• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 52

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
53
0
6
Tamilnadu
அதே வேளை கணபதியில்...

ஜெனிஃபர் மேக்அப் அள்ளிப் பூசியதில் மினுக்கியபடி இருந்தாள். நன்முறையில் சொல்ல வேண்டும் எனில் முழு அலங்காரத்தில் மின்னிக் கொண்டிருந்தாள். அவளும் இரு தினங்களாக ஏதேதோ முயற்சிகள் செய்தும் விக்ரம் மசியவில்லை; அவள் மெனக்கெட்டுச் சமைத்ததை ருசிக்கவில்லை; அவளிடம் அநாவசியமாகப் பேசவுமில்லை; சொல்லப் போனால் அவளை ஏறிட்டுக் கூட பார்க்கவில்லை. இன்றாவது அவனின் மனத்தைக் கலைத்திட வேண்டும் எனும் மும்முரத்துடன் அவள் அன்னநடை பயின்றாள்.

"விக்ரம், நான்..."

அவனது பார்வையிலே ஓர் உதாசீனம் தெரிந்தது "எங்க உன் பையன்?"

"கேன்டீஸ் வாங்க ஷாப்க்குப் போயிருக்கான்"

"தனியாவா அனுப்பி வச்ச?"

"ஹி வில் பி அல்ரைட். ஐ நீட் டு டாக் அபௌட் சம்திங் பர்சனல் வித் யூ"

"ம்ம்"

"தேங்க்ஸ் ஃபார் லெட்டிங் மீ இன். இட் இஸ் சச் எ ப்ளெஷர் டு பி ஹியர். ஸ்பென்டிங் அவர் டைம் வித் ஈச்அதர்"

"வெல், ஓகே. எப்போ கெளம்புற? உங்க வீட்டுலப் பேசிட்டியா? அவங்களா வந்து கூப்டுப் போறாங்களா? நீயாப் போணுமா?"

"வாட்?"

"வென் ஆர் யூ லீவிங்?"

"என்ன இப்டிக் கேட்டுட்ட?"

"அல்ரெடி த்ரீ டேஸ் ஆச்சு. ராம் கோச்சுட்டுப் போயிட்டான். என்னோட வொய்ஃப் விட்டுக் கிளம்பிட்டா. ரெண்டு பேரயும் நான் சமாதானப்படுத்தணும். உன்னால என் பர்த்டே வேறக் கெட்டுப் போச்சு. இட்'ஸ் ஃபைன். பட், நீ கெளம்புனப்பறம் தான் அவங்களலாம் சரிகட்ட முடியும். அவங்க இல்லாம இது வீடு மாதிரியே இல்ல. ஐ மிஸ் தெம். எ லாட்"

"நான் இன்னும் சொல்ல வந்ததச் சொல்லவே இல்ல"

"ம்ம்"

"உன்னை ஒரு டைம் நான் கஷ்டப்படுத்திருக்கேன். உன்னோட வேல்யூ தெரியாம நடந்துருக்கேன். மேபி ஐ அம் ஸாரி"

"மேபி?"

"ரியலி, ரியலி... ஐ'ம் ஸாரி. ஷமிக்கு, விக்ரம். நீ உண்மையாவே என்னை லவ் பண்ண. நாந்தான் உன்னைப் புரிஞ்சுக்கல. நீ செஞ்ச சின்ன சின்ன தப்பப் பெருசு படுத்திட்டேன். உன்னளவுக்கு யாருமே எம்மேல அன்பு காட்டல. லைஃப்ல ஃபெயிலியர்னா என்னனே தெரியாம வளந்தவ நானு. நீ ஒவ்வொரு விஷயத்துல ஃபெயில் ஆனப்பயும் எனக்குப் பயமா இருந்துச்சு. என் ஃப்யூச்சரப் பத்தின கொஸ்டின் மார்க் நெறய வந்துருச்சு. இட்'ஸ் எ ஜெனியூன் மிஸ்டேக்"

"அதனால?"

"ஐ வுட் லைக் டு கன்டினியூ... நாம ரெண்டு பேரும் சேந்து..."

"இங்க நாமன்ற பேச்சுக்கே இடம் இல்ல. ஐ அம் எ மேரீட் மேன். ஐ ஹேவ் எ கமிடட் ரிலேஷன்ஷிப் வித் பத்மா"

"ஸோ வாட்? எனக்கும் தான் கல்யாணம் ஆயிக் கொழந்த இருக்கு. நம்மளோட லவ்வுனு வரும்போது இங்க எதுவுமே இம்பார்டன்ட் கெடயாது. நானும் நீயும்..."

"ஒன்ஸ் அகெய்ன் நாமங்குற வேர்ட யூஸ் பண்ணாத. நௌ தட் இஸ் மீனிங்லெஸ். உன்னோட மேரேஜ் லைஃப் வொர்க்அவுட் ஆகலைன்னா, நான் எதும் பண்ண முடியாது. யுவர் சாப்டர் இஸ் குளோஸுடு இன் மை புக். எனக்கு பத்மா இருக்கா"

"ஹ்ஹூம். அவத் தான் உன்னைச் சந்தேகப்பட்டு வேணாம்னு சொல்லிப் போய்ட்டாளே. அவளயா நம்புற?"

"நம்பிக்கையப் பத்தி நீ பேசுறியா? புல்ஷிட். அவ எங்கூட லைஃப்லாங் வரப் போறவ. அவளோட காதல் நேத்து மொளைச்சு, நாளைக்குச் சாகுற ரகம் இல்ல. காலாகாலத்துக்கும் ஆணி வேர் மாதிரி நிலைச்சுருக்கும். அவளப் பத்திப் பேசுற தகுதி உனக்கு இருக்கா மொத? ச்ச்ச, இப்டிலாம் பேசக் கூடாதுன்னு தான் கன்ட்ரோலா இருந்தேன். நீ ஹெல்ப்புன்னு வந்து கேட்ட; என்னால ஆன மட்டும் அடைக்கலம் தந்துட்டேன். இதுக்கு மேல நீ இங்கருந்தீனா, என் வாய் சும்மா இருக்காது. அசிங்கமா எதாச்சும் சொல்லிடுவேன். டோன்ட் மேக் மீ ஷேம் ஆன் யூ. நான் திட்றதுக்கு முன்னாடி, நீயாக் கெளம்பிட்றது நல்லது"

"விக்ரம்" அவள் நூலிழை இடைவெளியில் அவனை நெருங்கி வலிய தோளில் கரம் பதித்தாள்

அவளது கையை உதறிவிட்டுத் தள்ளி நின்றான் அவன் "டோன்ட் டச் மீ"

"விக்ரம், ப்ளீஸ். அன்டர்ஸ்டேன்ட்"

"வாட் த ஆக்சுவல் ஃபக்? கொஞ்சம் தூரமாத் தான் நில்லேன்"

அவளோ தன் கேடுகெட்ட எண்ணத்தில் பிடிவாதமாக இருந்தாள்; அவன் நகர நகர கருநிழல் போல தொடர்ந்தாள்; அவனின் கரங்களைப் பிடித்துக் காதல் பிச்சை கேட்டாள். அப்போது அவளின் தோளைப் பற்றி இழுத்துக் கன்னத்திலேயே அறை வைத்தாள் ஒருத்தி. அந்த ஒருவள் நிச்சயமாக பத்மா அல்லள். அவளாக இருந்திருந்தால் விக்ரமிற்குத் தான் அடியும் உதையும் விழுந்திருக்கும். மையிட்ட விழிப்பாவை வெளியே வந்து விழுந்து விடுமோ எனும் அளவு கோபத்தில் தெறிக்கும் கண்களைக் கொண்ட, இவள் மதுரேகா.

"அவரு தான் தொடாதன்னு சொல்றாரே. அறிவு மயிரு இல்ல"

"ஹௌ டேர் யூ? என் மேலக் கை வைக்க நீ யாரு?" ஜெனி ஆவேசமாகக் கையை ஓங்க, இடையில் வந்து நின்றது ஒரு ஆஜானுபாகுவான உருவம்

இந்நபருமே அவளின் மீதான எரிச்சலில் கொப்பளித்தபடி இருந்தான் "பொம்பளப் புள்ளையாச்சே; கை வைக்கக் கூடாதேன்னு பாக்குறேன். இன்னொரு முற கண்ணுலப் பட்ட, தொலச்சுக் கட்டிடுவேன். கெட் லாஸ்ட். போடிங்குறேன்ல"

இங்ஙனம் பொறிந்தவன் யாரெனக் கணித்திருப்பீர்களே. ஆம், நம் ராம்குமாரே தான். இவனது உக்கிரப் பார்வையை இதமாக மனதில் இருத்திக் கொண்ட ரேகா விக்ரமிடம் பேசலானாள்.

"வாட் இஸ் திஸ், அண்ணா? எதுக்கு என் ஃப்ரென்ட கஷ்டப்படுத்துறீங்க. ஷி இஸ் ஹோப்லெஸ். அவள நான் இப்டிப் பாத்ததே இல்ல. என்னாலயே இங்க நடக்குறதச் சகிச்சுக்க முடியல. உங்கள நம்பித் தான அவ வந்தா. இப்டிப் பண்ணிட்டீங்களே, ண்ணா. எதோ நடந்தது நடந்து போச்சு. பத்மாவ நான் இங்க வரவைக்குறேன். பாத்து வச்சுக்கங்க"

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே ஜெனி வெளியேறத் தயாராகி இருந்தாள். மற்றொரு கன்னத்திலும் அறை வாங்க அவள் ஆயத்தப்படவில்லை. அவளும் மகனும் அறையை முற்றாகக் காலி செய்த பின்னரே ரேகா அங்கிருந்து புறப்பட்டாள். இவள் இவ்விடம் வந்ததே ஜெனிக்கு ஒரு முடிவு கட்டத் தான். அத்தோழமைக் கடனை வெற்றிகரமாக முடித்தவள் பத்மாவிற்கு அலைபேசியில் தகவல் சொன்னவாறே நடந்தாள். அவளின் பின்னோடு ஒரு கள்ளப் பூனையும் தொடர்ந்து போனது. இவர்களின் கதையை அடுத்த அத்தியாயத்தில் கண்காணித்துக் கொள்வோம். இப்போது...

தோழி ஒரு வார்த்தை கூறியதும் பத்மா சிட்டாகப் பறந்து வந்திறங்கினாள். ஜெனி சென்றுவிட்டதை நேரிலே பார்த்து உறுதிபடுத்திக் கொண்ட போதிலும் அவளின் உள்ளக் கனல் குறைந்தபாடில்லை. இப்போதைக்கு விக்ரமுடன் தங்க மனம் ஒப்பாமல், திரும்பி விடுதிக்குப் போகும் நோக்கில் தன் பொருட்களை எடுத்து வைக்கலானாள். ஆளுயரக் கண்ணாடியில் இருந்த உடைமைகளைச் சுத்தப்படுத்திய தருணம், அவளுக்குள் ஓர் ஆர்வம் எழுந்தது. முன்னொரு தடவை உள்ளே பார்த்த 'ஜெ' வடிவ டாலர் கொண்ட தங்கச் செயினைத் தேடினாள். அது கிடைக்கும் முன்னரே பின்னிருந்து கணைப்பொலி வந்து அவளின் செவிப்பறைகளில் மோதியது.

"க்க்கும். என்ன தேடுதல்?"

"நத்திங்"

"ஓஹோ... அங்கருந்த செயின் எங்கப் போச்சுனு பாக்குறியா? அத ஏற்கனவே பாத்து வச்சுட்டியோ. சொல்லவே இல்ல"

"சொல்லி மட்டும் என்ன வரப் போவுதாம்?"

"டௌட்டே வேணாம். அந்தச் செயின் ஜெனியோடது. அவளோட திங்ஸ்ல என்ட்ட பேலன்ஸ் இருந்தது அது மட்டுந்தான். அதுவும் இப்ப அவளோடவே போய்டுச்சு. செலவுக்கு ஒத்த ரூபா கூட இல்லன்னு டிராமா பண்ணா. செயின வித்துப் பணமாக் குடுத்துட்டேன்"

"நல்ல விஷயம்" முகத்தை உர்ரென்று வைத்துக் கூறியவள் பெட்டிப் படுக்கையைக் கையிலெடுத்தாள்

"வேர் ஆர் யூ கோயிங், பேபி?"

"ஒன்னு என் வீட்டுக்குப் போவேன். இல்லனா, ஹாஸ்டல்லத் தங்கிப்பேன். இனிமே எனக்கிங்க என்ன வேல? மூந்நாளா நான் எங்குட்டுப் போய்த் தொலைஞ்சேன்னு அக்கற காட்டல. எவச் செத்தா எனக்கென்னன்னு தான இருந்தீக. அப்டியே இருந்துக்குடுங்க"

"இந்த வீட்டத் தாண்டி நீ எங்கயும் போகக் கூடாது"

"எனக்கு ரூல்ஸ் போட்றதுக்கு நீங்க யாரு?"

"உன் புருஷன்"

"அந்தப் பந்தம்லாம் சன்டேவே முடிஞ்சு போச்சு. எப்போ என்னை விட உங்க எக்ஸ் லவ்வரு முக்கியமாப் போய்ட்டாளோ; அப்பயோட நம்ம ரிலேஷன்ஷிப்புக்கு நீங்களே என்ட் கார்டு போட்டுட்டீங்க. எனக்கு மரியாத இல்லாத இடத்துல நான் எதுக்குக் கெடந்து அல்லாடிட்டு"

"ஜெனி தான் போய்ட்டாளே. இதுக்கு அப்றம் இந்தப் பக்கம் தல வச்சுக் கூட படுக்க மாட்டா. இன்னும் என்ன கோவம்?"

"ஒருவேள அவத் திரும்பி இன்னொரு நா வந்தா, இதே மாரி என்னைய வெளிய அனுப்ப மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? கடைசில, அந்த மோகனப் போலத் தான நீங்களும். பழய காதலி வந்துட்டா, புது பொண்டாட்டிலாம் வீதிக்குப் போவணுங்குறது விதி போல்ருக்கு. ஆம்பளப் புத்தி; அவசரப் புத்தி. நீங்களும் ஒரு சராசரி ஆண் தான்னு காட்டிட்டீங்க. ஒருத்தியோட மனசு எப்படியாப்பட்டதுங்குறதலாம் கணக்குலயே எடுத்துக்க மாட்டீங்க. பாக்குறதுக்கு லட்டு உருண்ட மாரி இருக்காளா; பேசுறப்ப வாழப்பழம் மாதிரி கொழயுறாளா; நம்ம தொட்டவொன்னே ஐஸ்கட்டியாட்டம் உருகுறாளா; இதெல்லாந்தான முக்கியம்?"

"..."

"அத்தான் நமக்கு இடயில எதுவுமே நடக்கல இல்ல. வேற எவளயாச்சும் பாத்துக் கட்டிக்கிட்டுக் குடும்பம் நடத்திக்கங்க. உங்களுக்கென்ன? உங்க அழகுக்கு ஆயிரம் பேரு லைன்ல வருவாளுங்க. நல்லா வச்சு வாழுங்க. டிவோர்ஸ் பேப்பர மட்டும் அப்பறமா அனுப்பி வையுங்க. கையெழுத்து போட்டுத் தாரேன். நமக்குள்ள எந்த மனஸ்தாபமும் வேண்டாம்"

"டிவோர்ஸ் தான வேணும். அனுப்புறேன், டி. அனுப்புறேன். இன்னமும் என்னத்த உருட்டிட்டு இருக்க? வெளியப் போ. கெளம்பு" அவன் கடுப்பில் அவளை ஒதுக்கித் தள்ளினான்

"என்னைத் தொடாதீங்க. எனக்கே போகத் தெரியும்"

"ஹே, ஒரு நிமிஷம் நில்லு"

"ம்ம்ம்?"

"அது என்னதது கழுத்துல?"

"என்னோட செயினு"

"இன்னொன்னு தொங்குதே"

"இதுவா? தா... தாலி"

"அதக் கழட்டி வச்சுட்டுப் போ"

"என்னத்துக்கு?"

"என்னையே வேணாம்னு சொல்லியாச்சு. இதுல வெறும் சங்கிலிய வச்சு என்ன பண்ணப் போறவ? கழட்டித் தந்துட்டுப் போய்ட்டே இரு. இங்க நிக்காத"

இந்தப் புண்சொற்களைக் கேட்டதும் நமது துடிப்பான, இளமையான, வீராவேசமிக்க, பெண்ணியவாத, புரட்சிவாத நாயகியின் உள்ளம் அடுப்பில் வைத்த சாம்பார் போல தளபுளவென்று கொதித்தது. அதன் உத்வேகத்தில் தாலியைக் காதோடு கழற்றினாள்.

என்னமா, இப்டிப் பண்றீங்களேமா!