• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முதலும் முடிவுமாய்-4

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
122
96
28
Chennai
அத்தியாயம் 4

"எதுக்கு உதட்டை எப்பவும் இறுக்கமா வச்சுருக்கேங்க‌. சிரிச்சா நல்லா இருக்கும்" என்று கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் இணைத்து மீசை உரச அவன் இதழைப் பிரித்து விட்டாள்.

அவளின் விரல்கள் தீண்டிய மாயத்தால் பருவம் கொடுக்கும் இளமையின் பூஞ்சோலையான மீசை எனும் ஹார்மோனியம் அவன் ஹார்மோன்களை வரைய ஆரம்பிக்க, தேகம் முழுதும் ஐஸ்கட்டியால் ஒத்தடம் கொடுத்தது போல் சிலிர்த்தது. சொல்லி விட்டு அவள் பாட்டுக்கு திரும்பி நடக்க.. கைகழுவும் இடம் முழுதும் கீழே தண்ணீர் சிந்தியிருந்ததால் ஈரம் பட்டு கால் வழுக்கி, "ம்மா.." என்று விழப்போக.. அவன் கைகள் விழாமல் தாங்கிக் கொண்டது.

அவள் இரு கைகளும் அவன் தோள்களைப் பிடித்திருக்க.. அவன் கைகள் அவள் இடையின் அளவை அளந்து கொண்டிருந்தது. அவளின் சிறுத்த இடை வெண்பஞ்சு மேகங்களோ என்று இடை தீண்டிய அவன் விரல்கள் ஐயம் கொண்டது. இருவரின் விழிகளும் மோதிக்கொள்ள.. வார்த்தைகள் ஊமையாகி விட விழிகள் மட்டுமே நிமிடங்கள் தாண்டி பேசிக் கொண்டிருந்தது. எங்கோ கேட்ட நாயின் 'லொள்' என்ற குரலில் இருவரும் திடுக்கிட்டு விலகினர்.

"தேங்க்ஸ். கீழத் தண்ணிக் கொட்டி இருந்ததை பாக்கல. நான் வர்றேன்" என்று அவன் முகம் பார்க்காமல் சொல்லி விட்டு ஓடியே விட்டாள்‌.

மோனநிலையில் இருந்தவன் அவள் நிற்காமல் ஓடவும் தான் உயிர் பெற்றான். 'என்ன பொண்ணுடா இவ' என்று போகும் அவளையே வெறித்திருந்தான். 'ஆமா அவ பேரு என்ன?. என் டீடெய்ல்ஸ் கேட்டா. அவ பேரு கூட கேட்காம விட்டுட்டேனே' என்று நொந்து கொண்டான்.

காலையில் சீக்கிரம் எழ வேண்டும். இரண்டு மணி நேரத் தூக்கம் தான் இருக்கிறது. எதற்கு வீட்டுக்குச் சென்று அலைந்து கொண்டு என்று மண்டபத்திலே தூங்கலாம் என்று முடிவு செய்தவன், மண்டபத்தின் மொட்டை மாடியில் இரண்டு கைகளையும் தலைக்குக் குடுத்து கால் நீட்டி நிலவை வெறித்தபடி படுத்திருந்தான். சொகுசு கட்டிலில் தான் தூங்குவேன் என்றெல்லாம் அவன் உடல் அடம்பிடிக்காது. அலுப்பிற்கு சாய்க்க காற்றோட்டமான இடம் இருந்தால் போதும்.

இரவின் குளிரோடு தென்றல் காற்றும் உடலைத் தீண்ட.. இருந்த அலுப்பிற்கு படுத்தவுடன் தூங்கி விடுவேன் என்றவனுக்கு இப்போது தூக்கம் தொலைதூரமாகிப் போனது. அவன் மனம் முழுவதும் நிலானியே நிரம்பியிருந்தாள். அவள் விரல் தீண்டிய மீசை துடிக்க, இதழில் உறைந்த புன்னகையோடு இரு விரலால் நீவி விட்டுக் கொண்டான். அவனின் ஆண்மையின் அடையாளத்தைத் தொட்டு அவன் மனதில் அவளின் ஆளுமையின் சுவட்டைப் பதித்து விட்டாள். அவளைத் தீண்டிய கையைத் தூக்கிப் பார்த்தவனுக்கு அவள் வெண்பஞ்சு இடை கண்ணில் நிழலாட இதுவரை அனுபவித்திராத உணர்வுகள் உள்ளுக்குள் பேயாட்டம் போட்டது. மனம் அவன் சொல் கேட்காமல் அவளிடம் போய் தஞ்சமடைய கூக்குரலிடுகிறது.

'என்னதிது மனசு இப்படி கெடந்து தவிக்குது?. உள்ளே புகுந்து என்னமோ பண்றா' என்று துடிக்கும் இதயத்தின் மேல் கை வைத்துத் தடவியவன், 'பாத்து ரெண்டு நாள்ல என்னை மொத்தமா திருடிட்டு போயிட்டா. நானுன்டு என் வேலையுண்டுனு செவனேனு இருந்தவனை இப்படி இவளை நெனச்சு புலம்ப விட்டுட்டாளே. வேணாண்டா மாறா.. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உனக்கும் அவளுக்குமான இடைவெளி. ஏணி வச்சாலும் எட்ட முடியாது. ஏதோ பட்டிக்காட்டான் முட்டாய வெறிக்குற மாதிரி பால்கோவா மாதிரி இருந்தவளை பார்த்த.. ஏதோ ஒரு ஈர்ப்பு வந்துச்சு. அதை இத்தோட மறந்துட்டு உன் வேலையைப் பாரு.. நாளைக்கு அவ ஊரைப் பாத்து போயிடுவா. ஏதோ ரெண்டு தடவை பார்த்தா பேசுனா. அதுல அவ கள்ளங்கபடமில்லாத பேச்சு தான் இருந்துச்சு. அதை வச்சு நீயா மனசுல ஆசைய வளத்துக்கிட்ட.. அப்புறம் நீ தான் காதல் பரத் மாதிரி ரோட்டுல அலையனும்' என்று அவனுக்கு அவனே அறிவுரை சொல்லிக் கொண்டான்.

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட உணர்வுகளை விதைத்தவளை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா?. திரும்ப திரும்ப அவளிடம் செல்லும் மனதை கடிவாளமிட முடியாமல் தத்தளித்தான். 'என்னை என்ன செய்யிறதா உத்தேசம்டி' என்று புலம்பியபடியே நாளை காலை உள்ள வேலைகளை நினைத்தவன் வம்படியாய் தூக்கத்தைத் தழுவினான்.

காரிருள் கலைந்தோட கதிரவன் தன் கதிர் வீச.. இரவு விட்ட பரபரப்பை மீண்டும் ஆரம்பித்தது அந்த திருமண மண்டபம்..

இரண்டு மணிக்கே எழுந்த மாறன் தனது வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க.. அவன் தூக்கத்தைக் கெடுத்தவளோ மணி ஆறாகியும் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். ஏழு முப்பதுக்கு முகூர்த்தம் என்பதால் சிந்துஜா குளித்து முடித்து அழகுக்கலை நிபுணர்களால் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாள்.

"க்கா. கட்டில்ல இழுத்துப் போத்திட்டு தூங்குற அந்தப் புள்ளய கொஞ்சம் எழுப்பி விடுங்க கா.." என்று சிந்துஜா உறவினர் ஒருவரிடம் சொல்ல.. அவர் எழுப்பவும், அவள், "ம்ம்" என்று முனங்கி விட்டு திரும்பிப் படுத்தாள்.

"அடியே.. என் கல்யாணத்தை பாக்கனும்னு ஊர்ல இருந்து வந்துட்டு இப்படி தூங்கிட்டு இருக்க. நீயெல்லாம் மணப்பெண் தோழியாடி. எந்திரிச்சு குளிச்சு கெளம்புடி" என்க..

"ஏன்டி கத்துற. நீதான் இன்னைக்கு நைட்ல இருந்து நீ நெனச்ச நேரத்துக்கு தூங்க முடியாது. நான் எப்போ வேணாலும் தூங்குவேன் எப்ப வேணா எந்திரிப்பேன்." என்று சொல்லிக் கொண்டே எழுந்தவள் சுற்றி இருந்த அனைவரின் பார்வையும் தன்மேல் இருப்பதை உணர்ந்து திருதிருவென விழித்தவள், "அய்யயோ இந்தக் கூட்டத்தை மறந்துட்டோமே.." என்று நாக்கைக் கடித்து விட்டு அவசரமாக குளியலறையில் நுழைந்து கொண்டாள். உள்ளே இருந்து கொண்டே, "டி சிந்து.. நீ மணமேடைக்கு போயிட்டாலும் எனக்கு சேரி கட்டி விட ஹெல்ப் பண்றதுக்கு ஒரு ஆளு அரேஞ்ச் பண்ணுடி. எனக்கு சரியா கட்ட வராது" என்று குரல் குடுக்க..

"ம் சரி சரி.. நீ சீக்கிரம் குளிச்சுட்டு வாடி".

முகூர்த்த நேரம் வரவும் சிந்துஜா மணமேடை சென்று விட்டாள். நிலானி சிந்துவின் ஊர்த்தோழி ஒருத்தியின் உதவியுடன் வாடாமல்லிக் கலர் புடவை கட்டி தலை நிறைய கெட்டியாய் தொடுத்த மல்லிகைச் சரத்தைத் தலை நிறைய வைத்து நடக்கத் தெரியாமல் தத்தி தத்தி நடந்து வந்து கல்யாணத்தைப் பார்க்க அமர்ந்து விட்டாள். சடங்குகள் ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தவள் சிந்துவின் முகத்தில் உள்ள வெட்கத்தைக் கண்டு 'மனசுக்குப் புடிச்சவங்களை கல்யாணம் பண்றதே பெரிய வரம் தான..' என்று நினைத்தாள்.

திருமணம் முடியவும் சிந்துஜா கணவன் வீட்டுக்குச் சென்று விடுவாள். அதனால் திருமணம் முடியவும் ஆண்டாள் கோவில் சென்று விட்டு, அப்புறம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்பெஷல்ஸ் ஷாப்பிங் முடித்தால் இரவு ட்ரெயின் டைம்க்கு சரியாக இருக்கும் என்று ப்ளான் வைத்திருந்தாள். ஊருக்கு வரும் போது காரில் அவளை அழைக்க வந்தவரையே ஆண்டாள் கோவிலுக்கு அழைத்துச் சென்று விட்டு ட்ரெயின் ஏற்றி விடுமாறு சிந்துஜா சொல்லி வைத்திருந்தாள். அது மாறனின் கார் தான். மூன்று கார் வைத்திருக்கிறான். ஒரு கார் அவன் ஓட்டுவான். வேலை இருக்கும் போது மற்ற இரண்டை குமரேசனும் இன்னொருவரும் ஓட்டுவார்கள்.

அதன் படி திருமணம் முடியவும் கொண்டு வந்த பரிசை சிந்துவிடம் கொடுத்து விட்டு சாப்பிடக் கிளம்பினாள்.

அவள் உள்ளே நுழையும் நேரம் சரியாக மாறன் வெளியே வர.. இருவரும் ஜஸ்ட் மிஸ்ஸில் மோதாமல் தடுமாறி நின்றனர். அவளைக் கானும்போதெல்லாம் விழியில் வரும் ஈர்ப்பும் அவள் கை சேர்வோமா என்ற தவிப்பும் ஏன் என்று தெரியவில்லை அவனுக்கு. நேற்றை விட இன்று சேலையில் அம்சமாக இருந்தாள்.‌ வழக்கம் போல் லேசர் கண்களால் தத்தி தத்தி நடை பழகும் குழந்தை போல் நடக்கும் அவள் அழகை மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்க.. "ஹாய் நீங்களா?. எப்பவும் துருதுருனு ஓடிட்டே இருக்கேங்க. கண்ணெல்லாம் சிவந்துருக்கு. நைட் சரியா தூங்கலயா?".

"ஹா..ஹாய்.. வேலை இருந்துச்சு அதான் சீக்கிரம் எந்திரிச்சுட்டேன்".

"தூக்கம் முக்கியம் பாஸ். இல்லனா ஹெல்த் போயிடும். வேலை செய்ய முடியாது. நீங்க சாப்டேங்களா?. நான் சாப்பிடப் போறேன்" என்று கேளாமலே சொல்ல.

"நான் அப்புறமா சாப்டனும்"

"ஓகே சீக்கிரம் சாப்டுருங்க. அப்புறம் காலியாகிவிடும். பை" என்று ஓடி விட்டாள்.

அவனுக்கு நின்று நிதானமாய் பேசவோ அவளை ரசிக்கவோ நேரமில்லை. அவன் காரில் தான் பொண்ணு மாப்பிள்ளையை வீட்டுக்கு அழைத்துச் சொல்லப் போகிறான். இவளும் தன் காரில் தான் ஆண்டாள் கோவிலுக்குச் செல்லப் போகிறாள் என்பது அவனுக்கும் தெரியும். ஆனாலும் இப்போது பெண் மாப்பிள்ளையை அவன் அழைத்துப் போவதாக சொல்லி விட்டதால் அவனால் அவளுடன் செல்ல முடியாததன் சோகம் மனதில் ஓடியது.

இவள் சாப்பிட்டு முடித்து அந்த டிரைவருடன் ஆண்டாள் கோவில் சென்றாள். அந்தக் கோவில் கோபுரத்தையும் கட்டிடக் கலையையும் கண்டவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. உண்மையில் காலத்தால் அழியாத அக்கோவிலின் அழகு கைநீட்டி அவளை வரவேற்பது போல் உணர்ந்தாள். 'இந்த இடம் எத்தனை அமைதியையும் ஆன்மிகத்தையும் விதைக்கிறது மனதில்' என்று நினைத்துக் கொண்டே அதன் அழகை கண்ணில் நிரப்பினாள். கோவிலின் அழகை நிதானமாய் ரசித்து விட்டு வந்தவள் ஆண்டாளின் தெய்வீக அழகில் மயங்கி ஆண்டாள் பாசுரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை வாங்கிக் கொண்டு கோவில் பிரகாரத்தில் அமர்ந்தாள். அதன் பின் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டான்ட் அருகே வந்து அந்த ஊருக்கென்றே பெயர் போன பால்கோவாவை வாங்கிக் கொண்டாள். அதற்குள் இரவும் வந்து விட நேராக ரயில்வே ஸ்டேஷன் சென்றது கார்.

ட்ரெயின் வர இன்னும் அரை மணி நேரத்திற்கு மேலாக இருப்பதால், "ட்ரெயின் வந்தா நான் ஏறிப் போய்ப்பேன். நீங்க கிளம்புங்க ணா. ஏற்கனவே டயர்டா தெரியிறேங்க. ட்ரெயின் வர லேட்டாகும். எதுக்கு நீங்களும் வெயிட் பண்ணனும்"

முகத்தை பார்த்தேப் புரிந்து கொண்ட அவளின் குணத்தை நினைத்து மகிழ்ந்தவர், "இருக்கட்டும் மா. வெளியூர்கார்ங்க. இருந்து ஏத்தி விட்டுப் போறேன்"

"அண்ணா.. நானென்ன சின்னப்புள்ளயா?. நீங்க கெளம்புங்க" என்று சொல்ல.. அவரும், "சரிம்மா. ட்ரெயின் ஏறிட்டு ஒரு தடவை கால் பண்ணி சொல்லிடுங்க" என்று கிளம்பி விட்டார்.

தந்தைக்கு அழைத்து கிளம்பி விட்டதாக சொல்லிவிடலாம் என்று மொபைலைத் தேடும் போது தான் தெரிந்தது அவள் கையில் வைத்திருந்த ஹேன்ட்பேக்கை எங்கோ தொலைத்திருப்பது. அவளுக்கு பக்கென்றாகி‌விட்டது. 'பேக்கை எங்க விட்டேனு தெரியலயே?. கார்லயே விட்டோமா? இல்ல வேறெங்கயோ விட்டேனானு தெரியலையே. அதுல தான் போன், பர்ஸ், ஆதார் எல்லாமே இருக்கே. இப்போ என்ன பண்றது?' என்று புரியாமல் நின்றவளுக்கு கண்ணில் நீர் பெருக்கெடுத்தது.

ஒருநிமிடம் அப்படியே நின்றவள் மறுநிமிடமே சுயத்திற்கு வந்து அருகில் இருந்தவரிடம் மொபைல் வாங்கி அவள் நம்பர்க்கு அழைத்துப் பார்க்க, அது ரிங் போய்க் கொண்டே இருந்தது. அது முழு ரிங்கும் போய் அணைந்தது. மறுபடியும் அழைக்க, அந்தப்பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டது.

அவள், "ஹலோ" என்று சொல்வதற்குள், "உங்க பேக் என்கிட்ட இருக்கு. எங்க இருக்கேங்க?. நான் கொண்டு வந்து
தர்றேன்" என்ற குரல் ஒலித்தது மறுமுனையில் இருந்து.


தொடரும்.
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
545
164
43
Dindugal
ஒரு சின்ன சஜசன்
இருக்கீங்க - இருக்கேங்க இந்த மாதிரி வார்த்தைகளை சரியா போடுங்க. இது நிறைய இடத்துல சரியா வரல. கவனிச்சு போடுங்க
 
  • Like
Reactions: Pandiselvi

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
122
96
28
Chennai
ஒரு சின்ன சஜசன்
இருக்கீங்க - இருக்கேங்க இந்த மாதிரி வார்த்தைகளை சரியா போடுங்க. இது நிறைய இடத்துல சரியா வரல. கவனிச்சு போடுங்க
கண்டிப்பா திருத்திக் கொள்கிறேன் சிஸ். தேங்க் யூ சோ மச் 🙏