போகுது. இன்னுமே எனக்கு இந்த காலேஜ் செட் ஆக மாட்டேங்குது. ஃப்ரென்ட்ஸ் யாரும் அமையல. ரொம்பத் தனியா இருக்குற மாரி ஃபீல் ஆகுது. என் பெயின்டிங்க்ஸ் ரீச் ஆன அளவுக்குக் கூட, என்னைப் பத்தி இங்கப் படிக்குற யாருக்கும் தெரியல. நெனச்சாலே கஷ்டமா இருக்கு”
“இதெல்லாம் ஒரு பிரச்சனையா? டெய்லி நாலு ஸ்டூடன்ட்ஸ பாத்து ஸ்மைல் பண்ணு. நாலுல ஒருத்தங்களாவது கண்டிப்பா ஃப்ரென்ட் ஆயிடுவாங்க. எங்க, ஒருக்கா இளிச்சுக் காட்டு”
அவன் கூச்சத்துடன் இதழ்களை விரிக்க, அவள் அவனை உற்சாகப்படுத்தும் வேலையில் இறங்கினாள்
“க்யூட்டு க்யூட்டு. நான் தான் உனக்கு முதல் போனி; ச்சீ, முதல் தோழி... இன்னைலருந்து நாம ரெண்டு பேரும் பிரன்ட்ஸ். கையக் கொடு...”
உண்மையான சந்தோஷம் பொங்க அவளுடன் கரம் குலுக்கியவன் இப்போது அவளுடைய விவகாரத்தில் தலையிட்டான்
“ஆமா, ஏதோ ஆழ்ந்த சிந்தனைல இருந்ததா சொன்னியே. அது எதப் பத்தி? தோழியோட குழப்பத்தத் தீக்குறது இந்தத் தோழனோட தலையாயக் கடமை அல்லவா?”
“அடடடடா, என்னா கரிசனம்! என்னவொரு அக்கற! சொன்ன உடனே முடிச்சு வச்சுருவியா? உனக்கு அந்த அளவுக்கு அனுபவம் பத்தாது, பையா”
“நீ சொல்லேன்; கேப்போம்... ஒரு எக்கனாமிக்ஸ் டாப்பர்ட்டப் பேசிட்டுருக்கன்றத நியாபகம் வச்சுக்க. கணக்குல நான் எவ்ளோ பெரிய புலி தெரியுமா? ஐ கேன் சால்வ் எனிதிங்”
“மூஞ்சூறு மாரி இருந்துட்டு நீ புலியா? சரி, சரி... ஆளப் பாத்து எடை போடக் கூடாதும்பாங்க. அதனாலச் சொல்றேன். எனக்கொரு லவ்வர் வேணும். என்னை அவன் கேள்வி கேக்கக் கூடாது; ஒரு லிமிட்டுக்குள்ள அடைக்கக் கூடாது; என் இஷ்டப்படி விட்ரணும். ரியாலிட்டில அப்டி ஒரு ஆளே கிடயாது. பட் என் நட்புக்களோட வாய அடைக்கப் பேருக்காச்சும் ஒருத்தன் வேணும்”
“ஓ... இதான் உன் ப்ராப்ளமா... அப்டியே நீ இமேஜினேஷன்ல ஒருத்தன கிரியேட் பண்ணாலும், உன் ஃப்ரென்ட்ஸ் கேங்கு நேர்லப் பாக்கணும்னு கேப்பாங்களே; அப்போ என்ன பண்ணுவ? நேர்ல வேணாம்; ஒரு ஃபோட்டோவாது காட்டும்பாங்க. அதுக்கு எங்கப் போவ?”
“என்ன செய்ய... ஆன், வாலி பட அஜித்து மாரி எங்கயாச்சும் ஆட்டையப் போட்ற வேண்டியது தான்”
“இன்கேஸ் அவன்கிட்டப் பேசணும்னு சொன்னாங்கன்னா? கொறஞ்சது அவன் பேராவது என்னனு யோசிச்சி வச்சுட்டியா?”
“பேரு... என் கூட சுத்துறதுங்கள விட நீ தான்டா அதிகம் கொஸ்டின் பண்ற. பேசாம உன்னையே கொண்டு போய் நிறுத்தி...” என்றவளுக்கு அந்தத் தீடீர் யோசனை மண்டைக்கு மேல் பிரகாசித்தது
“இதுவே செம்ம ஐடியால...”
அவள் யோசனை இதுவாகத் தான் இருக்கும் என ஞான திருஷ்டியில் அறிந்த அபியோ மறுப்பாய்த் தலையாட்டினான்
“நோ, நோ... எனக்குப் பொய் சொல்ல வராது... உன் ஆட்டைல என்ன இழுக்காத, தாயி. உனக்குப் புண்ணியமாப் போகும்”
“நீ பொய் சொல்லாமப் போனா என்ன? நான் அருமையா, கலர் கலரா ரீல் சுத்துவேன். எதப் பத்தியும் கவலப்படாத. என் கேங்க்லயே நீயும் ஐக்கியம் ஆய்க்கலாம். என் பிரன்ட்ஸ், உனக்கும் பிரன்ட்ஸ்... இன்னும் டூ இயர்ஸ் லவ்வர்ஸ் மாரியே ஆக்டிங்கப் போட்றோம்; ஃபன் பண்றோம்; எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம ஸ்டடிஸ முடிக்குறோம். அம்புட்டுத்தேன்... காலேஜ் முடிஞ்சவாட்டி அவங்கவங்க வேலையப் பாத்துட்டுப் போய்டுவாங்க. அதயும் மீறி யாராச்சும் எதாச்சும் கேட்டா, ப்ரேக்அப் ஆகிப் போச்சுன்னு சொல்லிச் சமாளிச்சுடலாம். வி வில் பி ஃப்ரென்ட்ஸ் ஃபார்எவர்...”
“ஏய், நான் இன்னும் உன் பிளானுக்கு ஒத்துக்கவே இல்ல. அப்டியே அடுக்கிட்டே போற”
அவள் அவனது ஒத்துழைப்பிற்குக் காத்திராமல் அவ்வழியே போன தனது நண்பர்களை வலிய அழைத்தாள். உடனடியாக, அவளது ஏமாற்று வழிமுறையின் முதல் கட்டத்தை நடைமுறையும் படுத்தினாள்.
“ஹே, கவி, ராஜேஷ்... எங்கப்பா போனீங்க? இக்கட ரா. மீட் மை நியூ ஃப்ரென்ட், அபி...”
அன்றில் இருந்து அபிலாஷுக்கு நண்பர்கள் இல்லாத குறை தீர்ந்தது; கல்லூரி வாழ்வில் தனிமை என்ற சொல்லுக்கே இடமில்லாமல் போனது. மற்றவர்களை விடவும் அவனிற்கு பத்மாவிடம் பேசுவது எளிதாக இருந்தது. எந்தவித தடுமாற்றமும் இல்லாத புரிதல் அவளிடமிருந்து கிடைத்தது. அபியும் அவளும் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பேசித் தீர்க்க, அவர்கள் காதலிப்பதாகத் தானாகவே வதந்தி ஒன்று கிளம்பியது. இருவரும் அதை மறுக்காமல் போகவே, மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என மற்றவர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
பத்மாவிற்கு உற்றதொரு தோழன் கிடைத்த உணர்வு. அவனிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் மனம் விட்டுப் பேச முடிந்தது. அதனாலேயே அவனுடன் அதிக நேரம் செலவிட ஆரம்பித்தாள். சோகமாக இருந்தால் கூட தயக்கமின்றி அவனது தோள்களில் சாய்ந்து கொள்வாள். குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு நிறையவே நம்பிக்கை வைத்திருந்தாள். ஒருநாள் அவன் கல்லூரிக்கு வரவில்லை என்றாலும் ப்ரியாவின் துள்ளல் குறைந்து போகும். அவன் உடனிருக்கும் காரணத்தால் மற்ற ஆண் நண்பர்கள் காதல் பூவை எறிந்து அவளைச் சங்கடப்படுத்தும் வாய்ப்பு அமையவில்லை. அவர்களின் திட்டப்படி அனைத்தும் சரியாகப் போய்க் கொண்டிருந்தது; அபி அவள் மீது காதல் வயப்படாத வரை.
அவள் தன்னுடன் இயல்பாகப் பேசுவதும், சிரித்து விளையாடுவதும், பொழுதுபோக்க விரும்புவதும் அவனைத் தனித்துவமாக உணர வைத்தன. அவர்களது நட்பின் தொடக்கத்தில் அவளிட்ட வரைமுறைகள் மறந்து அவன் கனவினில் பறந்தான்; வாலிபக் காற்றினில் மிதந்தான். அவள் இதுவரை ஆசை வார்த்தைகள் ஏதும் பேசி அவனைத் தூண்டியதில்லை. கல்லூரிக்கு வெளியே, நட்பு வட்டாரம் இல்லாமல் தனித்து, ரகசியமாக அவனோடு திரிந்ததும் கிடையாது. வழக்கமாக பத்மா செய்யும் செயல்களுக்குத் தனக்குள் புதுப்பாடம் கற்பித்துக் கொண்டான் அபிலாஷ். கல்லூரியின் இறுதி நாளில் தன் இதயத்தை அவளுக்குத் திறந்து காட்டுவதென முடிவும் செய்தான்.
உயிர் நட்பு காதல் ஆகுமா!