விக்ரமின் விழிகளைப் பார்த்து பத்மப்பிரியா பதிலளித்தாள் “எனக்கு சீன் போட்றது, வெட்டி பந்தா காட்றதுலாம் புடிக்காது. ஒன்னு வேணும்னா வேணும்; வேணாம்னா வேணாம்; ஃபுல் ஸ்டாப்”
“நோ மீன்ஸ் நோவா?”
“அது என்ன ரூம்?” மீதம் இருந்த ஒரு அறையை அவள் சுட்டினாள்
அவன் முகத்தை நேராய் வைத்துக் கொண்டே சொன்னான் “நானும் ஆர். கே. வும் எங்களோட அடுத்த ராப்பரியப் பத்தின எல்லா டீடெயில்ஸயும், அந்த ரூம்லத் தான் எழுதி ஒட்டி வச்சுருக்கோம். டாப் சீக்ரெட்... யாரும் உள்ள போகக் கூடாது”
“இந்த லொள்ளுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல”
“அது ஒரு வேஸ்ட் ரூம், பத்மா. இந்த வீட்டு ஓனரோட பழய திங்க்ஸ் கொஞ்சம் கிடக்கும் போல. நாங்களே இதுவர தொறந்து பாத்ததில்ல. சரி, நீ ரிலாக்ஸா டிவி பாரு. நான் போய் உன் சாப்பாட்டுலக் கொஞ்சம் மயக்க மருந்து கலந்து எடுத்தாரேன்” என அலட்டல் இல்லாமல் கூறியவன் தொலைக்காட்சிப் பெட்டியை ஓடவிட
அவன் பேச்சில் சிரிக்கத் தோன்றினாலும், அதை இதழுக்கடியில் மறைத்து, மென்மையாக அவனைக் கண்டித்தாள் “விக்ரம், வேற எந்தப் பொண்ணுட்டயும் இப்டிப் பேசி வச்சுராதீங்க. அப்றம் போலீஸ்லப் புடிச்சுக் குடுத்துடப் போறாங்க. ஜாக்கிரத”
விக்ரம் சமையல் வேலையைப் பார்க்கச் சென்று விட, பத்மா மெல்ல அடியெடுத்து வைத்து அவனது அறைக்குள் சென்றாள். பொருட்கள் யாவும் அதனதன் இடத்தில் ஒழுங்காக வைக்கப்பட்டு இருந்தன. அவளை விடவும் அறையை நன்றாகப் பராமரித்து வைத்திருந்தான். ஒரு மெத்தை, அழகு பார்க்கும் ஆளுயரக் கண்ணாடி, மடிக்கணினியில் வேலை பார்க்க அகன்ற மேசை நாற்காலியும் அங்கு இருந்தன. அங்கேயே குளியலறை, கழிப்பறை வசதி இருந்தது. அலமாரியில் துணிகள் அடுக்கப்பட்டிருக்கக் கையை இடையில் விட்டுத் தேடினாள்; அவனது ரகசியங்கள் எதுவும் தட்டுப்படுகிறதா என்று.
அத்தேடலில் புகையோ போதைப் பொருட்களோ எதுவும் சிக்கவில்லை. கட்டிலுக்கு அடியில் சில அட்டைப் பெட்டிகள் இருந்தன. சந்தேகமே வேண்டாம்; அதில் கிடந்தவை காலி மதுப் புட்டிகள் தாம். அதை இருந்த இடத்திற்கே நகர்த்தியவள் ஆராயும் பார்வையோடு டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியைத் திறந்தாள். உள்ளே ஷாம்பூ, சோப்பு, வாசனைத் திரவியங்கள் தவிர்த்துச் சிறிய நகைப்பெட்டி இருந்தது. அது தன்னகத்தே பத்திரப்படுத்தி வைத்திருந்தது ‘ஜெ’ எழுத்தில் டாலர் கொண்ட மெல்லிய தங்க செயின். அதற்குச் சொந்தக்காரி ஜெனியாக இருக்கலாம் என்று தோன்ற, அதையும் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டாள்.
விக்ரமும் ராமும் உணவுடன் வந்த போது, பத்மா செய்தித் தாளால் உணவுமேசையைத் துடைத்துச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அவள் அறைக்குள் சென்று ஆராய்ச்சி செய்ததை எல்லாம் அவளது வாழ்க்கைத் துணை அறியான். அவர்கள் மூவரும் பேசியபடியே உண்டு முடித்தனர். பேச்சுகளுக்கு நடுவே ராமின் சிந்தனையில் ஒரு கேள்வி மட்டும் ஓயாமல் ஓடிக் கொண்டிருந்தது. அதை வாய்விட்டு அவனால் சட்டென்று கேட்க முடியவில்லை. அந்த வினா பத்மாவின் சிநேகிதி மதுரேகாவைப் பற்றியது. அவளைப் பற்றி இவன் ஏன் கேட்க வேண்டும்; இவனுக்கும் ரேகாவிற்கும் என்ன தொடர்பு என்பவற்றைப் பின்னால் பார்ப்போம்.
கைப்பையை எடுத்துக் கொண்ட பத்மா “அப்போ நான் கிளம்புறேன்” என்றாள்
“இந்த நேரத்துலத் தனியா போறீங்களா? விக்ரம், போய் விட்டுட்டு வாடா” சொன்னவன் ராம்
“இல்ல, இவ்ளோ பெரிய பேக்க வச்சுட்டு பைக்குலப் போக முடியாது. நான் ஆட்டோலயே போய்க்குறேன்; வசதியா இருக்கும்” அவள் தயங்கி தயங்கிச் சொல்ல, விக்ரம் தெருமுனை வரை சென்று அவளை ஆட்டோவில் ஏற்றிவிட்டு வந்தான்
முகப்பில் நின்று நடப்பதைப் பார்த்த ராம், வீடு திரும்பிய நண்பனைக் கேள்விகளால் துளைத்தான்
“அதான், கார் வச்சிருக்கியேடா. அவளுக்குன்னு சொல்லித் தான அப்பாட்டக் கேட்டு வாங்குன. மெனக்கெட்டு பிரபா அண்ணன் வேற சர்வீஸ் பாத்து இங்க விட்டுப் போயிருக்காரு. நீயே அவளக் கூட்டிப் போறது. மரம் மாரி நிக்குற”
“அவளப் பத்தி உனக்குப் புரியல, டா. அவளுக்குன்னு நிறய ரூல்ஸ் அன்ட் பௌன்ட்ரீஸ் வச்சுருக்கா. அத மீறி நடந்தா தேவயில்லாத சண்ட வரும். எதுக்கு?”
“கல்யாணம்னு ஆனாலே சண்டை வரத் தான் செய்யும். சண்டை சச்சரவுக்குப் பயந்தா எப்புட்றா குடும்பம் நடத்துவ?”
“பாத்துக்கலாம், மச்சான். இன்னும் டைம் இருக்கு”
“மடப் புண்ணாக்கு... இதல்லாம் விட்ரு. வீடு எங்கப் பாக்கப் போறீங்க?”
“என்னா வீடு? அதான் உன் கூட தங்கி இருக்கனே”
“மேரேஜ் ஆய்டுச்சுல்ல. ரெண்டு பேரும் சேந்து ஒன்னா வாழணும்ல... அந்த ப்ளானும் இல்லயா? என்ன தான்டா உங்க ஐடியா? அவ என்னடான்னா தனியா ஆட்டோல ஏறிட்டுப் போறா. நீ என்னன்னா இங்கயே தங்கறது தாங்குற. ஒன்னும் புரியல...”
“உனக்கெதுக்கு இந்த மண்ட குடைச்சல்? போ, போய்ப் புள்ள குட்டியப் படிக்க வையு”
“அதுக இருந்தா நான் ஏன்டா உனக்குலாம் அட்வைஸ் பண்ணி மூக்க உடைச்சுக்கப் போறேன். எல்லாம் என் தலையெழுத்து”
“கரெக்ட்டு, மச்சான். நீயும் கல்யாணம் பண்ணிக்க. லைஃபே ரீஸ்டார்ட் ஆன மாரி அது தனி ஃபீலிங்கு”
“எது, உன்ன மாதிரியா? நீ இங்குட்டு, அவ அங்குட்டு; இப்டி வாழ்றதா இருந்தா எனக்கு அப்டியொரு கல்யாணமே வேணான்டா. நான் சிங்கிளாவே இருந்துக்குறேன்”
“மச்சான், காத்துருக்குறதுலயும் ஒரு சுகம் இருக்குடா. ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சு, பிடிச்சு, அப்றம் பொறுமையா...”
“நிறுத்து. இதுக்கு நீ ஆறு மாசம் கழிச்சே கல்யாணம் பண்ணிருக்கலாம். எதுக்காக ஒரு வாரத்துலயே தாலியக் கட்டணும்; அப்றம் ஆளுக்கொரு ஏரியால செப்பரேட்டா தங்கணும்? லைசென்ஸ வாங்கிட்டு வண்டி ஓட்டலைனா எப்டி, குமாரு?”
“நீ லைசென்ஸ் வாங்கும் போது என் கஷ்டம் தெரியும். அப்போ நானும் பாக்குறேன்; நீ எந்த லட்சணத்துல வண்டி ஓட்றனு. இப்போ போய் என்ஜினுக்கு ஆயில் போட்டுத் தொடச்சு வை; துருப்பிடிச்சுரப் போது”
“கருமம், கருமம். இந்தக் கன்றாவியலாம் காதாலக் கேக்கணும்னு எனக்கு இன்னைக்கு விதிச்சுருக்கும் போல”
“நீ தான்டா இந்தப் பேச்ச ஆரம்பிச்சு, வெண்று”
இருவரும் தோழமைக்கே உரிய மொழியில் மாறி மாறி வசைபாடிக் கொண்டு தத்தமது அறைக்குள் சென்று அடைந்தனர். அடுத்த நாள் விக்ரம் பணிக்குச் சென்று தனது இருக்கையில் அமர்ந்தது தான் தாமதம்; அங்குப் பணிபுரியும் அனைவரும் இனிப்பில் ஈ மொய்ப்பதைப் போல அவனை விசாரித்துத் தள்ளினர். அந்த அலுவலத்தின் ஆணழகனுக்குத் திருமணம் முடிந்துவிட்டது என்றால் சாதாரண விஷயமா? உடன் பணிபுரிபவர்களுக்கு அவனது தனிப்பட்ட வாழ்க்கையில் சிறு ஆர்வம் இருக்கவே செய்தது.
அங்கேயே அவனைக் காதலிக்கவென்று சில இளம் பெண்கள் வரிசையில் நிற்க, அவன் எவ்வாறு பெற்றோர் பார்த்த பெண்ணை மணந்தான் என்பதே அவர்களுக்கு வியப்பைத் தந்தது. திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அவனுக்கு இவள் அழகில் சற்று குறைவு தான்; இவளுக்கு வந்து வாய்த்திருக்கிறதே அதிர்ஷ்டம் என்ற புகைச்சலும் கிளம்பியது. அந்தக் கழுதைகளுக்கு பத்மாவெனும் கற்பூரத்தின் வாசனை என்றுமே தெரியப் போவதில்லை. அவர்களது கூரிய விசாரணைக்குச் சிரித்தபடியே விக்ரம் ஓரிரு வார்த்தைகளில் பதில் கூற, யாரும் அவனை எளிதில் விட்டபாடில்லை. துணை மேலாளர் கிருஷ்ண குமார் வரவும் அத்தனை பேரும் கல் பட்டக் காக்கைக் கூட்டம் போல கலைந்து போயினர்.
அவரும் வாய் நமநமக்க நேராக வந்து நின்றது அவனிடம் தான் “என்னடா, ஒரே என்ஜாய்மென்ட்டா? அதுக்குள்ள ஏன் ஆஃபிஸ் வந்த? காஷ்மீர் டு கன்னியாகுமரி ஹனிமூன் போய்ட்டு வர வேண்டியது தான”
“சிறப்பா செஞ்சுரலாம். ஆஃபிஸ் செலவுலயே டிக்கெட்ஸ் போட்டுருங்க. ஜோடியா போய்ட்டு வாரோம்”
“டிக்கெட் மட்டும் போதுமா? ரூம் ஏதும் புக் பண்ணித் தரவா?”
“அதயும் முடிச்சுத் தந்துட்டா வசதியாத் தான் இருக்கும். நான் வேணாம்னு சொல்ல மாட்டேன்”
“கொழுப்பு தான உனக்கு?”
“அப்றம் என்ன, சார்? ரெண்டு நாள் எக்ஸ்ட்ரா லீவ் கேட்டாலே தர மாட்றீங்க. இதுல ஹனிமூனுக்கு எப்போ போறது?”
“கொஞ்ச நாள் போகட்டும். நானே உனக்கு லீவ் வாங்கித் தரேன். மேனேஜர் வர மாரி இருக்கு. இப்போ வேலையப் பாரு”
“கே. கே.”
“அப்டிக் கூப்டாத, டா. உன்னைப் பாத்துட்டு இன்னும் நாலு பேரு அதயே ஃபாலோ பண்ணுவான்”
“ஓகே, ஓகேன்னு சொன்னேன், சீனியர் சார்”
இவனது குறும்பைப் பற்றி அறிந்தவர் முதுகில் ஒரு அடி இதமாக வைத்துவிட்டுத் தனது கேபினுக்குச் சென்றார். இவன் கூற்று என்னவோ மெய் தான். தற்போதைய துணை மேலாளர் ஒரு காலத்தில் இவனிற்கு மூத்த மாணாக்கராக இருந்தவர். சி. ஐ. டி. யில் அவன் தங்கியிருந்த அறைக்கு அருகிலேயே கிருஷ்ண குமாரின் விடுதி அறை. அவர் அப்போது முதுநிலை தொடர்புப் பொறியியல் பயின்று கொண்டிருந்தார். கல்லூரியில் அவரை கே. கே. என்று சுருக்கி அழைப்பது வழக்கம். படிப்பது முதல் குடிப்பது வரை அவருக்கும் விக்ரமிற்கும் நெருங்கிய உறவு. கோயம்புத்தூருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வந்ததில் இருந்து அவரின் வழிகாட்டல் இவனுக்கு இன்றியமையாததாகி விட்டது. கண்டிக்க வேண்டிய இடத்தில் எடுத்துச் சொல்வார்; தட்டிக் கொடுக்கும் வேளையில் நன்றாக ஊக்குவிப்பார். இவனும் அவர் பெயரைக் காப்பாற்றும் பொருட்டு தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வான். அலுவலகத்தில் இருவரும் நல்லதொரு கூட்டணி.
இந்த இன்பமான மனோநிலை இங்கு மட்டுமே சாத்தியமானது. சற்றே பின்னோக்கிச் சென்றால் இவன் இதற்கு முன் வேலை செய்த அலுவலகம்; இவனது மகிழ்ச்சியைச் சாறு போட்டு உறிஞ்சிக் கொண்ட இடம்; சென்னையில் ஜெனிஃபர் பணிக்குச் சேர்ந்த அதே பன்னாட்டு அலுவலகம். என்ன தான் அவள் தன்னை உதாசீனப்படுத்திச் சென்றாலும், அதை ஒரு காரணமாக வைத்து அவளை விட்டுப் பிரிய முடியவில்லை இவனால். தான் சிறந்த காதலனாக நடந்து கொள்ளவில்லை எனத் தன் மீதே பழி சுமத்திக் கொண்டான். குற்றவுணர்ச்சி உள்ளுக்குள் குடைய வெறித்தனமாகத் திறமையை வளர்த்தெடுக்க ஆரம்பித்தான். செமஸ்டர் தேர்விற்குக் கூட இவன் அந்தளவு தீவிரம் காட்டியது கிடையாது.
எப்படியாவது சென்னை அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து விட முண்டியடித்தான். அப்போது இவனுக்கு உதவியதும் ராம்குமார். அத்தருணம் ஜெனியுடன் தான் அவன் பணி புரிந்தான். பழைய பகையை மறந்து அங்கு நடக்கும் பலகட்ட தேர்விற்காக விக்ரமைத் தயார்படுத்தினான் ராம். இரண்டு எழுத்துத் தேர்வுகள், மூன்று நேர்முகத் தேர்வுகளைக் கடந்து விக்ரம் சென்னையில் வெற்றிகரமாகக் காலெடுத்து வைத்தான். அதற்கு அடுத்த வாரமே ஜெனிஃபர் கனடா பறந்து விட, நாயகனின் நிலை என்னவென்று சொல்லியா தெரிய வேண்டும்?
ஏனடி நிதம் வதம் செய்கிறாய்!