• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 35

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
இரு தினங்களுக்கு முன் அதே காந்தி பூங்காவில்...

ராம்குமாரிடம் மூஞ்சிலடித்தாற்போல் பேசிவிட்டு மதுரேகா நடைவேகத்தைக் கூட்டி இருந்தாள்; முன்னால் சென்ற தோழியைக் காணாமல் விக்ரமிடம் போய் நின்றாள்.

"எங்கணா அவ?"

"கொழந்த ஐஸ்க்ரீம் திங்கப் போயிருக்கு" அவன் இதழோரச் சிரிப்புடன் தொலைவில் சுட்டிக் காட்டினான்

அங்கு பத்மா ஐஸ் வாங்கிக் கொண்டிருக்க, அவளுடனே ராமும் குல்ஃபி வாங்குவதில் ஐக்கியமடைந்தான். அவன் இருக்கும் இடத்திற்குப் போகப் பிடிக்காமல், ரேகா விக்ரம் அமர்ந்திருந்த மர இருக்கையிலேயே உட்கார்ந்து கொண்டாள்.

"நீங்க ஐஸ் சாப்டலையா, ணா?" தன் நீண்ட பின்னலை எடுத்து முன்னால் இட்டுக் கொண்டே அவள் வினவினாள்

"இன்ட்ரெஸ்ட் இல்லமா. இந்த மாதிரி விளையாட்டுத்தனத்தலாம் ஓரங்கட்டி வச்சுட்டேன். ஏன்னு எனக்கே தெரியல"

"என்னை மாரி போல"

"ஏன்மா நீயும் வாழ்க்கய வெறுத்த மாரி பேசுற? உனக்கும் லவ் ஃபெயிலியரா?"

"லைஃபே ஃபெயிலியர் தான், ணா. நான் ஒரு விடோ; விதவை..."

"ஐ'ம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி. நான் சும்மா தான் கேட்டேன். எனக்கு இதப் பத்தின ஐடியாவே இல்ல. அகெய்ன் ஸாரிமா"

"ஒன்னும்... ஒன்னும் பிராப்ளம் இல்ல. நான் தப்பா எடுத்துக்கல. சில்"

"நீ அவளோட பெஸ்ட்டி தான. பத்மா உன்னைப் பத்தி என்கிட்டச் சொன்னதே இல்ல. கேன் யூ பிலீவ் தட்? அவளா வந்து எதையுமே ஷேர் பண்ண மாட்றா. நான் எஃபர்ட் போட்டு ஆராய வேண்டியதாயிருக்கு"

"பழகிக்கங்க. ஸ்டார்டிங்ல அவ அப்டித்தான் நடந்துப்பா"

"நான் அவக் கூட எக்ஸ்ட்ரா டைம் ஸ்பென்ட் பண்ணா, அவளோட மைன்ட் ஓப்பனாக சான்ஸ் இருக்கா?"

"நீங்க இப்போ ஒன்னா தான இருக்கீங்க. ஸோ, அது இஷ்யூ இல்ல. அவளுக்கு உங்க மேல நம்பிக்க வரணும். எத வேணாலும், எந்த டைம்ல வேணாலும் உங்களோட டிஸ்கஸ் பண்ணலாங்குற ஃப்ரீடம் தேவ. டிஸ்கஷன் இஸ் த கீ"

"அப்டீனா, அவ எது சொன்னாலும் அமைதியா கேட்டுக்கணுமா?"

"நோ, நோ... அவள எதாச்சும் கான்வர்சேஷன்ல எங்கேஜ் பண்ணிட்டே இருங்க. ஒரு ஃப்ளோல அவளே எல்லாத்தயும் சொல்லிடுவா. கான்வோவ அப்சர்வ் பண்ணீங்கன்னாலே அவளப் பத்தி நல்லாத் தெரிஞ்சுக்கலாம்; அவளுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காதுன்னு"

"நானும் பொறுமையா இருக்கணும்னு டிரை பண்ணிப் பாக்குறேன். அவ என்னை விடவும் ஸ்லோவா இருக்கா; டெத் ஸ்லோவ். ஒரு விஷயத்தப் பத்தி வாரக் கணக்காக் கேட்டுட்டு இருக்கேன்; வாயவே திறக்க மாட்றாளே"

"அது ஏதோ ஒரு வார்த்தை சொல்லுவாங்களே. ஆன், லைட்டா அவள ட்ரிக்கர் பண்ணிப் பாருங்க; வெறுப்பேத்துங்க; கடுப்பேத்துங்க. லூசு கோவத்துலயாச்சும் நாலு வார்த்தை பேசுவா"

"இவ்ளோ ஹார்ட்வொர்க் பண்ணணுமா? சிம்பிளா எதாச்சும் வழி இருந்தா சொல்லேன்"

"சிம்பிளா? சிம்பிளா... தெர்லீங்களே, ணா. சீ... அவ காம்ப்ளக்ஸான பொண்ணு; மெயின்டெய்ன் பண்றது கஷ்டந்தான். அதுக்கான ரீசன் தெரிஞ்சா, உங்களுக்கு ஈசியா இருக்கும்னு தோணுது. அவ யாரயும் நம்பாததுக்குக் காரணமே, அவளோட அப்பாவும் அம்மாவும் தான். எதுக்கெடுத்தாலும் அவளச் சந்தேகப்பட்டு, திட்டி, அடிச்சு, கம்பேர் பண்ணியே வளத்துட்டாங்க. பெத்தவங்களே நம் மேல நம்பிக்கை வைக்கலயேன்னு ஃபீல் பண்ணி பண்ணி இப்டி மாறிட்டா. அப்பயும் மத்தவங்கள ஹர்ட் பண்ற அளவு எதும் செய்ய மாட்டா. மனசு தங்கம்"

"வீட்டுல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டோ?"

"அவ பேரன்ட்ஸ் அக்கா தங்கச்சி ரெண்டு பேத்தயும் ஒரே மாரி ஹேன்டில் பண்ணிருந்தா இந்தப் பிரச்சனையே வந்துருக்காது. பெத்த பொண்ணுங்ககிட்டயே பார்ஷியாலிட்டி பாக்குறாங்க. எனக்கே சம்டைம்ஸ் இரிடேட் ஆகும்"

கூடுதலாய், பத்மாவை முதன்முறை பெண் பார்க்க வந்த படலத்தன்று நடந்த கலவரத்தையும் அவள் விளக்கமாய்ச் சொன்னாள். அதிலிருந்தே ப்ரியா ஏன் இத்தனை வரன்களைத் தட்டிக் கழித்தாள் என்பதை விக்ரம் அறிந்து கொண்டான். அவன் அதைப் பற்றிய சிந்தையில் இருந்தபோது, ரேகா தொண்டையைச் செறுமியவாறு ராமைப் பற்றி விசாரித்தாள்.

"உங்க ஃப்ரென்ட் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்காரு?"

"அவனா... அவனுக்கு இந்த ஜென்மத்துல அப்படி ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பில்லமா"

"ஏன்?"

"அவன் ஏதோ ஒரு பொண்ணப் பாத்தானாமா. அந்தப் புள்ள அவன் உயிரக் காப்பாத்துனுச்சாம். அவனும் வருஷக்கணக்கா அவளத் தேடிட்டுத் தான் இருக்கான். நீயே சொல்லு; பேரு கூட தெரியாம, இவ்ளோ பெரிய ஊருல, ஒருத்திய எப்படிக் கண்டுபிடிக்குறது? அப்டியே தேடிப் பிடிச்சாலும்..."

"என்னாகும்?"

"அந்தப் பொண்ணுக்கு அல்ரெடி மேரேஜ் ஆகிருந்துச்சுனா? வேற யாரயாச்சும் லவ் பண்ணிட்டு இருந்தா? அப்பிடி எதுவுமே இல்லைனாலும், இவன அவளுக்குப் பிடிக்கணுமே. இதுலாம் நடக்குற காரியமா? என்னமா சொல்ற... அவனுக்கும் என்னை மாரி அரேஞ்ஜ் மேரேஜ்னு எழுதிருக்குப் போல"

"உங்கள மாதிரி... அரேஞ்ஜ் மேரேஜு?"

"யா. இல்லையா பின்ன?"

"அப்போ, கல்யாணத்துக்கு முன்னாடி மீட் பண்ணதுலாம்?"

"நாங்களா? எப்போ? எங்க? பத்மாவ முன்ன பின்ன நான் பாத்ததே இல்லயே"

"என்கிட்டயேவா? ஜாடிக்கேத்த மூடி தான் போங்க"

பத்மா அவர்களை நோக்கி வரத் தொடங்க, கமுக்கமான சிரிப்போடு இருவரும் பேச்சை நிறுத்தினர். அந்த உரையாடலின் விளைவாகத் தான் விக்ரம் இவளைப் பொள்ளாச்சிக்கு உடன் அழைத்துச் செல்லவில்லை. தன் மனைவி மற்றவர்களிடம் அவசியமின்றி வசை வாங்குவதை அவன் துளியும் விரும்பவில்லை. அது அவளைப் பெற்றவர்களாய் இருந்தாலும் சரி.

"வாங்க, அக்ஷதா" இத்தருணத்தில் விக்ரம் தன் மைத்துனியை வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்

அவளோ மங்கை அரற்றிய அரற்றில் அழுது வடிந்து, சொந்த வீட்டிலேயே ஒடுங்கி ஒதுங்கி நின்றாள். துணைவியின் கூப்பாட்டுச் சத்தம் கேட்டு சுந்தரம் மெல்ல எட்டிப் பார்த்தார்.

"அச்சு, என்னமா திடீர்னு வந்து நிக்குற? மாப்பிள்ள எங்க?"

"அவரு வர மாட்டாரு, ப்பா. முன்னமே வக்கீலப் பாத்துட்டாரு. என்னை டைவர்ஸ் பண்ணப் போறாராம், பா"

அத்தகவலைக் கிரகித்துக் கொள்ள சுந்தரத்திற்குச் சில நிமிடங்கள் தேவைப்பட்டன. அதுவரை தலையைத் தொங்கப் போட்டவாறு சோஃபாவில் அமர்ந்துவிட்டார். மங்கை சேலைத் தலைப்பால் வாய் பொத்தி மூக்கினை உறிந்தபடியே இருந்தார். விக்ரமையோ அக்ஷதாவையோ ஒரு வார்த்தை அவர்கள் உட்காரக் கூட சொல்லவில்லை.

உள்ளத்தில் உண்டான தவிப்பில் கண்மண் தெரியாமல் பொங்கினார் மங்கை "ஏனுங், மாப்ள... இப்போ தான் அவரே கொஞ்சமா உடம்பு தேறிருக்காரு. அதுக்குள்ள இப்டி எம்மகள மூளியா கொண்டாந்து நிறுத்திருக்கீகளே. இது உங்களுக்கே நல்லாருக்கா? நீங்களாச்சும் புத்திமதி சொல்லி அவளப் புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைக்கக் கூடாதா? கல்யாணமாகி இத்தன வருஷம் கழிச்சு விட்டுட்டு வந்தா, இவள யாரு ஏத்துப்பா? என் பேத்தியத் தேன் யாரு மதிச்சுக் கட்டிப்பா? உங்க வீட்டுல ஒரு பொண்ணு இருந்தாக்க, உங்களுக்கு எங்க வலி புரிஞ்சுருக்கும். அவசரப்பட்டுட்டியளே"

"அத்த, விரசா ஏன் வார்த்தைய விட்றீங்க? உங்க பொண்ணு எவ்வளோ கஷ்டத்த அனுபவிச்சுருந்தா, இப்படி ஒரு முடிவ எடுத்துருப்பாங்க; அத நினைச்சுப் பாக்க மாட்டுறீங்களே. எதுக்கு இந்த வீண் ஆர்ப்பாட்டம்?" அவனும் காரமாகவே பேசினான்

"மோகன் தம்பி சொன்ன எதயோ மனசுல வச்சுட்டு நீங்க பேசுறாப்புல இருக்கு. அவருக்கும் உங்களுக்கும் என்ன தகராறோ எங்களுக்குத் தெரியாது. அதுக்காக, அக்ஷதா வாழ்க்கைல மண்ணள்ளிப் போட்றாதீக"

சுந்தரம் புத்தி வந்து மனைவியை அதட்டினார் "மங்கை, என்ன பேசுற புள்ள? வாய அடக்கு. நீ அக்ஷதாவக் காபந்து பண்றன்னு, ரெண்டாமவ வாழ்க்கையக் கெடுத்துருவப் போலருக்குதே"

"மாமா, அத்த இப்படிலாம் பேசுவாங்கன்னு பத்மா சொல்லித் தான் அனுப்புனா. நீங்க சொல்றத நான் பெருசா எடுத்துக்கப் போறதே இல்ல. எனக்கும் மோகனுக்கும் ஒத்து வரல; அதான் உண்மை. அவர ஒரு ஆளா மதிச்சுருந்தா, இந்நேரம் நான் உங்க மாப்பிள்ளையாவே வந்துருக்க முடியாது. அந்தளவுக்கு என் பொண்டாட்டியப் பத்தித் தப்பு தப்பாச் சொன்னாரு. அப்போவே அவரு எப்படிப்பட்ட மனுஷன்னு தெரிஞ்சு போச்சு. இருந்தும், நான் அவரப் பத்தி வெளிய மூச்சே விடல; சைலன்ட்டா ஒதுங்கிட்டேன். எல்லாம் என் பத்மாவுக்காக. அவ எங்கூட பத்திரமாவே இருக்கா. உங்க மூத்தப் பொண்ணு தான் பாவம். இத்தனை வருஷமா அனுபவிக்கக் கூடாத கொடுமையலாம் அனுபவிச்சு, கூண்டத் தாண்டி வெளிய வந்துருக்காங்க. உங்க மானம் மரியாதை பறிபோறதப் பத்திலாம் யோசிக்காம, ஒரு அரைமணி நேரம் ஒதுக்கிப் பேசுங்க. அப்புறம் நீங்களே ஃபைனல் டிசிஷன் எடுத்துப்பீங்க"

"நீங்க சொல்றதுலாம் புரியுது. இந்த ஊர்க்காரங்க ஒரு பக்கத்து நியாயத்த மட்டும் வச்சு முடிவெடுக்க மாட்டாங்க, மாப்பிள்ள" சுந்தரம் தயக்கம் காட்டினார்

"நான் ஊரப் பத்தியே பேசல, மாமா. நீங்க எந்த மாரியான முடிவ எடுக்கப் போறீங்கனு தான் கேக்குறேன்"

"இது தனிப்பட்ட விஷயம் இல்லப்பா. எத்தனைப் பேரக் கூட்டிப் பண்ணக் கல்யாணம். அவங்களாம் தலையிடாம எடுத்தோம் கவுத்தோம்னு எதயும் செஞ்சுட முடியாது"

"உங்க பொண்ணயும் ஊரக் கேட்டுத் தான் பெத்தீங்களா, மாமா?"

"மாப்ள..." சீறியது மங்கை

"அத்தை, என்னைப் பேச வைக்காதீக. நான் இங்க நாட்டாம பண்ண வரல. மொதல்ல அக்ஷதா மனசுல என்ன இருக்குன்னு பாருங்க. ரெண்டு நாள் போகட்டும். மாமன், சித்தப்பன், பெரியப்பனுக்குலாம் அப்பறமா பதிலச் சொல்லிக்கலாம். அப்டியும் மோகன் வந்தா தான் பொண்ண வீட்டுக்குள்ளயே விடுவோம்னு நீங்க குறுக்கால நின்னீங்கன்னா... நானே உங்க பொண்ணக் கூப்டுப் போயிக்குறேன். அவங்களக் கவனிச்சுக்க பத்மா இருக்கா; நான் இருக்கேன்; கேரளால எங்க வீடு இருக்கு. சாதி சனம் கேட்டாக்க, உங்க பொண்ணு செத்துட்டான்னு சொல்லிடுங்க. அப்போ இந்த ஊரு தப்பாப் பேசாதுல்ல"

"நீங்க எங்ககிட்டயே விட்டுட்டுப் போங்க. எங்க பொண்ண எங்களுக்குப் பாத்துக்கத் தெரியும்"

"பாத்துக்கிட்டா போதாது, அத்த. காலணாக்காச்சும் அன்பு காட்டணும். கட்டிக் கொடுத்தா கடமை முடிஞ்சுருச்சுனு தலை முழுகிடக் கூடாது. என்னைக்கா இருந்தாலும் ரெண்டு பேரும் உங்களோட குட்டிப் பொண்ணுங்க தான். தாயா இருந்து கரிசனம் காட்டுங்க; எரிஞ்சு எரிஞ்சு விழாதீங்க. அவங்களுக்கு உங்க அளவு அனுபவம் போதாது; விவரம் தெரியாது. அதுக்குன்னு வாணல்லப் போட்டு வறுத்துடாதீங்க; பாசமாப் பேசி மனக் கசப்ப ஆத்துங்க. பூவ வளத்துக் கொரங்கு கைலக் கொடுத்துட்டு... எனக்கு வேலை கிடக்கு; நான் வாரேன், அத்தை. வரட்டா, மாமா? பை பை" பத்மாவை அவர்கள் இத்தனை காலம் காயப்படுத்தியதை நினைவில் வைத்தே மூர்க்கமாகப் பேசி முடித்தான் விக்ரம்

வீட்டில் தனியாக இருந்த நம் நாயகியோ நேரத்தைக் கடத்தவென்று கணவனின் மடிக்கணினியைத் திறந்தாள். அந்தந்த ஃபோல்டரில் அரைகுறையாய் க்ளிக் செய்து வைத்தவள், இறுதியாக ரீசைக்கிள் பின்னைத் திறந்தாள். அதிலே விக்ரமுடன் ஜோடிப்புறாவாக நின்றிருந்தாள் ஜெனிஃபர்.

மறக்குமா நெஞ்சம்!