• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முட்டக்கண்ணி முழியழகி - விமர்சனம்

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,136
643
113
Tirupur


நிஜமாவே இது எனக்கு கிடைச்ச மறக்க முடியாத ஒரு தீபாவளிப் பரிசு தான்… இன்னைக்கு வதனி வானத்தில பறக்கிறாள்..

நன்றிகளைத் தவிர்த்து வேற என்ன சொல்ல… பேரன்புகள் மா விமலா… உங்களைப் போன்ற வாசகர்களின் கருத்துக்களே எழுத்தாளர்களான எங்களுக்கு ஒரு உந்து சக்தி போல.


1635926537100.png


முட்டக்கண்ணி முழியழகி..


இந்தக் கதையை எழுத முக்கியக் காரணம். வைகையில் நடக்கும் தொடர் மணற்கொள்ளை. வருஷநாட்டு மலைத் தொடரில் தான் வைகை உற்பத்தி ஆகிறது. இங்கிருந்து பாயும் இந்த ஆறை மூல வைகை என்று சொல்வார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பெய்ய ஆரம்பித்தால், இந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும்.

ஒரு நாள் மேகமலை சென்றுவிட்டு, வருஷநாட்டுப் பாதையில் வரும் போது வைகை ஆறு வெறும் மணல் திட்டுக்களாக மட்டுமே காணப்பட்டது. நாங்கள் குதித்து, குளித்து, சிரித்து, மகிழ்ந்து விளையாடிய ஆறை அப்படி பார்க்க மனசு கஷ்டமானது.




பக்கத்திலேயே மாட்டு வண்டிகளிலும், ட்ராக்டர்களிலும் மணல் அள்ளிக் கொண்டிருக்க, இதை வைத்து ஒரு கதை எழுத வேண்டும் என்பது தான் அப்போதைய என் எண்ணமே.. அப்படித்தான் ஆரம்பிக்கவும் செய்தேன். பிறகொரு நாள் தேனி எஸ்.பி அலுவலக முன்பு பழங்குடி மக்கள் போராட்டம்னு போஸ்டர் பார்க்கவும், அப்படியே கதையோட பாதை மாறிடுச்சு.

காட்டுக்குள் சுள்ளிப் பொறுக்க செல்லும், பெண்களை கட்டாய பாலியல் வன்புணர்வு செய்து, அதனால் ஒரு பெண் உயிரிழந்ததாகக் கேள்வி. அதை வைத்தே தான் கதை அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தது..

நியாயம் கேட்க சென்ற பெண்ணின் உறவினர்களை நக்சலைட்டுகள் என்று குற்றம் சுமத்தியதாகவும், காவல் நிலையத்தில் மிக மோசமாக தண்டிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதை மையாமாக வைத்து ஒரு பெண் இதற்காகப் போராடினால் எப்படி இருக்கும் என்று யோசித்து எழுதியக் கதைதான் முட்டக்கண்ணி.. இந்தக் கதை எனக்கு மிகவும் பெயர் வாங்கிக் கொடுத்தது… அந்தக் கதையை இன்று ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றி மா…


எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி..