முத்தமழை - 01
அந்த பெரிய வீட்டின் உணவு மேஜையில் காலை நேரத்திற்கான உணவு வேலை மிகவும் அமைதியாக நடந்து கொண்டிருந்தது.
அனைவரும் உணவிற்காக மட்டுமே வாயைத் திறந்து கொண்டிருந்தனர். அவன் இருக்கும் வரை அப்படித்தான்.! அவனுக்கு அதிகம் பேசினால் பிடிக்காது! அதற்காக தனிமை விரும்பியா என்றால் இல்லை!
அவன் முன் யாரும் பேசக்கூடாது! இது ஒரு வகையில் சர்வாதிகாரம்தான். ஆனால் அதுதான் அவன்.
அவன் கர்ணன்!
கர்ணன் உணவுண்டு முடிக்கும் வரைக்கும் அமைதியாக இருந்த அவனின் அம்மா ராஜலட்சுமி, அவன் சரியாக எழும் நேரம் “தம்பி..” என நிறுத்தி அவனைப் பார்த்தார்.
‘என்ன சொல்லனுமோ நீங்களே சொல்லுங்க..’ என்பது போல் பார்வையை அவரிடம் திருப்ப,
“அது தம்பி.. அந்த பொண்ணுக்கு குழந்தை பிறந்திடுச்சாம்..” என்றார் தயக்கமாக.
அந்த வார்த்தையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவரும் ராஜலட்சுமியைப் பார்க்க, அவரோ மகனையே பார்த்தார்.
உணவில் கவனமாக இருந்த கர்ணனோ “எந்த பொண்ணுக்கு.?” என்றான் யோசனையாக. அவனின் அந்த பேச்சில் தான் அனைவரும் சற்று மூச்சு வாங்கி, மீண்டும் உணவில் கவனமாகினர்.
“அது.. அதுதான் தம்பி வல்லபி..” என்றபடியே மீண்டும் மகனை தயக்கமாக பார்த்தார்.
“ஓ..” என்று இழுத்தவன் “உங்களுக்கு எப்போ சொன்னாங்க..?” என்றான் மிகவும் சாதாரணமாக.
“காலையில அஞ்சு மணிக்குதான் அந்த பொண்ணோட அப்பா கூப்பிட்டு சொன்னார்..”
“ம்ம்.. அதுக்கு முன்னாடி சொல்லலயா?” என்றான் பார்வையில் கூர்மையைத் தேக்கி..
“அது.. அது வந்து நேத்து நைட் பதினொரு மணிக்கு வலி வந்து ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறோம்னு சொன்னார்…” என்றார் திணறிப் போய்..
“ஹ்ம்ம்.. சரி..” என்றவன் நாற்காலியில் இருந்து எழப்போக,
“தம்பி.. தம்பி அந்த பொண்ணை நாம போய் பார்க்க வேண்டாமா.?” என அவசரமாக கேட்க,
“அந்த பொண்ணுன்னா அது யாரு.?” என்றான் கிண்டலாக,
“அது வல்லபி.. உன்னோட மனைவி.. வல்லபி கர்னன்.!” என பயத்துடன் கூற,
“ம்ம்ம்.” என்று இழுத்தவன் “இங்க இருந்து யாரும் போய் பார்க்க வேண்டாம்..” என கட்டளையாக கூறியவன், தன் வேக நடையுடன் வெளியில் சென்றுவிட, அதுவரை அமைதியாக இருந்த அந்த உணவு மேஜை, நொடியில் சந்தைக் கடை போல் களைக்கட்டியது.
“ம்மா உங்களுக்கு என்ன பைத்தியமா? இப்போ எதுக்கு அந்த பிச்சைக்காரியைப் பத்தி அவர்கிட்ட பேசிட்டு இருக்கீங்க.. நீங்க என்ன சொன்னாலும் அவர் அவளை இங்க கூட்டிட்டு வரமாட்டார். அப்புறம் ஏன் இந்த வேண்டாத வேலை..” என ராஜலட்சுமியின் மூத்த மகள் வனிதா கத்த,
“அண்ணி.. அத்தை காரணம் இல்லாம பேச மாட்டாங்க. நாளைக்கு இதை வச்சு அவ எந்த பிரச்சினையும் பண்ணிடக்கூடாதுல்ல, அதனாலத்தான் அத்தை அவர்கிட்ட சொல்லிருக்காங்க. நீங்களே யோசிச்சு பாருங்க, குழந்தை பிறந்து யாரும் வந்து பார்க்கலன்னு சொன்னா, சொன்னாலும் நாம போகப்போறது இல்ல. ஆனா அவங்க சொல்லியும் நாம போகலன்னு ஒரு பிரச்சினை வந்தா அதுக்கு ‘அவர்தான் இந்த வீட்டிலிருந்து யாரும் போகக்கூடாதுனு’ சொன்னார் என்று நாமளும் பேச்சை முடிச்சு சமாளிச்சிக்கலாம்.” என்றார் அந்த வீட்டின் இளைய மருமகள் சுமித்ரா.
“சுமி சொல்றது தான் சரி. அத்தை அதைத்தான் யோசிச்சு செஞ்சிருப்பாங்க..” என்றான் வனிதாவின் கணவன் ரமேஷ்..
“ம்ம்.. ஆனாலும் அம்மா இதை சொல்லாம இருந்திருந்தா, அவருக்கு வல்லபியைப் பத்தின எண்ணமே இல்லாம இருந்திருக்கும். இப்போ குழந்தையைப் பத்தி சொல்லி தேவையில்லாம அந்தப் பொண்ணைபத்தி யோசிக்க வச்சிட்டாங்களோன்னு தோனுது.” என்றான் சுமித்ராவின் கணவன் சுந்தர்.
ஆனால் இது எதிலும் தலையிடாமல் உணவில் கவனமாக இருந்த இளைய மகள் யாழினியின் மேல் கவனமாக இருந்தார் ராஜலட்சுமி.
ராஜலட்சுமியின் அமைதியையும், பார்வையையும் உணர்ந்து அனைவரும் யாழினியைப் பார்க்க, அவளோ எதையும் கண்டுகொள்ளாமல் உணவை முடித்துவிட்டு எழுந்துவிட்டாள்.
“எல்லாம் இவ செஞ்சு வச்ச வேலைதானே.. அந்த பரதேசி இந்த வீட்டுக்குள்ள வர இவதானே காரணம்..” என வனிதா, வழக்கம்போல கத்த,
அதை காதில் வாங்காமல் சமையல் அறைக்குள் நுழைந்து “குழந்தை பெத்தவங்க சாப்பிடுற பைத்திய சாப்பாடு செஞ்சுட்டு எனக்கு சொல்லுங்க. பத்து மணிக்கு எல்லாம் ரெடி செஞ்சி பேக் பண்ணிட்டு என்னை கூப்பிடுங்க..” என ஹாலுக்கு வர, அங்கிருந்த அனைவரும் அவளை முறைத்து தள்ள, ராஜலட்சுமி மட்டும் “இங்க இருந்து எதுவும் அங்க போகக்கூடாது..” என்றார் கட்டளையாக.
“ம்ம்ம் ஓக்கே அவ்ளோதானே.. எதுக்கு இவ்ளோ டென்சன், கோபம்.. போங்க போய் பிபி மாத்திரையை போடுங்க..” என்றபடியே தன் போனை எடுத்து வெற்றி என்ற நம்பருக்கு அழைத்தாள் யாழினி.
அதைப் பார்த்ததுமே அந்த கேங்கிற்கு கோபமும் எரிச்சலும் வர, “இவக்கிட்ட பேசுறதே வேஸ்ட்.. தான் கெட்ட குரங்கு தன் வனத்தையும் சேர்த்து கெடுத்துச்சாம்..” என வனிதா கத்திவிட்டு செல்ல, மற்ற அனைவருமே யாழினியை முறைத்துக் கொண்டே சென்றுவிட, ராஜலட்சுமி மட்டும் தீப்பாரவையோடு நின்றிருந்தார்.
‘என்ன’ என்பது போல் அவரை நிமிர்ந்து பார்க்க, “மறுபடியும் அவளை இங்க கொண்டு வரனும்னு கனவுல கூட நினைச்சிடாத. அது இந்த ஜென்மத்துல நடக்காது..” என்ற தாயை, யாழினி கிண்டலாக பார்த்தாளே தவிர, ஒன்றும் பேசவில்லை.
அதற்குள் வெற்றி என்ற எண்ணிலிருந்தே அவளுக்கு அழைப்பு வந்துவிட “சொல்லுங்க வெற்றி…” என்றாள் அமைதியாக.
அந்த பக்கம் என்ன சொன்னதோ, “இல்ல நீங்க அத்தைக்கிட்ட சொல்லி, அங்கேயே சமைக்க சொல்லிடுங்க.. இங்க இருந்து எதுவும் போகக்கூடாதுனு தலைமை உத்தரவு.” என்றாள் சீரியசாக.
மீண்டும் அந்தப் பக்கம் ஏதோ பேச, இங்கு யாழினியின் முகம் கசங்கிவிட்டது. “இல்ல.. இல்ல நான் வல்லபிக்காகத்தான் யோசிச்சேன். சரி இனி இங்க இருந்து எதுவும் கொண்டு வரல. சாரி வெற்றி.. நான் கிளம்பி வெய்ட் பண்றேன். போகும் போது என்னை பிக் பண்ணிக்கோங்க..” என்றுவிட்டு போனை வைத்தவள் அமைதியாக அறைக்குள் சென்றுவிட்டாள்.
ராஜலட்சுமிக்கு மகளின் செய்கையில் எரிச்சல்தான் வந்தது. ‘இப்படி இருக்குறவ அவன் கூடவே போக வேண்டியதுதான’ என கோபத்தில் முனங்கியபடியே அறைக்கு செல்ல, அங்கு படுக்கையில் இருந்தார் சொக்கலிங்கம்.
மனைவியைப் பார்த்ததும் அவர் முகத்தைத் திருப்பிக் கொள்ள, அது மேலும் கோபத்தைக் கொடுத்தது ராஜலட்சுமிக்கு.
‘இந்த ஒரு மனுசனுக்காக நான் என் வாழ்க்கையையே தியாகம் பண்ணிருக்கேன்.. அது ஒரு பொருட்டாவே இவருக்கு தெரிலையா?’ என வழக்கமாய் முளைத்த கேள்வியை மனதிற்குள்ளே அடைத்துவிட்டு, அவருக்கு எதிரில் அமர்ந்து தன் போனை எடுத்து பார்க்க ஆரம்பித்தார்.
அப்போது அவருக்கான மாத்திரைகளைக் கொடுக்க வந்த யாழினியைப் பார்த்து புன்னைகைத்தார் சொக்கலிங்கம்.
“பே..த்..தி..யா..? பே..ர..னா..?” என அவர் வாய் ஒரு பக்கம் கோனிக் கொண்டே கேட்க,
யாழினியோ சிரித்தபடியே “பேத்தி ப்பா.. கொழுகொழுன்னு இருக்கா.. கண்ணு ரெண்டும் அப்படியே என்னை மாதிரி முட்டக்கண்ணு.. அவளுக்கும் இடது கைல ஆறு விரல் ப்பா..” என தன் கையைக்காட்டி ஆர்ப்பரிப்பாக கூற, சொக்கலிங்கத்திற்கு சந்தோசத்தில் விழிகள் கலங்கி, அவரின் காதோரம் நீர் வழிந்தது.
ஆனால் ராஜலட்சுமிக்கோ அந்த பேச்சு ரசிக்கவில்லை போல, சட்டென எழுந்தவர் “நான் வெளிய கிளம்புறேன்..” என நகர பார்க்க,
“ஹாஸ்பிடலுக்கு போய் வல்லபியையோ, அவங்க அப்பாவையோ மிரட்டனும்னு நினச்சி மனசுல ஆசையோட அங்க போயிடாதீங்க. வெற்றியோட அம்மா அங்கதான் இருக்காங்க..” என்று யாழினி கிண்டலாக சொல்ல,
மகளின் பேச்சில் முகம் கறுத்தாலும், “எனக்கு அவ எல்லாம் ஒரு ஆளா? அநாதை நாயைப் பத்தி யோசிச்சி என் நேரத்தை வீணாக்க நான் என்ன முட்டாளா? உனக்கும் உன் அப்பாவுக்கும் தான் பைத்தியம் பிடிச்சிருக்கு. அது எங்களுக்கும் பிடிக்கனும்னு நீ நினைச்சா அது நடக்குமா?” என மகளுக்கு மேலே கிண்டலாக பேசிவிட்டு வெளியில் வேகமாக நடந்தார் ராஜலட்சுமி.
யாழினி வாய் வழியாக சொன்னதை செயல்படுத்தி விடத்தான் அவர் முதலில் நினைத்தார். வல்லபியின் தந்தையைப் பார்த்து, பேசி மேலும் அவரைக் காயப்படுத்தத்தான் திட்டம் போட்டார். ஆனால் அதை மகள் கண்டுபிடித்ததில் எரிச்சல் வந்துவிட்டது.
தன் ஆத்திரத்தையும் கோபத்தையும் காட்ட முடியாமல் வெளியில் வந்தவர், வழக்கம்போல அவர் செல்லும் லேடிஸ் கிளப்பிற்கு தன் காரை செலுத்தினார்.
ராஜலட்சுமி வெளியேறியதை ஒரு இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் சொக்கலிங்கம். அவர் மனம் அந்த நேரம் எந்தளவிற்கு வேதனையில் துடிக்கும் என யாழினிக்கு புரியாமல் இல்லை.
ஆனால் அதைப் போக்கும் வழிதான் அவளுக்கு தெரியவில்லை. இந்த பிரச்சினையை ஆரம்பித்து வைத்தது கர்னன். அதை முடித்து வைப்பதும் அவனாகத்தானே இருக்க முடியும்.
இதில் அவள் என்ன செய்திட முடியும்..
யாழினியோ, சொக்கலிங்கமோ எடுத்து சொன்னால் வல்லபி கேட்பாள்தான். ஏன் அவர்களுக்காக உடனே இங்கு வரவும் செய்வாள்தான். ஆனால் அவளின் சுயமரியாதை, அது பெரிதாக அடிபடும்.
வல்லபியிடம் இருப்பது அவளது தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் மட்டும்தான். அதையும் தங்கள் பொருட்டு இழக்க வைக்க இந்த இருவருக்கும் விருப்பம் இல்லை.
வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்த தந்தையிடம் “ப்பா.. எல்லாம் சீக்கிரம் சரியாகும். நாம சொன்னா வல்லபி கேட்பாதான். அதுக்காக அவளை ஃபோர்ஸ் பண்ணக்கூடாது. வல்லபிக்கு நாம டைம் கொடுக்கனும் ப்பா.” என்றாள் யாழினி.
சொக்கநாதனுக்கும் அது புரியத்தான் செய்தது. அதனால் “ம்ம்.. ஆமாம்..” என்பது போல் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டார்.
சொக்கலிங்கத்தின் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக ஒற்றை ஆண் வாரிசுதான். முதலில் ஆண் பிறந்தால் அடுத்து பிறப்பது அனைத்தும் பெண் பிள்ளைகள்தான்.
முதலில் பெண் பிறந்தால், அடுத்து கண்டிப்பாக ஆண்தான். ஆனால் அதன்பிறகு பிறப்பது அனைத்தும் பெண் பிள்ளைகளாகவே இருப்பர்.
இது அவர்கள் பல தலைமுறைகளாக பார்த்திருக்கின்றனர்.
சொக்கலிங்கத்திற்கும் அவரது முதல் மனைவி வரலட்சுமிக்கும் பிறந்தவன்தான் கர்னன். பிரசவத்திலேயே வரலட்சுமி இறந்துவிட, அவர் தங்கையான ராஜலட்சுமியை குடும்பமே சேர்ந்துதான் இரண்டாவதாக திருமணம் செய்து வைத்தனர்.
வரலட்சுமியை மறக்க முடியாமலும், ராஜலட்சுமியை மனைவியாக ஏற்க முடியாமலும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் சொக்கலிங்கம்.
அந்த நேரம் மனைவியின் நினைவுகளில் மகனைப் பற்றி யோசிக்க மறந்தார் சொக்கலிங்கம். அதன் விளைவு ராஜலட்சுமியின் கைப்பாவை ஆகிப்போனான் கர்னன்.
ஆரம்பத்தில் அவருக்கு அது பார்வை வட்டத்திலேயே விழவில்லை. சொக்கலிங்கத்தின் தாயார் இறந்த பிறகு மகனின் முழு பொறுப்பும் ராஜலட்சுமியிடம் வந்த பின்தான் அதையெல்லாம் கவனிக்க ஆரம்பித்தார்.
அப்போதும் ராஜலட்சுமியின் வளர்ப்பில் அவர் குற்றம் கண்டுபிடிக்கவில்லை. அவர் வளர்ப்பை பார்த்து, தன் மகனைப் போல் பார்த்துக் கொள்கிறாளே, அவளுக்கு நாம் நியாயம் செய்யவில்லையே என்று சொக்க்கலிங்கத்திற்கு குற்றவுணர்ச்சி உண்டாக, அதன் பொருட்டு மனைவியிடம் நெருங்க ஆரம்பித்தார் சொக்கலிங்கம்.
அப்படி அவர் மனைவியோடு நெருங்க ஐந்தாண்டுகள் ஆனது. கணவன் தன்னிடம் நெருங்கி, தனக்கு அனைத்து வகையிலும் மனைவி என்ற அங்கீகாரத்தைக் கொடுத்திருந்தாலும், அது நடக்க ஐந்தாண்டுகள் ஆகியிருந்தது என்பதைத்தான் ராஜலட்சுமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதிலும் அவர்கள் நெருங்க முக்கியக் காரணம் கர்ணன் என்பதைத்தான் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தன் அழகால், அன்பால் கணவரை நெருங்க முடியவில்லை என்பதே அவருக்கு மிகப்பெரிய தோல்விதான். அதோடு இரவில் இருவருக்குமான தனிமை கூட கர்ணனால் கிட்டாமல் போக, அவருக்கு முதல் முறையாக கர்னன் மேல் வெறுப்பு உண்டானது.
ஆனாலும் அந்த வெறுப்பைக் காட்டாமல் பாசமாக இருப்பதைப் போல் நடிக்க ஆரம்பித்தார். அந்த நேரம் தான் அவர் கருவுற்றிருக்க, கர்ணனின் மேல் வெறுப்புடன் சேர்ந்து கோபமும் உண்டானது.
குழந்தை பிறப்பிற்கு தாய் வீட்டிற்கு செல்ல, அங்குதான் அவரின் சுயரூபமே அனைவருக்கும் புரிந்தது.
ராஜலட்சுமியின் தாய் பேரனை நினைத்துக் கவலை கொண்டார். மகளிடம் இருந்தால் பேரனை நன்றாக பார்த்துக் கொள்ள மாட்டாள் என்பது அந்த பெரியவருக்கு புரிய, மருமகனிடம் பேசி பேரனை ஏற்காட்டில் உள்ள பள்ளியில் சேர்க்க வைத்தார்.
முதலில் முடியாது என அடம்பிடித்த கர்ணனை, மிகவும் கஷ்டப்பட்டு சமாதானம் செய்துதான் அங்கு கொண்டு விட்டார் சொக்கலிங்கம்.
அதன் பிறகான அவனது உலகமே அந்த பள்ளியும், அங்கு கிடைத்த நண்பர்களும் என்றாகிப் போனது.
கர்ணன் இல்லாதது ராஜலட்சுமிக்கு மிகவும் வசதியாகிப் போனது. அதோடு அவருக்கும் ஆண் பிள்ளை பிறக்க, அவரைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை.
இனி தன் மகன் சுந்தர் மட்டுமே இங்கு அனைத்திற்கும் பாத்தியப்பட்டவன், கர்ணன் சென்றவன் சென்றவனாகவே இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
அடுத்தடுத்து இரண்டு பெண் பிள்ளைகள் மூத்தவள் வனிதா, இளையவள் யாழினி…
அனைத்தும் ராஜலட்சுமி நினைத்ததைப் போல்தான் நடந்து கொண்டிருந்தது.
கர்ணன் பள்ளிப் படிப்பை முடித்ததும், அவனை பிலானியில் உள்ள கல்லூரியில் சேர்த்தார் சொக்கலிங்கம். அனைத்தும் மகனுக்கு சிறப்பாக கிடைக்க வேண்டும் என்று நினைத்தார்.
கர்ணனும் எதிலும் சோடை போகவில்லை. படிப்பை முடித்த கையோடு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைக்க, சொக்கலிங்கத்திற்கு மகனை நினைத்து அத்தனை பெருமை. சந்தோசமாகவே அனுப்பி வைத்தார்.
அதுதான் கர்னன் கடைசியாக சொக்கலிங்கத்தை நலமாக பார்த்தது. அடுத்து அவன் பார்க்கும் போது பக்கவாதம் வந்து சுயநினைவின்றி மருத்துவமனையில் இருந்தார் கர்னனின் தந்தை.