பத்மப்பிரியா அந்நேரத்திற்கு வயிற்றை நிரப்ப, பாலில் மில்க் பிக்கிஸை முக்கி வாயில் இட்டுக் கொண்டாள்
அப்போது ராம்குமார் உறக்கம் கலைந்து வெளியே வந்தான் "என்னமா, அதுக்குள்ள எழுஞ்சிட்டியா?"
"ஆமா, ணா. பசிலத் தூக்கமெல்லாம் பறந்து போச்சு"
"பாப்பாக்குப் பசிக்குதா? விக்ரம் வர லேட்டாகும் போல. என்ன வேணும், சொல்லு. சமைச்சுத் தாரேன்"
"மட்டன் வாங்கிட்டு வந்தேன். ஆனா, என்ன பண்றதுனு தெரியல" இவள் வெறும் கைகளை விரித்தாள்
அவன் மடமடவென்று சமையலை ஆரம்பித்துவிட, பத்மா உடன் இருந்து உதவி புரிந்தாள்; அரை மணி நேரத்தில் மணக்க மணக்க பிரியாணி செய்வது எப்படி எனக் கற்றுக் கொள்வதில் மிகவும் மும்முரமாகிப் போனாள்; அந்த ஈடுபாட்டில் வீட்டிற்கு வரச் சொன்ன தோழியை முற்றிலும் மறந்துவிட்டாள். இவள் அனுப்பி வைத்த இருப்பிடத்திற்கு, கூகுள் மேப்பே கண்ணாகப் பார்த்து பார்த்து வந்து சேர்ந்தாள் ரேகா.
கீழ் வீடா, மேல் வீடா என்று அவள் குழம்ப "யாரத் தேடுறீக?" என்றாள் ஒருத்தி கைக்குழந்தையும் சோறுமாக
"இல்ல, என் ஃப்ரென்ட பாக்க வந்தேன். பேரு ப்ரியா. வீட்டுக்கார் பேரு கூட விக்ரம்"
"ஓ, விக்ரம் அண்ணா வீடுங்களா? மேலுக்குப் போங்க" அப்பெண் வழியனுப்ப, அவள் புன்னகையைச் சிந்திவிட்டுப் படியேறினாள்
உணவுமேசையில் தட்டுக்களை வைத்துக் கொண்டிருந்த ப்ரியா "ஏ, ரேகா... உள்ள வாடி" என்று அன்போடு அழைத்தாள்
"ஏடி, பசி உசுரே போகுதுன்னு வரச் சொன்ன. இப்போ என்ன தட்டோட உக்காந்துருக்க?" சந்தேகமாய் வினவியபடி அவளும் உள்ளே நடந்தாள்
"உனக்குக் கஷ்டம் வைக்கக் கூடாதுன்னு நானே சமைச்சுட்டேன், ரே"
"யப்பா, நம்பிட்டேன்"
"ஈஈஈ... ஆர். கே. அண்ணன் தேன் சமைச்சாக"
அவன் இங்கு வசிப்பது தெரியாமலே வந்து சிக்கிவிட்டாள் ரேகா. இச்செய்தியை அறிந்ததும் கால்கள் முன்னேறாமல் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டன.
"சரி, அத்தான் சோறு செஞ்சாச்சுல்ல. நான் போறேன்"
"ஏய், எங்கப் போற? இருந்து சாப்டுப் போ"
"இல்ல, ப்ரியா. ரிசர்ச் வொர்க் இருக்கு" அவ்விடத்தில் இருந்து ஆன மட்டும் நழுவப் பார்த்தாள் அவள்
"இவ்ளோ தூரம் வந்துட்டு விக்ரமப் பாக்காமப் போனா எப்புடி? நீ இப்டியே பண்ணிட்டு இருந்தீனா, நான் பேசவே மாட்டேன் பாத்துக்க. வந்து உக்காரு" பத்மா அன்பினால் அவளை அடிபணிய வைத்தாள்
வரவேற்பறையில் ஒலித்த அவளின் குரலை வைத்தே வந்திருப்பது யாரென்று அடையாளம் தெரிந்து கொண்டான் ராம். எங்கே தன்னைக் கண்டால் அவள் பயந்து ஓடி விடுவாளோ என்று அறைக்குள்ளேயே பதுங்கினான். அதற்கேற்ப அவளும் அவன் பெயரைக் கேட்டதும் பின்வாங்க எத்தனிக்க, அவனுடைய மனதில் ஏகப்பட்ட வலி.
"ராம் அண்ணா, சாப்புட வாங்க. அப்றம் உங்கள விட்டுட்டு அண்டாவக் காலி பண்ணிடுவேன்"
"நீ சாப்பிடு, மா. எனக்குப் பசியில்ல"
"நீங்க வந்தா தான் நான் சாப்புடுவேன். சீக்ரமா வாங்க" இவள் வற்புறுத்தி அழைக்க, அவன் தயக்கத்துடனே வந்து உட்கார்ந்தான்
"நீயும் சாப்புட்றி" ரேகாவின் முன் இவள் தட்டை நகர்த்தி, பிரியாணியை அள்ளி வைத்தாள்
"ஹே, வேணாம், வேணாம். நான் அல்ரெடி சாப்டுத் தான் வந்தேன்"
"அப்டியா? அப்போ ரெண்டு வாயாச்சும் டேஸ்ட் பண்ணிப் பாரு" அவளின் தொண்டை வரை சோற்றை வைத்துத் திணித்தாள் ப்ரியா
அந்நேரம் பார்த்து விக்ரம் உள்ளே நுழைந்தான் "வீட்டுலக் கவிச்சயா? நாத்தமா அடிக்குது"
"சாப்புட்றப் பொருள அப்டிச் சொல்லாதீக" இவள் எடுத்துரைத்தாள்
"ஐ'ம் ஹங்ரி. எனக்கு அந்த மேகியவாச்சும் கிண்டி வையு. குளிச்சுட்டு வந்துட்றேன்" கூறி முடித்து இவன் பட்டென்று கதவடைத்துக் கொண்டான்
"வந்தவகளக் கூட கவனிக்காம உள்ளப் போறதப் பாத்தியா? நல்ல பசி போல. நீ இரு, ரே. நான் அஞ்சு நிமிஷத்துல வந்துட்றேன்"
இவள் சமையலறைக்குள் போய்விட, ரேகா பிரியாணியை மென்று விழுங்க முடியாமல் திணறினாள். ராம் செய்த உணவு என்பதால் தானே இப்படி ஒதுக்கித் தள்ளுகிறாள். அந்த உண்மை விளங்கியதும் அவனுக்கு மேலும் வலித்தது.
"சாப்பாடு தொண்டைக்குள்ள இறங்கலைன்னா துப்பிடுங்க. சிங்க் அங்க இருக்கு" அவன் தன்னறைக்குள் சுட்டிக் காட்ட, அவள் சட்டென உணவை விழுங்கிக் கொண்டாள்
"ஸாரி" அவனின் வேதனை புரிந்ததோ என்னவோ
"உங்க ஹஸ்பன்ட்... அவருக்கு நான் நெறய நன்றிக்கடன் பட்ருக்கேன். அவரப் பாக்கலாங்களா?"
"நினைச்சாலும் முடியாது. உயிரோட இல்ல" இதைச் சொன்னவளுக்கு வராத அழுகை, அத்தகவலைக் கேட்டவனுக்கு வந்துவிட்டது
சில நிமிடங்கள் அவனது மௌன அஞ்சலி தொடர, ரேகாவிற்கு அவனைக் காணுகையில் வருத்தமாய்ப் போனது. யாரும் பார்த்துவிடக் கூடாதென அவன் அவசரமாகத் துடைத்த கண்ணீர்த் துளிகள் பத்மாவின் கண்களில் வசமாய் அகப்பட்டன.
"என்னாச்சு, ணா? ஏன் கண்ணு கலங்கிருக்கு?"
"காரத்தோட தெரியாமக் கண்ணுலக் கைய வச்சுட்டேன்" அவன் முயன்று தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டான்
"பாத்து, ணா... விக்ரம், எவ்ளோ நேரம்?"
"வந்துட்டேன்மா" இவன் குளித்து முடித்து விரைவாக வந்து சேர்ந்தான்
"இவ என் ஃப்ரென்டு, மதுரேகா. ஒருநா அக்ரி யுனிவர்சிட்டில மீட் பண்ணப் போனேனே" பத்மா அவளைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தினாள்
"ஹாய்"
"ஹாய்..."
"இதுக்கு முன்னாடி பாத்துருக்கோமா? மேரேஜுலப் பாத்ததா கூட ஞாபகம் இல்லயே"
"அவக் கல்யாணத்துக்கே வரல. எல்லாம் கொழுப்பு..." பதிலளித்தது ப்ரியா
"அதான் ஸாரி கேட்டனே, டி. மறுபடியும் ஆரம்பிக்காத. அன்னைக்கு சிட்சுவேஷன் சரியில்ல. வர முடியல" ரேகா விக்ரமை ஏறிட்டுக் கூறினாள்
"ம்ம். பத்மாவ எத்தன வருஷமா தெரியும்?"
"அவங்க அம்மாவோட வயித்துல இருந்தப்பலருந்தே தெரியும். நாங்க பக்கத்து பக்கத்து வீடு"
"ஓ... அப்போ உங்க கிட்டத் தான் கத்துக்கணும் போல. இவள வச்சு எப்படிக் காலத்த ஓட்டப் போறேன்னே தெரியலங்க. நம்ம ஊருல கரன்ட் எப்போ வரும், எப்ப போகும்னே தெரியாதுல்ல. அதே போல தான் இவக் கோவமும்"
இவன் குற்றம் சாட்ட பத்மா இடைப்புகுந்தாள் "என்னங்க..."
"பாத்தீங்களா, மது? உண்மைக்கே காலம் இல்ல"
ரேகா ஏதும் பேசாமல் சன்னமாய்ச் சிரித்து வைத்தாள்
"விக்ரம்..."
"என்னடி, தங்க மயிலு?"
"உங்க பொண்டாட்டிப் புராணத்த நிறுத்துங்க கொஞ்சம். இவங்களயும் அழைச்சுட்டு எங்கயாச்சும் வெளியப் போய்ட்டு வருவோமா?"
"நோ" மதுரேகா கூக்குரலிட
"நான் வரல" என்றான் ராமும் ஒத்த நேரத்தில்
அவர்கள் சொல்வதை இவ்விருவரும் காது கொடுத்துக் கேட்டால் தானே; வம்படியாய் இழுத்துப் போய் காரில் ஏற்றிவிட்டனர்.
பத்மா முந்திக் கொண்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தாள் "நான் தான் வண்டிய ஸ்டார்ட் பண்ணுவேன்"
"ஓகே, பட் கேர்ஃபுல்" என்றபடி விக்ரம் அருகே உட்கார்ந்தான்
பீதி அடைந்த ராமும் ரேகாவும் இருக்கை வாரை இழுத்து அணிந்து கொண்டனர். நிறுத்தி நிறுத்தி இவள் பத்து மீட்டர் செல்வதற்குள்ளாகவே பத்து நிமிடங்களாகி விட்டது. அதற்கே விக்ரம் இவளைப் பாராட்டி ஊக்கப்படுத்தினான். பின்பு, இவளாக அயர்ச்சியடைந்து கணவனிடம் வாகனம் ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்தாள்.
நால்வரும் அருகேயிருந்த காந்தி பூங்காவினைச் சென்றடைந்தனர். விக்ரமும் பத்மாவும் பேசிக் கொண்டே முன்னால் போய்விட்டனர். ரேகா இரு கரங்களையும் இறுகக் கட்டியபடி மெதுவாய் நடந்தாள்; எங்கே மீதம் ஒருவனைக் காணவில்லை என்று ஒரு கணம் திரும்பிப் பார்த்தாள். சற்று பின்னால் பாக்கெட்டுகளில் கைகளை நுழைத்தவாறு அவன் தொடர்ந்து வந்தான்.
முகத்தில் சோகம் இழையோட "ஸாரி ஃபார் யுவர் லாஸ்" என்றிட்டான்
வேகத்தை மேலும் குறைத்தவள் அவன் அருகே வரவும் "நீங்க எதுக்கு ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க?" என வினவிட்டாள்
"எல்லாம் என்னாலத் தான. கொஞ்சம் நான் கவனமா இருந்துருந்தா, தேவயில்லாம ஒரு உயிர் போயிருக்காது. உங்களுக்கும் இந்த நெலம வந்துருக்காது"
"விதிய யாராலயும் மாத்த முடியாது. உங்களத் தப்பு சொல்லி என்ன வரப் போகுது? நானே அத மறக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன். பெட்டர், நீங்களும் மறந்துடுங்க"
"உங்களுக்காக நான் எதாவது செய்யணும்னு ஆசப்படுறேன்"
"தேவயில்ல. பழசு எதயும் ஞாபகப்படுத்தாம இருங்க. அதுவே போதும்" பட்டென்று சொன்னவள் முன்னேறிச் சென்றுவிட்டாள்
ராம்குமாருக்கோ மனதின் கனம் கடுகளவும் குறைந்தபாடில்லை
அன்றிரவு பத்மா நேரத்திலேயே உறங்கிப் போக, இவளது அலைபேசி விடாமல் ஒலித்தது
திரையில் அங்கை எனக் காண்பிக்க விக்ரம் அவ்வழைப்பை ஏற்றான் "ஹலோ"
"பிரி... பிரியா, இல்லைங்களா?"
"அவத் தூங்குறா. நான் வேணா எழுப்பி விடவா?"
"பரவால்ல. அவ எழுஞ்சதும் மறக்காம கால் பண்ணச் சொல்லுங்க" அவளது குரல் உடைந்து வந்தது
"அக்ஷதா, வெய்ட். நான் அவக் கிட்டத் தரேன்"
இவன் தூக்கத்தில் இருந்தவளை உசுப்பி மொபைலைக் கையில் திணித்தான் "பத்மா... பத்மா... எழுந்திரு. உன் அக்கா பேசுறாங்க. அழற மாரி தெரியுது. என்னனு கேளு"
"ஹ... ஹலோ... சொல்லு, அங்கை. உனக்கு எத்தனை தடவ கால் பண்றது? ரீச் ஆகவே மாட்டேங்குது" ஸ்பீக்கரை அழுத்திக் கண்களைக் கசக்கியவாறே இவள் பேசலானாள்
"அவரு எனக்குத் தெரியாம ஃபோன எடுத்து உன் நம்பர ப்ளாக்ல போட்டு வச்சுருக்காரு, ப்ரியா. இத்தன நாளா கவனிக்காம விட்டுட்டேன். கல்யாணம் ஆனதுல இருந்து பிசியா ஆய்ட்டனுல்ல நெனச்சேன்"
"அப்டியா விஷயம்?"
"என்னை எந்தெந்த வழில ஏமாத்த முடியுமோ, எல்லாத்தயும் செஞ்சுட்டாரு. இதுக்கு மேலயும் என்னால இங்க இருக்க முடியும்னு தோணல. குடிச்சுட்டு குடிச்சுட்டு வந்து அடிக்குறாரு, ப்ரியா. இன்னைக்கு, இன்னைக்கு... ஹேமா என் ஜாடைலயே இல்ல; அவள யாருக்குப் பெத்தனு கேட்டாரே என்னைப் பாத்து. பாவி மனுஷன்... என் உசுரு மொத்தமும் பொசுங்கிடுச்சு" வெடித்து அழுதாள் அங்கை
அதைச் சகிக்க இயலாமல் விக்ரம் நகர, கரம் பிடித்து நிறுத்தினாள் இவள்
"அப்றம்..."
"அம்மாட்டச் சொன்னா புரிஞ்சுக்காம நடந்துக்குறாங்க. அப்பாகிட்ட இதப் பத்திப் பேசவே விட மாட்றாங்க. எனக்கு வேற யார்ட்டப் போறதுனே தெரியல. நீயாச்சும் எனக்கு ஒரு வழி சொல்லு. நான் என்ன தான்டி பண்ணட்டும்?"
"நீ பொறப்பட்டு வா, க்கா. நான்... நாங்க இருக்கோம்"
"விக்ரம் என்ன சொல்லுவாரோ?"
"அவரு அன்டர்ஸ்டான்ட் பண்ணிப்பாரு. ஹேமாவயும் அழைச்சுட்டு எப்டியாவது வந்துரு"
"ம்ம்ம்"
"ரொம்ப யோசிக்காத. எதப் பத்தியும் கவலப்படாத. நம்ம அம்மாட்ட மட்டும் சொல்லிரவே சொல்லிராத; உன்னை இங்க வரவிடவே மாட்டாங்க. உடனே பாப்பாவோட பஸ் ஏறு. காந்திபுரம் ரீச் ஆய்ட்டு கால் பண்ணு"
"இதோ, இதோ... இப்பவே கிளம்புறேன்"
அக்ஷதா அழைப்பைத் துண்டித்ததும் இவள் கேள்வியாய் நோக்கினாள்
"வரட்டும்; பாத்துக்கலாம்" நிதானமாகக் கூறிய விக்ரம் படுக்கையில் சாய்ந்தான்
இனியும் விழிகள் மூடுமோ!