• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 29

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
"ஹாய்... லோட்டஸ்... எப்டி இருக்க? கோவமா இருக்குற மாரி தெரியுது. ஐ மிஸ் யூ எ லாட். நீ இல்லாம என்னால வாழ முடியாது. நான் முன்ன மாதிரி இல்ல... எக்கானமிஸ்ட்டா வேல பாக்குறேன். கைல கவர்ன்மென்ட் ஜாப் இருக்கு; சொந்தமா வீடு கட்டிருக்கேன்; கார் வாங்கிருக்கேன். எல்லாம் உனக்காகத் தான்... நீ என்னடான்னா ஒரு வார்த்த கூட சொல்லாமக் கல்யாணம் பண்ணிக்கிட்ட. அதக் கேள்விப்பட்டதும் எப்டி இருந்துச்சுத் தெரியுமா எனக்கு? உன்னப் பாத்ததுந்தான் உயிரே வருது. என் கூட வந்துரேன்; யார் கண்ணுலயும் படாம எங்கயாச்சும் போய் ஹாப்பியா இருப்போம். நீ என்னோட மகாராணி மாரி வாழலாம். வேற யாராலயும் உனக்கு அப்டி ஒரு லைஃப தரவே முடியாது. உனக்கு வாழும்போதே நான் சொர்க்கத்தக் காட்டுறேன்"

அபிலாஷ் எவ்வளவு தேனொழுகப் பேசினாலும் பத்மப்பிரியா அசைந்து கொடுக்கவில்லை. ஆணி அடித்தாற் போல ஆடாமல் அசையாமல் அவனைக் கூர்ந்து பார்த்தபடியே நின்றாள்.

"கல்யாணம் ஆகி இத்தன மாசம் ஆச்சே; இப்போ எப்டி வாரதுன்னு யோசிக்குறியா? எனக்கு அது ஒரு ப்ராப்ளமே இல்ல"

அவனிடம் பேசிப் பயனில்லை என்று நினைத்தவள் பலங்கொண்ட மட்டும் ஓங்கி அறைந்தாள். அதில் அவனது கன்னம் சிவந்து விழிகள் இரண்டும் கலங்கிப் போயின.

"நா... நான் விக்ரம்ட்டப் பேசுறேன், ப... பத்மா. ப்ளீ..." திக்கித் திணறி அவன் வாக்கியத்தை முடிக்கவில்லை

அவன் இனி வாயையே திறவக் கூடாது எனும் நோக்கில் பளீரென்று அறைந்து மற்றொரு கன்னத்தையும் பழுக்க வைத்தாள் அவள். அடுத்த வார்த்தையைக் கூட சொல்ல முடியாத அளவிற்கு அவனது தாடை இறுகி வலியெடுத்தது.

"மென்டலாடா நீ. எத்தன தாரம் சொல்றேன். செவுடன் காதுலச் சங்கூதுன கணக்காவே இருந்தா என்ன செய்ய? நீயும் ஒரு மனுஷிக்குத் தான பிறந்த; இல்ல, மாட்டுக்குப் பொறந்தியா? உன்னை நம்பி ஃப்ரென்ட்லியா பழகுனத நெனச்சாலே உடம்பெல்லாம் கூசுது; என் மூஞ்சப் பாத்து நானே தினந்தினம் காரித் துப்பிக்குறேன். அந்த அளவு ரொம்ப மோசமா நடந்துக்குற. வொர்ஸ்ட்டு, வொர்ஸ்ட்டு... ஒழுக்கமா இருந்துக்க, அபி. இன்னொரு தரம் எனக்கு ஃபோன் கால் வந்துச்சு, ஹராஸ் பண்றனு கம்ப்ளெய்ன்ட் குடுத்துடுவேன்; உன் ரெப்புட்டேஷன், கவர்ன்மென்ட்டு உத்தியோகம், உன்னோட ஃப்யூச்சர் எல்லாத்துக்கும் சேத்தி டோட்டலா ஆப்படிச்சுடுவேன். பொத்திட்டு வேலைய மட்டும் பாக்கணும். விலகி விலகிப் போறவங்கள்ட்ட வந்து வாலாட்டக் கூடாது" வெறுப்பின் உச்சத்திற்குப் போனவள் அனைவருக்கும் கேட்கும்படி சாடினாள்

அவனது விழிகள் குளம் போல் கண்ணீர்த் துளிகளால் நிறைந்து எப்போது வேண்டுமானாலும் உடையக் காத்திருந்தன. இந்த முறை மனக்கிலேசம் உண்டானது அவள் அறைந்த வலியினால் அன்று; அவளது சொல் வதத்தால்.

'எஸ்கேப் ஆய்டுடா. இல்லாட்டிப் போனா, அதே அடி நமக்கும் விழும். யப்பா... அடியா அது; ஒவ்வொன்னும் இடி மாதிரி' விக்ரம் பதுங்கி பதுங்கி அவளிடத்தில் சிக்காமல் வெளியே ஓடிவிட்டான்

"அசிங்கமா இருக்கா? எனக்குந்தான் இப்டிப் பேச அருவறுப்பா இருக்கு. ஏன்டா லைஃபுல உன்னைச் சந்திச்சோம்னு யோசிச்சு வெறுக்குற அளவுக்குப் பண்ணிட்ட. தயவு செஞ்சு என்னை விட்ரு. உனக்கு ஒரு நல்ல பொண்ணு கிடைப்பா... நிம்மதியா வாழ விடு, சாமி. நான் இல்லாம ஷ்யூரா நீ இருந்துரலாம். ஆனா, உன் லவ் டார்ச்சரத் தாங்கிட்டு என்னால இருக்க முடில. வேலிலப் போற ஓணான வேட்டிக்குள்ள எடுத்து விட்டக் கதையா குடையாத. டிப்ரஷன் தாங்காமப் போயிடப் போறேன். வாழ்க்கையக் கொஞ்சமாச்சும் அனுபவிக்க விடு. உனக்கு ஒரு கும்பிடு; உன்னோட பழகுன பழக்கத்துக்கு ஒரு கும்பிடு. என் பொணத்தப் பாக்கக் கூட வந்துராத. எனக்கு நல்ல சாவே கிடைக்காமப் போய்டும்"

அவளின் ஒவ்வொரு சொல்லும் ஆயிரமாயிரம் ஈட்டிகளுக்குச் சமமாய் அபிலாஷின் நெஞ்சத்தினைக் குத்திக் கீறின. வேதனையாக இருந்தாலும் இன்று அவன் தன் தவற்றினை முற்றிலுமாக உணர்ந்து தலை குனிந்தான்.

அத்துடன் தாமதிக்காமல் வெளியே வந்தவள் "விக்ரம்" எனக் கத்தினாள்

அடுத்த விநாடி புறப்படத் தயாராய் இருந்த நம் நாயகன் வசமாகச் சிக்கிக் கொண்டான். அவள் வரும்போதே வெளியில் அவனுடைய பைக் நிற்பதைப் பார்த்து விட்டாள் அல்லவா? பிறகு அகப்பட்டுக் கொள்ளாமல் எங்ஙனம் தப்ப முடியும்?

"பாத்துட்டா. அவ்ளோ தான், என் கத; பினிஷ்" இவன் முணுமுணுத்துக் கொண்டிருந்த போதே அவள் நெருங்கி வந்துவிட்டாள்

"என்னதிது?" விரைந்து இவனது கையில் இருந்தச் சுருட்டலைப் பற்றினாள்

அதைப் பிரித்துப் பார்க்க உள்ளே அவளின் வரைபடம்; அபிலாஷின் கைவண்ணம்; அவனுடைய ரசனையின் சிகரம். இம்முறை ரசிக்கத் தோன்றாமல் அத்தாளைக் கிழித்தெறிய முயன்றாள் பத்மா.

"ஹே, ஹே... அவசரப்பட்டுக் கிழிச்சுடாத. நல்லா இருக்கேன்னு கையோட எடுத்துட்டு வந்தேன். உனக்கு வேணான்னாலும் நான் எனக்காக வச்சுக்குறேன்" விக்ரம் அந்த ஓவியத்தைப் பறித்துப் பத்திரப்படுத்திக் கொண்டான்

"வண்டிய ரூமுக்கு விடுங்க"

"இப்பயா? ஒன்லி ஒன் அவர் தான் பர்மிஷன் கேட்டு வந்துருக்கேன். திரும்ப ஆஃபிஸ் போகணும்"

"அவன் கூப்டப்ப மட்டும் உடனே வந்தீங்கள்ல. எடுங்க, பைக்க" உத்தரவாகக் கூறியவள் வாகனத்தில் ஏறிக் கொண்டாள்

அவன் மறுத்துப் பேச முடியாமல் கணபதியில் இருந்த வீட்டிற்கு அவளைச் சென்று சேர்த்தான்

உள்ளே வந்து உணவு மேசையில் பொத்தென்று கைப்பையை வைத்தவளிடம் மெதுவாக வினவினான் "எதாவது சாப்புட்றியா, டார்லிங்?"

"நான் அதுக்காக ஒன்னும் வரல. எதுக்கு அந்த கஃபேக்குப் போனீங்க? கல்யாணம் ஆகுறதுக்கு முன்ன, எப்ப என் மேலச் சந்தேகம் வந்தாலும் நேரடியாவே கேப்பேன்னு சொன்னீங்கள்ல. இப்போ, இப்போ... இது என்ன பழக்கம்?" அவளது ஆவேசம் மட்டுப்படாமலே வெளிப்பட்டது

"ப்ராமிஸா, எனக்கு எந்த டௌட்டும் இல்லமா"

"அப்றம் எதுக்கு... யார் என்ன சொன்னாலும் உடனே நம்பிட்டுப் போய்டுவீகளா?"

"அதில்ல, ப்ரியா... அவன் ஒரு ஃபோட்டோவ வச்சுட்டு ஓவர் பில்டப் காட்டிட்டு இருந்தான். அதக் காமிச்சு உன்னை எதும் ப்ளாக்மெய்ல் பண்ணுவானோன்னு..."

"எந்த ஃபோட்டோ?"

விக்ரம் டெலிகிராமில் வந்த முத்தப் படத்தை எடுத்துக் காண்பிக்க, அவளின் முகம் மேலும் கொதித்துச் சுட்டெரிக்கும் சூரியன் போல் ஆனது

"ராஸ்கல்... பொறுக்கி... இத ஆள் வச்சுத் திருட்டுத்தனமா ஃபோட்டோ வேற எடுத்துருக்கானா? அவனை... அவன் அந்த மாரி ப்ளாக்மெயில் செய்றவன் தான்... ப்ளஸ் அவன் ஒரு சைக்கோ. உங்கள எதும் செஞ்சுருந்தா. இப்டித் தனியாவா கிளம்பிப் போறது?"

"நீயும் கூட என்கிட்ட இன்ஃபார்ம் பண்ணி இருக்கலாம். அந்தப் பையன் எமோஷனலா அஃபெக்ட் ஆய்ருக்கான். ஒருவேள நான் வராம நீ மட்டும் போயி, அவன் கத்தி எதுவும் வச்சிருந்து மிரட்டுனா என்ன செஞ்சுருப்ப?"

"எப்டியும் என்னை அவன் ஹர்ட் பண்ண மாட்டான்னு ஒரு குருட்டு நம்பிக்கை. பட், உங்கள ரீச் பண்ற அளவுக்கு அவனுக்குத் தைரியம் வரும்னு நான் எதிர்பாக்கல. தெரிஞ்சுருந்தா, முன்னாடியே சொல்லி வச்சுருப்பேன்"

"நௌ ஐ அம் ரெடி ஃபார் இட்"

"வேலை இருக்குனு சொன்னீக"

"ஒரு ஹாஃப் அன் அவர் சேத்து ஆய்ட்டுப் போகுது. நான் மேனேஜ் பண்ணிக்குறேன்"

பத்மா அபிலாஷுடனான வரலாற்றைக் கூறி முடிக்க, இது ஒருதலைக் காதல் என்பதையும் வரவேற்பு முடிந்த அன்றிரவு அழைத்தது யாரென்பதையும் விக்ரம் அறிந்து கொண்டான். பின்னர் இருவரும் தத்தமது பணிக்குப் புறப்பட்டுப் போயினர். அன்று மாலை வீடு திரும்பிய போது, விக்ரமுக்கு முன்னதாகவே வந்து அவள் காத்துக் கொண்டிருந்தாள்.

"இங்க என்ன பண்ற?"

"யோசிச்சுப் பாத்தேன். தனியா ஸ்டே பண்றது எனக்கும் சேஃப் இல்ல. நம்ம ரிலேஷன்ஷிப்புக்கும் சேஃப்ட்டி இல்லன்னு தோணுச்சு. ஸோ வாங்களேன், நமக்குன்னு ஒரு வீடு பாப்போம்"

"ஒன்னா தங்கப் போறோமா? அப்றம் உன் கன்டிஷன்ஸ்லாம் என்னத்துக்கு ஆகுறது?"

"அதுக்கென்ன, அது அப்டியே இருந்துட்டுப் போகுது"

"இது சரிப்பட்டு வராது"

"என்னங்க..."

"என்ன, நொன்னங்க? தள்ளி தள்ளி இருக்குற வரைக்கும் கண்ணியம், கட்டுப்பாடுலாம் ஓகே. ரெண்டு பேரு மட்டும் தங்கும்போதும் அப்டியே இருக்க முடியுமா?"

"ஏன் முடியாதா?"

"என்னால முடியாது; ஆள விடு. டின்னர் சமைச்சுத் தாரேன்; தின்னுட்டு ஹாஸ்டலுக்குப் போய்ச் சேரு"

"அப்டியா; சரி... நான் எப்டியோ போறேன், போங்க. நாள பின்ன அந்த அபி என்னைத் தேடிப் பிடிச்சு ஹாஸ்டல் முன்னாடி வந்து நிப்பான். வேல முடிஞ்சு வர்ற வழிலக் கடத்திட்டுப் போனாலும் போய்டுவான். ரெண்டு மூணு நாள் கழிச்சுத் தான் உங்களுக்கு விஷயமே தெரிய வரும். என்னையக் காணோம்னு கண்ணீர் விட்டுக் கதறுனாலும் கிடைக்க மாட்டேன்"

"பத்மா, டென்ஷன் ஆகாத. நமக்குன்னு வீடெடுத்துத் தங்குனாலும், மாசத்துலப் பாதி நாள் நான் நைட் ஷிஃப்ட் போய்டுவேன். அப்பவும் நீ ஒத்தைலத் தான் இருக்கணும். லைட் ஆஃப் பண்ணாலே தூக்கம் வராதும்ப. எப்டி ராத்திரிலத் தனியா இருப்ப?"

"தெரியலயே... அதுக்கு ஒரு வழி யோசிச்சாகணும்"

"ஒன்னு செய்யலாம்; என் கூட இங்கயே தங்கிக்குறியா? ராம்க்கு எப்பவுமே பகல்நேர வேலை தான். உனக்குத் துணையா இருப்பான்"

"உங்களுக்குப் பிரச்சனை இல்லனா, எனக்குச் சம்மதம்"

"எதுக்கும் அவன்கிட்டக் கேட்டுக்குறேன்"

"ரைட்... வேல முடிஞ்சு அப்டியே வந்துட்டனா, டயர்டா இருக்கு"

"எங்கச் சாயுற? குக் பண்ணத் தெரியாது தான உனக்கு; வந்து கத்துக்க" அயர்ச்சியுடன் கட்டிலில் சாயப் போனவளை அவன் கைப்பிடித்துச் சமையலறைக்கு இழுத்துச் சென்றான்

அவள் அங்கே போய் நோகாமல் பூண்டு உரிக்க, அதைத் தோலோடு நசுக்கி அந்த வேலையும் இல்லாமல் செய்துவிட்டான் விக்ரம்

வேலை முடித்து வந்த ராம் தன்னுடைய அறைக்குள் நுழைய "இங்கயே இரு. நான் பேசிட்டு வரேன்" எனக் கூறி இவன் நகர்ந்தான்

"ஓகே..." என்றவளோ முழு ஈடுபாட்டுடன் கணவன் வைத்த ரசத்தை ருசி பார்த்துக் கொண்டிருந்தாள்

முகம், கை மற்றும் கால்களைக் கழுவியவன் மாற்றுத் துணியைத் தேட, விக்ரம் பின்னால் வந்து நின்றான்

"ராம், பத்மா வந்துருக்காடா"

"சரிடா. நல்லது"

"மச்சான், அவளுக்கு ஹாஸ்டல்லத் தங்குறதுக்குப் பயமா இருக்காம். இந்த சிச்சுவேஷன்ல அவளைத் தனியா விட எனக்கும் இஷ்டம் இல்ல. அவ என்னோட ரூம்ல இருந்துக்கட்டுமா?"

"இங்கயா? பேச்சுலர் ரூம்ல எப்புட்றா ஒரு பொண்ணத் தங்க வைக்கறது? செப்பரேட்டா வீடு பாத்துக்க, மச்சான். அதான் கரெக்ட்டா இருக்கும். அதுவும் இல்லாம..." அவன் பதிலளித்தவாறே திரும்பிப் பார்க்க, அதற்குள் விக்ரம் அறையை விட்டுச் சென்றிருந்தான்

அட, முழுசாக் கேட்டுட்டுப் போடா!