விக்ரம் சிலாகிப்புடன் பார்க்க, அவனின் துணைவியோ தீயாய் முறைத்துக் கொண்டிருந்தாள்
"இப்டியே ரெண்டு பேரும் தனித்தனியா இருந்தா எப்புடி? எப்போ தான் ஒன்னா வீடு எடுக்கப் போறீங்க? ஏன்டி பத்மா..." என்று மங்கை குடைய ஆரம்பித்தார்
"எனக்கும் பேரப் புள்ளைகளப் பாக்கணும்னு எதிர்பாப்பு இருக்கத் தான் செய்யுது. யாராச்சும் ஒருத்தர் ஒத்து வரணுமே. ரெண்டு பேரும் ஆளுக்கொரு நேரத்துலல்ல வேல பாக்குறாக" இவ்வாறு அலுப்புடன் பேசியவர் கிரிஜா
'அதுக்குள்ளயும் ஆரம்பிச்சுட்டாய்ங்களா? இப்போ இது மட்டுந்தான் கொறச்சல்...' பத்மாவின் உள்ளத்தில் நெருப்பின்றியே புகை மூண்டது
மகளிடம் பேசி வேலைக்கு ஆகவில்லை என்றதும் மங்கை விக்ரமிடம் தாவினார் "ஏன், தங்கம்? நீயாச்சும் மேலிடத்துலப் பேசி சிஃப்ட்ட மாத்திக்க வேண்டியது தான. இன்னும் கொஞ்ச நாள் போனா சொந்தபந்தம்லாம் கேள்வி கேக்க ஆரம்பிச்சுருவாக. நான் அவுகளுக்கு என்ன பதிலச் சொல்லுவேன், கண்ணு?"
அவன் இரவுநேரப் பணிக்குச் செல்வது என்னவோ உண்மை தான். ஆனால், மாதம் முழுவதும் இரவு வேளை மட்டும் வேலையிருப்பதாகப் பொருளல்ல. மாதத்தின் முதல் இரு வாரங்கள் பகல் வேளையில் அலுவலகம் போகும்படி நேர்ந்தால், மீதி இரு வாரங்கள் இரவுநேர வேலையாக இருக்கும்.
"அது ஒன்னும் இல்ல, அத்த. என் சீஃப் ஆஃபிசர் கொஞ்சம் கோவமா இருக்காப்படி. நான் அப்டி என்ன தப்புப் பண்ணிட்டேன்னு தெரியல; ஒரே அடியா மூஞ்சத் தூக்குறாக. இதுக்கே எல்லாம் அவுக சொல்றபடி தான் செஞ்சேன். எங்க மிஸ் ஆனுச்சுன்னு புரில. அவுக மட்டும் சமாதானம் ஆயிட்டாங்கன்னா, நீங்க சொன்னபடியே பண்ணிரலாம்" அவன் முதன்மை அதிகாரி என்று மறைமுகமாகக் குறிப்பிட்டது தன் மனையாளை
"புதுசா கல்யாணம் ஆயிருக்குன்னு கூட பாக்காம, இப்டி நைட் டியூட்டியா போட்டா என்ன செய்ய? இந்தக் காலத்துல நல்லவன் யாரு, கெட்டவன் யாருன்னே தெரிய மாட்டேங்குது. பையன் சொல்ற மாரி, நைட்டு நேரத்துலப் பொம்பளப் புள்ளையத் தனியாவும் விட்டுப் போறதுக்கில்ல. விக்ரமு, அந்த ஆபிசரு கை கால்ல விழுந்தாச்சும் உன் காரியத்தச் சாதிச்சுடு" கிரிஜா மகனுக்கு அறிவுரை சொன்னார்
"அதான்மா நானும் பண்ணலாம்னு இருக்கேன்" சமத்தாய்ப் பேசினான் விக்ரம்
"பிடிச்சு வச்ச பிள்ளையாராட்டம் ஒக்காந்துருக்கியே. வாழ்க்கையப் பத்தின கவல கொஞ்சமாச்சும் இருக்கா, டி. நீ தான் உன்னோட வேலைய விட்டுப் போட்டு வாரது. தம்பியும் நீயும் நம்ம வீட்டுலயே தங்கிக்கிடலாம்ல"
மங்கை பத்மாவை இடித்துரைக்க, அவளைக் காப்பாற்றும் நோக்கில் இடைப்புகுந்த விக்ரம் தன் கற்பனையைக் கட்டவிழ்த்தான்
"ப்ரியாவும் இதயே தான் சஜஸ்ட் பண்ணா. ஆஃபிஸுக்கும் வீட்டுக்கும் ரொம்பத் தொலைவா இருக்குதுன்னு நான் வேணான்டு சொல்லிட்டேன். இப்போ கூட நாங்க அடிக்கடி மீட் பண்றோமே. வீக்என்ட் வந்துட்டா போதும் அவுட்டிங் போயிட்றது. இந்தாருக்க ஊட்டிக்கு ஒரு ஏழெட்டுத் தடவ போய்ட்டு வந்துட்டோம். நீ இதெல்லாம் அத்தைட்டச் சொல்லலையா, பத்மா? ஒரு வார்த்த இன்ஃபார்ம் பண்ணி இருக்கலாம்ல. பாரு, அவங்க தேவயில்லாம வருத்தப்பட்றாங்க"
அவனது சொல்லாடலில் சற்றே மனது குளிர்ந்த மங்கை "இருக்கட்டும், இருக்கட்டும். சொல்லாட்டிப் போனா என்ன? சந்தோஷமா இருந்தா சரி. இப்ப வாங்க சாப்டுவோம்" எனக் கூறிட்டார்
காமாட்சியின் உதவியோடு விக்ரமிற்காகவே தடபுடலான சைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வயிறார உண்டவன் பல் இடுக்குகளைக் குத்திக் கொண்டே ப்ரியாவைத் தேடிப் பின்வாசலுக்குச் சென்றான்.
"பத்மா... ப்ரியா... பத்மப்பிரியா..." மென்மையாக அவன் அழைத்துப் பார்க்க, எங்கே அவள் தலையை நிமிர்த்தினால் தானே
அந்நேரம் அவ்வழியே கடந்த மங்கை அவளை இழுத்துச் சென்று அவன் முன்னால் நிற்க வைத்துவிட்டார் "எப்போ பாரு ஃபோனையே பாத்துட்டு... கூப்புட்றாகள்ல? ஒரு மரியாத வேணாம். எங்கயாச்சும் பயம் இருக்கா பாரு"
அவர் போய்விட இவள் சிடுசிடுத்தாள் "என்ன?"
போன வாகிலேயே மங்கை திரும்பி வர "இவ்ளோ நேரம் இங்கத் தான் நின்னுட்டு இருந்தீகளா? அச்சோ, நான் கவனிக்கவே இல்ல. கொஞ்சம் சத்தமா கூப்புட்றது. என்ன விஷயங்க? சொல்லுங்க" என ஒரேயடியாகக் குழைந்தாள்
"வா, உன்னை ஒரு இடத்துக்குக் கூப்டுப் போணும். உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லயே, அத்த?"
"என்ன மாப்ள, இதுக்குலாம் என்கிட்டக் கேட்டுட்டு? தாராளமா கூட்டிப் போங்க. அவ இனிமே உங்க பொறுப்பு" பலமாகத் தலையாட்டி வைத்த மங்கை முன்பக்கம் சென்றுவிட்டார்
"எங்கன போகணும்?" மீண்டும் பத்மாவின் முகத்தில் கடுகடுப்பு ஒட்டிக் கொண்டது
"பேசாம என்னோட வண்டில ஏறு. இல்லனா, அத்தைட்டச் சொல்லிடுவேன்"
"போய்ச் சொல்லிக்கங்க"
"வான்னு சொல்றேன்ல"
"நான் வரலன்னு சொல்றேன்ல"
"ம்ச்ச்" அவன் பொறுமையிழக்க, சற்றே மனமிறங்கியவள் மோட்டார் பைக்கில் ஏறிக் கொண்டாள்
சில பொருட்கள் நமக்கு வாழ்வின் சில தருணங்களை நினைவுபடுத்தும். அவ்வகையில் பைக் என்றாலே நினைவிற்குள் வந்து போகும் ஒரு ஆடவன் பத்மாவின் வாழ்விலும் உண்டு. பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது அவளுக்கு ஓர் இனம்புரியா ஈர்ப்பு தோன்றியது. பள்ளிக்குப் போகிற போதும் வருகிற போதும் ஒருவனையே இமை கொட்டாமல் கவனித்துக் கொண்டிருப்பாள். அந்த அதீத ஈர்ப்பு அவன் மீது அன்று. அவனுடைய வெள்ளை நிற அப்பாச்சி பைக்கின் மேல் தான் கொள்ளை விருப்பம்.
அந்தக் காலகட்டத்தில் அவளுடன் படித்த யாருமே அம்மாதிரியான உயர்ரக பைக் வைத்திருக்கவில்லை. அதை ஓட்டுவதினாலேயோ என்னவோ பைக்கின் உரிமையாளனும் அம்சமாகத் தெரிந்தான். அவனிற்குப் பால் நிறத்தில் குண்டு குண்டு கன்னங்கள்; அவள் அளவிற்கு நல்ல உயரம்; அவளை விடவும் கூடுதல் எடை; விநாயகர் போல கொழுகொழுவென்று இருப்பான்.
அவனுடைய வீடு அண்ணாந்து பார்க்கும் அளவு பெரியது. தனியார் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி கற்கும் வசதி படைத்த மாணவன். அவன் பள்ளிக்குச் சென்று வரவே அவ்வாகனத்தை உபயோகப்படுத்தினான். அந்த வழியே போய் வருகையில் மட்டும் பத்மா அவனையும் வண்டியையும் காண்பதுண்டு. மற்றபடி அவனது பெயர் கூட அவளுக்குத் தெரியாது. அவளது வேடிக்கை தொடர்கதையாக, ஒருநாள் அவனே அவள் முன்னால் வந்து நின்றான்.
"நில்லு. உனக்கு என்ன வேணும்?" பைக்கின் மீது அமர்ந்து கொண்டே சொற்களை வீசினான்
பத்மா விழிகளை உருட்டி முழித்தாள் "ஆன்... என்னைப் பாத்தா கேக்குற?"
"ஆமா. உன்னைத் தான்... எனக்கு ஒரு லவ்வர் இருக்கா தெரியுமா உனக்கு?"
"அதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?"
"டெய்லியும் நீ என்னை சைட் அடிக்குறதா, அவத் தான் சொல்றா. எதா இருந்தாலும் நேரா வந்து பேசுறது?"
"நான் ஒன்னும் உன்னை சைட் அடிக்கல. உன் லவ்வரக் கவலப்பட வேணாம்னு சொல்லிடு"
"அப்போ, என்னத்துக்குத் தான் அப்டிக் குறுகுறுன்னு பாக்குற?"
"அதுவா... உன்னோட பைக்கு, நல்லாருக்கு"
"ஓஹோ... அவ்ளோ பிடிச்சுருக்கா?"
"ஆமா, சூப்பரா இருக்கு. கலரே அட்ராக்ட் பண்ணுது. அதான் பாத்தேன். வேற ஒன்னுமில்லப்பா"
"ஓகே, பை" என்றவன் ஹேன்டில் பாரை முறுக்கிக் காற்றினில் பறந்தான்
அவளுக்கும் அவ்வாறு பறக்க வேண்டுமென அடிநெஞ்சத்தில் கிளர்ச்சி உண்டானது. அப்பாவிடம் போய் இதைப் பற்றிச் சொன்னால்... வேண்டவே வேண்டாம். அது தேவையில்லாத ஆணி; ஒரு மிதிவண்டி கூட வாங்கித் தர மாட்டார்; இருக்கிற சிறகையும் ஒடித்து விடுவார். அதனால் ஆசாபாசங்களைத் தனக்குள்ளே அடக்கிக் கொண்டாள். குறைந்தபட்சம் அந்த பைக்கினைக் கண்களால் பார்த்தாவது ஆராதித்துக் கொள்ளலாம் என்றெண்ணி அதே சாலையைத் தொடர்ந்து பயன்படுத்தினாள். அவனும் அவளின் ஆர்வத்தைக் கண்டு வியக்கவே செய்தான். அதற்காகவே பைக்கில் அவளை நெருங்கி வந்து ஒலி எழுப்புவான்; சக்கரத்தைத் தூக்கி வித்தைகள் காண்பிப்பான்; அவளைப் பார்த்துச் சிநேகமாகப் புன்னகைப்பான்.
மற்றொரு நாள் அவளைக் கண்டவன் அவளுக்காகவே காத்திருந்தாற்போல் அருகே சென்று வண்டியை நிறுத்தினான் "உன் பேரென்ன?"
"ப்ரியா. உன் பேரு?"
"ஃபசீர்... ஃபசீர் அஹ்மது. ஹால் டிக்கெட் வாங்கிட்டியா?"
"இன்னைக்குத் தான் தந்தாங்க. எக்ஸாம் அப்போ பாக்க முடியுமான்னு தெரில. ஸோ, இப்பவே சொல்லிட்றேன்; ஆல் த பெஸ்ட்"
"உனக்கும், ஆல் தி பெஸ்ட். காலேஜ் எங்க ஜாய்ன் பண்ணப் போற?"
"தெரியல. எங்கப்பா தான் முடிவு பண்ணுவாரு"
"உனக்கு எந்த ஐடியாவும் இல்லயா? டாக்டர், என்ஜினியர்..."
"அய்யோ, அந்தளவுக்கு நான் படிக்குறப் புள்ளலாம் கிடயாது. பாஸ் பண்ணா போதும் எனக்கு. நீ எல்லாம் யோசிச்சு வச்சுட்டியா?"
"நான் ஆர்க்கிடெக்சராகப் போறேன்"
"ஆர்க்கி... டெச்சரா... அப்டினா?"
"அழகழகா, டிஃபரென்ட்டா பில்டிங்லாம் டிசைன் பண்ணுவாங்கள்ல. அது பத்திப் படிக்குறது"
"இன்ஜினியரிங்கா? ஆர்ட்ஸா?
"பி. ஆர்க். ன்னே தனி கோர்ஸ் இருக்கு"
"ஓ..."
"எக்ஸாம்ஸ் முடிஞ்சதும் சென்னை போயிருவேன். அங்க என் சிச்சா வீடு இருக்கு. அங்கயே தங்கிப் படிக்கப் போறேன்"
"அப்போ உன் பைக்கு?"
"கூடவே எடுத்துட்டுப் போய்டுவேன்"
"ஆவ்ன்ன்ன்..." உடனேயே அவளின் முகம் சுருங்கிப் போனது
"இப்பயே நல்லா பாத்து வச்சுக்க. வேணும்னா வண்டிய ஃபோட்டோ கூட எடுத்துக்கலாம்"
"என்கிட்ட ஃபோன் எதும் இல்லயே"
"ஃபோனும் இல்லயா? வேணா, என் கூட ஒரு ரைட் வரீயா? அட்லீஸ்ட் உனக்கு ஞாபகார்த்தமா இருக்கும்"
"நான் மாட்டேன்பா. எங்க வீட்டுலத் தெரிஞ்சுது, அம்புட்டுத்தேன்; தோல உரிச்சுப் போடுவாக"
"நீ ஃபேஸ நல்லா கவர் பண்ணிக்க. இந்தப் பக்கம் அவங்க என்ன வரவா போறாங்க?"
"ம்ம்ஹூம்..."
"சரி, உன் இஷ்டம். அப்ப நான் கிளம்புறேன்"
அச்சப்பட்ட அவளின் உள்ளம் இப்போது குரங்கு பல்டி அடித்தது "ஹே... இரு, இரு. உன் லவ்வர் எதுவும் திட்டிட மாட்டாளா?"
"அதெல்லாம் யோசிச்சா வேலைக்காகுமா? உன் சந்தோஷத்துக்காகத் தான் பாக்குறேன்"
"ரொம்ப தூரம் போ வேணாம்" என்றவளோ பள்ளிச் சீருடையின் துப்பட்டாவை எடுத்துத் தன் முக அடையாளத்தை மூடி மறைத்தாள்
"கவலயே படாத. ஸ்ட்ரெயிட்டாப் போய் ஒரு ரைட்டு, மூணு லெஃப்ட்டு. அப்றம், நேரா வந்து இங்கயே விட்டுட்றேன்"
அவள் இருபக்கம் கால்களை இட்டு ஏறிக் கொள்ளவும், எந்தக் குலுங்கலும் இன்றி ஃபசீர் சுமூகமாக வண்டியைச் செலுத்தினான். சொன்னபடி மூன்று நிமிடங்களுக்குள்ளாகவே அவளை ஏற்றிய இடத்திலேயே இறக்கியும் விட்டான்.
அவனைத் தொடாமல் பக்குவமாக இறங்கிக் கொண்டவள் "தேங்க் யூ" என விழிகளின் வழியே சிரிப்பைச் சிந்தினாள்
தன் வீட்டை நோக்கிச் சென்றவன் ஒருமுறை திரும்பி "குட்பை" என்றிட்டான்
துப்பட்டாவை மொத்தமாகக் கலைந்தவள் ஃபசீர் சொன்னதற்குத் தலையாட்டி வைத்தாள். அவளது நீண்ட நாள் கனவு ஈடேறியதால் இலகுவாக உணர்ந்தாள்; எல்லையில்லாப் பரவசத்திற்கு ஆளாகி இருந்தாள். அவன் சென்று மறைந்ததும் துள்ளலோடு பத்மா நான்கு அடிகள் எடுத்து வைக்க, குறுக்கே வந்து நின்றதோ பத்ரகாளி ரூபமான மங்கை.
உடம்ப இரும்பாக்கிக்கடா கிரிகாலா!