• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீட்சி 7

Ezhilmathi GS

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 24, 2025
47
0
6
Tamilnadu
ஒரு நொடி திடுக்கிட்டவனாய் விக்ரம் “என்ன?” என்று வினவிட்டான்

பத்மா டிஷ்யூவில் கையைத் துடைத்துக் கொண்டே “என்ன என்ன?” என்று விழிகளை நோக்கிக் கேட்டாள்

“இப்போ என்ன சொன்னனு கேட்டேன்”

“காதுல விழலயா? கல்யாணம் பண்ணிப்போம்னு சொன்னேன். உங்களுக்கு விருப்பம் இருந்தா...”

“என் விருப்பத்த விடு. நீ எப்டி ஓகே பண்ண?”

“எப்படினா என்ன சொல்றது? ஐ லைக் யுவர் ஹானஸ்டி”

“தென்?”

“நீங்களே தான் சொன்னீங்க; நடந்து முடிஞ்சது உங்கள அந்தளவு அஃபெக்ட் பண்ணலனு. பழசலாம் தூக்கிப் போட்டுட்டு, லெட்’ஸ் ஸ்டார்ட் எ நியூ லைஃப்”

“நான் சொன்னத முழுசா கேட்டியா?”

“நான் சொன்னத நீங்க மொதல்ல முழுசா கவனிச்சீங்களா?”

“ம்ம்ம், அந்த ஒன் இயர் டைம், ப்ரைவசி, ஸ்பேஸ் அன்ட் யுவர் கரியர்; அத்தான. அதெல்லாம் ஃபைன்...”

“அதே போல தான்; உங்க எக்ஸ், ப்ரேக்அப், அப்றம் அந்த லிவ் இன் ஸ்டோரி; எல்லாம் நல்லாவே கேட்டுச்சு. எத்தனை பேரு கல்யாணம் வரைக்கும் வேற ஒரு பொண்ணத் தொடாம இருக்காங்க. யாரும் இங்க உத்தமன் கெடயாது. உங்க எக்ஸ் லவ்வர் கன்சன்ட் தந்ததாலத் தான ஒன்னா இருந்தீங்க. இதுலாம் முக்காவாசி பேரு பண்றது தான். நீங்க முன்னாடியே சொல்லுறது எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு. வி குட் மூவ் ஃபர்தர்”

“ஆர் யூ ஷ்யூர்?”

“நான் ஷ்யூரா தான் இருக்கேன். நீங்க வேணா யோசிச்சு முடிவெடுங்க. இதுக்கு மேல டிசிஷன் எடுக்குறது உங்க கைல இருக்கு. சரின்னா வீட்டுக்கு வந்து பேசுங்க. இல்லைனா, நானே புரிஞ்சுக்கிறேன்” என்றவள் அத்துடன் எழுந்து கொண்டாள்

நேராக முன்னே சென்றவள் “பில் தாங்க” என்று கவுண்டரில் கேட்டிட, விக்ரம் அவசரமாக பாக்கெட்டில் கையை விட்டான்

அதில் பர்ஸ் இல்லை. சொல்லப் போனால் அவன் பணமேதும் எடுத்து வரவேயில்லை. இப்போது அவன் பிரபாகரனைத் தேடி வெளியே பார்வையை வீச, தமையனும் தோழனும் சாலையைப் பார்த்து ஏதோ தீவிரமாக உரையாடியபடி இருந்தனர். அவர்களை எப்படி அழைப்பது என அவன் யோசித்துக் கொண்டிருக்கையிலே பத்மா அவர்கள் உண்டதற்கான பணத்தைச் செலுத்தியிருந்தாள்.

“ஏன்?” என்று விக்ரம் இயலாமையில் கேட்க

“ஒன்னும் பிரச்சனை இல்ல. நெக்ஸ்ட் டைம் நீங்க பே பண்ணிக்கங்க” என்றாள் அவள் புன்னகையுடன்

அவனை ஏற்றுக் கொண்டதை அவளது பதில்மொழி மீண்டும் உறுதிப்படுத்த அவனும் முறுவலித்தான்

“என் மொபைல்... அச்சோ, டேபிள்ளயே மறந்து வச்சுட்டேன்” என்றவள் அதை எடுக்கச் சென்று திரும்பினாள்

அதற்குள் அவளுக்காக உணவகத்தின் கதவைத் திறந்து பிடித்த விக்ரம், அவளை முன்னே போகவிட்டுப் பின்னால் வந்தான். அந்த இடைவெளியில் ப்ரியா மதுவிற்கு ஒரு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டாள்.

இப்போது அவனை ஏறெடுத்துப் பார்த்தவள் “தேங்க் யூ” என்றாள் மென்னகையுடன்

“எதுக்கு?”

“ம்ம்ம், நீங்க கதவத் தொறந்து விட்டதுக்கு... எதுக்கு தேங்க்ஸ் சொல்லுவாங்க? இந்த மீட்டிங் நல்லாருந்துச்சு. இட் வாஸ் எ நைஸ் டேட்”

“இத விட பெட்டரா பண்ணிருக்கலாம். பில் கூட நான் கட்டல. ரொம்ப நெர்வஸாகிட்டேன்” என்று அவன் சொல்லும் போது மது வந்து சேர்ந்திருந்தாள்

“எனக்கும் உள்ள வர்ற வர அப்டித்தான் இருந்துச்சு. உங்க கூடப் பேச பேச சகஜமாயிட்டேன். என் ஃப்ரெண்டு வந்துட்டாங்க. நான் வரேன். பை” என்று கூறி பத்மா புறப்பட்டாள்

“பை பை...” என்று அவன் கையசைக்க

பிரபாகரன் முன்னே வந்து “வாங்க, கார்லயே டிராப் பண்ணிட்றோம். விக்ரம், சொல்லு...” எனப் பிரயத்தனப்பட்டான்

“வேணாம், பிரதர். நாங்களே போய்க்குவோம். சீ யூ லேட்டர்” என்று பதிலுரைத்தாள் பத்மா

“பாத்துப் போங்க. ரீச் ஆய்ட்டு ஒரு மெசெஜ் பண்ணுங்க, ப்ரியா” என்று பிரபா கூறிட

“கண்டிப்பா பண்றேன்” என்றவள் ஒரு புன்னகையுடன் விடைபெற்றாள்

நான்கு அடிகள் எடுத்து வைத்தப் பின்னர் “அதுல யாருடி மாப்ள?” என மது வினவிட்டாள்

“மெரூன் டீசர்ட் போட்டுருந்தாங்கள்ல அவர் தான். கூட இருந்தது அவங்க அண்ணன்”

“இன்னொருத்தன் கார்கிட்ட நின்னானே அவன்...”

“தெரில. அவங்களுக்குத் தெரிஞ்சவனா இருப்பான்”

“தெரிஞ்சவன் தான்டி. பின்ன, அவனப் பாத்தா டிரைவர் மாதிரியா தெரியுது? ஃப்ரென்டா, ரிலேஷனானு கேட்டேன்”

“அவன் யாரா இருந்தா என்னடி? அது இப்போ ரொம்ப முக்கியமா?”

“சரி, போன காரியம் என்னாச்சு?”

“நான் ஓகே சொல்லிட்டேன். நல்லப் பையன் தான்...”

“என்ன இழுக்குற? மறைக்காமச் சொல்லு”

“கொஞ்சம் குடிப்பழக்கம் இருக்கும் போல”

“குடிப்பானா?”

“ஏன்டி, குடிக்குறது ஒரு உலக மகா அதிசயமா?”

“ஓஹோ, வேற என்ன பழக்கம்லாம் இருக்காம்?”

“ஒரு எக்ஸ் இருக்காளாம்; ஜெனி...”

“என்ன விளையாட்றியா, பத்மா? இவனுக்கு ஏன்டி சம்மதம் சொன்ன?”

“எனக்கு அதுலாம் ஒரு பெரிய விஷயமா தெரியல”

“தெரியாதுமா, உனக்குத் தெரியவே தெரியாது. இதுலாம் ரொம்ப ரொம்ப சின்ன விஷயம் பாரு. இல்ல, நான் தெரியாமத் தான் கேக்குறேன். நீ முன்ன பின்ன குடிச்சிருக்கியா?”

“இல்ல”

“யாரயாச்சும் லவ் பண்ணிருக்கியா?”

“என்ன மது தெரியாத மாதிரி கேக்குற? லவ் பண்ணிருந்தா நான் ஏன் அரேஞ்ச் மேரேஜ் பண்ணப் போறேன்”

“கேட்ட கேள்விக்குப் பதில மட்டும் சொல்லு”

“இல்ல, லவ் பண்ணதில்ல”

“அப்புறம், உனக்கேத்த மாதிரி பையனா பாக்க வேண்டியது தான. இவனோட பழைய காதல் கதைய லைஃப் ஃபுல்லா கேட்டுட்டு இருக்கப் போறியா?”

“ம்ம்மா, மது... முப்பது வயசு வர எவன்மா லவ் பண்ணாம உக்காந்துருப்பான். அப்டி பொண்ணுங்கள நான் ஏறெடுத்தே பாத்ததில்லனு ஒருத்தன் சொன்னான்னா, ஒன்னு அவன் பொய் சொல்றவனா இருக்கணும்; இல்ல, கேயா இருக்கணும்”

“ம்ச்ச்”

“முறைக்காத... அவன் உண்மையா இருக்கான். எனக்கு அதான் முக்கியம். என்னால இவன மேனேஜ் பண்ணிக்க முடியுங்குற நம்பிக்கை இருக்கு. மோர்ஓவர், என் கன்டிஷன்ஸ அவனும் அவ்ளோ ஈசியா ஏத்துக்கிட்டான். இதே மாரி இன்னொருத்தன் கிடைப்பானாங்குறது டவுட்டுத் தான். எவன் கட்டுனப் பொண்டாட்டிய ஒரு வருஷம் வரைக்கும் தொடாம இருப்பான்?”

“எவனும் இருக்க மாட்டான்டி. இவனும் அப்டி இருக்கப் போறதில்ல. எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி மண்டைய மண்டைய ஆட்றது தான். கல்யாணம் ஆச்சு, இந்தப் பசங்க ஒரு மாசம் கூடத் தாக்குப்பிடிக்காதுக. அதலாம் கூட விடு. இந்தக் கதை உங்க வீட்டுலத் தெரிஞ்சா, ஒத்துப்பாங்களா மொத?”

“தெரிஞ்சா தான... இதப் பத்தி நீயும் சொல்ல மாட்ட; நானும் வாயத் திறக்கப் போறதில்ல. இன்னைக்கு நடந்தத இப்பவே மறந்துடு. நீ என் பெஸ்ட் ஃபிரெண்டு இல்ல; போட்டுக் கொடுத்துடாத” என்ற ப்ரியா தோழியின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சிவிட்டுத் துள்ளலாக ஓட

“பைத்தியமே, நான் சொல்லுறதக் கேளுடி” என விடாமல் துரத்தினாள் மதுரேகா

வீட்டிற்குச் சென்று அரைமணி நேரமாகியும் வாயை இறுக்கிக் கட்டினாற்போல் அமைதியாக இருந்தான் விக்ரம். அவனே நடந்ததைப் பற்றிக் கூறட்டும் என பிரபா காத்திருந்தான். நண்பனிடம் ஏச்சு வாங்கினாலும் பரவாயில்லை என்று ராம்குமாரே விசாரணையைத் தொடங்கினான்.

“ஏன்டா பேயறைஞ்ச மாறி இருக்க? என்ன ஆச்சு? என்ன தான் பேசுனீங்க?”

“கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னாடா”

“அவளே சொன்னாளா; சூப்பரு. அப்போ, நீ உன் லவ் மேட்டரப் பத்திச் சொல்லலயா?”

“சொன்னனே”

“காலேஜ் டேஸ்ல லவ் பண்ணது; இப்போ மறந்துட்டேன்னு சொல்லிருப்பான். அதான், பரவால்லனு விட்டுருப்பா போல”

“இல்லடா, எல்லாத்தயுமே சொன்னேன்”

“எல்லாமேனா?”

“எல்லாந்தான்”

“நீயும் ஜெனியும் தனியா ரூம் எடுத்துத் தங்கி...”

“ம்ம்ம்ம்”

“அடப்பாவி, அத ஏன்டா சொன்ன?” என்று பதறினான் ராம்

பிரபா நிதானமாக “அதச் சொல்லியுமா அவ பேக் அடிக்கல” என்று வினவினான்

“இல்ல, என் பாஸ்ட் என்னனு தெரிஞ்சதுக்கப்புறந்தான் இன்னும் ஸ்ட்ராங்கா நிக்குறா” என்று நகத்தைக் கடித்தவாறு விக்ரம் பதிலுரைத்தான்

சந்தேகத்துடன் ராம் “அவளும் யாரயாச்சும் லவ் பண்ணி ஏமாந்துருப்பா; அதான் உன் கஷ்டம் புரிஞ்சுருக்கும். ரைட்டா?” என்றிட்டான்

“இல்லயே. அவப் பேசும் போது சொன்னாளே; லவ்வே செட் ஆகலைனு. அதனாலத் தான் அரேஞ்ஜ் மேரேஜ் பண்ணுற மாரி ஆய்டுச்சுனு கூட ஃபீல் பண்ணாளே”

“ஒருவேள உன்கிட்டச் சொல்லலயோ என்னமோ”

“ஆர். கே. அவ லவ் பண்ணிருந்தாலும் எனக்குப் பிரச்சனை இல்ல. நான் மட்டும் ரொம்ப ஒழுங்கா? இவ்ளோ தூரம் அவ இறங்கி வந்ததே பெருசு” என விக்ரம் பேசிட

“அப்பறம் என்னடா? இது நல்லச் சேதி தான; சந்தோஷமா இரு. நான் வீட்டுலப் பேசுறேன். இந்த வாரமே போய்ப் பாத்து முடிச்சுட்டு வந்துரலாம்” என்று சொன்னான் பிரபாகரன்

“அதில்ல, ணா. எப்படியும் ரிஜெக்ட் ஆய்டுவேன்னு நம்பிட்டுப் போனேனா, இப்போ சட்டனா மேரேஜ்னதும் யோசனையா இருக்கு”

அதைக் கேட்டு “கிழிஞ்சது கத” என்றபடி தலையில் கைவைத்துக் கொண்டான் ராம்

“இது தான்டா கல்யாண வயசு. பண்ணிக்க... போக போக சரியாய்டும். இல்லனா, நான் வேறப் பொண்ணு பாக்கட்டா?” என்று தமையன் வினவ

“வேணாம், வேணாம். ப்ரியாவயே பாரு. அவளுக்கு ஒரு குறையும் இல்ல. ஃபால்ட் எல்லாம் என் பக்கம் இருக்கு” என்று சொன்னவனின் குரலில் சோகம் தொனித்தது

“அப்டிலாம் பேசாத, இவனே. நீ தங்கம், மச்சான். கல்யாணம் பண்ணிட்டு ஹேப்பியா இருப்ப” என்று மனதாரச் சொன்னான் ராம்குமார்

சுடுவெயில் வேளையில் கல்லூரியின் சிற்றுண்டி உணவகத்தின் பின்னே விக்ரமும் ஜெனியும் நின்றிருந்தனர். அவர்களுக்கு மட்டும் அந்த வெப்பம் பனிச்சாரலைப் போல இதமாக இருந்தது போலும். இருவரும் வாய்மொழியால் எதுவும் பேசிக் கொள்ளவில்லை; கண்களின் வழியே உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. விக்ரம் காதல் இதயத்தோடு அவளின் கரத்தைப் பற்றி ஊஞ்சலாட்டினான்; காற்றடித்து முகத்தில் வந்து விழும் முடிக்கற்றையை ஒதுக்கி விட்டான்.

அத்தருணம் தோன்றிய புது உத்வேகத்தில் விக்ரம் அவளை மேலும் நெருங்க, எதிர்பாராத விதமாக ராம்குமார் அங்கு வந்து நின்றான். அவனைக் கண்டதும் ஜெனிஃபர் சட்டென விலகிச் சென்றுவிட்டாள். ராமும் விக்ரமைப் போலவே டிப்ளமோ முடித்துவிட்டு, நேரடியாக இரண்டாம் ஆண்டு படிப்பில் சேர்ந்தவன். அதனாலேயே இருவருக்கும் நல்லப் பழக்கம். ராம் ஈ. சி. இ. துறையைச் சார்ந்தவன்; ஜெனிக்கு நேரடி சீனியர்.

ஜெனி சென்று மறைந்த பின் “என்ன, விக்ரம்? ஸ்டாஃப் யாராவது பாத்தா என்னாகுறது? கேர்ஃபுல்லா இருடா. இன்னும் தேர்ட் இயரே தாண்டல. ஃபைனல்ல கை வச்சுடப் போறாங்க” என வெளிப்படையாக எச்சரித்தான் ராம்

“பாத்துக்கலாம் விடு, ஆர். கே. பஜ்ஜி சாப்ட்றியா? வா, வாங்கித் தரேன்” என்று விக்ரம் உற்சாகமாக அழைக்க, அவனோ ஒரு அடி கூட முன்னால் எடுத்து வைக்கவில்லை

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ!