அத்தியாயம் 2
விடிந்தும் விடியாமலும் உள்ள காலை வேளை.. சரியாக காலை ஐந்து மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து சேர்ந்தது பொதிகை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில். நான்கு நாற்பதிலிருந்து மகளுக்கு அழைத்து ரெடியாக இருக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார் மனோகர்.
"அய்யோ ப்பா. தூங்கல முழிச்சுட்டு தான் இருக்கேன். இது உனக்கே நியாயமா இருக்கா?. அரை மணி நேரத்துல இருந்து கால் கட் பண்ணாம லைன்லே இருக்க. நான் எப்டி என் ப்ரண்ட்க்கு கால் பண்ணி சொல்றதாம். இந்தா ட்ரெயின் நின்னுடுச்சு. இறங்கிட்டேன். போதுமா?. இப்போவாது போனை வைப்பா.." என்று தந்தையை திட்டி விட்டு, "நீங்க என்னடானா என்னை பேம்பர் பண்ண வேண்டியது. அந்த அம்மா என்னடானா விவரமே இல்லனு திட்ட வேண்டியது. ரெண்டு பேருக்கும் ஒத்தப் புள்ளையா பொறந்துட்டு நான் படுற பாடு இருக்கே.. அதுக்குத் தான் ரெண்டு மூனு புள்ளைங்க இருக்குற வீட்ல பொறக்கனும்ங்குறது. பேசாம நான் வர்றதுக்குள்ள அதுக்காது ரெடி பண்ணுங்க டாடி. போயி உங்க அருமை மனைவி புவனா கிட்ட போய் பேசுங்க. இப்போ வைங்க" என்று சத்தமாகவே கத்தி விட்டு வைக்க.. பின்னால் இறங்கிய அதே கருப்புச் சட்டைக்காரன் அவள் பேசியதையெல்லாம் காதில் வாங்கியவன் மென்னகை புரிந்தான்.
சிந்துஜாவுக்கு அழைத்து, "ம் இறங்கிட்டேன்டி. எங்க வரனும்? யார் கூப்ட வந்துருக்கா?"
"டிரைவர் அண்ணா வெளில வெயிட் பண்றாங்கடி. நம்பிக்கையானவங்க தான். வண்டி நம்பர்***. பாத்து ஏறிவா" என்று அவள் வைத்து விட..
"இந்த இருட்டுக்குள்ள வண்டிய எங்கத் தேடுறது?. நாமளாம் நம்ம வாழ்நாள்ல இந்த டைம்மே பார்த்ததேயில்லை. இந்த சிந்து பக்கி வட கோடில இருந்து தென்கோடி வரைக்கும் நம்மளை வர வச்சுட்டா.." என்று புலம்பிக் கொண்டே ரயிலில் இருந்து இறங்கிய ஆட்கள் ஸ்டேஷனில் இருந்து வெளியே செல்லும் பாதையை பின் தொடர்ந்தவள் வெளியே சிந்து சொன்ன வண்டி நம்பரைத் தேடினாள்.
அந்த கருப்புச் சட்டைக்காரனும் சிந்து சொன்ன வண்டியின் அருகே தான் சென்றான். "டேய் கெஸ்ட் வந்துட்டாங்களா?. எத்தனை பேரு வாறாங்களாம்?. கால் பண்ணி பேசுனியா?" என்று அந்த டிரைவரிடம் கேட்க..
"பேசிருக்கேன்டா. ஒரு பொண்ணு தான் வருதுன்னு சொன்னாங்க. வரும். நீயும் ஏசி கோச் தான?. நீ வந்துட்ட. அந்தப் புள்ளய இன்னும் கானும்?. ஆமா உனக்கு எப்படிடா இருந்துச்சு ரயில் பயணம்?"
"அதை ஏன்டா கேட்குற.. க்ளைன்ட் ஏசி கோச்ல வேற புக் பண்ணிக் குடுத்துட்டாரு. ஏதோ அடைச்சுப் போட்டாப்புல இருந்துச்சு உள்ள. நமக்குலாம் சிலுசிலுனு காத்து முகத்துல மோத இருட்டைப் பார்த்துக்கிட்டே வர்ற ஸ்லீப்பர் கோச் தான்டா செட்டாகும். குளிரு வேற படுத்தி எடுத்துருச்சு. சரி அந்தப் புள்ள வருதானு பார்த்து ஏத்து. நான் உள்ளே உக்காந்துருக்கேன்" என்று உள்ளே ஏறி அமர்ந்து கண்ணை மூடிக் குட்டித் தூக்கத்திற்குத் தயாரானான் மாறன் என்ற இளமாறன்.
ஒருவழியாக வண்டியைத் தேடி வந்த நிலானி, "அண்ணா சிந்துஜா அனுப்பி வச்ச வண்டி இதான?" என்று கேட்க.
"ஆமா மா. ஏறுங்க" என்று அவள் பெட்டியை வாங்கி பின் சீட்டில் வைத்து விட்டு, அவள் ஏறவும் காரை இயக்கினான்.
காரில் ஏறியதும் தோழியிடம் சொல்லியவள், இருளோடு அந்த ஊரின் அழகை விழிகளில் நிரப்பிக் கொண்டே வந்தவள், "ண்ணா.. இங்க பால்கோவா பேமஸாமே?. அந்த அளவுக்கு நல்லா இருக்குமா?" என்று டிரைவரிடம் பேச்சைக் கொடுக்க..
"ஆமா மா. வாங்கி சாப்டு பாருங்க. டேஸ்ட் நாக்குலே நிக்கும். எங்கேயுமே இந்த மாதிரி முழுக்க முழுக்க பாலுலே பால்கோவா செய்ய மாட்டாங்க. டைம் எடுத்து மெதுவா பண்றதால நல்லா டேஸ்டா இருக்கும்" என்றவர் பிறந்ததில் இருந்து பால்கோவாவின் சுவையறிந்து வளர்ந்தவருக்கு சாப்பிடாமலே நாக்கில் எச்சில் ஊறியது.
அவர்கள் இருவரின் பேச்சில் அருகில் இருந்தவன், "ப்ச்" என்று சீட்டில் அந்தப் பக்கம் திரும்பி படுத்தான். டிரைவர் பக்கத்து சீட்டில் ஒரு ஜீவன் இருப்பதை இன்னும் நிலானி கவனிக்கவில்லை.
"நீங்க சொல்லும் போதே சாப்பிடனும் போல இருக்குணா. போகும் போது ஊருக்கு வாங்கிட்டுப் போகனும். அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும். அப்புறம் ஆண்டாள் கோவில் இங்க பேமஸ்னு தெரியும். அது எங்கணா இருக்கு?"
"இங்க பஸ் ஸ்டாண்டு பக்கம் தான்மா. போயிட்டு போங்க. ரொம்ப நல்லா இருக்கும்"
"ம் கண்டிப்பா ணா. அப்புறம் என்ன பேமஸ் இங்க?" என்று அடுத்ததை ஆரம்பிக்க..
அதுவரை அவள் பேசியதெல்லாம் காதில் விழ தூங்க முடியாமல் முகத்தை சுருக்கி சுருக்கி திரும்பி திரும்பி படுத்த டிரைவர் சீட் அருகில் இருந்தவன், இவள் கேள்விகளை அடுக்கவும், "ஏய் ச்சே.. எவ அவ கேள்வியா அடுக்குறது?" என்று எட்டிப் பார்த்தவன், 'இவளா?' என்று சில விநாடிகள் விழிகள் அதிர்ந்தது போல் இருந்தது.
அவன், 'எவ அவ' என்று கேட்கவும் புதிதாய் ஒரு ஜீவன் அங்கிருப்பதைக் கண்டு அதிர்ந்தவள், "நீ.. நீங்க யாரு?. நீங்க எங்கிருந்து வந்தேங்க?" என்று அதிர..
"ம்ம்.. வானத்துல இருந்து காருக்குள்ள குதிச்சேன்" என்று முன்னால் திரும்பியவன், "வாயை மூடிட்டு வர மாட்டியா?. நொய் நொய்யினு கேள்வியா அடுக்குற?. கல்யாணத்துக்கு தான வந்த.. மொத கல்யாணத்தை முடிச்சுட்டு அப்புறம் என்னென்ன இருக்குனு கேட்டு ஊர் சுத்து. இப்போ மனுஷனை கொஞ்சம் தூங்க விடும்மா" என்று சிடுசிடுக்க..
'அட எவன்டா இவன்?. தெரியாம உள்ளே வந்து உட்கார்ந்துட்டு பேச்சைப் பாரு. சிடுமூஞ்சி.. புதுசா ஊருக்கு வர்றவங்க நாலு விஷயத்தை கேட்கத்தான் செய்வாங்க' என்று முனுமுனுக்க..
அவள் சொன்னது காதில் விழுந்ததோ என்னவோ இதழ் பிரியாமலே சிறு புன்னகை சிந்தியவன், "வையனும்னா சத்தமாவே வையிங்க" என்று திரும்பாமலே சொல்ல..
'வையனும்னா?' என்கவும் முழித்தவள், சிந்துஜாவுடன் இருந்த மூன்று வருடத்தில் அந்த ஊரின் பாஷையைக் கற்றுக் கொண்டதால், 'ஓ திட்டுறதை சொல்றானா?. ஆமா நாம மனசுல திட்டுனதை எப்டி இவன் கண்டுபிடிச்சான்?. எதுக்கும் நாம சைலன்டாவே இருப்போம். அதான் நல்லது' என்று அதன் பிறகு அமைதியாகி விட்டாள்.
அதுக்கப்புறம் அவனுக்குத் தான் தூக்கம் பறிபோனது. புது இடம் எப்டி இருக்கும் என்று ஆர்வமாய் கார் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து விழிகளை சுழட்டி சுழட்டி பார்த்துக் கொண்டு வந்தாள். விடியலில் வானில் மறைந்து இங்கே உதிக்குதோ அந்த நிலவு என்று மனதில் ஐயம் எழ, முன் கண்ணாடியில் அவள் முகம் பார்த்துக் கொண்டே வந்தான் மாறன். சிலரின் பேச்சு மனசுக்கு ஆறுதலா இருக்கும் சிலரின் குரல் மனதை வருடும். ஆனால் அவளின் முகமே அவனுக்கு உடல் சோர்வையும் மனச் சோர்வையும் ஒருசேர போக்குவது போல் இருந்தது. விழிகள் இரண்டும் சைடு மிர்ரரில் தெரிந்த அவளது முகத்தில் இருந்து அகலுவேனா என்றது. அவன் மனம் போகும் போக்கை இன்னும் அவன் உணரவில்லை. சுற்றி நடப்பது எதுவும் சுயநினைவில்லாமல் வெறித்துக் கொண்டு வந்தான் அவளை.
சிந்துஜா வீடு வரவும், "தேங்க்ஸ் ணா" என்று இறங்கிக் கொண்டாள். அன்று இரவு தான் பரிசம் போடுவது. கிராமத்தில் என்கேஜ்மென்ட் போலல்லாம் எல்லாரும் வைக்க மாட்டார்கள். திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு பெரியவர்கள், மாப்பிள்ளை பெண் பெற்றவர்கள், தாய்மாமாமார்கள் அமர்ந்து உறுதி செய்து கொள்வது தான் பரிசம் போடுவது. ரிசப்ஷன் என்கேஜ்மேன்ட் எல்லாமே அது தான்.
அந்த ஊரிலே சற்று பெரிய திருமண மண்டபத்தில், "ண்ணே.. மேடைல டெக்கரேஷன் கொஞ்சம் சரி பண்ணுங்க. சாப்பாடு வேலை எல்லாம் ஸ்டார்ட் பண்ணிட்டாங்களா?.." என்று அடுத்தடுத்து ஒவ்வொரு இடமாக சென்று பரபரப்பாய் சரிபார்த்துக் கொண்டிருந்தான் மாறன். யூஜி டிகிரி முடித்து விட்டு போதிய சம்பளத்திற்கு வேலை கிடைக்காமல் இதுபோல் கல்யாண டெக்கரேஷன், சமையல் கான்ட்ராக்ட், கார் டிராவல்ஸ் வைத்து நடத்துகிறான். அவனுக்கு செய்யும் தொழில் சுத்தமாக இருக்க வேண்டும். வேலையாளிடம் ஒப்படைத்து எனக்கென்ன என்று அமரும் ரகமில்லை அவன்.
"ஏன்டா மாறா.. காலைல தான் சென்னைல இருந்து வந்து இறங்கிருக்க. வீட்டுக்குப் போயி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வராம நேரா மண்டபத்துக்கு வந்துட்ட?" என்றான் அவனது நண்பன் குமரேசன். மாறனுக்கு உதவியாக இருப்பவன்.
"ரெஸ்ட் எடுத்தா இந்த வேலையெல்லாம் பாக்க முடியுமாடா?. பாதி வேலைகூட முடிக்காம வச்சுருக்காங்க. நான் ஒருதடவை எல்லாத்தையும் பார்த்தா தான் எனக்கு திருப்தியா இருக்கும். பொண்ணு வீட்டு ரிலேஷன் யாராவது வந்தா போய் கூப்டு வர கார் கேட்டுருந்தாங்கடா. கார் சாவி உங்கிட்ட தான இருக்கு?. அவங்க போன் பண்ணா எடு. சாயந்தரம் பொண்ணு வீட்ல இருந்து நாலஞ்சு டிரிப் கூப்டு வர்ற மாதிரி இருக்கும். இந்த மேடை டெக்கரேஷன்லாம் கொஞ்சம் சேன்ஞ்ச் பண்ண சொல்லிட்டு வந்துறேன்" என்று நிற்காமல் ஓடினான்.
மாறன்- கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் வரை இளமைப் பருவத்தை அனுபவித்தவன் தான். கல்லூரி இரண்டாவது வருடம் படிக்கும் போது அவனது பெற்றவர்கள் விபத்தில் தவறிவிட அதிலிருந்து குடும்பக்கடனை அவன் ஏற்றுக் கொண்டான். எப்படியோ கடன் வாங்கிப் படித்து கல்லூரிப் படிப்பை முடித்து விட்டான். அதன் பின் படிப்பிற்கேற்ற வேலை தேடி சேரும் போது தான் அந்த சம்பளம் தன் சாப்பாட்டு செலவுக்கே பத்தாது என்று புரிந்தது. இதில் மூத்த அக்கா வேறு. நல்ல சம்மந்தம் வரவும் பின்னால் நகை போடுகிறோம் என்று சொல்லி திருமணம் முடித்து வைத்து விட்டனர் மாறனின் பெற்றவர்கள். நகை போட்டு சீர் சினத்தியோடு செல்பவளே மாமியார் வீட்டில் இடிபட்டுக் கிடக்கும் போது வெறும் கையோடு சென்ற மாறனின் அக்கா பைரவிக்கு தினம் மாமியாரின் குத்தல் பேச்சில் தான் விடியும். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று இருந்த அவளது கணவனும், முதலில் மனைவிக்கு ஆதரவாக பேசியவன் அதன் பின், 'அம்மா சொல்வதும் சரிதானே. உன் வீட்டில் பேசி சீக்கிரம் நகை போடச் சொல்லு' என்று நாசூக்காய் விலகிக் கொள்ள.. அதன்பின் பெண் நெஞ்சம் தஞ்சம் கொள்வது பிறந்த வீட்டில் தானே. 'அக்காவுக்கு கொஞ்சம் கொஞ்சமா இருபது பவுன் நகையை போட்டுறேன்' என்று மாறன் வாக்குக் கொடுக்க.. ஏதோ மாமியார் வீட்டில் தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறாள் பைரவி.
"நாம இல்லனா ஒரு வேளையும் ஒழுங்கா பண்ண மாட்டாய்ங்க.. டேய் அதை இழுத்து நல்லா கட்டுடா. இப்பவே கீழ சாய்ஞ்சுக்கிட்டு இருக்கு. சின்னப்புள்ளைக புடிச்சு இழுத்துச்சுனா மொத்தமா சரிஞ்சு கீழ விழுந்துரும். நாளைக்கு சாய்ந்தரம் வரைக்கும் இருக்கனும். அதை மனசுல வச்சுக்கிட்டு டைட்டா கட்டு" என்று வேலை செய்பவனை அதட்டல் போட்டுக் கொண்டிருந்தான்.
வீட்டில் இறங்கியதிலிருந்து தோழிகள் இருவரும் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தனர். மதியத்திற்கு மேல் மணப்பெண் சிந்து பிஸியாகி விட நிலானிக்கு பொழுது போகவில்லை. மாலை வேளை வரவும் மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண் அழைப்பிற்கு வர.. நிலாவும் மணப்பெண் தோழிகளுடன் தோழியாக இணைந்து கொண்டாள். அவளுக்கு அன்று இரவு நடப்பது ரிசப்ஷன் என்றே நினைத்து அதற்கேற்ப ரோஸ் வண்ண சோலியில் தேவதை போல் ரெடியாகி இருந்தாள்.
எப்போதும் பார்க்கும் தோழியை விட இன்று மணப்பெண்ணுக்கே உரிய வெட்கம் முகத்தில் குடிகொள்ள கூடுதல் அழகாக தெரிந்த தோழியிடம், "அடியே சிந்து.. இன்னிக்கு என்ன உன் கன்னமெல்லாம் ரோஸ் கலர்ல இருக்கு?. மாமாவை நினைச்சு வெட்கமாடி. பாத்து டி தாலி கட்டுறதுக்கு முன்னாடியே மாமா தூக்கிட்டு போய்டப் போறாரு" என்றுசிந்துவை கிண்டல் செய்ய..
"கிண்டலா போடி. என்னை விட
கல்யாணத்துக்கு வந்த
சொந்தக்காரங்களாம் உண்ண
தாண்டி பாக்குறாங்க. சும்மா
ஏன்ஜெல் மாதிரி இருக்க இந்த
டிரஸ்ல. எங்க ஊர்ல பசங்களாம்
இந்த மாதிரி சோலி போட்டுலாம்
பாத்துருக்க மாட்டாங்க. நீ பால்கோவா மாதிரி வேற இருக்க.
அநேகமா என் கல்யாணம்
முடியுறதுக்குள்ள உனக்கு ஒரு
ப்ரோபோசலாது வரும். அப்டி
இல்லனா அட்லீஸ்ட் ஏதாவது ஒரு சொந்தக்காரங்க வந்தாவது உன்
டீடெயில்ஸாவது கேப்பாங்க பாரு. அப்டி கேட்டு வந்தா ஓகே சொல்லிடு.நீயும் எங்க ஊர் பக்கம் செட்டில்
ஆகிட்டேனா ரெண்டு பேரும்
பிரியாம இருக்கலாம்" என்று நிலானியிடம் சொல்ல..
"அப்டி வந்தா பாப்போம். மொத உன் கல்யாணம் முடியட்டும் டி" என்று தோழிகள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் கேலியும் கிண்டலுமாக பேசிக் கொள்ள. அதற்குள் மணப்பெண்ணை அழைத்து பரிச சேலையைக் கொடுத்து மாற்றி வரச்சொல்லவும் அதன் பின்னான
சடங்குகள் ஆரம்பித்தது. சிந்துஜா பிஸியாகி விட அங்கிருந்த வாண்டுகளுடன் ஐக்கியமாகி விட்டாள் நிலானி.
"டேய் டேய் இருடா.. நான் போய் போஸ் குடுத்த பிறகு போட்டோ எடு. நல்லா அழகா எடுக்கனும். இந்த லைட்ஸ்லாம் கவராகனும்.." என்று பின்னால் திரும்பி பத்து வயது சிறுவனிடம் சொல்லிக் கொண்டே நடந்தவள் பாறை போல் இருந்த கரடு முரடான மாறனின் நெஞ்சில் முட்டி நின்றாள்.
தொடரும்..