“மச்சான், நீ என்னைத் தப்பா நினைச்சாலும் பரவால்ல. ஜெனி சரியில்லடா... யாருக்கும் தெரியாம உன் கூட கொஞ்சிக் கொலாவுறா. ஆனா, டிபார்ட்மென்ட்ல யார் கேட்டாலும் அவளுக்கும் உனக்கும் வெறும் ஜூனியர் சீனியர் உறவுன்னு சொல்லி வச்சிருக்காடா”
“அதுக்குனு பாக்குறவங்க எல்லார்ட்டயும் நாங்க லவ் பண்ணுறோம்னா சொல்லிட்டு இருக்க முடியும்; என்ன சொல்ற ஆர். கே.? புரிஞ்சு தான் பேசுறியா?”
“சீனியர்னு சொன்னா பரவால்ல, விட்ரலாம். உன்னை அவ மத்தவங்க கிட்ட அண்ணாங்குறாடா. லவ் பண்ணுற பையன யாராவது அப்படிக் கூப்டுவாங்களா?”
“நான் நினைக்குறேன்; உனக்கு இது தேவயில்லாத வேல... இதுல நீ தலயிடாம இருக்குறதே நல்லது, ஆர். கே.”
“விக்ர...”
“ஜெனியப் பத்தித் தப்பாப் பேசுறதா இருந்தா, இனி வாயவே திறக்காத. டோன்ட் வேஸ்ட் யுவர் டைம்”
“ஒரு நிமி...”
“இதோட நம்ம ஃபிரெண்ட்ஷிப் கட்ரா. என் மூஞ்சுலயே முழிக்காத” என்று விக்ரம் கோப முகங்காட்டினான்
ராம் அதற்கு மேல் பேசி உபயோகமில்லை என விலகிச் சென்றுவிட்டான். அன்று அவர்களின் நட்புக்கிடையே விழுந்த விரிசல் சில ஆண்டுகள் வரை நீடித்தது.
மோகனுக்கும் அக்ஷதாவுக்கும் திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டு, அதற்கு முந்தைய தினம் பொள்ளாச்சியில் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்ஷதா முன்னரே மேடைக்கு வந்து நீண்ட நேரமாகத் தனியாக நின்றிருந்தாள். அதனால், மோகனைச் சென்று அழைத்து வருமாறு சுந்தரம் பத்மப்பிரியாவை அனுப்பினார். அவள் மணமகன் அறைக்குள் செல்ல அங்கு ஆள் அரவத்தைக் காணவில்லை.
“மாமா... மாமா...” என்று அழைத்தபடி அவள் உள்ளே நடந்தாள்
அங்கே கண்ணாடி மேசையின் மீது சிகரெட் பாக்கெட்டும் லைட்டரும் இருக்க, அவை யாருடையதாய் இருக்கும் என்ற நோக்கத்தில் உற்றுப் பார்த்தாள். அப்போது கழிப்பறை கதவைத் திறந்து கொண்டு மோகன் வெளியே வந்தான்.
இவள் மேசையை நோக்கியவாறே “மாமா, உங்கள ஸ்டேஜுக்குக் கூப்ட்றாங்க. சீக்ரம் போங்க” என்று சொல்லிட
“உன்னைப் பத்தி இப்போ தான் நினைச்சுட்டே இருந்தேன், பத்மா. இந்த டிரெஸ்ல நீ உன் அக்காவ விட அழகா தெரியுற” என்றான் அவன் சம்பந்தமில்லாமல்
அவனின் நாட்டம் புரியாமல் “காமெடி பண்ணாதீங்க, மாமா” என்று கூறி அவள் நிமிர்ந்து பார்த்தாள்
எதிரே கைக்கெட்டும் தொலைவில் நின்றிருந்தவன் “உண்மையத் தான் சொல்றேன். செம்மையா இருக்க...” என்று சொல்லும் போதே வாயிலிருந்து புகைவாடை வந்தது
உடனே அவள் காற்றினில் கரத்தை வீசி நாற்றத்தைப் போக்க “ஸ்மெல் அடிக்குதா?” என்று கேட்டபடியே அவன் மீண்டும் கழிப்பறைக்குச் சென்றான்
வாயில் ஃபிரெஷனர் ஊற்றிக் கொப்பளித்தவன் “இப்போ ஸ்மெல் போய்டுச்சா?” என்று வினவி முகத்தில் ஊதினான்
“ம்ம்ம் ம்ம்... அது என்ன கெட்ட நாத்தம்? இந்த தம்மு யாரோடது, மாமா?”
“எனக்கு அந்தப் பழக்கலாம் இல்ல; அப்டினு சொல்ல மாட்டேன். வேற யாருது? என்னோடது தான்”
“உங்களுக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் இல்ல; டீடோட்டலர்னு சொன்னாங்க”
“ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவாங்க; எல்லாத்தயும் நம்புவியா?”
“இந்த விஷயம் அக்காக்குத் தெரியுமா?”
“ஏன் உங்க அப்பாக்கே தெரியுமே”
“அப்பாவுக்கா... அவருக்கு தம்மு, தண்ணி போட்றவங்களப் பாத்தா சுத்தமா புடிக்காதே”
“ஆஹான்... யார் எது சொன்னாலும் நம்பிட்றது. அப்பாவி பொண்ணே, உங்கப்பாவே குடிப்பாரு. அது உனக்குத் தெரியுமா?”
“இல்ல, நான் நம்ப மாட்டேன்”
“அவரு குடிக்குறது அத்தைக்கே தெரியாது. அப்றம் எப்டி உனக்குத் தெரியும். அவரு மறைச்சு வச்சுருந்த சரக்கத் தான் நான் பாத்துட்டனே. இது எங்களுக்குள்ள இருக்குற சீக்ரெட். வெளியச் சொல்லக் கூடாது...”
“இருங்க, உங்க சிகரெட் சீக்ரெட்ட என் அம்மாட்ட சொல்லுறேன்”
“ஓ, அவ்ளோ தைரியமா உனக்கு? ஏன் சொல்லேன் பாப்போம். என்ன பண்ணிடுவாங்க?”
“நான் மொதச் சொல்லுறேன். அப்றம் தெரியும்...”
“ப்ரியாமா, வெளிய இதப் பத்தி மூச்சு வுட்டனு வையேன். உன்னக் கண்டம் பண்ணிடுவேன்”
“என்ன மிரட்டலா? இதுக்குலாம் நான் பயப்பட மாட்டேன்”
“ப்ரியாமா, நான் என்ன சொன்னாலும் உங்க வீட்டுல நம்புவாங்க. என்ன சொன்னாலும்... இந்த சிகரெட் பாக்கெட்ட இங்க எடுத்துட்டு வந்து வச்சதே நீ தான்னு நான் சொன்னேன்னு வையேன்; மொக்க ரீசனா இருக்குல்ல; இரு, வேற யோசிக்குறேன். இப்டிச் சொல்லிப் பாக்கலாமா? உனக்கு என் மேல தீராத ஆசை; அதனால நேரா ரூம்குள்ள வந்து, மாமா என்னைக் கல்யாணம் பண்ணிக்கங்கனு கட்டிப்புடிச்சுக் கதறுனனு சொல்லுறேன். உன் மேலத் தான் பழி விழும். எப்படி வசதி?” என அவன் வெட்கமேயின்றி புருவத்தை உயர்த்தி வினவினான்
அந்நேரம் வேறொரு உறவினர் அவனை அழைக்க வர, பத்மா வாய் பேசா ஊமையாகி நின்றாள்
அவளின் மனத்தில் ‘அப்பாவும் அம்மாவும் நான் சொன்னா எதயும் நம்பப் போறதில்ல. ஒருவேள, இவன் சொல்லுறதக் கேட்டு இந்தப் பைத்தியத்த நம்ம தலைலக் கட்டி வச்சுட்டாங்கன்னா! லைஃபே பாழாய்டுமே. இவனைக் கட்டிக்கிட்டா நம்ம அக்கா வாழ்க்க வேற நாசமா போய்டுமே. இப்போ என்ன பண்றது?’ என்று தீவிரமாகச் சிந்தித்தாள்
வரவேற்பு நடந்து முடியும் வரை இதைப் பற்றியே யோசித்து வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாள் ப்ரியா. நிகழ்ச்சி முடிந்து மேடையை விட்டு இறங்கி வந்த அக்ஷதா அதற்கும் மேல் கலவரத்துடன் காணப்பட்டாள். வீட்டிற்குச் சென்ற பின்னர், அவளது அலங்காரத்தைக் கலைக்க உதவும் வேளையில் பத்மா மெல்லப் பேச்சைத் தொடங்கினாள்.
“அங்கை, ஏன் டல்லா இருக்க?”
“ஒன்னுமில்ல... சும்மா தா... டயர்டா இருக்கு”
“நான் ஒன்னு சொல்லட்டா?”
“ம்ம்ம்”
“மாமா இருக்காருல்ல... அவரு ஒரு மார்க்கமான ஆளா இருக்காரு. அவரு நடந்துக்குறதுலாம் வில்லன் மாதிரியே இருக்கு”
“ஏன் அப்படிச் சொல்லுற?”
“வெளிய எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லனு சொல்லிக்குறாருல்ல. யாருக்கும் தெரியாம சிகரெட் பிடிக்குறாரு, அங்கை. எதுக்கு இப்பவே பொய் சொல்லணும்? இந்த சிம்பிள் மேட்டருக்கே பொய் சொல்றாருன்னா, நாளப் பின்ன வேற எது எதுக்குலாம் வேஷம் போடுவாரு? இந்த விஷயம் எனக்குத் தெரிஞ்சதும், நான் இதப் பத்தி யார்ட்டயும் சொல்லிடக் கூடாதுனு ப்ளாக்மெய்ல் பண்றாரு. இவரு உனக்கு வேணாம், அங்கை; பிடிக்கலனு சொல்லிடேன்” என்று இவள் பேசிக் கொண்டிருப்பதைக் கதவருகினில் நின்றிருந்த மோகன் கேட்டுவிட்டான்
மூளையில் மற்றொரு சிந்தனையுடன் இருந்த அக்ஷதா “இப்போ என்ன பண்றது?” என மேலோட்டமாக வினா தொடுத்தாள்
இதற்கு மேல் நேரம் தாழ்த்தக் கூடாதென நினைத்த மோகன் “மாமா, இங்க வாங்களேன்” எனச் சத்தமாக அழைத்தான்
அவனது அந்தக் குரலைக் கேட்டதும் பத்மாவிற்குத் தூக்கி வாரிப் போட்டது
‘சனியன், இங்கயும் வந்துடுச்சா. மூதேவி எல்லாத்தயும் ஒட்டுக் கேட்ருச்சுப் போல’ என உள்ளுக்குள்ளேயே திட்டித் தீர்த்தவள் கதவை முழுதாகத் திறந்தாள்
உடனே சுந்தரமும் “சொல்லுங்க, மாப்ள” என்றவாறு அங்கு வந்து நின்றார்
“எனக்கே இதச் சொல்லக் கஷ்டமாத் தான் இருக்கு. உங்க பொண்ணு இருக்கால்ல, மாமா; அவ உங்களுக்குத் தெரியாம லவ் பண்றா”
“என்ன மாப்ள சொல்றீங்க? அவ அப்டிலாம் பண்ண மாட்டாளே”
“நீங்களே கேளுங்க, மாமா”
“இதுலக் கேள்வி என்ன கிடக்கு? என் பொண்ண நான் அப்படி வளக்கல”
மோகன் கரங்களைக் கட்டிக் கொண்டு “அத்தைய வேணாலும் கேட்டுப் பாருங்க, மாமா. அப்போ தான உங்க வளர்ப்பு எப்படின்னு தெரியும்” என்று ஊசியில்லாமல் குத்தினான்
அதில் உணர்ச்சி பொங்க “மங்க, ஏ மங்க. செத்த இங்க வா” என்று சுந்தரம் கூச்சலிட்டார்
“இல்லனு சொல்லு, அங்கை. ஏன் பேய் முழி முழிக்குற” என பத்மா தமக்கையிடம் முணுமுணுக்க
“இருக்குறத எப்டி இல்லனு சொல்ல முடியும், ப்ரியாமா. இன்னைக்குக் காலைல அந்தப் பையன நான் மண்டபத்துலப் பாத்தனே. அவனப் பாத்ததும் உன் அக்கா மெரண்டு போயிட்டா. அப்றம், அத்தை தான் அவனை என்னனு கேட்டு விசாட்டி விட்டாங்க” என்று முந்திக் கொண்டு பதிலளித்தான் மோகன்
அவன் நடந்த கதையைக் கூறும்போதே மங்கை வந்து சேர்ந்திருந்தார். இவ்வளவு நேரம் கலகலப்பாக இருந்த முகம் வாடி, அக்ஷதாவைப் போலவே அவருக்கும் கறுத்துவிட்டது.
“என்னடி கல்ல முழுங்குன மாதிரி நிக்குறீங்க. யாராச்சும் வாயத் திறங்க. என் மானம் போறதுக்குள்ள, இருக்கு இல்லனு சொல்லித் தொலைங்க” என்று ரத்த அழுத்தம் எகிறுமளவு சுந்தரம் கொதித்தார்
இப்போது கரங்களைப் பின்னால் கட்டி நெஞ்சை நிமிர்த்தி “அதான் போய்டுச்சே, மாமா” என்றான் நாளை மாப்பிள்ளையாகப் போகிறவன்
அவனின் திமிர் இவருடைய மரியாதையை முதலும் வட்டியுமாக வாங்கிவிட, ஆத்திரத்தில் மனைவியை விளாச ஆரம்பித்தார்
நம்மால் தானே இதெல்லாம் என்று எண்ணி “தெரியாமப் பண்ணிட்டேன், பா. என்னை மன்னிச்சுடுங்க” எனக் கதறியபடி குறுக்கே வந்து விழுந்தாள் அங்கை
அவளையும் முதுகில் சாற்றிய சுந்தரம், அடுத்து அதிர்ச்சியில் நின்றிருந்த பத்மப்பிரியாவிடம் பாய்ந்தார்
அந்நொடியில் உண்டான அச்சத்தால் கண்களை மூடிக் கொண்ட இளையவள் “எனக்கு எதுவும் தெரியாது. எனக்கெதும் தெரியாது, ப்பா. எனக்கெதும் தெரி...” என்று பதறினாள்
அடிக்க ஓங்கியவரின் கரத்தை இறுகப் பற்றிய மோகன் “நிறுத்துங்க. நீங்களே சத்தம் போட்டு ஊரக் கூட்டிடுவீங்க போல. நிதானம், மாமா. நிதானம்...” என எரிகிறக் கட்டையில் ஒன்றைப் பிடுங்கினான்
“நாளைக்குக் கல்யாணத்த வச்சுட்டு இப்படி ஆகிப் போச்சே, மாப்ள. குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்குறதத் தவிர வேற வழியில்ல” என்று அருவியைப் போல கண்ணீரைக் கொட்டினார் சுந்தரம்
அக்ஷதா ஒருபடி மேலே போய் “நாங்க பாத்தோம், பேசுனோம், பழகுனோம்; அவ்ளோ தாங்க. ஒன்னா வெளியக் கூட போனதில்ல. இனிமே எந்தத் தப்பும் நடக்காதுங்க. என்னை மன்னிச்சு ஏத்துக்கோங்க” என மோகனின் கால்களைக் கண்ணீரால் கழுவினாள்
“அடி, பாதகத்தி மகளே. உன்னப் பெத்ததுக்கு...” என மூக்கை உறிந்து கொண்டே மங்கையும் அவன் பாதங்களில் சரணடைந்தார்
அந்தக் கொடுமையை சில விநாடிகள் ரசித்தவன் “மாமா என்ன இதெல்லாம்? அத்தை எழுந்திருங்க மொதல்ல. அக்ஷு அழுகைய நிறுத்து; நிறுத்துன்னு சொல்றேன்ல... நடந்தது நடந்து போச்சு. நீங்க இதப் பத்திக் கவலப்படாதீங்க. உங்க மரியாதய நான் காப்பாத்துறேன், மாமா. உங்க பொண்ண நான் திருத்தி வழிக்குக் கொண்டு வரேன். நான் உன்ன ஏத்துக்குறேன், அக்ஷதா. என்னைக் கல்யாணம் பண்ணப் போறல்ல; இனிமே, உன் கண்ணுல ஆனந்தக் கண்ணீர் மட்டுந்தான் வரும். அத்த, இவளச் சமாதானப்படுத்தி அழைச்சுட்டுப் போங்க. போங்க, போய் வந்தவங்களக் கவனிங்க” என்று மனிதர்குல மாணிக்கமாகப் பேசினான்
சுந்தரம் “ரொம்ப நன்றிங்க, மாப்ள” என அவனைக் கையெடுத்து வணங்கினார்
அவரின் தோளின் மீது கையைப் போட்டவன் “அப்றம் மாமா, நீங்க வாங்குன புல்லட்டப் பாத்தேன். நல்லா தான் இருக்கு... அப்டியே உங்க மகள வெயில் படாமப் பத்ரமா வச்சுக்குறதுக்கு, ஒரு கார் மட்டும் வாங்கித் தந்தீங்கன்னா” என்று பேசி நேரத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான்
“அதுக்கென்ன, மாப்ள. உங்க இரக்க மனசுக்கு என்ன வேணாலும் தர்லாமுங்க. ஜோரா பண்ணிரலாம்” எனத் தலையாட்டிய சுந்தரத்தை, பலியாகும் ஆட்டினைப் பார்ப்பது போல பாவமாகப் பார்த்தாள் பத்மப்பிரியா
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு!