அத்தியாயம் 6
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கிளம்பி விட்டது பேருந்து மதுரையை நோக்கி.. எதிர் சீட்டில் அமர்ந்திருந்தாலும் அவ்வப்போது விழிகள் அவளிடம் சென்று வந்தது. இதயத்தை திறக்கும் சாவி விழிகள் தானே. அந்த வேலையை சிறப்பாக செய்து கொண்டிருந்தது.
நிலாவுக்கோ இருந்த பதட்டம் ஒருபுறம் என்றாலும், காலை கையை நீட்டி நன்றாக அமர முடியாமல் அசௌகரியமாக இருந்தது. அப்போது தான் உணர்ந்தாள் இன்னும் அவள் சேலையில் இருப்பது. 'சே. இந்த சிந்து பக்கி பேச்சைக் கேட்டு சேலையை கட்டிக்கிட்டு கோவிலுக்குப் போனது ரொம்ப தப்பாப் போச்சு. இதை கட்டிக்கிட்டு ப்ரியா உட்கார முடியுதா.. இங்க இழுத்து விட அங்க இழுத்து விடனு அதே வேலையா இருக்க வேண்டியது இருக்கு. இன்னைக்கு என் நேரமே சரியில்லை ச்சே. இதுக்கு மேல எந்த பிரச்சனையும் குடுக்காம என்னை ஊரு போய் சேத்துரு கடவுளே' என்று கடவுளிடம் மானசீகமாக வேண்டியவள், சேலையை ஒழுங்குபடுத்த, கையை காலை அங்குமிங்கும் நகட்டி வைக்க என்று அசைந்து கொண்டிருந்தாள்.
'இதுக்கு மேல முடியாதுடா சாமி' என்றவள் முட்டிக்கு மேலே சேலையை இரு கைகளால் தூக்கிப் பிடித்தவள் முன் சீட்டின் பின்னால் இருந்த கம்பியில் காலைத் தூக்கி வைத்துவிட்டுத் பக்கவாட்டில் திரும்ப அவளை விநோதமாக பார்த்துக் கொண்டிருந்தான் மாறன்.
"ஈஈ.. காலு வலிக்குது அதான்" என்றவள் காலை இறக்க, சிரித்துக் கொண்டிருந்தான் மாறன்.
எப்படியோ இரண்டு மணி நேர பயணத்திற்கு பின் மதுரை வந்து சேர்ந்தது.
மதுரை வருவதற்குள் டயர்டாகி விட்டாள் நிலானி. இப்படியெல்லாம் அவள் வாழ்வில் அலைந்து திரிந்ததில்லை. அந்த அளவுக்கு அவள் தந்தை அவளை விட்டதில்லை. மதியம் சாப்பிட்டுக் கிளம்பியது. கோவிலில் குடுத்த பிரசாதத்தை சாப்பிட்டதிலே பாதி வயிறு நிறைந்து விட, சில சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டவள் அத்தோடு இரவு உணவை முடித்துக் கொள்ளலாம் என்றிருந்தாள். அவளது கவனக் குறைவால் இந்த அளவுக்கு அல்லோலப்படுவாள் என்று அவள் நினைக்கவில்லை. பேருந்தை விட்டு இறங்கவும் வயிறு பசியில் கூப்பாடு போட்டது.
'என்ன வயிறு இப்படி சவுண்டு விடுது. பசில செத்துருவேன் போலயே. இவங்ககிட்ட கேட்போமா வேண்டாமா?. கொஞ்சம் விட்டா மயங்கியே விழுந்துடுவோம். ம்ஹூம்.. ரோசம் பார்த்தா வேலைக்காகாது. கேட்டுரு நிலானி' என்று நினைத்தவள், "ஹலோ சார்.." என்றாள்.
"சாரா? நானென்ன வாத்தியாரா இல்ல வயசானவனா?. மாறன்.. இளமாறன் என் பேரு" என்றான். தன் பெயரை மறந்து விட்டாளே என்ற மனதிற்கு கோவம்.
'அய்யயோ கோவமா பேசுற மாதிரி இருக்குதே?. ஒருவேளை இவரும் பசில இருக்காரோ?. இவ்வளோ நேரம் நல்லா பேசிட்டு இருந்தாரு' என்று பயந்தவள், அப்படியே பின் வாங்கினாள். அவனோ புறநகர் செல்லும் பேருந்து எங்கு இருக்கும் என்று விழிகளால் துலாவிக் கொண்டிருந்தான். அவனுக்கு இருக்கும் பதட்டம் அவசரம் கூட அவளிடம் இல்லை.
பசி தாங்க முடியாமல், "மாறன்.. பசிக்குது" என்று கேட்டும் விட்டாள்.
விரைந்து நடந்து கொண்டிருந்தவன் கால்கள் அவளின் குரலில் அப்படியே நின்றது. விழிகளிலே பசியை காண்பித்து கெஞ்சிக் கொண்டிருந்தவளைக் கண்டு என்னவோ போல் ஆகிவிட்டது அவனுக்கு. "மதியம் மண்டபத்துல சாப்டது. நைட் இன்னும் சாப்டல. பசிதாங்க முடியலங்க. ப்ளீஸ் ஏதாவது சாப்டு பஸ் இருக்கானு பாக்கலாமா?".
அவள் சொன்ன பின்னே அவன் வயிற்றின் மொழியை உணர்ந்தான். அது வெகுநேரமாக அவனுக்கு சிக்னல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவனோ அருகில் இருந்த நிலவுப் பெண்ணின் அழகில் மெய்மறந்திருந்தவன் விழியின் பசியைப் போக்கி விட்டு வயிற்றின் பசியை ஓரங்கட்டி விட்டான். இப்போது தான் அவன் சாப்பிடாததும் ஞாபகம் வந்தது. "சரி வா போலாம்" என்றவன் அவசரத்திற்கு அருகில் இருந்த சின்ன பரோட்டா கடையில் நுழைந்தார்கள். அந்த நேரத்திறக்கு பரோட்டா தவிர எதுவும் இல்லை. இருவரும் பரோட்டாவை வாங்கிக் கொண்டு அமர.. சால்னா ஊத்த வரும் போது அவள் அப்படியே பரோட்டாவை வைத்திருக்க, "இதென்ன சப்பாத்தியா அப்டியே பிச்சு சாப்ட?. நீ என்னமா பரோட்டாவே வாழ்நாள்ல சாப்டதே இல்லையா?" என்று மாறன் கேட்க.
"சாப்டுருக்கேனே. எங்கப்பா தான் எனக்கு பிச்சு போட்டுத் தருவாரு"
"அதுக்கும் ஒரு ஆளா" என்று முனங்கியவன், அவள் கேளாமலே பரோட்டாவை பிய்த்துப் போட்டு, "இப்போ ஊத்துங்கணே" என்று சொல்ல..
"வெயிட் வெயிட்.." என்றவளின் கத்தலில் சர்வரே அதிர்ந்து சால்னா கப்பை பின்னால் இழுக்க..
"பரோட்டா மேல ஊத்த வேண்டாம். இதை தனியா ஓரமா இங்க ஊத்துங்க" என்று இலையின் ஓரத்தைக் காண்பிக்க.. அவரும் சால்னாவை ஊற்றி விட்டு அவளை விநோதமாக ஒரு பார்வை பார்த்து விட்டுச் சென்றார் அவர்.
இருந்த பசியில் அதையெல்லாம் அவள் கருத்தில் கொள்ளாமல் பிய்த்த பரோட்டா துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து சால்னாவில் தொட்டுத் தொட்டு சாப்பிட, "இது பரோட்டாவுக்கே அவமானம்" என்று சிரித்து விட்டு அவன் இலையில் இருந்த சால்னாவில் குளித்த பரோட்டாவை வாயில் போட்டு வயிற்றின் பசியை அடக்கினான். இருவரும் சாப்பிட்டு விட்டு, "போதுமா? இன்னும் ஏதாவது இருக்கா?. இப்பவே மணி பதினொன்னாகப் போது. போய் பஸ் இருக்கானு பாக்கனும்" என்று இதழில் உறைந்த சிரிப்போடு அவளைக் காண்க..
"இல்ல இல்ல அவ்ளோ தான். பஸ் பாக்கலாம். டைம் ஆச்சு" என்று தலையாட்ட.
அவன் அங்கும் இங்கும் தேடியதில் ஒரு ப்ரைவேட் பேருந்து கிடைக்க.. அங்கு சென்று கேட்டதில், "ரெண்டு பேரும் போறேங்களா?. ரெண்டு சீட் இருக்கு. ஏறிக்கோங்க" என்றான் நிலானியை மேலும் கீழும் கோணலாய் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே இருபத்து ஐந்து வயது மதிக்கத்தக்க அந்த நடத்துநர்.
மாறனுக்கு சுள்ளென்று கோவம் வந்து கன்னத்தில் நாலு அறை விட வேண்டும் போல் இருந்தது அவனை. இருந்தும் இருக்கும் இடமும் நேரமும் கருதி அமைதியாக நகர்ந்தவன், "ரெண்டு சீட் தான் இருக்குனு சொல்றாங்க. ஒரு சீட் நீ எடுத்துக்கிட்டா இன்னொரு சீட்ல ஜென்ட்ஸ் வந்தா கஷ்டம். அதுனால நீ இங்க வெயிட் பண்ணு. நான் போய் வேற பஸ் இருக்கானு பாத்துட்டு வர்றேன்" என்று அவன் வேறு பேருந்து இருக்கா என்று பார்க்கச் சொல்ல.. தனியே கையில் பெட்டியோடு நின்றாள்.
அவன் சென்றதும் அந்த நடத்துநர் மெல்ல அவள் அருகில் வந்து, "என்னமா இந்த நேரத்துல சென்னை போறேங்க?. லவ் பண்ணி வீட்டை விட்டு ஓடிப் போறேங்களா?. கட்டுன புடவையோட வந்துருக்க?. ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு சென்னை போறேங்களா?. கழுத்துல தாலி இருந்த மாதிரி இல்லையே ஓடிப் போறேங்களா இல்லை வேறெதுவும் ரூம்க்கு.." என்று அவளை தலை முதல் கால் வரை அளந்து கொண்டே ஒரு மார்க்கமாக கேட்க.
"ஹலோ மிஸ்டர். மைன்ட் யுவர் வேர்ட்ஸ். ஒரு பொண்ணு கிட்ட இப்டித்தான் பேசுவேங்களா?. உங்க வேலையை மட்டும் பாருங்க. அறிவில்ல" என்று விரல் நீட்டி எச்சரிக்க..
"ஏய் என்ன ஓவரா பேசுற?. இந்த நேரத்துல ஒரு பையன் கூட வந்து நிக்குற. நீயென்ன நல்ல பொண்ணாவா இருக்கப் போற?. ஒன்னு ஓடிப்போற கேஸா இருக்கனும் இல்ல ரூம்போடுற கேஸா இருக்கனும். இதெல்லாம் இப்போ சகஜமா போச்சு. சிலதுங்க பஸ்ஸூனு கூட பாக்காம.." என்று அவர் அடுத்து அசிங்கமான வார்த்தையை உதிப்பதற்குள் நிலானியின் மென்கரங்கள் அவளின் கோவத்தின் அளவை அவன் கன்னத்தில் காண்பித்திருந்தது.
'ஒரு பெண்ணிடம் அடி வாங்கவா?' என்றவனின் ஆண்திமிர் தலைதூக்க, "என்மேலயே கையை வச்சிட்டு உன்னை சும்மா விட்டுருவேனா?" என்றவளின் முடியை கொத்தாக பிடிக்க..
"ஸ்ஆ ஆ" என்று வலியில் துடித்தவளின் கண்கள் நீரைச் சொரிய.. திரும்பி வந்து அந்தக் காட்சியைக் கண்ட மாறனுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோவம் வந்ததோ, "அடிங்.. எடுறா கையை அவ மேல இருந்து" என்று அவன் கையை அவள் முடியிலிருந்து விடுவித்து ஓங்கி ஒன்று வைக்க, தூரப் போய் விழுந்தான்.
அவளின் முகத்தில் தெரிந்த வலியும் கண்ணீரையும் கண்டவன் ருத்ரமூர்த்தியாய் நின்று கொண்டிருக்க, "மாறாஆஆ" என்று ஓடி வந்து அவன் நெஞ்சில் புதைந்து கொண்டாள்.
அவள் அணைப்பில் திடுக்கிட்டவன் அவளின் பயம் உணர்ந்து, "ஒன்னுமில்ல.. ஒன்னுமில்லமா அழாத.." என்று ஒரு கையால் அவளின் தலையை வருடிக் கொண்டிருக்க.. மாறனின் முரட்டு வேகத்திலும் அவனின் கோவத்தையும் கண்டு பயந்த அந்த நடத்துநர் ஓடியே விட்டான்.
இன்னமும் அவன் நெஞ்சில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள். தடாலடியாக அவளைப் பிரிக்கவும் முடியவில்லை அவனால். அப்படியே இருந்து விட நெஞ்சம் ஏங்குகிறது. ஆனால் மூளையோ பிரிக்கச் சொல்லி புத்தி சொல்கிறது. இரண்டுக்கும் நடுவில் அவன் கைகள் அவளை ஆறுதலாய் தழுவிக் கொண்டிருக்கிறது.
"என்னாச்சுமா? அவன் உன்கிட்ட ஏதாவது தப்பா.." என்றவனுக்கு வார்த்தை வரவில்லை. அப்படி நினைக்கவே அவனுக்கு உயிர் வரை வலித்தது.
"இல்லை.." என்று இடவலமாக தலையாட்டியவள் அவனிடம் அனைத்தையும் கூறி, "கல்யாண மேடைல இருந்து அப்டியே ஓடி வந்துட்டியா?. ஓடிப்போகப் போறியா இல்ல ரூம்.. ரூம் போடப் போறியானு கேட்குறான். என்னைப் பார்த்தா அப்டியாத் தெரியாது?" என்று தேம்பிக் கொண்டே சொல்ல..
அப்போது தான் அவள் சேலையில் இருப்பது உரைத்தது. அவளுக்கு எந்த உடை அணிந்தாலும் அம்சமாக இருப்பதால் அவன் கவனம் உடையில் பதியவில்லை. உற்றவளிடமே இருந்தது. சேலையில் வாடிய முகத்துடன் கையில் ஒற்றைப் பெட்டியுடன் ஒரு ஆணுடன் நிற்கவும் தவறாக நினைத்துக் கொண்டானோ என்று நினைத்தவன், "நீ ஏன் சேலையிலே இருக்க?. மதியமே ட்ரெஸ் சேன்ஞ்ஜ் பண்ணிட்டு வந்துருக்கலாமே?"
"எல்லாம் அந்த சிந்து பக்கியால வந்தது. கோவிலுக்குப் போறேல சேலை கட்டிட்டேப் போ. திரும்ப டைம் இருந்தா வீட்டுக்கு வந்து ட்ரெஸ் மாத்திக்கோனு சொன்னா. டைம் இல்லாததால அப்டியே வந்துட்டேன். இருந்தாலும் அதுக்காக அவன் அப்படி கேட்பானா?" என்று மூக்கு விடைக்க கோவம் கொல்ல.
"இந்தக் கோவத்தை அவன்கிட்ட காண்பிச்சிருக்கனும்"
"அதைக் காண்பிச்சதால தான் அவன் தலைமுடியைப் பிடிச்சுட்டான். இல்லனா அவனை உண்டு இல்லனு ஆக்கிருப்பேன்"
"ஆமா ஆமா ஜான்சி ராணி தான்" என்றவனின் குரலில் நக்கல் இழையோட.. அதை அவள் புரிந்து கொள்ளக்கூட இல்லை.
"வேற ஒரு பஸ் இருக்கு. ஆனா அதுலயும் ரெண்டு சீட் தான்மா இருக்கு. இன்னொரு சீட் ப்ரியா இருந்தா எனக்கு குடுங்கன்னு ஒரு ஜென்ட்ஸ் தான் நிக்குறாரு" என்று மாறன் என்ன செய்வதென்று தெரியாமல் யோசனையுடன் நிற்க.
"நான் ஒரு யோசனை சொ
ல்லவா?" என்று அவள் கூறிய யோசனையில் மாறனுக்கு தலையே சுற்றியது.
தொடரும்.