அத்தியாயம் 28
வெளியே ரோஹித் நின்று கொண்டிருந்தான். அவனை அந்த நேரத்தில் அங்கு எதிர்பாராத மாறன் முதலில் அதிர்ந்தவன் பின், "வாங்க ரோஹித்" என்று உள்ளே அழைத்தான்.
வீட்டை சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே சோஃபாவில் சென்று அமர்ந்தான்.
அவன் உள்ளே வரவும், "யாரு இது இளா?"
அதில் சிரித்தவன், "உன் ப்ரண்ட் தான். ரோஹித். பேசிட்டு இரு. நான் குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்" என்று உள்ளே சென்றான்.
ப்ரண்ட் என்று சொன்னாலும் அவனுடன் பேசும் எண்ணமெல்லாம் அவளுக்கில்லை. அவள் பாட்டுக்கு அவள் வேலையை பார்த்துக் கொண்டிருக்க.. ரோஹித் விழிகள் அவளிடமே இருந்தது. அமைதியாக இருக்கிறாள். திடீரென எதையோ யோசிக்கிறாள். பின் ஏதோ முனுமுனுக்கிறாள். அவள் செய்யும் அத்தனையும் வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
"இந்தாங்க டீ எடுத்துக்கோங்க" என்று கொண்டு வந்து கொடுக்க, அதை வாங்கியவன் மாறன் முகம் பார்க்க முடியாமல் தலை குனிந்தபடியே அமர்ந்திருந்தான்.
"நிலா இந்தா பால். இதைக்குடி. அத்தை இப்போ வந்துருவாங்க. வரவும் டின்னர் சாப்பிடலாம். ஓகே?" என்று கொடுக்க. அவள் ஓகே என்று வாங்கிக் கொண்டாள்.
அன்றும் சரி இன்றும் சரி. இருவரின் அன்பும் அணைப்பும் நெருக்கமும் துளி கூட குறையவில்லை. தான் செய்தது காதலே இல்லை. அது வெறும் ஆசை என்று புரிந்து கொண்டான். 'இரண்டு பேரோட காதல் எவ்வளவு ஆழமானது. அவங்க காதலைப் போய் பிரிக்கப் பார்த்தது எவ்வளவு பெரிய கேவலமான செயல்?' என்று நினைக்கவே அருவெறுப்பாக இருந்தது ரோஹித்க்கு.
"என்னாச்சு ரோஹித்?. சாப்பிடுங்க"
"மா.. மாறன் சாரி" என்றான்.
அவன் யோசனையாய் புருவம் சுருக்கியவன், "நீங்க இன்னும் பழசையெல்லாம் ஞாபகம் வச்சுருக்கேங்களா?. நான் அதெல்லாம் மறந்துட்டேன். விடுங்க. அன்னைக்கு நானும் உங்களை அடிச்சுருக்க கூடாது. நீங்க கொஞ்சம் ஓவரா பண்ணவும் கை நீட்டுற மாதிரி ஆகிடுச்சு. நீங்க எப்பவும் நிலாவோட ப்ர்ண்டா இருக்கலாம். நீங்க ஏதாவது பேசினா ஞாபகம் வந்து பழைய நிலாவா மாறினா சந்தோஷம் தான்" என்று பெருந்தன்மையாய் கூறினான்.
அதற்கு மேல் அவனால் முடியவில்லை. குற்றவுணர்வு அவன் மனதைக் கொன்றது. "மாறன் என்னை மன்னிச்சிருங்க" என்று காலிலே விழுந்து விட்டான்.
மாறன் அவன் செய்கையில் அதிர்ந்து, "ரோஹித் என்ன பண்ற?. எழுந்திரு. எதுக்கு காலுலலாம் விழுற?" என்று அவனைத் தூக்கி நிறுத்தினான். அவன் செய்கை மாறனுக்கு குழப்பத்தைக் கொடுத்தது.
"இதுக்கு மேலேயும் உண்மையை சொல்லாம இருந்தா என் மனசாட்சியே என்னைக் கொன்னுரும். நிலா.. நிலாவோட ஆக்ஸிடென்ட்க்கு நான் தான் காரணம். நான் தான் ஆக்ஸிடென்ட் பண்ணேன்" என்கவும், "என்னடா சொல்ற?" என்று அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்தான். நிலாவை விபத்துக்குள்ளாகியது ரோஹித் கார் தான்.
"அது.. அது வந்து.. நான் தான் அன்னைக்கு நிலாவை.. நிலா மேல் உள்ள கோபத்தில் அவளை பழிவாங்க அப்படி செய்தேன்" என்று சொல்லி முடிக்கவில்லை, அவன் கன்னம் பழுக்கும் அளவிற்கு மாறி மாறி அறைந்தான் மாறன்.
"ஏன்டா இப்படி பண்ண?. அவ என்னடா பண்ணா உன்னை?. ஏற்கனவே இன்னொருத்தனை லவ் பண்றானு தெரிஞ்சும் தொந்தரவு பண்ணது உன் தப்பு. அதுக்கு உன்னைத் திட்டுனா அவளை கொல்ற அளவுக்குப் போவியா?. அவளை இப்டி பண்ண உனக்கு எப்டிடா மனசு வந்துச்சு?" என்று அடித்துத் தீர்த்து விட்டான். அவனைக் கொல்லும் அளவுக்கு வெறி. கொன்றால் கூட அவன் ஆத்திரம் தீராது.
"மாறன். என்னே விட்டுருங்க. ப்ளீஸ் என்னை விட்டுருங்க. தெரியாம பண்ணிட்டேன்" என்று ரத்தக்களறியாய் நின்றிருந்தவனின் மேல் துளியும் இறக்கவில்லை மாறனுக்கு. அவன் நிலவுப் பெண்ணை சிதைத்து சித்தம் கலங்க வைத்தவன் உயிரோடு இருக்கவேக் கூடாது என்று அடித்து துவம்சம் செய்தான்.
ஒருபக்கம் நிலா அந்தக் களேபரத்தைக் கண்டு பயந்து ஒடுங்கி நிற்க, அப்போது தான் உள்ளே நுழைந்தனர் புவனாவும் மனோகரும்.
"மாறன்.. மாறன் என்ன பண்றேங்க விடுங்க" என்று மாறனைப் பிரித்து தனியாக நிற்க வைத்தார்.
"விடுங்க மாமா. நான் அவனை கொல்லாம விட மாட்டேன். நிலாவை இப்படி ஆக்குனவனே அவன் தான்" என்க.. 'இதென்ன புதுக் குழப்பம்' என்று ரோஹித்தைக் காண, அவரிடமும் மன்னிப்பு வேண்டி நடந்ததைச் சொல்ல அவருக்கு உயிரே போய் விட்டது.
'பழி வாங்க அப்படிச் செய்தானா? பழி வாங்கும் அளவுக்கு நிலா அப்படி என்ன செய்து விட்டாள் இவனுக்கு?' என்றவருக்கு ஆத்திரமும் கோவமும் இருந்தது. ஆனால் ஏற்கனவே மாறனிடம் அடி வாங்கி பாதி உயிராய் நிற்பவனை மேலும் என்ன செய்வது என்று அமைதியாக இருந்தார்.
"சரி நீ போ. இனி நிலா வாழ்க்கைல எங்கேயும் வந்துறாத" என்று அனுப்பி விட்டார்.
"ஏன் மாமா அவனை போக விட்டேங்க? இவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டு அவனை அப்டியே விடலாமா?. கொலை பண்ற அளவுக்கு போனவன் ஜெயிலுக்குப் போகனும். நிலாவுக்கு மட்டும் அன்னைக்கு ஏதாவது ஆகிருந்தா அதை நினைச்சுப் பாக்கவே எனக்கு கொலையே நடுங்குது. அவனை கொன்னா கூட குத்தமில்லை"
"அவனைக் கொன்னுட்டு உங்களுக்கு ஏதாவது ஒன்னுனா நிலா என்ன பண்ணுவா மாறன்?. வேண்டாம் விடுங்க. அவன் செஞ்சதுக்கு நாம ஏதாவது பண்ணப்போய் அதுக்கும் திரும்ப அவன் ஏதாவது பழியுணர்ச்சியோட இருந்தா என்ன பண்றது?. இதுக்கு மேல நீங்களும் நிலாவும் சந்தோஷமா வாழுறதை பாக்குறதைத் தவிர எனக்கு எதுவும் தோணலை மாறன். அவன் செஞ்ச தப்புக்கு ஒருநாள் அனுபவிப்பான்" என்று அவனை சமாதானம் செய்தார்.
ஆனால் அவனால் அப்படி அதை அவ்வளவு ஈசியாக விட முடியவில்லை. 'ஏதோ கடவுளின் புண்ணியத்தில் உயிர் தப்பி விட்டாள். வேறு ஏதாவது விபரீதம் நடந்திருந்தால்?' என்று நினைக்கவே அவனுக்கு உயிர் வரை நடுங்கியது. ரோஹித் மேல் கோவம் கட்டுக்கடங்காமல் வந்தது.
"நீங்க கோவப்படாதீங்க மாறன். அங்க பாருங்க நிலா எவ்ளோ பயந்து போயிருக்கானு" என்று சொல்லவும் தான் மூலையில் ஒடுங்கி அமர்ந்திருந்த நிலாவைக் கண்டவனுக்கு, 'சே நிலா முன்னாடி இப்படி பண்ணிட்டோமே' என்று நினைத்தவன் அவளை சமாதானப் படுத்தி சாப்பிட வைத்தான்.
ஆபிஸ் வேலை நேரம் போக மீதி நேரங்களில் நிலாவை விட்டு இம்மியும் பிரிவதில்லை. அவள் பேசுவதை விட அவன் பேசிக்கொண்டே இருப்பான். இருவரின் நினைவுகளை சொல்லி, 'நான் தான் மாறன்' என்று அவள் மூளையை சிந்திக்க வைக்க முயற்சி செய்வான். சிலநேரம் ஏதாவது ஞாபகம் வருவது போல் செய்வாள். சில நேரம் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விடுவாள். அப்பொழுதெல்லாம், 'அவளுக்கு ஞாபகமே வர வேண்டாம். இப்படியே இருந்தாலும் போதும்' என்று நினைப்பான்.
அன்று மாறன் தோசை ஊற்றிக் கொண்டிருக்க கிச்சன் மேடையில் அமர்ந்து தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவன் சுட்டுக் கொடுக்க சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் என்ன நினைத்தாலோ, "நீ தான ஆபிஸ் போயிட்டு வந்துருக்குற?. பசிக்கும்ல. இந்தா சாப்டு இளா" என்று அவன் வாய்க்கு நேராக தோசையை நீட்ட.. கடைசியாக அன்று அவன் நண்பன் வீட்டில் வைத்து அவள் ஊட்டி விட்டது. நினைவுகள் வெகுவாய் அவனைத் தாக்க கண்ணில் நீர் துளிர்க்க அவள் கொடுத்ததை வாங்கிக் கொண்டான். அவள் கொடுக்கும் சின்ன சின்ன சந்தோஷங்களும் அவனுக்கு நிறைவாய் இருந்தது.
அருகில் இருந்தும் அவள் தன்னை உணரவில்லை. நினைக்கும் போது வருத்தமாக தான் இருக்கிறது. ஆனால் அவள் தேடல்.. மாறனுக்கானது. தனக்கானது. அந்த தேடலில் நானிருக்கிறேன். அதுவே அவனுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்தது.
எவ்வளவு கடினமாக பாதையைக் கடந்தாலும் அது அவளோடு தான் என்று முடிவெடுத்து விட்டான். அவளிடத்தில் தோன்றிய முதல் காதல்.. வாழ்வு முடியும் வரை அவளிடத்தில் தான். முதலும் முடிவுமாய் அவன் அவளிடத்தில்.. அவள் அவனிடத்தில்..
நான்கு வருட காத்திருப்பின் பயிற்சி முடிந்து அவர்களை வாழ்வில் இணைத்தக் கடவுள் இப்போது அவர்களின் காதலுக்கான தேர்வை வைத்திருக்கிறார். அவர்களின் புனித காதலை கண்டிப்பாக உணர்ந்து கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைப்பார் அந்தக் கடவுள் என்று நம்புவோம். அவர்களின் தேர்வின் முடிவை காலத்தின் கையில் ஒப்படைத்து விட்டு அவர்களிடமிருந்து விடைபெறுவோம்.
சுபம்.