“இதோட பதினைஞ்சு மாப்பிள்ளைங்களப் பாத்தாச்சு. அதுல எட்டுப் பேர நேர்ல வரவச்சுத் திருப்பி அனுப்பியாச்சு. உன் பொண்ணுக்கு யாரயும் புடிக்கல. இப்டியே போனா, நமக்குக் கொள்ளி வச்சப்றம் தான் உன் பொண்ணு மணமேட ஏறுவா போலத் தெரியுது”
“அபசகுனமா பேசாதீக. அதென்ன, உன் பொண்ணு... உங்களுக்கு மட்டும் அவப் பொண்ணு இல்லயா?”
“நீ தான இந்த லட்சணத்துல வளத்து வச்சுருக்க. அச்சுவாச்சும் எதோ தேவலாம். ஒரு சின்னத் தப்புப் பண்ணா; அதயும் திருத்திட்டு இப்போ புருஷன் புள்ளைனு கௌரவமா வாழ்றா. ரெண்டாவதும் வளந்து நிக்குதே... திமிரு புடிச்சக் கழுத. தப்பே பண்ணாலும் ஒத்துக்குட மாட்டா. ஏன்டி, அவ யாரயும் லவ்வு கிவ்வு பண்ணித் தொலைச்சுட்டாளா? கொஞ்சம் விசாரியேன்...”
“அவளே எப்போவாது தான் வீட்டுக்கு வரா. இப்படிப் பேசுறது அவக் காதுல விழுந்துது; அப்றம் பேயாட்டாம் ஆடுவா. நாம பாக்குற பையன கட்டிப்பேன்னு சொல்லிட்டாள்ல. அவளுக்கு ஏத்தவன விரசா தேடிப் பிடிங்க”
“சந்தைல ஒரு தலையாட்டி பொம்மை கிடைச்சா வாங்கிட்டு வா. அத்தான் அவளுக்குச் சரியா இருக்...” என்று சுந்தரம் முரசடிக்க
“ச்சூ, வாய மூடுங்க. அவ வரா...” என அவரது வாயை அடைத்தார் மங்கை
சுந்தரத்தின் நேர் எதிரே இருந்த நாற்காலியில் வந்தமர்ந்த பத்மா பின்புறமாகத் தலையைச் சாய்த்துப் படுத்தாள்
“அம்மா, பால் இல்லயா? கிச்சன்லத் தேடிப் பாத்தேன். எங்க இருக்குன்னு தெர்ல. எடுத்துட்டு வாயேன்”
மங்கை பாலைச் சுட வைத்துக் கையில் கொடுக்க, அது பொறுக்காமல் “உன் மொவளுக்கு இது கூட தெரியாதாமா? எப்படித் தான் போற இடத்துலக் குப்பை கொட்டப் போறாளோ” என சுந்தரம் முணுமுணுத்தார்
பத்மா அதைக் காதில் வாங்காதது போல அமர்ந்திருக்க, அவர் தொடர்ந்து மங்கையிடத்தில் முறையிட்டார்
“முடிய கிராப் வெட்டிட்டு, முக்கா கால் டௌசர் போட்டுட்டு, மத்தியானம் பன்னெண்டு மணி வரத் தூங்க வேண்டியது. இது பொண்ணா பையனானே தெரில. என்னடி டிரெஸ் போடுறா உன் புள்ள...”
தந்தைக்குச் சற்றும் சளைத்தவள் இல்லை என்பதைப் பறைசாற்றும்படி, பத்மாவும் ஆள் மாற்றி அன்னையிடமே பதிலுரைத்தாள். இவர்களுக்கு இடையில் வராமல் மௌனமாகத் தன் வேலையில் ஈடுபட்டிருந்தார் மங்கை.
“இது பேராம்மா, நைட் டிரெஸ்ஸு. நைட்டுலப் போட்டுட்டுக் காலைலக் கழட்டிக்கலாம். கம்ஃபார்ட்டபிளா இருந்தா இதயே நாள் முழுக்கப் போட்டுக்கிடலாம்”
“புதுசா ஒரு வரன் வந்துருக்கு. அவளுக்குப் பிடிச்சுருக்கான்னு கேட்டுச் சொல்லுடி”
“ம்மா, உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேம்மா. ஆனா, நான் சொன்ன மாதிரி இருக்கணும்”
“நேத்து ஒருத்தங்க ஃபோன் பண்ணாங்க. வேலைக்குப் போற பொண்ணே தான் வேணுமாம். என்ன ஊரு தான் கேரளால இருக்கு; அடிக்கடி பாத்துக்கிட முடியாது”
“உங்களுக்கும் அதான வேணும், மா... சும்மா சும்மா வந்துட்டுப் போய்ட்டு இருந்தா நெறயச் செலவாகும்ல”
சுந்தரம் “இந்தா, புள்ள... சுத்தி வளைச்சுப் பேசுறதலாம் விடு. மாப்பிள்ள வீட்லருந்து எப்ப வாரது, எப்ப வாரதுன்னு கேட்டுட்டே இருக்காங்க. நீ என்ன சொல்லுத?” என்று நேரடியாகவே கேட்க
“ம்ம்ம்ம் ம்ம்ம்...” என்று முணகியவாறு உடலை நெட்டை முறித்தாள் மகள்
“ஒழுங்கா பதிலச் சொல்லு”
“ம்ம்ம்”
“நான் அவங்கள்ட்ட என்ன சொல்லட்டும்? தெளிவா சொல்லு. இந்த உம்ம் ஆங்குற வேலலாம் வேணா”
இறுதியாக “வரச் சொல்லுங்க, பாப்போம்” என்று கூறிய பத்மா எழுந்து கொண்டாள்
“பையன் போட்டோ எதும் பாக்குறியா? ஏ, புள்ள...” என்று அவர் கூவ, அவள் நிற்காமல் சென்றுவிட்டாள்
“இவக்கிட்ட மாட்டிட்டு எந்த மகராசன் என்ன பாடுபடப் போறானோ...” என சுந்தரம் மீண்டும் புலம்பலைத் தொடங்கினார்
ஒரு வேகத்துடன் அறைக்குச் சென்றவள் பிரபாகரனுக்கு அழைப்பு விடுத்தாள். அவனோ நேரம் சென்றே திரும்ப அழைத்தான்.
“ஹலோ, ஃபோன் எடுக்க ஏன் இவ்ளோ நேரம்?” என்று இவள் பதற
பிரபாகரன் “இல்ல, ஒரு ஃபங்க்ஷன்... வேலையா இருந்தேன்” என்றான் நிதானமாக
அவன் விழா என்றதும் விக்ரமிற்கு வேறு பெண் பார்த்தாகி விட்டது போல என்ற நினைப்பில் பத்மாவின் சுருதி குறைந்தது
“என்ன பங்க்ஷன்... அப்போ, நீங்க என் அப்பாக்கு கால் பண்ணலயா?”
“நான் தான் பண்ணேன். பங்க்ஷன்னதும் என் தம்பிக்கு எதும் நிச்சயம்னு நினைச்சுட்டீங்களோ”
“இல்ல இல்ல... ஆமா... அப்டித்தான் நினைச்சேன்”
“நான் ஒரு ஈவன்ட் ப்ளானர். நானும் என்னோட டீமும் வெட்டிங், காதுகுத்து, கிடாவெட்டுனு எல்லா ஃபங்க்ஷனும் பண்ணித் தருவோம். இன்னைக்கு மேட்டுப்பாளையத்துல ஒரு பேபி ஷவர். அதான், கொஞ்சம் பிசி... நீங்க சம்மதம் சொன்னதா தம்பி சொன்னான். வீட்டுல எல்லாருக்கும் செம்ம ஹேப்பி. உங்க அப்பாட்ட நேத்து ரெண்டு தடவ, காலைல ஒரு தடவப் பேசுனேன். பொண்ணுட்ட ஒரு வார்த்த கேக்கணும்னு சொன்னாரு. இப்போ மறுபடி ட்ரை பண்ணலாம்னு தான் ஃபோன எடுத்தேன். மிஸ்டு கால் பாத்ததும் உங்களுக்குக் கூப்டேன்”
“இப்போ தான் எழுஞ்சு கீழப் போனேனா, அப்பா இது சம்பந்தமா பேசுனாரு. சரி, வரச் சொல்லுங்கன்னு சொல்லிட்டேன்”
“இதோ உங்க அப்பாவே கூப்ட்றாரு. அட்டென்ட் பண்ணட்டா. லைன்ல இருக்கீங்களா?”
“வேணாம், நான் கட் பண்ணிக்குறேன். அப்றம் நாம மீட் பண்ணது...”
“எங்க வீட்ல யாருக்கும் தெரியாது”
“இவங்களுக்கும் அது தெரிய வேணாம். தப்பித் தவறிக் கூட சொல்லிடாதீங்க. வச்சுட்றேன், பை” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள் ப்ரியா
இரு நாட்கள் கழித்து, சுடிதார் அணிந்து தலையில் சிறிதளவு பூ வைத்து அவள் தயாராகிக் கொண்டிருந்தாள்
அங்கு வந்த மங்கை “ஒரு சேலையக் கட்டேன். வரவக என்ன நினைப்பாக” என்று தாடையில் கைவைத்தபடி வினவினார்
“சும்மா சலம்பாத. வேஷம் போட்டுக்கச் சொல்லுறியா? என்னை என் போக்குல விட்டுரு. இல்லைனா, சுடிதாரத் தூர வீசிட்டு நைட் ட்ரெஸ்ஸ எடுத்து மாட்டிப்பேன்”
“ஆத்தா, மகமாயி. உன் விருப்பம் போல உடுத்து. அப்டியே பையன் முகத்த ஒருக்கா பாத்துக்க. சபையக் கூட்டி வச்சு நொட்டம் சொல்லாத” என்றவர் சுந்தரம் கொடுத்தனுப்பிய அலைபேசியை அவள் முன்னே நீட்டினார்
“கிளம்பிட்டு இருக்கேன்ல. ஃபோன எடுத்துட்டு எட்டப் போ. எப்போ பாரு, நொசநொசன்னுட்டு”
“பையன் லட்சணமா இருக்கான். என்ன, ஒன்ன விட கொஞ்சம் நெறமா இருக்கான். உன் அக்கா நெறத்துக்குத் தெரியுறான்”
“அப்போ அவளுக்கே கல்யாணம் பண்ணி வச்சுரேன். நீயும் அக்கா நெறம் தான. நீயே கூட கட்டிக்க. எனக்கு ஒரு தொல்லை மிச்சம்”
“வாயக் கழுவுடி”
“எல்லாம் கழுவிச் சுத்தமாத் தான் இருக்கு. உன்னை விடவா அதிகமா பேசிட்டேன்...”
“என் அம்மாட்ட நான் இப்படிப் பேசிருந்தேன்னு வையு... நாக்க இழுத்து வச்சு அறுத்துருப்பா”
“எதோ உன்னைப் பொண்ணுப் பாக்க வர மாதிரி இம்புட்டு நகையள்ளிப் போட்டுருக்கியே. வேற எப்புடிப் பேசச் சொல்லுற? உன் முடிச்சவுத்து எனக்கும் நாலு நகையத் தர்றது...”
“எதயும் நேராவே கேக்க மாட்டியாடி. அக்காக்குப் போக மிச்சம் இருக்குற எல்லா நகயும் உனக்குத் தானடி. இந்தா எவ்ளோ வேணாலும் போட்டுக்க” என்ற மங்கை லாக்கரைத் திறந்து நகைகளை எடுத்துக் கொடுத்தார்
“ஒதவிக்கு யாரயாச்சும் வரச் சொல்லுட்டா”
“ஒன்னும் வேணா... தொணைக்கு மதுவ வரக் கூடாதுன்னு சொல்லிட்டல்ல. எனக்கு வேற எவளும் வேணா”
“அவளே தாலியறுத்துட்டுக் கிடக்கா. அவளப் போய்க் கூப்டணுங்குறியே. உன்னக் கட்டிக்குறவனும் அல்பாயுசுலப் போகணுமா? நல்ல நாள் அதுவுமா அவப் பேர எடுத்துட்டு...”
“ம்ச்ச்ச். புருஷன் இல்லனா பொண்ணுக்கு மரியாதயே இல்லயா. எதுக்கு அவள மட்டந்தட்டுற?”
“ஆமாடி, புருஷன் இல்லனா இந்த ஒலகத்துல ஒரு அந்தஸ்தும் கிடைக்காது. உனக்கு இதெல்லாம் எப்போ புரியப் போகுதோ? மாப்ள வேற வரேன்னு சொன்னாரு. இன்னும் காணல”
“எந்த மாப்ள?”
“உன் மாமன் தான்”
“அய்யோ, மாமன... அந்தாளுக்கு யாரு தகவல் சொன்னது?”
“எம்புட்டு முக்கியமான விஷயம்... மூத்த மாப்பிள்ளைக்குச் சொல்லாம இருக்க முடியுமா? என்ன தான் உனக்குப் பிடிக்கலன்னாலும் மொறன்னு ஒன்னு இருக்குல்ல”
“அந்தாள வந்தோமா, சாப்டோமா, போனோம்மானு இருக்கச் சொல்லு. என் வாழ்க்கையக் கெடுத்துடாம...”
“பெரியவங்களுக்கு மரியாத கொடுத்துப் பழகு, பத்மா. இன்னும் விளாட்டுத்தனமாவே இருக்காத”
“மரியாத கொடுக்குற மாரி அவர நடந்துக்கச் சொல்லு. மத்ததெல்லாம் தானா வரும். மரியாதயக் கேட்டு வாங்குற அளவுக்கு இருக்கு அவரு லட்சணம்...”
“போற இடத்துலயும் இப்படிப் பேசித் தொலைச்சிடாத. வீட்ட விட்டுத் தொரத்திறப் போறாக”
“அப்டியே தொரத்துனாலும் இங்க வந்து உக்காந்துட மாட்டேன். கவலப்படாத”
“தெனவெடுத்துத் திரியாதடி. நாலு பேரு வர்ற நேரத்துல என் வாயக் கிளறிட்டு... அடக்கமா அமைதியா பொம்பளப் பிள்ளையாட்டம் இரு” என்று அவர் அங்கலாய்க்க, பத்மா அலட்டாமல் அலங்காரத்தைத் தொடர்ந்தாள்
“முருகா, இவளுக்கு இந்த இடமாச்சும் அமைஞ்சுரணும். நல்ல வழி காட்டுடா, ஆண்டவா” என மங்கை வேண்டுதல் வைக்கவும் வாகனங்கள் வரும் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது
மங்கை பரபரப்பாக வெளியே சென்றுவிட, ப்ரியா அலங்கரித்து முடித்து எழுந்தாள். வரவேற்பறையில் காத்திருந்த உறவினர்களிடையே சலசலப்பு அதிகமாக, மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டனர் என்பதை அறிந்து கொண்டாள். வீட்டினுள் இருந்த படிக்கட்டின் வழியே இறங்கி வந்தவள் யார் கண்ணிலும் படாமல் பின்கட்டிற்குச் சென்றாள். வீட்டைச் சுற்றி வலம் போனவள் மாடிக்குச் செல்வதற்காக இருந்த மற்றொரு படிக்கட்டுகளில் ஏறி, சுவரோரம் மறைந்து நின்று, வருபவர்களை நோட்டமிட்டாள். முதலில் இந்திரஜித் வர, பின்னாலயே சில உறவினர்கள் தட்டுத் தாம்பாளங்களுடன் வந்தனர். அடுத்ததாக பிரபாகரன், மனைவி சுப்ரதா, மகன் பிரக்ஷித் உடன் வர, இறுதியாக விக்ரமின் கையைப் பிடித்தபடி அன்னை கிரிஜா மெல்ல நடந்து வந்தார். அவருக்குக் காலில் எதுவும் அடியோ என்றெண்ணி இவள் எட்டிப் பார்க்க, கிரிஜாவும் அதே திசையில் நோக்கினார். உடனே, இவள் அங்கிருந்து இறங்கி வீட்டிற்குள் ஓடிவிட்டாள்.
பெண் வீட்டினர் வந்திருப்பவர்களை வரவேற்பதில் மும்முரமாயினர். அவர்கள் அனைவரும் வீட்டிற்குள் வருமுன்னே இவள் உள்ளே புகுந்து சமையற்கட்டில் சென்று நின்று கொண்டாள். இரு வீட்டாரும் உள்ளே வந்து அமர்ந்த பிறகு அறிமுகப்படலம் நிகழ்ந்தேறியது.
“மாப்ள, என்ன வேலை பாக்குறாக?” என உறவினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்
“என்ஜினியர்”
“இன்ஜினியரா... என்னப்பா யாரக் கேட்டாலும் இதயே சொல்லுறீங்க. சம்பளம் சுமாரா எவ்வளவு வரும்?”
“சுமாரெல்லாம் இல்ல, அங்கிள். நல்ல சம்பளந்தான். சாப்பாட்டுக்கு ஒரு கொறயும் இருக்காது” என்று வேடிக்கையான பதில் தந்தான் மாப்பிள்ளை
இந்திரஜித் கண்டிப்பான குரலில் “விக்ரம்” என்றிட, அவன் பேச்சை நிறுத்திக் கொண்டான்
நக்கல் பிடிச்சவன்!