அத்தியாயம் 1
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக..
என்ற கந்த ஷஷ்டி பாடலுடன் வீடே சாம்பிராணி வாசமும் பூக்களின் நறுமணமாய் இருந்தது அந்த வீடு. வாராவாரம் செவ்வாய் காலை வேளை இது வழக்கமாய் நடக்கும் ஒன்று தான். இறுக்கப்பூட்டி அறைக்குள் அடைந்து கொண்டு காலை பத்து மணி வாக்கில் வேலைக்கு வெளியே வரும் அந்த அப்பார்ட்மெண்ட்கள் நிறைந்த வில்லாவில் அந்த வீட்டில் மட்டும் புதுமையோடு பழமையும் மதிக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. காலை எழுந்து தண்ணீர் தெளித்து மாக்கோலமிட்டு, வெள்ளி செவ்வாய் கிழமைகளில் பூஜை அறையை மலர்களால் அலங்கரித்து காலையிலே கோவிலாய் மாற்றி, பக்தி பாடலோடு சாம்பிராணி புகையும் மணக்கும்.
"என்ன புவனா.. காலையிலே சீக்கிரம் எழுந்திரிச்சுட்ட போல?" என்று வந்தார் மனோகர்.
"ஆமாங்க. இன்னைக்கு செவ்வாக்கிழமை. அதோட கிருத்திகை வேற. அதான் சீக்கிரமே எழுந்து முருகருக்கு பூஜை பண்ணேன். இருங்க காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்"
"முருகர் என்ன காலங்காத்தாலேவா இதெல்லாம் பண்ண சொல்றாரு?. சொன்னா எங்க கேட்குற?. பொறுமையா உன் பூஜைய முடிச்சுட்டு போ. அவசரமில்லை" என்று நியூஸ் சேனலை ஒளிரவிட்டார். செய்தித்தாள் பழக்கம் மாறி வெகுநாட்கள் ஆகிவிட்டது. அமர்ந்து சாவகாசமாய் வாசிப்பதற்கு நேரமும் இல்லை. கிடைக்கும் நேரத்தில் டிவியை ஒளிர விட்டால் ப்ரேக்கிங் நியூஸிலிருந்து உள்ளூர் செய்திகள் வரை அவசர செய்திகளில் பார்த்து விடலாம்.
காபியை போட்டு வந்து மனோகர் கையில் கொடுத்த புவனா, "இன்னும் இந்தப் பொண்ணு எழுந்த பாடில்லை. இவளுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்தா இவளுக்கு வாய்க்கிறவன் என்ன பாடுபடப் போறானோ?. இதுல்ல நீங்க வேற செல்லங்குடுத்து ஒரு விவரமும் தெரியாம வளர்த்து வச்சுருக்கேங்க. நல்லா பொண்ணா வளர்த்துருக்கோம்னு அவளை நினைச்சு ஒருபக்கம் சந்தோஷமா இருந்தாலும் இன்னோரு பக்கம் எல்லாரையும் அப்படியே நம்புற அவ குணத்தை நினைச்சா வாழ்க்கைல எப்டி ஜெயிச்சு வரப்போறாளோனு பயமாகவும் இருக்கு" என்று புவனா வருத்தம் கொள்ள..
"இப்போ தான் காலேஜ் பைனல் இயரே படிச்சுட்டு இருக்கா. அதுக்குள்ள மேரேஜ் பத்தி ஏன் இழுக்குற புவி?. நம்ம காலம் மாதிரியா.. விவரம் தெரியாத வயசுலே கல்யாணம் பண்ணிக் கொடுத்து கஷ்டப்பட விட?. காலேஜ் முடிச்சு நல்ல வேலைக்குப் போயி தன் சொந்தக்கால்ல நின்னு வாழ்க்கையை புரிஞ்சுக்கிட்ட பிறகு தான் என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன். நீ ஒன்னும் அவளை நினைச்சு கவலைப்படாத. என் பொண்ணை தேவதை மாதிரி பாத்துக்க ஒருத்தன் வருவான். நாம எப்பவும் அவளுக்கு துணையா இருப்போம்" என்று தைரியமூட்ட.
"ஆமா பொண்ணை ஒன்னும் சொல்ல விடுறதில்ல" என்று இதழ் வளைத்து சலித்துக் கொள்ள..
"ஹாஹா.. பொண்ணுக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டு நாம ஜாலியா இருக்கலாம்னு நினைக்கிறியா புவி?" என்று சிரித்துக் கொண்டே காதலோடு கேட்க..
"ஆமா காலம் போன காலத்துல பேச்சைப் பாரு. போங்க.. போய் ஆபிஸ் கிளம்புற வழிய பாருங்க" என்று எழுந்து உள்ளே சென்று விட்டார்.
பின்னால் இருந்தாலும் அவரின் நாணப் புன்னகையை மனோகர் கண்டு கொள்ளாமலா இருப்பார். மனமொத்து வாழும் தம்பதிகளுக்கு வயசு என்பது ஒரு எண் தானே தவிர அது காதலுக்கு தடையில்லையே. புவனா ஹவுஸ் வொஃய்ப்பாக இருந்தாலும் அவரின் சுயமரியாதையை இதுவரை சீண்டியதில்லை அவர். பெண்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதில் கொள்கையோடு இருப்பவர். தனக்கு வரப்போகும் மருமகனும் தன் மகளை அப்படித்தான் நடத்த வேண்டும் என்று நினைக்கிறார். பார்ப்போம் கடவுள் என்ன எழுதி வைத்திருக்கிறார் என்று.
சுப்ரபாதம், பூஜை ஒலி, சாம்பிராணி வாசம் என்று எதற்கும் அசைந்து கொடுக்காமல் இழுத்துப் போர்த்திக் கொண்டு அந்த மெத்தையில் படுத்திருந்தாள் மனோகர் புவனா தம்பதியினரின் ஒற்றை மகள் நிலானிகா. பௌர்னமி நிலவைப் போன்று வட்ட வடிவ பால் முகம். அவளின் எழில் கொஞ்சும் வதனமும் கிளிப்பேச்சுமே சொல்லும் அவள் வீட்டின் செல்லப்பிள்ளை என்று.
மூன்று முறை அடித்து ஓய்ந்து நான்காவதாக அவளின் மொபைல் அடித்து தன் இருப்பை உணர்த்தியது.
'சே.. இது வேற..' என்று கண்ணை மூடிக் கொண்டே மெத்தையில் கையை நீட்டித் துலாவி மொபைலை எடுத்தவள் காதில் வைத்து, "ஹாலோ.." என்றாள்.
"ஏ நிலா.. எத்தனை தடவைடி போன் பண்றது?. இருக்கியா இல்லையா?. உனக்குலாம் அவசரத்துக்கு போன் பண்ணா டெட்பாடியான பிறகு தான்டி போன் எடுத்து ஹலோனு சொல்லுவ. உன் போனை தலையை சுத்தி தூரப்போடு.." என்று எடுத்ததில் இருந்து படபடவென பொறிந்து கொண்டிருந்தாள் அவள் தோழி சிந்துஜா.
அவளின் பட்டாசு சுப்ரபாதத்தில் எழுந்து அமர்ந்தவள், "ஏன்டி காலங்காத்தால இந்த கத்து கத்துற?. சரவெடி கின்டு முழுங்கிட்டியா என்ன?"
"உன்னைக் கொன்னுடுவேன்டி.. நான் கத்துறது உனக்கு பட்டாசு வெடிக்குற மாதிரி இருக்கா?"
"பின்ன இல்லையா?. இரு ரெக்கார்டு பண்ணி உனக்கு ஆடியோ அனுப்புறேன். கேட்டுப்பாரு. அப்போ தெரியும் அதைக்கேட்ட என் காதோட நிலைமை"
"ம்ம்.. ரெக்கார்டு பண்ணி அனுப்பி வை. என் கல்யாணம் முடிஞ்சு மாமியார் வீட்ல போய் பொறுமையா பாக்குறேன்" என்று அவள் கோவமாக.
"ஷ்ஷ்.." என்று நாக்கைக் கடித்த நிலா, "ஆமால உனக்கு மேரேஜ்ல.." என்று இழுக்க..
"மேரேஜ்லவா!. அடியே நீ கல்யாணத்துக்கு வர்றியா இல்லையா? வர்றேனு சொல்லிருக்க. நீ மட்டும் வரல. அப்புறம் உன்கூட பேசவே மாட்டேன்" என்று முகத்தை தூக்கி வைத்தாள்.
"அடியே.. உனக்குலாம் யாருடி இப்பவே கல்யாணம் பிக்ஸ் பண்ணது?. படிக்குற புள்ளைய ஒழுங்கா படிக்க விடாம.." என்று தலையிலடித்துக் கொள்ள..
"ப்ச்.. இது வில்லேஜ்மா. காதல் கத்தரிக்கானு வந்துரக்கூடாதுனு தான் இப்பவே எங்க மாமா பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்குறாங்க. கல்யாணம் பண்ணிட்டு பைனல் இயர் எக்ஸாம் எழுதவாம். நானே கொடுமைனு உட்கார்ந்துருக்கேன். இருந்தாலும் என் மாமாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுனால ஓகே சொல்லிட்டேன். சரி அதை விடு. நீ மேரேஜ்க்கு வருவேல. ப்ரைடை மேரேஜ் வச்சுருக்காங்க. நீ மட்டும் தான் வர்றேனு சொல்லிருக்க. நான் ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணுவேன்டி"
"நான் இன்னும் அப்பா அம்மாகிட்டவே சொல்லலடி. அவ்ளோ தூரம் விடுவாங்களானு தெரியல. நான் கேட்டுட்டு ஈவ்னிங் சொல்லட்டுமா?
"ஏன்டி வில்லேஜ்னா வர மாட்டியா?. அவ்ளோ தான் நம்ம ப்ரண்ட்ஷிப்பா?. நீயும் வரலனா எப்டி?" என்று அவள் அந்தப்பக்கம் சோகமாவது இவளுக்கு நன்றாகவே புரிந்தது.
"சரிடி வர்றேன். போதுமா?. நீ போய் கல்யாண கனவுல மிதந்துட்டு இரு. போ என்ஜாய்" என்று காலை அணைத்து காலைக்கடனை முடித்து விட்டு வெளியே வர.. மனோகர் அலுவலகத்திற்கு கிளம்பித் தயாராக இருந்தார்.
"டாடி குட் மார்னிங்.." என்று அவரின் அருகில் அமர்ந்தவள், "என்ன இவ்வளவு சீக்கிரம் கிளம்பி இருக்கேங்க? எங்க போறேங்க?"
"இன்னைக்கு சிப்ல ஒரு இம்போரட் இருக்குடா. சோ சீக்கிரமே போனும்" என்று அவள் தலையை வருட..
"ஓ ஓகே டாடி.." என்றவள் சிந்துஜாவின் திருமணத்திற்குச் செல்வது பற்றி கேட்க..
"குட்டிமா.. அவ்ளோ தூரம் போனுமாடா. நீ தனியா போய்டுவியா?. உன்னை தனியா அனுப்பவே பயமா இருக்கு. சென்னை தாண்டி நீ எங்கேயும் போனதில்லை. சௌத் சைடு அவ்ளோ தூரம் எப்டி அனுப்புறது?. அதுவும் ப்ரைடே அம்மாவுக்கும் செக்கப் இருக்கு. இல்லனா அம்மாவாது துணைக்கு வருவா"
"டாடி ப்ளீஸ். மை பெஸ்டி அவ. நான் போகாம எப்டி?" என்று கெஞ்சி கொஞ்சி பெர்மிஷன் கேட்க.. அவரும் சம்மதம் சொல்லி விட்டார்.
"உங்கப்பாவை பேசி பேசியே கரெக்ட் பண்ணிட்டியா?. இந்த வித்தை எனக்குத் தெரியாம போச்சு. தெரிஞ்சுருந்தா ஈசியா எல்லா காரியமும் சாதிச்சுருப்பேன்" என்று புவனா மகளை முறைத்துக் கொண்டு நிற்க..
"இந்த வித்தையெல்லாம் உன்கிட்ட இருந்து தான் நிலாவுக்கு வந்தது புவி" என்று மனோகர் அவர் காலை வார..
"அப்டி சொல்லுங்க டாடி" என்று நிலா அவருக்கு கை-பை கொடுக்க.. அவர் கை-பை கொடுத்து விட்டு ஓடியே விட்டார் மனைவியின் முறைப்புகள் தன்மேல் படும் முன்.
மல்லிகை மலர்கள் போல் நட்சத்திரங்கள் அள்ளி இறைக்கப்பட நிலவு மகள் பவனி வந்தாள் வான வீதியில்..
"குட்டிமா.. பாத்துப்போயிட்டு வாடா. உள்ளே போ. வெளில நிக்காத. தூக்கம் வரலனா உள்ளயே போன்ல பாட்டுக் கேளுடா. வெளில காத்து வாங்கலாம்னு வெளில வராத. போயிட்டு போன் பண்ணு. பத்திரம் டா" என்று ஆயிரத்தெட்டு பத்திரம் சொல்லிக் கொண்டிருந்தார் மனோகர்.
நிலானி உள்ளேயும் போகாமல் வெளியவும் வராமல் அந்த தேர்டு ஏசி கோச்சின் கதவைப் பிடித்தபடி தந்தை சொல்ல சொல்ல, "ஓகே ப்பா.. ஓகே ப்பா.." என்று தலையாட்டிக் கொண்டிருந்தாள்.
அவர் முதலில் இருந்து அட்வைஸ் மழையை மறுபடியும் ஆரம்பிக்க..
பின்னால் நின்றிருந்த ஒரு இருபத்து ஐந்து முதல் இருபத்து ஆறு வயதுள்ள கருப்பு நிறச் சட்டை அணிந்த இளைஞன் ஒருவன், 'மறுபடியும் முதல்ல இருந்தா?. சின்னப் பப்பாவையா ஊருக்கு அனுப்புறாரு. இத்தனை அட்வைஸ்' என்று உள்ளுக்குள் நொந்தவன், "சார் கொஞ்சம் வழி விடுறேங்களா?. நான் உள்ளே ஏறனும்" என்க..
அவனைத் திரும்பி பார்த்தவர், "ஓ சாரி.." என்று விட்டு, "நீ உள்ளே போடா" என்று நகர்ந்தார்.
நிலானி உள்ளே சென்று அவள் புக் செய்த சீட்டில் அமர அந்த கம்பார்ட்மென்ட்டில் மற்ற இருக்கை பயணிகள் ஏற்கனவே அமர்ந்திருந்தனர். அவள் தனியாக செல்லும் முதல் பயணம். இதுவரை பெற்றவர்களுடனே பயணப்பட்டவளுக்கு இன்று முதல் முறை தனியாக பயணம். சிலர் குழந்தையுடன், சிலர் தங்களது துணையுடன், சிலர் மொத்தக் குடும்பத்துடன் என்று ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள் நிலானி. அதிலும்
அவள் கம்பார்ட்மென்ட்டில் இருந்த ஒரு இரண்டு வயது குழந்தை செய்யும் சேட்டையையும் அவள் பெற்றவர்கள் சமாளிக்கும் விதத்தையும் கண்டவள், 'இப்டித்தான் நாமளும் சேட்டை பண்ணிருப்போம்ல. அப்பாவும் அம்மாவும் இப்படி தான் நம்ம பின்னாடியே ஓடிருப்பாங்க. க்யூட் பேபி' என்று சிரித்தவள், அவளது தோழி சிந்துஜாவுக்கு அழைத்து கிளம்பி விட்டதாக தகவலும் கொடுத்து விட்டாள். இந்த ரயில் பயணம் தான் அவள் வாழ்க்கையே தீர்மானிக்கப் போகிறது என்பது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.
தொடரும்..