அத்தியாயம் 8
வீட்டுக்கு வெளியே கயிற்றுக் கட்டிலைப் போட்டு படுத்துக் கொண்டு வானத்தில் உள்ள நிலவை வெறித்துக் கொண்டிருந்தான் மாறன். மனதில் ஓடிக் கொண்டிருக்கும் பல குழப்பங்களுக்கு ஏதோ ஒன்று பிடிபடுமென்று வானில் தூண்டிலிட்டு படுத்திருக்கிறான் நீண்ட நேரமாய். ஆனால் ஒன்றும் பிடிபடாமல் காற்றில் அலைகிறது மனம்.
நேற்று நடந்ததை நினைவு கூர்ந்தது மனம். அவள் வீட்டிலே காலை உணவை முடித்து விட்டுக் கிளம்பினான். அவளது பெற்றோர்கள் நல்லமுறையில் பழகினர் அவனிடம். "நானே போய் பஸ் ஏத்திவிட்டு வர்றேன்" என்று மாறன், "வேண்டாம் பரவால. நானே போய்க்கிறேன்" என்று எவ்வளவு மறுத்தும் மனோகர் காரை எடுக்கச் சென்றார்.
அவளிடம் விடைபெறும் போது, "உன் பேரு என்ன?" என்றான்.
"என் பேரேத் தெரியாதா உங்களுக்கு?. பெயர் கூட தெரியாம தான் மூனு நாளா நாம மீட் பண்ணிட்டு இருந்துருக்கோம். ஆச்சர்யமா இருக்குல?. என் பேரு நிலானி. நிலானிகா. நீங்க எப்டி வேனா கூப்டுங்க. உங்களை என் வாழ்க்கைல மறக்கவே மாட்டேன். என் வாழ்க்கைல இதுவரை சந்திச்சதுல யூ ஆர் ஒன் ஆஃப் தி வெரி நைஸ் பெர்சன். உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. நீங்க எப்போ சென்னைக்கு வந்தாலும் எங்க வீட்டுக்கு வரனும்" என்று கண்ணைச் சிமிட்டி இதழை வளைத்து வளைத்துப் பேச.. ஆணவன் படும்பாடு அவள் எங்கே அறியப் போகிறாள். ஒருபக்கம் அவளை பிரியப்போகும் வலியை உணர்கிறது மனம். இன்னொருபக்கம் அவளுடன் கதைக்கும் கடைசி நொடி வரை மனதில் சேமித்து ரசிக்கிறது.
"ம் கண்டிப்பா.. கிளம்புறேன் பாக்கலாம்" என்று மனமே இல்லாமல் அவளிடம் இருந்து விழிகளைத் திருப்பி வாசலை நோக்கி நடந்தான்.
மனோகர் காரில் காத்திருக்க, காரின் பின் கதவைத் திறந்து ஏறும் முன் நின்று நிதானமாய் திரும்ப, "பை மாறன்" என்று கையைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்தவளை மனதில் நிரப்பி விட்டு, சின்னத் தலையசைப்போடு காரில் ஏறிக் கொண்டான்.
இரவு தான் சென்னையிலிருந்து வீடு வந்து சேர்ந்தான். இரண்டு நாள் அப் அன்ட் டவுன் அலைந்ததில் உடல் ஓய்வு கேட்கிறது. ஆனால் மனதை திருடிச் சென்றவளோ இமைகளையும் திருடிக் கொண்டு விழிகளை மூட விடாமல் செய்கிறாள். இனம்புரியாத இனிய அவஸ்தையாக இருந்தது. சோழியை உருட்டி விட்டது போல் உள்ளுக்குள் உள்ள செல்கள் அனைத்திலும் புகுந்து உருட்டிக் கொண்டு அவன் மனதை பிசைந்து கொண்டிருந்தாள்.
'இது வெறும் ஈர்ப்பு மட்டும் தானா?' என்ற கேள்விக்கு, அவளை விட்டுக் கிளம்பும் நேரம் வலித்த மனதே இல்லை என்று பதில் சொல்லியது. 'அப்போ இது காதலா?. அவ்ளோ தாக்கத்தை எனக்குள்ள ஏற்படுத்திட்டாளா?. அதென்ன பார்த்த மூனு நாள்ல அவமேல அப்படி என்ன காதல் வந்துடும்?. நாளைக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு வேலையை இழுத்துப் போட்டு செஞ்சா எல்லாம் மறந்துரும்' என்று அவனுக்கு அவனே ஆறுதல் சொல்லிக் கொண்டான்.
காதல் ஒரு மாயத்திரை அல்லவா. அதை எந்த வரையறைக்குள்ளும் வகுக்க முடியாது. இப்டி இருந்தா தான் காதல், அதை செய்தால் தான் காதல் என்று யாராலும் ஆணித்தரமாக சொல்ல முடியாது. கலரா இருந்தா காதல் வரும், அழகா இருந்தா காதல் வரும், பணக்காரனா இருந்தா காதல் வரும், படித்தவனா இருந்தா காதல் வரும் என்று யாராலும் சொல்ல முடியுமா?. ஒருவரைக் கண்டதும் அந்த தருணத்தில் நம் மனசுக்கு ஏற்ப உருவாகும் உணர்வுகளின் அடிப்படையில் காதல் நம்மைத் தொற்றிக் கொள்கிறது. அதுபோல் தான் மாறனுக்கும். முதலில் ஈர்ப்பு, பின் அவளின் உதவும் குணம், அதன்பின் அவளின் வெகுளித்தனம் என்று ஒவ்வொன்றாய் பிடித்துப் போய் இப்போது இந்த நிலையில் நிற்கிறது. இதே எண்ணம் அவளுக்கும் இருந்தால் அந்தக் காதலுக்கு அர்த்தம் உண்டாகும். இல்லையேல் சொல்லாதக் காதல் செல்லாத காதலாய் மாறிவிடும். மனங்கள் இணையுமா?. இவனுக்குள் உண்டான அதே உணர்வுகள் அவளுள் உண்டாகுமா?. வடகோடியில் அவள் தென்கோடியில் இவன். எவ்வாறு இவர்கள் மனது இணைகிறது என்று பார்ப்போம்.
பெற்றவர்கள் ஒன்றாக தன்னை விட்டுச் சென்ற பின், வேலை முடித்து விட்டு வரும் போது வெறும் வீடு தான் வரவேற்கும். இன்றும் அப்படித்தான். ஆனால் கூடவே அவள் நினைவுகள் இருக்கிறது பேசுவதற்கு. எந்த தனிமையும் தன்னை தாக்கக்கூடாது என்பதற்காகவே வேலை வேலை என்று ஓடி விட்டு அலுப்போடு பொத்தென்று கட்டிலில் விழுந்தால் அப்படியே விழிகள் தூக்கத்தைத் தழுவிக் கொள்ளும். அதற்காகவே இரவு வரை வேலை செய்து விட்டு வருவான். இன்று படுத்ததும் தூங்கவே முடியவில்லை அவனால். உடம்பில் அலுப்பு இருக்கிறது. ஆனால் மனதிலும் கனம் இருக்கிறது. உருண்டு புரண்டு படுத்தவன் எப்போது உறங்கினானோ அவன் விழிகளுக்கே வெளிச்சம்.
அதிகாலை சேவல் அன்று தாமதமாகவே கூவியது மாறனுக்கு. முகத்தில் சுள்ளென்று வெயிலடிக்க அதிலும் முகம் சுளிக்காமல் உறங்கிக் கொண்டிருந்தவனை, "மாமா.. மாமா.." என்று எழுப்பினாள் அவனது அத்தை மகள் அருணா.
"ப்ச்" என்று சலித்துக் கொண்டே எழுந்தவன் வெயில் மண்டையைப் பிளக்கவும் தான், 'இவ்வளவு நேரம் தூங்கிட்டோமா?' என்று அவசரமாய் எழுந்தவன், "நீயென்ன காலங்காத்தால இங்க வந்துருக்க" என்று வேண்டாவெறுப்பாய் பார்த்தான்.
"அம்மா பால் கொழுக்கட்டை பண்ணாங்க. உனக்கு குடுத்துட்டு வரச் சொன்னாங்க மாமா. இந்தாங்க" என்று தூக்குச் சட்டியை எடுத்து நீட்ட..
"அங்க வச்சுட்டுப் போ" என்று அவள் முகம் பார்க்காமல் சிடுசிடுத்தான்.
"ஆமா.. நேத்து நைட் எங்க போனேங்க?. உங்களை மதுரைல பார்த்ததா என் ப்ரண்ட் சொன்னா. ஏதோ பொண்ணு கூட நின்னுக்கிட்டு இருந்தாப்புல சொன்னா. நிஜமாவா?" என்று கண்ணைச் சுருக்கி அவனை ஆராய.
"எவ அவ உன் ப்ரண்ட் என்னைப் பார்த்தா?. ஆமா சென்னை போனேன். யாராது பொண்ணு பக்கத்துலே நின்னா அவகூட போனேன்னு அர்த்தமா?. உன் ப்ரண்ட்க்கு கண்ணு நொள்ளையா?" என்று காட்டமாய் வார்த்தைகள் வந்து விழுந்தன.
"அதான பார்த்தேன் நீங்களாது பொண்ணு பின்னாடி போறதாவது.. அக்காவுக்கு நகை போட ஓடிஓடி உழைக்குறவரு பொண்ணைப் பாத்துட்டாலும்.. என்னைக்குத்தான் உங்க பாரம் குறையுமோ?. அத்தை மாமா இப்படியா ஒத்தப்புட்டு நகை கூட பைரவி அக்காக்கு சேர்த்து வைக்காம போவாங்க.." என்று சலித்துக் கொள்ள..
"ஏய்.. உன் வேலையைப் பாரு. உன் வீட்ல இருந்து நகையைக் கொண்டாந்து எங்கக்காக்கு போடப்போறியா?. வச்சுட்டேல. பேசாம கிளம்பு" என்று விறுவிறுவென்று வீட்டுக்குள் சென்று விட்டான்.
"ரொம்பத்தான் பண்றேங்க. என்னைக்கு இருந்தாலும் என்கிட்ட தான் வந்து சேரனும். ம்க்கும்" என்று தாடையை தோளில் இடித்து கொனட்டி விட்டுச் சென்றாள் அருணா.
உள்ளே சென்ற மாறனுக்கு கோவம் எக்குத்தப்பாக வந்தது. பெற்றவர்கள் இறக்கும் போது குடுத்த பணத்தைக் கேட்டு கடன்காரர்கள் வீட்டு வாசலில் நிற்கும் போது கண்டுகொள்ள ஒருத்தரும் இல்லை. அவனின் அக்கா பைரவி புகுந்த வீட்டில் தன் வாழ்க்கையை எப்படி நகர்த்துவது என்று பயந்து கொண்டிருந்தாள் எனில், இவனுக்கோ கடனும், பைரவிக்கு போட வேண்டிய நகையும் முன்னே நின்று பயமுறுத்தியது. இளமையில் வறுமை கொடியது என்றால், இளமையில் பாரம் அதைவிட மிகக்கொடியது. வாழ்க்கை இன்னதென்று அறியுமுன்னே தலையில் அத்தனை பாரத்தையும் தூக்கி வைத்து விட்டனர். கடன் சுமையில் கண்டு கொள்ளாதவர்கள், இப்போது தட்டுத் தடுமாறி ஒருநிலைக்கு வரவும் அருணாவை அவனுக்கு கட்டி வைக்க பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். அவனுக்கு துளியும் விருப்பமில்லை. அவனிடம் பேசினால் வேலைக்காகாது என்று பைரவிக்கு அடிக்கடி அழைத்துப் பேசி அவள் மனதை சலவை செய்து கொண்டிருக்கின்றனர்.
'இரவு இருந்த மனநிலை என்ன? இப்போது இருக்கும் மனநிலை என்ன?. ச்சே எல்லாம் நேரம்' என்று தலையிலடித்துக் கொண்டவன் சிறிது நேரம் அப்படியே இருந்தான். அவன் அக்கா பைரவியிடம் இருந்து அழைப்பு வரவும் ஏற்றவன், "சொல்லுக்கா. நல்லா இருக்கியா?"
"ம் நல்லா இருக்கேன்டா. நீ என்ன செய்யிற?. நல்லா இருக்கியா? சாப்டியா? வேலைக்கு கிளம்பிட்டியா?"
"இல்லக்கா நேத்து சென்னை வரைக்கும் ஒரு டிரைவர் வேலைக்குப் போயிருந்தேன். நைட்டு தான் வந்தேன். இப்போ தான் எழுந்துருச்சேன். இனிமே தான் போய் ஏதாவது டிரிப் இருக்கானு பாக்கனும்". இதுவரை பைரவியிடம் எதுவும் மறைத்ததில்லை. இன்று நிலானி பற்றிய விஷயத்தை மறைக்கிறான். அவனே ஒரு முடிவுக்கு வராத போது அவளிடம் எப்படி சொல்வது.
"ஓ சரி சரிடா. சீக்கிரம் சாப்டு. ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பு"
"சரிக்கா"
"அப்புறம்.." என்று சங்கடத்தோடு அவள் இழுக்க..
"க்கா. இந்த வாரம் வீட்டுக்கு வாரேன். கொஞ்சம் பணம் இருக்கு. அதுக்கு நகை வாங்கிக்கோ" என்று முடிக்கவும், அந்தப் பக்கம் பைரவி சத்தமில்லாமல் அழுது கொண்டிருந்தாள். சொல்லாமலே புரிந்து கொண்ட உடன்பிறந்தவனை நினைத்துக் கலங்க மட்டுமே முடிந்தது பேதையவளுக்கு. அவன் உழைப்பில் இவள் புகுந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். நினைக்கவே உள்ளமெல்லாம் வலிக்கத்தான் செய்கிறது. இந்த வாழ்க்கையும் விட்டு விட்டு மொத்தமாய் பிறந்த வீட்டில் தஞ்சம் புகுந்து அவனுக்குப் பாரமாய் இருக்கவும் முடியாதே. அவள் நிலையும் அங்கு அவ்வளவே. அங்கு அவளைக் குத்திக் கிழிக்க, இவள் அதை மாறனிடம் இறக்க விருப்பமின்றி இறக்கி வைக்கிறாள்.
"தேங்கஸ்டா தம்பி. உனக்கு கொஞ்சம் சேர்த்து வச்சுட்டு நகை எடுடா. எல்லாத்தையும் போட்டுறாத. நாளபின்ன ஆத்திர அவசரத்துக்கு வேனும்னா யாருகிட்ட போய் நிப்ப..". உண்மையான அக்கறையில் தான் சொன்னாள்.
"அதெல்லாம் பாத்துக்கிறேன் கா. நீ நல்லா சாப்டு நல்லா இரு. சரிக்கா நான் வேலைக்கு கெளம்புறேன்" என்று வைத்தவன் அதன் பின் எந்த மனப் போராட்டங்களையும் கண்டு கொள்ளாமல் கிளம்பி விட்டான் வேலைக்கு.
தொடரும்.