பத்மா அலுவலகத்தில் இல்லை எனத் தெரிந்ததும் விக்ரம் வீட்டிற்குச் சென்றான்; அங்கேயும் அவளைக் காணாமல் அலைபேசியில் அழைப்பு விடுத்தான்.
"விக்ரம்"
"எங்கப் போன?" அவனது குரலில் கோபம் வெடிக்கத் தயாராய் இருந்தது
"ஸாரி, ஸாரி. நான் பொள்ளாச்சில இருக்கேன். எனக்குத் தெரியும்; நீங்க வெய்ட் பண்ணச் சொன்னீங்க; வீட்டுக்குத் தனியாப் போக்கூடாதுன்னு ஆர்டர் போட்டீங்க. எல்லாம் ஞாபகத்துல இருக்கு. கோவப்படாம நான் சொல்றதக் கேளுங்க. ஒரு அர்ஜென்ட் விஷயம். இன்ஃபார்ம் பண்ண முடியாமப் போச்சு. அவசரமாக் கிளம்பி வந்துட்டேன்"
"சொல்றத ரீசனபிளா சொல்லு. கோவப்பட்றதா வேணாமான்னு நான் முடிவு பண்ணிக்குறேன்"
பத்மா இங்கு நடந்ததைக் கூறவும் அவன் முதலில் அதிர்ச்சியடைந்தான். பின் இருவரும் அங்கையைப் பற்றிய பேச்சிலிருந்து திசைமாறி தடம்மாறி எங்கெங்கோ சென்றனர். அவர்களின் உரையாடல் மணிக்கணக்காக நீடித்தது.
இடையில் விக்ரம் சொன்னான் "ஹே, ஒன் மினிட். என் கொலீக் ஒருத்தங்க கால் பண்ணிட்டே இருக்காங்க. என்னனு கேட்டுட்டு லைன்ல வரேன்"
"கூட வேலை பாக்குறவகளா? பேரென்னனு தெரிஞ்சுக்கலாமா?"
"தனீஷா கபூர். நார்த் இந்தியன் பொண்ணு. சென்னைல வொர்க் பண்ணப்போ பழக்கம். ஓகே, கட் பண்ணிக்குறேன்"
"அடப்பாவி, உடனே வச்சுட்டான். இந்நேரத்துல ஃபோன் பண்ணி என்ன பேசுவாங்க? கருமம், எல்லாம் நமக்குன்னே வருது" அவள் தனியாகப் புலம்பிக் கொண்டிருந்தாள்
சில மணி நேரங்கள் கழித்து அவனே மறுபடி அழைத்தான் "தூங்கிட்டியா, அம்மு?"
"இல்ல. மிட்நைட் ஆய்டுச்சே. நீங்க இன்னும் தூங்கலயா?"
"இப்போ தான் பேசி முடிச்சனா. அதான், உனக்கு அப்டியே கூப்டேன்"
"நீங்க கால் கட் பண்ணி ரெண்டு மண்ணேரம் ஆச்சு. இவ்ளோ நேரமாவா பேசுனீங்க?"
"அவள கான்டாக்ட் பண்ணியே ரொம்ப நாளாச்சுமா. லைஃப் எப்புடிப் போகுதுன்னு மாத்தி மாத்தி விசாரிச்சுட்டு இருந்ததுல டைம் போனதே தெரில"
"ம்ஹூம். அப்டியே விடிய விடிய கன்டினியூ பண்றது தான?"
"பேசிருக்கலாந்தான். அதுக்குள்ள அவளோட பாய்ஃப்ரென்ட் குறுக்க வந்துட்டான்"
"அப்டீங்களா? எனக்கும் என் பாய்ஃப்ரென்டு கூப்புட்றான். பேசி எம்புட்டு நாளாச்சுத் தெரியுமா? நாங்களும் டீப்பா டிஸ்கஸ் பண்ணனும். பை" வேண்டுமென்றே அவள் அழைப்பைத் துண்டித்தாள்
அடுத்த நொடியே அவனிடமிருந்து அழைப்பு வந்தது
"ஏன் விக்ரம் டிஸ்டர்ப் பண்ணுறீங்க?"
"யாரோ கால் பண்றாங்கன்னு சொன்ன? பின்ன ஏன் பிசின்னு வரல?"
"நான் எப்போ ஃபோன்லப் பேசுறேன்னு சொன்னேன். நேர்லல்ல கூப்டு வச்சுப் பேசிட்டுருக்கேன்"
"வெளயாடாத, ப்ரியா"
"ச்சீ, தொடாதீங்க. கூச்சமா இருக்கு. இதே வேலையாப் போச்சு உனக்கு. சொல் பேச்சே கேக்குறதில்ல. ஆன், அதெல்லாம் நான் தர மாட்டேன்பா. என் ஹஸ்பன்ட் கோச்சுப்பாரு"
பின்னணியில் இருந்து சிரிப்புச் சத்தமாகக் கேட்டது
"ஏய், என்னடி நடக்குது அங்க? வந்தன்னு வையேன்; சாவடிச்சுடுவேன்"
"வாட் இஸ் யுவர் ப்ராப்ளமுங்க? முக்கியமான மேட்டரப் பத்திப் பேசிட்டுருக்கோம்ல. இடையில வந்து கெடுக்குறீங்க"
"மேட்டரா?"
மீண்டும் மங்கிய சிரிப்பொலி எழுந்தது
"நாங்க என்னமோ பேசுறோம். உங்களுக்கென்ன வந்துதாம்?"
"நான் உன் புருஷன்டி. இதெல்லாம் கேக்கக் கூடாதா? எனக்கு அந்த உரிமை இல்லயா? உன் மனசுல என்ன தான் நெனச்சுட்டு இருக்க நீ?" விக்ரம் எகிறத் தொடங்க
வேறு நபர் இடைப்புகுந்தார் "அண்ணா, அண்ணா... டென்ஸ் ஆகாதீங்க. நான் ரேகா. நாளைக்கு லீவ் தானேன்னு வீட்டுக்கு வந்தேன். உங்க வொய்ஃப் என்னைப் பிடிச்சு வச்சுட்டுத் தூங்க விட மாட்றா. அவள நீங்களே சமாளிச்சுக்கங்க. நான் வீட்டுக்குப் போறேன். குட் நைட்"
"ரே, போகாத. இருடி... மாடு, ஓடிட்டா. எல்லாம் உங்களாலத் தான்"
"உன் சேட்டைக்கு அளவே இல்லாமப் போய்ட்டுருக்கு. இதெல்லாம் சரியில்ல, பாத்துக்க"
"செத்த நேரத்துல வேர்த்துடுச்சுப் போல. அம்புட்டுப் பயம்"
"கொஞ்சம் மண்ட சூடாயிடுச்சு. பட்டு, என்னை மிஸ் எதும் பண்றியா?"
"இல்லயே. ரொம்ப ஜாலியா இருக்கேன். என் வீடு; என் ரூமு; என் கட்டிலு. நான் பாட்டு உருளலாம்; பிரளலாம்; டிரெஸ் போட்டுத் தூங்கலாம்; போடாமயும் தூங்கலாம்"
"..."
"ஹலோ. டவர் கெடைக்கலயா? நான் பேசுறது கேக்குதா?"
"நல்லாவே கேக்குது"
"திடீர்ன்னு சைலன்ட் ஆயிட்டீங்க?"
"இப்போ ஒன்னு சொன்னியா. அப்டியே இமேஜினேஷனுக்குப் போய்ட்டேன். ப்ரியா, வீடியோ கால் பண்றியா?"
"பொங்கி வழியுது, பாருங்க; ஜொல்லு"
"நாங்க தொடச்சுக்குறோம். நீங்க கால அட்டென்ட் பண்ணுங்க"
காணொளி அழைப்பை ஏற்றவள் தலை வரை போர்த்தி உட்கார்ந்திருந்தாள்
"அம்மே... என்னதிது?"
"என்னது?"
"எதுக்குடி பேயோட்டப் போறவனாட்டம் முக்காடு போட்டுருக்க?
"அதுவா? இங்க ரொம்ப குளுரா இருக்கு"
"சந்தோஷம். தின்னியா?"
"ஓஓஓ"
"சரி, படுத்துத் தூங்கு"
"என்னங்க" அவள் புன்னகையோடு போர்வையை விலக்க, வெண்ணிறத்தில் பூப்போட்ட சல்வார் கமீஸ் அணிந்து பளீச்சென்று தெரிந்தாள்
"வொயிட் அன்ட் வொயிட்ல ப்ரெட்டியா இருக்க"
"நீங்களுந்தான் அழகா இருக்கீங்க"
"நேர்ல ஒருநாள் கூட சொன்னதில்ல. தூரத்துல இருந்துட்டுச் சொல்றியா?"
"நெறய தடவ சொல்லணும்னு தோணும். நீங்க என்னைத் தப்பா எடுத்துக்கக் கூடாதில்ல. அத்தான் மனசுலயே வச்சுக்கிட்டேன்"
"நீ எது சொன்னாலும் தப்பாவே எடுத்துக்க மாட்டேன். ஓகேவா?"
"விக்ரம், உங்கள்ட்ட ஒரு விஷயத்த மறச்சுட்டேன். அன்னைக்கு, நம்ம வீட்டுக்குத் திருடன் வந்துட்டுப் போனான்ல. அது ஒருவேள... மோகனா இருக்குமோன்னு சந்தேகப்பட்றேன்"
"வாட் ஆர் யூ சேயிங்? இதெல்லாம் முன்னாடியே சொல்றதில்லயா? அவனுக்கு அல்ரெடி உன்னைப் பிடிக்காது. இந்த டேஞ்சரஸான சிட்சுவேஷன்ல அங்கப் போய் உக்காந்துருக்க. பத்மா, இது ஒன்னும் ஃபன் ஆக்டிவிட்டி கெடயாது. காலைலயே நான் பொள்ளாச்சி வாரேன். பி சேஃப். நீ எனக்கு ரொம்ப முக்கியம். உனக்கு ஆபத்து வர மாதிரி எதயும் செய்யாத"
"ம்ம்ம். ஐ வில் பி கேர்ஃபுல். அன்ட் ஐ அம் வெயிட்டிங் ஃபார் யூ. அன்ட்... ஐ மிஸ் யூ" அவள் கூறிய கடைசி வரியில் விக்ரமின் உள்ளம் சில்லென்றானது
இதழ் முறுவலுடன் "குட் நைட்" என்றவன் அலைவரிசையின் ஊடே முத்தமொன்றைப் பறக்கவிட்டான்
அதில் வெட்கித்து அவள் முகம் சிவக்க, அதன் பிறகும் அரை மணிநேரத்திற்கு அவர்களுடைய பேச்சு தொடர்ந்தது. அடுத்த நாள் விக்ரம் பொள்ளாச்சிக்குப் புறப்படத் தயாராக, இரு காவலர்கள் வந்து கதவைத் தட்டினர்.
முதலில் ராம் வாசலில் சென்று பார்க்க "இந்த வீட்டுல விபச்சாரம் நடக்குறதா கம்ப்ளெய்ன்ட் வந்துருக்கு. விசாரிச்சுட்டுப் போலாம்னு வந்தோம்" என்றார் அக்காவலர்
"இங்கயா? நீங்க தப்பான அட்ரஸுக்கு வந்துட்டீங்கன்னு நெனைக்குறேன்"
"அட்ரெஸ்லாம் கரெக்ட்டாத் தான் இருக்கு. உள்ள வேற யார் யார் இருக்கா? வரச் சொல்லுங்க"
சட்டையின் பொத்தானை மாட்டியவாறு விக்ரம் வந்து நின்றான் "யார் சார் கம்ப்ளெய்ன்ட் குடுத்தது? இப்போதைக்கு நாங்க ரெண்டு பசங்க தான் இருக்கோம். எங்களுக்குன்னு ப்ராப்பரான வேலை இருக்கு. ஜாப் ஐடி கூட எடுத்துக் காட்றோம். ப்ராஸ்ட்டிடியூஷன் பண்ணிப் பொழைக்கணும்னு எங்களுக்கு எந்த அவசியமும் இல்ல"
"அட, நீங்க இல்லப்பா. ஒரு பொண்ணு இங்கத் தங்கி விபச்..."
"சார், நிறுத்துங்க. எவனோ எதோ சொன்னான்னு கிளம்பி வந்துர்றதா? இந்த வீட்டுல இருக்குறது ஒரே ஒருத்தி தான். அவளும் என்னோட வொய்ஃப். வெட்டிங் ஃபோட்டோஸ், கல்யாணப் பத்திரிக்கை எல்லாம் இருக்கு; பாத்துட்டு இடத்தக் காலி பண்ணுங்க. இங்க வந்து விபச்சாரம் அது இதுன்னீங்கன்னா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்"
"சார், வீணா எங்கள்ட்டத் துள்ளாதீங்க. எங்களுக்கு வர கம்ப்ளெய்ன்ட்ட நாங்க மொறயா விசாரிச்சாகணும். இல்லனா, இன்ஸ்பெக்டர் காட்டுக்கத்தாக் கத்துவாரு. நீங்க உங்க வொய்ஃப்புனு சொல்றீங்க; நம்புறோம். இதே ஏரியால இருந்துட்டு யாரோ உங்களுக்கெதிரா வேல பாக்குறாங்க. ஜாக்கிரதையா இருந்துக்கங்க"
இவர்களுக்கு இடையே நடந்த பஞ்சாயத்தைக் கேட்டுக் கொண்டே மேலே வந்து சேர்ந்தார் சோஃபியாவின் தாய் ரோஸ் மேரி "அய்யா, ஒரு நிமிசமுங்க. யார் இந்தக் கேவலமான காரியத்தப் பண்ணதுன்னு எனக்குத் தெரியுங்கய்யா. எனக்காகப் பரிஞ்சு பேசித்தான் பத்மா பாப்பாவுக்குக் கெட்ட பேரு வந்துடுச்சு. பணத்திமிரக் காட்டி அந்தாளு இப்டி ஒரு பொய் கேச போட்டுருக்காரு. அந்த யோக்கியனப் பத்தி நான் ஒரு புகார் குடுக்கணும். இத்தன நாள் ஊமையா இருந்தது என்னோட முட்டாள்தனந்தான். தயவு பண்ணி அவனைப் புடிச்சு உள்ளப் போடுங்க. அப்ப தேன் இந்த ஏரியா பொண்ணுங்களுக்குப் பாதுகாப்பே"
இந்த உரையாடல்களை வீட்டிற்குள் ஒளிந்தபடி கிழடு உற்றுக் கேட்டது. மேரி வெளிப்படையாக உண்மையைப் பேசவும் அவருக்குப் பீதியாகிப் பேதி வந்துவிடும் அச்சநிலைக்குத் தள்ளப்பட்டார். விக்ரமும் ராமும் மேரியோடு காவல்நிலையம் செல்ல வேண்டியதாய் இருந்தது. பக்கத்துவீட்டுக் கிழவன் முன்னர் கொடுத்திருந்த புகாரைச் சரிகட்டி, அவர் மீது புதிய புகார் பதியப்பட்டது. விக்ரம் இந்த வேலையாக மாட்டிக் கொள்ள, அந்நேரத்தில் பத்மாவின் உயிருக்கே உலை வைக்கப் பார்த்தான் மோகன்.
தன்னவனின் நெருக்கத்தில் இரு நாட்கள் இருந்துவிட்டபடியால், பத்மாவிற்கு முந்தைய இரவைத் தனிமையில் கடப்பதே கடினமாகிப் போனது. விடியல் நெருங்கும் வேளையில் உறங்க ஆரம்பித்தவள் மிகத் தாமதமாகவே எழுந்தாள். பின்னர் அவள் அங்கையின் அறைக்குச் சென்று பார்க்க உள்ளே ஆளில்லை; வீட்டின் முன்புறம் சுந்தரம், மங்கையுடன் மோகனின் குரலும் கலந்தொலிக்க உள்ளெழுந்த கலவரத்துடனே நடந்தாள். அங்கு அவள் செல்லவும், மூவரும் பேச்சை நிறுத்தி, ஒன்றாக அவளை ஏறிட்டனர். மோகனைக் கண்டுகொள்ளாமலே தாய் தந்தையிடத்தில் அவள் பேசலானாள்.
"அம்மா, அங்கை எங்க?"
"ஹேமா குட்டிக்கு உடம்பு முடில. ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போயிருக்கா"
"அச்சச்சோ... அம்முக்கு என்னாச்சு? நீங்க யாரும் ஹாஸ்பிட்டலுக்குக் கூட போலயா?"
"சின்ன காய்ச்சல் தான். ஊசி போட்டா சரியாய்டும். இங்க வா, கண்ணு. இதுல ஒரு கையெழுத்து போடு" மங்கை சர்வ சாதாரணமாகச் சொன்னார்
"ஏன்? இது ஏதோ பத்திரம் மாதிரி தெரியுதே"
இம்முறை சுந்தரம் பதிலளித்தார் "சொத்துப்பத்திரம், அம்முணி. நம்ம சொத்துலக் காவாசியப் பிரிச்சு அக்காக்குக் குடுக்கப் போறோம். அம்புட்டுத்தேன்"
"எதுக்கு இந்த அவசர வேலை?"
"மாப்ள ஆசப்பட்டுக் கேக்குறாரு. அவரு பிசினசு பண்ணக் காசு போதலயாம். அந்தக் கடுப்புலப் புத்தி மங்கி அச்சுட்டக் கோவத்தக் காட்டிருக்காரு. அவ ஊர்ல இல்லாதப்ப தேன் பொண்டாட்டியோட அரும புரிஞ்சுருக்கு. இனிமே இப்டி மூள கெட்டு நடந்துக்க மாட்டேன்னு, ஹேமா மேலயே சத்தியம் செஞ்சுபுட்டாருங்குறேன். இந்த நெலங்கூட பிசினசுக்கு லோனு வாங்க கேரன்டியாமாம். நீ கையெழுத்து போட்டா போதும். எல்லா பிரச்சனையும் சுமூகமாய்டும்" மங்கையின் முகம் ஆனந்தத்தில் பிரகாசித்தது
பத்மாவும் சரியென்று பேனாவைக் கையில் வாங்கிக் கையெழுத்திட ஆரம்பித்தாள்
இனிமே தான பஞ்சாயத்தே இருக்கு!