• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 38

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
விக்ரமிடம் கோபித்துக் கொண்டு அறைக்குள் சென்ற பத்மாவுக்கு உணர்வு கொதிப்பில் உறக்கம் வரவில்லை. இந்நிலையில் அந்த வானரக் கூட்டத்தின் சத்தம் வேறு காதை அடைக்க, விளக்கை அணைத்துவிட்டு அங்குமிங்குமாக நடந்தாள். இம்முறை இருளில் இருந்த போதும் அவ்வளவாகப் பயம் எழவில்லை. அதில் சற்றே ஊக்கம் பெற்றவள் பால்கனியில் என்ன நடக்கிறது என்று பார்க்க எண்ணம் கொண்டாள். அதற்கேற்ப மெல்லிய இடைவெளியுடன் சன்னல்கள் திறந்திருக்க அவளின் வேடிக்கை ஆரம்பானது. முகப்புத் தடுப்பின் மீதேறி அமர்ந்திருந்த விக்ரம் தொடக்கத்திலேயே அவளைக் கவனித்துவிட்டான்; முகத்திற்கு நேராக அமர்ந்து அவளின் விழிகளை நோக்கியவாறே தான் குடித்தான்.

அத்தருணம் பத்மா தன் கைப்பேசியை எடுத்து ரெக்கார்ட் செய்யத் தொடங்கினாள். வெளியே மின்விளக்கு ஒளிரவும், அவர்களின் காணொளி அருமையாகப் பதிந்தது. அவளைத் தாமதமாகவே கண்கொண்ட ராம், கையில் பிடித்த மதுபுட்டியுடன் அப்படியே அமர்ந்துவிட்டான். குடித்தால் தன் தேவதையைப் பற்றி உளறி மாட்டிக் கொள்வானல்லவா? அத்தயக்கமே காரணம். பிறர் விழிகளில் படாமல் அவள் இருளிலே மறைந்திருந்தாள். மற்ற நண்பர்கள் அரட்டையை முடித்து வளையல் சத்தத்தில் வந்து நிற்க, பத்மாவிற்குக் குறும்பு தொற்றிக் கொண்டது. மேலும் மேலும் பயமடையச் செய்து அவர்களைத் தெறிக்கவிட்டு விட்டாள். அந்தக் களேபரத்தைப் பார்த்த விக்ரம், ராமைத் தனியே மாடிக்கு அழைத்துச் சென்றான். அனைவரும் ஓடிய பிறகு, பத்மா அந்த ஒருவனின் கழுத்திலிருந்த கையையும் உள்ளிழுத்துக் கொண்டாள்.

அவளின் பிடியிலிருந்து விடுபட்டவன் "காட்... காட்டேரி... ர... ரத்தக் காட்டேரி... ராமு... விக்ரமு... எங்கடா போனீங்க? மாப்புள, கார்த்திக்கு... மச்சி, இஸ்மாயிலு... ஒளியாம வாங்கடா; என்னைக் கைத்தாங்கலாக் கூட்டிப் போங்கடா" எனத் துணைக்கு அழைத்தபடியே அடிப்பிரதட்சிணம் செய்யலானான்

"யே, மாமா. ஓடியாந்துரு. அது பின்னாடியே வருது பாரு. ஓடியா, ஓடியா" தூரத்தில் இருந்து ஒரு குரல் வர

"முப்பாத்தா, காளியாத்தா, எங்காத்தா, உங்காத்தா, அல்லா, ஜீசஸ், மேரி, யோசேப்பு, ஆண்டவா..." அவன் கன்னாபின்னாவென்று கதறிக் கொண்டே ஓடினான்

பின்பு அவள் வாசலுக்கு வர, பால்கனியின் மூலையில் ஒருவன் மட்டும் கோழிக்குஞ்சாய்ப் பதுங்கியிருந்தான்

"அவ்வ்வ்.... அவ்வவ்வவ்வவ்வ்வ்" அவன் அச்சத்தில் ஊளையிட

"டேய், மூட்ரா. ஓட்ரா" என விரலை ஆட்டிக் கட்டளையிட்டாள் பத்மா

உடனடியாக வாயை மூடியவன் நடுங்கியவாறே எழுந்து நின்றான்

"இரு. மீச கூட மொளைக்குல; நீ கெட்ட கேட்டுக்குச் சரக்கு கேக்குது. கொடு அத. இப்ப திரும்பிப் பாக்காம ஓடு. ம்ம்ம்"

சாவி கொடுத்த பொம்மையாய் அலறிப் புடைத்தபடி, படிகளில் தவ்வி தவ்விக் கடைசி ஆளும் சென்று மறைந்தான். அவள் பட்டும் படாமல் மதுவை வாயில் கவிழ்க்க, அந்தச் சுவையே குமட்டிக் கொண்டு வந்தது. உணவுமேசையில் பிரிக்காமல் இருந்த சில்லி சிக்கன் பொட்டலத்தைப் பார்த்தவள் ஒரு முடிவுடன் நாற்காலியில் அமர்ந்தாள்; சரக்கு சிறு வாய் அதையடுத்து இரு பீஸுகள் சிக்கன் என்ற ரீதியில் குடித்துத் தீர்த்தாள். அவளது இந்த ஒத்திகையின் பலனைப் பின்னால் பார்ப்போம்.

மொட்டைமாடியில் நம் ராம்குமார் நான்கு குடுவைகளைக் காலி செய்துவிட்டு சிகரெட்டை உதடுகளுக்கிடையே பிடித்திருந்தான் "மச்சான், தங்கச்சிய வச்சுட்டே இப்புடிப் பண்ணாதடா. அவ நம்மளப் பத்தி என்ன நெனப்பா?"

"என்னவோ நெனைக்கட்டும். பொண்ணுன்னா கொஞ்சமாச்சும் பொறும வேணாம். அவக்கிட்ட அது சுத்தமா இல்ல. ரொம்ப ஓவராத்தான் பண்றா"

"எதையோ மனசுல வச்சுட்டு நீ எதெதையோ பேசாத. நிதானமா இருடா. அவ முன்ன பின்ன ரிலேஷன்ஷிப்புலயே இருந்ததில்லங்குற. அவளுக்கு எப்பிடி மச்சான் சூதுவாதுலாம் தெரியும்?"

"..."

"மச்சான், அவ உன் மேலப் பாசம் வச்சுருக்காடா. என்னைக்காச்சும் பாஸ்ட்ட பத்தி விசாரிச்சு உன்னைத் தொல்லை பண்ணிருக்காளா? இல்லல்ல. பக்குவமான பொண்ணுடா"

"அதான் முன்னமே எல்லாத்தயும் விலாவாரியா விளக்கிட்டேன்ல. அப்புறமும் அதப் பத்திப் பேச என்னருக்கு?"

"நீ சாதாரணமாச் சொல்லிட்ட. இதே வேற ஒருத்தியா இருக்கணும். உன் எக்ஸு என்னை விட அழகா இருப்பாளா? ரெண்டு பேரும் என்ன பேசுனீங்க? எங்கலாம் போனீங்க? எத்தனை தடவ... கிஸ் பண்ணீங்கன்னு கேட்டு கேட்டுத் தூங்கவே விட மாட்டாளுங்க. நிம்மதியா வாழவும் முடியாது; சாகவும் முடியாது"

"ப்ளடி சைக்கோஸ்"

"விக்ரம்... என் ஏஞ்சல மறுபடியும் பாத்தேன்டா"

"என்னது? நிஜமாத்தான் சொல்றியாடா. போதைல ஒன்னும் பேசலயே" வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த விக்ரம் ஆர்வத்துடன் அவன்புறமாய் திரும்பி உட்கார்ந்தான்

"சத்தியமாப் பாத்துட்டேன். பேசுனேன்"

"உன் லவ்வ சொல்லிட்டியா? அவப் பேரயாச்சும் கேட்டியா?"

"ரேகா... மதுரேகா"

"என்னாது? அந்தப் புள்ளையா?"

"அப்ஸல்யூட்லி. அன்னைக்கு அவ ராம்னு கதறி அழுதப்போ, நாங்கூட எதோ ப்ளட் ரிலேஷனாக்கும்னு நெனச்சேன். ஒருவேள ஹஸ்பன்டா இருக்குமோன்னு ஸ்லைட்டா தோணுச்சு. கடைசில, அதுவே உண்மையாய்டுச்சு. அவளோட புருஷன் என்னைக் காப்பாத்திவிட்டு, அவன் போய்ச் சேந்துட்டானாம். அவளைப் பாத்தா இனி லவ்வு வரும்? கில்ட்டி ஃபீல் தான் முண்டும்"

"ச்ச்சை... இப்படியா அவள மீட் பண்ணணும்? எனதருமை மனைவியோட தோழி, உன்னோட தேவத... நல்ல காம்பினேஷன்ல"

"காம்பினேஷா? அத்தான் கன்றாவி கோலமாய்டுச்சே"

"ரேகா உன்னைப் பத்திக் கேட்டா, மச்சான்; உனக்கு ஏன் கல்யாணம் ஆகலன்னு. எல்லாத்தயும் தெளிவாச் சொல்லிட்டேன்"

"அதெல்லாம் என்ன மயித்துக்குடா சொன்ன, வெண்ண? அவச் சும்மாவே என்னைப் பாத்தா முதுகக் காட்டுவா. இதுல நீ வேற"

"உன்னோட அஞ்சல அவன்னு எனக்கெப்டிடா தெரியும்? அந்தளவுக்குக் கமுக்கமா இருந்தா. பத்மாட்டக் கூட சொல்லிருக்க மாட்டா, பாரேன். ரெண்டும் ஒரே குட்டைல விழுந்த மட்டைங்க தான. அழுத்தக்காரிங்க. எப்புடி வந்து சிக்கிருக்கோம் பாத்தியா?"

"எனக்கொன்னும் பிரச்சனை இல்லப்பா. என்னைப் பொருத்தவர இந்த மேரேஜ் தலவலியே வேணாம். இப்டியே இருந்துட்றேன்"

"அப்படில்லாம் சொல்லக் கூடாது. நான் பெற்ற இன்பம், நீயும் பெறணும். ஓகே?"

அவன் மறுப்பாய்த் தலையாட்ட, விக்ரம் அவனது தாடையைப் பற்றி ஒப்புதலாய் ஆட்டி வைத்தான். பின்னர் இருவரும் பிரியாணிப் பொட்டலத்தைப் பிரித்து மேய்ந்துவிட்டுப் படுக்கச் சென்றனர். அங்கு ராம் ரேகாவின் நினைவில் உழல, இங்கு நமது நாயகன் பத்மாவையே ஆழ்ந்து நோக்கினான்.

அவள் தூங்குகிறாளா, இல்லையா என்பதை அறிய முடியாமல் "பத்துமா... பத்துமா... பத்து... பத்" என அழைத்தான்

அவள் திரும்பாமல் போகவே, அந்தக் கட்டிலிற்குத் தாவி அவளது முகத்தைக் கண்டவாறு ஒருக்களித்துப் படுத்தான்

"பிரியா... பிரி"

"ப்ச்ச்... என்ன வேணும்?"

"உனக்கு மட்டுந்தான் கோவம் வருமா? எங்களுக்கும் வரும்"

"வந்துட்டுப் போது" கையை இமைகளின் மீது வைத்து மூடியபடியே அவள் முணுமுணுத்தாள்

"வந்தா என்ன பண்ணுவோம்னு தெரியாதே?" என்று கேட்டு மேலும் நெருங்கியவன் ஒரு கணம் அதிர்ந்தான்

"ஹே, குடிச்சிருக்கியா?"

"ஆமா"

"என்னத்த குடிச்சுத் தொலச்ச?"

"தெரில. டைனிங் டேபிள்ல பாட்டில் கிடக்கு. போய்ப் பாத்துக்கங்க"

"எதுக்குக் குடிச்ச, தறுதல?"

"நீங்க மட்டும் குடிச்சீங்கள்ல? எனக்கும் கடுப்பா இருந்துச்சு. சும்மா டேஸ்ட்டு பாத்தேன். அவ்ளோ ஒன்னும் நல்லா இல்ல"

"எரும, ஃபர்ஸ்ட் டைமா? வாந்தி எதுவும் எடுத்துத் தொலயாத"

"அந்தளவுக்குலாம் குடிக்கல. இன்னும் போதையே ஏறலன்னு படுத்துருக்கேன். இதுல வாந்தி வேற வருதாக்கும்"

"வர வரத் திமிரு ஜாஸ்தியாய்ட்டே போகுது உனக்கு"

"பிடிக்கலன்னா டிவோர்ஸ் பண்ணுங்க. திட்டிட்டே இருக்காதீங்க"

"நீ பண்றதுக்குலாம் பாராட்டுப் பத்தரமும் அவார்டுமா குடுப்பாங்க. அந்தாள் மேல எதுக்குடி செருப்ப வீசுன? உனக்கே இது டீசன்ட்டா இருக்கா?"

கனலோடு அவனை ஏறிட்டவள் மலமலவென்று கொட்டித் தீர்த்தாள் "கிழவன் என்னலாம் வேலை பண்ணிருக்குன்னு தெரியுமா ஃபர்ஸ்ட்டு? கீழ இட்லிக்கடை அம்மா இருக்காங்கள்ல. அவங்களே கை கால் விளங்காத வீட்டுக்காரர வச்சுட்டுத் தினந்தினம் நோகுறாங்க. அவங்க கஷ்டப்பட்டு வளத்துவிட்ட சோஃபியாவும் சின்ன வயசுலயே வாழாவெட்டி ஆய்ட்டா. அவளோட புருஷன் ஒத்தப் பிள்ளயோட விட்டுட்டு ஓடிட்டானாம். அந்தம்மாக்கு இருக்குற கொடுமை போதாதுன்னு, இந்தக் கெழடு அவங்கள வர்றியானு கேட்டுருக்கு. ஒரு டைமில்ல; ரெண்டு டைமில்ல; இதே வேலையாத்தேன் சுத்துறான், பொறுக்கி. தோசமாவு வாங்குறேன்னு அந்தம்மாவ மார்க்கமாப் பாக்குறதும், டபுள் மீனிங்லப் பேசுறதும்... அவுங்க இதலாம் சொல்லிட்டுக் கதறி அழறாங்க. நமக்குக் காதாலக் கேக்கவே சங்கட்டமா இருக்கு. வேற ஏரியாக்குப் போனா, வீடும் கடையும் தனித்தனியாப் பாக்கணும்; டபுள் வாடகையாச்சேன்னு அந்தம்மா சகிச்சுட்டுப் போறாங்க. அந்தக் கோவத்தயும் சேத்துத் தான் கத்துனேன். கொஞ்சம் கைக்கெட்டுற தூரத்துலருந்தா, கிழவனக் காறித் துப்பிருப்பேன். எஸ்ஸாயிட்டான், ராஸ்கல்"

"அவ்வளோ தரங்கெட்டவனா அவன்? என்கிட்ட நீ முன்னாடியே சொல்லிருக்கலாம்ல"

"எதுக்கு? நீங்க ஹீரோயிசம் காட்டுறதுக்கா? எனக்குத் தப்புன்னு பட்டா, நானே ஹேன்டில் பண்ணிப்பேன்"

"அந்த அக்காக்கு இத்தனை தொல்லையா? எங்களுக்குத் தெரிஞ்சுருந்தா கிழவன ஓடவிட்ருப்போம்"

"ஆமாமா" அவள் சலித்தாள்

"நானும் தப்பத் தட்டிக் கேப்பேன்டி. அவன் பேர்ல நாளைக்கே கம்ப்ளெய்ன்ட் ஃபைல் பண்றேன், பாரு"

"ஏங்க, அந்தம்மா கடை வச்சுப் பொழைக்குறது உங்களுக்குப் பொறுக்கலயா? போலீஸ்லாம் வேணாம். சாமான்ய மனுஷங்களப் பாத்தாலே அவங்களுக்கு ஆகுறதில்ல. ஒரேயடியா நசுக்கிடுவாங்க. நான் இப்போ விட்ட டோஸுக்கே கெழடு வெளியத் தலகாட்டாது. அடுத்த டைம் டார்ச்சர் குடுத்தா, அந்தாளு குடும்பத்தயே நிக்க வச்சு ரிப்போர்ட் வாசிச்சுட வேண்டியது தான். அமைதியா இருக்க இருக்கத் தான் ஏறி மிதிப்பானுங்க"

தன் தவறை உணர்ந்தான் விக்ரம் "கண்மணி, ஸாரிடி. உன்னைப் புரிஞ்சுக்காம அவசரப்பட்டேன்"

"உங்க ஸாரியும் நீங்களும். முடிவெடுத்துட்டேன், நான் ஹாஸ்டல்லயே போய்த் தங்கிக்குறேன். எங்கூட இருந்தா உங்களுக்கு அசிங்கமாத் தெரியுதில்ல"

"அது எதோ ஃப்ளோல வந்துட்டு. நாலு சண்ட வந்தா தான நமக்கிடையில ஒரு புரிதல் வரும். என்னவிட்டுப் போகக் கூடாது; சரியா?"

"..."

"அப்றம்... காலைல நடந்ததுக்கும் ஸாரி"

"என்ன நடஞ்சு?"

"இல்ல. உன்னைக் கிட்டத்துலப் பாத்ததும் கட்டிப்பிடிச்சு, உம்மா குடுக்கணும்னு தோணுச்சா..."

"எனக்குந்தான் தோணுச்சு"

"இப்போ கூட தோணுதே" அவனது கண்களில் கொள்ளை கொள்ளையாய் ஏக்கம் வழிந்தோடியது

"அவசரம் வேணாம். கொஞ்சநாள் போகட்டும்" அவள் நிதானமாகவே கூறினாள்

"வெறும் உம்மா தான?"

"உங்களுக்கு வேணா வெறும் உம்மாவா இருக்கலாம். எனக்கு அப்டியில்ல"

"ம்ச்ச். ஒரு பேச்சுக்குச் சொன்னேன். வெரி வெரி இம்பார்டன்ட் உம்மா தான். ஒன்னு குடேன்"

"இப்டிக் கெஞ்சி வாங்குறீங்களே; வெக்கமா இல்ல?"

"நான் யார்ட்டயும் கேட்டு வாங்குனது இல்லடி. எல்லாம் தானாவே கிடைச்சுட்டு இருந்துச்சு. நானும் ரோஷத்தோட இருக்க டிரை பண்ணுறேன். நீ என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிட்ட? என் நேரம் அப்படியிருக்கு" அவன்பாட்டுக்குப் புலம்ப, பத்மா அவனது ஒரு கன்னம் பற்றியிழுத்து மறுகன்னத்தைத் தன் உதடுகளோடு பொறுத்தினாள்

விக்ரமுக்கு எப்படி இருக்கும்!