• இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏

முதலும் முடிவுமாய்-5

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
122
96
28
Chennai
அத்தியாயம் 5

திக்குத் தெரியாத ஊரில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் கண்கலங்க நின்றிருந்தாள் நிலானி.

"உங்க பேக் இங்க பால்கோவா கடையில மிஸ் பண்ணிட்டேங்க. எங்க இருக்குறேங்கனு சொல்லுங்க. நான் உங்க பேக் கொண்டு வந்து குடுக்குறேன்" என்று மறுமுனையில் சொல்ல.. அவளும் ரயில்வே ஸ்டேஷனில் இருப்பதாகவும் இன்னும் சிறிது நேரத்தில் ட்ரெயின் வந்துவிடும் விவரத்தையும் சொல்லியவள், "கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா சார்?. அதுல தான் என் ட்ரெயின் டிக்கெட் இருக்கு. அது இல்லனா என்னால ட்ரெயின்ல போக முடியாது ப்ளீஸ்" என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

அருகில் இருந்த மொபைலுக்கு சொந்தக்காரர், 'எப்போதடா மொபலைக் கொடுப்பாள். நாம் இங்கிருந்து நகரலாம்' என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தவர், அவள் பேசி முடிக்கவும் அவரது மொபைலை வாங்கிக் கொண்டு நகர்ந்து விட்டார்.

'உண்மையா நம்ம பேக்கை கொண்டு வந்துருவாரா?. அவரை எதிர்பார்த்து வெயிட் பண்ணலாமா?. இன்னும் கால் மணி நேரம் தான் இருக்கு. அதுக்குள்ள வரலனா?. கையில போனும் இல்ல காசும் இல்ல..' என்று என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்தபடி அந்த முகம் தெரியாத நபர் பேக்கை கொண்டு வரும் நேரத்திற்காக எதிர்பார்த்து காத்திருந்தாள்.

நிமிடங்கள் கடந்தது. அவள் செல்லும் ரயில் இன்னும் சில நிமிடத்தில் நடைமேடை ஒன்றில் வந்து நிற்கும் என்ற அறிவிப்பும் ஒலிப்பெருக்கியில் கேட்டு விட்டது. பயத்தில் இதயம் வேகமாக துடித்தது. கண்ணில் இருந்து நீர் இறங்கி கன்னத்தில் ஓடியது. ஸ்டேஷன் வாசனையும் ரயில் தண்டவாளத்தையும் மாறி மாறி பார்த்தபடி இருந்தாள். இன்னும் அவளது பேக்கை கொண்டு வருவதாக சொன்னவர் வரவில்லை. ஆனால் அவள் புக் செய்த ட்ரெயின் வந்து நின்று விட்டது. திரும்பவும் அவருக்கு அழைத்து, 'எங்கிருக்கிறார்? வருகிறாரா இல்லையா?' என்று கேட்க மொபைலும் இல்லை. ஆட்கள் ஏறி அமர இரண்டு நிமித்திலே ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டு விட்டது. ட்ரெயின் நகர நகர அவளுள் இருந்த மொத்த நம்பிக்கையும் வடிந்து போக பொத்தென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள். அந்த இருளும் கையில் சேஃப்டிக்கு எதுவும் இல்லாமல் நிற்கும் அவளது நிலையும் பயமுறுத்த தேம்பி தேம்பி அழுதாள்.

'போச்சு போச்சு. இப்போ நான் என்ன பண்றது?. எப்டி ஊருக்கு போறது?. சிந்துக்கு கூப்டலாம்னாலும் போனும் இல்ல. அவ நம்பரும் ஞாபகம் இல்ல. அப்பாக்கு கால் பண்ணி சொன்னா ஏதாவது பண்ண முடியுமா அவரால?. இல்ல நாமளே பஸ்ல போயிடலாமா?. அதுக்கும் காசு வேனுமே. யாருகிட்ட கேட்குறது?' என்றவளுக்கு உடம்பெல்லாம் நடுக்கமெடுக்க தலை சுற்றிக் கொண்டு வந்தது.

தலையைப் பிடித்துக் கொண்டு குனிந்து குலுங்கியவளின் அருகில் "ட்ரெயின் போயிடுச்சா?" என்று மூச்சு வாங்க பேக்கோடு வந்து நின்றான் மாறன்.

அவன் ஏதோ ஒரு விஷயமாக அவள் சென்ற அதே பால்கோவா கடைக்குச் செல்ல.. அப்போது ஒருவர், "பாவம் யாரோ இந்த கைப்பைய வச்சுட்டு போயிட்டாங்க. யாருதுனு தெரியல. எங்கெங்க தேடிட்டு இருக்காங்களோ. போலிஸ் கிட்ட குடுத்துரலாமா?. ஆமா அவங்கட்ட குடுத்து தேடிப்புடிச்சு உரியவங்கட்ட உடனே ஒப்படச்சுருவாங்களாக்கும். பத்தோட பதினொன்னா போட்டுருவாங்க. பேசாம கடைலே இருக்கட்டும். யாராவது தேடி வந்தா குடுப்போம்" என்று ஆளுக்கொன்றாய் பேசிக் கொண்டிருக்க..

"என்னணே?. என்ன பேக்? யாருது? கொண்டாங்க பார்ப்போம்" என்று மாறன் கேட்டு வாங்க.. அது பெண்கள் உபயோகிக்கும் ஹேன்ட்பேக் என்று பார்த்ததுமே தெரிந்தது. அதை திறந்து பார்ப்பது அநாகரிகம் என்று தெரிந்தாலும் அதை உரியவரிடம் சேர்ப்பதற்கு வேறு வழி இல்லை என்பதால் அதை திறந்து பார்த்தான். திறந்ததும் உள்ளே மேக்கப் பொருட்களும் அத்தோடு போனும் இரண்டு ஐடி கார்டும் இருந்தது. ஒன்று ஆதார் கார்டு. அதில் முகம் சரியாக தெரியவில்லை. இன்னொன்று காலேஜ் ஐடி கார்டு. சென்னையில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியின் பெயர் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. கீழே நிலானிகா மனோகர் என்ற பெயருடன் அவனது நிலவு தேவதைப் பெண் சிரித்த முகமாய் இருக்க.. கண்கள் அதிர்ச்சியோடு குளுமையும் தத்தெடுத்துக் கொள்ள.. அடுத்த நிமிடமே அவள் ஊருக்குச் செல்வது ஞாபகம் வந்தது.

"ண்ணே.. இது எனக்குத் தெரிஞ்ச பொண்ணோட பேக் தான்" என்றவன் அவள் ஐடி கார்டில் இருந்த அவள் போட்டோவைப் காட்டி, "இந்தப் பொண்ணு உங்க கடைக்கு வந்துச்சா?" என்க.. அவரும் ஆம் என்று சொல்ல.. அதற்குள் அவளே அவள் மொபைலுக்கு அழைக்க.. உடனே பேக்கைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டான். எவ்வளவு வேகத்தில் வர முடியுமோ அவ்வளவு வேகமாக வந்தான். அவளது கொண்ட நேரமோ என்னமோ எப்போதும் பத்து பதினைந்து நிமிடம் தாமதமாக வரும் ட்ரெயின் அன்று சரியான நேரத்திற்கு வந்து அவளுக்கு ஆப்பு வைத்து விட்டது.

அவன் குரலில் நிமிர்ந்தவள் அவனைக் கண்டு அதிர்ந்தாள். நேற்றிலிருந்து அவனுடன் பேசுகிறாள். இரண்டொரு வார்த்தை பேசிய அவன் குரல் அவளுக்கு நினைவில் பதியவில்லை. அதான் போனில் பேசும் போதும் அவன் தான் பேசியது என்று தெரியவில்லை.

அவளின் கலங்கிய விழிகளும் அதிர்ந்த முகமும் ஏதோ செய்தது. ஆதரவாய் அணைக்கத் துடிக்கும் கரங்களை இறுக மூடி அடக்கி வைத்தான்.

"ட்ரெயின் போயிடுச்சா?. சாரிமா நான் எவ்ளோ பாஸ்ட்டா வந்தும் ட்ரெயின் போயிடுச்சு. இந்தாங்க உன் பேக்" என்று அவள் பையைக் கொடுக்க..

அதை வாங்கி ஓரம் வைத்தவளுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.

"ட்ரெயின் வந்துருச்சுனா ஏறிப் போயிருக்க வேண்டியது தான?. நான் உங்க பேக்கை கொரியர் போட்டு விட்டுருப்பேன்ல"

"டிக்கெட் மொபைல்ல தான் இருந்துச்சு"

"டிக்கெட் இல்லனா அவசரத்துக்கு அன்ரிசர்வேஷன் டிக்கெட் எடுத்து போக வேண்டியது தான"

"அன்ரிசர்வேஷனா?" என்று முகத்தைச் சுருக்க..

"அன்ரிசர்வேஷன்ல தான போக சொன்னேன். ஏதோ வித்அவுட்ல போக சொன்னது மாதிரி இப்படி முகம் கோனுது"

"எனக்கு அப்டிப் போயி பழக்கம் இல்ல"

"நல்லா பழகுன போ. இப்போ என்ன பண்ணப் போற?"

"என்ன பண்றதுன்னு தெரியல" என்று மீண்டும் விசும்ப.

"இப்போ எதுக்கு சும்மா சும்மா அழுற?. அழுதுட்டு இப்டி உட்கார்ந்திட்டே இருந்தா யோசனை கிடைக்குமா?. பஸ்ல போறியா?"

"பஸ்லயா?. ம் ஓகே தான்" என்று இழுத்தவள், "ஆனா எனக்கு எப்டிப் போனும்னு எனக்குத் தெரியாதே. எனக்கு ஹெல்ப் பண்றேங்களா? ப்ளீஸ். சிந்துவை இந்த டைம்ல டிஸ்டர்ப் பண்ண முடியாது. அவளுக்கு இன்னைக்கு தான் மேரேஜ் ஆகிருக்கு. நைட் பிஸியா இருப்பா" என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு முதலிரவு வரை சொல்ல..

'அதாது தெரிஞ்சதே..' என்று உள்ளுக்குள் புலம்பியவன், தலையைக் கோதி திரும்பி நின்று சத்தமில்லாமல் நகைத்து விட்டு, "சரி வா போலாம்" என்று அவன் முன்னே நடக்க அவள் பெட்டியை இழுத்துக் கொண்டு பின்னே நடந்தாள்.

காரின் அருகில் வரவும் அவள் பெட்டியை வாங்கி பின்னாடி வைப்பதற்குள் அவள் ஏறி ஜம்மென்று முன்னிருக்கையில் அமர்ந்து விட்டாள். 'அப்பாகிட்ட இப்போ சொன்னா பயந்துருவாரு. நாம பஸ் ஏறிட்டு அப்புறமா சொல்லிக்கலாம்' என்றவள், அவன் வந்து டிரைவர் சீட்டிவ் அமரவும், "பஸ் இருக்கும்ல" என்றாள் பாவமாக.

"தெரிலமா அங்க போனா தான் தெரியும். ஸ்ரீவில இருந்து சென்னைக்கு த்ரூ பஸ் கவர்மென்ட் பஸ் ஒன்னு ரெண்டு தான் இருக்கும். அதுலாம் இந்த நேரத்துக்கு போயிருக்கும். நாம ப்ரைவேட் பஸ் தான் இருக்கானு போயி பாக்கனும். பார்ப்போம்" என்று காரை இயக்கி வேகமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ப்ரைவேட் பேருந்து நிலையம் வந்தான்.

அவன் இறங்கி சுற்றி முற்றி சென்னை செல்லும் ப்ரைவேட் பேருந்தை விசாரிக்க, அவன் வேகத்திற்கு ஓட முடியாமல் அவளும் பின்னாலே ஓடிக் கொண்டிருந்தாள். சென்னை செல்லும் பேருந்து ஒன்று கூட இல்லை. கடைசி பேருந்தும் அவர்கள் வருவதற்கு பத்து நிமிடம் முன்னால் தான் சென்றது என்று கூறி விட.. அவனுக்கோ அடுத்து என்ன செய்வதென்று புரியாத நிலை. அவளுக்கோ நடுக்காட்டில் திக்கு தெரியாமல் திரியும் உணர்வு.

"இதுக்கடுத்து எந்த பஸ்ஸூம் இல்லையாணே.." என்று நாலாவது முறையாக அங்கிருந்த மற்ற ஊர் செல்லும் பேருந்து ஓட்டுநரிடம் கேட்க..

"இல்ல தம்பி. எல்லா பஸ்ஸூம் போயிருச்சு. நீ ஒரு கால் மணி நேரம் முன்னாடி வந்தா புடுச்சுருக்கலாம். அப்படி அவசரம்னா மதுரைக்கு போயி அங்கருந்து சென்னை பஸ்ஸை புடுச்சு போங்கப்பா. மதுரை போய்ட்டா ஏகப்பட்ட பஸ்ஸூ இருக்கும். போனும்னா சீக்கிரம் கெளம்புங்க. இங்கிருந்து மதுரைக்கு போற கடைசி பஸ்ஸை விட்டுட்டா அப்புறம் அங்க போறதுக்கும் பஸ்ஸூ இல்ல" என்க.

"ஓ சரிணே. ரொம்ப தேங்க்ஸ் ணே. நான் பாக்குறேன்" என்று வேகமாய் நிலானியிடம் வந்த மாறன் அவளிடம் விவரத்தைச் சொல்லி, "இப்போ என்ன செய்யப் போற?. மதுரை போய் சென்னை பஸ் ஏறிப் போய்க்கிறியா? இல்லை உன் ப்ரண்டு வீட்ல விட்டுறேன். நீ நாளைக்கு ஊருக்கு போய்க்கிறியா?" என்று அவளிடமே கேட்க.

"இல்ல இல்ல.. இந்த நேரத்துல சிந்து வீட்டுக்கு வேண்டாம். அவ இருந்தா பரவால‌. அவளும் இல்லாம இந்த நேரத்துல அங்க போனா நல்லா இருக்காது"

"அப்போ மதுரை பஸ் ஏத்தி விடவா?"

"நீங்க மதுரை பஸ்ல ஏத்தி விட்டா மதுரைக்கு போய்டுவேன். அங்கிருந்து..?" என்று உதட்டைப் பிதுக்க..

"அங்க நிறைய பஸ் கிடைக்கும். அங்கிருந்து சென்னை பஸ்ல போ"

"அது எனக்குத் தெரியாதே"

"அதுக்கு?. அப்புறம் என்ன பண்றது?" என்றவன் புருவங்கள் முடிச்சுகளிட.

"அதுக்கு.. நீங்களே என்னை மதுரை வரைக்கும் வந்து பஸ் ஏத்தி விட்டுறேங்களா?. ப்ளீஸ் சார். இவ்வளவு ஹெல்ப் பண்ணிட்டேங்க. இந்த ஒரு உதவியும் பண்ணிடுங்களேன். ப்ளீஸ்" என்று விழிகளால் கெஞ்ச.

'நீ சும்மா உதவினு கேட்டாலே இவன் ஓடி வருவான். நீ வேற ஏன்மா கெஞ்சுற?. அப்டித்தான மாறா?.' என்று மனசாட்சி கேள்வி கேட்க. 'ச்சீ ச்சீ.. அப்படிலாம் இல்ல. நாளைக்கு எனக்கு பெரிசா எந்த வேலையும் இல்ல. அதுனால் தான் போறேன்' என்று இவன் பதில் சொல்ல.. 'அப்போ நீ அவ கூட போறதா முடிவு பண்ணிட்ட?' என்று மீண்டும் மனசாட்சி கேள்வியெழுப்ப.. 'ஆஃப்கோர்ஸ்..' என்றவன் எப்போதோ அவளுடன் கிளம்பி விட்டான்.

மதுரை செல்லும் பேருந்தில் அவளை அமரச் சொல்லிவிட்டு குமரேசனுக்கு அழைத்து பேருந்து நிலையம் வரச்சொல்லி, "நான் அவசரமா மதுரை போக வேண்டியது இருக்குடா. க்ளையன்ட் ஒருத்தவங்க பேமிலி டிரிப் போறதுக்கு டிரைவர் கேட்டாங்க. நான் போய் பேசிட்டு வந்துறேன்" என்று அவனிடம் காரை கொடுத்து அனுப்பி விட்டு இவன் அவளுடன் பேருந்தில் ஏறினான்.

இருவரும் எதிரெதிர் சீட்டில் அமர்ந்தனர். "நீங்களும் என் கூடவே உட்காரலாமே?" என்க.

"இல்லமா நீ லேடிஸ் கூட போய் உட்காரு" என்று விட்டு அவளுக்கு நேரெதிர் உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டான். இரண்டு இருக்கைக்கு இடைப்பட்ட இடைவெளியில் பேசும் தூரத்தில் தான் இருந்தாள். என்ன காதோடு காது பேச முடியாது அவ்வளவு தான்.

"ஏன் என்னை உள்ள உட்காரச் சொன்னேங்க?. அந்த அண்ணா தான் எனக்குத் தெரியுமே?. எனக்கு ஹெல்ப் பண்ணப் போறாதா சொன்னா என்ன சொல்லப் போறாங்க?" என்று சந்தேகமாக கேட்க.

"நீ சொல்லிட்டு போய்டுவமா. அதுக்கப்புறம் நான் தான் அவன் கூட வேலை பார்க்கனும். ரெண்டு நாள் பார்த்த யாரோ ஒரு பொம்பளப்புள்ளைய கூட்டிட்டு நைட் பஸ் ஏத்தி விடப் போனா என்ன நினைப்பாங்க?. அப்புறம் ஏதாவது இட்டுக்கட்டி பேச ஆரம்புச்சுருவாங்க ஊருக்குள்ள. எதுக்கு வம்பு"

'ஒரு பொண்ணை பஸ் ஏத்தி விட உதவி பண்றது ஒரு குத்தமா?. இதுல தப்பா பேசுறதுக்கு என்ன இருக்கு?. ஏதோ சொல்றாங்க' என்று தோளைக்குலுக்கி விளையாட்டாய் எடுத்துக் கொண்டவள் இன்னும் சிறிது நேரத்தில் அவன் சொன்னதின் அர்த்தத்தை புரிந்து கொள்ளப் போகிறாள் என்பது பாவம் அவளுக்கு அப்போது தெரியவில்லை.


தொடரும்.
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
545
164
43
Dindugal
மதுரைல பஸ் இல்லண்ணா சென்னை வரை போய் விட்டுட்டு வருவாரா?
 
  • Like
Reactions: Pandiselvi

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
267
149
43
Theni
விட்டா இவனே சென்னை வரை போய்ட்டு வருவான் போல
 
  • Like
Reactions: Pandiselvi

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
122
96
28
Chennai
மதுரைல பஸ் இல்லண்ணா சென்னை வரை போய் விட்டுட்டு வருவாரா?
ஆமா ஆமா போவான் 😀. நன்றி சிஸ் 🙏
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,612
667
113
44
Ariyalur
மதுரைக்கு போய் பஸ் இல்லாட்டி திருச்சி போக சொல்லுவாங்கலோ 🤔🤔🤔🤔தூளு மாறா உன் காட்டுல மழை தான்