அத்தியாயம் 3
பின்னால் திரும்பியபடி பேசிக் கொண்டு நகர்ந்தவள் கவனிக்காமல் மாறனின் மேல் இடித்து விட, "ஸ்ஆஆ.. நடுவுல யாருடா தூணை நிறுத்தி வச்சது?" என்று தலையை தேய்த்துக் கொண்டே நிமிர.. மாறன் ப்ரீஷ்ஷாகி நின்றிருந்தான்.
முன்னால் விழுந்து கிடந்த முடிக் கற்றைகளை பின்னால் துக்கிப் போட.. அது காற்றிலாடிக் கொண்டிருக்க.. பௌர்ணமி வெண்ணிலவுக்கு ரோஜா வண்ண மலர் சூடியது போல் நடந்து வர அவள் அழகில் மெய்மறந்து நின்றான். புயலாய் பல பிரிச்சனைகள் சுழட்டி அடித்த போதும் சலனமே இல்லாமல் கடந்து வந்தவன், திடீரென ஒரு தென்றல் வந்து மோத அவன் நெஞ்சம் சாய்ந்து விட்டது. ரயிலில் வெள்ளையும் கோல்டும் கலந்த சல்வாரில் கண்டபோதே அவள் மேல் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு ஈர்ப்பு உருவாகியது. முதல் பார்வையிலே கொள்ளை கொண்டவள் இப்போது முழுதாய் அவனை ஈர்த்து விட்டாள். வியர்க்க விறு விறுக்க வேலை செய்ததில் சட்டையெல்லாம் வியர்வையில் நனைந்திருக்க அவளின் சிறு மோதல் நிலவின் குளிர்ச்சியைத் தந்தது.
'சிடுமூஞ்சி திட்டுவானோ?' என்று பயந்தவள், அவன் மெய்மறந்து நிற்பதை பயன்படுத்தி "சாரி சார்" என்று நைசாக நழுவினாள்.
அதெல்லாம் அவன் காதில் விழவேயில்லை. அவளின் வதனமதை முழுதாய் ரசித்துக் கொண்டு பேயறைந்தது போல் நின்றவனை, "டேய் மாறா.. இங்க என்னடா பண்ற?. நீ போறியா?. இல்ல நான் போய் இன்னொரு டிரிப் பொண்ணு வீட்ல இருந்து ஆள் கூப்டு வந்துரவா?" என்று குமரேசன் வந்து கேட்க.. கைகள் தானாக கார் சாவியை அவனிடம் கொடுத்தது.
ஒருவனின் மனதை வீழ்த்தி சாய்த்ததை அறியாத பேதையவள் அவனிடம் மன்னிப்பை வேண்டி விட்டு, "இப்போ எடுடா?" என்று விதவிதமான போஸ் கொடுத்து கேமராவில் பதிவு செய்ய.. ஒருவன் கேமரா இல்லாமலே மனக் கண்ணில் பதிவு செய்து இதயத்தில் மாட்டிக் கொண்டான். இறகில்லாமலே பறந்து கொண்டிருக்கும் தேவதையவளோ என்று ரசித்துக் கொண்டிருந்தான். முத்துப்பற்களும், முடி ஒதுக்கும் விரல்களும், பால் மேனியை மூடியிருந்த சோலியும், நகையாடும் இதழும் வாடைக்காற்றாய் அவனை வதைத்தது. நிலவின் சொந்தமோ அவள் என்று ரசிப்பவனின் உயிரின் அங்கமாய் அவள் தான் மாறப் போகிறாள் ஒருநாள்.
கனவுலகில் சஞ்சரித்தவனை வேலைப்பளு இழுக்க, மனமே இல்லாமல் அங்கிருந்து நகர்ந்தான்.
பரிசம் போட்டு முடித்து சொந்த பந்தங்கள் எல்லாம் சாப்பிட கிளம்பி விட, பொண்ணு மாப்பிள்ளையை வளைத்து வளைத்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார் போட்டோகிராபர். கணவனாகப் போகிறவனின் அருகில் சுற்றம் மறந்து நிற்க.. நிலானியை மறந்தே போய் விட்டாள் சிந்துஜா.
நிலானிக்கு பசியெடுக்க ஆரம்பித்து விட்டது. தனியே சென்று சாப்பிடவும் ஒரு மாதிரியாக இருந்தது. போட்டோ எடுத்து முடித்து விட்டால் சிந்துஜாவை அழைத்துக் கொண்டு செல்லலாம் என்று காத்திருந்து காத்திருந்து மண்டபமே காலியாகும் நேரம் வந்து விட்டது. டைனிங் ஏரியா கூட காலியாகி விட்டது. போட்டோஷூட் முடிந்ததும் சிந்துஜா அறைக்கு வர நிலானி பசியோடு மொபைலில் மூழ்கியிருந்தாள்.
"நிலா சாப்பிட்டியாடி?" என்க.
"அடியே உனக்காக வெயிட் பண்ணா.. உன் மாமா கூட இந்தப்பக்கம் அந்தப்பக்கம் இப்படி அப்டினு போட்டோ எடுத்துட்டு இருந்துட்டு இப்போ வந்து சாப்டியானு கேட்குறியே.. நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டா டி" என்று மூச்சு வாங்க முறைக்க.
"நீ இன்னும் சாப்பிடலயா?" என்று அதிர்ந்தவள், "உன்னை அப்பவே அம்மாவை சாப்பிடக் கூப்டுப் போக சொன்னேன்டி.. சாரிடி நான் கவனிக்கல. மாமா கம்பெல் பண்ணதால அவரு கூடவே உட்கார்ந்து சாப்டேன்டி" என்று வருத்தம் கொள்ள..
"ஏய் பரவலாடி. அம்மா பிஸில மறந்துருப்பாங்க. விடு. ஆனா என்ன வயிறு கூப்பாடு போடுதுடி" என்று இதழை வளைத்து சோகமாக.
"இருடி அம்மா கிட்ட கேட்குறேன்" என்றவள் அவள் அன்னையிடம் கேட்க.. "நிலா நீ சாப்பிடலயா?. நான் கவனிக்கலயே. சிந்து ரூம்க்கு வந்து சாப்பிடுவானு நல்ல வேளை ஒரு ஆளு சாப்பாடு எடுத்து வச்சுருந்தேன். வா அங்க சாப்டுற இடத்துலே இருக்கு எடுத்துத் தாரேன்" என்று அவளுக்கு சாப்பாடை எடுத்துக் கொடுத்து சாப்பிட சொல்லிவிட்டு அவர் அங்கயே நின்றார்.
அதற்குள் வேறு யாரோ ஒருவேலையாக அவரை அழைக்க, "நீங்க போயி வேலைய பாருங்கமா. நான் சாப்பிட்டு வந்துடுவேன்" என்று அவரை அனுப்பி வைத்து அவர் கொடுத்த சாப்பாடை டேபிளில் இலையை விரித்துப் பரப்பிக் கொண்டிருக்க..
"ஏன்டா சாப்டக்கூட செய்யாம என்னடா வேலை வேண்டி கெடக்கு?. இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எல்லாத்தையும் க்ளீன் பண்ணாங்க. பதினோரு மணியாகப்போது இவ்வளவு நேரம் வச்சுருப்பாங்களா?" என்று குமரேசன் மாறனை திட்டிக் கொண்டிருக்க..
"சரி விடுடா பரவால்ல. ஏற்கனவே பசில காது அடைக்குது. இதுல நீ வேற கத்தாத" என்றவன் முகமே அவன் பசியின் அளவைக் காட்டியது. சனி ஞாயிறு இரண்டு நாளும் சென்னை வரை டிரைவிங் வேறு.. அன்று இரவே கிளம்பி வந்து காலையில் இருந்து இப்போது வரை ஓய்வில்லாத வேலை. உடல் களைத்துப் போய் ஓய்வு கொடு என்று கதறும் அளவுக்கு வேலை செய்து விட்டான். ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்தால் வயிறு என்னைக் கவனித்து விட்டு தூங்கு என்று போராட்டம் செய்கிறது. அவன் நேரமோ என்னவோ கான்ட்ராக்ட் எடுத்தவனுக்கே உணவில்லை.
"இருடா.. அவசரமா ஏதாவது செஞ்சுத்தர முடியுமானு சமையல்காரருட்ட கேட்குறேன்"
"இல்ல வேண்டாம்டா. அவங்களே பாவம் இவ்வளவு நேரம் அடுப்புலயும் இருந்து பந்தியவும் பாத்துட்டு இப்போ தான் உட்கார்ந்துருக்காங்க. காலையில சீக்கிரமே எழுந்து திரும்பவும் சமையல் வேலை பாக்கனும். பாவம் அவங்களை போய் தொந்தரவு பண்ணிக்கிட்டு. விடு படுத்தா அலுப்புல அப்டியே தூங்கிடுவேன். காலைல சீக்கிரம் எழுந்திரிக்கனும். ரெண்டு மணி நேரம் கூட தூங்க முடியுமானு தெரியல. வா போய் தூங்குவோம்" என்று அவனையும் அழைத்துக் கொண்டு நகரும் போது..
"ஹலோ பாஸ்.. எக்ஸ்கியூஸ் மீ" என்றவளின் குரலில் இருவரும் திரும்பினர்.
"இங்க சார்" என்று கை காண்பிக்க.. நிலானி தான் அவர்களை அழைத்துக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டவுடன் பசியில் துடிக்கும் வயிற்றைப் பற்றிய நினைவுகள் ஓரங்கட்டப் பட்டு மனதின் ஆசைகள் முன்னுரிமை எடுத்துக் கொள்ள, சூரியன் கண்ட தாமரையாய் முகம் மலர கால்கள் அவளிடம் நகர்ந்தது.
கால்கள் அதன் பாதையில் அது பாட்டுக்குச் செல்ல விழிகள் அவளிடம் இருந்தது. அவளின் பால் வண்ண மேனியில் பாந்தமாய் பொருந்தியிருந்த அந்த ரோஸ் வண்ணச் சோலியில் முழு நிலவாய் அவனின் விழிகளை ஈர்த்துக் கொண்டிருந்தாள்.
அருகே வரவும், "நீங்களும் இன்னும் சாப்பிடலயா?. இங்க சாப்பாடு நிறைய தான் இருக்கு. ஷேர் பண்ணிக்கலாமா?" என்று கேட்க.
"இல்ல பரவால நீங்க சாப்பிடுங்க" என்று பெயருக்கு நாகரீகம் கருதி மறுத்தாலும் அவன் பசி கண்ணின் ஓரம் தேங்கி நின்றதை அவள் அறிந்து கொண்டாள்.
"அட வாங்க சார். அப்புறம் வயிறு கூப்பாடு போட ஆரம்பிச்சா நைட்டு தூக்கம் வராம சிவராத்திரியாகிடப் போது. இவ்ளோ சாப்பாடுலாம் நான் சாப்ட மாட்டேன். ரெண்டு பேரும் ஷேர் பண்ணி சாப்பிடலாம்"
"டேய் பசிக்குதுனு சொன்னேல.. உட்கார்ந்து சாப்பிடு. தேங்க்ஸ்மா" என்று அவளிடம் நன்றியை சொல்லிவிட்டு, "சொந்தக்காரங்கள பொண்ணு வீட்ல விட சொன்னாங்க. நான் போய் விட்டுட்டு காலேல சீக்கிரமே வந்துறேன்டா. நீ சாப்டு கொஞ்ச நேரமாவது தூங்கு" என்று குமரேசன் கிளம்பி விட்டான்.
இன்னொரு இலையை எடுத்து வந்து அவளே அவனுக்கு எடுத்து வைத்து, "சாப்பிடுங்க" என்கவும்..
அவன் சங்கடத்தோடு அவள் அருகில் அமர்ந்தான். பசிக்கு சோறு கேட்டால் அது பிச்சை.. கேளாமலே ஒருவனின் பசியறிந்து உணவை பகிர்ந்து கொண்டவளின் குணம் அவன் மனதில் ஆழமாய் பதிந்தது.
"தேங்க்ஸ்" என்றான்.
"அட நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும்" என்க.. அவன், "எதற்கு?" என்று புரியாமல் முழித்தான்.
"தனியா சாப்டா எனக்கு சாப்பாடே உள்ளே இறங்காது. வீட்ல அப்பா அம்மா கூட. காலேஜ்ல ப்ர்ண்டஸ் கூட தான் சாப்பிடுவேன். தனியா சாப்பிடனுமேனு நினைச்சுட்டு இருந்தேன். நல்லவேளை நீங்க வந்தேங்க" என்று அவள் சகஜமாய் இருக்க.. அவனுக்குத் தான் அவள் அருகில் உள்ளமெல்லாம் பட்டாம்பூசியின் சிறகை வாங்கி பறந்து கொண்டிருந்தது.
"நீங்க இப்டித்தான் எப்பவுமே உர்ருனு இருப்பேங்க.. ளா.." என்றவள் அவனின் புருவ நெரித்தலில் நாக்கைக் கடித்து, "சும்மா.." என்று இளிக்க..
அவள் நாக்கைக் கடித்து ஒரு கண்ணை மூடி முகத்தைச் சுருக்கும் பாவனையில் அவனுக்குத் தான் மூச்சு முட்டியது. இதுவரை இறுகிப் போய் இருந்த இதயத்தை அவள் கொஞ்சல் மொழி கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் அவளை அறியாமலே அவள் நினைவுகளை அவன் மனதில் விதைத்துக் கொண்டிருந்தாள்.
அவன் அமைதியாய் வயிற்றின் பசியை போக்கிக் கொண்டிருக்க அவளால் பேசாமல் சாப்பிட முடியவில்லை.
"மண்டபத்துல எல்லா இடத்துலயும் நீங்களா தான் தெரிஞ்சேங்க. இது உங்க மண்டபமா?"
"மண்டபம் வச்சுருக்குற அளவுக்கு நான் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லமா. ஏதாவது பங்ஷன்னா டெக்கரேஷன், குக்கிங், கார் செர்வீஸ் கான்ட்ராக்ட் எடுத்து பண்ணுவேன். வேலை செய்ய ஆள் இருந்தாலும் எல்லாத்தையும் செக் பண்ணிட்டே இருந்தா தான் ஒழுங்கா வேலை நடக்கும்"
"ஓஓ.. அதான் எல்லா இடத்துலயும் இருந்தேங்களா.." என்றவள், "உங்க பேரு?"
"மாறன்.. இளமாறன்"
"இளமாறன்.. நைஸ் நேம்" என்க..
அவள் வாயிலிருந்து கேட்கும் அவன் பெயர் இனித்தது. ஒரு மாதிரி இதுவரை அனுபவித்திராத இனிய இம்சையாக இருந்தது அவனுக்கு. அவள் பேசாமல் இருந்தால் கூட விழிகள் அமைதியாய் களவாடிக் கொண்டு தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும். இவளோ கொஞ்சல் மொழிகளை செவியின் வழியே அனுப்பி வைத்து இதயத்தை உலற வைக்கிறாள். நெற்றியில் ஆரம்பித்து அவளின் ஒவ்வொரு பாகங்களையும் ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
அனைத்து பொறியலையும் அவன் பக்கம் நகர்த்தி, "எடுத்துக்கோங்க" என்று விட்டு, "இது மட்டும் தர மாட்டேன். எனக்கு வேனும்" என்று உருளை வறுவலை மட்டும் அவள் இலையில் எடுத்து வைத்துக் கொண்டாள். அவளின் சிறுபிள்ளைத் தனத்தில் உள்ளுக்குள்ளே சிரித்தவன், "எல்லா காயவும் சாப்பிடனும்" என்க.
"அதெல்லாம் கொஞ்சம் சாப்பிடுவேன். இது மட்டும் அதிகமா.. எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் கல்யாண வீட்ல பண்ற இந்த பொட்டேட்டோ ரெசிபி சாம்பார் சாதத்தோட செமயா இருக்கும்" என்று உருளை வறுவலை எடுத்து வாயிக்குள் வைத்து ருசித்து சாப்பிட்டவள் நாக்கைச் சப்புக் கொட்ட.. அவனுக்குத் தான் தொண்டைக்குழிக்குள் உணவு சிக்கிக் கொண்டது. பளிங்குக் கழுத்தில் உணவு இறங்குவது அப்படியே தெரிய கழுத்தைத் தாண்டிய பயணித்த விழிகள் திரும்பாமல் சண்டித்தனம் செய்தது.
"எங்க ஊர்லலாம் கல்யாண வீட்ல நைட் ரிசப்ஷனுக்கு டின்னர் மாதிரி தான் போடுவாங்க. இங்க சாதம், சாம்பார், ரசம் கூட்டு பொரியல்னு லஞ்ச் மெனு மாதிரி இருக்கு. ஆனா இதுவும் டிப்பரென்டா நல்லா தான் இருக்கு"
"இங்க இப்படித்தான். பங்ஷன் சாப்பாடுனா சோறு, சாம்பார், ரசம் கூட்டுனு இருக்கனும். இட்லி தோசைனு டிபன் ஐயிட்டம் போட்டா அதெல்லாம் கல்யாணச் சாப்பாடா ஏத்துக்க மாட்டாங்க"
அவள் கேட்பதற்கு மட்டும் தான் அவனிடம் இருந்து பதில் வந்தது. அவனாக எதுவும் கேட்கவுமில்லை. அதிகமாய் சொல்லவுமில்லை. ஒருவழியாக சாப்பிட்டு முடித்து இருவரும் கை கழுவச் செல்ல.. கை கழுவி விட்டு திரும்பும் போது, "எதுக்கு எப்பவும் இந்த உதட்டை இறுக்கமா வச்சுருக்கேங்க. இப்படி சிரிச்சா நல்லா இருக்கும்" என்று இரு விரலால் ஸ்மைலி போல் அவன் இதழை விரிக்க.. அவன் கரெண்ட் ஷாக் அடித்தது போல் விழி விரித்து நின்று விட்டான். உடம்பில் ஓடும் ரத்தமெல்லாம் ஒன்று கூடி இதயத்தில் நின்று ப்ரீஷ்ஷாகி விட. அடுத்த இரண்டு விநாடிகளில் அவன் கை வளைவில் அவள் ப்ரீஷ்ஷாகி இருந்தாள்.
தொடரும்.