பத்மா முகம் சுளித்துக் கத்தியதில் ஹேமாலினி ஒரு நொடி பயந்தே போனாள்
"என்னாச்சு, சிச்சி? வலிக்கா? கோவத்துல அடிச்சுஜாதீங்க. தெரியாமப் பண்ணித்தேன். பாப்பா பாவம்ல" அவள் அச்சிறு நிகழ்விற்கே நடுங்கி ஒடுங்க
அவளைப் பிடித்து மடியில் அமர்த்தினாள் ப்ரியா "ம்ம். கோவம் ஒன்னுமில்ல... எதுக்குடி மேல ஏறிக் குதிச்ச?"
"எனக்குத் தனியா என்ன பண்ணதுனே தெரில, சிச்சி. போரஜிக்குது"
"உன் அம்மா எங்குட்டுப் போனா?"
"அம்மாவும் சிச்சப்பாவும் பைக்குலப் போய்த்தாங்களே"
"உன்னை விட்டுட்டுப் போய்ட்டாங்களா? மணி என்ன? அச்சோ, ஆறு மணியாச்சா? பால் எதும் குடிச்சியா? ஸ்நாக்ஸ் சாப்புட்றியா, அம்மு?"
"கிச்சன்ல பூஸ்ட்டே இல்ல, சிச்சி"
"தேடிப் பாத்துட்டியாக்கும். கடையிலப் போய் வாங்கிட்டு வருவோம், வா"
பாலை வாங்கி வந்து அடுப்பில் வைத்தவள், அது பொங்கி பொங்கி வரவும் நெஞ்சு வலிக்க ஊதிக் கொண்டிருந்தாள்
"சிச்சி, உனக்குச் சமைக்கலாம் தெரியுமா?"
"ஓ..." உத்திரவாதமாகச் சொன்னவள் பூஸ்ட்டைக் கலக்கிப் பால் குவளையை நீட்டினாள்
அதை நக்கிப் பார்த்துவிட்டு ஹேமா தூத்தூவென்றாள் "ச்சீ... இனிப்பே இல்ல"
"அடியே, இதுக்கா இந்தத் துப்பு துப்புற? ஜீனி சேத்தா சரியாய்டும்" என்றவள் சர்க்கரையிட்டு ஆற்றிக் கொடுத்தாள்
"ஏ, சிச்சி. உனக்கு கா கேக்க ஆரம்பிச்சுருச்சா?"
"ஆமால்ல. நீ காதுட்ட வந்து கத்துனதும் எல்லாம் க்ளியர் ஆய்டுச்சு போல. நல்லாவே கேக்குது. லைட்டா வலி இன்னும் இருக்கு"
"ஐ சூப்பர். நான் உங்களச் சரிப் பண்ணித்தனே. இனிமே நாம ஜாலியா வெளையாதலாமே. ஓடிப் புச்சு வெளயாட்டா? கண்ணாமூச்சியா, சிச்சி? நீங்க தான் கண்ணைப் பொத்தணும்"
"ரெண்டுமே விளையாடலாம். அதுக்கு முன்ன ஹேமா குட்டி ஒரு வேலை பண்ணணுமே"
"என்ன சிச்சி? டம்ளார கழுவுணுமா?"
"அதெல்லாம் இல்ல, அம்மு. சென்னைல அம்மா இல்லாத இந்த ஃபைவ் டேஸ் என்ன பண்ணீங்க? சித்திட்ட ஒன்னுவிடாமச் சொல்லிடுங்க, கேப்போம்" பக்குவமாக விசாரித்தபடி அலைபேசியை எடுத்தாள் அவள்; ஹேமா பேசுவதைக் காணொளியாகப் பதிவு செய்திட விழைந்தாள்.
"ஃபோனப் பாத்துப் பேசணுமா, சிச்சி?"
"ஆமா"
"அன்னைக்கு அம்மா ஊருக்குப் போதேன்னு கிளம்புனாங்களா... நானு தெஸ்ஸுலாம் போத்து ரெதியானேன். அப்போ, எனக்குப் புதிக்காத ஹெட்பேன்ட அம்மா மாட்டிவித்தாங்க. அதனால நான் ஃபைட் போட்டு, அடம்பண்ணித்து இருந்தனா... ம்ம்... அதுக்குள்ள அப்பா வந்துத்தாரு. டூ பேரும் வசமா மாத்திக்கித்தோம். ஊருக்குப் போவே கூடாதுன்னு அப்பா மெதத்துனாரு. அப்பவும் அம்மா என்னைக் கூத்தித்துப் போக ட்ரை பண்ணுனாங்க. ஆனா, அப்பா அவங்கள வெளியத் தள்ளிக் கதவச் சாத்தித்தாங்க. அப்றம் நான் அளுதுட்டே இருந்தேனா அம்மா வேணும், வேணும்னு. அப்புதியே தூங்கிப் போய்த்தேன். மொத நாள் முளிச்சுப் பாத்தப்போ வீத்துல யாருமே இல்ல. எனக்கு மறுபடி அளுகாச்சியா வந்துச்சு. கதவத் தத்திட்டே கிடந்தேன். அப்பா வந்து என்னை ஒரு ஆன்ட்டியோட ஹௌஸுக்குக் கூத்துப் போனாரு. அந்த ஆன்ட்டி ரொம்போ ஸ்ட்ரிட், சிச்சி. டீச்சர் கணக்கா ஸ்டிக்கு வச்சு அதட்டுனாங்க என்னை. தெரியுமா, அவங்க உன் வேலைய நீயே தான் பாத்துக்கணும்; என்னால உனக்கு ஹெல்ப் பண்ண முதியாதுன்னு சொல்லித்தாங்க"
"ஆன்ட்டியோட நேம் என்ன, மாலுமா?"
"எனக்குத் தெதியாது. ஆனா, ஆனா... அவங்க உங்கள மாரியே பாக்குறதுக்கு இருந்தாங்க"
"என்னைய மாதிரியா?"
"உம்ம்ம்... நீங்க ஹைட்டா இருக்கீங்க. அவங்க உங்கள வித குட்டியாத் தெரிஞ்சாங்க. வெள்ள வெளேர்னு சுண்ணாம்பு கலர்ல இருந்தாங்க"
"ஆன்ட்டி வேற என்னலாம் பேசுனாங்க?"
"என்னை எதாச்சும் வேல சொல்லித்தே இருந்தாங்க, சிச்சி. எனக்கு டயர்டா ஆகித் தலலாம் சுத்திதுச்சு. அங்க இருந்தவரக்கும் நானே சாப்புத்து, நானே தலசீவி, நானே பிரஸ் பண்ணி, நானே குளிச்சி... துணி கூத துவைச்சேன். அப்பப்பா, எவ்ளோ வேலை? ஸ்ஸ்ஸ், இப்ப நெனச்சாலும் தூக்க தூக்கமா வருது. அந்த வீத்துல ஒரு பையன் மட்டும் என்னை மொறைச்சுத்தே இருந்தான். ஹாய்ய்ய்! உன் பேரென்னனு கேத்ததுக்கே என்னை பேட் வார்ட்ஸ்லப் பேசிக் கீழத் தள்ளிட்டான், சிச்சி. உடனே அம்மா ஞாபகம் வந்து அளுதனா, அப்பா ஓங்கிச் சப்புனு அறைஞ்சுத்தாரு. நான் அப்புதியே சுத்தி சுத்திக் கீள விளுந்து மயங்கித்தேன்"
"அடிச்சாரா? எங்க, அம்மு?"
"இந்தக் கன்னத்துலத் தான், சிச்சி"
அடி வாங்கிய பகுதியை மெல்ல வருடினாள் ப்ரியா "அச்சோ, என் தங்கம்... அப்பறம் என்ன நடஞ்சு?"
"பயந்துத்து அப்பாத்தப் பேசுதயே நிறுத்திட்டேன். நான் அங்கத் தங்கிருந்தது ஆன்டிக்குப் புதிக்கல. அப்பாட்டச் சண்ட போத்தாங்க. அவரு இப்புதிதி இறுக்கிக் கட்டிப்புதிச்சு ஆன்டிகிட்ட ஸாரி கேட்டாரு. பொறவு தான் என்னை கோயம்புத்தூருக்கே அளைச்சுத்து வந்தாரு. இங்க ஒரு ஹோட்டல்ல தங்க வச்சுப் பாத்துக்கித்தாரு. சாப்பாது, ஐஸ்கிரீம்லாம் வாங்கிக் குடுத்து டோர லாக் பண்ணிதுவாரு. எங்கயோ போயித்து நைட்டுக்கா வருவாரே. நானு எங்கப் போனீங்க, டாடி; தனியா இருக்க பயம் பயமா வருதுன்னு கேத்தேனா. அவுரு... உன் சித்தியப் பாத்துத்து வாரேன்னு சொல்லுவாரு. உங்கள இப்பவே பாக்கணும்னு சொல்லி அளுதும், அவரு கூட்டியே போல. நான் சாப்புதாம ஸ்ஸ்ட்ரைக் பண்ணேன். அத்தான் ஜொரம் வந்து காச்சல் ஃபீவரும் வந்துதுச்சு. லாஸ்ட்டா பாட்டி வீட்டுக்குத் தூக்கித்துப் போனாரா. நான் ஆசப்பட்ட மாரியே அம்மாவப் பாத்துத்தேன். எல்லாம் என்னோத மாஸ்டர் ப்ளான். எப்புதிதி?"
"வெரி க்ளவர்" என்றதோடு கைப்பேசியைக் கீழிறக்கினாள் அவள்
"சிச்சி, அப்றமா அம்மாவ எனக்குப் புடிக்கவே இல்ல"
"ஏன்டா?"
"உங்கக்கா ஹாஸ்பிட்டல் இளுத்துட்டுப் போய் ரெண்டு இன்ஜக்ஷன் போட்டு வித்தா. ஒரு ஆரஞ்ஜ் ஜூஸ் குடிச்சுருந்தா அதுவாவே சரியாப் போய்ருக்கும். இதுக்குப் போய் ஊசிக் குத்தி வீங்க வச்சுட்டா. எப்டி வலிச்சுச்சு, தெரிமா? இங்க ஒன்னு, இங்கன ஒன்னு, அங்குட்டு..."
"அச்சோ, வலிச்சுருச்சா? அம்மாட்ட நான், மாலு குட்டிக்கு ஊசியே போடக் கூடாதுன்னு, வார்ன் பண்ணிட்றேன். அம்மா மேலக் கோவம் மட்டும் படவே கூடாது, அம்மு. அவத் தான் உனக்கு எல்லாமே. அவங்க சொல்றத ஒழுங்காக் கேட்டு நடக்கணும். ஆனா, அப்பா வந்து கூப்டா அவரு கூட போகாத. அந்த அப்பா வேணாம். அவரு பேட் பாய். கெட்ட பையன். சரியில்ல"
"ஆமா, பேட் பாய். சிச்சி... எனக்கொரு டவுட்டு. வேற அப்பாக்கு நான் எங்கப் போறது?"
"வேற அப்பா? வேற? ஆன், விக்ரம் சித்தப்பா இருக்காருல்ல. அவரு உனக்கு எல்லாமே பண்ணுவாரு"
"சிச்சப்பா எனக்கு பொட்டாட்டோ சிப்ஸ் வாங்கித் தருவாரா?"
"சிப்ஸு, சாக்கி, ஐஸ்க்ரீம், கின்டர்ஜாய், ஜாம், ஜெல்லி, டாய்ஸு, புக்ஸு, நோட்டு, பென்சில், டிரெஸ்ஸு அத்தனயும் வாங்கிக் குடுப்பாரு. இது எல்லாமே நீ சமத்துப் புள்ளயா இருந்தா தான். அம்மாவத் தொல்ல பண்ணாம, வேளாவேளைக்கு புவா சாப்டு, டைமுக்கு ஸ்கூல் போனா கண்டிப்பாக் கடைக்குக் கூப்டுப் போவோம். நீ சென்னைக்கே போ வேணாம். நாம இங்கயே நல்ல ஸ்கூல்லச் சேந்துக்கலாம். குட்டிக்குப் புதுப்புது ஃப்ரென்ட்ஸ் கெடைப்பாங்க. சித்தி, சித்தப்பாவ அடிக்கடி மீட் பண்ணலாம். செம்ம என்ஜாய்மென்ட் இருக்கு. கரெக்ட் தான, செல்லம்?"
"யாயி யாய்" மாலினி மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க
அவளைக் கட்டியணைத்துத் தூக்கிக் கொண்டு நடந்தாள் பத்மா "யாய்... உனக்குச் சும்மா இருக்க போரடிக்குதுல்ல. நாம வின்சென்ட் தம்பியப் பாத்துட்டு வருவோமா?"
அவர்கள் கீழிருந்த மேரியின் வீட்டிற்குள் நுழைய, அவரது முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. ஃசோபியாவின் அருகே நின்ற வேறொரு நபரின் கையில் இருந்தான் வின்சென்ட். அவனை முன்பின் பார்த்திராததால், பத்மா குழப்பத்தோடு நோக்கினாள். அவளின் நிலைபுரிந்து அவளைத் தெளிவுபடுத்த சோஃபியா நெருங்கி வந்தாள். ஹேமாவிற்கு பிஸ்கட் கொடுக்கும் பொருட்டு, மேரி உள்ளே தூக்கிச் சென்றுவிட்டார்.
"அக்கா, உடம்பு குணமாய்டுச்சா?" ஃசோபியின் குரலிலும் குதூகலம் ஏகத்திற்கும் தெரிந்தது
"முன்னைக்கு இப்ப பெட்டரா இருக்கு"
"நானே பாக்க வரணும்னு நெனச்சேன். வீட்டத் தாண்டிக் காலெடுத்து வைக்க முடில. அந்தளவுக்கு மெதப்புலச் சுத்திட்டுருக்கேன். அங்கப் பாத்தீகள்ல; அவரு தான் என் வீட்டுக்காரரு"
"ஓ... எப்படி வந்தாரு? எப்போ ஒன்னு கூடுனீக?" அவள் சத்தம் எழாமல் மெதுவாய்க் கேட்டாள்
"தெரியாத மாரியே கேக்காதீக. எல்லாத்துக்கும் உங்க ஹஸ்பன்ட் தான காரணம்"
"யாரு? விக்ரமா?"
"பின்ன, வேறாரு? அண்ணேன் உங்கள்ட்ட எதுவும் சொல்லலையோ. அட... உங்களுக்கு இடயிலக் காது கேக்காமப் போச்சுல்ல. அத்தான் நாட்டு நடப்பு தெரியாம இருக்கீங்க. இப்போ கேக்குது போல?"
"இவ்ளோ நேரம் பேசிட்டுருக்கறதுலயே தெரியலயா? நீ விரசா நடந்ததச் சொல்லு"
"மொதல்ல கெட்ட விஷயத்தச் சொல்றேன். பின்ன நல்ல விஷயத்தச் சொல்லுதேன். மனசத் தேத்திக்கங்க"
"ம்ம்ம்"
"பக்கத்து வீட்டுக் கிழம் உங்களப் பத்தித் தப்பு தப்பா கம்ப்ளெய்ன்ட் குடுக்கப் போய், போலிசே நேருல வந்துடுச்சு"
"அடங்கொப்பன் மவன"
"பதிலுக்கு எங்கம்மா அந்தாள் மேலப் புகார் குடுக்கவும், ஆளாளுக்கு நான் சாட்சி சொல்றேன்னு வரிச கட்டி நின்னுட்டாங்க. அதுலக் கிழடுக்கு டர்ராயி இந்தியாவ விட்டே ஓடிட்டான். கொஞ்ச வருஷத்துக்குத் திரும்பி வர்றதே கஷ்டம்னு பேசிக்குறாங்க"
"நல்லதாப் போச்சு"
"விக்ரம் அண்ணன் தேன் எங்கம்மா கூட நின்னு எல்லா வேலயும் செஞ்சு குடுத்தாவ. என்னை உன் புள்ள மாரி நெனச்சுக்க; உனக்கு வேற என்ன கஷ்டம் சொல்லுனு கேட்டாவளா. மேரி சட்டுனு என்னைக் கைக்காட்டிடுச்சு. ரெண்டே நாள்ல அண்ணனும் அவங்க தோஸ்த்துங்களும் எங்க வூட்டுக்காரரத் தேடிப் பிடிச்சு இங்கக் கொண்டாந்துட்டாங்க. அவரப் பாத்ததும் நான் அழுது வடிக்க, என் புள்ளைக்கும் அழுக தொத்திக்கிடுச்சு. உடனே மனுஷன் பச்ச மண்ணா கரஞ்சுட்டாரு. ஏன்யா வேல வெட்டிக்கே போகாமக் கிடக்கன்னு கேட்டதுக்கு ஓடுன மனுஷந்தேன். உங்க திருவாளர் தெரிஞ்சவங்கள்ட்டப் பேசி பேங்க்ல லோன் வாங்கித் தாரேன்; எதாச்சும் தொழில் பண்ணிப் புழைச்சு, குடும்பத்தப் பாருலேன்னு தெகிரியம் குடுக்கவுந்தான் திரும்பி வந்துருக்கு"
பத்மா பேச மொழியின்றி வாயடைத்துப் போக, அவளுக்கும் சேர்த்து சோஃபியாவே கதையளந்தாள் "செத்த இருங்க. வீட்டுலப் பிரியாணி செஞ்சோம். பொட்டலங்கட்டித் தாரேன். என்ர விக்ரம் அண்ணனுக்கும் உம்பட ராம் அண்ணனுக்கும் கொடுத்துடுங்க. நீங்க இங்கயே சாப்புட்டுப் போவீங்க. உங்க அக்கா வேற வந்துருக்காகளாமே. இதாரு, அக்கா மவளா?"
ப்ரியாவிற்கோ அவளின் மனதிற்குப் பிரியமான பிரியாணியின் மீது கூட அக்கணம் கவனம் திரும்பவில்லை. முழுக்க முழுக்க அவளது உள்ளம் விக்ரமை நாடி அலைந்தது.
உன் நெஞ்சை அசைத்த புயலவன் யாரோ!