அன்று சி. ஐ. டி. கல்லூரி வளாகத்தில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கான விழா நடந்து கொண்டிருந்தது. அதன் தொடக்கமாக மேடையில் ஜெனிஃபர் பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தாள். அவளது பாவனைகளும், உடலசைவும், முகப் பொலிவும், முத்தாய்ப்பான புன்னகையும் காண்போரைக் கொள்ளையடித்தது. அவள் ஆடி முடிக்கவும் கலையரங்கில் பெரும் கரகோஷம் எழுந்தது. வணக்கத்துடன் மேடையை விட்டு இறங்கியவளைப் பலர் சூழ்ந்து கொண்டு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தனர். அடுத்த நிகழ்ச்சி தொடங்கவும் மற்றவர்கள் கலைந்து அரங்கத்திற்குள் சென்றுவிட்டனர். அரங்கத்தின் பக்கமாக இருந்த வராண்டாவில் இப்போது ஆடிக் களைத்துப் போயிருந்த ஜெனியும் அவளைப் பார்த்து அசந்து போன விக்ரமும் மட்டுமே இருந்தனர். அவளின் தூண்டில் வீசும் கண்களை நோக்கியபடி அவனே பேச்சைத் தொடங்கினான்.
“ஹே”
“ஹாய்ய்ய்”
“யுவர் பர்ஃபார்மன்ஸ் வாஸ் அமேசிங்”
“தேங்க் யூ”
“ஹௌ ஆர் யூ ஃபீலிங்?”
“டுடே இஸ் அமேசிங்”
“எதுனால?”
“யூ ஆர் டாக்கிங் டு மீ. ஸோ... எக்ஸைடட்”
“போற வரப்பலாம் என்னையே பாத்துட்டு இருக்கியே. என்ன விஷயம்? பசங்களாம் கலாய்க்குறாங்கமா. இனி பாக்காத, ஓகே?”
“எந்தெ கண்ணு, ஞான் நோக்கும்; நிங்களுக்கு எந்தானு... யூ ஆர் ஸோ ஹேன்ட்சம். ஐ கான்ட் டேக் மை ஐய்ஸ் ஆஃப்”
“ஓ, ரியலி?”
“யா, யா”
“அப்போ ஷரி, அப்போ ஷரி”
“ஷரியானோ. பின்னே... ஐ லவ் யூ டூ”
“நான் உன்ன லவ் பண்றேன்னு சொல்லவே இல்லயே”
“சிநேகிக்குனில்லா...?”
“இல்லா”
“சத்யம் பரா. சத்யம் பரா...”
“அதே... ஞான் நின்னே சிநேகிக்குனில்லா”
“ஐ கேன்ட் பிலீவ் யூ... நீ என்ன சதிச்சு, அல்லே. ஐ ஹேட் யூ... ஐ ஹேட் யூ ஸோ மச்” என்று முகஞ்சுளித்தவள் வேகமாக அவனிடம் இருந்து விலகி நடந்தாள்
“அடியே, நில்லு...” என்று அவன் பின்தொடர
“நோ, ஸ்டே அவே ஃப்ரம் மீ. டோன்ட் ஃபாலோ” என்றாள் திடீரென எழுந்த கோவத்துடன்
அரங்கத்தினுள் மிக இரைச்சலாகப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. மேடையில் அடுத்தடுத்து நடந்த நடன நிகழ்ச்சிக்கு ஆரவாரம் செய்வதிலேயே மாணவ மாணவிகள் குறியாக இருந்தனர். அதனால், இவ்விருவரின் வாக்குவாதமும் கள்ளச் சண்டையும் உள்ளேயிருந்த யார் கவனத்தையும் கவரவில்லை.
பாதச்சதங்கை கதற கதற நடந்து சென்றவளைப் பின்தொடர்ந்தவன் “எடி, ஞான் கள்ளம் பரஞ்சதானு. ஐ ரியலி லவ் யூ. லவ் யூ டி, எந்தெ செறிய பிஷாசே” என்று கொஞ்சல் வார்த்தைகளை வீச
அந்த நொடியில் மகிழ்வுற்றவள் அவனின் கன்னத்தில் முத்தம் பதித்து “எனிக்கரியாம்... லவ் யூ டூ” என்று கூறி மற்றவர் கண்ணில் சிக்கும் முன் மின்னல் போல் அங்கிருந்து மறைந்துவிட்டாள்
இன்று...
காலையில் எழுந்ததுமே பத்மாவின் மூளையில் விக்ரமைப் பற்றிய எண்ணங்கள் ஓட ஆரம்பித்துவிட்டன. அரைகுறை மனதுடன் துணிகளைத் துவைத்தவள் குளித்து முடித்து முடிவாக பிரபாகரனுக்கு அழைத்தாள்.
“ஹலோ” என்று இவள் தயக்கத்துடன் பேச
“குட் மார்னிங்” என்றான் அவன் புத்துணர்வுடன்
அதில் உண்டான புன்னகையுடன் “இன்னைக்கு ஃப்ரீ தான? மீட் பண்ணணும்னு கேட்டுருந்தீங்களே?” என்று வினவினாள்
“யா, நீங்க வரீங்கன்னா கண்டிப்பா ஃப்ரீ தான்”
“வரேன். கிரீன் ட்ரீ ரெஸ்டாரன்ட் தெரியும்ல. அங்கப் பாக்கலாமா?”
“ஷ்யூர், இட்’ஸ் அவர் ப்ளஷர்” என்றவன் உடனடியாக விக்ரமைத் தேடிச் சென்றான்
“டேய், விக்ரம், விக்ரம்... அவ ஒத்துக்கிட்டாடா?”
“எவ, அவ?” என்று அவன் சாவகாசமாக உடற்பயிற்சி செய்து கொண்டே கேட்டான்
“நான் ஒரு பொண்ணு பாத்து வச்சுருக்கேன். நீ எதிர்பாக்குற மாதிரியே இருப்பா...”
“அவ எதிர்பார்ப்புக்கு ஏத்த மாறி நான் இருக்கணுமே”
“அத எல்லாம் நீ யோசிக்காத. முதல்ல ரெடியாகு. நீ பேசணும்னு சொன்னல்ல. வரச் சொல்லிருக்கா. வா, கிளம்பு...”
“எங்க?”
“சரவணம்பட்டிக்கு...”
“அவளா வரச் சொன்னாளா? இல்ல, நீ ஏதும் கோல்மால் பண்றியா?”
“ஒரு கோல்மாலும் இல்ல. நான் கம்பெல் கூட பண்ணல. வாடா போவோம்... எக்சர்சைஸ் எப்போ வேணாலும் பண்ணலாம். இப்போ குளிச்சுக்க”
“அங்கப் போய் மொக்க வாங்கப் போறோம். இதுக்கு இவ்ளோ அவசரம்...” என்று சலித்தபடி விக்ரம் குளிக்கச் சென்றான்
பிரபாவோ அடுத்து இருந்த அறைக்குள் நுழைந்து “ராம்... எழுந்திரு. எழுந்திருடா..... உன் மச்சானுக்குப் பொண்ணு கிடைச்சுருச்சு, டோய்” என்று ஆனந்தக் கூச்சலிட்டான்
அப்படியே கிரீன் ட்ரீ உணவகத்தின் வாசலில் பார்த்தோமானால் ராம் கையைத் தாடைக்கு முட்டுக் கொடுத்து உட்கார்ந்திருந்தான்
“இந்தப் பேச்சுவார்த்தலாம் செட் ஆகும்னு நம்புறீங்க? விக்ரம் வாயத் திறந்தாலே சோலி முடிஞ்சுடும். இப்டி மொத்தமா அசிங்கப்படுறதுக்குனே சன்டே மார்னிங்கே கிளம்பி வந்தாச்சு. பதினோரு மணிக்குத் தான அவ வரச் சொன்னா. இப்டி ஒன் அவர் முன்னாடியே வந்து உக்காந்துருக்கோமே. நல்லாவா இருக்கு?” என்று அவன் எதிர்மறையாய்ப் பேச
“என்னடா உனக்கு? பசிக்குதா? வெய்ட் பண்ண முடியலயா? உள்ளப் போய் ஆர்டர் பண்ணிச் சாப்டுட்டு இரு” என்று சொல்லிட்டான் பிரபா
“எனக்குப் பசிக்கலாம் இல்ல; தூக்கம் வருது...”
“கொஞ்ச நேரம் அலப்பறப் பண்ணாம இருடா” என்ற பிரபாகரன் பத்மா எப்போது வருவாள் எனக் காத்துக் கிடந்தான்
இப்போது ராம்குமார் பேச்சை மடைமாற்றி “நீ என்னடா ரோபோ மாதிரி உக்காந்திருக்க. ஒரு பதட்டமோ, பரபரப்போ, பரவசமோ எதயும் காணோமே” என்று நண்பனைப் பார்த்துக் கேட்கலானான்
உடனே விக்ரம் “இவன ஏண்ணா கூட்டிட்டு வந்த? தொணதொணண்ணுட்டுக் கிடக்கான். ஏஞ்சு அங்கப் போடா... ஊரான் வூட்டு பைக்ல உக்காந்துகிட்டு” என்று எரிந்து விழுந்தான்
அவனிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட நிம்மதியோடு ராம் காரில் சென்று அமர்ந்தான். சற்று நேரத்தில் விக்ரமுடன் பிரபா உணவகத்தின் உள்ளே சென்றிருந்தான். அதன் பிறகு பத்மாவும் மதுவும் அவ்விடம் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு அருகிலேயே தான், உறக்கம் வராமல் கார் கண்ணாடியைத் திறந்து வைத்து, வாகனத்தின் உள்ளேயிருந்து ராம்குமார் வேடிக்கை பார்த்தபடி இருந்தான்.
“வாடி, இப்டியே திரும்பிப் போய்டலாம். எனக்கு எதோ பயமா இருக்கு. இப்டி முன்ன பின்ன தெரியாதவங்களப் பாக்க வர்றது தப்பில்ல” என்று பதற்றம் அடைந்தாள் ப்ரியா
“தப்புத் தான்”
“என்ன, மது? கடைசி நேரத்துல இப்புடிச் சொல்லுற”
“அப்பறம் என்னடி? இவ்ளோ தூரம் இளுத்துட்டு வந்துட்டு, இப்போ தான் யோசிச்சுட்டு இருக்குறவ. அதான் கிளம்பி வந்தாச்சுல்ல. போய் என்ன ஏதுன்னு ஒரு கை பாத்துட்டு வா”
“நீயும் வர்றது கூட...”
“என் ரிசர்ச் வொர்க்கலாம் தூக்கிப் போட்டுட்டு, உனக்காக இவ்ளோ தூரம் வந்ததே பெருசு. ஒழுங்கா ஓடிடு. நான் வரும்போதே என்ன சொன்னேன்; வழியனுப்ப வாரேன்னு தான சொன்னேன்? எதாவது ப்ராப்ளம்னா மட்டும் கூப்டு. எனக்கு வேற வேல கிடக்கு”
“மது...”
“போடி இவளே. பேசி முடிச்சுட்டு ஒரு மெசெஜ்ஜ போட்டு விடு. வந்து சேர்றேன். இப்போதைக்கு பை” என்றவள் திரும்பிப் பாராமல் நடக்க, கையைப் பிசைந்து கொண்டே உள்ளே சென்றாள் பத்மப்பிரியா
அவள் செல்வதை ஒரு கணம் ஓரமாய் நின்று மதுவும் கவனித்தாள். தோழிக்கு நல்லது நடக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பும், சொல்ல முடியாத வேறொரு கவலையும் மதுரேகாவின் முகத்தில் மாறி மாறி பிரதிபலித்தது. அங்கு நடந்தவற்றை இமை கொட்டாமல் கவனித்துக் கொண்டிருந்த ராமை, மது அப்போது தான் ஏறெடுத்துப் பார்த்தாள். கண்டதும் அவன் யாரோ எவனோ என நினைத்துத் திரும்பிச் சென்றுவிட்டாள்.
உணவகத்தின் உள்ளே போன பின்னர் அலைபேசியை எடுத்து பிரபாகரனுக்கு அழைக்க முயன்றாள் ப்ரியா. அவள் வரும்போதே பார்த்திருந்த பிரபா, முன்னரே அவளை அடையாளம் கண்டு கொண்டான். அவளைத் தேடும் அளவுக்கு வைக்காமல் கையைக் காட்டி அழைத்தான்.
அருகிலிருந்த விக்ரமின் முகத்தை நினைவுபடுத்திக் கொண்டே வந்தவள் புன்னகையுடன் “ஹலோ” என்று கரம் நீட்டினாள்
மேட்ரிமோனி தளத்தில் குடும்ப விளக்காய் நின்ற பத்மாவிற்கும், நேரில் வந்திருக்கும் உண்மை உருவத்துக்கும் நிறையவே வித்தியாசங்கள் இருந்தன. தூக்கி முடியப்பட்டக் குட்டையான போனிடெய்ல், நெற்றியில் சிறு பொட்டு, காதுகளில் ஒற்றைக் கல் தோடு, மெல்லிய தங்க செயின், சலவை செய்யப்பட்ட சுடிதார், உடன் வெளிர்நிற ஜீன்ஸ் மற்றும் கையில் ஒரு கடிகாரம் என எளிமையாக இருந்தாள்.
இதை வைத்து விக்ரம் அவளை எடைபோட முயல, பிரபாகரன் எழுந்து நின்று கைகுலுக்கியவாறு “மைசெல்ஃப் பிரபா. இவன்...” என்று அருகே சுட்டினான்
முகத்தில் உணர்ச்சிகள் எதுவுமின்றி இருந்த இடத்திலேயே “விக்ரம்” என்றிட்டான் இவன்
அவள் எதிரே அமர்ந்து “ஐ அம் பத்மப்பிரியா” என இயல்பாய்த் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்
“நைஸ் டு மீட் யூ. தேங்க்ஸ் ஃபார் கம்மிங். தனியாவா வந்தீங்க?” என பிரபா விசாரித்தான்
“இல்ல, ஃபிரெண்டோட... அவ பர்ச்சேஸ் பண்ணப் போயிருக்கா”
“ஓகே”
“எதோ பேசணும்னு...” என்று அவள் விஷயத்திற்கு வர
பிரபாகரன் “ப்ரேக்ஃபாஸ்ட் சாப்டீங்களா?” என இடைவெட்டிப் பேசினான்
“இல்ல; இருக்கட்டும், பரவால்ல”
“நோ, நோ, முதல்ல சாப்ட்ருவோம். டைம் ஆச்சுல்ல? என்ன சாப்டுறீங்க...”
“உங்க விருப்பம்... எனக்கு எதுனாலும் ஓகே தான்”
“வெஜ் ஆர் நான்வெஜ்”
“நான்வெஜ்...”
“நாலு நாண், ஒரு சிக்கன் கிரேவி, ஒரு மட்டர் மசாலா, பன்னீர் நூடுல்ஸ் ஒன்னு அன்ட் மீன் பொளிச்சது ஒரு ப்ளேட்டு” என்று பிரபாகரன் வகையாக ஆர்டர் செய்ய, அதற்கிடையில் பத்மா ஒருமுறை விக்ரமை ஏறிட்டாள்
அவனின் பார்வையோ தமையன் வைத்திருந்த உணவுப் பட்டியலில் நிலைத்திருந்தது
“நீங்க சாப்டுட்டு இருங்க, ப்ரியா. ஒரு முக்கியமான கால் பேசிட்டு வந்துட்றேன்” என்று காரணம் கூறி பிரபா எழுந்து செல்ல, அவள் வேறுவழியின்றி தலையசைத்து வைத்தாள்
விக்ரம் பேச மிகவும் யோசிக்க அவளே தொடக்கப்புள்ளியும் வைத்தாள்
“இங்கப் பாருங்க, விக்ரம்... எனக்கு வளைஞ்சு கொழஞ்சு பேசத் தெரியாது. நேரா விஷயத்துக்கு வரேன். எனக்கு வயசு இருபத்தெட்டு ஆகப் போது; மேட்ரிமோனில எங்கப்பா ட்வென்டி ஃபோர்னு போட்டு வச்சுருக்காரு; அதெல்லாம் சுத்தப் பொய்... நான் எப்பவும் என்னைப் பத்தி மொதல்ல யோசிப்பேன். அப்றந்தான் மத்தவங்களப் பத்தி... என் ஜாப், என் கரியர நான் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். நீங்களும் எதையும் விட்டுக் கொடுக்க வேணாம். உங்கள எனக்காக மாத்திக்கக் கூட வேணாம். பேட் ஹேபிட்ஸ் இருந்தாலும், பெட்டர் நான் அதத் திருத்த ட்ரை பண்ண மாட்டேன். பட் ஒன் கன்டிஷன்...” என்று அவள் மேலும் சொல்ல வர விக்ரம் உன்னிப்பாகப் பார்த்தான்
உன்னைப் போலவே எண்ணம்!