அக்ஷதா ஹேமாவிற்குத் தின்பண்டங்கள் வாங்க கடைக்கு அழைத்துச் சென்றிருந்தாள். அறையில் பத்மா மட்டும் தனித்திருக்க விக்ரம் உள்ளே வந்தான்.
"ஓய், டார்லிங். இப்போ எப்டி ஃபீலாகுது?"
"நீங்க பேசுறது எதுவுமே கேக்கல"
"உனக்கு... எப்டி இருக்கு?" அவன் சைகையால் கேட்டான்
"லைட்டா தல சுத்துது"
"காலைலச் சாப்புட்டியா? எதாவது கொண்டு வரவா? சாப்பாடு, சாப்பாடு..."
"ஷ்ஷ்ஷ்... ஒரு நிமிஷம்" என்றவள் நெற்றியை இறுகப் பற்றி, கண்களை மூடி அப்படியே அமர்ந்துவிட்டாள்
"ஏ, சாப்டியா? சாப்பாடு, மா..." அவன் அவளைப் பிடித்து உலுக்கி வினவினான்
உடனே, அடக்கி வைத்திருந்த வாந்தி பொலக்கென்று வெளியே வந்தது. அவன் மேல் பாதியும் தரையில் மீதியுமாக எடுத்து வைத்தாள் பத்மா.
"இதுக்குத் தான் அப்பவே சொன்னேன். ஒரு நிமிஷம் அமைதியா இருங்கன்னு. இப்போ என்னாச்சுப் பாத்தீகளா?" கண்கலங்கியவாறு பேசியவள் மேலும் குமட்டினாள்
அவளைக் கட்டிலிலேயே அமர வைத்துத் தலையை அழுத்திப் பிடித்தவன், அவள் மொத்தத்தையும் கக்கும் வரை காத்திருந்தான்
அதனால் சற்றே தெளிந்தவள் "நான் க்ளீன் பண்றேன்" என்றபடி எழுந்தாள்
மீண்டும் வற்புறுத்தலாக அவளை இருக்கச் செய்தவன், வாந்தி படிந்த தன் சட்டையைக் கழற்றி அவளது வாயைத் துடைத்துவிட்டான்
அவள் தயக்கத்துடன் "ஸாரி, இப்டி ஆனதுக்கு. மன்னிச்சுடுங்க" என்றிட, அவன் பாங்காக அவளின் கன்னத்தில் முத்தம் வைத்தான்
அவளின் செயலைத் தான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை உணர்த்தவே அவ்வாறு செய்தான். அம்முத்தத்தின் பலனாக அவள் அமைதியாக உட்கார்ந்திருக்க, அவன் வாளித் தண்ணீரை எடுத்து வந்து தரையைச் சுத்தம் செய்தான்; அவள் வாய் கொப்பளித்துவிட்டு வர, அவளை உணவுமேசைக்கு அழைத்துச் சென்று சோறூட்டினான். அவளும் ஏதோ கையடிபட்டவளைப் போல பவ்யமாக உணவை வாங்கிக் கொண்டாள். செவிக்கு வேலையில்லாமல் போகவே, அவளுடைய கண்கள் அதிதீவிரமாகப் பணிபுரிந்தன. ஒவ்வொரு வாய் சோற்றை விழுங்குமுன்பும் அவனைப் பார்வையால் ஒரு தரம் விழுங்கினாள். விக்ரம் அதைக் கவனத்தில் கொள்ளாமல் மோகனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்; அவனால் இன்னும் என்னென்ன பாதகங்கள் நேரிடப் போகிறதோ என எண்ணிக் கசப்படைந்தான்.
அப்போது ராம் உள்ளே வர "என்னடா, கார் ரைட் எப்டிப் போச்சு?" என்றான் விக்ரம்
"பாப்பாக்குக் காது கேக்காது தான... ரைடு மயிராட்டம் போச்சு. இன்னொரு தடவ அவளோட என்னைக் கோத்து விட்ட; மொவனே, காலி பண்ணிடுவேன்"
"ராம், நீயாடா இது? சீரியஸா கோவப்பட்றியா, மச்சான்? உனக்கு இப்படி ஒரு ஃபேஸ் இருக்குறதே எனக்கு இத்தன நாள் தெரியாமப் போச்சு. இங்க வந்து உக்காரு; தண்ணியக் குடி"
"என்னங்க ஆச்சு? ஏன் அண்ணன் அப்செட்டா இருக்காக?" அவனது முகவாட்டத்தைக் கண்டு பத்மா இவ்விதம் வினவ
"நான் கேட்டுட்டு அப்றம்... அப்பறமாச் சொல்றேன். நீ உள்ளப் போய்த் தூங்கு. ரெஸ்ட்டு... ரெஸ்ட் எடு. போ" விக்ரம் கையசைத்துக் கூற, அசதியில் இருந்த அவளும் அறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள்
மெல்ல நிதானத்திற்கு வந்த ராம் நண்பனிடம் மனம் திறந்து பேசினான் "நானும் ரேகா விஷயத்துலத் தலையிடக் கூடாதுன்னு தான்டா நெனைக்குறேன். என்னால எனக்கென்னனு இருக்க முடியல. அவத் தனியாக் கஷ்டப்பட்றதச் சகிச்சுக்க முடியல. அவளக் கூடவே வச்சு ஹேப்பியா பாத்துக்கணும்னு தோணுது. ஸோ, இன்னைக்கு நேரடியாவே சொல்லிட்டேன்; எனக்கு உன் மேல இஷ்டம்; உன்னைக் கல்யாணம் பண்ண ஆசப்பட்றேன்னு"
"அதுக்கு அவ என்ன சொன்னா?"
"ஒத்துட்டுருந்தா நான் ஏன் டென்ஷனாகப் போறேன்? அவளுக்கு என்ன பிரச்சனைனே புரிய மாட்டேங்குது"
"சரி, டா. நீ மனசுல இருந்ததச் சொன்னதுலாம் கரெக்ட்டு. இப்போ தான ஃபர்ஸ்ட் டைம் உன்னோட அன்ப வெளிப்படுத்திருக்க. மொத அட்டெம்ப்ட்லயே அந்தப் பொண்ணு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் தரணும்னு எதிர்பாத்தா எப்புடி? அவ திங்க் பண்ண கொஞ்மாச்சும் டைம் குடு. பொறுமையா இரு, மச்சி"
"அவ என்னைப் பிடிக்கலன்னு சொன்னா கூட பரவால்ல; நமக்கு அவ்ளோ தான் வொர்த்துனு தெரிஞ்சுட்டு ஒதுங்கிருப்பேன். அதவிட்டு, எனக்கு இன்னொரு கல்யாணமே வேணாம்; யாரயும் எனக்குப் பிடிக்கல; இப்புடியே லைஃப் புல்லா சோகமாத்தான் திரிவேன்னு சந்நியாசியாட்டம் பேசுனா கேக்கவே கடுப்பாகுது"
"எதோ விரக்திலப் பேசிருப்பா, மச்சான். நீ ரொம்ப எமோஷனல் ஆகாம, அவ நெலமய யோசிச்சு ரியாக்ட் பண்ணு. அந்தப் புள்ளைட்டயும் இதே போல எரிச்சல்ல பொங்குனியா; விளங்கும். எதா இருந்தாலும் அன்பாப் பேசிப் புரிய வையுடா"
"எங்களுக்குத் தெரியும்; யார்ட்ட எப்புடிப் பேசணும்னு. நீ போய் உன் பொண்டாட்டிக்குச் சேவகம் செய்யு... எல்லாம் உன்னால வந்தது. உனக்கு ஊர்ல வேறப் பொண்ணே கிடைக்கலயா? கட்டிருக்கறதப் பாரு; நம்மள மாட்டிவிடறதுக்குனே. இதுக்கு நான் ரேகாவப் பாக்காமயே இருந்துருக்கலாம். எங்கயோ அவ சந்தோஷமா வாழ்றாங்குற நிம்மதியாவது கெடச்சுருக்கும்"
"டேய், டேய், அடங்கு... இந்நேரம் கல்யாணம் பண்ணி நாலு கொழந்த பெத்துருப்ப; நாங்க தான் குறுக்கப் புகுந்து தடுத்துட்டோம்; இல்ல... இத்தன வருஷமா ஏஞ்சல், ஏஞ்சல்னு புலம்பித் தள்ளிட்டு; கண்ணு முன்னாடி கொண்டாந்து நிறுத்துனா எகத்தாளமா பேசுற. ஒரு பொண்ணுட்ட எந்த விதத்துல லவ்வ எக்ஸ்பிரஸ் பண்ணணும்னு கூட தெரியல; வந்துட்டான் இப்ப தான். மத்தவங்களக் கொற சொல்றத விட்டுட்டு, கிடைச்ச ஆப்பர்சுனிட்டிய யூட்டிலைஸ் பண்ற வழியத் தேடு; கோட்ட விட்ராத. மொகரையப் பாரு மொகரைய; இஞ்சி தின்ன குரங்காட்டம். கொஞ்சமாச்சும் சிரிடா. இந்த மூஞ்சியப் பாத்தா எங்கருந்து காதல் வரும்?"
"நீ பொட்டியச் சாத்து. ஒரு கல்யாணம் பண்ணிட்டு ஓவரா அட்வைஸப் போட்றது. உன் ஆலோசன டேஷ எடுத்துட்டு ரூம் பக்கம் எதும் வந்துராத"
இங்ஙனம் எதிரெதிராய்ப் பேசிக் கொண்டவர்கள் தாம் அடுத்த இரு இரவுகளுக்கு ஒருவரையொருவர் ஆரத் தழுவியவாறு உறங்கினர். மூன்றாம் இரவு, ராம் உடல் சோர்வு காரணமாக முன்னிரவிலேயே கால்களை விரித்துப் படுத்துவிட்டான். கட்டிலில் இடம் போதாமல் விக்ரம் வரவேற்பறைக்கு வந்து பாயில் படுத்தான்; தனிஷா வாட்சாப்பில் செய்தி அனுப்பியிருக்க, சிறிது நேரம் அவளுக்குப் பதில் அனுப்பலானான். அப்படியே அவன் கண்ணயர்ந்தபோது, ஒரு உருவம் போர்வையோடு ஓடி வந்து அருகே விழுந்தது.
"ஹே..." அவன் யாரென்று அறிந்து வியந்தான்
"தூக்கம் வரல. அத்தான் இங்க வந்து படுத்தேன்"
"உள்ளப் போய்ப் படுடி. பத்மா..."
அவன் சொன்னது காதில் விழாமல் அவனின் நெஞ்சில் தலை சாய்த்துத் தூங்கிப் போனாள் அவள். கடந்த சில தினங்களாக அவனது அருகாமையின்றி தவித்தவளுக்கு இன்று தான் ஆசுவாசம் கிட்டியது.
அடுத்த நாள் விடியலில் அக்ஷதா படபடப்பாய் வந்து நின்றாள் "விக்ரம், விக்ரம்... பத்மாவப் பாத்தீங்களா?"
கணவனுடன் ஒன்றிப் போர்வைக்குள் குறுகிப் படுத்திருந்த தங்கை அவளின் கண்களில் சிக்கவில்லை போலும்
"ம்ம்ம்ம்" நித்திரையில் இருந்து விழித்தவன் ஆமோதிப்பாய்த் தலையாட்டி வைத்தான்
"பாத்தீங்களா? நைட்டு ரெண்டு பேரும் ஒன்னாத்தேன் படுத்தோம். எழுஞ்சு பாக்குறேன்; அவள ரூம்ல காணல. இந்த நேரத்துல எங்கப் போனாளோன்னு..."
"பதட்டப்படாதீங்க. இங்கத் தான்... என்னோட தான் இருக்கா. தூக்கம் வரலன்னு..." தன்னிலையை விளக்க முடியாமல் ஒவ்வொரு வார்த்தையிலும் அவன் தயங்கினான்
"கடவுளே, ஒரு நிமிஷம் என் உசுரே போச்சு. மறுபடி மோகனால அவளுக்கு எதோ ஆயிடுமோன்னு. அந்தப் பதட்டத்துல உங்க தூக்கத்தக் கெடுத்துட்டேன். ஸாரி" இரண்டடி பின்னால் வைத்து அங்கை இயல்பாகக் கூறிட
"நோ ப்ராப்ளம். நீங்க நிம்மதியாத் தூங்குங்க" என்று சொல்லிட்டான் அவன்
தமக்கை போன பின்னர் போர்வையை விலக்கிய பத்மா "யாராவது இப்போ பேசுனாங்களா?" என அரைத் தூக்கத்தில் கேட்டாள்
"மொத்த மானத்தயும் காத்துலப் பறக்க விட்டுட்டு, கேள்வியப் பாரு. நீ படுத்துக்க, பட்டு" என்றவாறு அவன் தட்டிக் கொடுக்க, அவள் உறக்கத்தில் ஆழ்ந்தாள்
மாலை நேரம் வேலை முடிந்து திரும்பும் அவனுடைய வரவிற்காக அங்கை நகத்தைக் கடித்தவாறே காத்திருந்தாள். அவன் உடை மாற்றிவிட்டு வந்து தொலைக்காட்சியின் முன் அமர, இவள் தனது கோரிக்கையை எடுத்து வைத்தாள்.
"விக்ரம், நாங்க இப்டியே இங்கயே இருக்க முடியாது. எனக்குன்னு தங்க இடம் பாக்கணும்; வேலை தேடணும். அதுக்கு, நீங்க தான் கூடருந்து ஹெல்ப் பண்ணணும்"
"ஜாப் தான, தேடிக்கலாம். அதுவர இந்த வீட்லயே ஸ்டே பண்ணிக்கங்க. மார்னிங் நடந்த எதயும் மனசுல வச்சுக்க வேணாம்"
"இல்ல, விக்ரம். எங்க வீட்டாளுங்க எப்ப வேணாலும் தேடிட்டு வந்துருவாங்க; நூறு சதவீதம் மோகனோட என்னைச் சேத்து வைக்க முயற்சி பண்ணுவாங்க. அதுக்குள்ள நான் ஒரு பிளேஸ்ல செட்டிலாகணும். மத்தவங்களுக்கும் சரி; எனக்கும் சரி; ஹேமாவ என்னாலத் தனியாவே பாத்துக்க முடியுங்குற நம்பிக்கய உருவாக்கணும்"
"இது தான் உங்க விருப்பம்னா, ரென்டட் ஹௌஸே பாத்துரலாம்"
"ஒரு நிமிஷம். உங்க காசுல எதயும் செய்ய வேணாம். இந்த நகைய வச்சுக் கொடுங்க, ப்ளீஸ்" அவள் கழற்றி வைத்திருந்த தங்க அணிகலன்களை அவனிடம் நீட்டினாள்
"இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன். இப்போ தானப் புதுசா ஆரம்பிக்குறீங்க. ஏ டு ஸீ ஓவ்னாவே செஞ்சுக்கணும்னு ஸ்ட்ரெஸ் எடுத்துக்கக் கூடாது, அக்ஷதா. தன்னந்தனியா நீங்க சர்வைவ் ஆக ஃப்யூ மந்த்ஸாவது தேவப்படும். ஸோ, எங்க உதவிய அவாய்ட் பண்ணாதீங்க. இனிஷியல் ஸ்டேஜ்ல கூட நானும் பத்மாவும் பங்கெடுக்கலன்னா எப்புடி? எனக்குன்னு ஒரு மனசாட்சி இருக்கு"
"இதுலத் தப்பா எடுத்துக்க எதுவுமேயில்ல. இத்தன காலமா வேற ஒருத்தங்களச் சார்ந்து பொம்மயாட்டம் இருந்துட்டேன். இதுக்கு மேலயும் எனக்கு அப்டி வாழப் பிடிக்கல. என் சொந்த முயற்சில எல்லாமே நடக்கணும்னு ஆசப்பட்றேன். இந்த நகை கூட நான் சம்பாதிச்சது இல்ல; அப்பா வாங்கிப் போட்டது; மோகன்ட்டருந்து எனக்கு மிச்சமானது இத்தான். இதக் கழுத்து, காதுல மாட்டி ஒன்னும் வரப் போறதில்ல. மறுக்காதீங்க; இத அடகு வச்சோ, இல்ல வித்தோ பணமாத் தந்தீங்கன்னா ஹேமாக்கும் எனக்கும் யூஸாகும்"
"இவ்ளோ அவசரம் வேணாங்க. பத்மாக்குக் காது சரியாகட்டும். கலந்து பேசி முடிவெடுத்துக்கலாம்" அந்நகைகளை முற்றிலுமாக வாங்க மறுத்திட்டான் விக்ரம்
இங்கு அறைக்குள் இருட்டும் முன்பே தூங்கி வழிந்து கொண்டிருந்தாள் பத்மா. கிறுக்கன் மோகன் கனவினில் வந்து அவளை அச்சமூட்ட, அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது. கனவிலேயே அடித்து உதைத்துக் குங்ஃபூ செய்து அவனைப் பிளந்து கொண்டிருந்தாள். அப்போது அந்தப் பாறையினின்று பிறந்த மலர்க் குவியல் அவள் மீது துள்ளிக் குதித்தது.
"சித்தி..." காதருகே வந்து அச்சிறுமலர் கூவ
"ஆஹ்ஹ்" வலியோடு துடித்து எழுந்தாள் பத்மப்பிரியா
ஏன், ஏன் கத்துற!