• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 6

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
அந்நேரத்தில் உணவு பரிமாறப்பட பத்மப்பிரியா சற்றே அமைதி காத்தாள். பரிமாறுபவர் சென்ற பின்னர் பேச்சைத் தொடர்ந்தாள்.

“என்ன சொல்லிட்டு இருந்தேன். ஆன்... தம்மோ குடியோ உங்க உடம்பு, நீங்க எப்படி வேணாலும் கெடுத்துக்கலாம். அது என்னைப் பாதிக்காதவர, ஐ டோன்ட் கேர்... அப்றம், மேரேஜ் ஆனதும் ஜோடி போட்டுட்டு ஊர் சுத்துறதுலாம் என்கிட்ட ஆகாத கதை. ஐ நீட் சம் டைம்... அரேஞ்ஜ் மேரேஜ்ல அவ்ளோவா நம்பிக்க இல்லாம தான் இருந்தேன். அன்ஃபார்ச்சுனேட்லி எனக்கு லவ் எதுவும் செட் ஆகல. ஸோ, இத விட்டா வேற வழி தெரியல. கல்யாணம் ஆனாலும் எனக்கான ஸ்பேஸும் ப்ரைவசியும் நீங்க தரணும். புரியுதுங்களா? எனக்கு உண்மைய மறைக்கப் பிடிக்காது; மத்தவங்க மறைச்சாலும் புடிக்காது”

விக்ரம் பேச வாய் திறக்க அவனுக்கு வாய்ப்பு அளிக்காமல் “இருங்க, இருங்க... இதையும் சொல்லிட்றேன். டைம் வேணும்னு சொன்னேன் இல்ல. அது எதோ ஃப்யூ வீக்ஸ்னு நினைச்சுக்காதீங்க. மே பி மந்த்ஸ் கூட ஆகலாம்... இல்ல, ரௌண்டா ஒன் இயர்னு ஃபிக்ஸ் பண்ணிக்கங்க. எனக்கு அவ்ளோ டைம் வேணும்; ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்க. அதுவரைக்கும் டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணணும். ஐ மீன் ஃபிசிக்கல்... அந்த அளவுக்குப் பொறுமை இருந்தா மேலப் பேசலாம். இல்லைனா, டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. அப்டி ஒருவேள, ஒரு வருஷமாகியும் ரெண்டு பேரு கேரக்டருக்கும் செட் ஆகலன்னா மியூட்சுவலா பிரிஞ்சுரலாம். நான் இப்போ சொன்னது எல்லாத்தயும் மைன்ட்ல வச்சுட்டு நீங்க சொல்ல வேண்டியதச் சொல்லுங்க” என்று அவளே மீண்டும் பேசினாள்

உள்ளே நடப்பதைக் கண்ணாடிச் சுவர் வழியே ராமும் பிரபாகரனும் பார்த்துக் கொண்டிருந்தனர்

“என்னடா, அவப் பேசிக்கிட்டே போறா. இவன் பேசாம சைலன்ட்டா இருக்கான். அங்க என்ன நடக்குது?” என்று பிரபாகரன் குழப்பத்தில் கேட்க

“நாம நினைச்சதுக்குத் தலகீழா நடக்குது. அந்தப் பொண்ணு விக்ரமுக்கும் மேல இருப்பா போலவே. ஒருவேள அவளுக்கும் பாஸ்ட்ல எதாச்சும் நடந்துருக்குமோ; அதப் பத்தித் தான் பக்கம் பக்கமா பேசுறாளா? நம்மாளு கப்பு சிப்புன்னு ஆயிட்டான்” என யூகத்தில் கூறினான் ராம்

பத்மாவிற்கு உடனடியாக மறுமொழி கூறுவதைத் தவிர்த்த விக்ரம் “சாப்டுட்டே பேசலாமா?” என்று கேட்டு வைத்தான்

“ஓ, ஸாரி. சாப்புட்லாம், சாப்புட்லாமே” என்ற ப்ரியா உணவுண்ண எத்தனித்தாள்

அவள் நூடுல்ஸை ஃபோர்க்கில் சுற்றி உண்ண, விக்ரம் நாணைப் பிய்த்துப் பட்டாணி மசாலாவுடன் சாப்பிட்டான். உணவுண்டபடி இருவரும் ஒருவரையொருவர் சில நொடிகள் பார்த்தனர். அவன் பெரிதாக உடுத்துவதில் கவனம் செலுத்தியிருக்கவில்லை. கைக்குச் சிக்கிய டீ சர்ட்டை அணிந்து கொண்டு வந்திருந்தான். அதிலும் அழகாளனாகத் தான் தெரிந்தான். அவனது உடல்மொழி தோழமையாகவும் இல்லை; அச்சுறுத்தும் விதத்திலும் இல்லை. பேச்சு மென்மையாகவும் அதே நேரத்தில் கச்சிதமாகவும் இருந்தது. பார்வையில் ஒரு நெறி இருந்தது; கண்ணியம் வெளிப்படையாகத் தெரிந்தது.

அதையெல்லாம் மனதில் உள்வாங்கிக் கொண்டே வந்த ப்ரியா “சிக்கன் கிரேவி சாப்பிடலாம்ல. நாண்க்கு நல்லாருக்கும்” எனப் பரிந்துரைத்தாள்

“நான் நான்வெஜ் சாப்புட்றது இல்ல”

“சுத்தமா தொட மாட்டீங்களா? எப்போலருந்து இந்தப் பழக்கம்?”

“வெஜிடேரியன்க்கு மாறி நாலஞ்சு வருஷம் இருக்கும்”

“ஓ மை காட். எப்புடி உங்களால இப்டி இருக்க முடியுது. என்னாலலாம் முடியாதுப்பா... அச்சச்சோ, அப்போ இந்த பன்னீர் நூடுல்ஸ் உங்க அண்ணா உங்களுக்கு ஆர்டர் பண்ணதா? ஸாரி, ஸாரி, தெரியாம சாப்டுட்டேன்”

“பரவால்ல. இதுல என்ன இருக்கு? சாப்டு... நான் கொஞ்சமா தான் சாப்டுவேன்”

“முட்டை சாப்டுவீங்களா? இல்ல, அதும் கிடையாதா?”

“சாப்ட்றது இல்ல”

“அப்போ எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லயா?”

“அப்படி நான் சொல்ல வரல. நான்வெஜ் சாப்ட மாட்டேன். தம்மடிக்க மாட்டேன். ஆனா, சரக்கு மட்டும்; அப்பப்போ...”

“ம்ஹ்ம்ம்”

“மூட்ல இருந்தா, எப்போவாது குடிப்பேன். அடிக்கடி இல்ல”

“வேற?”

“வேற என்ன? உன்னோட கன்டிஷன்ஸ்லாம் எனக்கு ஓகே தான். சொல்லப் போனா, நான் எதலாம் சொல்லணும்னு நினைச்சனோ அத நீயே சொல்லிட்ட. ஐ ரியலி நீட் சம் டைம் ஆஃப்டர் மேரேஜ். தேங்க் காட், நீயும் அதையே தான் எக்ஸ்பெக்ட் பண்ணுற”

“யெஸ், சேம் ஃபீல் இல்ல...”

“நிச்சயமா. நீ சென் பர்சென்ட் உண்மையா இருக்கணும்னு நினைக்குற. நானும் அதைத் தான் விரும்புறேன். ஸோ, இங்கயே பேசி டிசைட் பண்ணிக்கலாம்” என்றவன் ஒரு பெருமூச்சோடு தன் கடந்த காலக் காதலைப் பற்றி ஆரம்பித்தான்

உணர்ச்சி வசத்தில் லேசாக மேசையைக் கை மூட்டால் தட்டியவன் “ஆக்சுவலி, காலேஜ் படிச்சுட்டு இருந்தப்ப... ஒரு பொண்ண லவ் பண்ணேன்” என்று சொன்னான்

“ஓகே...” என்று அவள் இயல்பாகவே கேட்கலானாள்

“என்னை வேணாம்னு சொல்லி விட்டுட்டுப் போயிட்டா. மேரேஜுக்குக் கூட இன்வைட் பண்ணிருந்தா. அதுக்கப்பறம் என்ன ஆனானு தெரியல; கான்டாக்ட் இல்ல”

“லவ் ஃபெயிலியர்னா ரொம்ப கஷ்டந்தான்”

“யா, த ஸ்ட்ரக்கில் வாஸ் ரியல். என்னால அந்த ஸ்ட்ரெஸ்ஸ ஹேன்டில் பண்ண முடியல. ஒரு டூ இயர்ஸ் போல, தேவதாஸ் மாதிரி சுத்தினு இருந்தேன். அப்புறம் கொஞ்ச கொஞ்சமா நார்மல் ஆயிட்டேன்”

“அவங்கள முழுசா மறந்துட்டீங்களா?”

“நோ. மறக்க முடியுமானு தெரியல. ஷி இஸ் எ பார்ட் ஆஃப் மை காலேஜ் லைஃப். மனச விட்டு மொத்தமா தூக்கி எறிய முடியல. அவ ஏற்படுத்துன காயம் ஒரு ஓரத்துல அப்டியே இருக்கு. பட், அவ என் லைஃப்ல இனிமே இல்லங்குறத முழுசா புரிஞ்சுக்கிட்டேன். அவளோட மெமரீஸ் இப்போ அவ்வளவா என்னை அஃபெக்ட் பண்ணுறது இல்ல. ஐ அம் ரெடி ஃபார் த நெக்ஸ்ட் ஸ்டெப். மேரேஜ் பண்ணிக்குற பொண்ணாவது லைஃப் பூரா வரணும்னு ஆசைப்படுறேன். ஸோ, தட்’ஸ் இட்”

“எத்தன வருஷம் லவ் பண்ணீங்க?”

“இங்க சி. ஐ. டி. ல படிச்சப்போ ஆரம்பிச்சு, ஒரு ஃபைவ் இயர்ஸ்”

“ப்ரேக்அப் ஆகி எத்தன வருஷம் ஆகுது?”

“ம்ம்ம்... நாலு, ஐஞ்சு, ஆறு இருக்கும்”

“வாட்? சிக்ஸ்... சிக்ஸ் இயர்ஸா?”

“யெப்...”

“இத்தன வருஷமா வருத்தப்பட்டுட்டு இருந்தீங்களா? மனுஷனுக்கு இவ்ளோ ஃபீலிங்க்ஸ் ஆகாதுங்க”

“என்ன பண்ணுறது? நாம சொல்றத மனசு கேக்க மாட்டேங்குதே. சீ, உன்னோட பாஸ்ட்ட பத்தி எனக்குக் கவல இல்ல. நான் என்ன நம்பி வர பொண்ண ஏமாத்தக் கூடாதுனு நினைக்குறேன். அதனால தான் முன்னவே சொல்லிட்டேன். இதுக்கு நீ என்ன ரியாக்ட் பண்ணாலும் நான் ஏத்துக்குறேன்”

“எனக்குலாம் இது செட் ஆகாதுப்பா. நான்னு இல்ல; இப்டி நீங்க விழுந்து விழுந்து லவ் பண்ண கதையச் சொன்னா, எவ உங்களக் கட்டிப்பா? கடைசி வர சிங்கிள் தான், போங்க”

“வாட்எவர்... எத்தன பேரு ரிஜெக்ட் பண்ணாலும் எனக்குக் கவல இல்ல. நான் இப்போ சொன்னதுதான் நடந்த உண்மை. இதத் தெரிஞ்சுட்டு யாரு மேரேஜ் பண்ண ஒத்துக்குறாங்களோ... சரி, இதெல்லாம் உங்கள்ட்ட எதுக்குச் சொல்லிட்டு? வாங்கப் போவோம். வெளில வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க”

“உக்காருங்க, என்ன அவசரம்? லவ் மட்டுந்தானா, இல்ல...”

“ஏன் கேக்குறீங்க?”

“இல்ல, இந்த உருகு உருகுறீங்களே... உங்களுக்குச் சொல்லணும்னு தோணுச்சுனா சொல்லலாம். அதுக்காக இதையே சாக்கா வச்சுட்டு என் காலேஜ் கதையலாம் நீங்க கிளறக் கூடாது”

“இல்லல்ல, நான் எதையும் கிளறல. அதான் பிடிக்கலனு சொல்லாம சொல்லிட்டீங்களே. இன்னும் உங்களுக்கு எதுக்கு என் சோகக் கதை?”

“உங்க கதைய ஒரு வரி வுடாம எழுதிப் படமா எடுக்கலாம்னு தான். அட, சும்மா சொல்லுங்களேன்”

“உங்கள்ட்ட எப்டிங்க சொல்லுறது?”

“உங்கள மேரேஜ் பண்ணிக்க ஒரு பொண்ணு சம்மதம் சொல்றான்னே வச்சுக்கோங்களேன். அவக்கிட்ட இன்னும் என்னலாம் பேசுவீங்களோ, அப்டியே பேசுங்க. உங்களுக்கும் ஒரு ட்ரையல் பாத்த மாதிரி இருக்கும்ல”

“சரி, ஓகே. ஆசைப்பட்டுக் கேக்குறீங்க... இது தான் நான் கடைசியா பொண்ணு பாக்க வரதா இருக்கும்ணு நினைக்குறேன். உங்களப் பாத்து என் ஸ்டோரியச் சொல்லுறதுக்கே அவ்ளோ தயக்கமா இருக்கு. இனிமே, எந்தப் பொண்ணா இருந்தாலும் ஃபோன்லயே டீல் பண்ணிக்குறேன்... ஸ்டார்டிங்ல இந்த டாப்பிக்க எடுக்கும்போது அன்கம்ஃபர்ட்டபுளா இருந்துச்சு. இப்போ தான் என்னை வேணாம்னு சொல்லியாச்சுல்ல. இதுக்கு மேல நாம ஃப்ரீயா பேசலாம். பட், டோன்ட் ஜட்ஜ் மீ...”

“நெவர் எவர்”

“பி. இ. படிக்குறப்போ ஃபுல்லா நாங்க லவ் பண்ணோம். நான் டைரெக்ட் செகன்ட் இயர். எனக்கு கோர்ஸே மூணு வருஷந்தான். ஆனா, அவளோட இருக்கணுங்கறதுக்காகவே அவ ஃபைனல் செமஸ்டர் முடிக்குறவர அரியர்ஸ் க்ளியர் பண்ணாம வச்சுருந்தேன். அவ டக்குனு பாஸ் பண்ணி எனக்கு முன்ன கேம்பஸ்ல செலக்ட் ஆயிட்டா. நானும் உடனே முட்டி மோதி பாஸ் ஆகி, இந்த ஊர்லயே ஒரு வேலைல ஜாய்ன் பண்ணேன். ஜெனிஃபருக்கு கோவைல த்ரீ மந்த்ஸ் ட்ரெயினிங் போட்ருந்தாங்க. அப்போ லிவ் இன் ரிலேஷன்ஷிப்ல கூட இருந்தோம். அப்றம் அவ சென்னை போயிட்டா. நானும் ஹார்ட்வொர்க் பண்ணி ஒருவழியா சென்னைக்கு ட்ரான்ஸ்பராகிப் போனேன். அதுக்குள்ள அவ ஆன்சைட்டுக்கு கனடா போயிட்டா”

“லிவ் இன்ல இருந்தீங்களா... அப்றம் ப்ரேக்அப் எப்புடி ஆனுச்சு?”

“அவ கனடாலயே ஒரு இந்தியன் சி. டி. ஓ. வப் பாத்து கமிட் ஆகிட்டா. கடைசியா, ஃபோன்ல சொன்னா... ஐ’ம் ஸாரி டு சே திஸ்; நீ என் ரேஞ்சுக்கு வர ட்ரை பண்ணவே மாட்ற; நான் நினைக்குற வாழ்க்கைய உன்னாலத் தர முடியாது; லெட்’ஸ் ப்ரேக்அப்... அடுத்து ஒரு மாசத்துலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டா. அப்றந்தான் தெரிஞ்சுது, என்னிட்ட ப்ரேக்அப் சொல்லுறதுக்கு முன்னாடியே அவளுக்கு எங்கேஜ்மென்ட் ஆயிடுச்சுனு. நிச்சயத்துக்கு அப்றம் கூட என்னோட சகஜமாப் பேசிட்டு இருந்துருக்கா. நான் அப்போ அந்தளவுக்குக் கூமுட்டையா இருந்துருக்கேன்”

“அடப் பாவத்த”

“அவ்ளோ தாங்க, என் கத. இப்போ கிளம்பலாமா? இதுக்கு மேல ஷேர் பண்ணா அபத்தம்”

“விக்ரம், தப்பு உங்க மேல இல்ல. இந்த பிரேக்அப்புக்குக் காரணம் நீங்க இல்ல. அத ரியலைஸ் பண்றீங்களா?”

“இருந்தாலும் நான் இன்னும் கொஞ்சம் புஷ் பண்ணிருக்கணும்னு தோணுதுங்க. ஒழுங்கா ஸ்கோர் பண்ணி கேம்பஸ்ல செலக்ட் ஆயிருந்தா இதெல்லாம் தேவையா சொல்லுங்க?”

“அந்தப் பொண்ணு செஞ்சத நியாயம்னு சொல்றீங்களா?”

“அவ செல்ஃபிஷ் தான். அதுல மாற்றுக்கருத்தே இல்ல. ஆனா, அவ என்னை விட்டு விலகி விலகிப் போறத நான் உணரவே இல்ல. கேர்லெஸ்ஸா இருந்துட்டேன்”

“கேர்லெஸ்னு சொல்ல முடியாது. நீங்க ரொம்ப நம்பிக்கை வச்சுருந்தீங்க. அவளுக்கு அதக் காப்பாத்திக்கத் தெரியல”

“ஹ்ஹ்ம்ம்... இனிமே அதப் பத்திப் பேசி என்னாகப் போகுது. கதம் கதம். முடிஞ்சது முடிஞ்சு போச்சு” என்ற விக்ரம் புன்னகைக்க முயன்றான்

பத்மப்பிரியா குனிந்து கொண்டே “நான் முடிவு பண்ணிட்டேன். நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று கூறிட, புன்னகை மறைந்து குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டான் அவன்

சரியா இது தவறா!