மங்கையின் கடுமையான வார்த்தைகளும் நம்பிக்கையற்ற தன்மையும் பத்மப்பிரியாவைப் பலமாகக் காயப்படுத்தின. இவ்வளவு நேரமாக அழுது கொண்டிருந்தவளின் விழிகள் சிவந்து இப்போது கோபத்தைக் காட்டின.
“போதும்... சின்ன வயசுல இருந்து என்னையும் அக்காவையும் கம்பேர் பண்ணி பண்ணி டார்ச்சர் பண்ணதுலாம் போதும். இத்தோட நிறுத்திக்கங்க. இதுக்கு மேலயும் என்னால டாலரேட் பண்ணிக்க முடியாது. அசிங்கப்படுறதுக்கு ஒரு அளவு இருக்கு. மேல மேல ஏதாவது பேசுனீங்கனா, அவ்ளோ தான்...”
“என்னடி பண்ணுவ? உன்னால எங்களுக்கு எவ்ளோ அவமானம்; அத எப்படி சரி பண்ணப் போற? அதச் செல்லேன், பாப்போம்”
“நான் வேணும்னே எதுவும் பண்ணல... உங்க பேச்சக் கேக்கக் கூடாதுன்னுலாம் இல்ல. நிச்சயதார்த்தத்துக்கு நேரத்துல வந்துருக்கணும்; லேட் பண்ணது தப்புத் தான். ஆனா, நான் வரவே மாட்டேன்னு நீங்க எப்டி முடிவு பண்ணலாம்? அவ்ளோ நம்பிக்க இல்லாமப் போச்சா... ஆமாம், எனக்கு என் வேல முக்கியந்தான்; ரொம்ப முக்கியம். இவ்ளோ நாள் படிச்சதே அதுக்குத் தான். வர சம்பளத்துல நீங்க சோறு பொங்குறீங்களோ, இல்லையோ; அதப் பத்தி எனக்குக் கவல இல்ல. கல்யாணம் ஆனாலும் நான் வேலைக்குப் போவேன்; குழந்தை பொறந்தா கூட வேலைக்குப் போவேன். நான் இப்டித் தான்... அங்கை மாறி என்னால எப்பவுமே இருக்க முடியாது. அவள மாதிரி என்ன மாத்த ட்ரை பண்ணாதீங்க”
“என்னடி எதித்துப் பேசுறவ? உன்னைப் பெத்தக் கடனுக்கு இத்தான் நீ திருப்பித் தர லட்சணமா? அப்படியே நாலு போட்டேன்னு வையு”
“ஓ... அடிப்பீங்களோ... நான் ஒன்னும் சின்னப் புள்ள கிடையாது. பொறுத்து பொறுத்துப் போனா ரொம்பத் தான் ஓவரா போறீங்களே? ஏன், அங்கையோட நிறுத்திருக்க வேண்டியது தான; நானா உங்களப் பெத்துக்கச் சொன்னேன்”
உடனே மங்கை “அய்யோ, கடவுளே... இதக் கேக்கத் தான் என்னை உயிரோட வச்சுருக்கியா? இப்பயே என் உயிர எடுத்துரக் கூடாதா?” என்றவாறு கண்களில் தண்ணீரை வரவழைத்துக் கொண்டார்
“எங்கள நிம்மதியாவே இருக்க விட மாட்டியா, பிள்ள. பெத்த வயிற இப்புடிக் கலங்கடிக்குறியே; என்ன பொண்ணு நீயு?” என சுந்தரம் மனைவியின் துணைக்கு வர
“ஆன், உங்க பொண்ணு தான்ப்பா; உங்க பொண்ணே தான். ம்ச்ச்... இந்தாம்மா, என்னத்துக்கு இவ்ளோ டிராமா? இப்போ என்ன குடியா மூழ்கிப் போச்சு... நான் எங்கயும் ஓடிப் போகல. உங்க கண்ணு முன்னாடி தான நிக்கேன். நீங்க நான் வர்ற வரைக்கும் வெய்ட் பண்ணிருக்கணும். இல்லாட்டி, நீங்களே நிச்சயத்த முடிச்சுருக்கணும். அப்றமா, கழுத்த நீட்டுன்னா நானும் நீட்டிருப்பேன். ஆனா, எப்போ உங்களுக்கு என் மேலருந்த நம்பிக்கைப் போய்டுச்சோ; இனிமே, நானும் உங்கள நம்பப் போறதில்ல... ஸோ... எனக்குப் பிடிச்ச மாப்பிள்ளையா, படிச்சவனா, நான் வேலைக்குப் போனாலும் ஏத்துக்குறவனா பாருங்க. அப்படிப்பட்டவன் என்னைக்குக் கிடைக்குறானோ அன்னைக்குத் தான் எனக்குக் கல்யாணம். அதுவர உங்க வீட்டுச் சொத்தத் தின்னு தின்னே அழிக்கத் தான் போறேன். என்னை வேண்டாவெறுப்பா பெத்தீங்கள்ல, நல்லா அனுபவிங்க” என்று கூறி ஆத்திரம் மட்டுப்பட்டவளாய் வீட்டின் உள்ளே சென்றாள் பத்மா
இன்று அதை நினைத்துப் பார்த்தால் வலியும் வேதனையுமே மிச்சம். பெற்ற பிள்ளைக்கே இந்த நிலைமை என்றால், இவர்களிடம் ஒரு தத்துப்பிள்ளை மாட்டி இருந்தால் என்ன கதியாகி இருக்குமோ என எண்ணி நொந்து போவாள் பத்மா. அன்று நடந்த கலவரத்துக்குப் பிறகு வீட்டில் முன்போல் அவள் தங்குவதில்லை. சிறிதளவாவது சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என நினைத்தாள். அலுவலகத்தின் அருகிலேயே விடுதியில் தங்கிக் கொள்ளத் தொடங்கினாள். அதற்கு பின் தனக்காக ஒரு ரூபாய் கூட பெற்றோரிடம் இருந்து வாங்கியதில்லை. அவ்வப்போது வீட்டிற்கு நேரில் போய் வருவாள். சுந்தரம் அவளிடம் தேவையில்லாமல் பேசுவதைக் குறைத்துக் கொண்டார். ஆனால், மங்கையோ குழுவிற்குப் பணம் கட்ட வேண்டும் என்று சொல்லி மூன்றாயிரம், ஐந்தாயிரம் என மாதாமாதம் சம்பளப் பணத்திலிருந்து வாங்கிக் கொள்வார். மகளை அவ்வளவு இழிவாகப் பேசிவிட்டு, இப்போது பணம் வாங்குகிறோமே என அவர் ஒருநாளும் மனம் வருந்தியதில்லை. அவள் பணம் தருவதில் குளிர்ந்து போய் அநாகரிகச் சொற்கள் பேசுவதை ஓரளவு மட்டுப்படுத்திக் கொண்டார். அதுவே பத்மாவிற்கு தற்காலிக மன அமைதியைத் தந்தது.
நிகழ்காலத்தில்...
வார நாட்கள் ஓடி வெள்ளிக்கிழமை இரவைத் தொட்டிருந்தது. பத்மா பெருமூச்சோடு மேட்ரிமோனியல் தளத்தில் உலா வந்து கொண்டிருந்தாள். அதில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற நாட்டமோ தெளிவோ அவளுக்குக் கிட்டவில்லை. வாழ்க்கையின் கடைசிவரை தனியாகவே இருந்துவிடப் போகிறோமோ என்ற எண்ணம் மேலோங்கியது. அதிலேயே மூழ்கி இருந்தவள் கண்களை மூடித் தூங்கியும் போனாள்.
அதே வேளையில் தம்பியின் வாடகைக் குடியிருப்பில் அமர்ந்து மடிக்கணினியைத் தட்டிக் கொண்டிருந்தான் பிரபாகரன். விக்ரமின் கல்லூரி காலத் தோழன் ராம்குமார் அதே அறையில் தான் தங்கி இருந்தான். வரவேற்பறையில் இடப்பட்டிருந்த பெரிய உணவுமேசையில் விக்ரமும் மற்ற இருவரும் அமர்ந்திருந்தனர்.
“உங்களுக்காக சில்லுனு பியர் ஓப்பன் பண்ணி வச்சுருக்கேன். நீங்க என்னனா குடிக்காம... அவ்ளோ இம்பார்டன்ட்டான வேலையா, ணா?” என்றான் ராம்குமார்
“ஆமாடா, ரொம்பவே இம்பார்டன்ட் தான். உன் நண்பனுக்குப் பொண்ணு பாக்குற வேலை”
“இவனுக்கா? கல்யாணம் பண்ணிக்கப் போறியா, மச்சான். சொல்லவே இல்ல... இது எப்போலருந்து”
ராமின் இந்தக் கேள்வியைக் காதில் வாங்காதவன் போல் தொலைக்காட்சியில் கவனம் செலுத்தினான் விக்ரம்
“டி. வி. ல ஓட்ற விளம்பரத்தயாடா இவ்ளோ சின்சியரா பாக்குற. கல்யாண ஆசை வந்துருச்சுன்னா ஒத்துக்கோடா. என்னத்துக்கு வீண் பந்தா? கலாய்க்கலாம் மாட்டேன், சொல்லு...”
விக்ரம் “ஆமா, கல்யாணம் பண்ணப் போறேன். அதுக்கென்ன?” என்று தீனியை மென்று கொண்டே திருவாய் மலர
ராம் வியப்பை மறைத்துக் கொண்டு “ஒன்னுமில்ல. ஐ ஆம் வெரி ஹேப்பி, மச்சான். கங்ராட்ஸ், ஹிஹிஹி. நீ மிச்சர் சாப்டு...” என்று நகைத்தான்
“கல்யாணம் ஆனா கங்ராட்ஸ் சொல்லிக்கலாம், ராம். அதுக்குள்ள அவசரப்படாத” என்று பிரபாகரன் இடைப்புகுந்தான்
“ஏன், ணா. இவன் ஓகே சொன்னதே பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரி தான. பொண்ணு கிடைக்குறதா பெரிய விஷயம். என் மச்சானுக்கு என்ன, அம்சமா இருக்கான்”
“அழகு இருந்தா போதுமா? கொஞ்சமாச்சும் ப்ராக்டிகலா திங்க் பண்ணனும். சாரு, ஜெனியப் பத்திச் சொல்லிட்டுத் தான் கல்யாணம் பண்ணுவாராம். இவன் லவ் ஸ்டோரிய கேட்டப்புறமும் ஒருத்திக் கல்யாண மேட வரைக்கும் வருவாங்குற. சான்ஸே இல்ல...”
“லவ் மேட்டர சொல்லப் போறியா? மச்சான்... இவ்ளோ ஓப்பனா இருந்தா கடைசிவர மிச்சர் மட்டுந்தான்டா சாப்டணும். அதுவும் அரேஞ்ஜ் மேரேஜ்ல... ம்ம்ஹூம்... சரிப்பட்டு வராது; சொன்னா கேளு”
“அதத் தான் நானும் சொல்றேன். காதுலயே வாங்க மாட்றான். டேய், தம்பி... கேட்டியா? விக்ரம்...”
அவனோ எதுவும் கூறாமல் இருக்கையை விட்டு எழுந்து செல்ல “யப்பா, டேய்... உனக்கு மேட்ரிமோனில ப்ரொஃபைல் கிரியேட் பண்ணிருக்கேன். எல்லாம் சரியா இருக்கான்னா, ஒரு தடவப் பாத்துக்க” என்று கூவினான் பிரபாகரன்
“எல்லாத்தயும் நீயே பாத்துக்க. மேரேஜ் ஃபிக்ஸ் ஆகுறதுக்கு முன்னாடி, பொண்ண நேர்லப் பாத்துப் பேசணும் எனக்கு. சிம்பிள்” என்று அவன் நிதானமாகக் கூறவும்
“நீ பேசினாலே, கல்யாணம் ஃபிக்ஸ் ஆகாதே. எங்கத்த...” என நையாண்டி செய்தான் ராம்
“வேணா ஒன்னு பண்ணு. நீயே இன்னொரு ஜென்மம் எடுத்து, பொண்ணா பொறந்து வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்க. ப்ராப்ளம் சால்வ்டு”
அதற்கு ராம் “யாரு உன்னையா? சேகர் செத்துருவான்...” என்றிட
அவன் அமர்ந்திருந்த நாற்காலியை எட்டி உதைத்து “சாவு நாயே...” என்று கூறிய விக்ரம் அறைக்குள் புகுந்து கொண்டான்
பிரபாகரன் ஈடுபாடு குறையாமல் “அவன் கிடக்குறான். நீ வந்து பாரு... ப்ரொஃபைல் எப்படி இருக்கு?” என ராமிடம் வினவினான்
“நல்லாருக்கு, ணா. அடுத்து என்ன, பொண்ண சூஸ் பண்ணணுமா?”
“ம்ம்ம், ஹெல்ப்புக்கு வரியா?”
“வரேன்... அப்டியே தமிழ்நாட்டுப் பொண்ணுங்கள மட்டும் ஃபில்டர் பண்ணி எடுங்க. ஏற்கனவே, கேரளா பொண்ணாலத் தான் ரணமாகிக் கிடக்கான். ஸோ... இவன் வேற நேர்ல மீட் பண்ணணும்னு சொன்னான்ல. பேசாம இந்த ஊர்ப் பொண்ணாவே பாத்துடலாம். கரெக்டா இருக்கும்”
சில பல தேடல்களுக்குப் பின் நம் பத்மப்பிரியா திரையில் தோன்றினாள்
“இந்தப் பொண்ண பாரேன்”
“சுமாரா இருக்கா...”
“டேய்... டீடெய்ல்ஸ படிடா. பக்கமா பொள்ளாச்சி; எம். எஸ்சி. முடிச்சிருக்கா; வேலைக்குப் போறா. அதும் இல்லாம, மேரேஜுக்கு அப்றமும் வொர்க் பண்ணுவாளாம். டிஸ்கிரிப்ஷன் பாரு; ஐ வான்ட் டு பி ஃபைனான்ஷியலி இன்டிபென்டன்ட்... இன்டிபென்டன்ட்”
“என்ன, ணா. ஸ்டக் ஆகிட்டீங்க”
“விக்ரமும் இதே வார்த்தையத் தான்டா சொன்னான்” என பிரபாகரன் குதூகலிக்க
“ரொம்ப எக்ஸைட் ஆகாதீங்க. ஃபர்ஸ்ட் ரிக்வெஸ்ட் கொடுங்க. ரிப்ளை பண்ணா பாத்துக்கலாம்” என்று அவனை அமர்த்தினான் ராம்குமார்
இங்கே தூக்கம் கலைந்து கடிகாரத்தைப் பார்த்த ப்ரியாவிற்கு, நேரம் மூன்றரையைத் தொட்டிருக்கவும் மண்டைக்குள் மணி அடித்தது
‘அச்சச்சோ... இப்புடித் தூங்கிட்டோமே’ என அரக்கப் பரக்க எழுந்தவள் அலைபேசியைத் துலாவினாள்
அதை எடுத்ததும் “ஹாய்! வி ஆர் இன்ட்ரஸ்டட் இன் யுவர் ப்ரொஃபைல். வி லைக் அன் இன்டிபென்டன் வுமன். வி வுட் லைக் டு டாக் டு யூ” என்று பிரபாகரன் அனுப்பிய செய்தி ஒளிர்ந்தது
ஒருபுறம் தன் ப்ரொஃபைலைப் பழைய நிலைக்கு மாற்றத் தொடங்கிய பத்மா மறுபுறம் பதில் செய்தியும் அனுப்பத் தவறவில்லை
“வி???” என்று அவள் கேள்வி தொடுக்க
அடுத்த நிமிடமே “ஸாரி. ஐ அம்... ஐ வுட் லைக் டு டாக்...” என்ற பதில் வந்தது
நேரமின்மையால் “ஹியர் இஸ் மை மொபைல் நம்பர். கால் லேட்டர். பை” எனத் தன் அலைபேசி எண்ணை அனுப்பிவிட்டாள்
அத்தருணம் அவளது கவனம் அனைத்தும் தந்தையிடம் சிக்கிக் கொள்ளாமல் பாஸ்வேர்டை முன்போல் மாற்றுவதில் இருந்தது. அந்தக் காரியத்தைச் செய்து முடித்தவள் நிம்மதியாகத் தூங்கச் சென்றாள்.
அடுத்த நாள் மதிய இடைவெளியின் போது அலைபேசியைப் பார்த்தவளுக்கு மீண்டும் குறுஞ்செய்தி காத்திருந்தது
புது எண்ணில் இருந்து ஒரு “ஹாய்” வந்து உள்பெட்டியில் கிடக்க
“ஹூ இஸ் திஸ்?” என்று அனுப்பினாள் இவள்
மூன்று நிமிடங்களுக்குள் அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. கிடைத்த வாய்ப்பை நழுவவிடக் கூடாதென்று உடனடியாகத் திருப்பி அழைத்திருந்தான் பிரபாகரன்.
“ஹலோ”
“ஹலோ”
“ஹலோ. யா... யாரு?”
“பத்ம... பத்மப்பிரியாவா?”
“ஆமா, நீங்க”
“இயர்லி மார்னிங் மேட்ரிமோனில சாட் பண்ணீங்களே... விக்ரம்...”
“ஓ...”
“ஆர் யூ ஃப்ரீ?”
“சொல்லுங்க... ஓ நோ... வெயிட், வெயிட். வொர்க்ல இருக்கேன்; கொஞ்சம் பிசி. ஈவ்னிங் ஒரு சிக்ஸ் ஆர் செவன்க்குக் கூப்டுங்க”
“ஓகே. ஆல்ரைட்” என்று பிரபாகரனும் பேச்சை முடித்துக் கொண்டான்
அவனின் அடிமனதில் இந்தப் பெண் எப்படியாவது தன் தம்பிக்குத் துணையாக அமைந்துவிட வேண்டும் என்ற வேண்டுதல் கொட்டிக் கிடந்தது
யாருக்கு யார் தான் இங்கே!