சுப்ரதா மாடியில் துணிகளைக் காய வைத்துக் கொண்டிருக்க, அவளுக்கு உதவிக்கரம் நீட்டினாள் பத்மப்பிரியா
"அக்கா, அத்தைக்கும் உங்களுக்கும் சண்டையே வராதா?"
"ஏன் வராம? நிறைய தடவ பிரச்சனை ஆய்ருக்கு. கூடவே இருந்து இருந்து இப்போ ஒரு மாரி செட் ஆய்டுச்சு. பன்னெண்டு வருஷமா ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா வாழ்ந்துட்டு இருக்கோம். எங்க வீட்டுல இன்னுமே பேசறது இல்ல. அத்தை வீட்டாளுங்க மொத முறையா உன் கல்யாணத்துக்குத் தான் இந்தப் பக்கம் அடியெடுத்தே வச்சுருக்காங்க. அதுக்கு முந்தி வரை, அடிச்சாலும் புடிச்சாலும் நாங்க ரெண்டு பேரு மட்டுந்தான்"
அப்போது பிரக்ஷித் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு எதிரே வந்து நின்றான் "அம்மா, அவட ஞான் பால் களிக்கு..."
"சித்தி இருக்கும் போது தமிழ்லப் பேசணும்னு சொல்லிருக்கேன்" சுப்ரதா மகனுக்கு நினைவுபடுத்த, அவனும் உடனே மொழியை மாற்றினான்
"ஆன், பந்து அங்கப் போய் விளுந்துருச்சு. வந்து எடுத்துக் குடு"
"உனக்கு விளையாட வேற இடமே கிடைக்கலயா? அந்த வீட்டுப் பக்கம் ஒன்னு போனா போனது தான்; திரும்பக் கிடைக்காது. அப்பாட்டக் கேளு; வேற வாங்கித் தருவாரு"
"அப்பா திட்டும். எனக்கு அந்த பால் தான் வேணும்..." அவன் சிணுங்கினான்
"கொச்சச்சன்கிட்டக் கேட்டீனா கிடைக்கும், போ" அன்னை சொல்படி விக்ரமைத் தேடிப் போனான் அவன்
"வெறும் பந்து தான; கேட்டா தரப் போறாங்க. அங்குட்டு போலிஸ் ஆஃபிசர் யாரும் தங்கிருக்காங்களா என்ன? வாசல்லயே ஒரு அங்கிள் நிக்குறாரே. நான் வேணா கேட்டுப் பாக்கட்டா?" பத்மா முன்வந்து வினவினாள்
"அவரு தந்தாலும் நான் வாங்குறதா இல்ல"
"ஏன், க்கா?"
"அது நான் பொறந்து வளந்த வீடு. அவரு தான் என்னோட அச்சன். எனக்கும் அவருக்கும் ஆகாது; சண்டை"
"என்னக்கா சொல்றீங்க?"
"ம்ம்ம். என்னைக்கு இவரக் கல்யாணம் பண்ணனோ, அன்னையோட எல்லாம் முடிஞ்சு போச்சு. என்னைக் குடும்பத்த விட்டே தொறத்திட்டாங்க"
"இத்தன வருஷமாவாக்கா முகங்கொடுத்துப் பேசல? அதுவும் கிட்டத்துல இருந்துட்டே, சங்கட்டமா இருக்காது..."
"என்னவோமா? அவங்களுக்கு என் உறவு தேவப்படல போலிருக்குது. பிரபாகருக்கு நல்ல குணம்; ஆனா, சில கெட்ட பழக்கங்கள் இருக்கி. ஸ்கூல் படிச்சப் போதுலருந்தே ரெண்டு பேரும் லவ் பண்ணோம். அப்பவே திருட்டு தம்மடிச்சு அச்சன்ட்ட மாட்டி அடி வாங்கும். காலேஜ் படிக்கறப்பவும் ஒன்னாவே இருந்தோம். அதோ, அந்தப் புளி மரம் தெரியுதில்ல. அதுக்கடியில நின்னு ஒரு நாள் ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்த நேரம் மாட்டிக்கிட்டோம். அதோட என்ட அச்சனும் சேட்டனும் எனக்கு மாப்பிள்ள தேடி; ஞான் இவரோட ஓடிப் போயி..."
"ஹஹஹா... ஹஹா... காலேஜ்லயே கல்யாணம் ஆயிட்டா?"
"அதே. கல்யாணம் ஆனப்புறந்தான் நாங்க டிகிரியே முடிச்சோம். அப்போ நம்ம வீட்டுல இந்த அளவு வசதியில்ல. ஓடு மாட்டிருந்துச்சு. ஹால்ல விக்ரம், அத்த, மாமா எல்லாம் படுத்துப்பாங்க. எங்களுக்குன்னு ஒரு சின்ன ரூம். அதுக்குக் கதவு கூட இருக்காது. வெறும் கர்ட்டைன் தான் தொங்க விட்ருப்போம்"
"அச்சோ..."
"காசு பணம் தான் இல்லயே தவிர ஜாலியா தான் போச்சு. வயசுக் கோளாறுனால மூணு மாசத்துலயே கன்சீவ் ஆயிட்டேன். அப்போத்திக்கு அவரு அவ்ளோ பொறுப்பா இல்ல; ஒரு வேலைக்கும் போகக் கிடையாது. அதனால, நாங்க யார்ட்டயும் சொல்லாம அபார்ட் பண்ணிட்டு வந்துட்டோம். அது தெரிஞ்சதும் நடந்துச்சே ஒரு கலவரம். எங்க லவ் மேட்டர் தெரிய வந்தப்போ கூட, அத்தை அந்தளவுக்கு ரியாக்ட் பண்ணல. பேபிஸ் விஷயத்துல அவங்க ரொம்ப சென்சிட்டிவ். நீயும் பாத்து இருந்துக்க"
அதைக் கேட்டதும் நெருடலாக உணர்ந்தாள் பத்மா "அப்பறம் எப்படி அவுகளச் சமாதானம் பண்ணீங்க?"
"அன்னைய தேதிக்கு எனக்கு இந்தளவு பொறுமயில்ல. கோவப்பட்டு அவர அழைச்சுட்டுத் தனிக்குடுத்தனம் போய்ட்டேன். தனியாப் போயி இன்னும் அதிகமாக் கஷ்டப்பட்டோந்தான். இருந்தாலும், அவருக்குக் கொஞ்சங்கொஞ்சமாப் பொறுப்புக் கூடுனுச்சு. வேலைக்குப் போய்க் காசு சேத்து வச்சு பிசினஸ் ஆரம்பிச்சாரு. அப்றம் நாலு வருஷம் கழிச்சு பிரக்ஷித் வந்தான். என்னோட வளைகாப்பு அப்போலாம் அத்தை பழயமாரி பேச ஆரம்பிச்சுட்டாங்க. இவன் பிறந்த பின்னாடி தான் இந்த வீட்டயே கட்டுனோம்"
"பிரக்ஷித் பொறந்தப்போ கூட உங்க வீட்டுலப் பாக்க வரலயா, க்கா?"
"எனக்குத் தெரிஞ்சு, அவங்க வர ஐடியாலத் தான் இருந்தாங்க. அதுக்குள்ள ஈ பர்த்தாவு ஃபுல்லா குடிச்சுட்டுப் போயி, என்ட அச்சனக் கண்டபடி பேசிருச்சு. எனக்காகத் தான் அப்படிப் பண்ணது. பக்ஷே, யார்ட்ட எப்படிப் பேசுறதுன்னு ஒரு மொற இருக்குல்ல. அந்தக் கோபத்துல என்ட சேட்டன் இவர அறைஞ்சு... அதினால் எனிக்கும் தேஷ்யம் வன்னு..."
"புருஷன் மேல அம்புட்டுப் பாசம்..."
"பாஷம்... கடுப்புத் தான் வந்துச்சு. அன்னியோட எங்க வீட்டுலப் போய்ச் சொந்தம் கொண்டாடுற எண்ணத்த மூட்ட கட்டி வச்சுட்டேன். அதுக்குப்பறம் குடிக்கவே கூடாதுன்னு இவருகிட்ட சத்தியமும் வாங்குனேன். எங்க நம்ம சொல்றத கேட்..."
அதற்குள் பிரபாகரன் அவளைக் காணாமல் அழைத்தான் "சுப்பு... சுப்பு... எவிடே ஆனு?"
"பிரபாகரெட்டா... ஞான் இப்போல் வருன்னு" அவளோ ஒருநொடி கூட நில்லாமல் கணவனிடம் ஓடிவிட்டாள்
பத்மா மீதமிருந்த ஆடைகளைக் கொடியில் போட, விக்ரம் அங்கு வந்து சேர்ந்தான்
"ரொம்ப நேரமா ஆளயே காணும். என்ன பண்ணிட்டு இருக்க?"
"சேச்சியோட லவ் ஸ்டோரி கேட்டுட்டு இருந்தேன்"
"நீ மட்டும் எல்லாரு கதையவும் கேளு. ஆனா, உன் கஷ்டத்த வெளியச் சொல்லிடாத"
"சொல்லுறதுக்கு எனக்கு எந்தக் கவலயும் இல்லீங்களே"
"ஓ, ரியலி? அத்தையும் நீயும் சேந்து எதையோ மறைக்குறீங்க, ப்ரியா. ஹாஸ்பிட்டல்ல நீங்க டிஸ்கஸ் பண்ணிட்டுருந்த விஷயம்... என்கிட்ட அதச் சொல்லவே கூடாதுன்னு முடிவெடுத்துட்டியா?"
"அதுவா... என்னைப் பத்தின டாப்பிக்கா இருந்தா உடனே சொல்லிருப்பேன். இது வேற ஒருத்தங்க சம்பந்தப்பட்டது. கொஞ்சம் பொறுத்துக்கங்க, விக்ரம். சொல்ற நேரம் வராமயா போயிடும்?"
அவள் தன்மையாகவே கூற, அதற்கு மேலும் விக்ரம் அவளைத் தோண்டித் துருவ விரும்பவில்லை
அவன் கோவை திரும்பிய பிறகு ராம் அவனிடம் வந்து விசாரணை செய்யலானான் "இன்னும் வாடகைக்கு வீடு எதும் கிடைக்கலயா?"
"பாக்கணும்"
"எத்தன நாளாப் பாக்குற? ப்ரியா அன்னைக்கே கோவமாப் போனா. உன் மைன்ட்செட் மாறவே இல்லயாடா? இன்னைக்கு சன்டே தான. நானும் உன் கூட வரேன். ஒரு நாள்லயே நல்ல வீடா கண்டுபிடிச்சுடலாம், வா"
"வீடு பாக்குறது பெரிய மலை இல்ல, மச்சான். பட் அதுல ஒன்னுல்ல, ரெண்டு ப்ராப்ளம்ஸ் இருக்கு"
"அப்புடி என்ன பிரச்சனை?"
"பத்மாவுக்குத் தனியாத் தூங்கணும்னா பயம். நான் நைட் ஷிஃப்ட் போய்ட்டேன்னா, அவத் தாக்குப்பிடிக்க மாட்டா"
"இன்னொன்னு?"
"அது... அத உன்ட்டச் சொல்ல முடியாது"
"இப்போ நீ வீடு தேட வர்றியா? இல்லயா?"
"ம்ஹூம்ம்ம். கொஞ்ச மாசம் போட்டும்டா"
"இப்போ ப்ரியா எங்க ஸ்டே பண்றா?"
"எதுக்கு?"
"சும்மா சொல்லேன்"
விக்ரம் அவளது விடுதியின் பெயரைச் சொல்லிவிட்டு வெளியே கிளம்பினான்
அவன் திரும்பி வந்தபோது கதவருகே நின்று "பே..." எனப் பயமுறுத்தியது நம் பத்மாவே தான்
ராம்குமார் நேரில் சென்று அவளைக் கையோடு அழைத்து வந்திருந்தான். அவளது உடமைகளும் உள்ளே இருக்க, இதை ஏற்கனவே எதிர்பார்த்தவன் போல சர்வ சாதாரணமாக உள்ளே நுழைந்தான் விக்ரம்.
"என்னங்க, சர்ப்ரைஸ் ஆக மாட்டீகளா?"
"ஏ, ப்ரியா... நீயா? எப்போ வந்த? எப்டி வந்த?" அவள் கேட்டதற்காக அவன் வியப்படைவது போன்று நாடகம் ஆடினான்
"ச்ச்ச... அவ்ளோ தானா உங்க ரியாக்ஷன்?" அவள் சலிப்புற்றாள்
கட்டிலில் அமர்ந்து காலுறையை உருவிக் கொண்டிருந்தவன் திடீரென்று என்ன நினைத்தானோ; எதிரே நின்றவளின் கரத்தைப் பற்றி வலுவாக இழுத்தான். அவனது செய்கைக்கு ஆயத்தமின்றி இருந்தவள் விரைந்து வந்து நெற்றியோடு முட்டிக் கொண்டாள்.
அவளை விழிகளோடு விழிகள் நோக்கியவன் "ஹேவ் எ ப்ளசன்ட் ஸ்டே ஹியர்" என்று சொல்லிக் கரத்தை விடுவித்தான்
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்ததை நினைத்து அவள் உறைந்து போயிருந்தாள்
"ஓய்..."
அவன் குரல் கேட்டுத் தெளிந்தவள் தன் மோன நிலையை மறைக்க முயன்றாள் "இ... இங்கப் பாத்தீங்களா? இது நான் வளக்குற கோல்ட் ஃபிஷ். சோனு, மீனு... ரீசன்ட்டா அஞ்சு வாங்குனேன். இப்போ ரெண்டு தேன் உசுரோட இருக்கு"
அவள் சோகமாக முடித்திருக்கத் தேற்றும் வார்த்தைகளை உதிர்த்தான் அவன் "கவலப்படாத. நாம ஒன்னா சேந்து நல்லபடியா வளத்துரலாம்"
அன்றிரவு உறங்கலாம் என்று போனால் விக்ரமுடைய கட்டில் சிறியதாக இருந்தது. ஒரு ஆள் தாராளமாகப் படுக்கலாம். இரண்டு நபர்கள் அதுவும் இடைவெளிவிட்டுப் படுப்பது சற்று சிரமமான காரியம். பத்மா எப்படியோ புரண்டு புரண்டு தூங்கிப் போனாள். அவளுக்கு இடம் விட்டு ஒதுங்கி ஒதுங்கிப் படுத்த விக்ரமிற்குத் தான் தூக்கம் கெட்டுப் போனது. ஆதலால், அடுத்த நாளே பிரபாகரன் மூலமாக ஊரில் இருந்த கட்டிலையும் பீரோவையும் இங்குக் கொண்டு வந்து இறக்கிவிட்டான். அவளுக்குத் தாய்வீட்டுச் சீதனமாக வந்த பொருட்கள் தாம் அவை. இப்போது நான்கு அடி என்ன, ஏழடி இடைவெளிவிட்டுக் கூட அவர்கள் படுத்து உருளலாம்.
அந்த வாரம் முழுக்கத் தன் பொருட்களை விக்ரமின் அறைக்குள் ஒழுங்குபடுத்துவதையே வேலையாக வைத்திருந்தாள் பத்மா. அதைத் தவிர சன்னல் கம்பியில் திரைச்சீலையைச் தொங்க விடுவது, குளியலறையின் கண்ணாடி சன்னலை அட்டை வைத்து அடைப்பது, கழிப்பறையில் பிரகாசமான மின்விளக்கை மாற்றுவது எனத் தனக்கு ஏற்றார் போல அவ்விடத்தை அமைத்துக் கொண்டாள். அம்மாதிரி தருணங்களில் இதையும் சேர்த்துச் சுத்தம் செய் என்று கூறி, அவள் தலையில் மேலும் சில பணிகளைச் சுமத்தினான் விக்ரம்.
அவற்றையும் முடித்து வீட்டை ஒருமுறை தேய்த்து தேய்த்துத் துடைத்தவள், தொலைக்காட்சிப் பெட்டிக்கு அருகே காலியாக இருந்த பகுதியைச் சாமிக்கு நேர்ந்துவிட்டாள். அங்கு முருகனின் திருவுருவத்தை வைத்து அடிக்கட்டையில் விளக்கேற்றி வணங்கினாள். திரி எரிந்து நல்லெண்ணெயின் மணம் பரவ, அந்த வீடே அப்போது தான் பூர்த்தி அடைந்ததைப் போல தோன்றியது.
அடுத்து வந்த நாள் ஞாயிறு. ஞாயிற்றுக் கிழமை என்றாலே பத்மாவுக்குக் கறி விருந்து நினைவுக்கு வந்து எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். சனிக்கிழமை இரவு பணிக்குச் சென்ற விக்ரம் இன்னமும் வீடு திரும்பவில்லை. காலையிலேயே பசி எடுக்க, அவள் கடைக்குச் சென்று ஆட்டிறைச்சி வாங்கி வந்துவிட்டாள். அதைச் சமைக்கத் தெரியாமல் விழித்தவள் உடனடியாக ரேகாவிற்கு அழைப்பு விடுத்தாள்.
வாராய் என் தோழி!