அத்தியாயம் 12
முதல் இரண்டு சந்திப்புக்கள் கொடுக்காத தாக்கத்தை இந்த மூன்றாம் சந்திப்புக் கொடுத்தது நிலானிக்கு. எந்த அதிர்வும் ஏற்படாத வரை நிறைகுடத்தில் உள்ள தண்ணீர் அதுபாட்டுக்குத் தான் இருக்கும். ஒரு சிறு கல் பானையின் வெளிப்புறத்தைத் தொட்டுச் சென்றாலே நீரில் அதிர்வுகள் உண்டாகும். அது மாதிரி தான் மூன்றாவதாய் நிகழ்ந்த அந்தச் சந்திப்பு அவள் மனதில் மாறனுக்கான தனி இடத்தைப் பிடித்து வைத்தது.
'என்ன அவங்க நினைப்பா இருக்கு. சோ ஸ்வீட்ல. எவ்ளோ அழகா நீட்டா பேசுறாரு' என்று அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு கல்லூரியில் ரோகித் பேசியது நினைவில் வந்து போனது.
"இங்க பாரு நிலானி.. அவன் யாரு என்னனே தெரியல. அவன் கூட போய் ப்ரன்ட்ஸ்ஸிப் வச்சுக்கிட்டு இருக்க?. அவன் ஒரு டிரைவர். உன்னை மாதிரி எத்தனை பேரு கிட்ட பேசிட்டு இருக்கானோ. அவனைப் பார்த்தாலே காட்டுமிராண்டி மாதிரி இருக்கான். அவனைப் பார்த்தா ஹாய் பாய் சொல்றதோட நிறுத்திக்காம ரெண்டு தடவை காஃபி ஷாப் கூப்டுப் போற அளவுக்கு பேசிருக்க. உங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்ன சொல்வாங்க. ஐ டோண்ட் லைக் தேட்" என்று கடுகடுக்க.
"உனக்கு எதுக்குடா அவன் மேல் இவ்வளோ காண்டு?. அவனைப் பார்த்தாலே சிடுசிடுனு இருக்குற. நீ நினைக்கிற மாதிரி கிடையாது அவங்க. ஒருத்தவங்க வேலை பாக்குறதை வச்சும் அப்பியரன்ஸ் வச்சும் கேரக்டர் முடிவு பண்ண முடியாது. ஹீ இஸ் ஜெம். அநாவசியமா பேசினதே கிடையாது. எனக்கு யாரு கூட எப்டி பழகனும்னு ஜென்ரல் நாலேஜ் இருக்கு. உனக்குப் பிடிச்சா என்ன பிடிக்கலனா என்ன?. அன்ட் யூ டோண்ட் நீட் டூ ஒர்ரி அபோட் தேட்" என்று கத்தி விட்டு வந்து விட்டாள்.
'எனக்கே என்னை நினைச்சா ஆச்சர்யமா இருக்கு. மூனு தடவை பாத்தவருக்காக நாலு வருஷமா கூட ப்ரண்டா இருக்குறவன் கிட்ட சண்டை போட்டேனா?. மாறா நீங்க என்னமோ பண்றேங்க? உங்க கண்ணுல இருக்குற எதிர்பார்ப்பு என்கிட்ட எதையோ எதிர்ப்பார்த்து நிக்குது. மனசுக்கு இதான்னு அடிச்சு சொல்லத் தெரியலயே' என்று அவன் நினைவிலே உலன்றவள், 'கால் பண்ணி பார்ப்போமா?. இந்த நேரத்தில் கால் பண்ணா தப்பா எடுத்துப்பாங்களா?. இல்லை அவங்க இந்த டைம் தான ப்ரியா இருப்பாங்க. கால் பண்ணி பாக்கலாம். எடுக்கலனா வேண்டாம்' என்று நினைத்தவள் அவனுக்கு அழைக்க.. அந்தப்புறம் பிஸி என்று வந்தது. திரும்ப அழைக்க மறுபடியும் பிஸி என்று வரவும், 'யார்கிட்ட இவ்ளோ நேரம் பேசிட்டு இருக்காங்க?' என்ற யோசனையிலே மொபைலில் கவனம் பதித்தவாறு மெத்தையில் படுத்திருந்தாள்.
அங்கு மாறனோ பைரவியிடம் பேசிக் கொண்டிருந்தான். பொது நல விசாரிப்புகளுக்குப் பின், "மாறா.. உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்" என்றாள் பைரவி.
"சொல்லுக்கா"
"உனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிப்போமா?. இப்போ பார்த்தா தான அடுத்த வருஷம் கல்யாணம் முடிக்க முடியும்"
அவள் கல்யாணம் என்கவும் அவன் தேவதைப் பெண்ணின் முகம் கண்ணில் மின்னல் வெட்ட,"க்கா! எனக்கெதுக்கு இப்போ கல்யாணம். எனக்கு என்ன அவ்ளோ வயாசாகிருச்சா என்ன?" என்று அவசரமாய் மறுத்தான்.
"அடுத்த வருஷம் வந்தா இருபத்தி ஏழு ஆகுதுடா. அது போதாதா கல்யாணம் பண்ண. இப்போல்லாம் நம்மூர்ல இருபது இருபத்தி ஐந்து வயசுலலாம் லவ் பண்ணி கூட்டிட்டு வந்துருறாய்ங்க. நீ என்னடானா இருபத்தி ஏழு வயசுல கல்யாணம் பண்ணா வேண்டாம்ங்குற"
"அப்படி அவசரப்பட்டு வீட்டை விட்டு ஓடிப்போய் சீக்கிரம் கல்யாணம் பண்ணி குடும்ப பொறுப்பை ஏத்துக்க முடியாம எவ்ளோ கஷ்டப்படுறாங்கனு நானும் நிறைய பேரு கிட்ட பாக்கிறேன் கா. இன்னும் கடன், உனக்கு போட வேண்டிய நகைனு நிறைய பொறுப்புகள் இருக்கு எனக்கு"
"அதெல்லாம் பார்த்தா குடும்பஸ்தனாக முடியுமா?"
"இல்லக்கா இப்போதைக்கு வேண்டாம். மொத கடனை அடைக்கனும். இருக்குற கடன்ல குடும்பம் வேற வந்துச்சுனா வர்றவ கிட்டயும் பஞ்சப்பாடு பாட முடியாது. நம்மளை நம்பி வர்றவளுக்கும் ஆசாபாசம்னு நிறைய இருக்கும். அதைக்கூட பூர்த்தி செய்ய முடியாத இடத்துல நான் இருக்கக் கூடாது. அப்புறம் அதுவே ரெண்டு பேத்துக்கும் பிரிவை உண்டு பண்ணிரும்"
"அப்டிலாம் ஆகாதுடா. சொந்தத்துக்குள்ள பொண்ணு பார்த்தா நம்ம நிலைமைய புரிஞ்சு நடந்துக்குவா"
"ஏன்கா அப்போ பொண்ணைப் பாத்துட்டு தான் பேசுறாப்புலயே"
"உன்கிட்ட கேட்காம எதுவும் முடிவு பண்ண மாட்டேன்டா. இன்னைக்கு மாரிமுத்து மாமா போன் பண்ணாங்க. அருணாவை உனக்கு கல்யாணம் பண்ண கேட்டாங்க. எனக்கு திடீர்னு கேட்கவும் என்ன சொல்றதுன்னு தெரியல. உன்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன்"
"க்கா. எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம். நான் பிஜி வேற பண்ணிட்டு இருக்கேன். அதை முடிச்சு அதுக்கேத்த வேலை கிடைக்கானு முயற்சி பண்ணனும். கல்யாண எண்ணமே வரலகா. அதுவும் அருணா வேண்டவே வேண்டாம்"
"ஏன்டா அவளுக்கு என்ன குறைச்சல்?"
"அவளுக்கு குறை இருக்குனு நான் சொன்னேனா?. சொந்ததுக்குள்ளயே வேண்டாம்கா. அன்னைக்கு அம்மா அப்பா சாவும் போது தூக்கிப் போட காசு இல்லாம விவரம் தெரியாம நின்னப்போ அவரு என்னனு கூட கேட்கல. இப்போ எங்கிருந்துக்கா பாசம் வந்துச்சு?. அவங்க பேசுனா என்னனா என்னங்குறதோட நிறுத்திக்கோ. குடும்ப விவகாரம் வரைக்கும் சொல்லிக்கிட்டு இருக்காத. அதுவும் அருணா அம்மா இங்குட்டும் பேசும் அங்குட்டும் பேசும். அப்புறம் உன் குடும்பத்துக்குள்ளயே சண்டைய இழுத்து விட்டுறப் போது. அருணா கல்யாண விஷயமா பேசுனா நான் வேண்டாம்னு சொல்லிட்டேனே சொல்லிரு. இல்ல அப்படி சொல்றது உனக்கு சங்கடமா இருந்துச்சுனா என் ஜாதகத்துல சொந்தத்துக்குள்ள கல்யாணம் பண்ற ராசியே இல்லனு சொல்லிரு" என்றான்.
'அதானே மனதில் இருப்பது தானே வெளியில் வரும். காதலியாய் நிலானியை நினைத்த பின் மனைவியாய் அவள் தானே மணவறையில் வந்து அமர வேண்டும். எல்லாம் தெரிந்து தான் வெளில தான் பொண்ணு அமையும்னு சொல்றியோ?. மெட்ராஸ்காரி தான் நம்ம வீட்டு மருமக என்பதையும் பைரவியிடம் சொல்லி விடுடா மாறா' என்று மனசாட்சி கேலி செய்ததையெல்லாம் அவன் எங்கே கண்டு கொண்டான்.
"சரிடா" என்று மனமே இல்லாமல் போனை வைத்தாள் பைரவி.
அவள் வைக்கவும், 'இவங்களுக்கு வேற வேலையே இல்ல. அவ மவளுக்கு கல்யாணம் பண்ணனும்னா மாப்ள பார்த்து கட்டிக் குடுக்க வேண்டியது தான. என் தலைய எதுக்கு உருட்டுறாங்க. வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே அக்காவுக்கு நகை போடுறதையே உன் பாரம் என்னைக்கு குறையும்னு கேட்டவ. ப்பா அவ மட்டும் வீட்டுக்கு மருமகளா வந்தா அவ்ளோ தான். அவ என்ன நினைப்பு நினைச்சுக்கிட்டு இருக்கானு இந்த அக்காவுக்கு தெரியல. ரெண்டு வார்த்தை நல்லா பேசிட்டா போதும். உடனே அவளை கட்டி வைக்க பொறப்புட்டுருச்சு..' என்று அக்காவை நினைத்து சலித்துக் கொண்டான்.
மனதிற்குள்ளே புலம்பி வருந்தி முடித்தவன், அதன் பின்னே பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் ஒரு கால் வந்ததை நினைத்தவன், 'இந்த நேரத்துல யாரு கால் பண்ணது?' என்று எடுத்துப் பார்க்க.. மிஸ்டு காலில் நிலானி நம்பர் வரவும் உடனே திரும்ப அழைத்தான்.
அதற்காகவே காத்திருந்தவள் போல் உடனே ஏற்றவள், "என்ன பண்றேங்க மாறா?. இவ்ளோ நேரம் யாருகிட்ட பேசிட்டு இருந்தேங்க?. லைன் ரொம்ப நேரம் பிஸியா இருந்தது?" என்று கேள்விகளை அடுக்க.
அவள் கேள்வியில் குறுநகை புரிந்தவன், "அக்காட்ட பேசிட்டு இருந்தேன்"
"ஓ அக்காவா.." என்றவளின் மனம் நிம்மதி அடைந்தது. "இவ்ளோ நேரம் அப்டி என்ன பேசுனேங்க?"
"ம்.. பொண்ணு பாத்துருக்காங்களாம். எப்போ கல்யாணத்தை வச்சுக்கலாம்னு கேட்குறாங்க" என்று சிரித்துக் கொண்டே ஒரு பிட்டைப் போட.
"எதே.. கல்யாணமா!" என்று படுத்திருந்தவள் வேகமாய் எழுந்து அமர்ந்தவளுக்கு மனதெல்லாம் படபடவென இருந்தது.
அவளின் அதிர்வு இந்தப் பக்கம் வரை தெரிய அவன் கமுக்கமாய் சிரித்துக் கொண்டான். அவளின் அதிர்ச்சி அவனுக்கு மேலும் சுவாரஸ்யத்தைக் கொடுக்க, "ம் ஆமா. எனக்கும் கல்யாண வயசு வந்துருச்சுல"
"உங்களை பார்த்தா அப்டிலாம் தெரியலயே. காலேஜ் படிக்குற பையன் மாதிரி தான் தெரியிறேங்க. இப்பவே கல்யாணமா?"
"அப்டியா? சின்னப் பையன் மாதிரியா இருக்கேன்" என்றவன் தாடையை தடவிக் கொண்டவன், "எங்க ஊரு சைடுலலாம் சீக்கிரமே பண்ணிடுவாங்க. இதுவே லேட் தான்" சிரிக்காமல் மேலும் கதையை அளந்து விட்டு அவள் பிபியை உயர்த்தினான்.
"நீங்க பொண்ணு பார்த்துட்டேங்களா?. உங்களுக்கு பிடிச்சுருக்கா?". இதெல்லாம் தனக்குத் தேவையில்லாதது என்று அவள் மூளைக்கு எட்டியது மனதிற்கு எட்டவில்லை. தான் ஏன் இவ்வளவு அதிர்ச்சி அடைகிறோம் என்று உணராமலே மனம் சோகத்தைத் தத்தெடுத்துக் கொள்ள அது முகத்தில் பிரதிபலித்தது.
சில நிமிடங்கள் மௌனமாய் தலையணையை கையில் வைத்திருந்த பேனா முனையால் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தாள். உன் சோகத்துக்கு என்னை ஏன்டி குத்திக் கிழிக்குற என்று அது கதறிக் கொண்டிருந்தது.
சில நிமிட மௌனத்திற்குப் பின், "நிலா.." என்றழைத்தான் மெதுவாக.
"ம்ம்"
"ஏன் சைலண்ட் ஆகிட்ட?"
"இ.. இல்லயே.. தெரியல" என்றவள் மீண்டும் மௌனமானாள்.
அவனுக்கு சுவாயஸ்யம் கூட மனதிற்குள் மத்தாப்பு வெடித்தது. "கல்யாணம்லாம் இல்ல சும்மா சொன்னேன்" என்று முடிக்கவில்லை.
"அப்போ என்கிட்ட பொய் சொன்னேங்களா?. போங்க மாறா. பேசாதீங்க" என்று சினுங்கினாள்.
"ஹாஹா.. நானென்ன பண்ணேன்?. அக்கா கல்யாண விஷயமா தான் போன் பண்ணா. நான் தான் இப்போ வேண்டாம்னு சொல்லிட்டேன்"
"ஓ.." என்றவளுக்கு அதுவரை இருந்த பதட்டம் மறைந்து இயல்பானது மனம்.
"இந்த வாரமும் சென்னை வர்றேங்களா?" என்று எதிர்பார்ப்போடு கேட்க.
"வந்துட்டா போச்சு" என்று குதூகலமாய் சொல்ல.
"வந்துட்டா போச்சா?" என்று சந்தேகமாய் புருவம் சுருக்கியவள், "இந்த வாரம் சென்னை டிரிப் இருக்குல?"
"ஹான்.. அதான். அதான்.. இருக்கு. ப்ரண்ட் தான் போறதா இருந்தான். ஆனா.." என்று அவன் ஆரம்பிப்பதற்குள், "இல்ல நீங்க வாங்க" என்று இவள் முடிக்க, "ம் வர்றேன்" என்று இந்தப்பக்கம் தலையாட்டினான்.
தொடரும்.