• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முதலும் முடிவுமாய்-21

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
122
59
43
Chennai
அத்தியாயம் 21

கதவைத் திறந்ததும் வெளியை முறைத்துக் கொண்டு நின்றிருந்தவளைக் கண்டு, "நிலா.. நீ எப்டி இங்க?. இந்த நேரத்துல இங்க என்ன பண்ற?. காலேஜ் போகலயா இன்னைக்கு?" என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனவன் திடீரென பேச்சை நிறுத்தி தன்னைக் குனிந்து கண்டவன், அவள் முன் சட்டை இல்லாமல் நிற்பதறிந்து ஓடிச் சென்று சட்டையை எடுத்துப் போட்டு பட்டனை மாட்டிக் கொண்டே திரும்பவும் அதே இடத்திற்கு வர அதற்குள் அவளைக் காணவில்லை.

'எங்க போயிட்டா அதுக்குள்ள?. வந்தா தான?. அவ நினைப்பாவே இருக்குறதால என் கற்பனையா?' என்று சுற்றும் முற்றும் விழிகளை அலைய விட்டுத் தேட, "நான் இங்க இருக்கிறேன்" என்ற குரலில் திரும்பியவன், எப்போதோ அவள் சோஃபாவில் சென்று அமர்ந்திருந்தாள்.

"ஏய் எப்போ உள்ளே வந்த?" என்று அவள் அருகில் அமர.

"ம் நீங்க தான் பார்க்க வர்றதில்லை. நான் வரக் கூடாதா?"

"நான் தான் வேலை இருக்குனு சொன்னேன்ல நிலா. இது நம்ம வீடு இல்லை. அதுவும் நான் தனியா இருக்கும் போது நீ வந்தா அக்கம் பக்கத்துல இருக்குறவங்க என்ன நினைப்பாங்க?. அப்புறம் அது என் ப்ரண்ட்க்கு தான் பிரச்சினை ஆகும்"

"பிரச்சினை ஆகுற அளவுக்கு இங்க என்ன நடக்கப் போகுது?. சும்மா மீட் பண்ண தான வந்தேன். எப்பவும் நீங்க தான் என்னைத் தேடி வரனுமா?. நான் வரக் கூடாதா?"

அவள் கோவத்தில் சிரித்தவன், "வரலாமே.. ப்பா பயங்கர சூடா இருக்க போலயே. நிலா சூரியனா மாறிட்டாளா?" என்று அவள் முகம் நோக்கி குனிந்து கேலி செய்ய..

"உனக்கு கேலியா இருக்கா?. உனக்கு என்மேல வரவர லவ்வே இல்ல" என்று அவன் சட்டைக் காலரைப் பற்றியவள், அவன் பின்னால் சாய அவனோடு அவளும் சாய்ந்தாள் சோஃபாவில். அவளை இத்தனை நாள் காணாத ஏக்கம், அருகாமையில் அவள் பூமுகம் அனைத்தும் அவனை வேறு உலகிற்கு கொண்டு சென்றது.

அவள் நெருக்கத்தில் உடலும் மனமும் என்னென்னவோ ஆசை கொள்ள, தன் நெஞ்சில் சாய்ந்து அவன் உணர்வுகளை மொத்தமாய் சுருட்டி சூடேற்றிக் கொண்டிருந்தவளை கீழே தள்ளி மேலே படர்ந்தவன் விழிகளை அவள் முகத்தில் படர விட்டான். கண்ணில் காதலோடு தன்னை அணைத்துக் கொண்டிருப்பவளை மொத்தமாய் பருகத்தான் மொத்த செல்களும் ஆர்ப்பரிக்கிறது. இருவரின் மூச்சுக் காற்றும் சூடேறி மோன நிலைக்கு கொண்டு செல்ல அவனின் அழுத்தமான உதடுகள் அவளின் ரோஜா இதழ்களோடு பொருந்தியது. யானைப் பசிக்கு சோளப்பொறி போல் அவளின் மேலுள்ள தீராத காதல் பசிக்கு இந்த இதழ் தேன் தான் சோளப்பொறி. நாக்கில் ஒட்டிய அவள் தேனீர் அமுதம் தொண்டைக் குழிக்குள் இறங்கி வயிற்றை சென்றடைய மொத்த உடம்பும் ஆட்டம் கண்டது மோகத்தீயில் பற்றிக் கொண்டு. கழுத்தில் மாலையாக இருந்த கைகள் மெல்ல இறங்கி அவன் சட்டையை அவன் மார்பு முடியோடு இறுக்கிப் பிடித்திருக்க, அவன் நெஞ்சு முடி முதற்கொண்டு குத்திட்டு தாபத்தீயை பற்ற வைத்தது. இருவரும் சில விநாடிகளில் பிரிந்து மூச்சு வாங்கினர். எதிர்பாராத முதல் முத்தம் இருவருக்கும் ஸ்பெஷலானது.

"வேணா நிலா.. தள்ளி இருடி. அப்புறம் ஏதாவது விபரீதமாகிருச்சுனா நடக்குறதுக்கு நான் பொறுப்பில்லை. மொத்தக் காதலையும் தாபத்தோடு கொட்டுனா நீ தாங்க மாட்ட. ரெண்டு பேரும் சிக்கி முக்கி கல் இல்லடி உரச உரச மெதுவா பத்துறதுக்கு. பெட்ரோல் ஊத்தி வச்ச மாதிரி நீ பக்கத்துல வந்தாலே பக்குனு பத்திக்கும்" என்று ஒரு மார்க்கமாக சொல்லி சிரிக்க.

"ஆமா ஆமா பண்ணிட்டாலும்" என்று அவள் சலித்துக் கொண்டாள்.

"ஏன்டி சொல்லமாட்ட.. செவனேனு இருக்குற பசங்கள உசுப்பேத்தி மூடேத்தி விட்டுட்டு அப்புறம் ஏதாவது எக்குத்தப்பா நடந்து போச்சுனா எல்லாத்துக்கும் பசங்க தான் காரணம்னு சொல்லி எங்கமேல மொத்த பழியவும் போட்டு கண்ணைக் கசக்க வேண்டியது. தாலிகட்டிட்டு வேலை காட்டலாம்னு இருக்குற நல்ல பையன் மனசை டெம்ப்ட் பண்ணாதடி தங்கம்"

"அப்டியே வேலை காட்டிட்டு தான் மறுவேலை பார்ப்பாரு. அவனவன் லவ் பண்ண பொண்ணைக் கூட்டிட்டு பீச் பார்க்குனு வண்டில வச்சு ரவுண்ட்ஸ் அடிச்சுட்டு இருக்கான். இதுல இவரை பார்க்க நான் ஓடோடி வந்தா ஓவரா பண்ணிட்டு இருக்கேங்க"

"ஏன் நிலா.‌ உனக்கும் பசங்க அவங்க லவ்வரை கூட்டிட்டு சுத்துற மாதிரி ஆசை இருக்கும்ல. அதுவும் சென்னைல சொல்லவே தேவையில்லை. நிறைய பேரை பார்ப்ப. உன்னை நான் ரொம்ப ஏங்க வைக்கிறேன்ல" என்று அவள் இரு கன்னங்களையும் தாங்கி வருத்தத்துடன் கேட்க.

அவன் வருத்தத்தில் தன் தவறை உணர்ந்தவள், "மாறா.. அப்படி இல்லவே இல்லை. தினமும் பார்த்துப் பேசி ஊர் சுத்துனா தான் லவ்வா?. தினமும் பாக்குறதை விட போன்லயே பேசி நீ எப்படா வருவனு உன்னைப் பார்க்க ஏங்கி காத்திருக்குறதுல இருக்குற பீல் இருக்கே.. அதை வார்த்தைல சொல்ல முடியாது. பாலைவனத்துல தண்ணி இல்லாம கெடந்தவனுக்கு அடைமழை பொழிஞ்ச மாதிரி அப்படி இருக்கும்" என்று அவள் சிலாகித்துக் கூற.. அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமொன்றை வைத்தான் கலங்கிய விழிகளோடு. அவனைப் புரிந்து கொள்ளும் அவள் மனமே அவனுக்கு நிறைவாக இருந்தது.

"உன்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சா.. சென்னை வரை வந்து உன்னைப் பாக்கலனா எப்டி? அதான் காலேஜ் கட் அடிச்சிட்டு ஓடி வந்துட்டேன்" என்று கண் சிமிட்டினாள்.

"அதுக்காக இந்த அட்ரெஸ் தேடி அலைஞ்சு இந்த வெயில்ல அலையனுமா?. உன்னை கஷ்டப்படுத்தக் கூடாதுனு தான் வர சொல்லலடி"

"போ மாறா.. நான் உன்னை எவ்ளோ மிஸ் பண்றேன் தெரியுமா" என்றவளுக்கு கண்ணீர் முத்து முத்தாய் வடிந்தது. சட்டையில் பாதி பட்டன்கள் திறந்த நிலையில் இருந்ததால் கண்ணீர் நேராக அவன் நெஞ்சில் பட்டு அவனை கொதிக்க வைக்க, "நிலா.. ஏ அழுறியா? சும்மா கிண்டல் பண்ணேன்டி. எனக்கும் உன்னப் பாக்கனும்னு ரொம்ப ஏக்கமா இருந்துச்சு. காலேஜ்ல இருப்ப. உன்னை அலைய வைக்க வேண்டாம்னு தான் உன்னை வர சொல்லல. நீயே வந்துட்ட. நீ என்னைத் தேடி வந்தது எவ்ளோ ஹேப்பியா இருக்குத் தெரியுமா?. லவ் யூடி" என்று அவளை அணைத்து உச்சந்தலையில் இதழ்களைப் பதித்தான்.

அவளை சமாதானப்படுத்திய சிறிது நேரத்தில் "சாப்பிடலாமா. பசிக்குது. காலைலயும் சாப்டல" என்க. அவன் விழிகளில் அவனின் பசியறிந்தவள், "வாங்க சாப்டலாம்" என்று அவனை அழைத்து வந்து அவளே ஊட்டி விட, "நானென்ன குழந்தையாடி. இருந்தாலும் நல்லா இருக்கு" என்று அந்த நொடியை அனுபவித்துக் கொண்டே அவள் ஊட்டியதை வாங்கிக் கொண்டான்.

சாப்பிட்டு விட்டு, "உடனே கிளம்ப வேண்டும்" என்றவனை, "இப்போ தான சாப்பிட்டு முடிச்ச.. இங்கிருந்து சீக்கிரம் சென்ட்ரல் போய்டலாம். கொஞ்சநேரம் ப்ளீஸ்" என்று அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். சாய்ந்ததோடு சும்மாயிராமல், அவள் பேசும் போது அவளின் மூச்சுக் காற்று நேராக அவன் மார்பில் படர்வதும், விரல்களால் மார்பில் குடியிருந்த முடிகளை சுருட்டி விளையாடுவதும் அவன் உடலில் உள்ள மொத்த செல்களையும் தட்டி எழுப்பி அவனை நகர விடாமல் செய்தது.

"நானும் சென்ட்ரல் வரைக்கும் கூட வர்றேனே ப்ளீஸ்" என்று அவனை விட்டு இம்மியும் நகலாமல் ஒட்டிக் கொண்டாள்.

"நிலா.. ரிட்டர்ன் வரும் போது தனியா வரனும். லேட்டாகிடும்டி. சொன்னாக் கேளு. நீ ஆட்டோ புக் பண்ணி இங்கிருந்து வீட்டுக்கு கிளம்பு. நான் இன்னொரு நாள் கண்டிப்பா உன்னைப் பார்க்க வர்றேன்" என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்.

"முடியவே முடியாது" என்று அடம்பிடித்து அவனுடன் ஏறிக் கொள்ள.. அவளையும் ஏற்றிக் கொண்டே சென்ட்ரல் வந்து சேர்ந்தான். கஸ்டமர் சொன்ன ஹோட்டலில் வந்து நின்று, அவருக்கு அழைத்துச் சொல்லி விட்டுக் காத்திருந்தான்.

"இங்க வரைக்கும் வந்தாச்சுல. இப்போ கஸ்டமர் வந்துடுவாங்க. நீ கெளம்பு"

"விரட்டுறதுலே குறியா இருக்குற. இரு வீட்ல போயி நம்மளை ஆசையா பார்க்க வந்த பொண்ணை விரட்டி விட்டுட்டோமேனு என் நெனைப்புல பைத்தியம் பிடிச்சு அலையப் போறப் பாரு" என்று எந்த நேரத்தில் சொன்னாலோ அதே போல் ஆகப்போகிறது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவன் மட்டுமில்லை அவளும் கலங்கித் தவிக்கப் போகிறாள் என்பது அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை தான்.

இறங்கும் முன் அவனை இழுத்து கன்னத்தில் அவள் முதல் அச்சாரத்தைப் பதிக்க.. அவன் விழிகள் அதிர்ந்து அவளை நோக்க.. ஏனோ அவனைப் பிரியும் ஏக்கத்தில் இதழை பதித்து விட்டாள். இப்போது வெட்கம் தந்து தாக்க தலைகுனிந்து கொண்டாள்.

அவன் உள்ளுக்குள் சிலிர்த்தாலும், "ஏய் நிலா என்னடி பண்ற?. சுத்தி ஆளுங்க இருக்காங்க" என்று கன்னத்தைத் தடவியபடி கேட்க.

"ம் வீட்ல நீ குடுத்ததுக்கு ரிட்டர்ன் கிஃப்ட்"

"நிலா கலக்குற போ. தேறிட்டடி" என்று சிரித்தபடியே இருவரும் வெளியில் இறங்கும் நேரம் மனோகர் அவர்கள் இருவரையும் அதிர்ந்த விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

'தன் மகளா இது?' என்று அவருக்கு இன்னமும் நம்ப முடியவில்லை. ரோகித் சொன்ன போது கூட நட்பாக கூட இருக்கலாம் என்று தன் மகள் மேல் முழு நம்பிக்கைக் கொண்டவர், இந்தக் காட்சியைக் கண்டபின் அவருக்கு தலையே சுற்றியது.

"நிலா.." என்றவரின் கத்தலில் அவள் ஸ்தம்பித்து நின்றாள். இந்த இடத்தில் அவரைக் காண்போம் என்று எதிர்பாராதவளுக்கு உடல் நடுக்கம் கொண்டது. மாறனே அதிர்ந்து நின்று விட்டான். என்றோ ஒருநாள் தெரியத்தான் போகிறது. ஆனால் தானே சென்று சொல்வதற்கும் அவராக பார்த்துத் தெரிந்து கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதே. நிலைமையை எப்படி சமாளிக்க என்று அவனுக்கும் விளங்கவில்லை.

"நிலா இங்க என்ன பண்ற?. இதான் நீ காலேஜ் போற லட்சணமா?" என்று அவள் அருகில் வந்தவர் அவள் கன்னத்தில் ஐ விரலையும் பதிக்க.. அதிர்ந்து கன்னத்தைக் கையால் தாங்கியவள் விழிகள் கலங்கியது.

தந்தையாய் போய் விட்டார் என்பதால் அவன் கையைக் கட்டிக் கொண்டு நிற்பதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை மாறனால். கையை இறுக மூடி தனது கோவத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருந்தான் தவறு தங்கள் மேல் என்பதால்.

"வா வீட்டுக்குப் போகலாம்" என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போக, அவள் திரும்பி மாறனைக் காண.. அவன், 'போ' என்பது போல் கண்ணைச் சிமிட்டி தலையசைக்க மனோகருடன் சென்றாள்.

தொடரும்.