சற்றே பின்னோக்கிச் சென்றால்...
விக்ரம் அரைத் தூக்கத்தில் இருந்தபோது ப்ரியா கொடுத்த முத்தமே நினைவுபடுத்திவிட்டது இன்று தனக்குப் பிறந்தநாளென்று. அவள் முதல் காரியமாக வெளியே கிளம்பிச் செல்ல, தனக்காக ஏதோவொரு ஆச்சரியப் பரிசு காத்திருக்கிறது என்பதும் அவனுக்குத் தெளிவானது. அது என்னவாக இருக்கும் என எதிர்பார்த்துக் கடிகாரத்தையே பார்த்திருந்தான். அவளே அழைத்துத் தயாராகும்படி கூறியதும், அவனுடைய ஆர்வம் கூடியது. துள்ளலோடு அவளின் வரவை எதிர்நோக்கித் தன்னை அழகுபடுத்திக் கொண்டான். அவன் அறையைவிட்டுக் கிளம்பும் முன்னர் வெளிக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அதே நேரம் அலைபேசியினூடே கண்களை மூடுமாறு பணித்தாள் ப்ரியா. அவனும் விழி மூடி வெளியே அடியெடுத்து வைக்க, மனித அரவம் நன்றாகத் தெரிந்தது.
இரு வளைக்கரங்கள் அவனை இடையோடு இறுக்கிப் பிடிக்க, அவனுமே அணைத்துக் கொண்டான்; நண்பர்களின் பிறந்தநாள் பாட்டுச் சத்தம் கேட்டும் கண்களை மூடி அவளைப் பிரியாமலே இருந்தான். அவள் தன் மனைவி என்ற நினைப்பு அவனுக்கு. அதனாலே, தங்கள் முதல் ஆத்மார்த்தமான அணைப்பை மேலும் சில நொடிகள் நீட்டிக்க ஆசை கொண்டான். அதைத் தொடர்ந்து கனத்த மௌனம் நிலவவே, அப்போது தான் அவனது மூளை இடித்துரைத்தது; தான் கட்டிக் கொண்டிருப்பது தன்னுடைய மனைவியாக இருக்க வாய்ப்பில்லை என. அதற்குக் காரணம் அவனைத் தழுவி இருந்தவளின் உயர வித்தியாசம். பத்மாவின் உயரத்திற்கு இருவரின் தலைகளும் ஒரே நேர்க்கோட்டில் முட்டியிருக்க வேண்டும். ஆனால், இவளோ அவன் நெஞ்சோடு தலையைச் சாய்த்திருந்தாள்.
அந்த விநாடி அவனுடைய இதயம் படபடக்கத் துவங்க "விக்ரம்" என்ற பத்மாவின் கத்தலும் எதிரே ஒலித்தது
அவன் மின்னல் வேகத்தில் விழிகளைத் திறந்து, அதே விரைவில் தன்னை ஒன்றியிருந்தவளையும் தள்ளினான். பத்மாவால் நடந்ததை உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. மற்றவர்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் அவமானமாக உணர்ந்தவள், அங்கிருந்து ஓட்டமும் நடையுமாய் அகன்றுவிட்டாள். விக்ரம் இந்நேரத்திற்கு மனைவியைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு, பின்னாலேயே ஓடியிருக்க வேண்டும். அவன் அவ்வாறு செய்ய இயலாத அளவிற்குச் சிலையாய்ச் சமைந்திருந்தான்; அருகே நின்றவளின் விழிகளில் சிறைப்பட்டிருந்தான். யார் இவள்? அதற்கான விடை ராமின் உச்சரிப்பில் இருந்து கிடைத்தது.
"ஜெனி?" இவனது பாவனையில் எண்ணிலடங்காக் கேள்விகள் அடங்கியிருந்தன
அந்தப் பெயரைக் கேட்டதில் சுற்றியிருந்த அனைவருக்கும், மதுரேகா உட்பட, வந்திருப்பது யாரென்று புரிந்து போனது. இவளின் திடீர் விஜயத்திற்கான முகாந்திரம் என்னவென்று எவருமே அறிந்திருக்கவில்லை. நண்பர்கள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு, வந்ததற்கு கேக் தான் மிச்சம் என அதனோடே புறப்பட்டனர்.
"இதுக்குத் தான் இந்தப் பசங்களயே நம்பக் கூடாது. எப்போ என்ன பண்ணுவாங்கன்னே தெரியாது. கடைசில, ஏமார்றது நாங்க தான்" ரேகா இவ்விதம் கூறி, ராமைப் பார்த்து முறைத்துவிட்டு நடையைக் கட்டினாள்; தோழியைப் பற்றிக் கவலையுற்று அவளைத் தேடிச் சென்றாள்.
மீதமிருந்த இவனும் கோபத்தில் கொதித்தான் "என்ன பண்ணி வச்சுருக்க, விக்ரம்? இவள எதுக்குடா வீட்டுக்கு வரவச்ச?"
"என்னடா பேசுற? நான் இவளக் கூட்டி வரல. இவ எங்கருந்து எப்டி வந்தான்னே தெரியல. எனக்கே ஷாக்கிங்கா தான் இருக்கு"
"அவள மொதல்ல வெளியப் போகச் சொல்லு"
பதிலுக்கு விக்ரம் வாயே திறவவில்லை; ஜெனி கண்டமேனிக்கு அழுது வடிக்க, அவளை வெளியேறுமாறு அவனால் கூற முடியவில்லை. அவனுடைய இளகிய மனம் அங்ஙனம் செய்யவிடாமல் தடுத்தது.
"சொல்ல மாட்டல்ல. இவளால நீ அனுபவிச்ச வலிலாம் மறந்து போச்சு, இல்லடா. இவ உன்னை இப்டின்னு சொடுக்கு போடுற நேரத்துல விட்டுட்டுப் போனவ. உன்னால இவளத் தூக்கி எறிய முடியல. சரி, உன்னை நம்பி வந்தாளே பத்மா; அவ, அவளப் பத்தியும் உனக்கு அக்கறயில்ல. நீ என்னமோ பண்ணு. ஒரு நிமிஷங்கூட என்னால இவளச் சகிச்சுட்டு, இந்த வீட்டுல இருக்க முடியாது. மூஞ்சும் மொகரயும்... நான் போறேன். ஒரு தடவ பட்டும் உனக்குப் புத்தி வரல. என்ன சொன்னாலும் திருந்த மாட்ட. கெடைச்ச வாழ்க்கயயும் தொலைச்சுட்டு நிக்கப் போற"
ஐந்து நிமிடங்களுக்குள்ளாகவே ஒரு தோள்பையில் துணிமணிகளை அள்ளித் திணித்தவாறு ராம் புறப்பட்டுவிட்டான். அவன் போவதை வியப்போடு வேடிக்கை பார்த்த பிறகே வீட்டிற்குள் சென்றாள் சோஃபியா. ஜெனியைப் பற்றி அவள் ஒரு புள்ளி கூட அதுவரை அறிந்ததில்லை. அவர்களது சம்பாஷனையில் இருந்து ஓரளவு கிரகிக்க முடிந்தது; விக்ரமிற்கும் அந்தப் பெண்ணிற்கும் இடையே ஏதோவொரு தொடர்பு இருப்பதை.
நம் பத்மா வாழ்வை வெறுத்த தளர்நடையுடன் அக்காளின் வீட்டினை அடைந்தாள்; வாசலில் நுழைந்ததும், அங்கையை ஏறிட்டுக் கூட பாராமல், விரைந்து குளியலறையில் புகுந்து கொண்டாள். அவளின் பின்னோடு ரேகாவும் வந்து சேர்ந்தாள்.
"எதோ பர்த்டே, சர்ப்ரைஸுன்னு கிளம்பிப் போனீங்க? நானே அங்க வர்றதுக்குத் தான் ரெடியாகிட்டு இருக்கேன். நீங்க அதுக்குள்ளத் திரும்பிட்டீங்க. ஃபங்க்ஷன் முடிஞ்சுருச்சா?"
"ஃபங்க்ஷன்... ஃபங்க்ஷன் முடிஞ்சுருச்சு, அக்கா. விக்ரம... அவங்க ஃப்ரென்ட்ஸ் எல்லாம் சேந்து ஊட்டிக்குக் கூப்டுப் போயிட்டாங்க. பர்த்டே டிரிப். எதோ பார்ட்டி இருக்கும் போல. அத்தான் நாங்க இங்க வந்துட்டோம்"
"இவ ஏன் எதுவும் சொல்லாம பாத்ரூம் உள்ளாரப் போறா?"
"போனா போகட்டுமே. அவளுக்கு என்ன அவசரமோ?"
"இவ்ளோ சீக்கிரம் முடியும்னு தெரிஞ்சுருந்தா, நான் முன்னவே வந்து விஷ் பண்ணிருப்பேன். விக்ரமுக்காகப் பால் பணியாரம்லாம் செஞ்சேன். நேர்லப் பாத்துக் குடுக்க முடியாமப் போச்சு"
"நல்லவேள, பாக்கல. பாத்துருந்தீங்க. உஃப்..."
"என்னத்தயாவது கெடந்து உளறு"
"ஈஈஈ"
"நீயாவது ரெண்டு சாப்புட்றி. பத்மாவுக்குக் கூட பிடிக்கும். பத்மா..."
"அக்கா, அக்கா... வேணாம். அவள விட்ருங்க. விக்ரம் அவளயும் ஊட்டிக்கு அழைச்சுட்டுப் போகலன்னு..."
"சண்டையா?"
"இல்லல்ல. சின்ன அப்செட். அவ்ளோ தான். கொஞ்ச நேரம் ஃப்ரீயா விட்டா, அவத் தானா சரியாய்ருவா. உங்களுக்குப் பால் பணியாரம் திங்கணும். அவ்ளோ தான. குடுங்க, நானே தின்னுறேன்" அங்கையைச் சமாளித்து ஓய்ந்தாள் ரேகா
குளியலறை வாளியில் தண்ணீரைத் திறந்துவிட்ட பத்மா, தன் கண்ணீரையும் மடை திறந்தாள். நீரின் சலசலப்பில் அவளது விசும்பலும் புலம்பலும் வெளியே கேட்க வாய்ப்பில்லை. எனவே, மனதில் ஏறிய பாரம் இறங்குமட்டும் அழுது தீர்த்தாள். ஏதோ தோன்ற விழிகளைத் துடைத்தவாறு சுடிதாரைக் கழற்றி முதுகைக் கண்ணாடியில் பார்த்தாள். புதிதாக நடுமுதுகில் பட்டாம்பூச்சி ஒன்று பறந்து கொண்டிருந்தது. அந்தக் கருநிற டாட்டூவைச் சுற்றிலும் இன்னும் ஆறாமல் சிவந்து போயிருந்தது. விடிந்ததும் அவள் சென்று வந்ததே இந்த வேலையாகத் தான். விக்ரமிற்கான பிறந்தநாள் பரிசில் இதுவும் அடக்கம். நன்றாக அதை உற்றுப் பார்த்தால் அது வெறும் பட்டாம்பூச்சி அன்று; ஆங்கில 'வி' எழுத்துரு எனத் தெரிய வரும்.
அவனின் மீது உண்டான அன்பை வெளிப்படுத்த அவளுக்கு இதை விட கச்சிதமான வழி தோன்றவில்லை; அதற்காகவே இவ்வளவு வலியையும் பொறுத்துக் கொண்டு, அவனது பெயரின் முதல் எழுத்தைக் காலத்திற்கும் அழியா வண்ணம் மேனியில் பொறித்தாள்; அவனிடம் உள்ளத்தையும் உடலையும் முழுவதுமாக ஒப்புவிக்கும் நிலையை எட்டியிருந்தாள். அத்தனை காதல் பித்தும், இன்று அவனிருந்த கோலத்தில், கரைந்து காணாமல் போனது. தான் கூட இதுவரை அவனை ஆரத் தழுவியதில்லை எனும் சுணக்கம் ஒருபுறம்; அவனால் ஏமாற்றப்பட்டு விட்டோமோ என்ற உளைச்சல் மறுபுறம்; இரண்டிற்கும் நடுவில் சிக்கித் தவித்தாள் ப்ரியா. ரயில் பயணம் மாதிரி இந்த உறவு முடிவுக்கு வந்துவிட்டதைப் போன்ற உணர்வே திரும்ப திரும்ப எழுந்தது.
சற்று நேரத்தில் முகங்கழுவி வெளிப்பட்ட தோழியை, ரேகாவால் நேருக்கு நேர் காண முடியவில்லை. அவளின் வாடி வதங்கிய உருவம் மனதைப் பிசைந்தது. ஆகவே, வந்திருப்பது ஜெனிஃபர் என்ற உண்மையைச் சொல்லாமலே கிளம்பிட்டாள். அதைக் கூறுமளவிற்குத் தைரியம் இவளிடம் அறவேயில்லை. ப்ரியாவிற்கு இரவு முழுதும் யோசனை செய்ததில் சின்னஞ்சிறு நம்பிக்கை துளிர்த்தது. ஒரே நாளில், ஒரே ஒரு செயலுக்காக விக்ரமைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாமே என நினைத்தாள். கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய் என்ற வாக்கினை அவள் கையிலெடுத்தாள்.
அங்கையின் வீட்டில் உறக்கம் வராமல் பிரண்டவள், விடியல் ஒளி வீசியதும் தங்களின் இருப்பிடத்திற்குப் போனாள். வாசலில் கிடந்த பெண்ணின் காலணிகளோ அவளை நிலைகுலையச் செய்தன. விக்ரமின் அறைக்கு அருகே சென்றவள் கதவு திறந்திருப்பதைக் கண்டாள். தயக்கத்துடன் உள்ளே அடியெடுத்து வைத்திட, நேற்று பார்த்தவள் அங்கேயே தான் இருந்தாள். அதுவும் அவர்களுடைய கட்டிலில். இக்காட்சியை பத்மாவால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அவளைப் பீடித்த கவலை உருமாறி ஆத்திரமாக மேலெழும்பியது.
"விக்ரம்" அவளிட்ட கூச்சலில் ஜெனியின் அருகே இருந்த சிறுவன் படக்கென்று விழித்துக் கொண்டான்
இவனையும் கவனத்தில் பதித்தபடி பத்மா தன் கணவனைத் தேடலானாள். அவனோ மிக இயல்பாகச் சமையலறையில் இருந்து காபிக் கோப்பையுடன் வந்து நின்றான்.
"என்ன பெட்காஃபியா? போங்க, போய் அவளுக்குக் குடுங்க. ரொம்ப முக்கியமான விருந்தாளில்ல"
"எதுக்கு இப்போ கத்திட்டுருக்க? நானே தலவலிக்குதுன்னு இருக்கேன். இந்த காஃபி எனக்குப் போட்டது"
"நான் ஏன் கத்துறன்னு உங்களுக்குத் தெரியவே தெரியாது. உங்கள நம்பிக் கல்யாணம் பண்ணவ நானு. இது நம்ம வீடு தானா, விக்ரம்? எவ எவளயோ கொண்டாந்து தங்க வச்சுருக்கீங்க. யாரு அவ? அவளுக்கு நம்ம பெட்ரூம்குள்ள என்ன வேல?"
"ப்ரியா, அதான் ஜெனி"
"வாட் த ஹெல்? அவள எதுக்கு நம்ம லைஃப்ல இழுத்துவிட்ருக்கீங்க. இதல்லாம் நான் பொறுத்துப் போகணுமா? ஏன்னு கேக்கக் கூடாதா?"
"கேக்கலாம். அவளுக்கு ஒரு பிரச்சனை. ஹஸ்பன்ட் கூட செட் ஆகலைனு கிளம்பி வந்துட்டா"
"அதுக்கு? அவளுக்கு அப்பா, அம்மா இல்லயா? கூடப் பொறந்தவங்க, சொந்தக்காரங்க ஒருத்தரும் இல்லயா? அங்கப் போ வேண்டியதான"
"ரிலேட்டிவ்ஸ் இருக்காங்க. இப்படித் திடீர்ன்னு போய் நின்னா, அவங்க அக்சப்ட் பண்ண மாட்டாங்கமா. ஃபோன்லப் பேசிப் புரிய வச்சப்றம் தான் நேர்லப் போகணும்"
"மேன், வாட் த ஃபக் ஆர் யூ சேயிங்? இதல்லாம் நீ எதுக்குச் செய்யணும்? அவளச் சுத்தமாத் தலமுழுகிட்டேன்னு சொல்லி என்னையக் கல்யாணம் பண்ண. சட்டனா, எங்கருந்து வருது இம்புட்டு அக்கற? வெயிட் எ மினிட். அவக் கூட இருக்கானே; அந்தப் பையனுக்கு எத்தன வயசு? அஞ்சு இல்ல ஆறு இருக்குமா? நீங்க பிரிஞ்சு கரெக்டா சிக்ஸ் இயர்ஸ் ஆவுதுனா... வாரே வா. இப்போ எனக்கு எல்லாமே தெளிவாப் புரியுது. அவன் உன்ர பையன். அதனாலத் தான இவ்வளவு கரிசனம் உனக்கு? தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும்னு சும்மாவா சொன்னாங்க"
லேசா நெஞ்சு வலிக்குது, மக்கா!